disalbe Right click

Thursday, May 12, 2016

வங்கிக் கணக்கு தொடங்க

வங்கிக் கணக்கு தொடங்க என்ன செய்ய வேண்டும்?
வருமானத்தை சேமித்து வைத்து தேவையான போது எடுத்துக் கொள்ளலாம், சேமிப்புத் தொகைக்கு வட்டியைப் பெறலாம், தனது உறவுகளிடமிருந்தோ, மூன்றாம் நபர்களிடமிருந்தோ தனது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் பெறலாம், எல்.ஐ.சி பிரீமியம் போன்றவற்றை செலுத்தலாம், வாகனக் கடன் பெறலாம். அதுமட்டுமின்றி வங்கிக் கணக்குப் புத்தகம் முகவரி சான்றாகவும் பயன்படுகிறது.

Image result for Bank pass book

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வங்கிக் கணக்கைத் துவங்குவது எப்படி? ஆன்லைன் வசதிகளை எப்படிப் பெறுவது? ஆகியவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்குத் துவங்க தேவையான தகுதிகள்
பொதுவாக வங்கிக் கணக்குத் துவங்க 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் வங்கிக் கணக்கு துவங்க முடியும். ஆனால் சேமிப்புக் கணக்கில் வருடத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் வரை மட்டுமே வைத்திருக்க இயலும்.


எந்த வங்கியில் கணக்கு துவங்க விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்கவும். அதிலேயே ஏடிஎம் கார்டு, செக் புக், ஆன்லைன் வசதி போன்றவற்றை டிக் செய்து கொடுக்கலாம். சில வங்கிகளில் மேற்கூறிய கூடுதல் வசதிகளைப் பெற தனியாக ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.
கட்டணம் எவ்வளவு
அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குத் துவங்க 500ரூ கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 500ரூ குறைந்த பட்ச இருப்புத் தொகையாக சேமிப்புக் கணக்கில் இருக்கும். 




செக் புத்தகம் வேண்டுவோர் கூடுதலாக 500ரூ இருப்புத் தொகை செலுத்த வேண்டும். தனியார் வங்கிகளில் வங்கிகளைப் பொறுத்து குறைந்த பட்ச இருப்புத் தொகை மாறுபடும்.

Image result for 500 rupees note

வங்கிக் கணக்குத் துவங்க தேவையான ஆவணங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்க வேண்டும்.
அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான நகல் இணைக்க வேண்டும். இரண்டுக்கும் தனித் தனி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.ஆதார் அட்டை இருந்தால் அந்த ஒன்றே போதுமானது.
பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை அடையாளச் சான்றாகவும், குடும்ப அட்டை, கேஸ் பில், மின் இரசீது, தொலைபேசி இரசீது இவற்றில் ஒன்றை இருப்பிடச் சான்றாகவும் கொடுக்கலாம்.
அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்திக் கையெழுத்திட வேண்டும். அறிமுகக் கையெழுத்திடும் நபர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், வங்கிக் கணக்குத் துவங்கி குறைந்த பட்சம் ஆறு மாதமாகியும் இருக்கவேண்டும். மேலும் தொடந்து வரவு செலவு வைத்திருப்பவராக இருப்பது அவசியம்.
வங்கிக் கணக்கு துவக்கியதும் கிடைக்கும் ஆவணங்கள்
அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குப் புத்தகம் தருவார்கள். 


Image result for Bank pass book

சில தனியார் வங்கிகளில் கணக்குப் புத்தகம் தருவதில்லை. மாதம் ஒருமுறை வரவு செலவுகளைப் பட்டியலிட்டு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள்.
காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு.
 (இவை இரண்டும் கணக்கு ஆரம்பித்து இரண்டு வாரங்களில் கிடைக்கும்). ஏடிஎம் கார்டும், அதற்கான பாஸ்வேர்டும் உங்கள் கைக்குக் கிடைத்து ஒருவாரத்திற்குள் குறைந்த பட்சம் நூறு ரூபாயாவது எடுத்து கார்டை ஆக்டிவேட் செய்துவிட வேண்டும். 



இல்லையெனில் 15 நாட்களில் உங்களுக்குக் கொடுக்கப்படும் பாஸ்வேர்டு செயலிழந்துவிடக் கூடும்.
கூடுதலான வசதிகள்
ஆன்லைன் வசதி தேவையெனில் அதற்கும் விண்ணப்பித்து பெறலாம். இதற்கு இரண்டு பாஸ்வேர்டுகள் உங்கள் வீட்டிற்கு பதிவுத் தபாலிலோ, கொரியரிலோ வரும். அதில் ஒன்று ஆன்லைன் அக்கவுண்டிற்கும், மற்றொன்று பரிவர்த்தனைக்கும் (Transaction) பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
வங்கிக் கிளை மாற என்ன செய்ய வேண்டும்?
ஒரு வங்கிக் கிளையிலிருந்து வேறொரு வங்கிக் கிளைக்கு மாற விரும்பினால் (ஒரே ஊரிலோ அல்லது வேறு ஊரிலோ) எந்த வங்கியில் தற்போது கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியில் சென்று மாறவிரும்பும் கிளையினைக் கூறினால் அவர்கள் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் அதனைக் குறிப்பிட்டு தேதியிட்டுக் கொடுப்பார்கள்.
பின்னர் குறிப்பிட்ட கிளையில் தற்போதைய முகவரி மாறியதற்கான சான்றினை சமர்ப்பித்து புதிய கணக்குப் புத்தகத்தினைப் பெறலாம்.
வேறு வங்கிக் கிளையை மாற்றிக் கொள்ளலாம்
செல்போன் நம்பரை மாற்றாமல் வேறு நிறுவனத்தை தேர்வு செய்யும் (எம்.என்.பி.) வசதியை தொலைத் தொடர்பு துறை கொண்டு வந்தது போல் கணக்கு எண் மாறாமல் வங்கிக் கிளையை மாற்றிக் கொள்ளும் வசதியை ரிசர்வ் வங்கிக் கொண்டுவந்துள்ளது.
குறிப்பு

