disalbe Right click

Showing posts with label வாட்ஸ் அப். Show all posts
Showing posts with label வாட்ஸ் அப். Show all posts

Thursday, January 11, 2018

வாட்ஸ் ஆப் அட்மின்களே

அட்மின்களுக்கு எச்சரிக்கை
பேஸ் புக் வந்தபோதுதனது கணக்கில் பல நண்பர்களை சேர்த்துஎனக்கு 1,000 பேஸ்புக் 
நண்பர்கள் என்று பெருமைபடும் காலம் ஒன்று இருந்ததுஅது இப்போது சற்று மாறிவாட்ஸ்ஆப்பில் நான் அட்மின் ஆக இருந்து ஒரு குருப் ஆரம்பித்துள்ளேன்அதில் இத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று பெருமைப்படும் காலம் இதுஇன்று வாட்ஸ்ஆப்பில் குருப் ஆரம்பிக்காத நபர்களோ அல்லது குருப்பில் இல்லாத நபர்களே மிக மிக குறைவு.
பேஸ்புக் கொடுத்துள்ள அதிகாரம்
.பேஸ்புக்கில் ஒரு குருப் ஆரம்பித்தால்அந்த குருப்பின் அட்மின் (நிர்வாகி), அந்த குருப்பில் 
இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் பதிவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு
உதாரணமாகஒரு உறுப்பினர் இடும் பதிவைகுருப் அட்மின் அனுமதி கொடுத்த பிறகுதான்அந்த குருப்பில் வெளியிடுமாறு செய்யலாம்அல்லது உறுப்பினர் இடும் பதிவுகளை அட்மின் உடனடியாக அழித்து விடலாம்ஆகஅந்த குருப்பின் முழு அதிகாரம் அட்மினிடம் இருக்கும்.
பதிவுகளை முற்றிலும் அழிக்க முடியாது
.ஆனால்வாட்ஸ்ஆப் குருப் அப்படிப்பட்டதல்லஇதில் அட்மின் ஆக இருப்பவர் உறுப்பினர்கள் இடும் பதிவுகளின் அனுமதியை மறுக்க முடியாது மற்றும் உறுப்பினர்கள் இட்ட பதிவுகளை அழிக்க முடியாதுஅவ்வாறு அழிக்க முயற்சித்தாலும்அட்மினின் மொபைலில் இருந்து மட்டுமே அந்த பதிவு அழிக்கப்படும் ஆனால் மற்ற உறுப்பினர்களின் மொபைலில் அந்த பதிவு தொடர்ந்து இருக்கும்.
அட்மின்களின் பொறுப்பு அதிகம்.
.பேஸ்புக்கை விட வாட்ஸ் ஆப் அட்மின்னிற்கு பொறுப்புநிலை அதிகமாகின்றதுஅவரது குருப்பில் உள்ள உறுப்பினர்களானவர்கள் யவரை பற்றியான அவதுாறான பதிவுகளை இடாமல் இருக்க வேண்டும்அரசியல் தலைவர்கள்அரசியல் கட்சிகள்பிரதமந்திரிமுதல்வர் மற்றும் அமைச்சர்கள்அதிகாரிகள்தனிநபர்கள் மீது ஆதரமற்ற அவதுாறான தகவல்களை பரப்பினால் (அந்த தகவல்கள் அவருடைய தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை...மாறாக மற்றவர் அவருக்கு அனுப்பிய தகவலை குருப்பில் பரப்பினாலும்) அதற்கு அட்மின்தான் அவ்வாறான தகவலை பதிவு செய்தவருடன் சேர்ந்து இந்திய தண்டணை சட்டம்தீங்கியல் சட்டம் மற்றும் .டி.சட்டம் 2000-ன் படி தண்டணைக்குள்ளாவர்கள்
யாரோ செய்த தவறு
யாரோ செய்த தவறுக்கு அட்மின்னும் சிறைக்குள் செல்ல வேண்டியது இருக்கும் என்பதை அட்மின்கள் உணரவேண்டும்ஒருவர் தவறாக இட்ட ஒரு பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து தகுந்த அதிகார அமைப்பிடம் நடவடிக்கை எடுக்க யாராகிலும் கொடுத்தால்அட்மின்னிற்கு ஆபத்துதான்.
எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்!
.குருப்பின் அளவு பெரிய அளவில் ஆகும்போது அட்மினின் பொறுப்புநிலையும் அதிகமாகின்றதுஅவர் அடிக்கடி அந்த குருப்பை கண்காணிக்கும் நிலை ஏற்படுகின்றதுஇவ்வாறு கண்காணித்தாலும்குருப்பில் இட்ட பதிவுகளை அட்மினால் அழிக்க முடியாது என்பதால்அட்மின் நிலையானது எப்போதுமே “கத்தி மேல் நின்று கொண்டிருக்கும் நிலைதான்”.
எச்சரிக்கையாக இருங்கள்
.ஆகவேவாட்ஸ்ஆப் குருப்பில் அட்மின் ஆக இருப்பது பெருமையான விஷயம் அல்லமாறாகஇன்றை சூழ்நிலையில் ஆபத்தான விஷயமும்கூடஆகவேஒரு குருப்பை நானும் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுதேவையற்ற வகையில்குருப்பை உருவாக்குவதை தவிருங்கள்அதையும் மீறி ஒரு குருப் நிர்வாகிக்க வேண்டும் என்றால்,  “அவதுாறான பதிவுகள் போடவேண்டாம்“ என்று அடிக்கடி எச்சரிக்கை விடுங்கள்உறுப்பினர்கள் யாராவது அவதுாறான பதிவுகள் போட்டால் உடனேஅந்த உறுப்பினரை நீக்கம் செய்யுங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து அந்த செயலை செய்தால்அந்த குருப்பை உடனே மூடி விடுங்கள்அதுதான் அட்மின்களுக்கு நல்லது.
.அடுத்தவர் செய்யும் தவறுக்கு
.அடுத்தவர் செய்யும் தவறுக்குநீங்கள் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை ஒரு குருப்பை உருவாக்கி அதற்கு அட்மின் ஆவதற்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்.
*************************************************************
முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards அவர்கள் முகநூலில் பதிவிட்ட இன்றைய (12.01.2018) அருமையான எச்சரிக்கைப் பதிவு இது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி  

