disalbe Right click

Sunday, February 5, 2017

பாண்டிச் சேரி (புதுச்சேரி) வரலாறு

No automatic alt text available.

பாண்டிச் சேரி (புதுச்சேரி) வரலாறு
வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது.
  • முன்னதாக பாண்டி மற்றும் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது.
  • முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உரோமானிய வணிகவிடங்களில் பொடுகெ அல்லது பொடுகா எனப்படும் இடம் குறிப்பிடப்படுகிறது.
  • இது நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசின் பகுதியாக இருந்தது.
  • பத்தாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் சோழர்களின் வசம் இருந்தது.
  • 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது.
  • 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்த்து.
  • 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
  • 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்த 178 மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதில் 170 பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் 8பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
  • இதனால் 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
  • ஆனால் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியே முறைப்படி உடன்படிக்கை கையெழுத்தானது.
  • அதனால் இன்றுவரை ஆகஸ்ட்16-ம் தேதியே புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
  • பிரெஞ்ச் அமைப்புகளின் கோரிக்கைகளை அடுத்து தற்போதைய முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களால் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 16-ம் தேதி குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டது.
  • இங்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், தெருக்களின் அமைப்புகளில் பிரெஞ்சு கட்டிடக்கலையின் நேரடி தாக்கத்தை காண முடிகிறது.
  • பாண்டிச்சேரியில் பல்வேறு தெருக்கள் பிரெஞ்சு பெயர்களை தாங்கியுள்ளதாகவும் மற்றும் பிரம்மாண்டமான வீடுகளையும், தனி மாளிகைகளையும் காலனீய காலத்தைச் சோந்த கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருப்பதை காண்பது பார்வையாளரின் கண்களுக்கு சிறந்த விருந்தளிக்கும்.
  • இந்த நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது—இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் அல்லது வில்லே நோய்ரே என்றும் அழைக்கப்படுகின்றன.
  • பாண்டிச்சேரி வரைபடத்தைப் பார்த்தவர்களுக்கும், பாண்டியில் இருந்தவர்களுக்கும் இந்த வேடிக்கைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு!
  • நாம் பேருந்தில் பயணித்தால், நேர் ரோடிலேயே, பாண்டிச்சேரி நெருங்கும் சமயம் “பாண்டிச்சேரி எல்லை வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம்.
  • சிறிது தூரம் சென்றதும், “தமிழ்நாட்டு எல்லை, காஞ்சிபுரம் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம்.
  • சற்று தூரம் சென்றதும், “தமிழ் நாட்டின் நன்றி” உரையைக் காணலாம்.
  • சற்றுத் தூரம் கடந்ததும், உங்களை விழுப்புரம் மாவட்டம் வரவேற்கும்.
  • 2 கி.மீ. தூரம் கூட கடந்திருக்கமாட்டீர்கள்,
  • விழுப்புரம் நன்றி சொல்லும்.....பாண்டி எல்லை வரவேற்கும்.
  • இப்படித் தமிழ்நாடும், பாண்டியும் மாறி, மாறி வரவேற்கும் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும்!
  • பல இடங்களில், மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளிலேயே ஒரு தெரு தமிழ் நாட்டு எல்லைக்குள்ளும், அடுத்த தெரு பாண்டிச்சேரி எல்லைக்குள்ளும் இருக்கும்!
  • சென்னையில் இருந்து 3 மணி நேர பயணத்தில் புதுச்சேரியை அடையலாம்.
  • புதுச்சேரியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு வார இறுதி நாளை இனிமையாகக் கழிக்க புதுச்சேரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும்.
  • புதுச்சேரியில் முக்கியமாகக் கூற வேண்டும் என்றால் 15 சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
அரிக்கமேடு
  • புதுச்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது அரிக்கமேடு. தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடைபெற்று வரும் இந்த பகுதியில் ரோமானிய கால வணிக முறைகள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வரலாறு, தொல்லியல் ஆய்வு உள்ளிட்டவை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு. இது மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
அரவிந்தர் ஆசிரமம்
  • புதுச்சேரி என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம். இங்கு அரவிந்தர் மற்றும் அன்னை வாழ்ந்த வீடும் நினைவிடமும் அமைந்துள்ளது.
  • ஏராளமானோர் நாள் தோறும் இங்கு வந்து ஆசிரமத்தை பார்த்துச் செல்கின்றனர்.
பாரதி பூங்கா
  • புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சற்று நேரம் குளுமையான நிழலில் இளைப்பாறவும், குழந்தைகளுடன் சென்று நேரத்தை செலவிடவும் பாரதி பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.
  • புதுச்சேரி கடற்கரை சாலை அருகே பாரதி பூங்கா அமைந்துள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள ஒரே ஒரு பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
பொடானிகல் கார்டன்
  • புதுச்சேரியில் அமைந்துள்ள பொடானிகல் கார்டன் எனப்படும் தோட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.
  • 1826ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில், உலகெங்கிலும் இருந்து ஏராளமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
  • இங்கு இசையுடன் கூடிய நீர் விளையாட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் இந்த இசையுடன் கூடிய நீர்விளையாட்டு இயங்கும்.
கோயில்கள்
  • பாண்டிச்சேரியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
  • இங்குள்ள சுற்றுச் சுவரில் 40 விதமான விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோயிலுக்கு தினமும் 5000க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
எம்.ஜி. சாலையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோயில்.
  • விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலில் ராமர், சீதை, லஷ்மணன், அனுமான் சிலைகளும் அமைந்துள்ளன. இந்த கோயிலின் கோபுரம் மிகச் சிறந்த கலையுணர்வுக்கு சாட்சியாக விளங்குகிறது.
  • இந்த கோயிலின் அருகே கன்னிகா பரமேஸ்வரி ஆலயமும் உள்ளது. இது சக்தி ஆலயமாகத் திகழ்கிறது.
  • பாரதி சாலையில் அமைந்திருப்பது காமாட்சியம்மன் ஆலயம். தென்னிந்திய கோயில்களில் இருந்து இந்த ஆலயம் வேறுபட்டு காணப்படும். பொதுவாக கோயில்களின் நிறம் இந்த ஆலயத்துக்கு இருக்காது. இந்த கோயில் ஒரு புதிய காட்சியாக நம் கண்களில் பதியும்.
பாரதி அருங்காட்சியகம்
  • மிகப்பெரிய கவிஞரும், சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டவருமான சுப்ரமணிய பாரதியார் 1908 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தார்.
  • அவர் வாழ்ந்த இல்லம் தற்போது பாரதி அருங்காட்சியகமாக விளங்குகிறது
  • ஈஸ்வரன் தர்மராஜா கோயில் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், பல தமிழர்களின் கோயிலாகவும் விளங்குகிறது.
  • இதோடு மட்டும் அல்லாமல், புதுச்சேரி அரசு அருங்காட்சியகம் பாரதிதாசன் அருங்காட்சியகம், ஆனந்தா ரங்கா பிள்ளை, ஜவகர் பொம்மை அருங்காட்சியகமும், பொடானிகல் கார்டனை ஒட்டியுள்ள குழந்தைகளுக்கான அருங்காட்சியகமும் பார்க்கத் தக்கவை.
பிரான்ஸ் போர் நினைவிடம்
  • புதுச்சேரியில் கௌபர்ட் அவென்யூ என்ற இடத்தில் அமைந்திருப்பது பிரான்ஸ் போர் நினைவிடம்.
  • முதல் உலகப் போரின் போது பிரான்ஸ் நாட்டுக்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

