ஆசிரியரை தாக்கிய சார்பு ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை - விழுப்புரம் மாவட்டம், பொன் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர், மோகன்குமார் என்பவர், கடந்த 2008ம் ஆண்டில் ஒருநாள், விழுப்புரம் நகரில் அவரது தந்தைக்குச் சொந்தமான கடையில் தனது மகளுடன் இருந்திருக்கிறார். அவர்களது கடையில் இளவரசன் என்பவர் வேலையாளாக இருந்திருக்கிறார்.
அப்போது, சீருடையில் ஒரு போலீஸ்காரரும், சீருடை இல்லாமல் ஒரு போலீஸ்காரரும் அவரது கடைக்கு வந்துள்ளனர். கடையில் பணியாற்றும் இளவரசனைப் பற்றி மோகன்குமாரிடம் விசாரித்துள்ளனர். உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டியதற்காக இளவரசன், 650 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என, சீருடையில் இல்லாத போலீஸ்காரர் கூறியுள்ளார். அவர் இன்று வேலைக்கு வரவில்லை, அவர் வந்ததும், காவல் நிலையம் அனுப்பி வைக்கிறேன்' என்று மோகன்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். உடனே, சீருடையில் இல்லாத போலீஸ்காரர் மோகன்குமாரை தகாத வார்த்தையால்
பேசி, அங்கிருந்து காவல் நிலையம் வரை, அடித்துக் கொண்டே அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினரின் செயலால், நானும், என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட, சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுபற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், மோகன்குமார் புகார் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து, நீதிபதி, ஜெயச்சந்திரன் அவர்கள், சார்பு ஆய்வாளர் மீது, குற்றம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 'எனவே, பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு, இன்னும் இரண்டு மாதத்தில், தமிழக அரசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை, எஸ்.ஐ., குமாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் உத்தரவிட்டார்.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018