வீட்டில் இருந்து கொண்டே விசா பெறலாம்!
திவாகர் அகர்வால் என்பவர் தொடங்கிய BLS International நிறுவனம் ஆனது புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2005 முதல் செயல்பட்டு வருகிறது
பாஸ்போர்ட், விசா, தூதரகம் சார்ந்த சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது, இந்த நிறுவனத்திற்கு
இந்தியாவில் உள்ள அரசு வாடிக்கையாளர்கள் (Client Governments) மூலம் அதிக அளவிலான ஒப்படைப்புப் பணிகளும்,, போர்ச்சுக்கல்,
கிரேக்கம், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து சிறிய அளவிலான வெளிப் பணிகளும் கிடைத்து வந்தது.
கடந்த 2014-இல் இந்த நிறுவன ஸ்தாபகர் திவாகர் அகர்வாலின் 23 வயது மகன் சிகார் அகர்வால் இந்த நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்று, Indian internship at Grant Thornton-இல் இவர் நிர்வாகப் பயிற்சி பெற்றவராவார். படிக்கும் போதே, தன் குடும்பத் தொழிலை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற உந்துதலில் நிறுவனத்தில் செயல்பாடுகளில்
தொடர்ச்சியாகப் பல மாற்றங்களை கொண்டுவந்தார்.
தனது நிறுவனத்தில்
முக்கிய வேலையான, ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான நேரத்தை குறைப்பதற்காக, அவற்றில் பயோமெட்ரிக்ஸ்
முறைகளை அறிமுகப்படுத்தினார். நிறுவனத்தின் இணையதளத்தை சீரமைத்தார். பல்வேறு நாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களைத்
தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினார்.
நான்கு ஆண்டுகளில் லாபம் 105 கோடி ரூபாய்
இவரது கடின உழைப்பின் காரணமாக, BLS நிறுவனத்தின்
வருவாய் 4 ஆண்டுகளில் ரூ. 854 கோடியாக உயர்ந்தது. 62 நாடுகளில் தனது நிறுவனத்தை அமைத்துள்ளது, நமது நாட்டிலுள்ள
36 அரசு நிறுவன வாடிக்கையாளர்களையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.இதனால், 2014-2018-க்குள் இந்த நிறுவனத்தின்
லாபம் ரூ. 105 கோடி என நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பணிகள்
27 வயதாகும் சிகார் அகர்வால், முக்கியமான விசா சேவைகளைக் கடந்து, அரசு சேவைகளான குடிமக்களுக்கு பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை வழங்குதல் ஆகிய பணிகளை அரசிடமிருந்து பெற்று செயல்படுத்துவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
வசதி படைத்தவர்கள்,
முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களின் வசதியை கருத்தில் கொண்டு, நடமாடும் பயோமெட்ரிக்ஸ் சேவையை தனது நிறுவனத்தின் மூலம் அளித்து வருகிறார். இதனால், விண்ணப்பதாரர்கள்
விசா மையத்திற்கு
நேரில் வருகை தந்து நாள் கணக்கில் காத்திருக்கும் பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தைச்
சேர்ந்த அலுவலர்கள், விசா பெற விரும்புபவர்களை
அவர்கள் வீட்டிலோ, அலுவலத்திலோ, சென்று சந்தித்து, விசா விண்ணப்பப் படிவம், தேவையான சான்றுகள், பயோ மெட்ரிக் தகவல்கள் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டு வருவார்கள். அந்த விசா விண்ணப்பத்தின்
நிலையை ஆராய்ந்து ஒவ்வொரு ஸ்டேஜிலும் SMS மூலமாகவோ, Email மூலமாகவோ அவர்களுக்கு தெரிவிப்பார்கள்.
அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு, விண்ணப்பதாரரிடம்
இருந்து பெற்றுவந்த பாஸ்போர்ட் கூரியர் மூலமாக அவர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.
இதனால் நம்மால் எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே
விசா பெற முடியும். காத்துக் கிடப்பதற்கு நேரமின்றி இயந்திரம் போல் ஓடிக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இந்த நடமாடும் பயொமெட்ரிக்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும்
அதிக அளவிலான தொழிலாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைக் குழுக்களை இலக்காக வைத்து இந்தச் சேவையைத் தொடங்கியிருக்கிறார் சிகார் அகர்வால்.
சிகார் அகர்வால் வெளி நாடுகளுக்கும் தனது விசா சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார். விசா புதுப்பித்தல் பணிகளுக்காக பிரிட்டன் அரசிடமிருந்து கடந்த மே மாதத்தில் ரூ. 980 கோடிக்கான ஒப்பந்தத்தை BLS பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ஸ்பெயின் அரசுக்காக உலகம் முழுவதும் விசா சேவை மையங்களை அமைத்து கொடுப்பதற்காக ரூ. 1400 கோடியில் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை கடந்த 2016, டிசம்பர் மாதம் இந்த நிறுவனம். பெற்றுள்ளது. ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் புதிய பணிகளைப் பெறும் பொருட்டு, அங்கும் தனது நிறுவன ஊழியர்களை சிகார் அகர்வால் நியமித்துள்ளார்
உலக அளவில் முதல் 3 நிறுவனங்களில்
BLS நிறுவனம் ஒன்றாக உள்ளது. 62 நாடுகள், 2,325 அலுவலகங்கள்,
9 ஆயிரம் ஊழியர்கள் என்று பரந்து விரிந்துள்ள
இந்த நிறுவனம், இதுவரை 3.1 கோடி விண்ணப்பங்களைக்
கையாண்டுள்ளது..
இதன் இணையதள முகவரி : https://blsinternational.com/
இதன் இணையதள முகவரி : https://blsinternational.com/
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.10.2018 .