மேற்சொன்ன நடைமுறைகள் அனைத்தும் வங்கிக்கு வங்கி மாறலாம். எனவே உங்கள் பகுதிக்குட்பட்ட வங்கியில் நேரடியாக சென்று மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு துவங்கும் வெளிநாட்டு பயணிகளின் கவனத்திற்கு

வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குறுகிய கால பயணத்தில் இந்தியாவிற்கு வரும் போது குடியிருப்போர் அல்லாத (சாதாரண) ரூபாய் (NRO) கணக்கை (நடப்பு சேமிப்பு) அந்நியச் செலாவணியை கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் தொடங்கலாம்.
இத்தகைய கணக்குகளை அதிகபட்சமாக 6 மாத காலம் வரை வைத்திருக்க முடியும்.
இதற்கு பாஸ்போர்ட் மற்றும் இதர மதிப்புள்ள அடையாளச் சான்றுகள் அவசியம். அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் புதிய கணக்குகளைத் தொடங்கும்போது உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த இடத்தில் NRO (Non Resident Ordinary - Savings Account) கணக்கு மூலமாக செலவுகளுக்கான பணத்தை அளிக்கலாம். இந்திய ரூபாயில் 50,000க்கும் மேற்படும் அனைத்து பணம் செலுத்துதல்களையும் காசோலைகள்/ கொடுப்பாணைகள்/கேட்பு வரைவோலைகள் மூலமாக அளிக்கவேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கிகள் கணக்கு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு கிளம்புவதற்குமுன் மீதமுள்ள பணத்தை அவர்கள் நாட்டு பணமாக மாற்றிச்செல்ல உதவுகின்றன. ஆனால் அந்தக் கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சுற்றுலாவிற்காக வந்த இடத்திலிருந்து எந்த நிதியும், வட்டி தவிர அந்தக் கணக்கில் சேர்ந்திருக்கக்கூடாது.
ஆறுமாதங்களுக்குமேல் பராமரிக்கப்படும் கணக்கிலிருந்து மீதமுள்ள தொகை வெளிநாட்டிற்கு அனுப்ப விரும்பலாம். இம்மாதிரி சமயங்களில் கணக்கைப் பராமரித்து வரும் அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கி, அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தின் அந்நியச் செலாவணித் துறைக்கு ஒரு வெற்றுத்தாளில் மீதமுள்ள பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக விண்ணப்பம் செய்யவேண்டும்.
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
நன்றி : http://ta.vikaspedia.in/

ஃபேஸ்புக் இரகசியங்கள் தெரிந்துகொள்ள


ஃபேஸ்புக் இரகசியங்கள் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். 

கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட வல்லுநர்களை இழுக்கும் காந்தமாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துப் பயன்படுத்த வழி தருவதிலும், நகாசு வேலைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதிலும், தனிப்பட்ட முறையில் இயங்கும் செயலிகளைக் கொண்டிருப்பதிலும், ஒரு தனித்துவம் மிக்க பொறியியல் அறிவின் அடையாளமாக பேஸ்புக் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

பேஸ்புக் இணைய தளத்தில், அதன் பயனாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அவை அனைத்தும் அவர்களுக்குத் தெரியுமா என்றால், இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிக் கூறுகையில், பேஸ்புக் இணைய தளத்துடன் இணைந்து செயலாற்றக் கூடிய தர்ட் பார்ட்டி செயலிகளை இங்கு குறிப்பிடவில்லை. அல்லது பிரவுசர் வழியாக இணைந்து செயலாற்றும் செயலிகளை இங்கு பட்டியலிடவில்லை. தெரியாத செயல்பாடுகள் என்று சொல்லப்படுவது, பேஸ்புக் இணையதளத்திலேயே அமைந்து, அனைவரும் இயக்கும் வகையில் தரப்படும் செயல்பாடுகள் தாம். இவற்றைத்தாம் பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவற்றை இங்கு ஆய்வு செய்து பார்க்கலாம். தெரிந்த பின்னர், பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்து பேஸ்புக் சூப்பர் ஸ்டாராக மாறலாம்.

நீங்கள் அறியாத உங்களின் செய்திப் பெட்டி (Hidden Message Box) உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றும் அதற்கான தளமும் உள்ளதா? அதில் நீங்கள் விரும்பும் தகவல்களைப் பதிவு செய்கிறீர்கள். போட்டோக்களைப் பதிந்துவைத்து அழகு பார்க்கிறீர்கள். ஓரமாக அரட்டைக் கட்டத்தில் (Chat Box) நண்பர்கள் தென்பட்டால், அவர்களுடன் அரட்டை அடிக்கிறீர்கள். போட்டோ, பைல்களை அனுப்புகிறீர்கள். சில வேளைகளில், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை, உங்கள் மெசேஜ் பெட்டி திறந்து படிக்கிறீர்கள். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துவதில்லை. 

