disalbe Right click

Thursday, February 2, 2017

குழந்தைகளை தாக்கும் 6 பிரச்சனைகள்

Image may contain: 8 people, people smiling

குழந்தைகளை தாக்கும் 6 பிரச்சனைகள் 

குட்டீஸ் சுட்டீஸ்அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்
பையன்கிட்ட என்னதான் அன்பா சொன்னாலும் அடிச்சாலும் அடங்கவே மாட்டேங்கிறான். ரொம்பச் சேட்டை செய்றான். கீழே விழுந்து காயம் பட்டுச்சுஇருந்தாலும் ஓடுறதும் தாவுறதுமா ரொம்ப அட்ட காசம் செய்றான். ஸ்கூல்ல ஒரு இடத்தில உட்கார மாட்டேங்கிறான்; படிப்பே ஏற மாட்டேங்குது…” – பல பெற்றோர்களின் புலம்பல் இது.
போட்டி மிகுந்த உலகில், ப்ரீகேஜியில் இருந்தே நன்றாகப் படித்தால்தான் வெற்றிபெற முடியும் என நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆனால், குழந்தைகளோ சரியாகப் படிக்காமல் விளையாட்டில், சேட்டைத்தனங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, மனஉளைச்சல் வந்துவிடுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சத்தில், “படிபடி…” என்றும்அதைச் செய்யாதேஇதைத் தொடாதே…” என்றும் பெற்றோர் கண்டிப்புக் காட்டுகின்றனர். மறுபுறம், பள்ளியிலும் இதே கெடுபிடி, மிரட்டல். இதனால், குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் வந்து, மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.
சினிமா, டி.வி-யைப் பார்த்தும், யாரோ ஒரு நண்பர் யாருக்கோ நடந்ததாகச் சொன்னதைக் கேட்டும், கூகுளிலும் சமூக வலைதளங்களிலும் உள்ள ஆதாரமற்ற தகவல்களைப் படித்தும், டாக்டரிடம் போய்குழந்தைக்கு சைக்காலஜிக்கலா பிரச்னை இருக்கு டாக்டர்ஒருவேளை இந்தக் குறைபாடா இருக்குமோ?” எனக் குழந்தைகளை நோயாளியாகவே ஆக்கிவிடும் பெற்றோர்களும் அதிகம். உண்மையில், இவை எல்லாம் பெற்றோர் அஞ்சும் அளவுக்குத் தீவிரமான குறைபாடுகளாகற்றலில் குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகள் என்னென்னசிகிச்சைகள் என்னென்ன?
குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்னைகள்
படிப்பதில் சிரமம் (Learning Difficulty (LD): விளையாட்டு, உணவு என மற்ற விஷயங்களில் கவனம், ஆர்வம் இருக்கும். ஆனால், படிப்பில் மட்டும் கவனம் இருக்காது.
கவனத்திறன் குறைதல் (Attention Deficit):
படிக்கப் பிடிக்காது. ஓர் இடத்தில் அமர்ந்து கவனிக்கவே மாட்டார்கள். வகுப்பறையில் எழுந்து நடந்துகொண்டு இருப்பார்கள். போர்டில் எழுதிப்போடுவதைப் பார்த்து, எழுதப் பிடிக்காது. எழுத்துகள் அவர்களுக்கு வேறு மாதிரியாகத் தெரியும்.
அதீத இயக்கம் (Hyperactivity): 
ஓர் இடத்தில் நிற்காமல் துள்ளிக்கொண்டே இருப்பார்கள். கை, கால் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காது. எதிரில் இருக்கும் பொருட்களைக் கைகளில் எடுப்பது, உடைப்பது, ஆராய்ச்சிசெய்வது போன்ற செயல்களைச் செய்வர்.
டிஸ்லெக்ஷியா (Dyslexia): 
வார்த்தைகளைக் கண்ணாடியால் பார்த்தால் எப்படி இடமிருந்து வலமாகத் தெரியுமோ, அதுபோல, இவர்களுக்கு சில எழுத்துக்கள் தலைகீழாகவோ, இடமிருந்து வலமாகவோ தெரியும். உதாரணத்துக்கு ‘b’ என்கிற எழுத்து ‘d’யாகவும், ‘m’ எழுத்து ‘w’வாகவும் தெரியலாம். இவர்களுக்கு எழுதுவது, படிப்பது பெரும் சிரமமாக இருக்கும். சிலருக்குக் கணக்கைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கலாம்; சில குழந்தைகளுக்கு வாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்; சில குழந்தைகளுக்கு நுணுக்கமான வேலைகளைச் செய்வதில் பிரச்னை ஏற்படலாம்.
கவனஈர்ப்பு (Attention seekers): 
எந்தச் செயல் செய்தாலும் அதைப் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் காண்பித்து, அதைக் கவனிக்கச் சொல்லி, பதில் எதிர்பார்க்கும் தன்மை. உதாரணத்துக்கு, ‘குட்மார்னிங்சொல்லிய பிறகு, திரும்பகுட்மார்னிங்சொல்லவில்லை என்றால், அந்தக் குழந்தை அடுத்த வேலையைச் செய்யாது. தன் மேல் கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பர்.
.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder): 
படிப்பதே மிகவும் அரிதாக இருக்கும். வீட்டில் சேட்டை செய்து விட்டு பள்ளியில் அமைதியாக இருந்தால், அது .டி.ஹெச்.டி இல்லை. வீடு, பள்ளி இரண்டிலும் துறுதுறுவென துள்ளிக்கொண்டே இருந்து, படிப்பிலும் கவனம் இல்லாமல் இருப்பதுதான் `.டி.ஹெச்.டிஎனப்படும் அதீதப் பரபரப்பு மற்றும் கவனக்குறைபாடு பிரச்னை.
இந்தக் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் நன்றாகவே இருக்கும். நினைவுத்திறனிலும் குறைபாடு இருக்காது. உடல் உறுப்புகளின் செயல்பாடும் இயல்பாக இருக்கும். ஆனால், எதிலும் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள்.
பிரச்னைகள் வரக் காரணங்கள் என்னென்ன?
கர்ப்ப காலத்தில், தாய்க்கு அயோடின், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு இத்தகையப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, படிப்பதில் சிரமம் ஏற்படலாம். இவர்களுக்கு, கவனத்திறன் குறைவாக இருக்கும். மற்றவர்களிடம் பேசுவது, தன்னுடைய இயல்பில் மாற்றம், ஓர் இடத்தில் நிற்காமல் ஓடுவது போன்ற நடத்தைப் பிரச்னைகள் இருக்கும்.
மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்கள்கூட குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
குளிர்பானங்கள், பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதுகூட, பிறக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள், மகப்பேறு மருத்துவர்களிடம் சென்று ஆலோசனைப் பெறுகின்றனர். முதல் ஐந்து மாதங்களுக்குள் குழந்தையின் எல்லா உள்உறுப்புக்களும் தோன்ற ஆரம்பித்து முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக சோகம், கவலை, கோபம் போன்றவை குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனாலும், குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
