பொறியியல் கல்லூரி - நுழைவுத்தேர்வுகள்!
தேசிய அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பது பலரும் அறிந்ததே! முன்னணி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பிரத்யேகமாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குகின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்த விபரம் இதோ...
Birla Institute of Technology and Science Admission Test (B.I.T,S.A.T)
பிலானி, துபாய், கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
தகுதிகள்:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற ஒவ்வொரு பாடங்களிலும் தலா 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறை:
அப்ஜெக்டிவ் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதிகளில் 80 கேள்விகள், காம்பிரிஹென்சன் (ஆங்கில மொழித் திறன் 15- கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங்- 10 கேள்விகள்) மற்றும் கணிதத்தில் 45 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6
விபரங்களுக்கு: www.bitsadmission.com
V.I.T. Engineering College Entrance Exam (V.I.T.C.E.E)
சென்னை, வேலூர், போபால் மற்றும் அமராவதி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத்தேர்வு.
தகுதிகள்:
பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறை:
மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் 40 கேள்விகள் வீதம் மொத்தம் 125 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28
விபரங்களுக்கு: www.vit.ac.in
S.R.M. Joint entrance examination (S.R.M.J.E.E)
இந்த தேர்வு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்:
இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று பிளஸ் 2வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
அப்ஜெக்டிவ் அடிப்படையில், ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 315 மதிப்பெண்களுக்கு 155 கேள்விகள், மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2017
விபரங்களுக்கு: www.srmuniv.ac.in
Manipal university online entrance test (M.U.O.E.T)
மனிப்பால் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மனிப்பால் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வே எம்.யூ.ஒ.இ.டி.,!
தகுதிகள்:
12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு திட்டம்:
இயற்பியல் - 50 கேள்விகள், வேதியியல் - 50 கேள்விகள், கணிதம் - 70 கேள்விகள் மற்றும் ஆங்கில மொழி திறனாய்வு- 30 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு காலம் 2.30 மணி நேரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 11
விபரங்களுக்கு: http://manipal.edu/
Amirta engineering entrance exam (A.E.E.E)
கொல்லம், பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள அமிர்தா விஷ்வா வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் கொண்ட பி.டெக்.., பட்டப்படிப்பிற்கான இடங்கள், ஏ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
தகுதிகள்:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 55 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: www.amrita.edu
sathyabama university
சென்னையில் உள்ள இப்பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலம், இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்., பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்:
பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: www.sathyabamauniversity.ac.in
நன்றி : தினமலர் (கல்விமலர்) -20.01.2017