disalbe Right click

Wednesday, January 11, 2017

இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..!


இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..!


சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat

15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத் பாதுகாத்த எல்லைப் பகுதி

சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள்.

திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள்.

இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.

இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள்.

ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார்.

முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர்.

சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது.

ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள்.

சீனர்கள் வைத்த ஜஸ்வந்த் சிங் ராவத் சிலை

இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர்.

தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது.

இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள்.

இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது.

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஜெய்ஹிந்த்...!

நன்றி : விகடன் செய்திகள் - 10.01.2017

வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்


வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக காலை 10:00 முதல் மதியம் 3:00 மணிவரை வழக்கு எண் இடப்படும். 

தற்போது ரிட், ஆட்கொணர்வு, கிரிமினல் மேல்முறையீடு, கிரிமினல் சீராய்வு மனுக்களுக்கு மதியம் 1:30 மணிக்குள் வழக்கு எண் இடும் வகையில், பழைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலை விரைந்து அச்சிடவும், அவற்றை உயர்நீதிமன்ற இணையதளத்தில் முதல் நாள் இரவு 8:30 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையிலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.01.2017

ஒவ்வொரு மாசமும் என்னென்ன செய்ய வேண்டும்..!


ஒவ்வொரு மாசமும் என்னென்ன செய்ய வேண்டும்..!

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வார இறுதி விடுமுறைகள் என அனைத்தும் முடிந்து இயல்பு நிலைக்கு அனைவரும் திரும்பியுள்ளோம். சரி, 2016ஆம் ஆண்டு எனக்கு மோசமான வருடம், உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்று எத்தனை பேர் புத்தாண்டு நாளில் நினைத்திருப்போம்.? 
கண்டிப்பாகப் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று என்பதை இப்போது தேவையில்லை. 2017ஆம் ஆண்டை எப்படிச் சிறப்பானதாக அமைக்க வேண்டும் என்பதில் நாம் கவனத்தைச் செலுத்தினாலே போதுமானது. அப்படி இந்த வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும்.

ஜனவரி 1. 

இந்த ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளைச் சரியாகத் திட்டமிடுங்கள். தற்காலிக முதலீடுகளைப் பட்டியலிடவும், செலவினம் மற்றும் பெரிய கொள்முதல் திட்டங்களைச் சரியாக மதிப்பிடவும். 2. அனைத்து காப்புறுதித் திட்டங்களுக்கான பிரீமியம் பணம் செலுத்தும் தேதிகளுக்கான நினைவூட்டல் அமைக்கவும். 3. மேலும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான நாளை தெரிந்தெடுத்து பயன்பாட்டுப் பில்கள், கடன் அட்டைச் சீட்டுக்கள் போன்றவற்றைச் செலுத்த நினைவூட்டல் அமைக்கவும். 4. நீங்கள் முதலீடு செய்ததற்கான ஆதாரத்தைத் தங்களுடைய பணி நிறுவன தலைமைக்குச் சமர்ப்பிக்கவும்.
பிப்ரவரி 1

. நாட்டின் வரைவு திட்ட அறிவிப்பு. வரிவிதிப்பு விதிகள் மாற்றங்கள் பற்றிய குறிப்பு எடுத்து அது உங்கள் முதலீடுகளை எப்படிப் பாதிக்கும் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளவும் 2. இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் தங்களின் அனைத்து ஈட்டு ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ளவும். ஏனென்றால் வரிச் சமர்ப்பித்தபின் விடுப்பு பயண ஊதியம்(எல்டிஏ) போன்றவற்றைப் பெற இயலாது.
மார்ச் 1. 

2016 - 2017 ம் ஆண்டுக்கான நான்காவது மற்றும் இறுதி முன்கூடியே வரித் தவணை செலுத்த கடைசி நாள் 15 மார்ச். 2. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அடுத்த மாதம் நீங்கள் ஆண்டுப் பள்ளி கட்டணம் செலுத்துவதற்குப் போதுமான நிதி உங்கள் வங்கி கணக்கில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். 3. பீதியடையாமல், உங்களுடைய நிதி இலக்குகளுக்கு அப்பாற்பட்ட, கடைசி நிமிடத்தில் வரிச் சேமிப்பு முதலீடு செய்யவேண்டாம்.
ஏப்ரல் 1.

 உங்களுடைய குறிக்கோள்களுக்குப் பொருத்தமான வரிச் சேமிப்பு முதலீடு மற்றும் அவசர மதிப்பீடு செய்ய இது சரியான நேரம். தங்களுடைய வங்கி கணக்கில் ஒரு இசிஎஸ் தரவினை ஏற்படுத்திக்கொள்ளவும். அது சம்பளம் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டவுடன் ஒரு தொகை நேரடியாகத் தங்களின் முதலீட்டுக்குச் சென்று விடும். 2. நீங்கள் ஒரு மே-ஜூன் விடுமுறைக்குச் செல்ல போகிறீர்கள் என்றால், விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி புக் செய்வதற்கு அது சிறந்த ஒப்பந்தங்கள் பெற இது சரியான நேரம். 3. 28ம் தேதி அக்ஷய் திரிதி, தங்களுடைய "தங்கம் இருப்பு" 10 சதவீததற்கும் குறைவாக இருந்தால், தங்கம் வாங்க தயாராக இருக்கவும்.
மே 1. 

நீங்கள் ஒரு பதவி உயர்வு அல்லது போனஸ் பெற்றீர்கள் என்றால், ஒரு விலையுயர்ந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது அதை முதலீடு செய்யாவதற்கோ பயன்படுத்தலாம். மேலும் உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கச் சிறு தொகை ஒதுக்கி வைப்பது நலம்! 2. உங்கள் கடன் மதிப்பீட்டைப் பாருங்கள். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், பில்கள், EMIS மற்றும் கடன் அட்டை கட்டணம் செலுத்தி கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 1. 