சிகிச்சைகள் என்னென்ன?
குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பதைத் தவிர்த்து அவர்களிடம் அன்புகாட்ட வேண்டும். மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். என்ன பிரச்னை என்பதை டாக்டர் கண்டறிந்து, மருந்து தேவையா அல்லது கவுன்சலிங் தேவையா என முடிவுசெய்வார். மனப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள், மூளைப் பயிற்சிகள், கவுன்சலிங் போன்றவற்றாலேயே குழந்தைகளை இயல்புநிலைக்கு மாற்ற முடியும். .டி.ஹெச்.டி குழந்தைகளைக் கட்டுப்படுத்தவே முடியாத சமயத்தில் மட்டும் மருத்துவர் அனுமதியுடன் மருந்து கொடுப்பது நல்லது. விரல்களைவைத்துச் செய்யும் மூளைக்கான பயிற்சி, அபாக்கஸ், மாத்தி யோசி (லேட்ரல் திங்க்கிங்), நினைவுத்திறன் பயிற்சி, பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்ற பயிற்சிகளால் குழந்தைகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
என்ன செய்ய வேண்டும்?
இந்தக் குழந்தைகள்வேண்டும்என்றே இப்படி செய்யவில்லை என்பதை முதலில் பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இவர்களுக்குத் தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை.
படிக்கச் சிரமப்பட்டு, மதிப்பெண் குறைவாக எடுத்தால், அவர்களிடம் பேசி என்ன பிரச்னை எனக் கண்டுபிடித்து, படிக்க ஆர்வம் இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும்.
படிக்க, எழுத, கவனிக்க ஆர்வம் இல்லை எனில், அடித்தோ, மிரட்டியோ குழந்தைகளைச் செய்யவைக்கக் கூடாது. மனநல மருத்துவர், மூளைநரம்பியல் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காண்பிக்கலாம்.
இதுதான் பெஸ்ட் ஸ்கூல் என்று குழந்தைக்குப் பிடிக்காத சூழலில் படிக்கவைக்கக் கூடாது.
பொருட்களை எடுப்பதில் சிரமம், ஒவ்வொரு வயதுக்குண்டான இயல்பான வளர்ச்சி இல்லாத குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
மற்ற குழந்தைளோடு ஒப்பிடும்போது நடத்தையில் மாற்றம், இயல்பான விஷயங்களில்கூட மாற்றம் இருப்பதாகத் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும்.
குறைபாடுகளைத் தவிர்க்க
குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னைகளுக்கு கர்ப்ப காலத்தில் தாய் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுக்காததே பெரும்பாலும் காரணமாக உள்ளது. எனவே, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை, மீன், ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த உணவுகள், கேரட், பீன்ஸ், அனைத்து வகையான கீரைகள் சாப்பிட் டால், பிறக்கும் குழந்தைக்குக் குறைபாடுகள் வராது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மன உளைச்சலைத் தவிர்த்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
யோகா, தியானம் செய்யலாம். மிதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி செய்வது பெஸ்ட்.
நான்காவது மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையிடம், ‘அம்மா பிரஷ் பண்ணப்போறேன்’, ‘அம்மா சாப்பிடப்போறேன்’, போன்ற எல்லா செயல்களையும் பேசிக்கொண்டே செய்தால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும். நியூரான்கள் நன்றாக வளர்ச்சியடையும். .க்யூ அதிகரிக்கும்.
வயிற்றில் உள்ள குழந்தையைத் தடவிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தடச் தெரப்பிவயிற்றில் உள்ள குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும்.
பெரும்பாலும், .டி.ஹெச்.டி, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றன.
30 வயதுக்கு மேல் பெண்ணும், 40 வயதுக்கு மேல் ஆணும் குழந்தை பெற்றுக்கொள்வதால், சில குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பெறாமல் தள்ளிப்போட்டால் 18 சதவிகிதம், படிப்பதில் சிரமம் பிரச்னை வரும். திருமணமாகி மூன்று வருடத்துக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
சமச்சீரான உணவு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, சீரான தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை, மிதமான உடற்பயிற்சிகள் செய்தாலே குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
இடது மூளை என்ன செய்யும்?
குழந்தைகள் பள்ளியில், இடது பக்க மூளையைத்தான் அதிகம் பயன்படுத்துவர். லாஜிக்கல் திங்க்கிங், மேத்தமேட்டிக்கல் திங்க்கிங், படித்ததை நினைவில் நிறுத்துதல் போன்றவற்றுக்காக இடது பக்க மூளையைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும்.
வலது மூளை என்ன செய்யும்?
வலது பக்க மூளையையும் தூண்டச் செய்தால் படைப்பாற்றல் திறன், கற்பனைத் திறன், புதிய கண்டுபிடிப்புகள், நிறங்கள், படங்கள் போன்ற கலை தொடர்பான அறிவும் மேம்படும்.
படிப்பு ஏறாத குழந்தைகள், குறைபாடுள்ள குழந்தைகளா?
சாதனையாளர்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் அல்ல. பெரும்பாலான சாதனையாளர்களுக்கு, வலது பக்க மூளைதான் அதிகமாக வேலை செய்யும். படிப்பில் கவனம் குறைவாக இருந்து, மற்ற திறன்கள் இருக்குமாயின், அந்தக் குழந்தை குறைபாடுடைய குழந்தை இல்லை. மாறாக அது சாதிக்கும் குழந்தை. அதன் சிறப்பு ஆர்வம் எதுவெனக் கண்டறிந்து அதை மேம்படுத்தினால், அந்தத் துறையில் பெரும் சாதனையாளராக மாற வாய்ப்பு உள்ளது. எனவே, இது ஒரு நோய் எனக் கவலைகொள்ளாது, உண்மையை உணர வேன்டும்.
நன்றி : டாக்டர் விகடன் செய்திகள் - 16.02.2016


குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?

Image may contain: 7 people, people smiling

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?

உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்;
அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும்,, சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.
* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.
* காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், ‘டிவி’, ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள்.
ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* சற்று வளர்ந்த குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாளாவது கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரே இடத்தில் உறங்குங்கள்; அது உங்கள் குழந்தைகளின் மனக் கவலைகளை நீக்கி, உங்கள் மீது உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.
* குழந்தைகளின் வேண்டுதல்கள், தேவைகள் நிறைவேறாத போது, அவர்கள் அழுது அடம் பிடித்து, அப்பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டால், பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கிற எண்ணம் உண்டாகி விடும்.
* உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
* பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் தடுப்பதுடன், அது குறித்த விளைவுகளை எடுத்துக் கூறி எச்சரியுங்கள்.
* பிள்ளைகளுக்கு நடை பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுப்பதுடன், நாமும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு, அமைதியாகவும், நிதானமாகவும் நடக்க பழகுங்கள். உங்கள் குழந்தைகளும், உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர்.
* குழந்தைகளை படிக்கும் படி வற்புறுத்தாதீர்கள்; கல்வியின் முக்கியத்துவத்தையும், ஏன் கற்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள்.
* பிறருக்கு மத்தியில், குழந்தையை திட்டாதீர்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்; அது, உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கும்.
* ஓய்வு நேரம் மற்றும் மகிழ்ச்சிகரமான நேரங்களில், குழந்தைகளுடன் பங்கெடுங்கள். அது, பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் தான் வாழ்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
* நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுங்கள். கணினி இணையப் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது, எதிர்காலத்தில், அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
* உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுக்களில், குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள்.
* இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக, சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. பயந்த சுபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகும் என்பதை புரிய வையுங்கள்.
* இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்தினால், விரைவில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு, எந்த மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும், நிரந்தர தீர்வை தர இயலாது. எனவே, விழித்துக் கொள்வோம்; எதிர்கால சந்ததியினரை வழிநடத்துவோம்!
மரியராமேஷ்
தினமலர் நாளிதழ் - 31.01.2016

விண்ணப்பித்து ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட்


விண்ணப்பித்து ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட்

புதிய முறை அமலுக்கு வந்தது !

சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய திட்டத்தின்படி சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை அமலுக்கு வந்ததுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
ரு விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய 3 ஆவணங்களின் நகலை இணைத்து விண்ணப்பித்தால் வழக்கமான கட்டணமான 1500 ரூபாய் செலுத்தி 3 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுடன் விண்ணப்பதாரர் நோட்டரி ஒருவரின் கையொப்பத்துடன் கூடிய பிரமான பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பிப்ரவரி 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கிய பின்னர் போலீஸ் விசாரணை அறிக்கை பெறப்படும்.
போலீஸ் விசாரணை அறிக்கை கிடைக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை கொண்டு மொபைல் அல்லது டேப்ளட் மின்னனு பொருட்கள் மூலம் போலீஸார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் குறித்த தகவல்களை விசாரித்து, சரிபார்த்து அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரே தினத்தில் அனுப்ப முடியும்.
தமிழக போலீசார் இந்த அப்ளிகேஷனை கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை விசாரித்து, சரிபார்க்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு, மத்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பது துரிதமாகும்' என்று பாலமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு பாஸ்போர்ட் இழந்த 3,970 பேருக்கு இதுவரை மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது பாஸ்போர்ட் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் - 03.02.2016

தலைவலி தவிர்ப்போம்!


தலைவலி தவிர்ப்போம்!