Saturday, February 4, 2017

ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே பிரீமியம்


ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே பிரீமியம்

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை கண்டுகொள்ளாத வங்கிகள்

கடந்த 2015 மே 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தையும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடங்கிவைத்தார். 

ரூ.2 லட்சம் காப்பீடு கொண்ட பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மாதம் ரூ.1 வீதம், வருடத்துக்கு ரூ.12 பிரீமியம் செலுத்த வேண்டும். 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆண்டுக்கு ரூ.330 பிரீமியமாக செலுத்த வேண்டும். 

இரு காப்பீட் டுத் திட்டத்திலும் முறையே ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற முடி யும்.

இந்த காப்பீட்டுத் திட்டங்களுக் கான பிரீமியம் தொகையை எளிதாக செலுத்துவதற்காக சுரக்‌ஷா என்ற வைப்புத் திட்ட மும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 12 ரூபாயை செலுத்த ரூ.201 வைப் புத் தொகையாகவும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 330 ரூபாயை செலுத்த ரூ.5,001 வைப் புத் தொகையாக செலுத்த வேண் டும். 

இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டு பிரீமியத் தொகை செலுத்த வழிவகை ஏற்படுத்துப்பட்டுள்ளது.

வங்கிகளில் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனை வரும் இந்தத் திட்டத்தில் இணைய லாம். 

இதற்கான விண்ணப்பத் தையும் அந்தந்த வங்கிக் கிளை களில் பெற்று வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்று அரசு 
அறிவித்துள்ளது.

ஆனால் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கிராமப்புற வங்கிகளிலும் இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. 

இந்த காப் பீட்டுத் திட்டங்கள் பற்றி 
வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வங்கி நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

மேலும், சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தத் திட்டம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டதாகவும் 
சொல்கிறார்கள்.

இது தொடர்பாக கடலூர் குடி யிருப்போர் அனைத்து நலச்சங்க செயலாளர் மருதவாணன் கூறும் போது, “இது நல்ல திட்டம், ஒருசில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வங்கிகளில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படவில்லை என் பதே உண்மை. தனியார் வங்கிகள் இதுகுறித்து பேசுவதே கிடையாது. இந்தத் திட்டம் இப்போதும் செயல்பாட்டில் இருப்ப தால், வங்கி அதிகாரிகளை வற்புறுத்தி இந்தத் திட்டத்தில் 
ஒவ்வொருவரும் சேர்வது அவசியம்” என்றார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் ஆண்ட்ரூ ஐயாசாமியிடம் கேட்டபோது, “இத்திட்டம் தற் போதும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் மே மாதம் வரையில் இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கென ஆலோசகர்களும் உள்ளனர்.

இருப்பினும் வங்கிகளில் மேலாளர்களுக்கு கடுமையான பணிச் சூழல் காரணமாக ஒருசில இடங்களில் குறைபாடு இருக்கலாம். மற்றபடி இத்திட்டத் துக்கான விண்ணப்பப் படிவத் தினைப் பூர்த்தி செய்து கொடுத் தாலே, வங்கிகளில் அதைப் பெற் றுக் கொள்வர். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 
http://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250 

என்ற இணைய முகவரி மூலமாக வும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

என்.முருகவேல் 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 04.02.2017

Friday, February 3, 2017

மூல நோயை குணப்படுத்தும் துத்திக் கீரை

No automatic alt text available.

மூல நோயை குணப்படுத்தும் துத்திக் கீரை

வெப்பப் பிரதேசங்களில் புதர்ச் செடிபோல வளரக்கூடியது துத்திக்கீரை.
இதன் கீரை மட்டும் அல்ல, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
துத்திக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, கடைந்து சாப்பிடலாம்; துவையலாகவும் செய்து சாப்பிடலாம். உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.
மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமடையும்.
துத்தி இலைகளைக் குடிநீர் செய்து, பாலும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்போக்கை (கழிச்சலை) ஏற்படுத்தி, மூலக்கடுப்பு, உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
துத்தி இலைச் சாறு 25 மி.லி எடுத்து, அதில் பாதி அளவுக்கு நெய் சேர்த்துக் கலக்கி உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் கழிச்சல் குணமாகும்.
துத்தி இலையுடன் ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) விட்டு வதக்கி எடுத்து, மூலத்தால் ஏற்பட்ட கட்டிகள், புண்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்போட புண்கள் நீங்கும்.
துத்திக்கீரையை சாறு எடுத்து, பச்சரிசி மாவு சேர்த்து களிபோல நன்றாகக் கிண்டி, உடலில் உள்ள கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.
துத்தி இலையைக் குடிநீர் செய்து, வாய் கொப்பளிக்க, பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
துத்தி இலையைத் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து, கெட்டியான துணியைத் தோய்த்துப் பிழிந்து, உடலில் வீக்கம் ஏற்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்க, வலி நீங்கும்; வீக்கம் குறையும்.
துத்தி இலையைக் குடிநீர் செய்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறவைத்து கண்களைக் கழுவினால், கண் நோய்கள் நீங்கும்; பார்வை தெளிவாகும்.
துத்திக் குடிநீரைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் சிறிதளவு பருகி வந்தால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்கள் கரையும்.

பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?


பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இருக்கும் தயக்கம் இதுதான். 
தனக்குள்ள ஒரு பிரச்சணையை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுவதும், அதனை தீர்த்து வைக்க வேண்டுவதும் ஒரு கலைதான்.

நீங்கள் எழுதுகின்ற மனுவின் மூலமாக அதனை படிக்கும் அதிகாரியானவர், உங்களது பிரச்சணையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டால்தான் அதனை அவர் தீர்க்க முற்படுவார்.
உங்களது மனுமூலமாக உங்களுக்குள்ள பிரச்சணையை படிக்கின்றவர்களுக்கு, கண்ணாடியில் தனது முகத்தை பார்ப்பது போல, அது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுக்குள்ள பிரச்சணை மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். ஆகையால், அதனை நீங்கள் எழுதுவதுதான் நல்லது.
பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
கருப்பு அல்லது புளு கலர் மை பேனாவால் எழுதுங்கள். வேறு கலர் மையை கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள்.
பெட்டிசனின் இடதுபுறம் 1 இஞ்ச் அகல மார்ஜின் விடுங்கள். பக்கம் எண் எழுதுங்கள். நான்கு புறமும் 1 இஞ்ச் அகல மார்ஜின் இருந்தால் உங்களது பெட்டிசன் மிக அழகாக இருக்கும்.
முதலில் சுருக்கமாக தலைப்பை எழுதுங்கள். அதன் கீழ் அடிக்கோடிடுங்கள். பின்பு, உங்களது பெயர் மற்றும் வயதை குறிப்பிட்டு முழு முகவரியை தெளிவாக எழுதுங்கள். 
அதற்குப்பின் பெறுநர் முகவரியை எழுதுங்கள். பெறுநர் முகவரியில் பெறுபவரின் பெயரை குறிப்பிட்டிருந்தால் அதற்கு முன் உயர்திரு என்றும், பெயருக்குப் பின்பு அவர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
பதவியை மட்டும் குறிப்பிட்டிருந்தால், உதாரணமாக மேலாளர் என்று இருந்தால், அதற்குப் பின்னால் அவர்கள் என்று சேர்த்துக் கொண்டால் போதுமானது. பதவிக்கு முன்னால் உயர்திரு என்று போட தேவையில்லை.
அதற்கு அடுத்து எதுபற்றி எழுத நினைக்கிறீர்களோ அதனைப்பற்றி சுருக்கமாக (பொருள்) எழுத வேண்டும். உங்களது கடிதத்தை முழுமையாக படிக்காமலேயே உங்களது பிரச்சணையை அதிகாரி உணர்ந்து கொள்ள இது உதவும். 
உதாரணமாக ஏதேனும் சான்றிதழ் பெற வேண்டியது இருந்தால், ............................ சான்றிதழ் வேண்டுவது சம்பந்தமாக. என்று பொருளில் குறிப்பிட வேண்டும். 
உங்கள் பிரச்சணை சம்பந்தமாக ஏதாவது செய்தி, ஆணை, சுற்றறிக்கை அல்லது கடிதத்தை நீங்கள் பார்த்திருந்தால், அதனைப்பற்றி பொருளுக்கு கீழே (பார்வை) குறிப்பிட வேண்டும். அவைகள் ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால், அவைகளை தேதிவாரியாக வரிசைப் படுத்துங்கள். தங்களது பிரச்சணையின் வீரியத்தை அதிகாரிக்கு இது உணர்த்தும்.
அதன்பிறகு மரியாதைக்குரிய அய்யா/அம்மா, என்று தொடங்கி தங்கள் பிரச்சணைகளை எழுத வேண்டும். தேவையில்லாத விஷயங்கள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு வரிகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்கும்படி எழுதுங்கள். ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு பத்தியில் குறிப்பிடுங்கள். நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அடித்தல், திருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிவில் உங்கள் பிரச்சணையை தீர்ப்பதற்கு அதிகாரியிடம் பணிவுடன் வேண்டுங்கள். அவர்களுக்கு ஆணையிடாதீர்கள். 
அதற்குக் கீழே நாள் மற்றும் இடம் குறிப்பிடுங்கள். அதற்குக் கீழே மறக்காமல் கையொப்பம் செய்யுங்கள்.
என்னென்ன இணைக்க வேண்டும்?

பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதம், உத்தரவு அல்லது ஆணை போன்ற ஆவண நகல்களை இணையுங்கள். 
நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
மேலதிகாரிகளுக்கு நகல் அனுப்ப நினைத்தால், பணிவுடன் நகல் சமர்ப்பிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு அதன் கீழ் அவர்களது முகவரியை குறிப்பிடுங்கள்.
எழுதிய பெட்டிசனை ஒரு நகல் (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அனுப்புகின்ற கடிதங்களை பதிவுத்தபால் மூலம் அனுப்புங்கள். தபால் அலுவலகத்தில் அதற்காக தருகின்ற ரசீதுகளை எடுத்து வைத்துள்ள விண்ணப்ப நகலில் ஒட்டி பத்திரப்படுத்துங்கள். மேல்முறையீடு செய்ய அவை உதவும்
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

’டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை

Image may contain: 1 person, text

டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை
ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், ’டெட்’ தேர்வு கட்டாயமானது. ஆனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ’டெட்’ தேர்வு முடிக்காதவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ’டெட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்ற பள்ளிகளில், ’டெட்’ தேர்வு முடிக்காதோருக்கு, சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது. ’இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது’ என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு, ’டெட்’ கட்டாயம். 2012, 2013ல், ’டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், பல பள்ளிகளில், ’டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர்.
இது குறித்த ஆய்வில், 159 பேர், ’டெட்’ தேர்ச்சி இன்றி, பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில், 113 பேர் வழக்கு மூலம் சம்பளம் பெறுகின்றனர். மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அவர்களுக்கு, அரசின் மானியம் பெற்று, சம்பளம் வழங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
எதிர்காலத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் பள்ளிகள், ’டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. அரசு அனுமதி பெற்றே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) 03.02.2017

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா?

