disalbe Right click

Friday, January 22, 2016

ஸ்ட்ரோக் (பக்கவாதம்)

ஸ்ட்ரோக்! வேகம் முக்கியம்
என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சுஇப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக, கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.
பக்கவாதம் (ஸ்ட்ரோக்)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான்பிரெய்ன் அட்டாக்எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.
இளம் வயதில் ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்
ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்குமொயா-மொயாநோய் என்று ஒரு பெயர் உண்டு.
பரிசோதனை
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.
சிகிச்சை என்ன?
ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.
மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமிசிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம். சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும். மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.
தடுப்புமுறைகள்
மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.
நவீன சிகிச்சைமுறைகள்
ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும். ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.
மறுவாழ்வு சிகிச்சைகள்
ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.
– -------------------------------------------------------------------------------பு.விவேக் ஆனந்த்
ஸ்ட்ரோக் யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், ஸ்ட்ரோக் ஏற்பட ஆறு முக்கியமான காரணிகளைச் சொல்ல முடியும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவை சுருங்கும். ரத்தக் குழாய் சுருங்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது, படிப்படியாகத் தடைப்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
டயாபடீஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களில் இருக்கும் புரதங்களால் ஆன அடுக்கு பாதிப்படையும். இதனால், குளுக்கோஸ், சிறுசிறு கொழுப்புக்கட்டிகள்போல, ரத்தக் குழாய்களில் படியும். இந்தக் கொழுப்புக்கட்டிகள் காரணமாக, கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அடைப்பை ஏற்படுத்தலாம்.
புகைபிடிப்பவர்கள்: நிக்கோட்டின் ரத்தக் குழாயில் படியும்போது, அவை, ரத்தக் குழாய்களில் விரிசலை ஏற்படுத்தும். விரிசலில், ரத்தத் தட்டணுக்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும். இதனாலும் அடைப்பு ஏற்படலாம்.
ஆல்கஹால்: மது அருந்துபவர்களுக்கு, மேற்சொன்ன நான்கு வகையிலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மரபியல் காரணி: பரம்பரையில் யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால், கவனமாக இருக்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட, மரபியல்ரீதியான வாய்ப்புகளும் அதிகம்.
ரத்தக் குழாய் அடைப்பு (Ischemic stroke)
கழுத்தில் இருந்து முன்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும், பின்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும் மூளைக்குச் செல்கின்றன. இந்த நான்கு ரத்தக் குழாய்களும் மூளைப்பகுதியில் சந்தித்துப் பிரியும்.
இதயம் ஒழுங்கின்றி திடீரென வேகமாகத் துடிக்கும் பிரச்னையான ரூமாட்டிக் இதய நோய் உள்ளவர்களுக்கு, இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படலாம். கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் முன்பக்க ரத்தக் குழாய்களிலும், மூளைக்கு உட்புறமாகச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களிலும் கொழுப்புகள் படிந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
ரத்தக்கசிவு ஸ்ட்ரோக் (Hemorrhagic Stroke)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தம் கசிவதாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளன.
வயதானவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மூளைக்கு உள்ளே செல்லும் ரத்தக் குழாய்களில் கீறல் விழுந்து, ரத்தக் குழாய் வெடித்து, ரத்தம் கசியும். பெரும்பாலும், மூளையில் உள்ள பேசல் காங்கிலியா (Basal ganglia) செரபெல்லம், பான்ஸ் பகுதிகளில் இருக்கும் ரத்தக் குழாய்களில் இத்தகையக் கசிவு ஏற்படலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பலூன் போல வீக்கம் ஏற்பட்டு, பின்னர் ரத்தக் குழாய்கள் வெடிப்பதாலும், ரத்தம் கசிந்து, மூளைக்கு ரத்தம் செல்லாமல் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு, .எஸ்.ஹெச் (Aneurysm sub arachnoid hemorrhage) என்று பெயர்.
மினி ஸ்ட்ரோக்
`டி..எனச் சொல்லப்படும் டிரான்சியன்ட் இஸ்கீமிக் அட்டாக்கை `மினி ஸ்ட்ரோக்என்கின்றனர். ஸ்ட்ரோக் வரப்போகிறது என்பதை, முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதுதான் மினி ஸ்ட்ரோக். மினி ஸ்ட்ரோக் ஏற்பட்டால், திடீரென வாய் கோணி, பேச்சுக் குழறும்; கண் ஒரு பக்கமாக மங்கலாகத் தெரியும்; சில சமயம் பார்வை பறிபோனதுபோல இருட்டாகத் தெரியும். இந்தப் பிரச்னை சில நொடிகளில், நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். இவர்களுக்கு, மறுநாளோ, அடுத்த வாரமோகூட ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அதைப் புறக்கணித்தோம் என்றால், ரிண்ட் (RIND) எனப்படும் அடுத்த நிலை ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலைவந்தால், ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து, வாய்க் குழறல், கை, கால்கள் சரியாகிவிடும். கை, முகம், பேச்சு மூன்றும் ஒரு சேர இழுத்து கொள்ளும்போதுதான் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் FAST என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும் எனகிறார்கள்.
F – Face Drooping: (முகம் ஒரு பக்கமாகக் கோணுதல்) குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க எட்டு டிப்ஸ்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டும்.
மது அருந்துவதை அறவே நிறுத்தவும்.
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்.
எப்போதும் நீர்ச்சத்து தேவை, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
உடற்பயிற்சி, சமச்சீர் உணவின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள்வைப்பது அவசியம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் வலது மூளை பாதிக்கப்பட்டால், உடலின் இடது பக்கம் பாதிக்கப்படும், கை,கால்கள் செயல் இழக்கும். இடது மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் செயல் இழந்துபோவதுடன், பேச்சுத்திறனும், பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். வலது பக்க மூளையைவிட இடது பக்க மூளை பாதித்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.01.201

Thursday, January 21, 2016

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் புகைப்படங்கள் - பிரகதீஸ்வரர் கோயில்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய தகவல்கள்


