மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ள விதிமுறைகள்
சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ‘ட்ரோன்’ பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள்: மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டது
‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
‘ட்ரோன்’ எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின்
பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உளவு பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது என பல தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன.
ஏரோ மாடலிங் என்ற வகையைச் சேர்ந்த விளையாட்டு விமானங்கள் தான் சந்தைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன. அதில் இருக் கும் வசதிகளுக்கு ஏற்ப ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை இவை சந்தைகளில் கிடைக் கின்றன.
இதைத்தான் பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தொழில்ரீதியாக
வீடியோ எடுக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும்போது காவல் துறையினரிடமும், விமான போக்குவரத்துத்துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட் டுள்ளது.
5 வகை ட்ரோன்
ட்ரோன்களுக்கு
தனித்துவ மான அடையாள எண் வழங்கப் படும். அது விமானத்தில் ஒட்டப் பட்டிருக்கும். விமானத்தை இயக்கு பவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களின் எடை யைக் கொண்டு நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என 5 வகைகளாகப் பிரிக்கப்படும்.
நேனோ ட்ரோன்களைத் தவிர மற்றவற்றைப் பறக்க வைக்க விமான போக்குவரத்துத் துறையின் முன்அனுமதி பெற வேண்டும். 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம். அரசுக்குச் சொந்தமான ட்ரோன்களை இயக்கு வதற்கு முன்பும் உள்ளூர் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவருக்குத் தான் ட்ரோனை இயக்க அனுமதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப் பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
காப்பீடு கட்டாயம்
⧭ 5 ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லும்.
⧭ பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும்.
⧭ கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்.
⧭ ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது.
⧭ பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும்
ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது.
⧭ சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது.
⧭ நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது.
நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 05.12.2018