மற்றொருவருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயணத்திற்காக ரயில் டிக்கட் முன்பதிவு செய்திருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலானோர் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம். அல்லது அதை அப்படியே விட்டுவிடுவோம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை நாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள தற்போது முடியும்!
அதற்கு என்ன வழிமுறை என்பதைப் பற்றி கீழே காண்போம்.
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை
எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றிக்கொள்ளும்
முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை கீழே காணலாம்.
❤ ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்ட, முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் அலுவலகங்களில் உள்ள தலைமை கண்காணிப்பாளரை நாம் முதலில் அணுகவேண்டும்.
❤ முன்பதிவு செய்த நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக
ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால் போதுமானது. பயணச்சீட்டு மாற்றித் தரப்படும்.
❤ நீங்கள் உங்களது முன்பதிவு டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது. பயணச்சீட்டு மாற்றித் தரப்படும்.
❤ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்திருக்கும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை என்ற சூழ்நிலையில் அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி / கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்றை பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து பயணிக்கலாம்.
❤ஒரு திருமணத்துக்காகவோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்காகவோ மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் N.C.C or N.S.S பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதம் எழுதிக் கொடுத்து மாற்றிக்கொள்ள
முடியும்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018