disalbe Right click

Monday, September 5, 2016

பி.எஃப். புதிய நடைமுறைகள்


பி.எஃப். புதிய நடைமுறைகள் - என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 பேர் பணிபுரிந்தாலே அவர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்வது கட்டாயம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது
இந்த நிலையில், அமைப்பு சார்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக பல புதிய மாற்றங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) அறிவித்துள்ளது. 

இந்த மாற்றங்கள் குறித்து சென்னை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி எஸ்.சங்கர் ஆகிய இருவரும் விளக்கிச் சொன்னார்கள்.  

நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை!
“பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றும்போதோ அல்லது முகவரி உள்ளிட்ட புதிய தகவல்களைச் சேர்க்கும்போதோ வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே திருத்தம் செய்ய இயலும் என்பது இதுவரை இருந்துவந்த நடைமுறை. இனி  வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி இல்லாமலே பிஎஃப் படிவம், பென்ஷன் படிவம் போன்றவற்றைப் பெற்று நிரப்பிக் கொடுக்கலாம்.

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியக் கணக்கை தாங்களே முடிவு செய்யக்கூடிய வகையில் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதற்காக 10டி (10D) என்கிற படிவத்தை இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தி உள்ளது. 

மேலும், தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் கட்டாயமாக்க ப்பட்டுள்ளது. 

பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது இனி அவசியம் க்ளெய்ம் பார்ம்-ல் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக் குறிப்பிட வேண்டும். 

இனி யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக் குறிப்பிட்டால் மட்டுமே பிஎஃப் க்ளெய்ம் செட்டில் ஆகும். ஒருவேளை பிஎஃப் சந்தாதாரர் டிசம்பர் 31-ம் தேதி 2013-ம் ஆண்டுக்கு முன்னரே ஓய்வு பெற்றிருந்தால், அவருக்கு இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் தேவையில்லை. 
ஏனெனில் இந்தத் திட்டம் 1.1.2014-ம் தேதிக்குப் பிறகே அறிமுகமானது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்களுக்கு யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை வழங்க நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இதை பல நிறுவனங்கள் சரியாகச் செய்யவில்லை என்பதால் 1.1.2016-ம் தேதி முதல் யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர்  கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் இருந்தால்தான் இனி க்ளெய்ம் செட்டில் ஆகும். 

இந்த யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஊழியர்கள் இந்த நம்பரை ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதையெல்லாம் இணைத்த பிறகு, யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை உறுதி செய்தபிறகு க்ளெய்ம் செய்கிறார் என்பதால் நிறுவனங்களிடமிருந்து அத்தாட்சி வாங்க வேண்டிய அவசியமில்லை. 

யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும், பி.எஃப் இருப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பிஎஃப் கணக்கையும் மாற்றுவதற்கு இந்த  யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைத் தந்தாலே போதும்; 

யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பருடன்,  ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரம் இணைக்கப்பட்டிருந்தால், பழைய பிஎஃப் பணம், புதிய நிறுவன கணக்குக்கு தானாகவே மாறிவிடும். எனவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு கணக்கை எளிதில் மாற்றலாம். இதற்காக அலைய வேண்டியதில்லை. 

லைஃப் சர்ட்டிஃபிகேட்! 
பென்ஷன் கொடுத்தபிறகு ஒவ்வொரு சந்தாதாரரும் லைஃப் சர்ட்டிஃபிகேட் (உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்) ஆண்டு தோறும் தரவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இதனைத் தவிர்க்க, ஜீவன் ப்ரமான்     (Jeevan Pramaan) என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஜீவன் ப்ரமான் சென்டரிலோ அல்லது பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று உங்கள் கைரேகையே ஆண்டுக்கு ஒருமுறை (நவம்பர்  மாதத்தில்) பதிவு செய்தாலே போதும்; உங்கள்  லைஃப் சர்ட்டிஃபிகேட் ஆட்டோமெட்டிக்காக அப்டேட் ஆகிவிடும். இதன்பிறகு வங்கிகளுக்குச் சென்று தனியாக லைப் சர்ட்டிஃபிகேட்  தரவேண்டிய அவசியமில்லை. 

