disalbe Right click

Monday, April 6, 2015

ஜீவனாம்சம் வழக்கு


ஜீவனாம்சம் - வழக்கு

தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது?

அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.

யாரெல்லாம் ஜீவனாம்சம் பெற தகுதியானவர்கள்?
இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...

* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மனைவி.

* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத, ”சட்டம் அங்கீகரிக்கும்” மற்றும் ”சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள்” இதில் அடக்கம். ஒருவேளை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

* வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன், மகள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்.

* ஒரு நபரின் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய், தந்தையர்.

மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.

வழக்கு எங்கு தாக்கல் செய்யவேண்டும்?

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய விரும்பும் நபர் தான் எங்கே வசிக்கிறாரோ, எதிர் தரப்பினருடன் கடைசியாக எங்கே வசித்தாரோ, அந்த இடத்திற்குட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலோ (Magistrate Court) அல்லது குடும்பநல நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச வழக்கு தாக்கல் செய்யலாம்.

மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து வழக்கு தாக்கல் செய்ய இயலும், இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தைக்கும் (Illegitimate child) பொருந்தும். மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் (rise in cost of living) எதிர்தரப்பினராக இருக்கும் கணவரின், தந்தையின், மகனின் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் ஏற்படும் மாற்றம், ஜீவனாம்சம் கோரும் மற்றும் ஜீவனாம்சம் பெரும் நபரின் ஊதியம் ஈட்டக்கூடிய நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலையில் மாற்றம், விவாகரத்தான மனைவியின் மறுமணம் அல்லது விவாகரத்து ஆகாத மனைவியின் தவறான நடத்தை, மைனரிலிருந்து மேஜராகும் பிள்ளைகள் போன்ற ஒரு சில காரணங்களால் நீதிமன்றம் நியமித்த ஜீவனாம்ச தொகையை உயர்த்தவோ, குறைக்கவோ இந்தச் சட்டத்தின் பிரிவு 127ன் கீழ் வழிவகை உள்ளது.

நீதிமன்ற ஆணைக்குப் பிறகும், ஜீவனாம்சம் தராவிட்டால்?

நீதிமன்றம் கொடுத்த ஜீவனாம்சம் தொகையினை எதிர்தரப்பினர் தராமலும் எந்தவிதமான மேல்முறையீடும் செய்யாமலும் இருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை பெற ஒரு மனு தாக்கல் செய்து அந்தத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தவோ அல்லது ஜீவனாம்சம் கொடுக்காத பட்சத்தில் எதிராளியை சிறையெடுக்கவோ முடியும். இந்த வழக்குகளில் எதிர் தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரே நோக்கத்தில்தான் அவரை சிறையெடுக்கும் ஒரு முடிவினை நீதிமன்றம் எடுக்கும்.

எதிர்தரப்பினர் ஜீவனாம்சம் செலுத்திவிடும் பட்சத்தில் சிறையெடுப்பு தவிர்க்கப்படும்.

நீதிமன்ற தீர்ப்புகள்:

Savitaben Somabhai Bhatia Vs State of Gujarat and others (2005)

இந்த வழக்கில் ஒரு ஆண் மகன் தன்னை தானே பராமரித்துக்கொள்ள இயலாத நிலையி லிருக்கும் தன்னுடைய மனைவி, மக்கள் மற்றும் பெற்றோரை பராமரிப்பது இயற்கை அவன் மீது விதித்திருக்கும் தர்மப்படியான ஒரு கடமை. இவ்வாறு கடமையாற்றுவது ஒரு சமூக நீதியின் வெளிப்பாடு என்று ஜீவனாம்சத்தைப் பற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Chaturbhuj Vs Sita Bao (2008)

இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 125 இயற்றப்பட்டதன் நோக்கம் தன்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்களை பராமரிக்க தவறும் நபருக்கு அவருடைய தர்மப்படியான கடமையை புரியவைக்க முயற்சிப்போமேயன்றி தண்டிப்பது நோக்கமல்ல.

Provision Of Muslim Women (Protection Of Rights On Divorce) Act 1986

1985ம் ஆண்டு நமது உச்ச நீதிமன்றத்தில் Mohammed Ahmed Khan Vs ShahBanu Begum என்ற சரித்திரப் புகழ் மிக்க வழக்கில் ஒரு இஸ்லாமியப் பெண்ணிற்கு தலாக்கிற்கு பிறகு இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் கொடுத்த தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தினால் மேற்கூறிய இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. மேற்கூறிய இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் இஸ்லாமிய சமூகத்தாரால் தலாக்கிற்குப் பிறகு ஒரு பெண் கடைப்பிடிக்கும் இதாத் சமயத்திலேயே அந்தப் பெண்ணிற்கு தன் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான ஜீவனாம்சத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. தலாக் செய்யப்பட்ட உடனே அவர்களுக்குப் பிறக்கும் சட்டப்படியான குழந்தைக்கான ஜீவனாம்சமும், மேலும் திருமணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட மெஹர் தொகையும் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்னரும் திருமணத்தின்போதும் அவளது உற்றார், உறவினர், நண்பர்கள், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் திருப்பித் தரப்படவேண்டும்.