தலைவலி ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள், தலைவலிதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஏனெனில், சில சமயங்களில் தலைவலி வேறு ஏதேனும் ஒரு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

தலைவலி ஏற்படும் இடத்தை வைத்து எதனால் இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.  

தலைவலியில் என்னென்ன வகைகள் உள்ளன, தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

சைனஸ்

முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.

தீர்வு: 
சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மருத்துவர் சொல்லும் வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியில் செல்லும்போது கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றால் மூக்கை மூடிக் கொள்ளலாம். யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பது  பலன் தரும்.

மைக்ரேன்

முகம் மற்றும் தலைப்பகுதியில் ஒருபுறமாகவே வலி ஏற்படும். அது இடது மற்றும் வலது என்று எந்த புறமாகவும் இருக்கலாம். பார்வைக் கோளாறு மற்றும் காது குறைபாடு, குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதுபோன்ற வலி ஏற்படும்.

தீர்வு: 
எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது என்று கண்டறிந்து, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதே, இந்த தலைவலியைக் குணப்படுத்துவதற்கான ஒரே தீர்வு. பசி வந்தும் சாப்பிடாமல் இருப்பது, புளிப்பு சுவை ஒத்துகொள்ளாமல் போவது, வெயிலில் அலைவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஊறுகாய், வினிகர், சில இனிப்பு வகைகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவற்றைத்  தவிர்ப்பது நல்லது. உணவில் இஞ்சி, சீரகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

டென்ஷன் தலைவலி

நெற்றியில் மட்டும் வலியை ஏற்படுத்தும். தலைசுற்றல் மற்றும் தலைகனத்தால் வலி உண்டாகும். டென்ஷனால் ஏற்படும் தலைவலி, கழுத்தில் இருந்து தலை உச்சி வரை இருக்கும்.

தீர்வு: 
டென்ஷன் ஆகாமல் நம்மை எப்படி அமைதியாகப் பார்த்துக்கொள்வது என்பதைத் திட்டமிடலாம். காலையில் சீக்கிரம் எழுந்து வேலை தொடங்கினாலே, அவசரம் அவசரமாக செய்யும் நிலை ஏற்படாது. இதனால் டென்ஷன் பாதியாக குறையும். பதற்றம் வராமல் இருக்க தங்களை உற்சாகப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, கட்டுக்குள் வைப்பது நல்லது. மருத்துவர் ஆலோசனைப்படி, இதை மாத்திரைகள் மூலமாகவும் சரிசெய்யலாம்.

க்ளஸ்டர்

கண் இமைகளில் வலி ஏற்படும். அஜீரணக் கோளாறுகளாலும் இது போன்ற வலி ஏற்படும்.

தீர்வு: 
கண்ணைச் சுற்றி ஒருபக்கம் மட்டும் வரும் தீவிர வலி இது. இதன் அறிகுறிகளைப் பொறுத்து தீர்வுகள் மாறுபடும். சிலருக்கு தலையில் ஸ்கேன் செய்தால், என்ன பிரச்னை எனக் கண்டறிய முடியும். மருத்துவர் பரிந்துரைத்தால் வலி நிவாரணிகள்  எடுக்கலாம். ஆனால், அதுவும் நிரந்தரத் தீர்வு கிடையாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரைகள், ஊசி மூலம் தீர்வை பெற முடியும். இந்த க்ளஸ்டர் தலைவலி வராமல் தடுக்க, உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்வது நல்லது. தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். உணவில் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை சாப்பிடலாம்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்…

  காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, 

எப்போதும் ஏ.சி அறையில் இருப்பது.

  சரியான நேரத்துக்கு தூங்காதது. 

6-7 மணி நேரம் தூக்கம் கிடைக்காதபோது 

உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். தலைவலியும் வரும்.

  சிலருக்கு நைட் ஷிஃப்ட் பார்த்து வந்து பகல் நேரத்தில் தூங்குவதாலும், காலை உணவைத் தவிர்த்துவிட்டு வேலைக்கு செல்லும் பழக்கத்தாலும் தலைவலி வரும்.

  சுயமருத்துவம் எடுத்துக்கொள்வது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது.

  மன அழுத்தம், டென்ஷன், மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகிய காரணங்களால் ஏற்படும் வலி.

நன்றி : டாக்டர் விகடன் செய்திகள் - 16.01.2017

நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!


நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!

நைட் ஷிஃப்ட் என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பணிமனை தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள், இரவு நேரக் காவலர்கள், ஐ.டி நிறுவனப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள்… என நாள்தோறும் பல தரப்பட்ட பிரிவினரும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகிவிட்டது. இப்படி இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக, இரவு நேரப் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை நீண்டகால பாதிப்புகள், குறுகியகால பாதிப்புகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இரவுப் பணியில் இருப்பதால் உடனடியாக ஏற்படும் பிரச்னைகளை, `குறுகியகால பாதிப்புகள்’ எனலாம். உதாரணம், மலச்சிக்கல், தூக்கமுறை மாற்றத்தால் ஏற்படும் தூக்கமின்மை, வயிற்றுக்கோளாறு ஆகியவை. தொடர்ந்து பல வருடங்களாக இரவுநேரப் பணியில் இருப்பவர்களுக்கு வேறு சில பிரச்னைகள் உருவாகின்றன. இதை, `நீண்டகால பாதிப்பு’ எனலாம். சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்னைகள், உடல்பருமன், மனஅழுத்தம், குழந்தைப்பேறு இன்மை போன்றவை உதாரணங்கள்.     
           
பாதிப்புகள் ஏன்?