தமிழராய் பிறந்த நாம் எல்லோரும் பிறப்பால் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இன்று உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மிகப்பழமையான மொழி. தோராயமாக பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றினை கொண்டிருக்கும் மொழி. இன்றிருக்கும் மொழிகள் தோன்றும் முன்பே 'தொல்காப்பியம்' போன்ற மொழிக்கு செறிவூட்டும் இலக்கண நூல்களை கொண்டிருந்த மொழி. இன்று தன் கடவுளே சிறந்தவர், தான் சார்த்த மதமே முக்திக்கான மார்க்கம் என்று மூடர்கள் பிதற்றிக்கொண்டிருக்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் அனைவருக்கும் பொருந்தும் தமிழ் மறையாம் வள்ளுவம் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. இப்படியொரு புகழ் தமிழுக்கு கிடைக்க காரணம் அகத்தூய்மையும், அகண்ட அறியும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் தான். வெறும் சொல்லிலும், எழுத்திலும் மட்டுமில்லாது நவீன யுகத்தின் அறிவியலுக்கும் புதிராக இருக்கும் கட்டிடங்களையும் எழுப்பியிருக்கின்றனர் நம் மூதாதையர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலாகும். தமிழர் கட்டிடக்கலையின் மனிமகுடமான இக்கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்!! கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர்.  இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். 
தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.



பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சை நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.
எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.
முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி ராஜகோபுரமன்று. இந்த ஆலயத்தில் கருவறை விமானக்கோபுரமே விண்ணை முட்டுவது போன்று வளாகத்தின் மையப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு. ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.
ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று  கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஒருவகையில் இந்த அலங்கார நுட்பம் அந்நாளில் தென்னிந்தியாவில் இருந்திராத தன்மையை கொண்டதாய் காட்சியளிக்கிறது. கொஞ்சம் கிழக்குத்தேச கோயில்களின் சாயலும் இந்த கோபுர அலங்கார நுட்பங்களில் தென்படுகிறது.
மற்றொரு முக்கிய அம்சம் வட நாட்டுக்கோயில்களை போன்றே பீட அமைப்பையும் இந்த கோயில் பெற்றுள்ளது என்பதாகும். இதில் மற்ற தமிழ்நாட்டு கோயில்கள் போன்று நாற்றிசை வாசல்கள் மற்றும் தீர்த்தக்குளம் ஆகிய அம்சங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தை அடிப்படை அறமாக கொண்டு முழுக்க முழுக்க ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் நோக்குடன் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பதை இந்த பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மால் உணர முடிகிறது.
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த  முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு,  கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்’.
இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்’, நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் மேல் இருக்கும் விமான கோபுரமானது 216அடி உயரம் உடையதாகும். உலகிலிருக்கும் மிக உயரமான விமான கோபுரங்களில் ஒன்றான இதன் மேல் 80டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட கலச பீடம் இருக்கிறது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. 
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக  வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.  இதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 
தஞ்சை பெரிய கோயிலின் தலைமை கட்டுமான பொறியாளராக 'குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன்' என்பவர் இருந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.  தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் 2000 ஆண்டுகள் பழமையானதான சிந்து சமவெளி நாகரீகத்தில் நகரங்களை அமைக்க அவர்கள் பயன்படுத்திய கணித அளவீடுகளே இக்கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, சூரிய பகவான், சந்திர பகவான், வருண பகவான், குபேரர் ஆகியோரது சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லோரது சிலையும் ஒரு வளர்ந்த மனிதனின் சராசரி உயரமான 6 அடிக்கு இருக்கின்றன. இந்த உயரத்திற்கு கடவுளர்களின் சிலைகளை காண்பது அரிதானதாகும்.


தஞ்சை பெரிய கோயில்!! பெரிய கோயிலின் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.   குறிப்பிட்ட சில கோணங்களில் சூரியன் இருக்கும் போது இதன் நிழல் கீழே விழாதே தவிர மற்ற நேரங்களில் எல்லா கட்டிடங்களையும் போல இதன் நிழல் கீழே விழுவதை நாம் காண முடியும். 


 1010ஆம் ஆண்டு இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்ட போது இக்கோயிலில் மட்டும் அர்ச்சகர்கள், நடன மங்கைகள், இசை வாத்திய கலைஞர்கள், கணக்கர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புகள் இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காண முடியும்.  


தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் கற்சிற்பம். இக்கோயிலில் நாம் மிக மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட சிற்பங்களை காண முடியும். கையில் உள்ள நுண்ணிய நரம்புகள் கூட சிலைகளில் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும். 


பிரகதீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஆள் உயர கற் சிற்பங்கள். 


தஞ்சை பெரிய கோயில்!! சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனுள் ராஜ ராஜன் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பணிவாக நிற்பது போன்ற சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோழர்கள் சிற்பம் வடிப்பதில் மட்டுமில்லாமல் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 


தஞ்சை கோயிலில் காணப்படும் மட்டுமொரு ஓவியம்.  இவையெல்லாம் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டிருகின்றன. இதனாலேயே தான் இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருகின்றன.


தஞ்சை பெரிய கோயில்!! ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்றும், பௌர்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.  மஹா சிவராத்திரியும் இங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 


ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

“இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர் – எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை?” 
என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.


Tuesday, January 19, 2016

டைஃபாய்டு காய்ச்சல்

டைஃபாய்டு காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோமா?

1 டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?
சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக் காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. 

2 இந்நோய் வரக் காரணம்?
‘சல்மோனெல்லா டைபி’ எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன.

3 நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன?
அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த 
உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது.

4 ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா? 
கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி, 
அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும்.

5 அறிகுறிகள் என்ன?
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும், காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்கு சோர்வு அதிகரித்து மயக்கம் வரும்.

6 காய்ச்சலின் பாதிப்புகள்?
குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’ ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம்.