ஒரு வேளை தலாக் செய்த கணவர் மேற்கூறியவற்றை சரிவர நடைமுறை படுத்தாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் வழக்கு தொடர இயலும். தலாக்கிற்கு பிறகு மறுமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணிற்கு முழுமையான ஜீவனாம்ச தொகை தராத பட்சத்தில் சட்டப்படி அதனை முன்னாள் கணவரிடமிருந்து கோர மறுமணம் ஒரு தடையல்ல.

The Hindu Marraige Act 1955 (இந்து திருமணச் சட்டம் 1955)

இந்தச் சட்டத்தின் பிரிவு 24ன் கீழ் பாதிக்கப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ எதிர்தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் கோர இயலும். இந்து திருமணச் சட்டத்தின்கீழ் ஏதாவது ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவினை பயன்படுத்த இயலும்.

பிரிவு 25ன் கீழ் ஒரு வழக்கு விவாகரத்தில் முடியும் பட்சத்தில் வாழ்நாள் ஜீவனாம்சத்தை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ள இந்தப் பிரிவு வழிவகை செய்துள்ளது.

Hindu Adoption and Maintenance Act 1956
(இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956)

இந்தச் சட்டத்தின் பிரிவு 18 ஒரு இந்து மனைவி அவர் வாழ்நாள் முழுவதும் தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர வழிவகை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நியாயமான காரணத்திற்காக கணவரை விட்டுப் பிரிந்த மனைவியும் ஜீவனாம்சம் கோரலாம்.
1. எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் தன் மனைவியை கைவிட்டு பராமரிக்க தவறிய கணவன்.
2. கணவனால் மனதளவிலும், உடலளவிலும் வன்கொடுமை அனுபவித்த பெண்.
3. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணவர்.
4. வேறு ஒரு மனைவியுடன் வாழ்பவர்.
5. வேறு ஒரு பெண்ணுடன் அதே வீட்டில் தொடர்ந்து அல்லது அவ்வப்போது வசிப்பது.
6. இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது.
7. வேறு ஏதாவது ஒரு நியாயமான
காரணத்திற்காக பிரிந்து இருத்தல்.
தகாத உறவில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் ஒரு மனைவி இந்தச் சட்டத்தின் கீழ் தனி வசிப்பிடமோ, ஜீவனாம்சமோ கோர இயலாது.

* இந்தச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ் கணவனை இழந்த பெண் தன்னுடைய சுய சம்பாத்தியம் அல்லது சொத்தின் மூலம் வரும் வருமானத்தாலோ, தன்னுடையோ கணவரோ அல்லது தாய், தந்தையரின் சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ, மேலும் தன் மகன் மற்றும் மகளின் பராமரிப்பின் மூலம் அல்லது அவர்களது சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ தன்னைக் காத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் தன்னுடைய கணவரின் தந்தையிடமிருந்து (மாமனார்) ஜீவனாம்சம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* இச்சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் ஒரு இந்து குடிமகனின் சட்டப்பூர்வமான அல்லது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தை, தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத வயதான பெற்றோர், தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத திருமணமாகாத மகள் ஆகியோர் ஜீவனாம்சம் கோர இயலும். நீதிமன்றம் ஜீவனாம்சம் வழக்கின் போது வழக்கு தொடுப்பவரின் நிலை, எதிராளியின் வருமானம், வாழ்க்கைத் தரம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு ஜீவனாம்சம் கோருபவரின் வாழ்வாதாரத்திற்கான போதிய தொகையை நிர்ணயிக்கும்.

Protection of Women from Domestic Violence Act 2005
(குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005)

நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் குற்றங்களில் பெரும்பாலான குற்றங்கள் பெண்களின் மீது செலுத்தப்படும் குடும்ப வன்முறையே ஆகும். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு தன் கணவராலோ, சகோதரனாலோ, மகனாலோ, உடன் வசிக்கும் ஆண் நண்பராலோ, தந்தையாலோ நிர்கதியாக விடப்படும் பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்மகனிடமிருந்து ஜீவனாம்சமும் நஷ்டஈடும் கோர இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. பொதுவாக இந்திய சட்டங்களில் மனைவி என்ற அந்தஸ்துடைய பெண் மட்டுமே ஜீவனாம்சம் கோர சட்டம் வழிவகை செய்துள்ளது. எனினும் முதல் முறையாக மனைவியல்லாத ஒரு ஆண்மகனுக்கு துணையாக மனைவி போல் வாழும் ஒரு பெண்ணும் ஜீவனாம்சம் கோர இந்தச் சட்டமே முன்னோடியாக விளங்கியது. இந்தச் சட்டத்தைப் பற்றி முழுமையாக பின்னர் தெரிந்து கொள்வோம்.