நமது உடல் ஆதிகாலம் தொட்டே பகலில் விழித்திருப்பதற்கும் இரவில் உறங்குவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டிருக்கிறது. இதை நாம், `உடல் கடிகாரம்’ என்கிறோம். இரவில் தூங்கும்போது, நம்  உள்ளுறுப்புகள்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் பணியில் தீவிரமாக இருக்கின்றன. பழைய செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் முதல் மூளையில் உள்ள தேவையற்ற பதிவுகளை நீக்கும் செயல்பாடுகள் வரை அனைத்தும் இரவில்தான் நடக்கின்றன. இரவில் நாம் விழித்திருக்கும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள், நமது உடல் கடிகாரத்தைப் பாதிக்கின்றன. இதனால் உடல் நலம் கெடுகிறது.

தீர்வு என்ன?

வாழ்க்கைமுறை மாறும்போது அதற்கு ஏற்ப, நாம் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவற்றைத் திட்டமிட்டுக்கொண்டால் குறுகியகால, நீண்டகால பாதிப்புகள் இரண்டை யுமே பெரும்பாலும் தடுத்துவிட இயலும்.

* பணிக்குச் செல்வதற்கு முன்னர் இரவு உணவைப் போதுமான அளவுக்குச் சாப்பிட வேண்டும். பொதுவாக, இரவு நேரத்தில் மிகக் குறைவாகவே சாப்பிட வேண்டும். ஆனால், இரவு முழுதும் விழிக்கவேண்டி இருப்பதால், உடலுக்கு ஆற்றல் தேவை. எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, கோதுமை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி இவற்றோடு வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளால் ஆன சாம்பார் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பணிக்கு இடையே பசிக்கும் என்பதால், இரவு உணவு உண்ட 2-3 மணி நேரத்தில் (காலை 11 மணிக்கு ஸ்நாக்ஸ் எடுப்பது போல) சுண்டல், வேர்க்கடலை, பச்சைப்பயறு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்.

* டீ, காபி தூக்கத்தைத் தவிர்க்கும் என்பதால், ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரே ஒருமுறை அருந்தலாம். கிரீன் டீ அருந்துவது இன்னும் சிறந்தது. பால் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

* இரவு நேரத்தில் சாட் உணவுகள், ஜங்க் ஃபுட், கார்பனேட்டட் பானங்களை எடுக்கக் கூடாது. இவை செரிமானத்தைப் பாதித்து, உடலைக் கெடுக்கும்.

* காலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் குளித்துவிட்டு இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது.

* பணி முடிந்த பிறகு வீட்டுக்கு சென்றதும், டீ, காபி பருக வேண்டாம். அவை தூக்கத்தைப் பாதிக்கும்.

* நன்றாக ஓய்வு எடுங்கள். சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இடையில் பசியால் விழிப்பு ஏற்பட்டால், சிறிது சாப்பிடலாம். 

* தூங்கி எழுந்ததும் மாலையில் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் ஸ்ட்ரெச்சிங், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் செய்துவிட்டு, இரவு உணவுக்குப் பின்னர் பணிக்குச் செல்லலாம்.

* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம்.

* செரிமானத்துக்குக் கடினமான உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

* தினமும் 2 – 2 1/2 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். கீரைகள், கிழங்கு வகைகள், பயறு வகைகள், நார்ச்சத்துள்ள பழங்கள் ஆகியவற்றை உண்டால், நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

நன்றி : டாக்டர் விகடன் செய்திகள் - 16.01.2017

வங்கிகள் மக்களிடம் மறைக்கும் 10 விஷயங்கள்..!

வங்கிகள் மக்களிடம் மறைக்கும் 10 விஷயங்கள்..! 

சென்னை: சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்றும் நகைகளை பாதுகாக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அவற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணியிருப்பீர்கள். ஆனால் வங்கிகள் தங்களுக்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியுமா?

இவ்வாறு உதவி செய்யும் போது, உங்களுடைய எண்ணத்திற்கு மாறாக, தன்னுடைய விருப்பத்திற்கு வங்கிகள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன. இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் 10 விதமான விஷயங்களைப் பற்றி இங்கே தெளிவு படுத்துகிறோம். இந்த விஷயங்களைப் பற்றி வங்கிகளைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் விளக்கியிருக்க மாட்டார்கள். இதை நாம் வங்கியாளர்களிடம் கேட்டு அறிந்துகொள்வது நம்முடைய கடமை.

1) காசோலை 

நீங்கள் காசோலையை உங்களுடைய கணக்கில் வரவு வைத்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது.
காசோலை

அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் காசோலையாக இருந்தால் இந்த கால அளவு சற்றே அதிகமாக இருக்கும். 2012ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, மின்மயமாக்கி காசோலைகளை விரைவில் பணமாக்க உத்தரவிட்டது. அது வரையிலும் வெளியூர் காசோலைகளை பணமாக்க குறைந்தபட்சம் 15 நாட்களில் இருந்து 3 வாரங்கள் வரை காலம் இருந்து.

ஆனால், எவ்வளவு அதிக நாட்கள் கால தாமதமாக உங்களுடைய பணம் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறோ, அந்த அளவிற்கு வங்கிக்கு இலாபம் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இந்த பணத்தை எல்லாம் வங்கிகள் தடையற்ற நிதி ஆதாரங்களாக கொண்டிருக்கின்றன.

2011ஆம் ஆண்டில் மட்டும், இவ்வகையில் கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகளை இ-கிரெடிட் முறையில் செய்வதை தாமாதமாக்கி சுமார் 620 கோடிகள் வரை வங்கிகள் சம்பாதித்துள்ளன.