7 என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள், நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை அவசியம். குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை எடுக்க வேண்டும். ரத்தத்தை எடுத்து, ஒரு வளர் கருவியில் வைத்து, கிருமிகள் வளர்கின்றனவா என்று பார்க்கும் பரிசோதனை இது. 
இப்பரிசோதனை மூலம் தான், டைப்பாய்டு உள்ளதா என, உறுதியாக சொல்ல முடியும்.

8 ‘வைடால்’ டைபாய்டு ரத்தப் பரிசோதனை எடுக்கலாமா?
இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது. காய்ச்சல் கண்டு எட்டு நாட்களுக்கு பின், இப்பரிசோதனை செய்தால் மட்டுமே பயன் உண்டு.

9 டைபாய்டின் போது பசியின்மை இருக்குமா? உணவு என்ன எடுக்கலாம்?
கண்டிப்பாக. குடலில் புண் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளான கஞ்சி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமைக்காத உணவுகளான தயிர் பச்சடி, ‘சாண்ட்விச்’ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 

10 சிகிச்சைகள் என்னென்ன?
ஐந்து நாட்கள் கழித்து காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இதற்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
By vayal on 18/01/2016

டைஃபாய்டு காய்ச்சலுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் ஏற்படுகிற தொற்றுநோய்களில் மிக முக்கியமானது, டைபாய்டு காய்ச்சல். மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், குடிநீரும் தெருக் கழிவுகளும் கலந்து நோய்க் கிருமிகள் வாழ வசதியாகிறது. இதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம்வரை உள்ள காலத்தை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இது, சிறு குழந்தைகள் முதல் முதியோர்வரை யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. என்றாலும், எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ, கழிப்பறை வசதி இல்லையோ, அங்கு வாழ்கிற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

நோய் வரும் வழி
‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகின்றன. வீட்டில் முறையாகப் பாதுகாக்கப்படாத குடிநீரிலும் உணவிலும் இவை கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.

இந்த நோய் இன்னொரு முறையிலும் வருகிறது. ஏற்கெனவே, டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவருக்குத் தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய் கடத்துநர்கள்' (Carriers) என்கிறார்கள்.

அறிகுறிகள்
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்குச் சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.

சிக்கல்கள்
இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு' (Febrile Fits) வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’(Septicaemia) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேரலாம். இதற்கு சில பரிசோதனைகள் செய்து நிலைமையை அறியலாம். 

1. ரத்த அணுக்கள் பரிசோதனை

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

* டைபாய்டுக்கான ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டியது முக்கியம்.

* வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count Test) செய்யப்படும். இதன்மூலம் நோயாளியின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

* டைபாய்டு வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

* குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

2. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture)

* காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* ரத்தத்தை எடுத்து ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதி செய்ய மிகச் சிறந்த பரிசோதனை இதுதான்.

3. வைடால் ரத்தப் பரிசோதனை (Widal Test).

* இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

* இதில் ‘டியூப்’ பரிசோதனை, ‘சிலைட்’ பரிசோதனை என்று இரண்டு வகைகள் உண்டு.

* இவற்றில் ஒன்றை, நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் செய்துகொள்ள வேண்டும்.

* டைபாய்டு ஆன்டிஜெனை நோயாளியின் ரத்தத்தில் கலக்கும்போது அதில் எதிர் அணுக்கள் இருந்தால், அவற்றுடன் ஆன்டிஜென்கள் இணைந்து இணையணுக்களை (Agglutinin) உருவாக்கும்.

* இப்பரிசோதனையில் ஓ, ஹெச் என்று இரண்டு வகை இணையணுக்கள் அளக்கப்படுகின்றன.

* இவற்றில் ‘ஓ' இணையணு டைபாய்டு கிருமி வகையைச் சார்ந்ததால், இதன் அளவு முக்கியம்.

* டியூப் பரிசோதனையில் ‘ஓ’ இணையணு 1 : 180 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், சிலைட் பரிசோதனையில் 1 : 80 எனும் அளவுக்கு அதிகமாக இருந்தால் டைபாய்டு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

* நோய் ஆரம்பித்த நான்கு மாதங்கள்வரை இந்த அளவுகள் குறையாமல் இருக்கும். எனவே, இதற்கிடையில் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்துகொண்டு, இன்னமும் நோய் குணமாகவில்லை என்று தவறாக எண்ணுபவர்கள் உண்டு.

* சமீபத்தில் டைபாய்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தப் பரிசோதனையைச் செய்ய நேரிட்டால், அவர்களுக்கு நோய் இல்லாவிட்டாலும், இந்த அளவுகள் அதிகமாக இருப்பதாகக் காண்பிக்கும்; பயப்படத் தேவையில்லை.

4. அட்டைப் பரிசோதனை (CARD Test)

* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு கிருமிகளுக்கான ஐஜி.எம். (IgM), ஐஜி.ஜி. (IgG) எதிர் அணுக்களை மிக விரைவாகக் கண்டறியும் பரிசோதனை இது.

* இந்த அணுக்கள் ரத்தத்தில் இருந்தால் 60 சதவீதம் நோய் உறுதி.

* பரிசோதனையின் முடிவு உடனே தெரிந்துவிடும்.

* நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

5. மலம் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Feces Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதென்றால் மூன்றாம் வாரத் தொடக்கத்தில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* மலத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதிசெய்ய இதுவும் உதவும்.

6. சிறுநீர் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Urine Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதென்றால், நான்காவது வாரத் தொடக்கத்தில் இதைச் செய்துகொள்ளலாம்.

* சிறுநீரை ஒரு வளர் ஊடகத்தில் ஊற்றி, கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை இதன்மூலமும் உறுதி செய்யலாம்.

7. பி.சி.ஆர். பரிசோதனை (PCR Polymerase Chain Reaction Test)
* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு பாக்டீரியாவின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

* 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

* மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

* இப்போது இந்தப் பரிசோதனை பிரபலமாகிவருகிறது.