முன்கூட்டிய வரி முதல் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15. 2. ஒரு தேதியை நிர்ணயம் செய்து உங்களுடைய பேப்பர் வேலைகளை முடிப்பதற்கான திட்டமிடவும். அதாவது மோட்டார், உடல் நலம், வீட்டிற்கான காப்பீட்டுத் திட்டங்கள், உங்கள் வரவு செலவு திட்டத்தின் மறு ஆய்வு, பில்கள் மற்றும் ரசீதுகள் நிரப்புதல், உயில் அல்லது தங்களின் முதலீட்டுப் திட்டங்களை மறு ஆய்வு செய்தல் முதலியன. 3. உங்கள் ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் கேபிள் திட்டம் போன்றவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தெரிந்தெடுப்பது அல்லது திட்டங்களை மாற்றியமைப்பது.
ஜூலை 1. 

2016-17 ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய 31 ஆம் தேதி கடைசித் தேதியாகும். கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இணையத் தாக்கல் செய்யவும். தாக்கல் செய்யும் முன் ஒரு வாரம் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது. 
ஆகஸ்ட் 1. 

15ம் தேதி சுதந்திர தினம், மனதை ரிலாக்ஸ் செய்ய நீண்ட வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளவும். 2. 2016-2017 ஆண்டுப் பிரிவு 80ஜி வரி விலக்கு பெறுவதற்காக ஒரு நன்கொடை அளிப்பதற்குத் திட்டமிடவும்.
செப்டம்பர் 1. 

முன்கூடிய வரி இரண்டாம் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15. 2. இந்த மாத இறுதியில் பண்டிகைக் காலம் துவங்குகிறது. செப்டம்பர் 21-29 நவராத்திரி மற்றும் செப்டம்பர் இருந்து 25-30 துர்கா பூஜைக்கான காலங்கள். நீங்கள் வாங்க வேண்டிய மற்றும் செலவழிக்கவேண்டிய பொருட்களுக்கான பட்டியல் மற்றும் பட்ஜெட் தயார் செய்யவும் மேலும் இதற்கான செலவு வரவு செலவு திட்டத்தை மீறிச் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வது நல்லது.
அக்டோபர் 1. 

நீங்கள் உங்களுடைய வீட்டை வண்ணம் தீட்ட அல்லது சீராக்கவேண்டும் திட்டமிட்டால், இப்போது பண்டிகை தள்ளுபடிகள் முழு மூச்சில் இருப்பதால் இது ஒரு நல்ல நேரம். மேலும் விற்பனை காலத் தள்ளுபடியை உபயோகப்படுத்திக் கொள்ள உடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவது நலம். 2. பண்டிகைக் காலத்தை நன்றாக அனுபவிக்கவும், ஆனால் அதிகமாகச் செலவிடும் முயற்சி கூடாது. தாந்திராஸ் (17 அக்டோபர்) அல்லது தீபாவளி (19 அக்டோபர்) போன்ற பண்டிகைகளை ஒட்டிப் பொழுதுபோக்கு டிக்கட்டுகளை வாங்கவும். ஆனால் இது உங்களுடைய பட்ஜெட்டுக்கு உள்ளே இருக்குமாறு பார்த்து கொள்ளவும். . 3. நீங்கள், டிசம்பர் மாதம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இப்போது உங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி யை புக் செய்யவும். 
நவம்பர் 1. 

இந்த மாதம் முடிந்தவரைக் குறைவாகச் செலவழித்து உங்களை மற்றும் உங்கள் பணத்திற்கு ஓய்வு கொடுக்கவும். நீங்கள் கடன் கொடுப்பதற்கும் ஒரு நல்ல ஓய்வு எடுப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

டிசம்பர் 1. 

முன்கூடியே வருமான வரி செலுத்தும் மூன்றாவது தவணைக்கான தேதி 15. 2. உங்கள் நிதி மேலாண்மையை வருடாந்திர ஆய்வு நடத்தவும் மற்றும் உங்கள் இலக்குகளைச் சாதித்து விட்டீர்களா அல்லது பட்ஜெட்டுக்கு மிகையாகச் சென்றதா ? என்பதனை சரிபார்க்கவும். 3. இறுதியாக, அது ஒரு குளிர்கால இடைவேளைக்கான நேரம் இது. உங்கள் விடுமுறையை அனுபவிக்கவும்!

Written by: Prasanna VK

நன்றி : ஒன்இந்தியா» தமிழ் » செய்திகள் » 06.01.2017

தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?


தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?

கோரிய தகவல்கள், எவ்வாறு சட்டப்பிரிவு 2(F)-ன் கீழ் அமையாது? என்பதற்கு மேல் முறையீட்டு அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 46411 / விசாரணை / டி / 2014, 27.05.2015
http://www.rtigovindaraj.com/…/4627-2f-tnsic-46411-2014-270…

No automatic alt text available.



Image may contain: text



No automatic alt text available.

Thanks to Mr A Govindaraj Tirupur

நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால்


நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால் 

தன் சார்பு தகவல்களைக் குறைக்கலாம்

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். 
மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும்.

எனவே, இந்தச் சூழ்நிலையில், நாம் நம்மைப் பற்றிய டேட்டாவினை, எப்படி கூகுள் நிறுவனத்திற்குக் குறைவாகக் கொடுக்கலாம் என்று பார்ப்போம். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 

கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் ”கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயில்

நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.
தொடர்புகள் (Contacts)

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்

இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.
கூகுள் ட்ரைவ்

ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. 
நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலவும் இடம் (Location)

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 
கூகுள் ப்ளே

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. 
ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யு ட்யூப்

யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. 

ஆனால், இதற்கு நாம் முயற்சி எடுத்து, செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். 

ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.01.2017

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.


எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.

வக்கீல் ஒருவர் ரயிலில்  சென்று கொண்டு இருந்தார்...
அப்போ அழகான பொண்ணு ஒருவர் அவருக்கு முன்னாடி இருந்த சீட்டில் வந்து உட்கார்ந்தார்..

நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லை என்பதால் லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் விட்டார். அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பார்க்க, இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்படியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்.

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட்டின் பக்கம் வந்து அமர,  நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஆயிருச்சி .

அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு,

இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சிடுச்சாம்.

நம்மாளுதான் புத்திசாலி வக்கீல் ஆச்சே. யோசிச்சாரு.

பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு அந்த பெண்ணிடம் எழுதி காட்டினார்.

அந்த பெண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாளோ, அதை அப்படியே எழுதி காட்டினாளாம்.

அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!!
(கொய்யால, யாருகிட்ட! )

" PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

Thanks to Mr. ADP Dhandapani வழக்கறிஞர்

மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி


மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி

6 -2- 2017 முதல்*  *28-2-2017*  வரை 

*9 மாதம் முதல்* *15 வயது* வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் 

*மீசல்ஸ் - ருபெல்லா* *( Measles Rubella)* தடுப்பூசி போடப்படஉள்ளது.

*தட்டம்மை *

வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கப்படு்கிறது.. 
பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும், குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது. 

இது  பாரோமைக்சோ வைரஸால் உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். 

நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச் சளியின் மூலமாக இது மற்றவருக்கு பரவுகிறது.

*ரூபல்லா*

இது ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது.இது காற்றில் பரவும் தன்மை கொண்ட தொற்று நோய்க் கிருமி ஆகும். 

நோய்த் தொற்றுள்ள குழந்தை பிற குழந்தைகளோடு நெருங்கி விளையாடும்போது, சுலபமாக அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும்.

தகவல் உதவி : வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards

குறிப்பு : பள்ளிகளிலேயே போடுவதற்கு ஏ்ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில் தங்கள் பகுதிக்குட்பட்ட “ஆரம்ப சுகாதார நிலையத்தை” அணுகுங்கள்.

ஒரு பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற


ஒரு பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற 

மாணவர்களிடம் தனியார், உதவி பெறும் பள்ளிகள்  பகல் கொள்ளை!

காஞ்சிபுரம்: பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 2 மாணவர்களிடம், பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழுக்காக, 300 ரூபாய் வசூலிக்கின்றன.
ஆனால், இந்த சான்றிதழ்கள் பெற, ஒரு பள்ளி சார்பில், மாவட்ட கல்வி அலுவலகத்தில், 300 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர்  எதிர்பார்க்கின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும் பொதுத் தேர்வுகள் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கான பணிகள், கல்வி அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் நடைபெறுகிறது.

தேர்வுகளை முன்வைத்து, மாவட்டத்தின் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. 

குறிப்பாக, மதிப்பெண் சான்றிதழ் பெற, ஒவ்வொரு மாணவர்களிடமும், தலா, 300 ரூபாய் வசூலித்து, மொத்தமே, 300 ரூபாயை மட்டும், பள்ளி சார்பில் செலுத்துகிறது.

பொது தேர்வு

மாவட்டத்தில், 28 அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள், 152 தனியார் உயர் நிலைப்பள்ளிகள், 32 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 191 தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும், 10ம்வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத்தேர்வு முடிந்த பின், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க, ஒவ்வொரு பள்ளியும், (மொத்தம்) 300 ரூபாயை (மட்டுமே) மாவட்ட கல்வி அலுவலகத்தில் கட்டணமாக செலுத்த வேண்டும். 

இந்த 300 ரூபாயை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் வசூலித்து கட்ட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சில பள்ளிகள், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என, மிகச் சிறிய தொகையை, பள்ளி மாணவர்களிடம் வசூலிப்பதை தவிர்த்து, ஒவ்வொரு மாணவர்களிடமும், 300 ரூபாயை வசூலித்து வருகின்றன.

பெற்றோர் குமுறல்

ஒவ்வொரு பள்ளியிலும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும், மதிப்பெண் சான்றிதழ் கட்டண மாக, தலா, 300 ரூபாயை, பள்ளி நிர்வாகம் முறைகேடாக வசூலிப்பதன் மூலம் பல லட்சம் ரூபாயை சம்பாதிக்கின்றன.
இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பிள்ளைகளை தனிமைப்படுத்தி, அவர்களை பள்ளி நிர்வாகம் பழிவாங்க நேரிடும் என்பதால், பெற்றோர் அமைதி காக்கின்றனர்.

பல கட்டணம் வசூலிப்பு

மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு, அரசு பள்ளிகளும், 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிதியிலிருந்தே அந்த கட்டணத்தை எளிதாக அரசு பள்ளி நிர்வாகம் செலுத்தி விடுகிறது.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் வசூல் வேட்டை குறித்து விசாரணை நடத்த, தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

ஏற்கனவே, பல்வேறு கட்டணங்கள் விதித்து, வசூலிக்கும் தனியார் பள்ளிகள், இப்போது, தேர்வு விஷயங்களிலும் முறைகேடான வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 09.01.2017

மனித உடல் - பயோடேட்டா


மனித உடல் - பயோடேட்டா


மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்!

நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

 மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.

மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.

மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.

மனித மூளையின் எடை 1.4 கிலோ.

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 KF.

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்

உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.,

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர்.

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் ரத்தத்தினால் ஆனது.

இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது.

 நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

⧭ நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

⧭ நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

⧭ உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

⧭ வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

⧭ நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது.

⧭ மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

⧭ மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

 ⧭ மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன்.

⧭ ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

⧭ மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

⧭ ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.

