மத்திய அரசு நடத்தும் பள்ளியில் சேர என்ன செய்ய வேண்டும்?
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. நம்நாடு முழுவதும், 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், தமிழகத்தில் மட்டும்,
48 பள்ளிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு பள்ளி
உள்ளது.
கல்விக் கட்டணம் மிகவும் குறைவு
இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் மிகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் இந்தப்பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மேலும், மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டணம் என்று எதுவும் செலுத்த வேண்டியதில்லை..
இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் மிகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் இந்தப்பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மேலும், மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டணம் என்று எதுவும் செலுத்த வேண்டியதில்லை..
எத்தனை இடங்கள்?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள்.. இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்
ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மூன்று பிரிவுகள் வரையில் உள்ளதால் 30 இடங்கள் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இடஒதுக்கீட்டீன் கீழ்
கிடைக்கிறது..
நேரடியாக ஒன்றாம் வகுப்பு
இந்தப் பள்ளிகளில் மற்ற
பள்ளிகளில் உள்ளது போல் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவ, மாணவியர்கள்
சேர்க்கப்படுகின்றனர். ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது அட்மிஷன்
நடைபெறுகிறது.
யார் யாருக்கு முன்னுரிமை?
இந்தப் பள்ளிகளில் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.. குறிப்பாக, அடிக்கடி பணிநிமித்தமாக இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம்
வழங்கப்படுகிறது. அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளை சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவினர்களுக்குப் போக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
தற்போது வரும் 2019-20ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர, 19.03.2019-ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.kvsonlineadmission.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய வழியே விண்ணப்பிக்க வேண்டும்., ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து
மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று உள்ளிட்டவற்றையும் இணைத்தல் அவசியம்.
விண்ணப்பத்தில் பிழை இருந்தால்…?
விண்ணப்பித்த
பிறகு, குறிப்பிட்ட காலம் வரையில் விண்ணப்பங்களில்
திருத்தம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களுக்கு என்று தனியாக முன்னுரிமை வழங்கப்படுகிறது, ஆனால், அதற்கான சான்றிதழையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
எந்த வகுப்பில் எத்தனை இடங்கள் ?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்படாமல்
உள்ளன என்பதை இணையதளம் வழியாக நீங்களே பார்த்து விண்ணப்பிக்கலாம்.. இதற்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியான பிறகு 11ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க
வேண்டும்.
தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது?
- KENDRIYA VIDYALAYA AFS AVADI , MUTHAPUDUPET AFS AVADI , AVADI, CHENNAI - 600055. Website : www.kvafsavadi.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA AFS THANJAVUR, KV AFS MELAVASTHA CHAVADI POST PUDUKKOTTAI ROAD THANJAVUR - 613005 Website : www.kvthanjavur.org
- KENDRIYA VIDYALAYA AIR FORCE STATION SULUR, AIR FORCE STATION, SULUR -641 401, Website :www.kvsulur.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA GPRA CAMPUS, THIRUMANGALAM, CHENNAI , ANNA NAGAR WEST CHENNAI, Chennai - 600040. Website : www.kvannanagar.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, INS,RAJALI , ARAKKONAM, VELLORE DISTRICT-631006. Website : http://www.kvarakkonamno1.ac.in
- KENDRIYA VIDYALAYA ARUVANKADU, CORDITE FACTORY, ARUVANKADU, Nilagiri - 643202. Website : www.kvavk.tn.nic.in
- DR. NATESAN SALAI, ASHOK NAGAR , ASHOK NAGAR CHENNAI, Chennai - 600083. Website : www.kvashoknagar.ac.in
- KV CISF RTC(A), SURAKSHA CAMPUS, THAKKOLAM, ARAKKONAM, Vellore - 631152. Website : www.kvthakkolam.tn.nic.in
- SARDAR PATEL ROAD ADYAR , CHENNAI - 600020. Website : www.kvclrichennai.tn.nic.in
- SOWRIPALAYAM ROAD, Meena Estate, COIMBATORE - 641028. Website : www.kvcoimbatore.tn.nic.in, www.kvcoimbatore.org
- KV CRPF AVADI, CRPF CAMP ,AVADI, CHENNAI , Chennai Tamil Nadu, India 600065. Website : www.kvcrpfavadi.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA DGQA , Pazhavanthangal CHENNAI, Chennai Tamil Nadu, India 600114. Website : www.kvdgqachennai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA - DHARMAPURI, SETTIKARAI (PO), DHARMAPURI , Near Govt Engg. College Dharmapuri Tamil Nadu, India 636704. Website : www.kvdharmapuri.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA GRI Campus, Gandhigram, Dindigul(TN) - 624302 Website : http://www.kvgandhigram.ac.in