Narinder Pal Kaur Vs M.S. Chawla (2008)

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கூறிய வழக்கில் மனைவியல்லாத ஒரு பெண்ணிற்கு ஜீவனாம்ச உரிமை கொடுத்து தீர்ப்பளித்தது. காலங்காலமாக ஒரு ஆண் பல மனைவிகள் வைத்துக்கொண்டது நம் இதிகாசங்களில், புராணங்களில் பார்த்துவந்த ஒன்று. இந்தியாவில் திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் ஒரு தாரம் முறை வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருமண உறவில் அல்லாத ஒரு பெண் ஜீவனாம்சம் கோர சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் மேற்கூறிய வழக்கில் ஒரு ஆண் தான் ஏற்கனவே மணமாகியிருந்ததை மறைத்து 14 ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து இரண்டு குழந்தைகளையும் பெற்று சமூகத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் என்று வெளிக்காட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த இரண்டாவது மனைவியையும் சட்டப்பூர்வமாக ஜீவனாம்சம் பெருவதற்கு அங்கீகரிக்கலாம் என்று கூறி நீதிமன்றம் ஜீவனாம்சமும் வழங்கியது.

Komalam Amma Vs Kumara Pillai Raghavan Pillai and others (2008)

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு பெண்ணிற்கு வசிக்கும் இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜீவனாம்சத்தின் ஒரு அங்கமே என்று கூறியுள்ளது. மேலும், அந்த இருப்பிடமும் அந்தப் பெண் பழக்கப்பட்ட அந்தஸ்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007
(பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007)

இந்திய நாடு கூட்டுக் குடும்ப முறைக்கு பெயர் போனது. ஆனால், காலத்தின் கட்டாயத்தால் பொருளீட்டுவதற்காக இளைய தலைமுறையினர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் நம் நாட்டில் வயதான பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் பராமரிக்க ஆளில்லாமல், அன்பு காட்ட ஆளில்லாமல் தனிமை படுத்தப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. இதனாலேயே இன்று புற்றீசல் போல் முதியோர் காப்பகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 125ன் கீழ் பெற்றோர்கள் ஜீவனாம்சம் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டு கூடுதலான இந்தச் சிறப்பு சட்டத்தினையும் இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் தன்னை பராமரித்துக்கொள்ள இயலாத ஒரு மூத்த குடிமகன், ஆதரவற்று விடப்பட்ட பெற்றோர், தன்னிச்சையாகவோ அல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (ழிநிளி) மூலமாக இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் வழக்கு தாக்கல் செய்யலாம்.

மேலும், யாருமே பராமரிக்க இயலாத நிலையில் இருக்கும் முதியோர்களை அரசே முதியோர் இல்லங்களின் வாயிலாக பராமரிக்க சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், இந்த சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்யும் செய்பவரின் குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம் ஆலோசனை வழங்கி சமரச முயற்சி மேற்கொள்கிறது. சமரச முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் ஆணையம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி தீர்ப்பினை வழங்குகிறது.


கல்விக்கடன் வாங்கும்போது - கவனிக்க


கல்விக்கடன் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை
**************************************************************

கடந்த சில வருடங்களாக, கல்விக்கான செலவுகள் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் நீங்கள் ஒரு பெற்றோராக அல்லது மாணவராக இருந்தால், கல்விக்கடனை பற்றி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. சில நேரங்களில் பல முனைகளில் இருந்து கடன் கிட்டும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கும் மற்றவைகளுக்கும் சிறிய வேறுபாடு மட்டுமே இருந்திருக்கலாம். ஆனால் அவை எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். கல்விக் கடனில் அப்படி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?

1) கல்விக்கடனை பொறுத்த வரைக்கும் 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகள் என்ற சிறிய வேறுபாடு பெரிய தக்கத்தை ஏற்படுத்தும் அதனால் கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதங்களை ஆய்வு செய்து கொள்வது நல்லது.

2) பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். அதில் எப்போதுமே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறந்து விளங்குவதை நீங்கள் காணலாம். மேலும் தனியார் வங்கிகளில் வட்டி வகிதங்கள் அதிகமாக இருக்கும் எனவே கல்வி கடன் வாங்கு பொழுதில் தனியார் வங்கிகளை ஒதுக்கிடுவது நல்லது

3) இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் மேலும் தள்ளுபடி கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

4) ஃபிக்சட் வட்டி மற்றும் ஃப்லோடிங் வட்டி போன்ற பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். முடிந்த வரை ஃப்லோடிங் வட்டி விகிதத்தை கொண்ட கடனை பெறுவது தான் நல்லது.