⧭ நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம்.

அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.01.2017

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு.கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர்.

ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

டெபிட் கார்டு - பற்று அட்டை:
'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன?

நீங்கள் எங்கே போனாலும், உங்கள் நண்பர் ஒருவர் கூடவே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம், உங்கள் சேமிப்பை கொடுத்து வைத்திருக்கிறீர்கள். கடைக்கு போனதும் சில பொருட்களை வாங்குகிறீர்கள். பின், அந்த நண்பரிடம் அதற்கான தொகையை சொல்கிறீர்கள்; உடனே, அந்த நண்பர் அத்தொகையை, கடைக்காரரிடம் கொடுத்து விடுவார்.

இங்கு, நண்பருக்கு பதிலாக, வங்கி செயல்படுகிறது; அவ்வளவு தான். நண்பரை போல், வங்கி உங்களுடன் கூடவே வர முடியாது; எனவே, தன் சார்பாக, 'டெபிட்' அட்டையை உங்களுக்கு தருகிறது, வங்கி. 

கடையில், பொருட்கள் வாங்கியவுடன், 'டெபிட்' அட்டையை, கடைக்காரரிடம் இருக்கும், சிறு கருவியில், 'ஸ்வைப்' செய்தால் போதும்; 

அதிலுள்ள காந்தப் பெட்டியில் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் பதிவாகி, உங்கள் கணக்கிலிருந்து, அத்தொகை கழிக்கப்பட்டு, கடைக்காரரின் கணக்குக்கு, வங்கியால் மாற்றப்பட்டு விடும். 'டெபிட்' அட்டையை, 'செக்கிங்' அட்டை என்றும் கூறுவதுண்டு.

கிரெடிட் கார்டு - கடன் அட்டை:

கிரெடிட் கார்டு - கடன் அட்டை என்றால் என்ன?

உங்களுடன் வரும் நண்பரிடம் உங்கள் சேமிப்பான, 2,500 ரூபாயை கொடுத்து வைத்துள்ளீர்கள். கடையில், நீங்கள் மொத்தம், 3,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளதாக, கடைக்காரர் தெரிவிக்கிறார். இதை, நண்பரிடம் கூறுகிறீர்கள். அவர், நீங்கள் கொடுத்த, 2,500 ரூபாயுடன், தன் பணமான, 1,000 ரூபாயை சேர்த்து கடைக்காரருக்கு கொடுக்கிறார். அவர், அதை சும்மா கொடுத்து விடவில்லை. அந்த, 1,000 ரூபாயை, நீங்கள் அந்த நண்பருக்கு, மாதக் கடைசிக்குள் கொடுத்து விட வேண்டும். இந்த நண்பரை, வங்கி அளிக்கும், கடன் அட்டையுடன் ஒப்பிடலாம்.

இப்படி செய்வதால், வங்கிக்கு நஷ்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்; இல்லை என்பது தான் பதில். ஏனென்றால், கடன் அட்டை மூலம் பொருட்களை வழங்கும் கடைக்காரர்கள், மாத கடைசியில் தான், இந்த பரிவர்த்தனை விவரங்களை, வங்கிக்கு அளித்து, அப்பணத்தை பெற்றுக் கொள்வர். 

மாத கடைசிக்குள், நீங்கள், உங்கள் வங்கி கணக்கில் உரிய பணத்தை செலுத்தவில்லை என்றால் கூட, வங்கி, கடைக்காரருக்கு உரிய முழு தொகையை செலுத்தி விடும்; ஆனால், உங்களிடம் அதிகப்படி தொகையை, கொழுத்த வட்டியுடன், திரும்ப வசூலித்து விடும்.

டெபிட் அல்லது கிரெடிட் - 

எந்த அட்டையை நீங்கள் பெற வேண்டுமென்றாலும், உங்களுக்கு, வங்கி கணக்கு இருக்க வேண்டும். பொதுவாக, டெபிட் அட்டையை, வங்கி, எளிதில் வழங்கி விடும். ஆன்லைனில் கூட, 'டெபிட்' அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், கடன் அட்டையை, அவ்வளவு சுலபத்தில் தந்து விடாது. அதற்கு, சிறிது காலமாவது, வங்கியில், நீங்கள், உங்கள் கணக்கை எந்த சிக்கலுமின்றி இயக்கியிருக்க வேண்டும். அதில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை, நீங்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள், அந்த வங்கியில், ஏதாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இதிலெல்லாம் அந்த வங்கி திருப்தியானால் மட்டுமே, உங்களுக்கு கடன் அட்டை வழங்கும்.

நீங்கள் விண்ணப்பித்த சிறிது நாட்களில், உங்களுக்கு, 'டெபிட்' அட்டை அல்லது கடன் அட்டை வந்து சேர்ந்தவுடன், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். 

வங்கியில், உங்களுக்கு ரகசிய எண்ணை கொடுப்பர். இந்த ரகசிய எண்ணை, நீங்கள் குறிப்பிட்டால் தான், அட்டை பயன்பாட்டை துவக்க முடியும். 

வங்கி அளித்த ரகசிய எண்ணை தான், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்களாகவே, நான்கு இலக்கு கொண்ட ரகசிய எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடன் அட்டையை பயன்படுத்துவதில் பல ஆதாயங்கள் உண்டு. உங்கள் கணக்கில், இப்போதைக்கு தொகை இல்லையென்றால் கூட நீங்கள், கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்க முடியும். 

தவிர, கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்தும் போது, உங்களுக்கு பாயின்ட்கள் வழங்குவர். இதைக் கொண்டு, நீங்கள், சில கடைகளில், பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

சில வகை கடன் அட்டைகளை பயன்படுத்தும் போது, விற்பனை தொகையில், ஒன்றிலிருந்து, ஐந்து சதவீதம் வரை தள்ளுபடியும் அளிப்பதுண்டு.