* செலவு கொஞ்சம் அதிகம்.

நன்றி : டாக்டர் கு.கணேசன், தி இந்து நாளிதழ் - 28.11.2015

கிரடிட் கார்டு - விதிமுறைகள்


கிரடிட் கார்டு - விதிமுறைகள் & புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?

கிரடிட் கார்டு", 
இந்த வார்த்தையைக் கேட்டாலே சிலருக்குப் புன்னகையும், சிலருக்கு எரிச்சலும் வரும். 

உண்மைதான் எரிச்சல் படும் பெரும்பாலானோர் கிரேடிட் கார்டின் முழுமையான நன்மைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தவர்கள். நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கியக் காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதாலே கிரெடிட் கார்டுகளை வரும்பி வாங்குகிறோம்.

இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூடக் கட்டத் தேவையில்லை. ஒருவேளை நிலுவையைக் கட்டத் தவறினால், நீங்கள் அதற்குண்டான வட்டியையும் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். 

இதை உபயோகிக்கும்போது நீங்கள் அறிந்திராத பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள அவற்றைச் சுருக்கமாகத் தருகிறோம்.

வருடாந்திரக் கட்டணம் 
பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்தக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தது.

வருடாந்திர வட்டி விகிதம் 
இது கட்டணங்கள், நிலுவைத் தொகை மீது ஏற்படும் செலவுகளை உள்ளடக்கிய வருடாந்திர வட்டி விகிதத்தைக் குறிக்கும். ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது என்பதோடு எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.

கட்டணச் சுழற்சி (Billing cycle)
பில்லிங் சைக்கிள் என அழைக்கப்படும் இது, உங்கள் கார்டுக்கான மாதாந்திர கட்டண விவரப்பட்டியல் தரப்படும் தேதியைக் குறிக்கும். டியு-டேட் எனப்படும் இது நீங்கள் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதியாகும். இந்த இரண்டு தேதி குறித்த விவரங்களும் உங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கப்படும்போது தெரிவிக்கப்படும்.

நிலுவை மாற்றம்
ஒருவர் தன்னுடைய ஒரு கிரெடிட் கார்டிலுள்ள நிலுவைத் தொகையை மற்றொன்றிற்கு மாற்றிக் கொண்டால் அதற்குப் பாலண்ஸ் டிரான்ஸ்ஃபர் என்று பெயர். இது பொதுவாக நிலுவைத் தொகை மீதான வருடாந்திரக் கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளச் செய்யப்படுவதுடன் முதல் கார்டிலுள்ள வட்டிவிகிதம் இரண்டாவது கார்டிலுள்ள வட்டிவிகிதத்தை விடக் குறைவானதாக இருந்தால் மட்டுமே பயன் தரும். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கும் கட்டணமுண்டு.

கடன் வரம்பு 
இது உங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பெறக்கூடிய கடனின் உச்ச வரம்பைக் குறிக்கும். நீங்கள் இந்த அளவைப் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து உங்கள் கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறும் திறன் மதிப்பீடும் மாறும். கடன் வரம்பு உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனையும் பொருத்து அமையும். எனவே வரம்பு மீறிய செலவுகளைச் செய்து உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க முயலாதீர்கள்.

பண வரம்பு
கடன் வரம்பு மற்றும் பணவரம்பு ஆகியவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. பணவரம்பு என்பது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எந்த அளவு பணத்தை எடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டிற்கும் வரம்பு வேறுபடுவதுடன் பண வரம்பிற்கான வட்டி விகிதம் எடுத்த நாளிலிருந்தே தொடங்கிவிடும். பணவரம்பிற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதால் அதை அவசரக் காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

கார்டு சரிபார்ப்பு மதிப்பு (சிவிவி) 
உங்கள் கார்டின் பின் பகுதியில் இந்த மூன்று இலக்க எண் குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது இணைய அல்லது மின்னணு பரிமாற்றங்களில் செய்யப்படும் செலவுகளுக்குத் தேவைப்படும் ஒரு குறியீடு. இதன் மூலம் உங்கள் கார்டின் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படும்.

தாமதக் கட்டணம்
உங்கள் நிலுவைத் தொகையில் செலுத்தவேண்டிய குறைந்த அளவையும் நிலுவைத் தேதிக்குள் கட்டத் தவறும்போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

கேஷ்பேக் 
இது சில சிறப்பான காலக் கட்டங்களுக்காகத் தரப்படும் சலுகை. நீங்கள் கார்டின் மூலம் செய்யும் செலவுகளைப் பொருத்துச் சலுகை புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கிற்குப் பணமாகக் கிடைக்கும். ஆனால் நீங்கள் நிலுவைகளைச் சரியாகச் செலுத்தினால் மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைக்கும்.

சிபில் ஸ்கோர் 
உங்களுடைய கடன்பெறும் நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்தச் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் நம்பகத்தன்மை மதிப்பீட்டுப் புள்ளிகள் அவசியம். ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருந்து அவற்றில் சிலவற்றை ரத்துச் செய்ய விரும்பினால் (அவற்றின் மொத்த கடன் வரம்பு 2 லட்சம் என வைத்துக்கொண்டால்), உங்கள் கடன்வரம்பு குறைக்கப் படுவதுடன் உங்கள் சிபில் ஸ்கோரும் குறையும்.

சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி?
நீங்க ஏதாவது தேவைக்காக லோன் வேண்டி விண்ணப்பிக்கும்போது ஏறத்தாழ எல்லா வங்கிகளுமே உங்களுடைய சிபில் ஸ்கோர் அதாவது கடன் பெறும் திறனைப் பற்றி உங்களுக்குக் கடனைத் தருவதற்கு முன் விசாரிக்கும். 