5) வங்கி மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் அளவு அமையும். உதாரணத்திற்கு, தொழிற்கல்வி அல்லாத படிப்புகளுக்கு, ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடனை ஐ.டி.பி.ஐ. வங்கி வழங்குகிறது. அதே போல் சார்ட்டட் அக்கௌண்டன்சி படிப்பு என்றால் கல்விக்கடனாக ரூ. 3 லட்சத்தை வங்கி வழங்குகிறது.

6) கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பை பொருத்தும் வங்கியை பொருத்தும் மாறுபடும். உங்கள் கடனின் அளவை பொறுத்து அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை பல்வேறு வங்கிகள் தீர்மானிக்கிறது. உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடிடுங்கள்.

7) கல்விக்கடனின் மீது பல்வேறு பிற கட்டணங்களும் பொருந்தும். செயலாக்க கட்டணம், கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் படிப்பதற்கு கல்விக்கடன் பெரும் போது சில வங்கிகள் செயலாக்க கட்டணத்தை வசூலிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டில் படிப்பதற்காக கல்விக்கடன் பெரும் போது அவர்கள் செயலாக்க கட்டணத்தை வசூலிக்கலாம்.

8) இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெரும் போது, இவ்வகையான இலவசங்களை மறந்து விடாதீர்கள், இது வாழ்கையில் கண்டிப்பாக உதவும்.

9) ஏற்கனவே சொன்னதை போல், நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது வட்டி விகிதமே. பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடம் இருந்து கடனுக்கான ஒப்புதலை பெறுவதற்கு நீங்கள் பல முறை அலைய வேண்டியிருக்கும். ஆனாலும் கூட முடிவில், உங்கள் அலைச்சல் நல்ல பலனை அளிக்கும்.

டீமேட் கணக்கு (Demat Account)


DEMAT ACCOUNT
********************
பங்கு சந்தையில் வரத்தகம் செய்திட நமக்கு மின் ஆவணக் கணக்கு எனப்படும் டீமேட் கணக்கு (Demat Account) அவசியம்.

நாம் வர்த்தகம் செய்திடும் அனைத்து விதமான பதிவுகளும் இக்கணக்கில் பதிவாகி இருக்கும். இந்நிலையில் இக்கணக்கு வைத்திருப்பவர்கள் நோயின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ அல்லது வயோதிகம் காரணமாகவோ திடீரென்று இக்கணக்கிற்கு நாமினி அதாவது கணக்கிற்கு வாரிசாக யாரையும் நியமிக்காமல் மரணமடைந்தால், இக்கணக்கில் இருக்கும் பங்குகளின் நிலை என்ன??

இக்கட்டாண நிலையில் ஆவணக்கணக்கிற்கு வாரிசாக இன்னொருவரை நியமனம் செய்யாமலோ, அல்லது உயில் எழுதி வைக்காமலோ ஒருவர் இறந்து விடும் பட்சத்தில், அவருடைய மின் ஆவணக்கணக்கில் அதிக மதிப்புடைய பங்குகள் இருக்குமாயின், இறந்தவரின் மரபுவழி வழித்தோன்றல் (சட்டரீதியான வாரிசு) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

1) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழின் நகல்.

2) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட வழிமுறையுரிமை (மரபுவழி வாரிசுரிமை) சான்றிதழ் நகல் அல்லது உயில் இல்லாமல் இறந்திருந்தால், தகுதிவாய்ந்த நீதிமன்றம் வழங்கும் ஆணை

3) விருப்புறுதிச் சான்றிதழ் நகல் (Probate) அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட நிருவாக உத்தரவு (Letter of Administration). மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், என்ன செய்ய? இறந்தவரின் சட்டரீதியான வாரிசு கீழ்க்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

a)பங்கு மாற்று பத்திரத்தை பூர்த்தி செய்வதின் மூலம் பங்கு மாற்று உரிமை கோரலாம்.

b) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழ் நகல் கொண்டு உரிமை கோரலாம்.

c) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட காப்புறுதிக் கடிதம் (Letter of Indemnity) 

d) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரம் (Affidavit) 

e) பங்கு மாற்று உரிமைக்கு ஒப்புதல் அளிக்கும், இறந்தவரின் சட்டரீதி வாரிசுகளின் ஒப்புதல் பெற்ற தடையில்லா சான்றிதழ்

மோசடி நிறுவனங்களை அடையாளம் காண


மோசடி நிறுவனங்களை அடையாளம் காண 10 வழிகள்
***************************************************************
பிஏசிஎல், எம்ஆர்டிடி மாதிரி பல நூறு மோசடி நிறுவனங்கள் தமிழகம் முழுக்க ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதற்கான பத்து வழிகள் இருக்கிறது.