2) டெபிட் கார்டு!! 

டெபிட் கார்டு திருடப்படுதல் அல்லது தொலைத்து விடுதல் பற்றி நாம் பேசும் போது டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவையாக உள்ளன. இதனை உங்களுடைய வங்கிகள் உங்களிடம் சொல்வதில்லை. எனவே, உங்களுடைய வங்கியினரிடம் பேசி, இவ்வாறு தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்து கொண்டு, தவறுகள் நடக்காதவாறு உங்களுடைய கணக்கை பாதூகத்துக் கொள்ளுங்கள். இவ்வகையிலான எதிர்பார்க்காத சூழல்களை சமாளிப்பதற்காகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பண அட்டை பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இது போன்ற சூழல்களுக்கு உங்கள் வங்கி தருவது என்ன என்பதை கண்டறியுங்கள்.

3) நடப்பு கணக்கில் உள்ள பணம் 

காசோலை பவுன்ஸ் ஆவது போன்ற மோசமான சூழல்களை மக்கள் எதிர்கொள்ள விரும்புவதில்லை. எவ்வளவு செலவு செய்தாவது, இது போன்ற சூழல்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வார்கள். இவ்வாறு செக் பவுன்ஸ் ஆவதை தவிர்க்கும் நோக்கில் மிகப்பெரிய தொகைகளை தங்களுடைய நடப்பு கணக்கில் அவர்கள், வங்கிகளுக்கு மிகவும் வசதியாக விட்டு வைப்பார்கள். இதன் மூலம், நீங்கள் வங்கிகளின் சேமிப்பு கணக்கில் பணத்தை வைக்கும் போது உங்களுக்கு தர வேண்டிய வட்டியை வங்கிகள் தர வேண்டியிருப்பதில்லை.

4) பின் தேதியிட்ட காசோலை 

பின் தேதியிட்ட காசோலைகள், காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தவிர்க்க உதவுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. உங்களுடைய கணக்கில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு பணம் வரும் என்று எண்ணி, பின் தேதியிட்ட காசோலையை தயார் செய்வீர்கள். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன்னதாகவே அந்த காசோலையை வங்கிகளில் செலுத்தி பணமாக்கலாம். இவ்வாறு செய்யும் போது செக் பவுன்ஸ் ஆகும். நிறைய பிரச்னைகள் வரும். எனவே, இந்த வழிமுறையை கூடிய வரையிலும் தவிர்க்கவும்.

5) நேரடியாக வங்கியை அணுகுதல் 

உங்களுடைய கணக்கு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது பரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை வங்கிகள் அளிக்கின்றன.

அதாவது, இணையவழியில் படிவங்களை நிரப்பி கேட்டுக் கொள்ளுதல், வாடிக்கையாளர் சேவையில் கேட்டல் அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று வருதல் போன்றவை. ஆனால், இவை எல்லாவற்றிலும் சிறந்த மற்றும் பலன் தரக் கூடிய வழிமுறை நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று வருவது தான் என்பதை வங்கி சொல்வதில்லை.

6) வாடிக்கையாளர் சலுகைகள் 

பிற நிறுவனங்களைப் போலவே, நெடுநாட்கள் தங்களிடம் கணக்கு வைத்துள்ள, உண்மையான வாடிக்கையாளருக்கென சில சலுகைகளை வங்கிகளும் வைத்துள்ளன.
வாடிக்கையாளர் சலுகைகள்

ஆனால், பெரும்பாலான நேரங்களில் வங்கிகள் இந்த விஷயத்தை விளம்பரப் படுத்துவதில்லை. நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும். சற்றே அழுத்தம் கொடுத்தல், நெடுநாள் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்குகளையும் கூட வங்கிகள் தருகின்றன.

7) பரிமாற்ற ரசீதுகள்

பல்வேறு வங்கி நிறுவனங்களாலும் இந்த குறிப்பு தரப்பட்டு வருகிறது. காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவுகளை வைத்திருப்பது ஒரு தானியங்கி செயல்பாடாகும். இந்த செயல்பாட்டை வழங்கும் மென்பொருள் சில பிழைகளை உருவாக்கலாம். இந்த பிழையால் ஒரே செயல்பாடு பலமுறை செய்யப்பட்டதாக 'டூப்ளிகேஷன்' ஆகலாம். எனவே, அனைத்து இரசீதுகளையும், ஒவ்வொரு முறையும் பத்திரப்படுத்தி வைத்தல் சிறந்தது.

8) அதிக வட்டியுடைய கணக்குகள் 

வங்கிகளில் பல்வேறு விதமான வட்டி விகிதங்களுடன் கணக்குகள் உள்ளன. நீங்கள் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் கணக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும்.

எனவே, அவர்கள் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் கணக்குகள் பற்றி விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. எனவே, அதிக வட்டி விகிதங்கள் உள்ள கணக்குகள் பற்றி அறிய வேண்டியது, உங்களுடைய ஆர்வத்தைப் பொறுத்த விஷயமாக இருக்கும்.

9) வங்கி படிவங்கள்

நீங்கள் ஒரு படிவத்தில் கையெழுத்திடும் முன்னர், அதனை முழுமையாக, நன்றாக படித்துப் பார்க்கவும். வங்கி துறையினரால் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் சிலவற்றை அப்போது நீங்கள் படிக்க நேரிடும். யாருடைய உதவியையாவது கேட்டு, அந்த வார்த்தைகளுக்கான விளக்கங்களை கேட்டு, புரிந்து கொண்டு பின்னர் கையெழுத்திடவும்.