உங்களுடைய ஸ்கோர் அல்லது புள்ளிகள் இதில் குறைவாக இருந்தால் நீங்க இதுக்கு முன்னாடி வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்துள்ளதை என்பதைக் காட்டும். அதனால் உங்களுக்கு லோன் கிடைக்கிறது சிரமம் தான் அல்லது கிடைக்காமல் கூடப் போகலாம். 

கடனை திருப்பிச் செலுத்தாததைத் தவிரச் செலுத்துவதில் தாமதம் கடனை முன்கூடியே அடைத்துவிடுதல் போன்ற பல காரணங்கள் உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். 

உண்மையில், 750-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் உங்களுக்கு லோன் கிடைக்க 79 சதவிகித வாய்ப்புகள் உண்டு. எனவே ஒரு கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறை உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

எப்படித் தெரிந்துகொள்வது? 
அண்மையில், ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடனைப் பெற முயற்சித்த போது வங்கிப் பிரதிநிதி அந்த வாடிக்கையாளரின் சிபில் புள்ளிகளை ஆன்லைன் மூலமாக அறிந்து அவருக்குத் தெரிவிக்கவும் அவருடைய கடன் விண்ணப்பத்தை அனுமதியை அளிக்கவும் முடிந்தது.

ஆனால் இது எப்போதுமே சாத்தியமாகாது. ஏனென்றால் இது சரியான நடைமுறை அல்ல. நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இது இலவச சேவை இல்லை - நீங்கள் 500 ரூபாயை இதற்காகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளலாம்
https://www.cibil.com/online/credit-score-check.do 

இந்த இணையதளம் உங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைபெசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்கும்.. அவற்றைக் கொடுத்துப் பின்னர்க் கட்டணத்தைச் செலுத்தலாம். 

அதன் பிறகு உங்கள் சிபில் தொடர்பான விவரங்கள் உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இது பொதுவாக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி விரைவாகக் கிடைத்துவிடும் 

நீங்கள் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கான ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து அதற்குண்டான விதிமுறைகளுக்கு உங்களைத் தயார் செய்வது வரை நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். 

ஒருவேளை நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முயலவில்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகலாம். 

எனவே உங்கள் சிபில் ஸ்கோரை முதலில் தெரிந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஸ்கோர் குறைவாக இருக்குமானால் உங்களுக்கு லோன் கிடைக்காது என்பதை இன்னொரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 

இல்லையென்றால், நீங்கள் ஒரு அதிகம் வட்டி விதிக்கும் ஒரு கடனையோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடனையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நிறுவனங்களும் நபர்களும் கடன் தொகை பெரியதாக இருந்தால் பயந்து ஒதுங்கிவிடக்கூடும். 

முடிவாக... ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உங்கள் சிபில் ஸ்கோரை கடன் வாங்குவதற்கு முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமல்ல. சில நிமிடங்களைச் செலவழித்தால் போதுமானது. பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் » தமிழ் -11.01.2016


கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்

சென்னை: மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை அதனை பயன்படுத்தியவர் ஒருவர் கவனித்தார். அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்து 'ஸ்கிம்மர்' என்ற அம்சம் தான் அது. 


ஸ்கிம்மர் என்றால் என்ன?

ஸ்கிம்மர் என்பது நீங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்கிம்மர் உங்களுடைய அட்டை பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். இந்த தகவல்கள் வேறொரு வடிவத்தில் உங்களுடைய பணத்தை திருட பயன்படுத்தப்படும். 

மேலே படித்த விஷயத்தில், அந்த இயந்திரத்தை பயன்படுத்தியவர் உடனடியாக சம்மந்தப்பட்ட (Market Security) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அந்த ஸ்கிம்மர் எவ்வளவு நாட்களாக தொடர்புடைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றோ அல்லது எத்தனை கிரெடிட் கார்டுகளை பிரதி எடுத்திருந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை!! மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் வாடிக்கையாளர்களையும் கூட இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் பயப்படுத்துகின்றன. 

நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டின் எண் வேறொருவரிடம் இருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கார்டு வழங்கியவர்களுக்கு போன் செய்யவும், போலீஸாரிடம் தகவல்களை கொடுக்கவும் வேண்டும். ஆனால் இதற்குள்ளாக உங்கள் கார்டை வைத்திருப்பவர் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இங்கே தரப்பட்டுள்ள சில தவறான பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

ஸ்கிம்மர்கள் இருப்பதை கண்டறியாமல் இருத்தல் 

உங்களுக்கான தனிநபர் அடையாள எண்ணை (PIN) கேட்கும் ஏடிஎம் அல்லது விற்பனை புள்ளிகளில் ஸ்கிம்மிங் கருவிகள் பொருத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் கார்டை தேய்க்கும் முன்னர் சற்றே கவனிப்பது நல்லது. 'ஏதாவது வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகிறதா என்று எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது நல்லது. அதாவது பசை அல்லது உராய்வு ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளனவா என்றும் அல்லது தனிநபர் அடையாள எண்ணை அடிக்கும் இடத்தில் ஏதாவது அடையாளங்கள் உள்ளனவா என்றும் அல்லது நீங்கள் கார்டை சொருகும் இடத்தில் ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்' என்கிறார் மனீஷா தாகோர். 



நீங்கள் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களுக்குள் செல்லும் போது இந்த கவனத்தை சற்றே அதிகமாக காட்ட வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் உள்ள இயந்திரங்களில் எளிதில் ஏதாவது ஒரு ஸ்கிம்மரை இணைத்து விட முடியும். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வேறு ஒரு ATM-ஐ பயன்படுத்துங்கள்.