Image may contain: one or more people and text

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா? 

அறிந்துகொள்ளலாம்..! 

உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்வோம். அவர் நம்மை நன்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ``எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க போதும்’’ என்பார். சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் பலருக்கு உடலில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், மனதில்தான் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கும். தங்களுக்கு இருப்பது மனஅழுத்தம்தான் என்பதைக்கூட பலர் உணராமல் இருப்பார்கள். கவனிக்காமல் விட்டால், இது பல மோசமான விளைவுகளை வாழ்வில் ஏற்படுத்திவிடும். 

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை 10 அறிகுறிகள் இங்கே...

எதையும் மூடி மறைப்பவர்!

'எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை’ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி கூறிக்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கும்போதும், பொது இடத்திலும் வலுக்கட்டாயமாக சந்தோஷமாக இருப்பதைப்போல் உங்களைக் காட்டிக்கொள்வீர்கள். ஆனால், தனிமையில் எதையோ பறிகொடுத்ததுபோல வெறுமையில் இருப்பீர்கள்.

அன்புக்குரியர்வர்கள் மீதே பாயும் கோபம்!

காரணம் என்று எதுவும் இருக்காது. ஆனால், உங்கள் மனைவியிடமோ, அம்மா-அப்பாவிடமோ அடிக்கடி கோபத்தைக் காட்டுவீர்கள். அப்படியானால், பல நாட்களாக வெளிப்படுத்த முடியாத அளவுக்குக் காயங்களையும் கோபத்தையையும் மனதிலேயே அடக்கி வைத்திருக்கிறீர்கள் என அர்த்தம். அதனால் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அன்புக்குரியவர்களிடம் கோபத்தைக் காட்டுவீர்கள்.

சந்தேகக் கோடு:

சின்னஞ்சிறு கணக்குகளைப் போடுவதிலும், அலுவலகத்தில் நீங்கள் வழங்கும் பிரசன்டேஷன்களிலும், அடுப்பை அணைத்தோமா, வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்பதிலும்கூட சந்தேகம் எழும். இதற்குக் காரணம், செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல், எண்ணங்கள் வேறு எங்கோ திசை திரும்பி இருப்பதுதான்.

முதலில் வேண்டும் இறுதியில் வேண்டாம்!

கல்யாணம், சினிமா, நண்பர்கள் வீடு, பார்ட்டி என்று பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். `வா... போகலாம்!’ என்று யாராவது அழைத்தால், `வேண்டாம் மூட் சரியில்லை’ என்று தவிர்த்துவிடுவீர்கள்; தனிமையை விரும்புவீர்கள். 

தூக்கமின்மை 

மனஅழுத்தம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறி தூக்கமின்மை. பகலில் எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. இரவில் தூக்கமும் வராது. சிலர் விடிய விடிய டி.வி-யைப் பார்த்தபடி படுத்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கவனம் டி.வி-யில் இருக்காது. விடிந்ததும் எதைப் பற்றி யோசித்தோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

உடல் வலி

அதிக மனஅழுத்தம், பதற்றம் காரணமாக அடிக்கடி உடல் வலி ஏற்படுவதுபோலத் தோன்றும். திடீர் என்று எடை கூடுவதுபோலவும், எலும்புகளில் வலி ஏற்படுவது போலவும் தோன்றும்.

அதிக உணவு வேட்கை 

மனதில் நிம்மதியில்லை என்றாலோ, உணர்வுகளைப் பகிர்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலோ அதிக அளவில் உணவைச் சாப்பிடத் தோன்றும். இப்படிச் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதுதானா என்றுகூட யோசிக்கத் தோன்றாது.

உணவே வேண்டாம் 

சில நேரங்களில் எதிர்மறையாகவும் நடக்கும். அதிக மனஅழுத்தத்தால் சாப்பிடப் பிடிக்காது. சாப்பிடாமல் இருப்பதால், வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்காது. சோகமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலை காணப்படும்.

காரணமற்ற அழுகை

காரணமின்றி அழத் தோன்றும். ஜன்னல் வழியாக எதையாவது பார்த்துக்கொண்டு இருந்தாலும், கண்களில் இருந்து தன்னையறியாமல் கண்ணீர் வரும். காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. எந்தக் காரணமும் இல்லாமலேயே சோகம் ஒட்டிக்கொள்ளூம். மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுதான் இதற்கு முக்கியக் காரணம்.

மேலே குறிப்பிட்டுள்ள 9 அறிகுறிகளில் குறைந்தது நான்கு அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் மனநல ஆலோசகரை அணுக வேண்டும். மனஅழுத்தத்தைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால் மற்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

