disalbe Right click

Showing posts with label பாஸ்போர்ட். Show all posts
Showing posts with label பாஸ்போர்ட். Show all posts

Tuesday, June 26, 2018

பாஸ்போர்ட் சேவா' செயலி

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெயர் 'பாஸ்போர்ட் சேவா' ஆகும். 
இந்த சேவையை https://portal2.passportindia.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள்  அதிகமாக உள்ளது
மாநிலங்களில் ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், நீண்ட தூரம் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதுள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும்  மொபைல் ஆப் மூலமாக நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம் பாஸ்போர்ட் பெறுவது மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும்.
திருமணம் ஆன பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்ற ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

Thursday, December 21, 2017

’ஸ்டூடண்ட் கனெக்ட்’ பாஸ்போர்ட்

கல்லூரி பல்கலைக் கழக மாணவ, மாணவியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கஸ்டூடண்ட் கனெக்ட்என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,”
இந்த சேவை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஸ்டூடண்ட் கனெக்ட்மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டும் வருகிறது. மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த சேவையை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள் மற்று ஊழியர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கியுள்ள முகவரியிலோ அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியிலோ பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்றிதழ், 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும்.
www.passportindia.gov.in
என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.
பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க ஏதுவாக விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்,
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.12.2017

Friday, November 10, 2017

POLICE CLEARANCE CERTIFICATE

POLICE CLEARANCE CERTIFICATE என்ற வார்த்தையை கண்டவுடன் இது காவல் நிலையத்தில் வாங்கக்கூடிய சான்றிதழ் என்று நினைக்காதீர்கள். காவல்நிலையத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இது பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி வெளிநாடு செல்கின்றவர்களுக்கு தேவைப்படுகின்ற சான்றிதழ் ஆகும். பாஸ்போர்ட் பெறுகின்ற அலுவலகத்தில் இதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.  
முதல் முறையாக வெளிநாடு செல்பவர்களுக்கு இது தேவைப்படாது. நம் நாட்டிலிருந்து வெளிநாடு சென்று அதன்பிறகு நம் நாட்டிற்கு திரும்பி வந்து, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் அவசியமாகும்.
Police  Clearance Certificate க்குரிய விண்ணப்ப படிவத்தை passportindia.gov.in  என்ற  இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதிலேயே எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இருக்கும். Select Passport Office என்ற தலைப்பை  Click   செய்தால், ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பகுதிக்குரிய பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மற்ற விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.                                     
3.5 x 3.5 செ.மீ அளவுள்ள புகைப்படம் ஒன்றை ஒட்டி, நிரப்பப்பட்ட விண்ணப்பப்  படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும்இருப்பிட சான்றும்,இணைத்து   சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு எதிராக ஏதேனும் வழக்கு இருந்தால், நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் இருந்து ஒரு  சான்றிதழ் வாங்க வேண்டியதிருக்கும். வழக்கின் தன்மையைப் பொறுத்து இதனைத் தர காவல்துறையினர் மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.  வழக்கு ஏதும் இல்லை என்றால் அது தேவையில்லை. 
நீங்கள் வசிக்கும் நகரங்களுக்குரிய பாஸ்போர்ட் அலுவலகங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்கவேண்டும். வேலை நாட்களில் காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றுவிடுங்கள்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். இடைத் தரகர்களை அணுகாதீர்கள். 
காலையில் நீங்கள் விண்ணப்பித்தால் அன்று மாலை 5 மணிக்கெல்லாம்  PCC கிடைத்து விடும்.
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரரே நேரில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.   விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை அவர் சார்பாக வேறு யாரேனும் கொண்டு சென்றாலும் போதுமானது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, 
Bharathi Ula Veethi, 
Race Course Road, 
Madurai-625 002. 
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, 
Water Tank Building, 
W.B. Road , 
Tiruchirappalli - 620 008, 
Fax: 0431-2707515 
E-mail: rpo.trichy@mea.gov.in. 
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சா வூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பி க்கலாம்.
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, 
First Floor, 
Corporation Commercial Complex, 
Opp. Thandumariamman Koil, 
Avinashi Road, 
Coimbatore – 641018
Phone: 0422-2304888,2309009, 
Fax: 0422-2306660, 
E-mail: rpo.cbe@mea.gov.in, 
Tele-enquiry: 0422-2309009, 2304888, 
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண் ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Regional Passport Office,
IInd Floor, 
Shastri Bhavan, 
26, Haddows Road, 
Chennai – 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
E-mail : rpo.chennai@mea.gov.in 
சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண் ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
**************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Monday, July 24, 2017

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை
புதுடில்லி: கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசுபாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில்பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த ஆக குறைக்கப்பட உள்ளது. 
அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது.
ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை.
திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோஅவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.07.2017

Sunday, February 5, 2017

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

No automatic alt text available.

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

சென்னை: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3 நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, காவல்துறை அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் 1,500 ரூபாய்தான். இந்த நடைமுறையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலேயே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 'தக்கல்' முறையும் அமலில் உள்ளது. அதற்குக் கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில், வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும்.

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.

பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இரு நிலைகள் உள்ளன. அதாவது 1989 ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை. அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை பிறப்புச் சான்றிதழாகப் பயன்படுத்தலாம்.

அத்தோடு வரையறுக்கப்பட்ட சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். 1989- ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.அவர்கள் கணினியில் சென்னை மாநகராட்சியின் பிறப்பு சான்றிதழ் பிரிவுக்கு சென்று பிறந்த தேதியை பதிவிட்டு பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

அதில் பெற முடியாவிட்டால் தாங்கள் பிறந்த மருத்துவமனையை அணுகி பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். அதனுடன் தங்களின் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் " என்று கூறினார்.

நன்றி :விகடன் செய்திகள் - 04.02.2016