இண்டர்நெட் மையங்களில் வங்கி பரிமாற்றம் செய்தல்

 நீங்கள் ஃபேவரிட்டாக சென்று வரும் இணையதள மையங்களில் வை-ஃபை வசதிகள் இருந்தாலும் கூட, அந்த இடங்களில் உங்களுடைய வங்கி பரிமாற்றங்களை செய்ய வேண்டாம். நீங்கள் ஓபன் வயர்லஸ் நெட்வொர்க்கை பயன்படுத்தினால், ஹாக்கர்ஸ் உங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களையும், கடவுச்சொற்களையும் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களையும் எளிதில் சேகரித்து விடுவார்கள். எனவே, 'உங்களுடைய வங்கி பரிமாற்றங்கள் அல்லது ஷாப்பிங் செய்ய இணையதள மையங்கள் சரியான இடம் இல்லை என்பதை புர்pந்து கொள்ளுங்கள்' என்று பிரபலமான பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிமான்டெக் (Symantec)-ஐ சேர்ந்த மரியான் மெர்ரிட் என்ற இணைய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிடுகிறார். 



நீங்கள் பயன்படுத்துவது HTTP மற்றும் HTTPS என எந்த வகை இணைய தளமாக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் காஃபி ஷாப் அல்லது இணைய தள மையங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பது உங்கள் கையில் இல்லை. 'மேன் இன் தி மிடில்' என்ற வகை தாக்குதல்களின் மூலம் ஹாக்கர்கள் உங்களுடைய கடவுச் சொல், அட்டை எண் மற்றும் பிற தகவல்களை பொது நெட்வொர்க்கில் இருந்து எளிதில் எடுத்து விடுவார்கள். எனவே, காஃபி ஷாப் போனால் காஃபி மட்டும் குடியுங்கள், வங்கி கணக்கை பாதூகப்பாக வீட்டில் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிஷ்ஸிங் (Phishing) செய்திகளுக்கு பதில் அனுப்புதல் 

உங்களுடைய மொபைலுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியில், நீங்கள் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கிற்கு சென்று பார்க்குமாறும், இடையில் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தால், அங்கே உங்களுடைய பகுத்தறிவை சற்றே பயன்படுத்துங்கள். இதே போன்ற செய்திகள், முகநூல், டுவிட்டர் அல்லது பிற வகை தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியாகவும் வரலாம். 'அடையாளம் தெரியாத வகையில் எந்த ஒரு தொலைபேசி அழைப்போ, மின்னஞ்சலோ அல்லது சமூக வலைத்தள செய்தியோ வந்தால் அதை பிஷ்ஸிங் தாக்குதல்' என்று சொல்லலாம் என்று மாஸ்டர் கார்டு வேர்ல்டுவைடு அமைப்பின் பேமண்ட் சிஸ்டம் இன்டிகிரிட்டி பிரிவின் துணைத்தலைவர் எரிக் முய்லர் சொல்லுகிறார்.



 'இந்த செய்திகளை சந்தேகக் கண்ணுடனேயே அணுகுங்கள், குறிப்பாக அவை உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஏதாவதொரு இணைய தளத்திற்கு தொடர்பு கொள்ளச் சொல்லியோ வரும் போது' என்கிறார் அவர். ஏனெனில், இந்த பிஷ்ஸிங் தகவல்களுக்கு பதிலாக நாம் சரியான தகவல்களை அனுப்பினால், எந்த ஒரு பிஷ்ஸிங் அனுப்பிய நபரும் எளிதில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தகிடுதத்தங்கள் செய்து விடுவார். உங்களுக்கு வந்த செய்தி சரியானது என்றோ அல்லது சந்தேத்தை தூண்டுவதாகவோ, இருந்தால் உங்களுக்கு கார்டு வழங்கிய நிறுவனத்தினருடைய வாடிக்கையாளர் மைய எண்ணுக்கு (அட்டையின் பின்பகுதியில் இருக்கும் தொடர்பு எண்) உடனடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.

உரிமைகள் மற்றும் கடமைகளை மறுத்தல்

 நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை தொலைத்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டதாக சந்தேகப்பட்டாலோ அல்லது உங்களுடைய அட்டை எண்ணை யாரோ ஒருவர் இணையத்திலிருந்து எடுத்து விட்டதாகவோ நீங்கள் நினைத்தால், உடனடியாக கார்டை வழங்கியவருக்கு தகவல் கொடுங்கள். 



இந்த வகை ஏமாற்று வேலைகளிலிருந்து விடுபட கிரெடிட் கார்டுகள் மிகவும் அதிகமான பாதுகாப்பை கொடுக்கின்றன. பெரும்பாலான கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராட் பாதுகாப்புகளை (Zero-Liability Fraud Protection) வழங்குகின்றன. மேலும், உங்களுயை அட்டை தொலைந்து விட்டது அல்லது திருடப்படடு விட்டது என்று நீங்கள் ஒருமுறை தகவல் தெரிவித்து விட்டால் போதும், 

அதன் பின் அந்த கார்டு மூலம் நடக்கும் எந்தவிதமான பரிமாற்றங்களுக்கும் சட்டப்படியாகவே நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இந்த வகையான பரிமாற்றங்களுக்கு அதிகபட்ச வரம்புகளும் சட்டப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையிலும் உங்களுடைய உரிமைகளும், கடமைகளும் மாறுபட்டிருக்கின்றன. உங்களுடைய டெபிட் கார்டுகளுக்கு ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராடு பாதுகாப்பு இருந்தாலும், தனிநபர் அடையாள எண் அல்லது ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்காகவே சில பிரத்யோகமான சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன. 

யாராவது ஒருவர் உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு பொருட்களை வாங்கும் போது, நீங்கள் அது தொலைந்து போன தகவலை தெரிவிக்காமல் இருந்தால் முழுப்பொறுப்பும் உங்களையே சேரும். மேலும், 60 நாட்களுக்குள்ளாக நீங்கள் தகவல் அளிக்காவிட்டால் உங்கள் கதி அதோகதி தான். இது மட்டுமல்லாமல், உங்களுடைய அட்டையத் திருடியவர், உங்கள் கணக்கை முழுமையாக சுரண்டி விட்டால், உங்கள் வங்கி விதிக்கும் அபராதத்தைக் கூட உங்களால் கட்ட முடியாது.