இருப்பினும், இது தவிர, இன்னும் இரு மறைத்துவைக்கப்பட்ட உங்களுக்கான மெசேஜ் பாக்ஸ் இருப்பது தெரியுமா? இந்த செய்திப் பெட்டியைப் பெற, உங்கள் பக்கத்தில், மேலாக உள்ள "messages" என்னும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது இடது பக்கமாக "messages" என்னும் லிங்க்கின் மீது கிளிக் செய்திடுங்கள். இந்த இன்பாக்ஸைத் திறக்கும் போது, மாறா நிலையில், இதன் "Recent" டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதன் வலது பக்கத்தில் "Message Request" என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், "See filtered requests” என்ற லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உங்கள் நண்பர்களிடமிருந்தும், நீங்கள் அறியாத யார் யாரிடமிருந்தோ பல செய்திகள் இருக்கும். இவர்களுக்கு மறுமொழி அளிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். அல்லது நீக்கிவிடலாம். முதலில், இது போன்ற அறியாதவர்களிடமிருந்து வரும் செய்திகளைப் படிக்கும் இன்பாக்ஸ் திறப்பதற்கு, 2012ல், ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், இது உயர்த்தப்பட்டு, 100 டாலர் (மார்க் உட்பட அனைவருக்கும்) வரை சென்றது. பின்னர், இது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்த நபர் யார்?
சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்த ஒருவர் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டில் பேஸ்புக் பார்த்துவிட்டு, கணக்கை மூடாமல் வந்த பக்கத்தைப் பார்த்த ஒருவர் என அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவரை நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? 

முதலில் உங்கள் settings page (https://www.facebook.com/settings?tab=account) செல்லவும். அங்கே, Security போல்டரில், "Where You're Logged In" என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் பேஸ்புக் தளத்தை அணுகிய விபரங்கள் அனைத்தும் காட்டப்படும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் எனப் பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் பயன்படுத்தாத சாதனம், பிரவுசர் மற்றும் நாள் இருப்பின், அதன் அருகே உள்ள End All Activity என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பார்த்துவிட்டு அதிலிருந்து முறையாக முடித்து வைத்து வெளியேறாமல் இருந்தால், அதுவும் காட்டப்படும். அதனை இங்கிருந்து முடித்துவிடலாம்.

ரகசிய உணர்ச்சி சித்திரங்கள்
கம்ப்யூட்டர் வழியாக நட்பு தொடர்புகளில், நாம் நம் உணர்வுகளைத் தெரிவிக்க, அதற்கென அமைந்த சிறிய படங்களை இணைப்பது வழக்கமாக உள்ளது. இவற்றை எமோட்டிகான் (emotion+icon) என அழைக்கிறோம். பேஸ்புக்கில், பல எமோட்டிகான்கள் உள்ளன. ஆனால், அவை நாம் எளிதாக அறியும் வகையில் இல்லை. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது :)/ :D/ ^_^ ஆகியவற்றையே. ஆனால், இன்னும் சில உள்ளன. அவை: (y) = வெற்றி எனப்படும் 'தம்ப்ஸ் அப்” அடையாளம். (^^^) =பெரிய வெள்ளை ஷார்க் மீன், :|] = ரோபோ என அழைக்கப்படும் இயந்திர மனிதன், <(") = பெங்குவின் பறவை. இவற்றை நீங்கள் வால் போஸ்ட், சேட், நம் கமெண்ட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவற்றை டைப் செய்தவுடனேயே, அவை அந்த சிறிய ஐகானாக மாறும். எடுத்துக் காட்டாக, பெங்குவின் பறவைக்கானதை டைப் செய்தால், உடனே அது சிறிய பெங்குவின் பறவையாக மாறும். (உடனே பேஸ்புக்கில் டைப் செய்து பாருங்கள்.)

மெசஞ்சர் வழியாக பைல் பரிமாற்றம்
பேஸ்புக் மெசஞ்சர் விண்டோவை நீங்கள் திறந்தால், அதில் சிறிய கியர் ஐகான், வலது மேல்புறம் இருப்பதனைப் பார்க்கலாம். இதில் தட்டினால், அதில் "Add Files...", என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே கம்ப்யூட்டரிலிருந்து பைலைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த ஆப்ஷன் சேட் விண்டோவிலும் கிடைக்கும். இதனைப் பெறுபவர், இதில் காட்டப்படும் லிங்க்கில் கிளிக் செய்து பைலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தலைகீழாக ஆங்கிலம்
பேஸ்புக்கில் நாம் காணும், அல்லது அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள் அனைத்தும் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனைக்கான விடையை, பேஸ்புக் தளத்தினை வடிவமைத்தவர்கள், ஓர் ”ஈஸ்டர் எக்” ஆக அமைத்துள்ளனர். இதனைக் காண்பதற்கு, பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளத்தில் மொழி அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் தளத்தில், General Account Settings > Language எனச் செல்லவும். அங்கு ஏற்கனவே English (US) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில், English upside down என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்துவிட்டால், உங்கள் பக்கத்தில் உள்ள ஆங்கில சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். ஒன்றை கவனத்தில் கொள்ளவும். இதனை எளிதாகப் படிக்க முடியாமல் எரிச்சல் அடைவோம். மாற்றிவிட்ட பின்னர், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கையில், மெனுக்களில் உள்ள சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். கவனமாக அதனைக் கண்டு, மீண்டும் English US என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் தலைகீழாக சிரசாசனம் செய்து பேஸ்புக் தளத்தினைப் படிக்க வேண்டும். எப்படி வசதி?