இது வங்கி அலுவலரின் நேரத்தை சற்றே எடுத்துக் கொண்டாலும், பின் வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும்.

10) சிறு தொழில் கடன்கள் 

நீங்கள் சிறு தொழில் செய்வதற்காக வங்கிகளிடம் கடன் பெற நினைத்தால், உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிறு தொழில் கடன்கள் வழங்குவதில் பல்வேறு வங்கிகளும் பாரபட்சமாக நடந்து கொள்ளவே நினைக்கின்றன.
சிறு தொழில் கடன்கள்
அவர்கள் கடனை திரும்ப பெறுவது குறித்து அச்சப்படுகின்றனர். எனவே, இவ்வகையிலான விண்ணப்பங்களை எந்த விலை கொடுத்தாவது நிராகரிக்க முயலுவார்கள்.

நன்றி : தமிழ் குட்ரிட்டன்ஸ் - 12.11.2016

இரைப் பை வாதம் என்றால் என்ன ?

Image may contain: text

இரைப் பை வாதம் என்றால் என்ன ?

டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் என்றால் என்ன?

இரைப்பையில், எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம். எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பது வேகஸ் நரம்புகள் தான். இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால் கேஸ்ட்ரோபெரிசிஸ் எனும் இரைப்பை வாதம் வரும்.

இப்பாதிப்பு ஏற்பட காரணம்?

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காத போது, டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் ஏற்படுகிறது.

டயாபடிக் நியூரோபதியின் வகை என்கிறார்களே?

உண்மை தான், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது அது ரத்தக்குழாயைப் பாதித்து, நரம்புகளுக்குத் தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதைத் தடை செய்கிறது.

இப்பாதிப்புக்கு யாரெல்லாம் ஆளாகின்றனர்?

பெரும்பாலும், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவில் இப்பிரச்னை ஏற்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்?

இப்பாதிப்பு ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, அசவுகரியத்தை அளிக்கும். இந்த அறிகுறிகள், மனிதருக்கு மனிதர் தீவிரமாகவோ அல்லது சாதாரணமாகவோ ஏற்படலாம்.

இதன் பாதிப்பு?

உணவு இரைப்பைக்கு வந்து நீண்ட நேரம் கழித்து சிறுகுடலுக்குள் நுழையும். அங்கே ஊட்டச்சத்து கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். நீண்ட நேரம், இரைப்பைக்குள்ளேயே உணவு இருக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சி அதிகரிக்கலாம். உணவு மேலும் கடினமாகி, வாந்தியை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பரிசோதனைகள் என்னென்ன?

பேரியம் எக்ஸ்ரே, ரேடியோஐசொடோப் கேஸ்டிரிக் எம்டியிங் ஸ்கேன், ஒயர்லெஸ் மொட்டிலிட்டி கேப்ஸ்யூல், மேல் வயிறு எண்டோஸ்கோப்பி, அல்ட்ராசவுண்ட் என, பல பரிசோதனைகள் உள்ளன.

இப்பாதிப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?

உணவு உண்ணுவதை மாற்றியமைப்பதன் மூலம் இரைப்பை வாதத்தை தவிர்க்க முடியும். மூன்று வேளைக்கு பதிலாக ஆறு வேளையாக சாப்பிடுவது நல்லது. உணவை உண்ணும் போது மெதுவாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த பாதிப்புள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

உணவு உண்டதற்கு பிறகு அரை மணிநேரம் கழித்து சிறிய நடைபயிற்சி செய்யலாம். நடைபயிற்சியே போதுமானது. பொதுவாக காலையில், 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.

சிகிச்சைகள் என்ன?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்காக இன்சுலின், வாய்வழி மருந்துகள், உணவுப் பழக்கத்தில் மாறுதல்கள் போன்றவையே பரிந்துரைக்கப்படும். நோயாளியின் உடல்நிலையை பொறுத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.

ரா.நாராயணமூர்த்தி
நீரிழிவு நிபுணர்

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017

மத்திய பட்ஜெட் 2017


மத்திய பட்ஜெட் 2017 

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: 

ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்புரூ.10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு | ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை | அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறை | குறு, சிறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு | ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் | ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவை வரி ரத்து

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முதல்முறை யாக ரயில்வே பட்ஜெட் இணைக் கப்பட்டுள்ளது.

 பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளி யிட்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

விவசாய கடனுக்கு இலக்கு

ரூ.10 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன திட்டங்களுக்காக நபார்டு உதவியுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க 250 டிஜிட்டல் தேசிய வேளாண் சந்தைகள் செயல்படு கின்றன. இவற்றின் எண்ணிக்கை 585 ஆக அதிகரிக்கப்படும். பால் வளத்தைப் பெருக்க நபார்டு உதவியுடன் ரூ.8,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

ஒரு கோடி குடும்பங்கள் மீட்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் 2019-ல் கொண் டாடப்பட உள்ளது. அதற்குள் அந்தி யோதயா திட்டத்தில் ஒரு கோடி ஏழை குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 2018, மே மாதத்துக்குள் 100 சதவீத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு சலுகை

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் குறு, சிறு நிறுவனங்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப் படுகிறது. இது 5 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப் புக்காக ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். 

2020-க்குள் அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும். 3500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும். புதிதாக 25 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். 500 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக மின்தூக்கி, மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப் படும். வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் அமைக்கப் படும். ஆன்லைன் ரயில் டிக்கெட்டு களுக்கான சேவை வரி ரத்து செய்யப்படும். புதிய மெட்ரோ ரயில் சட்டம் வரையறுக்கப்படும்.