கடன் அட்டையை பயன்படுத்தும் போது, சில விமான சர்வீஸ்கள், தங்கள் கட்டணத்தில், சலுகை கொடுக்கும். வங்கிகள் வழங்கிய கடன் அட்டை என்றாலும், இவற்றில் மாஸ்டர் கார்டு, விசா கார்டு என்றெல்லாம் போட்டிருப்பர். இந்த அமைப்புகளுக்கும், விமான சர்வீஸ் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் இது!

எனினும், நீங்கள் கீழ்காணும் குணம் கொண்டவராக இருந்தால், கடன் அட்டையை தவிர்ப்பது நல்லது. 

உங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள், சரியான தொகையை உங்கள் கணக்கில் செலுத்த முடியவில்லை என்றால், எக்கச்சக்கமான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள், இயல்பாகவே வரவுக்கு மீறி செலவு செய்பவர் என்றால், 'டெபிட்' அட்டை தான் உங்களுக்கு லாயக்கு!'

உங்கள், 'டெபிட்' அட்டை தொலைந்து விட்டால், அதிகபட்சம், உங்கள் கணக்கிலுள்ள தொகை தான், களவு போகும்; ஆனால், கடன் அட்டை தொலைந்து விட்டால், நீங்கள், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கா விட்டால், ஏமாற்றப்படும் தொகை, மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ தொலைந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, அதை பெற்றதற்கான, 'அக்னாலட்ஜ்மென்ட்' வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தில், தொலைந்து போன விவரத்தை பதிவு செய்து, எப்.ஐ.ஆர்., பெற்றுக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வங்கியில் கணக்கே இல்லையென்று வைத்துக் கொள்வோம். 

அதேசமயம், கையில் தொகையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் பிடிக்கவில்லை. அதுவும், வெளியூர் செல்லும் போது, உங்களுக்கு, 'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ அதிகம் பயன்படும். என்ன செய்யலாம்?

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அத்தொகைக்கான, 'டெபிட்' அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வங்கியில், உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. 
பின், வழக்கமான, 'டெபிட்' அட்டை போலவே, அதை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு முக்கிய விஷயம். இந்த ப்ரீபெய்டு டெபிட் அட்டை தொலைந்து விட்டால், வங்கி உங்களுக்கு உதவிக்கு வராது. 

இந்நிலை மாற வேண்டும் என்றும், 'பிற வழக்கமான டெபிட் அட்டைதாரர்களுக்கு உள்ள பாதுகாப்புகளை இவர்களுக்கும் வங்கி தர வேண்டும்...' என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

ஆனால், அது, அக், 1, 2017 - லிருந்து தான் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இவை மட்டுமல்ல, ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்த, வேறு பல, 'ஆயுதங்களும்' உள்ளன.


- ஜி.எஸ்.சுப்ரமணியன்

நன்றி : தினமலர் (வாரமலர்) - 08.01.2017

அட்ரினல்… அற்புத சுரப்பி!

Image may contain: text

அட்ரினல்… அற்புத சுரப்பி!


மிகவும் சிக்கலான தருணம்… இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, கையில் வியர்க்கிறது. தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா என்று கண்கள் அங்கும் இங்கும் பார்க்கின்றன. அந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க அல்லது பிரச்னையை எதிர்கொள்ள உடலும் மனதும் தயாராகின்றன.
இந்த அத்தனை செயல்பாடுகளும் மிகச் சில விநாடிகளில் நடந்துமுடிகின்றன. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அமைதியாக, வேறு மனநிலையில் இருந்த உடலும் மனமும் எப்படி திடீரென்று தன்னை மாற்றிக்கொண்டன என்று யோசித்தது உண்டா?

இந்த அத்தனைக்கும் அட்ரினல் சுரப்பியில் இருந்து வரும் ஹார்மோன்தான் காரணம். ஆபத்தில் உதவும் நண்பனாக இருக்கும் இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாகச் செயல்படும்போது உடலில் சில பாதிப்புகளையும் உருவாக்கிவிடுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேல் ஒரு தொப்பி போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளன அட்ரினல் சுரப்பிகள். `அட்ரினல்’ என்ற வார்த்தைக்கு, `சிறுநீரகத்துக்கு அருகில்…’ என்று பொருள். இக்கட்டான சூழலின்போது, மைய நரம்பு மண்டல நியூரான்கள் அட்ரினலைத் தூண்டுகின்றன. உடனே, அட்ரினலின் சுரந்து மிக வேகமாக ரத்தம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து, உடல் உறுப்புகளை, பிரச்னையை எதிர்கொள்ளத் தயார் செய்கிறது.

உடன் மூச்சுக்குழாய் விரிவடைந்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கச் செய்கிறது. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, தசைகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்கிறது. இதனால்தான், நம்முடைய இதயம் அதிவேகமாக துடிக்கிறது, சுவாசம் பலமாகிறது. இந்த நேரத்தில், உடலில் உள்ள வலிகூட நமக்குப் பெரியதாகத் தெரியாது.

இதனால்தான், காயம் ஏற்பட்டாலும்கூட தப்பி ஓடும் அவசரத்தில் வலி நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய வலிமை அதிகரித்திருப்பதையும் யாரையும் எதையும் எதிர்கொள்ளும் திறன் வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம். தப்பிப் பிழைத்து ஓடிவந்தாலும் சரி, இந்த அட்ரினலின் விளைவு சில மணி நேரங்களுக்குத் தொடரும்.

தவிர, உடலில் தாதுஉப்புக்கள் அளவை கட்டுக்குள்வைக்க, உடலில் நீர் அளவைக் கட்டுக்குள்வைக்க ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல் மட்டும் இல்லை என்றால், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்களை கட்டுப்பாடு இன்றி சிறுநீரகம் வெளியேற்றி, ரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். தண்ணீர் அளவு குறைவதால், டீஹைட்ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலும், ஆன்ரோஜன்  (androgen) என்கிற பாலியல் ஹார்மோனையும் சிறிதளவு சுரக்கிறது.