பேஸ்புக்கில் வலைமனை (Blog) வசதி
பேஸ்புக் தளத்தில் நம் கருத்துகளைப் பதிவிடுகிறோம். சில படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வெளியிடுகிறோம். சில வேளைகளில், மிகப் பெரிய உரைக்கோவை ஒன்றை பதிவிட விரும்பினால், பேஸ்புக், அதற்கான சிறிய வலைமனை ஒன்றை அமைக்க வசதி தருகிறது. இதற்கு எச்.டி.எம்.எல். தெரிந்திருக்க வேண்டியதில்லை. 


facebook.com/notes என்னும் முகவரி உள்ள பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கு உங்களுடன் நட்பாயிருப்பவர்களின் குறிப்புகள் இருக்கும். இதில் உங்களுடையதையும் இணைக்க விரும்பினால், மேல் வலது மூலையில் உள்ள "+ Write a Note" என்பதில் கிளிக் செய்திடவும். உடன் புதிய வலைமனைப் பக்கம் ஒன்று கிடைக்கும். இதன் மேலாக, படத்தை வைக்க இடம் உண்டு. அடுத்து, உங்கள் கருத்து குறித்த தலைப்பினை அமைக்கலாம். அடுத்து உங்கள் கருத்தை விளக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டலாம். அல்லது எழுதலாம். ஒரே முயற்சியில் நீங்கள் விரும்பியதை எல்லாம், எழுதி அமைக்க முடியவில்லை என்றால், இயன்றதை எழுதி, சேவ் செய்து, பின்னர் வெளியிடலாம்.

பேஸ்புக்கில் உங்கள் இனிய நட்பு

உங்களுடைய பேஸ்புக் இணைய நட்பு குறித்து அறிய www.facebook.com/us என்ற முகவரியை டைப் செய்து காட்டப்படும் தளத்தினைப் பாருங்கள். உங்கள் அனைத்து நண்பர்களின் புகைப்படங்கள், நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் என அனைத்து நடவடிக்கைகளின் அடையாளம் கிடைக்கும். 

பின்னால் பார்த்துக் கொள்ள காத்திடு
சில வேளைகளில், பேஸ்புக்கில் நம் நண்பர்கள், முக்கியமான இணைய தளங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதன் லிங்க் அனுப்பி வைப்பார்கள். நமக்கு அப்போது நேரம் இல்லாததால், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்போம். ஆனால், லிங்க்கினை சேவ் செய்திட மாட்டோம். இது போல “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்ற விஷயங்களை, சேவ் செய்து வைத்துப் பின்னால் பார்க்க, பேஸ்புக் வழி அமைத்துத் தருகிறது. இந்த டூலின் பெயர் "Save for Later". 

எந்தப் பதிவினையாவது சேவ் செய்திட வேண்டும் என்றால், அந்தப் பதிவின் மேல் வலது முனையில் உள்ள சின்ன அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Save "[name of story]" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது, உங்களுடைய சேவ் செய்யப்பட்ட போல்டருக்கு இந்த பதிவினை அனுப்பி சேவ் செய்திடும். "saved" என்ற பெயரில் ரிப்பன் ஒன்று காட்டப்படும். முதல் முதலாக ஏதேனும் ஒரு பதிவினை சேவ் செய்த பின்னரே இந்த போல்டர் உருவாக்கப்படும். பின்னர் அடுத்தடுத்து சேவ் செய்திடுகையில், அவை இங்கு வைக்கப்படும். அதில் கிளிக் செய்தால், அனைத்து சேவ் செய்யப்பட்டவைகளையும் பார்க்கலாம். 

மொத்த பேஸ்புக் செயல்பாடு பார்க்க
நீங்கள் பேஸ்புக் தளத்தில் மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும், அதாவது “அனைத்தும்” மொத்தமாக பார்க்க விருப்பமா? பேஸ்புக் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு போஸ்டிங், படம், விடியோ, தகவல், நண்பர்களுடன் அரட்டை என “அனைத்தும்” பெறலாம். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில் Settings > General என்று செல்லவும். 



அங்கு "Download a copy of your Facebook data" என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு தரப்படும் வழிகளைப் பின்பற்றவும். நீங்கள் மேற்கொண்ட அனைத்தும் காட்டப்படும். நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க முடிவு செய்தால், உங்கள் பேஸ்புக் நாட்களை காப்பி எடுத்து வைக்க இந்த டூல் உதவுகிறது. 

நம் பேஸ்புக் வாரிசு யார்?

பேஸ்புக்கில் உள்ள அனைவரும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்கத்தான் போகிறோம். அய்யோ! அப்படியானால், நான் இத்தனை நாள் பதிவு செய்து, வளர்த்து ஆளாக்கிய என் பேஸ்புக் தளம் என்னாவது? பேஸ்புக் மட்டுமல்ல. இது அனைத்து சமூக வலைத் தளங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கில் உள்ள உங்கள் நண்பர்களும் மரணத்தைத் தழுவுவார்கள். பேஸ்புக் இதற்காகவே, உங்கள் மரணத்திற்குப் பின், சட்ட ரீதியாக, உங்கள் தளப் பக்கத்தினை ஏற்றுக் கொள்ளும் வாரிசை நியமிக்க வழி செய்துள்ளது. பேஸ்புக் இதனை a legacy contact என அழைக்கிறது. பேஸ்புக்கில் உங்கள் நண்பராய் உள்ள ஒருவரை இதற்கென நியமிக்கலாம். அது உங்கள் மகன் / மகள் / மனைவியாகக் கூட இருக்கலாம். இதற்கு to Settings > Security > Legacy Contact என்று சென்று நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர், உங்கள் பேஸ்புக் தளப்பக்கத்தினை நிர்வகிப்பார். உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் மறைவு குறித்த தகவலைத் தெரிவிப்பார். 
இவ்வாறு நியமிக்கப்படுபவரை பின் நாளில், நீங்கள் மாற்றவும் செய்திடலாம். உங்கள் இணைய தளப் பக்கத்தினை நீக்கிவிடவும் இங்கு வழி தரப்பட்டுள்ளது. 
கூடுதல் தகவல்கள் பெற https://www.facebook.com/help/1568013990080948 என்ற முகவரியில் உள்ள பேஸ்புக் இணைய தளத்தினைப் பார்க்கவும்.
நன்றி : தினமலர் - கம்ப்யூட்டர் மலர், 02.05.2016



