ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
***********************************************************************
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.
மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
*********************************************************************
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.
முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்றால்
அங்கு click here for new user ID registration என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால்
Welcome to the DEPARTMENT OF EMPLOYMENT
AND TRAINING JOB PORTAL.
|
|
FOR THE KIND ATTENTION OF THE REGISTRANTS
|
|
1. Candidates accessing the Online Employment Registration portal are
informed to furnish correct and complete information regarding their personal
profile and Educational Qualifications.
2. Accuracy in providing information is very essential .Candidates furnishing false or incorrect information, are liable for cancellation of their registration with our prior notice. 3. Even if any one of the information furnished is found to be false, the entire Registration stands cancelled and the candidate looses his/her seniority. 4. The onus of verification of the documents lies with the employer. If the employer on verifying the data finds any discrepancy in the details furnished, the appointment for the particular vacancy shall be cancelled along with the cancellation of the registration at the employment office. I declare that the information provided by me shall be true to the best of my knowledge. If any of the information furnished is found to be false, my registration shall be cancelled. I accept the above terms and conditions for registration. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சிதுறை இணையம் தங்களை வரவேற்கிறது பதிவர்களின் கனிவான கவனத்திற்கு , 1. இவ்விணையதளத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்களை சரியாகவும் முழுமையாகவும் உள்ளீடு செய்யத் தெரிவிக்கபடுகிறார்கள். 2. துல்லியமாக விவரங்களை அளிப்பது மிக முக்கியமானதாகும்.தவறான மற்றும் சரியற்ற விவரங்களை அளிப்பது விண்ணப்பதாரர்களின் பதிவு இரத்து ஆக வழி வகுக்கும். 3. எந்த ஒரு விவரமும் பொய்யானதாக, அறியப்பட்டால் பதிவுதாரரின் பதிவு எவ்வித முன்னறிவுப்புமின்றி ரத்து செய்யப்படும். 4. பதிவகர்கள் சான்றிதழின் உண்மைத்தன்மை அறிவது வேலை அளிப்போரின் முழுபொறுப்பாகும். பதிவர்கள் தவறான விவரங்கள் அளித்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படுவதுடன், வேலைவாய்ப்பு அலுவலகபதிவும் ரத்து செய்யப்படும். நான் இங்கு கொடுத்துள்ள விவரங்கள், என் அறிவுக்கு தெறிந்து உண்மையானது என்று அறிவிக்கிறேன். கொடுத்துள்ள விவரங்களில், ஏதேனும் தவறானது என கண்டறியப்பட்டால், எனது பதிவு ரத்து செய்யப்படலாம். நான் மேலே கொடுக்கப்பட்டவேலைவாய்ப்பு பதிவிற்கான கட்டளைகளை ஒப்புக்கொள்கிறேன். |
|
அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.
அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.
கவனிக்க 1:
Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.
கவனிக்க 2:
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3:
ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிக்க 4:
Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான விவரம்:
**********************************************
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)
பதிவு செய்த ஆண்டு: 2010
ஆண் / பெண் : M/F
பதிவு எண்: 7802
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID: ARD2012M00007502
Password: dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்கள்:
*****************************************************************************
1. ARD - District Employment Office-Ariyalur
2. CBD - District Employment Office-Coimbatore
3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore
4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore
5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai
6. CHP - Professional and Executive Employment Office-Chennai
7. CHR - Regional Deputy Director Office-Chennai
8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai
9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai
10. CHU - District Employment Office (Unskilled)-Chennai
11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore
12. CUD - District Employment Office-Cuddalore
13. DGD - District Employment Office-Dindigul
14. DRD - District Employment Office-Dharmapuri
15. ERD - District Employment Office-Erode
16. KGD - District Employment Office-Krishnagiri
17. KPD - District Employment Office-Kancheepuram
18. KRD - District Employment Office-Karur
19. MDD - District Employment Office-Madurai
20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai
21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai
22. NGD - District Employment Office-Kanyakumari
23. NKD - District Employment Office-Namakkal
24. NPD - District Employment Office-Nagapattinam
25. PDD - District Employment Office-Pudukottai
26. PRD - District Employment Office -Perambalur
27. RPD - District Employment Office-Ramanathapuram
28. SGD - District Employment Office-Sivaganga
29. SLD - District Employment Office-Salem
30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy
31. TCD - District Employment Office-Trichy
32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy
33. THD - District Employment Office-Theni
34. TJD - District Employment Office-Thanjavur
35. TMD - District Employment Office-Thiruvannamalai
36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli
37. TND - District Employment Office-Thirunelveli
38. TPD - District Employment Office-Tiruppur
39. TRD - District Employment Office-Thiruvarur
40. TTD - District Employment Office-Tuticorin
41. TVD - District Employment Office-Thiruvallur
42. UGD - District Employment Office-Nilgiris
43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris
44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore
45. VLD - District Employment Office-Vellore
46. VPD - District Employment Office-Villupuram
47. VRD - District Employment Office-Virudhunagar