டிடிஎஸ் பிடித்தம்! 
ஒரு உறுப்பினர் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரிந்திருந்தால் (சர்வீஸ்), அவர் வாங்கக்கூடிய பிஎஃப் பணம் ரூபாய் 50,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரைக்  குறிப்பிடுவதுடன் பான் கார்டையும், படிவம் 15G படிவத்தையும் (வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்பதற்கான படிவம்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

58 வயது பிஎஃப் சந்தாதார்கள்! 
58 வயதாகி பென்ஷனுக்குத் தகுதியான (குறைந்தபட்ச சர்வீஸ் 10 ஆண்டுகள்)பிஎஃப் சந்தாதாரர்கள், பிஎஃப் வாங்குவதை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். அவர்களுக்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் 58 வயதுக்குப் பிறகு பிஎஃப் பங்களிப்பை ஓராண்டு தொடர்ந்தால் அவர்களின் ஓய்வூதியம் 4% அதிகரிக்கும். இதுவே இரண்டு ஆண்டு என்றால் பென்ஷன் 8.16% அதிகமாக கிடைக்கும். 

மூன்று ஆண்டுக்கு பிஎஃப்! 
புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்குவதற் காகவும், யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பரை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்காகவும் ஊழியர்களுடைய பிஎஃப் பணத்தை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே வழங்க உள்ளது. அதாவது, புதிதாக வேலைக்குச் சேரும் நபர், யுனிவர்ஸல் அக்கவுன்ட் நம்பர் எண் சரியாக இருந்தால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவருடைய பிஎஃப் பணத்தை அரசாங்கமே செலுத்தும். 

இதனால் நிறுவனத்தின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும். 

இதில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 8.33% பிஎஃப் பணத்தை அரசே செலுத்திவிடும். இதுவே நலிந்த நிலையில் உள்ள டெக்ஸ்டைல் துறையில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு 3.67% பிஎஃப் பணத்தை டெக்ஸ்டைல் அமைச்சகமே முதல் மூன்று ஆண்டுகளுக்குச் செலுத்திவிடும்.

ஆனால், ஊழியரானவர் முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறக்கூடாது. அப்படி மாறாமல் இருந்தால் மொத்தம் 12% பிஎஃப் பணத்தையும் நிறுவனங்களுக்குப் பதிலாக அரசாங்கமே செலுத்தி விடும். இது 2016, ஆகஸ்ட் 9-ம் தேதியிலிருந்து புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்கள்.

புதிதாக வந்திருக்கும் பி.எஃப். நடைமுறைகள் மூலம் உருவாகும் நன்மைகளை எல்லோரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!
*********************************************************************************
பிஎஃப் பணம் மூலம் சொந்த வீடு!
பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை பிஎஃப் ஆணையம் விரைவில் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறிந்த எந்தவொரு முறையான அரசு ஆணை எதுவும் வெளியாகவில்லை.  

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் உறுப்பினர்களின் கணக்கைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் பணிகளைத் துவங்கி உள்ளது. இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவதுடன், பிஎஃப் பணத்தை மாதத் தவணையாகச் செலுத்தலாம். 

அடுத்த மாதம் நடைபெறும் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதி தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்துக்கு முன்பு இதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

இதற்கு மத்திய அறங்காவலர்கள் வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதாரர்கள் இதனைப் பயன்படுத்த இயலும்.

நன்றி : நாணயம்விகடன் - 04.09.2016

Saturday, September 3, 2016

நடை பயிற்சி


நடை பயிற்சி - என்ன செய்ய வேண்டும்?

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது ஆகும். நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. 

ஆனால் நடைபயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். இன்று நாட்டில் பரவலாக உடற்பயிற்சி மையங்கள் துவங்கி செயல்பட்டு வருகிறது. உடற்பயிற்சிக்கென்றே எல்லா வித கருவிகளுடன் மையங்கள் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உடற்பயிற்சி பழக்கம் அதிகரித்து வருகிறது. 

உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது.இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை எனினும், சைக்கிள் ஓட்டுதல் ,அல்லது நடந்து செல்வதனையோ கடைபிடிக்கின்றனர்.

சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும கூட, நடந்து செல்வது சைக்கிள செல்வதனையே பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். நடை பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.
நடைபயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும்.

 நடைபயிற்சியை பழக்கமாக்கிக் கொள்வதால் ........

ரத்த ஓட்டமானது சீராகிறது. 

நுரையீரல் சுவாசம் சீராகிறது.

செரிமாணக் கோளாறு சீராகிறது. 

உடலை வலுப்படுத்துகிறது. 

நடைபயிற்சி என்பது நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கு சமமாகும. 

ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி, இறங்குவதாலும், வீட்டை சுத்தப்படுத்தல், விளையாட்டுமைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடல், மூலமாக நடைபயிற்சியின் தேவையை சமன் செய்து கொள்ளாலாம். 

நடைபயிற்சியின் போது உடலிலுள்ள எல்லாத் தசைதொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகபடுத்தி பின் சம நிலைக்கு வருகிறது. 

தொடர்ந்து நடைபயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது.உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது. முதுமைஅடைந் தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் அளவு சக்தி கூடுதலாகும்.

நடைபயிற்சி துவங்கும் முன்பு

அதிகாலை நடப்பது நல்லது.
வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது
½ லி தண்ணீர் குடித்துவிட்டுத்தான் நடக்க ஆரப்பிக்க வேண்டும்.
தளர்வான உடைகள் அணிந்து இருத்தல் அவசியம்.
நடைபயிற்சி மேற்கோள்ளும் இடம்
சுற்று சூழல் பாதிப்பில்லாத, காற்றோட்டமுள்ள இடம், மக்கள் நெருக்கடி இல்லாத பாதையாக இருத்தல் மிகவும் நல்லது. பூங்கா, மைதானம், பள்ளி, கல்லூரி மைதானம்,கடைத்தெருக்கள், இயற்கை சூழல் நிறைந்த இடங்களை தேர்வு செய்து கொள்வது நல்லது.

நடைபயிற்சி செய்யும் முறை

நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.

நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளை தளர்வாகவும் வைது நடத்தல் வேண்டும்.

கைகளை பக்கவாட்டில் ஆட்டாமல்,முன்னும்-பின்னும் ஓரே சீராக ஆட்டியவாறு நெஞ்சுபகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும்.

அதற்கேற்றவாறு கால்களும் பின் தொடரும்.
அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடகக வேண்டும்.

ஓரே நேர்கோட்டில் நடப்பதை போல கற்பனை செய்து கொண்டு காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடக்க வேண்டும்.

நடக்க காலை உயர்த்தும் போது முன்னங்கால் விரல்களால் உடலை உந்தி தள்ளியவாறும்,காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் பதித்தவாறும்,இதே முறையால் முன்னங்கால் விரல்களையும் பதியவைத்து முன்னோக்கி செலுத்துங்கள்.

இயல்பாக சுவாசித்து,ஓரே சீரான வேகத்தில் சுவாசித்து காற்றை அதிக அளவில் உட்செலுத்துங்கள். வேகமாகவும்,அதேசமயத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடைபயிற்சியின் வகைகள்

நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.

மெதுவாக நடப்பது

எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைபயிற்சி உடல் வலி, சோர்வுகளை போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் உள்ளாவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

பவர் வாக்கிங்

கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.இந்த பவர் வாக்கிங் நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடையாகும்.

ஜாகிங்

நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது. அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். 

தினசரி ½ மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம். இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடம் நடக்கலாம்
.
நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.

இரத்த ஓட்டம் சீரடையும்.

நரப்பு தளர்ச்சி நீங்கி ,நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்

நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்

அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது

முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது

எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது

எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது

உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது

கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது

மாரடைப்பு-சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து –உடலையும் –மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது

உடல் மற்றும் மன்ச்சோர்வினை குறைக்கிறது

நன்கு தூங்கிட உதவுகிறது

கண்பார்வையை செழுமைபடுத்துகிறது

சுற்றுச்சூழல் மாசுபாடும், ரசாயன கழிவுகளும், நட்சுப்பொருட்கள் கலந்த உணவாலும், உடல் நலமும் – மனநலமும் பாதிக்கப்பட்டு வரும் இக்காலசூழலில், நச்சுக்காற்றின் தாக்கத்தை உடல் இயக்கத்தின் பாதிப்பை அளிக்காத வண்ணமும்,செலவின்றி ஆரோக்கியமாக – மகிழ்வுடன் வாழ உதவும் எளிமையான வழியாகும்.

இயற்கையோடு இணைந்த பயிற்சிகளான நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம், பளுதூக்குதல் தோட்ட வேலை, நாட்டியம், குதிரையேற்றம் சைக்கிள் விடுதல்,  கடின உழைப்பு போன்றவை மிகச்சிறந்த பயிற்சிகள்.

பொதுவாக பயிற்சி எனப்படும் போது கருவிகள் தேவை. கட்டிடம் தேவை, கற்றுத்தரும் ஆசிரியர்கள் தேவை. இதற்கு எல்லாம் பொருளாதாரம் தேவை.