ஃபேஸ்புக் தொல்லைகளை தவிர்க்க


ஃபேஸ்புக் தொல்லைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் விரும்பியும், விரும்பாமலும், பல அறிவிப்புகளை நம் கம்ப்யூட்டர் மற்றும் பிற இணைய இணைப்பு சாதனங்களில் சந்திக்கின்றோம். இவற்றில் பல அறிவிப்புகள் (Notifications) நாம் விரும்பாதவையாகவே உள்ளன.
இதில் அதிகம் நான் எரிச்சல் அடைவது பேஸ்புக் சமூக தளத்தில் நாம் பெறும் அறிவிப்புகள் தான். இவற்றை வேறு வழியின்றி நாம் சகித்துக் கொள்கிறோம். அல்லது, அவற்றை எப்படி தவிர்ப்பது அல்லது நிறுத்துவது எனத் தெரியாமல் இயங்குகிறோம். அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.
இணையம் வழியாக நமக்கு வரும் அறிவிப்புகள் பல வகை. டெக்ஸ்ட், அலாரம் மற்றும் சமூக இணைய தளங்களில் எனப் பல வழிகளில் நமக்கு இவை கிடைக்கின்றன. மொபைல் போன்களில் இத்தகைய அறிவிப்புகள் ஏராளம். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், இவற்றை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். சிலர் இவற்றை ரசிக்கிறார்கள்.
ஆனால், பலர் இவை தேவைதானா என்று முகம் சுழிக்கின்றனர். விருப்பம் கேட்டால், இவை எனக்கு வேண்டாமே என்று முடிவெடுப்பார்கள். ஏனென்றால், தகவல் தரும் வகை மட்டும் என்றால் அனைவரும் இந்த அறிவிப்புகளை விரும்பலாம். ஆனால், எரிச்சலூட்டும் வகையில், இத்தகைய அறிவிப்புகள் குவிவதை நாம் விரும்பமாட்டோம். பேஸ்புக் சமூக இணைய தள அறிவிப்புகள் பெரும்பாலும் இத்தகையவையாகவே உள்ளன. இவற்றை நாம் எந்த அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக, உங்கள் அக்கவுண்ட் சார்ந்து தரப்படும் அறிவிப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இவை நீங்கள் எந்த வகையான சாதனங்களைப் பயன்படுத்தினாலும், ஒரே மாதிரியாக உங்கள் அக்கவுண்ட் சார்ந்து வந்து கொண்டே இருக்கும்.
சில அறிவிப்புகளை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளவிலேயே மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். அல்லது குறிப்பிட்ட வகை அறிவிப்புகளை மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை அதன் தொடக்கத்திலேயே இயங்காமல் தடுத்து நிறுத்த முடியும்.
இறுதியாக, குறிபிட்ட அப்ளிகேஷனில் இருந்து வரும் அறிவிப்புகளை நீங்களாக நீக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பேஸ்புக் தள அறிவிப்புகளை வரவிடாமல் நிறுத்த முடியும். ஆனால், ஐ.ஓ.எஸ். இயக்கத்தில் பேஸ்புக் அறிவிப்புகளை நிறுத்த இயலாது.
எப்படி நிறுத்தலாம் என்று பார்ப்போம்.
பேஸ்புக் அக்கவுண்ட் அறிவிப்பு செட்டிங்ஸ்
நீங்கள் பேஸ்புக் தளத்திலிருந்து ஒருவரின் பிறந்த நாள் குறித்த அறிவிப்புகள் அல்லது ஒருவர் தன் நட்பு தொடர்பினை மூடுதல் (Close Friend’s activity) குறித்த அறிவிப்புகள் வர வேண்டாம் என விரும்பினால், இவற்றை பேஸ்புக் இணைய தளத்திலேயே நிறுத்தலாம். அல்லது இது பதியப்பட்ட ஆண்ட்ராய்ட் அல்லது ஐ.ஓ.எஸ். சாதனத்தின் மூலம் நிறுத்தலாம்.
ஐபேட் சாதனத்தில், பேஸ்புக் அப்ளிகேஷனைத் திறக்கவும். மேல் இடது புறம் உள்ள மூன்று கோடுகள் உள்ள ஐகானில் தட்டவும். இதன் மூலம் சைட் பார் காட்டப்படும். இதனை உருட்டிக் கொண்டு கீழாகச் சென்று, “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.
அப்டேட் செய்யப்பட்ட பேஸ்புக் பதிந்து இயக்கப்படும் ஆண்ட்ராட்ய் சாதனத்தில், மேலே காட்டியது போல சைட் பார் திறக்கவும். இதில் “Account Settings” மீது தட்டிப் பின்னர் கிடைக்கும் திரையில் “Notifications” என்பதில் தட்டவும்.
இறுதியாக, பேஸ்புக் இணைய தளத்தில், மேல் வலது மூலையில் உள்ள அம்புக்குறியில் தட்டவும். இங்கு கீழ் விரி பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.
இங்குதான், நீங்கள் பிறந்த நாள் மற்றும் பிற அறிவிப்புகள் வேண்டுமா, வேண்டாமா என்பதனை முடிவு செய்திடலாம். இங்கு “What You Get Notified About” என்பதனை அழுத்தி, பேஸ்புக் இணையதளத்தில் நீங்கள் எது குறித்த அறிவிப்புகளைப் பெற இருக்கிறீர்கள் என்பதனை அறியலாம்.
எடுத்துக் காட்டாக, போட்டோ அல்லது தகவல் ஒன்றில் நீங்கள் டேக் (Tag) செய்யப்பட்டால், யார் அதனைச் செய்தது என்ற அறிவிப்பு கிடைக்கும். இதனை நிறுத்தலாம். அல்லது யார் (உங்கள் நண்பர்களா? அல்லது உங்களின் நண்பர்களின் நண்பர்களா?) இதனை மேற்கொண்டது என்ற அறிவிப்பினை மட்டும் நிறுத்தலாம்.
மேலும், சில பக்கங்களை (Page) உருவாக்கி அதனை நீங்கள் நிர்வகிக்கையில், அதில் ஏதேனும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகையில், யார் அதனை மேற்கொண்டது என உங்களுக்கு வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம்.
இதே பட்டியலில் தொடர்ந்து சென்று “Birthdays” என்பதில் டேப் செய்தால், நண்பர்கள் பிறந்த நாள் குறித்து வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம் அல்லது அனுமதிக்கலாம்.
இந்த அறிவிப்புகள் குறித்த செட்டிங்ஸ் அமைப்பதில், “Friends’ life events” மற்றும் “Group activity.” ஆகியவையும் உள்ளன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இன்னொன்றையும் மேற்கொள்ளலாம். நீங்கள் சார்ந்துள்ள ஒரு குரூப், எப்போதும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பதிவுகளை மேற்கொண்டு, அதின் சார்பாக, நிறைய அறிவிப்புகள் உங்களுக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த அறிவிப்புகளை நிறுத்த, அந்த குழு அமைந்துள்ள இடத்திலேயே, அதன் பக்கத்திலேயே அதற்கான வழி இருக்கும். அல்லது account settings பக்கத்திலேயே இதனை மேற்கொள்ளலாம்.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமானது. 