1. நாம் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் எந்தமாதிரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தனிநபர் நடத்தும் அமைப்பா, கூட்டாண்மை நிறுவனமா, இன்ஷூரன்ஸ் நிறுவனமா, வங்கியா, வங்கியல்லாத நிதி நிறுவனமா, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளா, பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒளிவுமறைவற்ற முறையில் தங்கள் கணக்குவழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவற்றைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால், அது மட்டுமே நம் பணத்துக்குப் பாதுகாப்பல்ல.

2.நிறுவனங்கள் எந்தச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எந்த ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கீழ் நெறிமுறைப்படுத்தப் படுகிறது என்பதை இணையம் மூலமாகவோ, நேரடி யாகவோ தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஒரு பிரச்னை எனில், யாரிடம் முறை யிடுவது என்பது தெரியும். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம் எனில், ஐஆர்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். (பதிவு பெற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் ஐஆர்டிஏ இணையதளத்தில் கிடைக்கிறது). வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எனில், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் எனில், அந்த நிறுவனங்கள் செபியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். உற்பத்தி/சேவைத் துறை நிறுவனங்கள் எனில், கம்பெனி சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

3.முதலீடுகளை பணமாகவே பெறுவோம் எனில், அந்த நிறுவனங்களை நம்பாதீர்கள். அதேபோல், நிறுவனத்தின் பெயரில் மட்டுமே காசோலைகளை எழுதுங்கள். குறிப்பிட்ட வேறு நிறுவனத்தின் பெயரில் எழுதவோ, தனி நபரின் பெயரிலோ காசோலையை தரச் சொன்னால் போலி நிறுவனங்கள் என்பதை அடையாளம் கண்டுவிடலாம். நிறுவனத்தின் பெயரில் காசோலை எடுக்கச் சொன்னாலும், அதில் க்ராஸ் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது போலி நிறுவனமாகவே இருக்க வாய்ப்புண்டு.

4.ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெறுகிறது எனில், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி தவிர, வேறு அரசு அல்லாத அமைப்புகளிடம் அனுமதி பெற்று டெபாசிட் பெற்றாலும் அதைப் போலி நிறுவனமாகக் கருதலாம்.

5.பட்டியலிடப்படாத நிறுவனங்களில் நிதி சார்ந்த பிரச்னைகள் இருந்தால் நமக்குத் தெரியாது. எனவே, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

6.நிதி நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளும் போது அவர்கள் வழங்கும் விண்ணப்பங்களில் தந்திருக்கும் டிஸ்க்ளெய்மர் விதிகள் மற்றும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மறுத்தாலோ, இழுத்தடித்தாலோ, மழுப்பினாலோ அந்த நிறுவனம் போலி நிறுவனம் என்று முடிவு செய்யலாம். முழுவதும் பூர்த்தி செய்யாத எந்த விண்ணப்பத்திலும் கையெழுத்திடாதீர்கள்.

7.முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாடுகள், புரமோட்டர்களின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நிறுவன நிர்வாகம், நிதி நிலைமை, சந்தையில் நிறுவனத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் என்று எதையும் தெளிவாக வெளியிடாமல், ரகசியமாக வைத்திருந்தால் அந்த நிறுவனத்தைப் போலி நிறுவனமாகக் கருதலாம். குறிப்பாக, பெறப்படும் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது, எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை வெளி யிடாத நிறுவனங்கள் மிக ஆபத்தானவை.

8.நிறுவனத்தின் எந்த முக்கிய மாற்றமும் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி தெரிவிக்காமல் செய்தால், அது போலி நிறுவனம்.

9.போலி நிறுவனங்கள் வளர வளர தன் வெளிப்படைத்தன்மையை வெகுவாகக் குறைத்துக் கொள்ளும். சரியான பதில்கள் கிடைக்காது, பணம் சம்பந்தமான பரிமாற்றங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இறுதி நிலையில் அவை எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்கிற மாதிரி மர்மமாக செயல்படத் தொடங்கும்.

10.கவர்ச்சிகரமான ஆஃபர்கள், அதிக டிவிடெண்ட், குலுக்கல் முறை யில் கோடி ரூபாய்க்கு பரிசு, தங்க காசு, ஆண்டுக்கு 35% வட்டி, ரியல் எஸ்டேட் கூட்டு முதலீடுத் திட்டம் என்கிற மாதிரியான, பேராசையைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைச் சொல்லும் எல்லா நிறுவனங்களும் 200% போலிதான். இந்த நிறுவனங் களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள்!


தனி நபர் விபத்துக் காப்பீடு


தனி நபர் விபத்துக் காப்பீடு
********************************
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி...

1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி.
இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.

3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.

4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.

5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.

6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.

8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.

9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது.

10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.

பொதுநலவழக்குத் தொடுக்க .....