ஆனால் இது எதுவும் நடை பயிற்சிக்கு தேவை இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

சிறுவர்களாக இருக்கும் போது விளையாடுவதன் வழியாகவும், இளம் வயது முதல் கடினமான உடலுழைப்பை செலுத்துவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

ஆனால் இன்று உடலுழைப்பு பின்னுக்குத் தள்ளாப் பட்டு மூளை உழைப்பை செலுத்தக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மருந்து, மாத்திரை, சிகிச்சைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தினை குறைத்து நடைபயிற்சி, யோகா,தியானம், நீச்சல், வேக ஓட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு, மன அழுத்தமின்றி, நோயற்ற, மகிழ்வான வாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வோம் !

நன்றி : விகாஸ்பீடியா

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள்


பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் - என்ன செய்ய வேண்டும்?

சங்கங்களை உருவாக்குவது என்பது அனைவருக்கு பிடித்தமான விஷயமாக மாறிவருகின்றது. 

சங்கங்களை உடனடியாக பதிவு செய்து பதிவு எண் பெறுவதில் காட்டும் முனைப்பு பின்னர் சங்கத்ததை சட்டப்படி உயிர் கொடுத்து வருவதில் காண்பிப்பதில்லை. இன்று மாவட்ட சங்க பதிவாளரிடம் பதியப்பட்டிருக்கும் சங்கங்களில் 10 சதவித சங்கங்களுக்குகூட சட்டப்படியான உயிர் இல்லை என்பதுதான் உண்மை.  

ஏன் இந்த நிலைமை?

சங்ககத்தை உருவாக்கி பதிவு பண்ணினால் மட்டும் போதாது. சங்க தனிநிலை சட்ட விதிகளின் படி, நிர்வாகக்குழு கூட்டங்களை கூட்டி, அந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அனைத்தையும் (உறுப்பினர் எவரும் சேர்க்காத தீர்மானம்) அந்த தீர்மான தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் சங்க பதிவாளரிடம் படிவம் 7-உடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

ஏதாகிலும் உறுப்பினர்கள் சேர்ந்தாலும், நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது அவர்கள் மறைந்தாலும், மற்றும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது சார்ந்த தீர்மான் நகலுடன், படிவும் 7-யுடன் சேர்த்து 3 மாதத்திற்குள் பதிவு செய்யப்படவேண்டும்.

சங்க வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகும்போது, தணிக்கையாளரை கொண்டு சங்க விதிகளின் படி தணிக்கை செய்து, ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம்தேதிக்குள் கூட்டி அதற்கான அறிவிப்பை ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு வழங்கி, அந்த கூட்டத்தில் அந்த தணிக்கையை ஏகமனதாக ஒப்புக்கொண்ட தீர்மானத்தையும் கீழ்கண்ட ஆவணங்களையும்31ம் தேதி மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும். 

ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில், ஒருவரை உறுப்பினராக சேர்த்தாலோ, நீக்கினாலோ, அல்லது நிர்வாகக்குழுவினர் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, 31ம் தேதி டிசம்பருக்குள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 1978 தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 22ன் படி கீழ்கண்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

1) 2015-2016 ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு மற்றும் இருப்புநிலை ஏடு அறிக்கை

2) 2015-2016 முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியல் - படிவம் 6

3) சங்கம் செயலாற்றி வருவதற்கான உறுதிமொழி

4) 2015-2016முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க நிர்வாகிகளின் பட்டியல்

5) 29.09.2016 அன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மான நகல்

6) உறுப்பினர்களை நீக்கியதற்கான விபரம் அடங்கிய படிவம் 7

இந்த நடைமுறையில் ஒரு முறை தவறினாலும், அதற்கு பிறகு தாக்கல் செய்யும் எந்த ஆவணங்களையும் கோப்பிற்கு எடுத்து கொள்ளமாட்டார்கள். 

அதை தனி பைலில் வைத்து வருவார்கள். பின்னர் நாம், சென்னையில் உள்ள பதிவாளர் ஜெனரல் (பதிவுத்துறைத் தலைவர்) அவர்களுக்கு  மனு செய்து, அவர்கள் வந்து நமது சங்க ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பிறகே எடுத்து கொள்வார்கள்.

எப்போது தங்கள் ஆவணங்கள் கோர்வைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அன்றே உங்கள் சங்கம் செயலிலந்த சங்கமாகிவிடுகின்றது. அதற்கு பிறகு அந்த சங்கத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லை.