வரி தள்ளுபடி

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

 வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்.

ஏராளமானோர் வரிஏய்ப்பு

கடந்த 2015-16-ம் ஆண்டில் 3.7 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 99 லட்சம் பேர் தங்களது வருவாய் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

1.95 கோடி பேர் தங்களின் வருவாய் ரூ.5 லட்சத்துக்குள்ளும் 52 லட்சம் பேர் ரூ.10 லட்சத்துக்குள்ளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் மாத சம்பள தாரர்கள் ஆவர். அந்த வகையில் 56 லட்சம் மாத சம்பளதாரர்கள் முறையாக வரி செலுத்துகின் றனர்.

நாடு முழுவதும் 13.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

இதில் 2.76 லட்சம் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கடந்த ஆண்டு கணக்கு தாக்கல் செய்துள்ளன. 2.85 கோடி நிறுவனங்கள் ஒரு கோடிக்கு குறைவாகவும், 28,557 நிறுவனங்கள் 10 கோடிக்கு குறை வாகவும் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளன. 7,781 நிறு வனங்கள் மட்டுமே ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாக கணக்கு சமர்ப்பித்துள்ளன.

நாட்டில் விற்பனையாகும் கார்கள், வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக் கையை ஒப்பிடும்போது ஏராள மானோர் வரிஏய்ப்பில் ஈடுபடுவது தெளிவாகிறது.

கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். மேலும் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.02.2017

கோர்ட் உத்தரவை மதிக்காத கலெக்டருக்கு சிறை

Image may contain: text

மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாருக்கு 6 வாரம் சிறை: மேலூர் கோர்ட் உத்தரவு

மேலூர்: கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

உத்தரவு:

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2017

நன்கொடை பெற கட்சிகளுக்கு கட்டுப்பாடு

No automatic alt text available.

நன்கொடை பெற கட்சிகளுக்கு கட்டுப்பாடு

நன்கொடைகளுக்கு கட்டுப்பாட்டால் அரசியல் கட்சிகள்...
கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
புதுடில்லி: அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல், ரொக்கமாக நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வழங்கப்படும் தொகை அனைத்தும், காசோலை அல்லது டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவதை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி, சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

வரிச்சலுகை

அதன்படி, அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய் வரை மட்டுமே, ரொக்கமாக நன்கொடை பெற முடியும். அதற்கு மேலான தொகையை, காசோலை அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே பெற முடியும். 

அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையை பத்திரங்களாக வழங்க, வங்கிகளில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். அதாவது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்பும் நபர், வங்கிகளில், அதற்கான தொகையை செலுத்தி, அந்த தொகைக்குநிகரான பத்திரங்களை பெறலாம். 

பத்திரங்களைப் பெற, காசோலை அல்லது டிஜிட்டல் முறையில் மட்டுமே, வங்கிகளில் பணம் செலுத்த வேண்டும். அந்த பத்திரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின், வங்கிகள் மூலம், அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக் கொள்ளலாம். 

கறுப்பு பணப் பதுக்கல்ஒழிக்கப்படும்

நன்கொடை வழங்குபவர் மற்றும் நன்கொடை பெறும் அரசியல் கட்சி ஆகிய இரு தரப்பினரும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால், இரு தரப்பினருக்கும் வரிச்சலுகை வழங்கப்படும். பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கப்படுவதால், அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். முறைப்படுத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யப்படுவதால், கறுப்பு பணப் பதுக்கல் ஒழிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான நன்கொடை, முகம் தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்படுவதால், அவற்றுக்கு கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நன்கொடை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து, பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

நன்கொடையில் கலக்கும் காங்கிரஸ்

கடந்த, 2004- - 05 நிதி ஆண்டு முதல், 2014 - 15ம் நிதி ஆண்டு வரை, தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது

. இதில் நன்கொடை, சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்.

இதன்படி, 10 ஆண்டுகளில், தேசிய, மாநில அரசியல் கட்சி களின் மொத்த வருவாய், 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய்.

 இதில், 3 ஆயிரத்து 982 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, காங்., கட்சி முதலிடம் பிடித்தது. 

2வது இடம், பா.ஜ.,க்கு கிடைத்தது. அதன் வருவாய் 3 ஆயிரத்து 272 கோடி ரூபாய். 

2வது இடத்தில் தி.மு.க.: 

மாநில கட்சிகளில், சமாஜ்வாதி, தி.மு.க., முறையே முதல் இரு இடங்களை பிடித்தன. 

அவற்றின் வருமானங்கள் முறையே, 819 கோடி மற்றும் 203 கோடி ரூபாய். அ.தி.மு.க., 165 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, 3வது இடம் பிடித்துள்ளது.

அறியாத நபர்கள்:

கட்சிகளின், 69 சதவீத வருவாய், அறியாத நபர்களிடமிருந்து பெற்ற நன்கொடை மூலம் கிடைத்து உள்ளது. 

அதாவது, 20 ஆயிரத்திற்கும் அதிகமான நன்கொடை வழங்கினால் மட்டுமே விபரங்களை அளிக்க வேண்டும். 

20 ஆயிரத்துக்கு கீழ் நன்கொடை அளித்தவர்களிடமிருந்து, கட்சிகள், 7 ஆயிரத்து 833 கோடி ரூபாய் பெற்றுள்ளன. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017