பொதுநலவழக்குத் தொடுக்க .....
*************************************
பொதுநல வழக்கு தொடுப்போர் தங்களது ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்வது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் பிரச்சினையால் பாதிக்கப்படும் ஒருவர், நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக நிவாரணம் தேட இயலாதவராக இருந்தால், அவரது பிரச்சினையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவருக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம்.

அதேபோல, ஒரு பிரச்சினை காரணமாக திரளான மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். இந்த வகையில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

எனினும், சுயலாபம் மற்றும் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கில் சிலர் பொதுநல மனுக்களைப் பயன்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, இதுபோன்ற நோக்கில் மனு தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை விவரம்:

‘பொதுநல வழக்கை தாக்கல் செய்யும் மனுதாரர் தனது தொழில், ஆண்டு வருமானம், வருமான வரி செலுத்துபவரா என்ற விவரம், வருமான வரி செலுத்துபவராக இருந்தால் வருமான வரி அட்டை (PAN) எண், சொந்தப் பணத்திலிருந்து மனுவை தாக்கல் செய்கிறாரா என்ற விவரம், மற்றவர்களின் நிதியைக் கொண்டு தாக்கல் செய்தால் அதுதொடர்பான விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்வது அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

தி இந்து செய்திகள் - 30.01.2015


ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?
உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. 
இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 
அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 

உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.
தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்: 
1. ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.
2. ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும்.
3. மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால்,
4. மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும். 
5. நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள். 
6. கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். 
இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். 
கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.

ஃபிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்வோமா?


ஃபிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்வோமா?
***********************************************************
வைப்பு நிதி அல்லது ஃபிக்சட் டெபாசிட் (FD) என்பது அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய ஒரு பாதுகாப்பான முதலீடாகும். அதற்கு முக்கிய காரணமே முதலீட்டின் பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் தான். பங்குச்சந்தையில் இருக்கும் இடர்பாட்டில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். இருப்பினும் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் அளவு, தனிப்பட்ட நபரின் இடர்பாட்டின் கொள்ளளவை பொறுத்தே அமையும். அதே போல் பங்குகள், நிறுவன டெபாசிட்கள் போன்ற பிற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் வங்கி ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைவே.

வங்கி ஃபிக்சட் டெபாசிட்களில் நம்பிக்கையுள்ள முதலீட்டாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள், இதோ!

1) இந்தியாவில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அளித்துள்ள டெபாசிட் காப்பீடு திட்டத்தின் கீழ், வங்கியில் 1 லட்ச ரூபாய் வரை வைக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு காப்பீடு உள்ளது. அதனால் 1 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டுமானால், உங்கள் தொகையை பல்வேறு வங்கியில் பிரித்து முதலீடு செய்யவும்.

2) பல வங்கிகளில், மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

3) ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வங்கி ஃபிக்சட் டெபாசிட்களை காட்டிலும் நிறுவன ஃபிக்சட் டெபாசிட்கள் அல்லது NBFC-க்கள் அதிக வட்டி விகிதத்தை அளிக்கிறது. இதனால் குழம்பி போகாதீர்கள். நிறுவன ஃபிக்சட் டெபாசிட்களில் அடங்கியுள்ள இடர்பாட்டை நன்றாக ஆய்வு செய்யுங்கள். "கூடுதல் வருவாய் என்றால் கூடுதல் இடர்பாடு" என்பதை மறந்து விடாதீர்கள்.

4) வங்கி ஃபிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதங்கள், எப்போதுமே காலாண்டு என்ற முறையில் கூட்டு வட்டியாக கணக்கிடப்படும். வேண்டுமென்றால் விசாரித்து பாருங்கள்.

5) உங்கள் அசலை நீண்ட நாட்கள் முடக்கி வைத்திருப்பது மட்டுமே வங்கி ஃபிக்சட் டெபாசிட்டில் இருக்கும் இடர்பாடு. ஒரு வேளை, உங்களின் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், உங்கள் அசல் குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படும். முதிர்வு காலத்திற்கு முன்பே அதனை எடுக்க வேண்டும் என்றால் பல வங்கிகள் அதற்கு தண்டத் தொகையை வசூலிக்கும். அதனால் "அதிக வட்டி விகிதத்துடன் குறைந்த காலத்திற்கு முதலீடு செய்வது தான் நல்லது".

6) ஒரு ஆண்டின் வட்டி வருமானம் ரூ.10,000/-ஐ தாண்டினால், வங்கி டெபாசிட்கள் அதற்கு TDS பிடித்தம் செய்யும். உங்களின் பிற வருமான மூலத்தோடு இந்த வட்டி வருமானத்தையும் சேர்த்துக் கொண்டு, உங்களின் வரி பாளத்தை பொறுத்து வரியை கட்டவும்.