 உதாரணமாக, அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவோ அல்லது ஒரு வழக்கில் எதிர்வாதியாக இருக்கவோ அந்த சங்கத்திற்கு தகுதியில்லை.

இன்று இப்படி செயலலிழந்த பல சங்கங்கள், பல வழக்குகளை தாக்கல் செய்யும் வேளையில், சங்க பதிவாளருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி, பதில் பெற்று, அந்த சங்கம் செயல் இழந்து விட்டது என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்துவிட வைத்துவிடலாம்.

குறிப்பு: இந்தப் பதிவு முழுவதும் உள்ள சங்கதிகள் leenus.blogspot.in ல் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

நன்றி :
வழக்கறிஞரும், எனது இனிய நண்பருமான 
திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ் அவர்களுக்கு

Wednesday, August 31, 2016

உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?


உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?
நம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்.
இ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர். 1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார்
ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை.
உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
ஆழ்மனது : 
சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:
டெலிபதி : 
ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும் பெற்றிருக்கிறார்கள். டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம்.
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.
உள்ளுணர்வு : 
காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம்.
கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம்.
இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.
சூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேஜாவு : 
இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.
டெலிகைனசிஸ் : 
மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது.
1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார்.
ஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.
இ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: 
நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்;
ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.

புதிய விஷயங்கள்:
நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும்.
நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும்.
நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும்.
உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள்.
துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.

மெஸ்மெரிஸம் : 
மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.
ஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர் ஜேம்ஸ் பிரைய்டு.
இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்.
இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.

நம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.
ஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்.
- ஜெ. விக்னேஷ் சங்கர்
மனநல ஆலோசகர், மதுரை.
99525 40909
நன்றி : தினமலர் நாளிதழ் - 31.08.2016



Saturday, August 27, 2016

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள்

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நமக்கான தேவைகளை பெறுவதற்கும், உரிமைகளை அடைவதற்கும் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டியதிருக்கிறது. 
பணவசதி உள்ளவர்கள்   லஞ்சம் மூலமாக அதனை அடைந்து விடுகின்றனர். பணவசதி இல்லாதவர்களும், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற வைராக்கியம் உள்ளவர்களும் சட்டத்தின் உதவியை நாடுகின்றனர்.
முன்பெல்லாம் பொதுமக்கள் கையாண்ட  “மொட்டைக் கடிதம்” என்ற ஒரு ஆயுதத்திற்கு அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் பயந்து நடுங்குவார்கள். 
தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துக் கொள்ள சிலர் “மொட்டைக் கடிதத்தை” தவறாக பயன்படுத்தியதால் அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற நிலையை எடுக்க வேண்டியது வந்தது.
ஆனால், இப்போதெல்லாம் உரிய ஆவணங்களுடன் புகார் அனுப்பினால்கூட அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
எத்தனையோ முறை விண்ணப்பித்து்ம் ஒரு நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் சலித்துக் கொள்வதை நான் மட்டுமல்ல, அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 
அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு!
உளி, சுத்தியல் கொண்டு பாறையை உடைப்பதை பார்த்திருக்கிறீர்களா?
ஒரே அடியில் பாறை உடைந்து விடுகிறதா? இல்லை.
பலமுறை அடித்த பிறகுதான் பாறை உடையும். 
ஆனால், ஒவ்வொரு முறை சுத்தியலால் அடிக்கும் போதும் பாறைக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். பாறையின் வலிமை உள்ளுக்குள் பலவீனமாகும். அந்த மாற்றம் வெளியில் நமக்குத் தெரியாது. 
அதே போலத்தான் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்ற புகார் மனுக்களும். 
ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்றுதடவை என்று அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மனுக்களை துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு (வட்டம், கோட்டம், மாவட்டம், கோட்டை) அனுப்பிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து  போராடுங்கள். 
சுத்தியல் மூலமாக விழுகின்ற அடிகளால், பாறைக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தைப் போல, உங்களது தொடர்ச்சியான புகார்மனுக்கள் அரசாங்கத்துறைக்குள்ளும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 
வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்! 
............................................................................................அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, August 26, 2016

கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள்


கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?


கண்கள் பாதுகாப்பு - விதிமுறைஅவசியம்!