 அட்ரினல் சுரப்பு குறைந்தால்…
அடிசன்ஸ் நோய்

அட்ரினல் சுரப்பில் ஏற்படும் `கார்ட்டிசோல்’ (Cortisol) என்ற ஹார்மோன் குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், காசநோய்த் தொற்றுகளாலும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. இந்த நோய் ஒரு லட்சம் பேரில் ஒருவரைப் பாதிக்கிறது. ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம்.
பாதிப்புகள்: இந்த ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மிகவும் குறையும்.  உடல் எடை குறைதல், எலும்பு மெலிதல் போன்ற பிரச்னைகள் வரும். வாய் மற்றும் தோல் பகுதிகள் கறுப்பு நிறத்துக்கு மாறும்.

தீர்வு: மாத்திரைகள், ஊசிகள் மூலமாக இதனைக் குணப்படுத்த முடியும்.

அட்ரினல் சுரப்பு அதிகரித்தால்…
குஷிங் சிண்ட்ரோம் (Cushing syndrome)

அட்ரினல், அட்ரினலைக் கட்டுப்படுத்தும் பிட்யூட்டரி ஆகிய சுரப்பிகளில் கட்டி இருப்பதன் காரணமாக, அதிக அளவில் `கார்ட்டிசோல்’ (Cortisol) ஹார்மோன்கள் சுரந்தால், குஷிங் சிண்ட்ரோம் ஏற்படும்.
பாதிப்புகள்: ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடல்பருமனாகும்; தோல் வெளிறிப்போகும்; எலும்பு முறிவு ஏற்படக்கூடும்.

தீர்வு: ரத்தப் பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் மூலம், அட்ரினல், நுரையீரல், பிட்யூட்டரி ஆகிய இடங்களில் கட்டி எங்கு உள்ளது என்பதைக் கண்ட றிந்து, அந்தக் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

பியோகுரோமோசைட்டோமா (Pheochromocytoma) 

அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டியால், `அட்ரினலின்’ மற்றும் `நார்அட்ரினலின்’ ஆகியவை அதிகமாக உற்பத்திசெய்யப்படும். அப்போது, `பியோகுரோமோசைட் டோமா’ எனப்படும் நோய் ஏற்படுகிறது.
பாதிப்புகள்: ரத்த அழுத்தம் அதிகமாதல், பயம், படபடப்பு, வியர்த்துக் கொட்டுதல், தலைவலி போன்றவை ஏற்படும்.

தீர்வு: இதற்கு, ஹார்மோன் பரிசோத னை செய்த பின், அந்தக் கட்டிகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றலாம்.

கான்ஸ் சிண்ட்ரோம் (Conn’s syndrome)

அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் இருந்தால், ‘அல்டோஸ்டீரோன்’ (Aldosterone) என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், ‘கான்ஸ் சிண்ட்ரோம்’ என்ற நோய் உண்டாகலாம். இது, `பிரைமரி ஆல்டோஸ்டீரோனிசம்’ (Primary Aldosteronism) என்றும் அழைக்கப்படுகிறது.
பாதிப்புகள்: அல்டோஸ்டீரோன், உடலில் பொட்டாசியம் அளவு சீராக இருக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அல்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தாலோ, சுரக்காமல் போனாலோ, பொட்டாசியம் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

தீர்வு: அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும்.

அட்ரினல் சுரப்பில் என்சைம் குறைபாடு ஏற்பட்டால்…

பெண்கள், குழந்தைகளுக்கு இந்தச் சுரப்பிகளில் சுரக்கும் `17 – ஹைட்ராக்ஸி புரோஜெஸ்டிரோன்’ (17-Hydroxyprogesterone) என்ற என்சைமின் குறைபாட்டால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பாதிப்புகள்: பிறந்த குழந்தைகளுக்கு சில நாட்களில் `உப்புபோக்கல்’ (Salt waste) என்ற நோய் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பால், போதுமான அளவைவிட உப்பின் அளவு குறைந்துபோவதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தீவிரமான மருத்துவப் பிரச்னை, இது.

தீர்வு: வளர வளர இந்த நோயின் தாக்கம் குறையும். இருந்தாலும், பருவமடைந்த பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர்தல், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகளை மருந்து, மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பாதிப்பை கண்டறிய முடியும்!

அட்ரினல் சுரப்பியைப் பொறுத்தவரை, பிட்யூட்டரி சுரப்பிதான் அதைக் கட்டுப்படுத்தும். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்கூட, அட்ரினல் சுரப்பியில் பிரச்னை வரலாம். அட்ரினல் சுரப்பி சீராகச் செயல்படுவதை அறிய, சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தால், மருத்துவர் பரிந்துரையின்படி ஹார்மோன் டெஸ்ட் செய்துகொண்டு, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 அட்ரினல் சுரப்பதால், ஏற்படும் நன்மைகள்…

அட்ரினல் சுரப்பின்போது, வெளியாகும் ஹார்மோன்களால் உடலின்  வேதிமாற்றம் துரிதப்படுகிறது.
நெருக்கடியான சமயங்களில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து, ரத்தத்தோடு கலந்து உடலுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தம் போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.

உடலில் உள்ள தாதுப்பொருட்களைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

புரதம், கொழுப்புச்சத்து, மாவுச்சத்து போன்றவற்றைச் செரிக்கச்செய்து, உடலின் வளர்சிதை மாற்றத்துக்குத் துணைபுரிகின்றன. மாவுச்சத்துக்களை குளூக்கோஸாக மாற்றவும் அவற்றைக் கல்லீரலில் சேமித்துவைக்கவும் உதவுகின்றன.