பிறப்புச்சான்றிதழ் பற்றிய தகவல்கள்


பிறப்புச்சான்றிதழ் பற்றிய தகவல்கள்
********************************************


குழந்தை பிறக்கும்போது ஏதேனும் காரணங்களால், பிறப்பை பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம். குறிப்பாக, முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பிறந்தபோது பிறப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. எனவே, குழந்தை பிறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு பிறப்பை பதிவு செய்ய வேண்டுமானால், குற்றவியல் நீதிபதியின் ஆணையைப் பெற்றுதான் பதிவு செய்ய முடியும்.

அதற்கான நடைமுறைகள் என்ன?

அதற்கு non-availability சான்றிதழ் பெற வேண்டும்.

non-availability சான்றிதழ் என்றால் என்ன?

புதிதாக பதிவு செய்யப்படும் உங்கள் பிறப்பு மற்றும் பெயர் ஏற்கெனவே வேறு எங்குமே (எந்த உள்ளாட்சி அமைப்பிலும்) பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே non-availability சான்றிதழ்.

அந்த சான்றிதழை எப்படி பெறுவது?

தொடர்புடைய உள்ளாட்சி அலுவலகத்தில் இதற்கான படிவம் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகாரிகள் அதை சரிபார்த்து, வேறு எங்கும் பதிவுகள் இல்லை எனில் அதன் பிறகு சான்றிதழ் தருவார்கள்.

அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்?

Non-availability சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் குழந்தை பிறந்த இடம் மற்றும் தேதிக்கான ஏதேனும் ஓர் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிரசவச் சீட்டு, குடும்ப அட்டை அல்லது வேறு ஏதேனும் மாற்று ஆவணத்தை இதற்காக சமர்ப்பிக்கலாம். அவை உண்மையானதா என்று அதிகாரிகள் விசாரித்து, சரி பார்ப்பார்கள். பின்பு குழந்தையைவிட பத்து வயது மூத்தவர் வந்து, அவருக்கு நீதிமன்றத்தில் சாட்சி கூற வேண்டும். நீதிபதிக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றால் பிறப்புச் சான்றிதழ் தரலாம் என்று ஆணை பிறப்பிப்பார். அதன் பிறகு, உள்ளாட்சி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை கொடுப்பார்கள்.

பதிவுத்துறை பயன்படுத்தும் வார்த்தைகள்


பதிவுத்துறை பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்கள்
******************************************************************
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.



அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்


பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்
*****************************************
ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்-1.

இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம்-2.



நோக்கம்:- குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசு வதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல்.

உதவித்தொகை விவரம்:-

திட்டம்-1: குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.

திட்டம்-2:- குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத்தொகை வழங்கப்படும். (தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகை). மேலும், இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் வட்டியை, வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.


இறப்புச் சான்றிதழின் அவசியம்


இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன?

ஒருவரின் உயிர் இயக்கத்துக்கான அறிகுறிகள் அனைத்தும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்த இறப்புச் சான்றிதழ் அவசியம்.

எந்த சூழ்நிலையில் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும்?

சொத்து, நிலம், காவல் விசாரணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இறப்புச் சான்றிதழ் தேவை.

இறப்புச் சான்றிதழை எங்கு, யாரிடம் பெறுவது?

இறப்புச் சான்றிதழை இறப்பு நிகழும் இடத்துக்கு உட்பட்ட பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் பெற வேண்டும். மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் என அதற்கு பொறுப்பான அதிகாரியிடமும் பெற வேண்டும்.

இறப்பு நிகழ்ந்தவுடன் செய்யவேண்டியது என்ன?

மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால், இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தை குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ்.

எத்தனை நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் பெற வேண்டுமானால், மருத்துவமனையிலேயே பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் என்றால், மாநகராட்சி ஆணையர் அல்லது அதற்கு பொறுப்பான அலுவலரிடம் இருந்து எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டால், குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும்.

ஒருவர் வசிக்கும் ஊரிலிருந்து வேறு இடத்தில் இறப்பு நிகழ்ந்தால் செய்ய வேண்டியது என்ன?
இறப்பு எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்துதான் சான்றிதழைப் பெற வேண்டும்.

குழந்தை இறந்தே பிறந்தால், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன?

இறந்தே பிறக்கும் குழந்தைக்கு, பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட மாட்டாது. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படும். அதற்கும், மற்றவர்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான அதே நடைமுறைகள்தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இறந்து பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன ஒருவருக்கு, அவரது இறப்பை பதிவு செய்யாத நிலையில், அவரது “இறப்புச்சான்றிதழ்” பெற என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் சென்று, அவரது இறப்புச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அங்குள்ள பதிவு அதிகாரி, அந்த இறப்பு பதிவு செய்யப்படவில்லை என ஒரு அறிக்கை தங்களுக்கு வழங்குவார்.