உங்களுடைய பக்கத்தின் Timelineல் யாராவது எழுதினால் உங்களுக்கு அறிவிப்பு வரும். நீங்கள் ஏதேனும் நிலைத் தகவல்களை (status update) அமைத்து அதில் உங்கள் நண்பர்கள் ‘கமெண்ட்’ செய்தாலோ, அல்லது ‘லைக்’ செய்தாலோ, உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். ஏதேனும் ஒரு போட்டோவில் நீங்கள் டேக் செய்யப்பட்டாலும், உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். இது உங்கள் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக நீங்கள் உணர்ந்தால், இதன் ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் தனியே சென்று, அதனை உங்கள் விருப்பப்படி கையாள வேண்டியதிருக்கும். (அல்லது இன்னும் சுருக்கமாக, சமூக இணைய தளம் சென்று பார்ப்பதையே நிறுத்த வேண்டியதிருக்கும்.)
நீங்கள் உங்கள் நண்பரின் தகவல் ஒன்றில், ‘கமெண்ட்’ ஒன்றை அமைக்கிறீர்கள். அதனைத் தொடந்து, உங்களின் குறிப்புரையின் மீது, மற்றவர்கள் ‘கமெண்ட்’ செய்திடுகையில், உங்களுக்கு அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இது உங்களுக்கு எரிச்சல் தருவதாக இருந்தாலோ, அல்லது அளவிற்கும் அதிகமாக இருந்தாலோ, அந்த தகவல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று, “Stop Notifications” என்பதில் கிளிக் செய்து நிறுத்தலாம்.
இதே போல, நீங்கள் ஒரு நிலைத் தகவலை அப்டேட் செய்து, அதில் யார் கமெண்ட் அல்லது லைக் அல்லது ஷேர் செய்தாலும், அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இவற்றை நிறுத்த, நீங்கள் அப்டேட் செய்த தகவல் இருக்கும் இடம் சென்று, அங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், அறிவிப்புகளை நிறுத்துவதற்கான (“Stop Notifications”) டேப்பிள் கிளிக் செய்திட வேண்டும்.
இதிலிருந்து நாம் ஒன்றை உணரலாம். பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நம் செயல்பாடுகளை, அந்த தளம் ஊடுறுவப் பல வாய்ப்புகள் உள்ளன. இதனை நாம், அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து, நம் அக்கவுண்ட்டிற்கு வரும் தகவல்களை ஆய்வு செய்து நாம் அறிந்து கொள்ளலாம் என்பதே. மொத்தத்தில், நாம் பேஸ்புக் தளம் செல்லாமல், நமக்கு எந்த அறிவிப்பும் வராத வகையில் அமைத்துக் கொண்டால், நாம் இதிலிருந்து தப்பிக்கலாம்.
சாதனத்திலேயே நிறுத்துதல்
நாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களிலேயே, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பில், இந்த அறிவிப்புகளை நிறுத்த முடியும் என்றால், அது மிக மிக எளிய வேலையாக அமையும். நீங்கள் லாலிபாப் எனப்படும் ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 ஐ பயன்படுத்தினால், செட்டிங்ஸ் திறந்து, “Sound & notification -> App notifications” என்று வரிசையாகச் சென்று, பின் கிடைக்கும் பட்டியலில், உங்கள் அப்ளிகேஷனத் தேர்ந்தெடுத்து, அறிவிப்புகளை நிறுத்தலாம்.
எடுத்துக் காட்டாக, பேஸ்புக் இணைய தள அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் ஸ்லைடரில் “Block” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அந்த தளத்திலிருந்து எந்த விதமான அறிவிப்பும் உங்கள் மொபைல் சாதனத்திற்கு வராது. நீங்கள் பேஸ்புக் தளத்தில், உங்கள் அக்கவுண்ட்டில், அறிவிப்புகள் கிடைப்பது குறித்து எந்த செட்டிங்ஸ் அமைத்திருந்தாலும், உங்கள் மொபைல் சாதனத்தில் மேலே குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைத்துவிட்டால், பேஸ்புக் தளத்திலிருந்து எந்த அறிவிப்பும் வராது.
ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் நிறுவன சாதனங்களில், இது போன்ற அறிவிப்புகளை நிறுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. அவற்றில் செட்டிங்ஸ் திறந்து, “Notifications” என்ற பிரிவில் சென்றால், இவற்றை அறியலாம்.
ஆண்ட்ராய்ட் 5 க்கு முந்தைய சிஸ்டத்தில்: ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 சிஸ்டத்திற்கு முன்னால் வந்த சிஸ்டங்களைப் பதிந்த சாதனங்களை நீங்கள் பயன்படுத்தினால், என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம்.
மேலே சுட்டிக் காட்டியது போல, இந்த சிஸ்டம் இயங்கும் சாதனத்தில், அப்ளிகேஷன் மேனேஜர் சென்று, அப்ளிகேஷனத் தேர்ந்தெடுக்கவும்.
மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளில் கிளிக் செய்திடவும். பின் இங்கு கிடைக்கும் ஸ்லைடர் பாரில் கீழாகச் சென்று, “App Settings” என்பதனை டேப் செய்திடவும். உடன், பலவகையான நோட்டிபிகேஷன்ஸ் செட்டிங்ஸ் குறித்து காட்டப்படும். இவை அனைத்தையும் மொத்தமாக நிறுத்தலாம். வைப்ரேஷனை அமைக்கலாம். ரிங் டோன் தேர்ந்தெடுக்கலாம். அறிவிப்புகளில் கமெண்ட், நண்பர்கள் விண்ணப்பம், நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் எனப் பலவகையான பிரிவுகளுக்கான அறிவிப்புகள் குறித்து செட்டிங்ஸ் அமைக்கலாம்.
உங்களுக்கு நூற்றுக் கணக்கான நண்பர்கள் அமைந்த வட்டம் பேஸ்புக்கில் இருந்தால், நிச்சயம் அவர்களின் பிறந்த நாள் குறித்து வரும் அனைத்து அறிவிப்புகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே, இவற்றை நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்திலேயே நிறுத்தி விட்டால், எந்த பிரச்னையும் எழாது.
நன்றி : தினமலர் - கம்ப்யூட்டர் மலர், 28.12.2015