நன்றி : விகடன் செய்திகள் – 03.02.2017

பி.எஃப் - புதிய கட்டுப்பாடுகள்


பி.எஃப் - புதிய கட்டுப்பாடுகள்


முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது.
அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது பி.எப். கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் பி.எப் கணக்கின் நடைமுறை.
தவிர ஊழியர்களின் சம்பள முறை அடிப்படையில் கணக்கிடும் ஒரு முறையும் உள்ளது. இதன்படி மொத்த தொகையும் தொழிலாளரின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு இவ்வளவு செலவு செய்யப்படும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இது முடிவு செய்யப்படும்.
பிஎப் கணக்கு எண்பி.எப் கணக்கில் உள்ள தொகை வங்கிக் கணக்கு போல பாவிக்கப்பட்டு அதற்கு வட்டியும் ஆண்டுக்காண்டு சேர்க்கப்படும். மேலும் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப அந்த தொகையிலிருந்து மருத்துவம், திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
நிறுவனத்திலிருந்து விலகிவிட்டால் பிஎப் கணக்கின் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்.
கோரப்படாத தொகைஆனால் வேலையிலிருந்து விலகுபவர்கள் எல்லோரும் பிஎப் பணத்தை அப்படி எடுத்து விடுவதில்லை. நாடு முழுவதும் அப்படி கோரப்படாமல் உள்ள பிஎப் பணம் மட்டும் ரூ. 27,000 கோடியாக உள்ளது. மேலும் ஒரு பணியாளர் வேறு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேரும்போது, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் கொடுத்த பி.எப். கணக்கில் தொகையை மாற்றிக்கொள்ள முடியும் என்றாலும், பல்வேறு நடைமுறை சிக்கல்களால் அதனைச் செய்வதில்லை.
எனவே பி.எப். பணத்தை உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர். சிலரோ முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை குறைவாக இருக்கும்பட்சத்தில் எடுக்காமலேயே விட்டுவிடுகின்றனர்.
இதனால் ஒரே பணியாளர் பல நிறுவனங்களுக்கு மாறும்போது ஒவ்வொரு முறையும் பல பிஎப் கணக்குகள் தொடங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்ற கொண்டு வரப்பட்டதுதான் நிரந்தர பிஎப் கணக்கு எண்.
நிரந்தர பி.எப். கணக்கு எண்ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது பி.எப். கணக்கு தொடங்கிவிட்டால், அந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறு நிறுவனங்களுக்குச் சென்றாலும் அதே பிஎப் கணக்கை வைத்துக் கொள்ளலாம். இதற்காக நாட்டில் உள்ள தொழிலாளர் அனைவருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டு, அது நடைமுறைக்கும் வந்து விட்டது.
இந்த கணக்கு மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப்.தொகையை செலுத்தலாம்
புதிய கட்டுப்பாடுசமீபத்தில் பிஎப் கணக்கில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. இதன் படி புதிய தொழி லாளர்கள் தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுப்பது குறையும். அதாவது ஒரு தொழிலாளர் 50 வயதுக்குப் முன்னர் முழு தொகையையும் எடுக்க முடியாது.
10 சதவீத தொகை கணக்கில் இருப்பு வைக்கப்படும். 50 வயதுக்கு பிறகு பி.எப் கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெறலாம். அதாவது கணக்கில் உள்ள 90 சதவீத தொகையை மட்டுமே திரும்ப எடுக்கலாம். மீதமுள்ள, 10 சதவீத தொகை அவர்கள் கணக்கிலேயே இருக்கும். 50 வயதுக்கு பின்னர்தான் அந்த தொகையை பெற முடியும்.
தி இந்து நாளிதழ் செய்தி - 04.02.2015