Wednesday, June 3, 2015

வாட்ஸஅப் பற்றி


வாட்ஸஅப் பற்றி தெரிந்து கொள்வோமா?

     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் விளங்குகின்றது. வாட்ஸ்ஆப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம். தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல் அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா. இவை தெரிந்திருந்தாலும் வாட்ஸ்ஆப் குறித்து உங்களுக்கு தெரியாததும் இருக்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. 

 ப்ரொபைல் போட்டோ:
 உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் - ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட்:
 ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ்: 
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு:
 வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொபைல் நம்பர்
 உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா?

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்:
 வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்: 
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்:
 வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது.

போன் நம்பர்: 
வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும். 

Written by: Meganathan Published: Thursday, June 4, 2015, 
நன்றி : TAMIL GIZBOT








Sunday, May 3, 2015

பெண்கள் வாட்ஸ் அப்பில் நல்ல ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க


பெண்கள் வாட்ஸ் அப்பில் நல்ல ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க 
என்ன செய்ய வேண்டும்?
****************************************************************************
வாட்ஸ்ஆப் போன்றவை பரவலான பின்னர், அதில் பரப்பப்படும் செய்திகள் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவெளியில் கடைபரப்பிவிடுகின்றன. நெருக்கமானவர்கள் என்று நம்பியவர்களால் தங்கள் அந்தரங்கம் காற்றில் பரவுவதை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தவித்துவருகின்றனர்.
யார் நல்லவர், யாரிடம் சில தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சந்தேகங்களை எல்லாம் தீர்க்கும் அப்ளிகேஷனை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு ஈடு கொடுக்கும் ஒரு அப்ளிகேஷனை மேட்ச்ஃபை சர்வீஸஸ் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டவட்டமாக...
மேட்சிஃபை (Matchify) என்ற இந்த அப்ளிகேஷனில் பெண்களுக்கு உகந்த பல அம்சங்கள் உள்ளன. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆண்களின் புரொஃபைல் விவரங்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியும். அந்த நபர் சரியானவரா என்பதை அவர்கள் அறிந்துகொண்ட பின்னர், பாதுகாப்பான உரையாடலை நிகழ்த்துவதற்கு இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அதேபோல் யாரெல்லாம் தங்கள் புரொஃபைல் விவரங்களைப் பார்க்கலாம் என்பதைப் பெண்கள் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். விருப்பமற்ற நபரைத் தவிர்த்துவிடவும் முடியும்.
இன்றைய நவீனப் பெண்ணுக்குத் தேவையான நிம்மதியான உறவுகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டே இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டதாக மேட்சிஃபை நிறுவனத்தின் தலைவர் சாய்சித்ரா தெரிவிக்கிறார். இந்த அப்ளிகேஷனை கூகுள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நன்றி : தி இந்து நாளிதழ் - 03.05.2015

Friday, April 10, 2015

பெண்களுக்கு ”வாட்ஸ் அப்”- பால் வரும் ஆபத்து


பெண்களுக்கு ”வாட்ஸ் அப்”- பால் வரும் ஆபத்து
***************************************************************

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.

 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?
******************************
1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.
2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.
3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.
4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.
5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
************************************
உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.
உஷார் தோழிகளே!
நன்றி -விகடன் செய்திகள்-