பான்கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்ற


பான்கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

சென்னை: ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். 

ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக.

இணைய முகவரி :
 இணைய முகவரிக்குச் https://tin.tin.nsdl.com சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

முக்கிய விபரங்கள் 

உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும். 

கட்டணம் :
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).

கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம் :
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.


ரசீது :
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம். 

புகைப்படங்கள் :
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும். 

விண்ணப்பம் :
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி :
NSDL e-Governance Infrastructure Limited, 
5th floor, Mantri Sterling, 
Plot No. 341, Survey No. 997/8, 
Model Colony, 
Near Deep Bungalow Chowk, 
Pune - 411016'

பின் குறிப்பு: 
நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).

நன்றி :குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 12.05.2016 






Wednesday, May 11, 2016

ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் பாதுகாப்பு


ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் பாதுகாப்பு - என்ன செய்ய வேண்டும்?

1. பைக்கை/ஸ்கூட்டரை சென்டர் ஸ்டாண்ட் போட நிறையப் பேர் சிரமப்படுகிறீர்கள் என்பது என் கண்ணுக்கு கண்ணாடி மாதிரி அப்படியே தெரியுது . ஸ்டாண்டில் ஏறி நின்று முழு பலத்தையும் காட்டி ஸ்டாண்டுக்கு செலவு வைக்காதீர்கள் . லேசாக அழுத்தம் கொடுத்தாலே போதும்; ஸ்கூட்டர் அதுவாகவே பின் பக்கம் சென்று ’ஜம்முனு’ உட்கார்ந்து கொள்ளும்.
2. ‘வெயிட்டான வண்டிகளை பார்க் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு’ என்று ஃபீல் பண்ணும் பெண்கள், பைக்கை ரிவர்ஸ் எடுக்கும்போது, இடுப்பால் தாங்கிப் பிடித்தால் எவ்வளவு எடை இருந்தாலும் தெரியாது. ஹேண்ட் பாரை மட்டும் பிடித்து நகர்த்தினால்தான், பேலன்ஸ் கிடைக்காமல் கீழே விழுந்து அருகில் நிற்கும் வண்டிகள் சீட்டு கட்டு போல சரிந்து விழ வாய்ப்புண்டு.
3. எப்போதுமே சைடு மிரர் பார்க்காமல், இண்டிகேட்டர் போடாமல் திரும்பாதீர்கள்! திரும்பும் முன் சிக்னல் செய்வது மிக முக்கியம் பெண்களே.. அதேபோல் சடர்ன் பிரேக் போடாதீர்கள். இது உங்களுக்கும் ஆபத்து; பின்னால் வரும் அனைவருக்கும் பேராபத்து.
4. 
சாலையில் எப்போதுமே நடுவில் செல்ல வேண்டாம்; இதனால் பெரிய வாகனங்களை ஓட்டி வருபவர்கள் செம கடுப்பாக வாய்ப்புள்ளது. எப்போதும் பெரியவங்களைப் பகைச்சுக்கக் கூடாது ஓ.கே...
5.
ஸ்கூட்டர் கீழே விழுந்தால், ஏர்லாக் ஆகிவிடும், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், பதற்றப்படாமல், ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்து, முடிந்தால் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு ஸ்டார்ட் செய்து பாருங்கள். ஆல் வில் வெல்!
6. 
Image result for scooter driving with Helmet by Indian women
சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்களை ஒட்டியபடி ஓவர்டேக் செய்யாதீர்கள்; முக்கியமாக இடதுபுறம் டோன்ட் டேக் ஓவர்டேக்! ஓவர்டேக் உடம்புக்கு ஆகாது...
7
சிக்னல் வருவதற்கு ரொம்ப தூரம் முன்னரே கால்கள் இரண்டையும் அகல விரித்துக் கொண்டே வராதீர்கள்! காமெடியாக இருக்கும் என்பதையும் தாண்டி, கால்களை பின்னால் வரும் வண்டிகள் இடித்துவிடவும் வாய்ப்புள்ளது.
8. 
புடவைத் தலைப்பு, சுடிதார் ஷால் போன்றவற்றை மிகவும் கவனமாக X ஸ்டைலில் கழுத்தில் கட்டி விடுங்கள். சூப்பர்மேன், பேட்மேன்போல் பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள்.
9. 
காதில் ஹெட்போன் மாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, முன்னால் செல்லும் இரண்டு அல்லது மூன்று வாகனங்களை மட்டும் கவனம் வைத்து ஓட்டுங்கள். விபத்துக்கு வாய்ப்பே இல்லை. வீட்டுக்குப்போய்க்கூட பாட்டுக் கேட்கலாம்...
10. 
ரொம்ப முக்கியம் - ஹெல்மெட். உங்கள் அழகிய முகத்துக்கு ஸ்டைலான ஹெல்மெட் அநாவசியம்; வைஸர் கொண்ட ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்தான் அவசியம் தோழிகளே!
- தமிழ் -
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2016

