disalbe Right click

Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Wednesday, February 12, 2020

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - விதிமுறைகள்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - விதிமுறைகள்
பிளஸ் 2 பொது தேர்வு, வருகின்ற மார்ச், 2ல் துவங்க இருக்கிறது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க இருக்கிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுக்கான விதிமுறைகள் அடங்கிய கையேடு  அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்:
  1. தேர்வு அறை கண்காணிப்பு பணிக்கு, அங்கீகாரம் பெற்ற, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்
  2. முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் பணிக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமிக்க கூடாது.
  3. அனைத்து தேர்வு மையங்களிலும், அந்த பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட யாரும், தேர்வின்போது இருக்கக் கூடாது
  4. வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏர்பாடு செய்து கொள்ள வேண்டும்
  5. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள்களை மாற்றுவது, கிரிமினல் குற்றமாகும். அந்த தேர்வர்கள் மீது, காவல்துறையில் புகார் செய்ய வேண்டும்.
  6. பறக்கும் படையில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பிற கல்வி மாவட்டங்களில், பணி வழங்க வேண்டும்
  7. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் எடுத்துச் செல்லும் பணி - நம்பத் தகுந்தவர்களை நியமிக்க வேண்டும். அவர்களுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருக்க வேண்டும்.
  8. கட்டுக்காப்பு மையங்களில், விடைத்தாள்களை பத்திரமாக, 'சீல்' இட்டு வைக்க வேண்டும்
  9. தேர்வு மையங்களின் வாயில் கதவுகளை பூட்டி வைக்கக் கூடாது
  10. பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள், ஆய்வுக்கு வரும் வகையில், எந்த தடைகளும் இருக்கக் கூடாது
  11. மாணவ - மாணவியரை பயமுறுத்தும் வகையில், ஆய்வு பணி செய்யக் கூடாது.
  12. மாணவியரை சோதனையிட, பெண் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும்
  13. அனைத்து தேர்வர்களையும், கட்டாயம் சோதிக்க தேவையில்லை; சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் சோதிக்கலாம்
  14. தேர்வு மைய வளாகம், தேர்வறை, கழிப்பறை, பெஞ்ச், மேஜை உள்பட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
  15. தேர்வு எழுதும் அறைக்குள் மாணவர்கள், 'மொபைல் போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரக்கூடாது
  16. சாதாரண, 'வாட்ச்' அணிந்து கொள்ளலாம். ஆனால், தேர்வறையில் இயங்கும் கடிகாரம் காட்டும் நேரத்தையே பின்பற்ற வேண்டும்
  17. தேர்வு மைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தங்கள் மொபைல் போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்து, முதன்மை கண்காணிப்பாளிடம் ஒப்படைத்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

Tuesday, September 18, 2018

தேசிய தகுதித் தேர்வு - 2018

தேசிய தகுதித் தேர்வு - 2018
முதல்முறையாக ஆன்லைனில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு!
நெட்” (National Eligibility Test) எனப்படும் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு 30.09.2018-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என (University Grants Commission) தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நமது நாட்டிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவில் நடைபெறும் ஸ்லெட் தேர்வில் (State Eligibility Test) தேர்ச்சி பெற்றால் மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.
கடந்த 2017-ம் ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) அமைப்பு நடத்தி வந்தது.
மாற்றம்
இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை ( National Examination Agency ) எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட ஜெஇஇ, நீட் என தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் நெட் தேர்வானது முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகிறது
தேர்வு நடைபெறும் நாட்கள்
முதல் நெட் தேர்வு 09.12.2018-ம் தேதி முதல் 23.12.2018-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது..
தேவையான கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள்
இந்தத்தேர்வுக்கு கலை அறிவியல் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினர், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எனில் 50 சதவீத மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது. இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர்.
வயது வரம்பு
தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. இருந்தபோதிலும், ஜெஆர்எப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கு மட்டும் வயது வரம்பு 30 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் மாற்றம் உண்டா?
புதிய அமைப்பு தேர்வை நடத்தினாலும் தேர்வுமுறையிலோ, இருக்கின்ற பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை.
இணையதள முகவரி
தகுதியுள் ளவர்கள் www.ntanet.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி 30.09.2018-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் கட்டாயமில்லை
இந்த நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.09.2018

Thursday, August 30, 2018

JEE - Joint Entrance Examination


JEE - Joint Entrance Examination - இனி வருடத்திற்கு இரு முறை
Joint Entrance Exam மெயின் தேர்வை (2019) NTA எனப்படும் National Testing Agency நடத்துகிறது. N.I.T & I.I.T உட்பட பல அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், இளநிலை இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜே..., மெயின் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இதற்கான விண்ணப்பப்பதிவானது வருகின்ற 01.09.2018 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டில் இருந்து அந்த தேர்வில் சில முக்கிய மாற்றங்களையும் தேர்வு குழு செய்துள்ளது.
முதலாவதாக இனி இந்த தேர்வு வருடங்களுக்கு இருமுறை நடைபெறும்.
ஜனவரி 6 முதல் 20ம் தேதி வரை ஜனவரி மாதத்திற்கான தேர்வும்
ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை ஏப்ரல் மாதத்திற்கான தேர்வும் நடத்தப்பட உள்ளது.
இரண்டாவதாக, இனி இது முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக மட்டுமே நடத்தப்படும். மொத்தம் எட்டு அமர்வுகளாகத் தேர்வு நடைபெறும். அதில் மாணவர்கள் தங்களுக்கு பொருந்தும் அமர்வை விண்ணப்பப் பதிவின் போதே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதும் தகுதி
12வது வகுப்புத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் ஜே..., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பப் பதிவை ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஜனவரி அமர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.08.2018
மாணவர்கள் ஓர் ஆண்டின் இரண்டு அமர்வுகளிலும் தேர்வினை எழுதலாம். அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜே..., மெயின் 2019ம் ஜனவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 31 அன்று வெளியிடப்படும்
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.08.2018