இலவசமான ஃப்ராடு பாதுகாப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

 எண்ணற்ற கார்டு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலவசமாகவே ஃப்ராடு பாதுகாப்புகளை வழங்கி வருகின்றன. இதற்கு சிறிதளவு விசாரணையோ அல்லது பதிவு செய்து கொள்ளவோ வேண்டும். 

உதாரணமாக, விஸா அட்டை வைத்திருப்பவர்கள் இணைய வழியாக வர்த்தக பரிமாற்றங்கள் செய்யும் போது, வெரிஃபைடு பை விஸா (Verified-by-Visa) என்ற திட்டத்தின் படி அவர்கள் மற்றொரு இரகசிய கடவுச் சொல்லை டைப் செய்ய வேண்டியிருக்கும். 

அதே போல தான் மாஸ்டர் கார்டு செக்யூர் கோடு (MasterCard SecureCode) என்ற கடவுச் சொல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்காக செயல்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்துபவர், 



இணைய வழியில் வர்த்தகத்தை முடிக்கும் போதும் சரியான தனிநபர் அடையாள எண்ணை டைப் செய்ய வேண்டும் என்று கேட்கும். மற்றுமொரு வழிமுறை : சிட்டிப பேங்க் அல்லது பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்றவை இவ்வகையான இணைய வழி பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவோ 'விர்ச்சுவல்' கிரெடிட் கார்டுகள் அல்லது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. 

இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டால், மறுமுறை பயன்படுத்த முடியாது. எனவே, இந்த கார்டுகளை எங்கே தேய்த்தோம் அல்லது யார் எனது பணத்தை திருடுவது என்று பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இலவசமான கணக்கு எச்சரிக்கை தகவல்கள் கொடுக்கும் வசதிகளில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிக்க முடியும். இந்த வசதிகளில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக எந்தவிதமான பரிமாற்றங்கள் அல்லது மாற்றங்கள் உங்களுடைய அட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், அல்லது ஒரு டாருக்கும் அதிகமாகவோ அல்லது வெளிநாடுகளில் பொருட்களை வாங்கினாலோ அந்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாக வந்து விடும். 

உங்களுக்கு கார்டு வழங்கும் நிறுவனத்தினர் இது போன்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்களா அல்லது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அவர்களுடைய இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கெட்டில் நடமாடும் ஸ்கிம்மர்கள்

 வாசகரின் வேண்டுகோள் ஏற்று, சில ஸ்கிம்மர்களை நாங்கள் கண்டறிந்தோம். .



உங்கள் பார்வைக்காக படத்தில் காண்பித்துள்ளோம். இனி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது இனி உஷாராக இருக்கவும்

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 17.01.2014

மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால்


மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் மாத சம்பளம் பெறுபவரா? உங்களுடைய வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள CTC என்ற மாத சம்பளத்திற்கும், உங்கள் கையில் கிடைக்கும் உண்மையான தொகையை பார்க்கும் போது, சற்று வருத்தப்பட்டதுண்டா?? 

உங்களின் வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

நிறுவனம்
இந்த ஏமாற்றத்திற்காக உங்களுடைய கம்பெனியை குறை சொல்லி எந்த பலனும் இல்லை. 
ஆனால், CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் போனது நம்முடைய தவறுதான்.

CTC (cost to company) என்றால் என்ன? 
CTC என்பது அதன் பெயரைப் பொறுத்தே விளங்கும். அதாவது உங்களை பணிக்கு அமர்த்துவதால் அந்நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் இதன் விளக்கம். இவை மட்டுமல்லாமல், சில நேரங்களில் போனஸ் போன்றவைகளும் நன்மதிப்பிற்காக சேர்க்கப்படலாம். உங்களுடைய சேமநல நிதி (PF) உட்பட எல்லா வகையான கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது தான் CTC ஆகும்.

20 சதவீத சம்பளம் 
நீங்கள் புதிய நிறுவனத்தில் அல்லது முதல் முறையாக நிறுவனத்தில் மாத வருமானம் பற்றி விவாதிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி, சேமநல நிதி போன்றவைகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படி குறைகிறது? 
ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதைக் கணக்கிடுவோம். 
இப்போது அஜய் என்பவரின் ஊதியத்தைக் கணக்கிடுவோம். 
அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000 
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000 
மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000 போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000 
ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000 
(மாத சம்பளம் ரூ.31,917)

பிடித்தங்கள்
அடிப்படை ஊதியம் மற்றும் 
வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000 
தொழிலாளர் சேமநல நிதி 
(அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000 
மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000
தொழில் வரி (Professional Tax)- ரூ.3600 
நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 (நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283) இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary.

வித்தியாசம் 
மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

வருமான வரிச் சலுகை 
எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு சேமநல நிதி வேண்டாம் என்று சொல்ல முடியும். அந்த வகையில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் பெறும் வரி சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.

வரி மற்றும் மருத்துவ காப்பீடு 
வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

கூப்பன்கள் 
சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது. 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 13.10.2015

கோவிலுக்குச் செல்வது எதற்காக


கோவிலுக்குச் செல்வது எதற்காக என்று தெரியுமா?

கோவிலுக்கு செல்வது பற்றிய விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள்! 

வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற இந்து கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். 

இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர். இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்! கோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, 

இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும். அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!! இந்த ஐம்புலன்கள் கோவிலுக்குள் உள்ள எண்ணிலடங்கா செயல்கள் மூலம் தூண்டப்படலாம். 

அதனால் இந்து சமயத்திரு நூல்களின் படி, கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பற்றி பார்க்க போகிறோம்.

கோவிலின் கட்டமைப்பு & இருப்பிடம் - பின்னணியில் உள்ள காரணம்

எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.