அதன்பிறகு ஒரு வழக்கறிஞர் மூலமாக, முண்ணனி தமிழ் நாளிதழ் ஒன்றில் இறந்துபோன தங்களது உறவினர் பற்றிய
விபரங்களை முழுமையாக குறிப்பிட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும். அதற்கு 15 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், அதனையும், நகராட்சி அலுவலர் கொடுத்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிபதி சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலருக்கு, தங்கள் உறவினரின் இறப்புச்சான்றிதழ் வழங்குமாறு உத்தரவு பிறப்பிப்பார்.

சர்வதேச ஓட்டுநர் உரிமம்


சர்வதேச ஓட்டுநர் உரிமம்
******************************
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக் கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

அந்த நாட்டில் டிரை விங் லைசென் ஸுக்கு விண் ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடி யாத சூழ்நிலையில், இங்கே இருந் து செல்லும்போதே இன்டர் நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். 

இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த த்தின்படி, அந்த டிரை விங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத் துக்குச் செல்லுபடியாகும்.

சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
*****************************************************************************************

ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண் ணப்பிக்க முடியும். 
அதற்குரிய "4ஏ" விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டு ம். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப் பட்டுவிடும்.


குடும்ப அட்டை சம்பந்தமான முழு விபரங்கள்


குடும்ப அட்டை சம்பந்தமான முழு விபரங்கள்

குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கிறது. பொது விநியோகத்திட்டத்தில் பொருள்கள் வாங்கவும் பயன்படக் கூடியது. எனவே எப்போதும் பயன்படக்கூடிய குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா? குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து மாதங்கள் பலவாகியும் தராமல் இழுத்தடித்தால் எங்கே புகாரளிப்பது? போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

குடும்ப அட்டை என்பது என்ன?
*********************************************

குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் அடங்கிய குடும்பத்தலைவரின் புகைப்பட நகல் தாங்கிய ஒரு அடையாள அட்டை.

குடும்ப அட்டையின் அவசியம்:
*********************************************

பொதுவிநியோகத்திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.

குடும்ப அட்டைப் பெறுவதற்கான தகுதிகள்:
***************************************************************

தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
************************************************

அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdfஆங்கிலத்திலும் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf தமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கே / யரிடம் விண்ணப்பிப்பது?
**************************************************

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினைப் பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டணம்:
***************

புதிய குடும்ப அட்டைப் பெறும் போது ரூ 10 கட்டணமாகப் பெறப்படும்.

தேவையான ஆவணங்கள்:
***************************************

விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதத்திற்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று 

அல்லது 

வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானவை. 

ஒரு வேளை இந்த சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “குடும்ப அட்டை இல்லை“ என்ற சான்று.

எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.


குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
******************************************************************************************************************************
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
 அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.

குடும்ப அட்டை தொலைந்து போனால் என்ன செய்வது?
********************************************************************************

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். 

சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது? 
******************************************************************

வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா? விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா? என மனுதாரரின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

விண்ணப்பித்த முப்பது நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும். 
அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும். 

அல்லது

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும். அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை, 
044 – 2859 2858
என்ற எண்ணில் தொலைபேசியிலோ,
consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com 
என்ற மின்னஞ்சல் முகவரியிலோ,

மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
4வது தளம், எழிலகம், 
சேப்பாக்கம், சென்னை – 5 

என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு:
**************************************

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotment_ver2/rep_allotment_shopwise.jsp இத்தளத்திற்கு செல்லவும்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் http://egov-civilmis.pon.nic.in/ 

SearchCard_Pondy_AppNo.aspx இத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htmஇத்தளத்திற்க்குச் செல்லவும். 

சான்றுகள் பெற கால அவகாசம்?
************************************************

பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்.

குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று வேறு மாநிலம், இதர நகரங்களுக்கு 2 நாட்களில் கொடுக்க வேண்டும்.

மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்.

புதிய குடும்ப அட்டை 60 நாட்களிலும்,
நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களிலும்,
குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில்)
*************************************************************************************************
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.

எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.


ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
********************************************************************************************************************************
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

ஏழைப்பெண்கள் திருமணம் - அரசு உதவி!


ஏழைப்பெண்களுக்கு அரசு தருகின்ற திருமண உதவி!
*****************************************************************************
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
நிதியுதவித் திட்டம்

வழங்கப்படும் உதவி:
*******************************

திட்டம் 1: 
25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2: 
50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

இதனைப் பெறுவதற்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
*********************************************************************************

திட்டம் 1: 
1) மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம்.

2) தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

திட்டம் 2: 
1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

2) பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

திட்டம் 1க்கு தேவையான சான்றுகள்:
******************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 

திட்டம் 2க்கு தேவையான சான்றுகள்:
******************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

யாரை அணுகுவது?
*****************************

*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், 
நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், 
ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுக வேண்டும்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.