முகநூலுக்கு இன்று பிறந்த நாள்


முகநூலுக்கு இன்று பிறந்த நாள்

பள்ளித் தோழர்கள், அலுவலக நண்பர்கள், ரொம்ப காலம் முன்பு நம் தெருவில் குடியிருந்தவர்கள், ஏதோ ஒரு வசந்த காலத்தில் நம் கண்ணோடு கண் பேசியவர்கள், நாம் நேரில் பேச நினைத்தாலும் பேச முடியாதவர்கள் என அனைவரோடும் நம்மை இணைக்கும் ஒரு மாபெரும் பாலம் ஃபேஸ்புக்.
கேண்டி கிரஷ் ரெக்வஸ்டில் ஆரம்பித்து கே.எஃப்.சியில் புரோபசல் வரை பல உறவுகளைக் கொண்டு சென்று சேர்த்த ஃபேஸ்புக், பலநாள் பேசாத பல உறவுகளையும் ஒன்று சேர்த்துள்ளது.
நேரிலோ, கடிதத்திலோ, கிரீட்டிங் கார்டு மூலமாகவோ வாழ்த்துச் சொன்னதெல்லாம் இப்போது அவுட்-டேட். நாலு வார்த்தை டைப் செய்து கூட ஒரு ஸ்மைலி. தட்ஸ் ஆல். விஷ் ஓவர். இப்படி வாழ்த்துகளுக்குத் தூது போகும் ஃபேஸ்புக்கிற்கு இன்று பிறந்த நாள்.
ஆம், 12 வருடங்களுக்கு முன்பு 2004-ல் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர் மார்க் சக்கர் பெர்க்மற்றும் அவரது நண்பர்களின் சிந்தையினால் உதித்த குழந்தை தான் ‘தி ஃபேஸ்புக்’. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு, சில சர்ச்சைகள் என அனைத்தையும் கடந்து வெறுமனே ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் கொண்டு இன்று கோடிக்கணக்கானோரின் செல்லக்குழந்தையாய் வளர்ந்துள்ளது. தினமும் மணிக்ணக்காக ஃபேஸ்புக் யூஸ் செய்கிறோமே அதைப் பற்றி நமக்கு எந்த அளவிற்குத் தெரியும்?
ஃபேஸ்புக் பற்றிய சில சிறப்புகள் இங்கே.
பர்த் ஸ்டோரி
இன்று நாம் ஜாலியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் உருவாக பல போராட்டங்கள் பின்னனியில் உள்ளன. தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘ஃபேஸ்மேஷ்’ என்ற புராஜெக்டைத் தொடங்கினார் சக்கர் பெர்க். பின்னர் நாளடைவில் அதை மெருகேற்றி ‘தி ஃபேஸ்புக்’ உருவானது.
தொடக்கத்தில் இது ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்தது. தனது புராஜெக்டின் போது, பல்கலைக்கழக டேடா பேசில் அனுமதியின்றி ஊடுருவியதால் சக்கர் பெர்க் எச்சரிக்கவும் தண்டிக்கவும் பட்டார்.
மேலும், தன் புராஜெக்டில் தீவிரம் காட்ட உலகப் புகழ் வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார் மார்க். சீனியர் மாணவர்கள், சக்கர் பெர்க் தங்களை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக வழக்குத் தொடர, அது சில ஆண்டுகள் கழித்து பைசல் செய்யப்பட்டது.
ஏன் நீலம்?
ஃபேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலம் நீல நிறமே இருக்கக் காரணம் என்ன? ஏனெனில் ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர் பெர்க்கிற்கு நிறக்குருடுப் பிரச்னை உள்ளது. அவருக்கு பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் தெரியாது. “என் உலகம் (ஃபேஸ்புக்) எனக்கு வண்ணமயமாகத் தெரிய வேண்டும். அதனால் தான் நீல நிறம் கொட்டிக் கிடக்கிறது” என்கிறார் மார்க்.
இங்கெல்லாம் ஃபேஸ்புக் இல்லை
ஒருசில அரசுகள் ஃபேஸ்புக்கை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன. அரசியல் எதிர்ப்புக் காரணங்களால் சீனா, வங்கதேசம், ஈரான், எகிப்து, வட கொரியா, தஜிகிஸ்தான் முதலிய நாடுகள் இதுவரை ஃபேஸ்புக்கை தடை செய்துள்ளன. சில நாடுகள் தடையை நீக்கினாலும், ஒருசில நாடுகளில் இன்னும் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், தற்சமயம் சுமார் 10 கோடி பேர் ஃபேஸ்புக்கை தெரியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
போலிகள் ஜாக்கிரதைஃபேஸ்புக் வலைதளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன. தற்சமயம் மட்டும் சுமார் 87 லட்சம் பொய்யான புரொஃபைல்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர்.
வாட் ஏன் ஐடியா சர்ஜிகிரிஸ் புட்னாம் என்ற இளைஞர் 2006-ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் இணையதளத்தை தனியாளாக ஹேக் செய்தார். அப்படி அசாத்திய செயல் புரிந்த அந்த திறமைசாலி(!) இளைஞர் மீது புகார் கொடுக்காமல், அவருக்கு அங்கேயே வேலை கொடுத்து பணியிலமர்த்திக் கொண்டது ஃபேஸ்புக் நிறுவனம்.
மார்க்கின் சம்பளம் என்ன?ஃபேஸ்புக் நிறுவனர்களுள் ஒருவரான மார்க் சக்கர் பெர்க் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அப்பொறுப்பில் உள்ள அவருடைய மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு அமெரிக்க டாலர் தான்!
அரசியல் புரட்சிபல நாடுகள் அரசியல் காரணங்களுக்காக ஃபேஸ்புக்கைப் புறக்கணிக்கும் நிலையில், ஐஸ்லாந்து அரசு ஃபேஸ்புக்கை அபாரமாக பயன்படுத்தியுள்ளது. தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க முடிவெடுத்த ஐஸ்லாந்து அரசு, மக்களின் கருத்துகளை அரிய நினைத்தது. மக்களோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக் தான் சரியான தளம் என்று உணர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்டு அதை நடைமுறைப்படுத்தியது அந்நாடு. உலக அரசியலில் இது ஒரு புரட்சியாய் அமைந்தது.
இத்தனை போட்டோக்களா?சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 18 லட்சம் லைக்குகள் ஃபேஸ்புக்கில் பதிவாகின்றன. மாதம் ஒன்றிற்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் இங்கு அப்லோட் செய்யப்படுகிறதாம்.
குழந்தைகளுக்காக
தனது மகள் பிறந்ததை முன்னிட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் சொத்தில் 99 சதவிகிதத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் சக்கர் பெர்க். வருங்கால குழந்தைகளின் நலனுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே, அறக்கட்டளைகளுக்கு அதிகம் வழங்கிய நபர் என்ற நன்மதிப்பைப் பெற்றார்.
நோ பிளாக்கிங்
நமக்குப் பிடிக்காத நபர்களை நாம் என்ன செய்வோம். அன்ஃப்ரென்ட் செய்வோம். இல்லையென்றால் பிளாக் செய்வோம். ஆனால், சக்கர் பெர்க்கை நம்மால் பிளாக் செய்ய முடியாது. நிறுவனர் ஆதலால் தனக்கென்று ஸ்பெஷல் புரொஃபைலை கிரியேட் செய்துள்ளார் மார்க். நம்ம யூத் பாய்சும் அப்படி ஒன்னு எதிர்பாப்பாங்களே…
நல்லதோர் குடிமக்கள்கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களைவிட, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்கின்றது ஒரு சர்வே. 26 வயதுக்குள்ளானவர்களை விட, அதற்கு மேற்பட்டோர் தான் மிகவும் ஆக்டிவாக ஃபேஸ்புக்கை யூச் செய்கிறார்களாம்.
என்ன கொடுமை சார் இது?கடந்த 2011-ம் ஆண்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் பதிவாகும் விவாகரத்து கேட்போரில், மூன்றில் ஒரு பகுதி வழக்குகளில் ‘ஃபேஸ்புக்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதாம்.
‘ஃபேஸ்புக் நல்லதா? கெட்டதா?’, ‘அது நம்மை சோம்பேறி ஆக்குகிறது’, என்றெல்லாம் வாதிடாமல் பல கோடிக்கணக்கான வாழ்த்துக்களை நமக்காக சுமந்து வரும் ஃபேஸ்புக்கின் பிறந்த தினத்துக்காக, நாமும் அதற்கு வாழ்த்துச் சொல்வோம். மணிக்கணக்கில் பயன்படுத்தும் நாம் தானே அதற்கு சொந்தம், பந்தம் எல்லாம்.
ஹேப்பி பர்த்டே எஃப்.பி!
மு.பிரதீப் கிருஷ்ணா - (மாணவப் பத்திரிகையாளர்)
விகடன் செய்திகள் - 04.02.2016

வலிப்பு... ஏன்? எதற்கு? எப்படி?

Image may contain: text

வலிப்பு...  ஏன்? எதற்கு?  எப்படி? 

நன்றி குங்குமம் டாக்டர் 

அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு. Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் தடுக்க என்ன வழி என்ற நம் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ப்ரித்திகா சாரி.

வலிப்பு நோய் யாருக்கு வருகிறது?