மூன்று மணி நேரத்துக்கு மேல், தொடர்ச்சியாக கணினியில் பணியாற்றும்போது, சி.வி.எஸ்., - கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் குறைபாடு ஏற்பட, 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

இந்த பிரச்னை, எந்த வயதினருக்கும் ஏற்படும். மனிதன் ஒரே இடத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்து, கண்களுக்குப் பெரிய அசைவு எதுவுமின்றி, கணினியில் வேலை செய்வதால், கண் சோர்வு, வலி, அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் இரட்டைக் காட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

20:20:20 விதிமுறை

நம் கண்களைப் பாதுகாக்க, 20:20:20 என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால், 20 நொடிகள் தள்ளிச் சென்று, கண்களுக்கு ஓய்வு கொடுப்பதே இந்த விதிமுறை. மீண்டும், 20 நிமிடங்கள் வேலை செய்யலாம்.

ஒவ்வொரு முறை கண்களை சிமிட்டும்போதும் கண்களில் உள்ள நீர்ப்படலம் நிரம்புகிறது.

சராசரியாக, ஒரு நிமிடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் தடவை கண்களைச் சிமிட்டுகிறோம்.

ஆனால், கணினி உள்ளிட்டவற்றில் அதிக நேரம் பணி செய்யும்போது, இந்த சிமிட்டும் அளவு குறைகிறது.

மேலும், கணினியில் பணியாற்றும்போது, கண்கள் நேர்கொண்ட பார்வையில் இருக்கிறது. அப்போது, கண்கள் பார்க்கும் பரப்பளவு அதிகமாக உள்ளது.
இதனால், நீர்ப்படலம் ஆவியாகிறது.

கணினி, ஐபோன் போன்ற சாதனங்களில் பணிபுரியும்போது, முடிந்த அளவுக்கு, அடிக்கடி கண்களை சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே, உடனடியாகக் கிடைக்கும் நிவாரணி.

குளிர்சாதன அறைகள் மற்றும் மின் விசிறிக்கு அடியில் அமர்ந்து பணிபுரிந்தால், கண்கள் விரைவாக வறண்டு போகின்றன.

உங்கள் கண்களின் மீதோ அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் மீதோ, நேரடியாக விளக்கின் வெளிச்சம் படாதவாறு பணிச் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சை செய்யப்படாத பார்வைக் குறைபாடுகள் அல்லது தவறான கண்ணாடியை அணிதல் போன்றவற்றின் மூலம், சி.வி.எஸ்., பிரச்னை மேலும் சிக்கலாகும்.

தரமான பர்னிச்சர்களை பயன்படுத்தி, நேராக அமர்ந்து, உங்களின் கண்களுக்கும், மானிட்டருக்குமான துாரத்தை குறைந்தபட்சம், 20 முதல், 28 அங்குலம் வரை அமைத்து பணியாற்றுங்கள்.

மானிட்டர் உங்கள் கண்களின் உயரத்தை விட, நான்கு முதல், ஒன்பது அங்குலம் வரை தாழ்த்தி வைக்கவும்.

இதன்மூலம் நம் கண்கள் கீழ் நோக்கிப் பார்க்கும். கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் நீங்கும்.

டாக்டர் அமர் அகர்வால், தலைவர்
அகர்வால் கண் மருத்துவமனை குழுமம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.08.2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - என்ன செய்ய வேண்டும்?

ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம்... பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 - RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதற்காக. 'என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா... என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. 

இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.

ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங்க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.

மனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். 

கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ?) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.

தகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்... தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.

ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. 'நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை' என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.

நாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.
'திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்' என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. 

நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.

முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.

30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.

பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.
www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.

இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய 
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், 
மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
2, தியாகராயர் சாலை, 
ஆலையம்மன் கோயில் அருகில், 
தேனாம்பேட்டை, 
சென்னை-600018
(அல்லது) 

மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
தபால் பெட்டி எண்: 6405,
தேனாம்பேட்டை, 
சென்னை-600018 

என்ற முகவரிக்கு உரியவர். 

அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, 
பேக்ஸ்: 044-24357580, 
Email: sicnic.in Web: www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, 

“CENTRAL INFORMATION COMMISSION,
 II floor, August Kranti Bhavan,
 Bhikaji Kama Place,
 NEW DELHI – 110 066 

என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் என்றால்,
 www.rtionline.gov.in/ என்ற தளத்தில்
 மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.

www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

 ந.பா.சேதுராமன்
நன்றி : விகடன் செய்திகள் - 25.08.2016

துணிவு இல்லாத அதிகாரிகள், குவியும் வழக்குகள்


துணிவு இல்லாத அதிகாரிகள்,  குவியும் வழக்குகள் 
 என்ன செய்ய வேண்டும்?

திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும் அரசுக்கு விசுவாசமாக இருப்பது தான் அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் அரசுக்கு காட்டும் விசுவாசம், அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சில, திறமையற்ற, நேர்மையற்ற, அனுபவமற்ற அதிகாரிகள் தான் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்; இத்தகையவர்கள், விரைவாகவும், துணிந்தும் முடிவெடுக்கும் திறமையற்றவர்கள்.

இத்தகையவர்களுக்கு எந்த முடிவெடுப்பதற்கும், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அச்சம். 'சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ' என்ற பயம். அதனால் தான், பிறர் செய்வதற்கெல்லாம் தலையை ஆட்டி, காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பர். 

துறைமுகத்திலேயே கப்பல் நங்கூரமிட்டிருப்பது அதன் பாதுகாப்புக்கு உகந்தது தான். ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல. 

ஆங்கிலத்தில், 'கரேஜ் ஆப் கன்விக் ஷன்' என்ற அருமையான வார்த்தை உண்டு. தாம் செய்யும் செயல் குறித்து மிகத் தெளிவாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் துணிவு தான், வலிமையான, தெளிவான நம்பிக்கையின் காரணமாக ஏற்படும் துணிவு அது. மனதில் அந்த துணிவு இருந்தால் செய்யும் செயலில் தயக்கம் ஏற்படாது.

இத்தகைய திறமை இல்லாத சிலர் முக்கிய பொறுப்பில் அமர்ந்து, கடமையில் துாங்கி, புகழை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதைச் செய்வதற்கும் இவர்களிடம் துணிவு இருப்பதில்லை.

சட்டத்தைக் காரணமாகக் காட்டி, தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தான், ஒரு சில அதிகாரிகள் தெரிந்தே செய்கின்றனர். சுய லாபத்துக்காகவும், சொந்த விருப்பு, வெறுப்புக்காகவும் செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் அறியாமையால் செய்கின்றனர். 

இதனால் பல அப்பாவி அலுவலர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகமாக படித்து, அகில இந்திய அளவில் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தவர்களில் சிலர், பணியில் இருக்கும் போது, சாமானியர்கள் கொடுக்கும் மனுக்களைப் படிக்குமளவுக்கு கூட பொறுமையாக இருப்பதில்லை. 

உயரதிகாரிகளை அணுகும் ஒரு சாதாரண குடிமகனின் மனு, பரம பத விளையாட்டில் பாம்பிடம் கடிபட்ட காய் போல, அலட்சியம் காட்டிய அதிகாரியிடமே வந்து சேர்ந்து, மனு கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் நிலை தான் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிலவுகிறது. 

அதற்காக, இந்த அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள்; கையூட்டு பெற்று கீழ்மட்ட அலுவலர்களைக் கண்டுகொள்வதில்லை என, சொல்லி விட முடியாது. 

சமூகத்தில் தாதாக்கள் உருவாவது போல, இதுபோன்ற அதிகாரிகளின் தலைமையின் கீழ் சில தாதாக்கள் உருவாகி கோலோச்சி கொண்டிருப்பர்; அவர்களுக்கு பயந்து அப்பாவி ஊழியர்கள் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டிருப்பர்; பணிய மறுப்பவர்கள் பழிவாங்கப் படுவர். பழிவாங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருப்பர். 

பொதுமக்கள் பலர் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும், அரசு அலுவலர்கள் தங்கள் மீது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைக்காகவும் நீதிமன்றத்துக்கு ஓடவேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது, இதுபோன்ற திறமையற்ற, பொறுப்பற்ற அதிகாரிகள் தான்.

இப்போதெல்லாம் சில அதிகாரிகளே, 'கோர்ட்டுக்கு போய், உத்தரவு வாங்கி வாருங்கள்' என, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், அப்படிப் போய் வாங்கி வந்தாலும், தங்கள் துறை சட்ட ஆலோசகரிடம் கருத்துரை பெற வேண்டும் என்ற சாக்கில், நாளை கடத்தி, எதிர் தரப்பினர் அதற்கு மாற்று உத்தரவு வாங்க ஆலோசனையும் வாய்ப்பும், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழிகின்றன. 'வாய்தா' தேதி தெரிந்து கொள்ளவே நிறைய பேர் நீதிமன்றத்தில் கூட்டம் சேர்ந்து, அங்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலி வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தை விட்டு, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் நேரடியாக வந்து மோத ஆரம்பித்து விட்டனர். 