வாட்ஸப் தொல்லையில் இருந்து பெண்கள்

வாட்ஸப் தொல்லையில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
‘டிபி சூப்பர்’ என்று மெசேஜ் அனுப்புவதில் இருந்து, ‘புளூ டிக் காட்டுது, பதில் ப்ளீஸ்' என ரிப்ளை அனுப்பச்சொல்லிக் கேட்பதுவரை, வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே....

1. ப்ரொஃபைல் பிக்சர்
நீங்கள் மொபைல் நம்பர் தரவில்லை என்றாலும், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப், ரோட்டராக்ட் குரூப், ஆபீஸ் குருப் என்று குரூப்பில் இருந்து உங்கள் எண்ணை எடுத்துக்கொண்டு, 'ஸ்டேட்டஸ் சூப்பர்', 'டிபி க்யூட்' என்று ஆரம்பிக்கிறார்களா? வாட்ஸ்அப் அக்கவுன்ட் செட்டிங்ஸில், ப்ரொஃபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் அனைத்தும் நீங்கள் அலைபேசியில் பதிந்துவைத்துள்ள தொடர்புகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் 'கான்டாக்ட்ஸ் ஒன்லி' என்று செட்செய்துவிடுங்கள். அந்நியர்கள் அவுட்!
2. லாஸ்ட் சீன்
நீங்கள் கடைசியாக எப்போது வாட்ஸ்அப் பார்த்தீர்கள் என்பதை உலகத்துக்குச் சொல்லும் ‘லாஸ்ட் சீன்’ ஆப்ஷனைப் பார்ப்பதையே முக்கிய வேலையாக வைத்துக்கொண்டு, ‘என்ன இந்தப் பொண்ணு நைட் 12 மணிக்கு ஆன்லைன் வந்திருக்கு’ என்று உங்களை நிழலாகத் தொடரும் கவனிப்பு வளையத்தில் இருந்து விடுபடுங்கள். அதற்கு, 'லாஸ்ட் சீன்'-ஐ யாரும் பார்க்கமுடியாதபடி 'நோபடி(Nobody)' என்று மாற்றிவிடுங்கள். சுதந்திரம் பேக்கப்!
3. புளூ டிக்
இரண்டு புளூ டிக்குகளைப் பார்த்துவிட்டால், இங்கு பலரும் ஏதோ கிரீன் சிக்னலை பார்ப்பதுபோல மூளை பிசகிக்கிடக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவைப்பதற்கு எல்லாம் உங்களுக்கு நேரமில்லை. எனவே, அதுபோன்ற கான்டாக்ட்கள், தெரியாத எண்களில் இருந்து வரும் தொடர் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருந்துவிடுங்கள்.

Image result for whatsapp blue ticks

 புளூ டிக் பார்க்கவில்லை என்றால் ஆட்டோமெட்டிக்காக அவுட் ஆகிக்கொள்வார்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். எளிமையான தீர்வு!
4. சென்டிமென்டல் ஆஃப்
இது பழைய டெக்னிக்தான். பெர்சனல் சாட்டில் வந்து பொறுத்துக்கொள்ள முடியாதபடி தொல்லைகொடுத்தால், அந்த கான்டாக்ட்டும் நீங்களும் இருக்கும் குரூப் சாட்டில், ‘சொல்லுங்க பிரதர்’ என்று அவருக்குத் தட்டுங்கள். பார்ட்டி ஆஃப் ஆகிவிடும். சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்தான்!
5. பிளாக்
‘குட் மார்னிங்’, ‘குட் டே’ என்று டீசன்டாக என்ட்ரிகொடுத்துவிட்டு, பின் மெல்ல மெல்ல எல்லை மீற ஆரம்பித்தால்... யோசிக்காமல் அந்த கான்டாக்ட்டை பிளாக்செய்து விடுங்கள்.
Image result for whatsapp block

பிரச்னையை வளரவிட்டு வருந்தாதீர்கள். பார்டர் தாண்டினால் பிளாக்! இந்த எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி ‘என் பணி உன்னை டிஸ்டர்ப் செய்வதே’ என்று மெயின் இன்பாக்ஸ் வருபவர்களை, மைண்டில் இருந்து கன்ட்ரோல்+ஆல்ட்+டெலிட். உங்களுக்கு உருப்படியான வேலைகள் நிறைய உள்ளன!
- நிவேதா சேகர்
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2016