- KENDRIYA VIDYALAYA GILL NAGAR, NO.4, SHANMUGANAR SALAI, GILL NAGAR , CHOOLAIMEDU, CHENNAI-600094. Website : www.kvgillnagarchennai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA GOLDEN ROCK, SR, TIRUCHIRAPALLI , PONMALAIPATTI RD, RAILWAY COLONY, TIRUCHIRAPPALLI -620004 Website : www.kvgoctry.in
- KENDRIYA VIDYALAYA, HVF ESTATE, AVADI, CHENNAI - 600054 , Thiruvallur 600054 Website : www.kvhvfavadi.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, IT CAMPUS, ADYAR, CHENNAI- 600036. Website : www.kviitchennai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, INDUNAGAR HPF OOTY , HPF Maingate OOTY, Nilagiri 643005. Website : www.kvindunagar.com
- KENDRIYA VIDYALAYA, ISLAND GROUNDS, PALLAVAN SALAI, CHENNAI - 600002. Website : www.kvislandgrounds.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, Kumaran koil street, KARAIKKAL, Puducherry - 609604. Website : www.kvkaraikal.org.in
- KENDRIYA VIDYALAYA, CECRI CAMPUS www.kvkaraikudi.tn.nic.in KARAIKUDI , Sivaganga - 630006. Website : www.kvkaraikudi.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, MARINE FISHERIES (P.O.), MANDAPAM CAMP-623520, RAMNAD DIST. Website : www.kvmandapam.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, Near Palavanthangal Railway Station, Minambakkam, Chennai-600 027. Website : http://www.kvminambakkam.ac.in
- KENDRIYA VIDYALAYA, OPP. ALL INDIA RADIO, TAMILNADU, RAJAKKAMANGALAM ROAD, ,KONAM, NAGERCOIL, Kanniyakumari - 629004. Website : www.kvnagercoil.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, BLOCK-3 VIVEKANANDAR SALAI, NLC NEYVELI, Cuddalore - 607801. Website : www.kvneyveli.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, NO.1 AFS MADAMBAKKAM CAMP SELAIYUR CHENNAI , Kancheepuram - 600073. Website : www.kv1tambaram.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, DAE TOWNSHIP, KALPAKKAM - 603102, KANCHEEPURAM DIST., Website : www.kvkalpakkamone.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, P.T.RAJAN ROAD , NARIMEDU, MADURAI - 625002. Website : www.kv1madurai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, KV NO.2 , HAPP CAMPUS, ,TRICHY - 620025. Website : www.kvtrichy2.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, KV.NO.2 , KVNO2 DAE TOWNSHIP, KALPAKKAM - 603102. KANCHEEPURAM DIST., Website : www.kv2kalpakkam.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, THIRUPPARANKUNDRAM, AVANIYAPURAM ROAD, , MADURAI - 625005. Website : www.kv2madurai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, No.2, Pondicherry University Campus, Kalapet, Pondicherry 605014. Website : http://www.kvpucpdy.nic.in
- KENDRIYA VIDYALAYA, AIR FORCE STATION, TAMBARAM, CHENNAI - 600073. Website : www.kv2tambaram.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, No.1 JIPMER CAMPUS, PUDUCHERRY - 605 006. Website : www.kvno1jipmer.nic.in
- KENDRIYA VIDYALAYA, NO1, OFT, NAVALPATTU Tiruchirappalli - 620016. Website : www.kvtrichyone.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, OCF AVADI Chennai - 600054. Website : www.kvocfavadi.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, MADANAGOPALAPURAM, PERAMBALUR - 621212. Website : www.kvperambalur.org
- KENDRIYA VIDYALAYA, KATTUPILLAIYAR KOIL, RAMESWARAM, - 623526. Website : www.kvrameswaram.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, SRINIVASA NAGAR, PANANGADI ROAD, SIVAGANGA - 630561 Website : www.kvsivaganga.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, KANATHAMPOONDI, RAMANASHRAM POST THIRUVANNAMALAI, - 606603. Website : www.kvtvmalai.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, CUTN CAMPUS, THIRUVARUR - 610005. Website : www.kvthiruvarur.org
- KENDRIYA VIDYALAYA, Naval Base (P.O) - Vijayanarayanam Nangunneri
Taluk, Tirunelveli District - 627 119. Website : http://www.kvvijayanarayanam.ac.in
- KENDRIYA VIDYALAYA, Gunamalai Nagar, Mallankinaru(PO), Varalotti, Virudhunagar - 626109. Website : www.kvvirudhunagar.tn.nic.in
- KENDRIYA VIDYALAYA, Range Hill Road, Barracks, Wellington, Nilgiris - 643231. Website : www.kvwelligton.tn.nic.in ********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.03.2019