கடவுளின் சிலை 

கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிரகத்தில் தான் கடவுளின் சிலை வைக்கப்படும். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிலையை வைத்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.
வெறும் காலுடன் கோவிலுக்குள் நுழைவதற்கு  காரணம் 

பழங்காலத்தில், நேர்மறை ஆற்றல்களின் சிறந்த கடத்தியாக இருக்கும் விதத்திலான தொழில்நுட்பத்தில் கோவில்களின் தரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் திறன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் வழியாக அவர்களுக்குள் ஊடுருவும். அதனால் தான் கோவிலுக்குள் வெறும் காலுடன் செல்ல சொல்கிறார்கள். 

கோவில் மணியை அடிப்பதற்கான காரணம் 

கோவிலுக்குள் நுழையும் போதெல்லாம், மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கோவில் மணியை அடிக்க சொல்வார்கள். இந்த மணி எழுப்பும் ஒலி உங்கள் கேட்கும் திறனை முனைப்பாக்கும். கோவில் மணியை அடிக்கும் போது, அது கூர்மையான ஒலியை எழுப்பும். அது ஏழு வினாடிகளுக்கு எதிரொலிக்கும். உங்கள் உடலில் உள்ள ஏழு ஹீலிங் மையங்களை முனைப்பாக்க இந்த 7 வினாடி காலம் போதுமானது.

சாமி சிலை முன் கற்பூரம் காட்டுவதற்கான காரணம் 

கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பார்க்கும் போது, கடவுள் சிலைக்கு முன் கற்பூரம் ஏற்றும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இருட்டான கோவிலுக்குள் சாமி சிலை முன்பு கற்பூரம் ஏற்றுவதனால், உங்களது பார்வை உணர்வு முனைப்பாகும். மேலும் அதுவே அதற்கான காரணமாகும்.

தீபாராதனை தட்டில் உங்கள் கைகளை ஒத்தி எடுப்பது எதற்காக? 

தீபாராதனை காட்டும் போது, கற்பூரம் ஏற்றப்பட்டுள்ள தட்டில், கைகளால் ஒத்த எடுப்போம். பின் கைகளால் கண்களை ஒத்திக் கொள்வோம். இதனால் வெதுவெதுப்பான உங்கள் கைகள் கண்களின் பார்க்கும் உணர்வை முனைப்பாக்கும்.

கடவுள் சிலைக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம்

பூக்கள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்க கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்கு படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தை கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்பணிக்க முடியும். உதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவைகள். பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாக சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.

தீர்த்தம் குடிப்பதற்கு பின்னணியில் உள்ள காரணம் 

கடவுளுக்கு பூஜைகள் செய்து முடித்த பிறகு, பக்தர்களுக்கு நீர் வடிவிலான தீர்த்தம் பிரசாதமாக அளிக்கப்படும். நெய், பால் மற்றும் தயிரை கொண்டு இது செய்யப்படும். தீர்த்தத்தை செப்பு அல்லது வெள்ளி பாத்திரத்தில் தான் பொதுவாக வைத்திருப்பார்கள். நம் உடலில் உள்ள 3 வகையான தோஷங்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ளவே தீர்த்தத்தை செப்பு பாத்திரத்தில் வைக்கிறார்கள். இது உங்கள் சுவை உணர்வை முனைப்பாக்கும்.

மூலஸ்தானத்தைச் சுற்றி வருவதற்கான காரணம் 
பிரார்த்தனை முடிந்த பிறகு, மூலஸ்தானத்தை சுற்றி 8-9 முறை கடிகார திசையில் சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வருவதால், உங்கள் உடல் கோவிலுக்குள் இயங்கி கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நேர்மறையான ஆற்றல் திறன்களையும் உறிஞ்சிவிடும். இதனால் உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்.

போல்ட் ஸ்கை » தமிழ் » 12.01.201
6

கைக்குழந்தைகளின் திடீர் அழுகை


கைக்குழந்தைகளின் திடீர் அழுகைக்கு காரணம் என்ன?

பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. 

பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் செய்வர்.

இதில், பலனில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே, மருந்து, மாத்திரைகள் கொடுப்பர். ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான, பாட்டி மருத்துவ குறிப்புகள் இதோ: பிறந்த குழந்தைகளின் தலையில், நல்லெண்ணெய் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் காய்ச்சி, அதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் பால் விட்டால், படபடவென்று கொதிக்கும் சத்தம் வரும்.

இதோடு, கஸ்தூரி பொடியை சேர்த்து இறக்கிய பின், தேய்த்து குளிப்பாட்டலாம். எண்ணெய் பிசுக்கு போக, பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இப்படி செய்வதால், சொறி, சிரங்கு உள்ளிட்ட, தோல் வியாதிகள் வராது.

.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் மிளகு மற்றும் பூண்டை இடித்து போட்டால், நல்ல வாசனை வரும். இந்த எண்ணெயை தேய்த்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது.

ஐந்து மாதத்திற்குட்பட்ட குழந்தை அழுதால், வயிறு வலியாக கூட இருக்கலாம். இதற்கு, கடுக்காயை நன்கு அரைத்து, வயிறு பகுதியில் பூச வேண்டும். பின், ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி, இளம் சூடு பதத்தில், தொப்புளில் போடலாம். இரு நிமிடத்தில், வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.


ஆறு மாதக்குழந்தைக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் என, அனைத்தையும் அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு கொடுத்தால், வாயுத்தொல்லை இருக்காது.

குழந்தைகளுக்கு வாயில், வெள்ளை நிறத்தில் மாவு போல் படிந்தால், சரிவர பால் குடிக்க மாட்டார்கள். அதற்கு, மாசிக்காயை உரசி நாக்கில் தடவ வேண்டும்.

அடிக்கடி வாந்தியெடுக்கும் குழந்தைகளுக்கு, வசம்பை சுட்டு பொடி செய்து, ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவ வேண்டும். இதனால்தான், வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு.

இப்படி, சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



ஆங்கில மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கொடுத்தால், விஷமாகிவிடும். சாதாரண சளிக்கே, அடிக்கடி மருந்துகளை மாற்றி மாற்றி கொடுப்பது, பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.

By vayal on