நன்றி : டாக்டர் விகடன் - 16.12.2016


அனைவருக்கும் பான்கார்டு

Image may contain: text

அனைவருக்கும் பான்கார்டு 

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

No automatic alt text available.

வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ  வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும். 

ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என  டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்.

நன்றி : விகடன் செய்திகள் - 10.10.2017

ஐ.டி.ஊழியர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க...

Image may contain: text

ஐ.டி.ஊழியர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க...

அவனுக்கென்னப்பா ஐடி ப்ரொஃபெஷனல்... ராஜா மாதிரி வாழ்க்கை அப்படினு பொதுவா பேசுறத கேட்டிருப்போம். ஆனா அங்க வேலபாக்குறவங்களுக்குத்தான் தெரியும் அதனோட கஷ்டம் என்னனு.

சரி மேல படிச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க. ஐடி அல்லது தகவல் தொழில்நுட்பத் தொழில் துறை ஒரு வீரியமான வளர்ச்சியையும் தொடர்ந்த முன்னேற்றங்களையும் கண்டுவரும் துறை என்பதால் இத்துறை வல்லுனர்களும் பணியாளர்களும் தங்களை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

இதன் மூலம் தங்கள் திறமைகள் முன்னேற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். இந்தத் துறையில் உங்களுக்கு நீடித்த வேலையை உறுதிசெய்யும் ஐந்து முக்கிய குறிப்புகள் இதோ.

1. அப்-டு-டேட்-ஆ இருங்க! (அண்மை நிகழ்வுகளை அறிந்திருங்க)

உங்களை தினசரி நடக்கும் நிகழும் மாறுதல்களும் புதுமைகளும் தரும் அனுபவங்களைப் போல் வேறு எதுவும் இந்த ஐடி துறையில் நீடித்திருக்க உதவாது என வொர்க் பெட்டெர் ட்ரெயினிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்வப்னில் காமத் கூறுகிறார்.
2. சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள் 

"சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வதும் நிகழும் மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதும் கூட ஐடி பணியாளர்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்தத் துறை வேலைவாய்ப்பு வளர்ச்சியில் தேக்கம் என்பது மிக எளிதாகவும் விரைவாகவும் நிகழக் கூடியது" என்கிறார் மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் மனிதவள மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் பங்கஜ் கன்னா.
3. உங்களை நீங்களே தயார்படுத்துங்கள் 

தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்வது தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி முறையாக கருதப்படுகிறது. "நல்ல நிறுவனங்கள் உங்களுக்கு நல்ல பயிற்று தளங்களை அமைத்துத் தருவதுடன் இவற்றில் மின்னனு பயிற்சிகளும் (இ மாடியுல்ஸ்), பயிற்றுனர்-கற்பவர் வகைப் பயிற்சிகளும் (பட்டி-மென்டர்), உள்துறை திறன் குழுக்களும், வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய பயிற்சி முகாம்கள் மற்றும் கலந்துரையாடல்கள் (ஒர்க்ஷாப்ஸ் அண்ட் செஷன்ஸ்) போன்ற நடவடிக்கைகள் மூலமும் பணியாளர்களை ஊக்குவிக்கின்றன.
4. நல்ல நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்

நல்ல தொழிற்கூடங்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு நல்ல நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்" என அவர் குறிப்பிடுகிறார்.
5. புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் 

தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது மட்டும் போதாது. "நீங்கள் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தவராகவும், அதில் உங்களுக்கே உரிய பிடித்தமான பிரிவுகளை தேர்வு செய்து அதை உங்களின் கனவாகக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளவும் திறன்களை மேம்படுத்தவும் முயலுங்கள்" என்கிறார் சர்கார்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் » 06.01.2017

RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு


RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு

மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
1) பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு் பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை அனுப்ப வேண்டும்.
அந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மூன்றாம் நபர் பொதுத்தகவல் அலுவலரிடம், “ஏன் அந்த தகவலை வழங்கக்கூடாது?” என்பதற்கான ஆட்சேபணையை விளக்க வேண்டும்.
அந்த மூன்றாம் நபர் விளக்கியுள்ள ஆட்சேபணையைப் பொதுத்தகவல் அலுவலர் கருத்தில் கொண்டு, அந்த ஆட்சேபணைகள் ஏற்கக்கூடியவையா, இல்லையா என்று பரிசீலணை செய்து, ஏற்கக்கூடியது என்றால், அந்தத் தகவலை வழங்க மறுத்துவிடலாம். ஏற்கக்கூடியது அல்ல என்றால், அந்தத் தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கலாம்.
2) பொதுத்தகவல் அலுவலர் தான் எடுத்த முடிவினை (பிரிவு 6ன் கீழ் மனு பெறப்பட்ட 40 நாட்களுக்குள்) சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
3) பொதுத்தகவல் அலுவலர் எடுத்த முடிவினை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு.
குறிப்பு:
சட்டப்பிரிவு 11 (மூன்றாம் நபர் தகவல்) பற்றிய மேற்கண்ட விளக்கத்தை கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து ஆணையம் வழங்கிய தீர்ப்பில் காணலாம்.
http://www.tnsic.gov.in/judgements/new/pdfs/34307_2014_11062015_G%20Alex%20Benziger.pdf

TNPSC - 11பேர்- பதவி நீக்கம் செல்லும்

TNPSC - 11பேர்- பதவி நீக்கம் செல்லும்

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் கடந்த ஜனவரி 30-ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனம் அவசர கதியில் தகுதி யில்லாதவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது என்று கூறி, திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்ரமணியன், புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் நியமனம் செல்லாது என்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கே விடப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘மாநில அரசு முடிவு செய்யலாம். அதேசமயம், அந்தப் பதவியின் நிலையை கருத்தில் கொண்டு,
அப்பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர் களைத் தேர்வு செய்பவர்கள் அப் பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக் கையைப் பெற்றவர்களாக இருப்ப தும் அவசியம்’ என்று தெரிவித் தனர்.