‘‘உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. மூளையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கைகள், கால்களில் அடுத்தடுத்து காரணமில்லாமல் உதறல் ஏற்படுவதை வலிப்பு நோய்(Epilepsy) என்கிறோம். நமது உடலில் உள்ள நரம்பு செல்களே உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே செல்லும் மின் அதிர்வுகளில் தடை ஏற்படும் போதுதான் இதுபோல் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் வலிப்பு நோய் 10 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது, மூளை வளரும் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்த மூளை உடையவர்களுக்கு இந்த நோய் அதிக அளவு ஏற்படுகிறது.’’

வலிப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

‘‘10 பேரில் ஒருவருக்கு தூக்கமின்மை, கடுமையான வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக நாட்கள் பட்டினியோடு இருப்பது மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது என சில தூண்டுதல்களால் வலிப்பு வருகிறது. சிலருக்கு என்ன காரணத்தால் வலிப்பு வந்ததென்று கண்டுபிடிக்க முடியாமலும் போகும்.

ஆனால், பொதுவாக வலிப்பு வருவதற்கு என்று சில காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப மாறுபடும். குழந்தை பிறக்கும்போது தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். வைட்டமின் B6, கால்சியம், குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் குறைவதாலும் வரலாம். மூளைக்காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. 

இதில் 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அதிக காய்ச்சலால் ஏற்படும் வலிப்பினை Febrile Seizure என்கிறோம்.இந்த காரணங்கள் தவிர நரம்பு மண்டலத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் நச்சுத்தன்மை (காரீயம், பூச்சிமருந்துகள், சாராயம்) உடலுக்குள் செல்லும்போதும் வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி ஏற்படுவது, ரத்த ஓட்ட பாதிப்பு, மூளை வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மரபணு தன்மை போன்ற காரணங்களாலும் வலிப்பு ஏற்படுகிறது.’’

இதில் வகைகள் ஏதேனும் உண்டா?

‘‘மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் வலிப்பு நோய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. மூளையின் மொத்தப்பகுதியும் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் அந்த வலிப்பு எதிரொலிக்கும். இதற்கு Generalized Seizure என்று பெயர். இதற்குள் உட்பிரிவாக 5 வகைகள் உள்ளன.நினைவாற்றல் தவறுதல், கை, கால்களில் விறைப்புத்தன்மை மற்றும் உடல் உதறுதல், வாயில் நுரைதள்ளுதல், சில சமயம் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளோடு வருவதை Tonic clonic generalized seizure என்கிறோம்.

இந்த அறிகுறிகளோடு கை, கால் வெட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு Tonic Seizure என்று பெயர். உடல் திடீரென நிலைகுலைந்து போதல், தற்காலிக மறதி மற்றும் ஞாபகமின்மை போன்ற அறிகுறிகளோடு இருப்பதை A Tonic Seizure என்கிறோம். தலை மற்றும் உடலின் மேல்பாகத்தி–்ல் திடீரென தொய்வு ஏற்பட்டு கீழே கவிழ்ந்து விடுவதை Myoclonic Seizure என்கிறோம். சில நொடிகள் உணர்வில்லாமல் போவது மற்றும் கண்சிமிட்டுவது போன்ற அறிகுறிகளோடு இருப்பதை Absence seizure என்கிறோம்.

இதேபோல் மூளையில் குறிப்பிட்ட பாகத்தில் ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய வலிப்பிற்கு Partial Seizure என்று பெயர். இந்த பிரிவில் 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் உடலிலுள்ள முகம், கை, கால் போன்ற ஏதாவது ஒன்றில் ஒரே பக்கத்தில் வெட்டுதல் ஏற்படுகிறது. நினைவாற்றல் மாறாமல், உடலின் ஒரு பாகத்தில் கை, கால்களில் வெட்டுதல் ஏற்படுவதை Simple partial Seizure என்கிறோம்.

நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டு, நினைவு தவறுதல், மனக்குழப்பம் மற்றும் பிதற்றுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பதை Complex partial Seizure என்கிறோம். இந்த வகையினர் சில சமயம் சுயநினைவில்லாமல் அங்கும் இங்குமாக நடப்பது, ஆடைகளைக் கழற்ற முயற்சிப்பது, வாய், முகபாவனைகளில் மாற்றம் ஏற்படுவது, இதைத் தொடர்ந்து குழப்பமான முகத்தோற்றத்தோடும் இருப்பார்கள்.  இதனால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.’’

வலிப்புக்கான சிகிச்சைகள் என்ன?

‘‘வலிப்பு நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை வலிப்பு என்பதை மருத்துவர் முதலில் கண்டறிய வேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, EEG பரிசோதனைகள், எம்.ஆர்.ஜ. ஸ்கேன் மற்றும் வீடியோ டெலிமெட்ரி பரிசோதனைகள் மூலமாக வலிப்பு நோயின் தன்மைகளை கண்டறியலாம்.வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர் சரியான மருந்தை சரியான அளவில் கொடுக்கும்போது பலருக்கு வலிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

அப்படி வலிப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதபோது மூளை அறுவைச் சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) மருத்துவ முறை அவர்களுக்கு பரிசீலிக்கப்படுகிறது. 70 சதவிகிதம் வலிப்பு உள்ளவர்களுக்கு 3 முதல் 5 வருடங்கள் வரை மருந்துகள் சாப்பிட்ட பின்பு வலிப்பு வராமல் இருந்தால் மருந்துகளை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது.பெரும்பாலும் வலிப்பு நோயின் பாதிப்புகளை மருத்துவர்களால் நேரில் பார்க்க முடிவதில்லை. 

அப்படி பாதிப்பின் அறிகுறிகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் தகவலானது, நோய் பாதிப்பின் தன்மைகளை அறிந்து, மருத்துவர் சரியான சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். அதற்கு வலிப்பின் அறிகுறிகள் பற்றிய சரியான தகவல்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வலிப்பு வருகிறபோது செய்ய வேண்டிய முதலுதவிகளை தெரிந்து கொள்வதும் அவசியம்.’’

 வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?   

