ஆழ்மனதின் அற்புத சக்தி!
அன்பு தோழமைகளே நலமா? இந்த வாரம் நம் வெற்றிக்கு மிகவும் உறுதுணையான ஆழ்மன சக்தியின் மகத்துவத்தை குறித்து காணப் போகின்றோம்..
அன்பானவர்களே நம்மை கொஞ்சம் உற்று நோக்கினால் நாம் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணர்வுத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடியும.
மகிழ்ச்சியாக இருப்போம், வருத்தத்தில் இருப்போம், டென்ஷனாக இருப்போம், எனவே உணர்வுகளைக் கையாளும் திறன் நம் நிறைவான வாழ்விற்கு மிக மிக
அவசியமாகின்றது. உணர்வுகளால் தான் மனித வாழ்வே உதயமாகிறது.
உணர்வுகளுக்கு சரியான ஆங்கிலச் சொல் Emotions ஆகும். Emotions என்ற சொல் emouvoir என்ற பிரஞ்சு அடிப்படைச் சொல்லிருந்து உருவானது emouvoir என்ற பிரஞ்சு சொல்லை to stir up என்று ஆங்கிலத்தில் பொருள்படுத்தலாம்.
உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு.
நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, உதாரணமாக நாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் ஆழ் மனது நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன.
எந்த அளவிற்கு என்றால் நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு. ஆழ்மனம் இல்லையென்றால் முழுமையாக செயல்பட முடியாது. எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றது ,வரவேற்பாளர் போல் வீற்றிருக்கும் மேல் மனம் ..செயல்படுத்த ஆழ்மனதிற்கு அழைத்து செல்கின்றது.
மேலாண்மையின் முக்கிய கடமை:
மனித உணர்வுகளையும் உறவுகளையும் முரண்பட்ட எதிரெதிர் உணர்வுகள் ஒரே இடத்தில் வெளிப்படும் வேளையில் அந்த சூழலை நிர்வாகம் செய்வது மேலாண்மையின் முக்கியமான கடமைகளில் ஒன்று தன்னுடைய மற்றும் திறனே உணர்வுகளின் மேலாண்மை ஆகும் .
பிறருடைய உணர்வுகளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதனை நெறிப்படுத்தும் நம்முடைய உணர்வு என்ன என்று தெளிவாக அறிவதே உதாரணமாக நமக்கு பிறரின் வளர்ச்சியை கண்டு பொறாமை வருகின்றது என்றால் எனக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
நம் எண்ணங்கள் நாம் விரும்பும் செயல்களைச் சிறப்பாகச் செய்ய உணர்வுகளை உருவாக்குதல்
நம்முடைய லட்சியத்தை அடைய அதன் மீது விருப்பம் ஆசை என்ற உணர்வுகளை வளர்த்து அதை அடைவதில் எந்தச் சவால்கள் வந்தாலும் திடமான உணர்வுகளுடன் ஏற்றுக்கொள்ளுதல். பிறர் என்ன உணர்வில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்தல்.உணர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதுடன் அவற்றை நமக்கும் பிறருக்கும் வளர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துவது..
நம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றை நீக்க வழி தேடுதல் என்ன விளைவு ஏற்பட்டாலும் திறந்த மனதுடன் இருத்தல், எதையும் தாங்கும் மனநிலையை வளர்த்தல். நம்முடைய உணர்வுகளுக்கு நேர்மையாய் நடத்தல் அகத்தில் ஒரு உணர்வும் வெளியில் மற்றோர் உணர்வையும் வெளிப்படுத்தாது இருத்தல்.
புத்தரும் சீடர்களும்:
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்?
இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்.. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!
it is an effortless process!
ஆழ்மனச்சக்தி:
நாம் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், ஆழ்மனதை வரம் கொடுக்கும் தேவதை என்றே கூறலாம்,
அது ஆற்றல் மிக்க தேவதை, நமக்கு விசுவாசமான தேவதை. நாம் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு, ஆக நாம் கேட்பதை பொறுத்து செயல்கள் நடைபெறும் நம் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நாம் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும்.
ஒருவிதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும்.
விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு ஒரே நாளில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடிவரவில்லை, என்ன ஆயிற்று?” என்று எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா?
இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை.
ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
A,ரோஸ்லின் Cell: 9842073219
aaroseline@gmail.com
நன்றி : தினமலர் - 07.09.2016