உறுப்பினர்கள் 11 பேரை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், புதிய உறுப்பினர்களைச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக அரசு தேர்வு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்ட னர்.

அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இருப்பதும் அவசியம்.
Keywords: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், 11 பேர் பதவி நீக்கம், உத்தரவிட்டது செல்லும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நன்றி : 'தி இந்து'..தமிழ் நாளிதழ் - 10.01.2017

பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!


பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!

பணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும்.
ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது.

நேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது.

பிட்காயின் சூத்ரதாரிகள்!  

மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும்,  அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார்.
இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன.  ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம்.

ஸ்பெஷல் அம்சங்கள்! 

கணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு  டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது.
இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).

எங்கேயும் எப்போதும்! 

இவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில்  அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம்.
நாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

உருவமில்லா பணம்!

கணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை  என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001)  என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர்.  ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.
பிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும்.

யாருக்கும் தெரியாது! 

சட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்?
காரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது? போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்தின் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது.

இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை  மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

ப்ளாக் செயின்! 

பிட்காயினை உருவாக்க, அதன் பரிவர்த்தனை களைப் பதிவு செய்ய, பிட்காயினைச் சேர்த்து வைக்க ஒரு ஒருங்கினைந்த மென்பொருள் உண்டு. இந்த மென்பொருளை பிட்காயின் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து வைப்பார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் ஓப்பன் லெட்ஜர் முறையில் எல்லாருக்கும் தெரியும் வகையில் கணக்கில் வைக்கப்படும்.

அதாவது, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் ஆர்வலர்களுக்கும் தெரியும் வகையில் ஓப்பன் லெட்ஜரில் பதிவு செய்யப்படும். இந்த ஓப்பன் லெட்ஜரின்  பிரதி, எல்லா பிட்காயின் ஆர்வலர்களின் கணினியிலும் இருக்கும். எனவே, யாருக்கும் தெரியாத வகையில் பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும்  நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக்  ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில்  சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

பிட்காயின் ஆர்வலர்கள், ஒவ்வொரு ப்ளாக் உருவாக்கத்திலும் ஒரு  கணக்குக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அதிநவீன கணினியைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பொருள் மற்றும் நேரத்தை செலவு செய்யவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விடை சரிதானா என்பதை எளிதில் உறுதி செய்யலாம். ஆனால், விடையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது.

எனவே, ஒரு கணக்குக்கான செய்முறையை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த ப்ளாக் செயினில் உள்ள பதிவுகளை மாற்றி, போலியான பிட்காயினை உருவாக்க முடியும். இதை செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு செலவு செய்தாலும் அதற்கு இணையான போலி பிட்காயினை உருவாக்கக்கூடிய அளவுக்கு  அந்த ப்ளாக்கில் பிட்காயின் இருக்காது. எனவே, போலி பிட்காயினை உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

பிட்காயினின் எதிர்காலம்!

இதுவரை எந்த நாடும் பிட்காயினை ஒரு பணமாக ஏற்கவில்லை. இதனை ஒரு பொருள் என்று கூறி, இதன் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் லாபம், வருவாய்க்கு வரி வசூலிக்க சில நாடுகள் முனைந்துள்ளன. தாய்லாந்து,  பிட்காயினை சட்டவிரோதப் பணம் என்று அறிவித்துள்ளது. பிட்காயினை ஏற்காத சீனாவில் பிட்காயினின் வளர்ச்சி வேகமாக உள்ளது. பிட்காயின் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் முன்னணியில் சீனா உள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பிட்காயினை சட்டரீதியாக ஒரு பணம் என்று ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பிட்காயின் பரிவர்த்தனையில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தாமாகவே முன்வந்து தனது பிட்காயின் கணக்கின் அடையாள முகவரியைக் கொடுக்கலாம்.

தவிர, பிட்காயின் மென்பொருள் என்பது ஒரு பொதுப் பொருள். எனவே, இதில் உள்ள தகவல்களை அரசு பெறவேண்டும் என்றால், அதனைப் பயன்படுத்தும் அனைவரையும் அதற்கு அனுமதிக்க வேண்டும். பிட்காயின் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இவ்வாறான அனுமதி பெறுவது  என்றுமே சாத்தியமில்லை.

எனவே, பிட்காயின் போன்ற கணினிப் பணம் ஒரு மாற்றுப் பணமாக உருவெடுக்க முடியாது, அதே நேரத்தில், பிட்காயின் பயன்பாட்டின் வளர்ச்சி, அரசுப் பணத்தில் உள்ள குறைகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குறைகளை நீக்குவது அவசியம் என்று இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  அந்த வகையில், பிட்காயின் மூலம் நாம் பெற்ற ஓப்பன் லெட்ஜர், ப்ளாக் செயின் தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்!
000000000000000000000000000000000000000000000000000000000000000
12 விதமான கணினி பணம்!

Litecoin, Peercoin, Primecoin, Namecoin, Ripple, Sexcoin, Quark, Freicoin, Mastercoin, Nxt, Auroracoin, Dogecoin என்று 12 விதமான கணினிப் பணங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிட்காயின் உருவானபின் வந்த கணினிப் பணங்கள்.

இவை பிட்காயினிலிருந்து சற்று மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. அதில் ஐந்து வகை பணங்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. புழக்கத்தில் உள்ள கணினிப் பணங்களில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிட்காயின்தான் உள்ளது.

இராம சீனுவாசன் , 
இணைப் பேராசிரியர்,
பொருளாதார அளவியல் துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம்

நன்றி : நாணயம்விகடன் – 04.12.2016