இதில் பல நல்ல, மூத்த வழக்கறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் சிலரின் போக்கு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மன வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.

முன்பெல்லாம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து கட்சிக்காரரை சந்திப்பதையும், அவர்களுக்காக காவல் நிலையம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் தொழிலுக்கு இழுக்கு என்று நினைப்பர். 

ஆனால் இன்று, இளம் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகளை, அலுவலகங்களுக்கு சென்று சந்திக்கின்றனர்.

உண்மையில் வழக்கறிஞர்களும், அரசு அதிகாரிகளும் சுயநலம் இல்லாமல், சமூக பொறுப்போடு நடந்து கொண்டால், கோர்ட்டுக்கு போகாமலேயே பல பிரச்னைகளை சுமுகமாக முடிக்க முடியும்; ஏழை, எளியவர் களுக்கு வீண் செலவு இல்லாமல் நீதி கிடைக்கச் செய்ய முடியும்.

பல சிறிய பிரச்னைகள், திறமையற்ற அதிகாரிகளாலும், பொறுப்பற்ற, லாப நோக்கத்தோடு செயல்படும் போலி வழக்கறிஞர்களாலும் பெரிதாக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இ - மெயில்: spkaruna@gmail.com

- மா.கருணாநிதி -
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு), 
சென்னை.

நன்றி : தினமலர் நாளிதழ் - 20.08.2016



Thursday, August 25, 2016

92 பைசாவில் பயணக் காப்பீடு


92 பைசாவில் பயணக் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

92 பைசாவில் முன்பதிவு பயணிகளுக்கு பயணக் காப்பீடு

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, விருப்பத் தேர்வாக இந்த பயணக் காப்பீடு திட்டம் இருக்கும். பயணிகள் விரும்பினால், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசாவை செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 

பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொருந்தாது. 

அதேபோல், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

 ரயில்கள் விபத்தை சந்தித்தாலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலின்போதோ பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தில் பயணிகள் முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ.10 லட்சமும், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.7.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். 

இதேபோல், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 

முன்பதிவு செய்த பிறகு பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமணி நாளிதழ் - 26.08.2016

Tuesday, August 23, 2016

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம்

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம் - என்ன செய்ய வேண்டும்?

கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பர் திரு A Govindaraj Tirupur.


Monday, August 22, 2016

டூ வீலர் இன்சூரன்ஸ்


டூ வீலர் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

இரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. 

ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). 

அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).

இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.   

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, 

இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். 

இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம். 

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 

மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும். 

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும். 

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். 

இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   

தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

ஓன் டேமேஜ் பாலிசி -  பிரீமியத்தில் எவ்வளவு லாபம்?

ஒரு வருட பாலிசி - (மூன்றாண்டுகளுக்கு சேர்த்து மொத்த பிரீமியம்) - ரூ.2,177

3 ஆண்டு பாலிசி  (நிச்சயம் 30% தள்ளுபடி, 20% சிறப்புத் தள்ளுபடி) - ரூ.1,281

லாபம் - ரூ.896(வாகனத்தின் மதிப்பு ரூ.50,000, 150 சிசி, புதிய அல்லது பழைய வாகனம்.)

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம்விகடன் - 07.02.2016

Friday, August 19, 2016

நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப்.


நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே பி.எஃப். 
பணம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நிறுவனங் களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் சந்தாதாரர்கள் அவர்களது ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு நிறுவனங்களின் ஒப்புதல் வேண்டும்.
சந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண்ணைக் அடிப்படை யாக கொண்டு 10-டி யுஏஎன் என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இபிஎப்ஓ வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த புதிய படிவத்துக்கு நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை.
நேரடி யாக இபிஎப்ஓ அலுவலகம் சென்று விண்ணபிக்கலாம். மேலும் இபிஎப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதிய பலன்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வாய்ப்பையும் தற்போது வழங்கி வருகிறது.
58 வயதுக்கு மேல் பங்களிப்பு செய்தோ அல்லது பங்களிப்பு இல் லாமலேயே தங்களது ஒய்வூதிய பலன்களை 58 வயதிலிருந்து 60 வயதுக்குள் எப்போது வேண்டுமா னாலும் பெற முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 20.08.2016