மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பலபேரிடம் பணத்தை வசூல் செய்து, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ அதுல பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதுதான்
மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கும் இதனை நடத்துகின்ற நிதி நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும். இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் ‘மியூச்சுவல் ஃபண்ட்’னு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தெரியாத முதலீட்டாளர்கள் இதனை தெர்வு செய்கிறார்கள். இதனை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, வங்கிகளும் நடத்துகின்றன.
நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைப் பிரிச்சு பல திட்டங்கள்ல அவங்க முதலீடு செய்கிறார்கள். ஏதாவது ஒன்றில் லாபம் குறைஞ்சாலும் மற்றோரு திட்டத்தில் செய்த முதலீடு நமக்கு லாபத்தை தந்துவிடும். ஆகையால் முதலுக்கு மோசம் என்ற கவலை நமக்கு வராது. நாம் முதளிடு செய்த பணம் எப்படிப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் வசதியும் உண்டு.
இதில் ரிஸ்க் உண்டா?
யாரோ ஒருவரின் தவறான வழிகாட்டுதலினால் ஷேர் மார்க்கெட்டில் நேரடியாக நுழைஞ்சு திறமையின்மை காரணமாக நஷ்டம் என்பது இதில் ஏற்படாது. முதலில், நமக்குப் பிடிச்ச திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
நமது இருப்புத் தொகை எவ்வளவு? எவ்வளவு முதலீடு செய்யலாம்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். முதலீடு செய்த திட்டத்தில் திருப்தி இல்லை என்றால் அதிலிருந்து விலகியும் கொள்ளலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம்
ரியல் எஸ்டேட்டில் போடுவது போல அதிகமான தொகையை மொத்தமா முதலீடு செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை. மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். மாதாமாதம் 1000/- ரூபாயைக்கூட நாம் முதலீடு செய்யலாம். Equity Linked Saving Schemes (ELSS) என்று சொல்லக்கூடிய சில திட்டங்களில் நாம் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டு இரண்டு விதம்.
Open ended, Closed ended என்று இரண்டு விதமாக மியூச்சுவல் ஃபண்டுகளைப் பிரித்துக் கொள்ளலாம்.
Open endedல் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் எடுக்கலாம்.
Closed endedல் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், அது முதிர்ச்சி அடைந்த பிறகுதான் எடுக்க முடியும். சில நிறுவனங்கள் மட்டும், இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீட்டை எடுத்துக் கொள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. Closed ended திட்டத்தில் போட்ட முதலீட்டை பொதுவாக மூணு வருஷத்துக்கு எடுக்க முடியாது
லாபத்தில் நமக்கு கிடைக்கும் பங்கு
மியூச்சுவல் ஃபண்டில் நாம முதலீடு செய்த தொகை வளரும்போது, கிடைக்கின்ற லாபத்தை நமக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். இதில் Dividend, Growth என்று இரண்டு முறைகள் இருக்கு. முதலீடு செய்த தொகை முதிர்ச்சியடையும் காலத்திற்குள் நமக்குத் பணம் தேவை என்று நினைக்கிறவர்கள் Dividend முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த முதலீடு வேகமாக வளர்ந்தால்தான் உங்களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Dividend வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது.
மொத்தமாக கடைசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் Growth முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
முதலீட்டுக் காலம் எவ்வளவு?
அது நமது இஷ்டம்தான். முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
Systematic Investment Plan' (SIP)
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில், எஸ்.ஐ.பி., (Systematic Investment Plan) எனப்படும், தவணை முறையில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு, தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திட்டத்தில் இணைந்து நீங்கள் வாரம், மாதம், காலாண்டுகளில் குறைந்தபட்சம், 500 ரூபாய் முதலீடு செய்யலாம்.
அன்றாட பங்குச் சந்தையினுடைய ஏற்ற, இறக்கத்தை நாம் கவனிக்க தேவையின்றி, முதலீட்டில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த, இந்த எஸ்.ஐ.பி., திட்டம் நமக்கு உதவுகிறது. 2017 அக்டோபர் வரை இத்திட்டத்தில், 5,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.01.2018