‘‘வலிப்பு நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் பயம் கொள்ளவோ, பதற்றப்படவோ கூடாது. அவரை சுற்றியுள்ள சூழ்நிலையை அமைதியாக்க வேண்டும். வலிப்பு வந்தவர்களை கீழே விழாதவாறு பிடித்து தரையில் அமர்த்த வேண்டும். வலிப்பு வந்தவரின் தலையின் கீழ் மென்மையான துணி அல்லதுதலையணையை தலையில் அடிபடாமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.

உடலில் அடிபடாமல் இருக்க அருகிலுள்ள பொருட்கள் மற்றும் அவரது கையில் உள்ள கூர்மையான பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. உடல் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் இருக்கமாக இருந்தால், தளர்வுபடுத்த வேண்டும். சுவாசம் சீராக இருக்க ஒரு பக்கமாக உடலும், தலையும் இருக்கும்படி திருப்பி வைக்க வேண்டும். இதனால் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் மூச்சுக்குழலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது. 

வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை, அருகிலிருந்து கவனித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.முக்கால்வாசி வலிப்புகள் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் அதுவாகவே அடங்கிவிடும். அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

வலிப்பு வந்தால் செய்யக் கூடாதவை என்ன?

‘‘வலிப்பின் போது ஏற்படும் கை, கால் வெட்டுதலை அடக்கிப் பிடிக்கக் கூடாது. கையில் சாவி கொடுப்பது, மூக்கில் செருப்பைக் காட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. வாயிலிருந்து வெளிவரும் நுரை மூச்சுக்குழலுக்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை எந்த விதமான ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. வலிப்பின்போது மருந்து, மாத்திரை மற்றும் தண்ணீ–்ர் கொடுக்கக் கூடாது. வாயில் எந்த பொருளையும் திணிக்கக் கூடாது. ஆபத்தான சூழ்நிலை தவிர மற்ற சூழ்நிலைகளில் வலிப்பு முழுவதும் நிற்கும் வரை வலிப்பு வந்தவர்களை அந்த இடத்தைவிட்டு மாற்ற முயற்சிக்க கூடாது.’’

வலிப்பு நோயைத் தடுக்க செய்ய வேண்டியது என்னென்ன?

‘‘வலிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை அறிந்து, அதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலிப்புக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல், தூங்கிக்கொண்டே இருத்தல், நிலையாக நிற்க இயலாமை, கை, கால் நடுக்கம், மாறுபட்ட செயல்பாடுகள், வயிற்று எரிச்சல், தோல் தடிப்புகள், எடை கூடுதல், வாய் உலர்ந்துபோதல், கண்பார்வை கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

வலிப்பு சிலருக்கு தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் சிலருக்கு வலிப்பு ஏற்பட காரணமாகிறது. இதனால் சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது அவசியம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் இடம் காற்றோட்டமாக, வெளிச்சமின்றி, மிதமான தட்பவெப்ப நிலையில் இருப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. 

இயற்கையான உணவு வகைகளை சாப்பிடுவதோடு, சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.உணவில் காய்கறிகள், பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். 

வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, படிப்பது மற்றும் பிறரைப் போன்று வேலைகள் செய்வதை மருத்துவரின் ஆலோசனையுடன், சில கட்டுப்பாடுகளோடு செய்யலாம். வலிப்பு நோய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மற்றவர்களைப் போன்று, எல்லோருடனும் இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்!’’

- க.கதிரவன்

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.02.2017

மதுரை மாவட்ட கலெக்டர் மீதான சிறை உத்தரவு ரத்து

Image may contain: text

மதுரை மாவட்ட கலெக்டர் மீதான சிறை உத்தரவு ரத்து

மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உசேன் முகம்மது, மற்றும் ஜவஹர் அலி ஆகியோருக்கு வருவாய்துறை பட்டா வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேருக்கும் பட்டா வழங்க வேண்டுமென 2014-ல் மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு கூறியது. 

நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாததால் கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு 6 வார கால சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில்மனுதாரர் இருவருக்கும் வருவாய்துறை பட்டா வழங்கியதை அடுத்து மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 03.02.2017

யூடியூப்புக்கு மாற்று இவை...!

Image may contain: text

யூடியூப்புக்கு மாற்று இவை...!

இணையத்தில் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களைப் பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம்தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வுத் தளமாக விளங்கும் நிலையில், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன.
 அவற்றைத் தெரிந்துகொள்வது உங்கள் இணைய அனுபவத்தை மேலும் செழுமையாக்கவும் உதவும். மாற்று வீடியோ தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் தளங்களில் முக்கியமான தளங்களின் பட்டியல் இதோ:

வீமியோ

யூடியூப் தவிரவும் அறிந்திருக்க வேண்டிய வீடியோ தளமாக ‘வீமியோ’ கருதப்படுகிறது. இணையத்தின் ஆரம்ப கால வீடியோ தளங்களில் ஒன்று. 2004-ம் ஆண்டு தொட‌ங்கப்பட்ட இந்தத் தளத்தின் பெயர் ஆங்கிலத்தில் வீடியோ + மீ (வீடியோவும் நானும்) ஆகிய வார்த்தைகளின் சேர்க்கையாக அமைந்துள்ளது. மிகவும் துல்லியமான வீடியோக்களைப் பார்க்கும் வசதியை அளித்த முதல் வீடியோ தளமாகவும் இது கருதப்படுகிறது.
Image result for VIMEO

இதன் முகப்புப் பக்கத்திலேயே பல விதமான வீடியோக்களைப் பார்க்கலாம். முகப்புப் பக்கத்தில் வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்திற்கு நாம் பழகிவிட்டால், இணையவாசிகள் தங்களுக்குத் தேவையான தலைப்பை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அனிமேஷன், ஆவணப்படங்கள், இசை, ஃபேஷன், உணவு என 20-க்கும் மேற்பட்ட தலைப்புகள் இருக்கின்றன. இவை தவிர பிரத்யேகப் பரிந்துரைகளும் இருக்கின்றன. வீமியோ தயாரிப்பு வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம்.

தரமான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பதோடு இதில் உறுப்பினராக வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ளலாம். அடிப்படை சேவை இலவசமானது என்றாலும் கூடுதல் அம்சங்களுடன் கட்டணச் சேவைகளும் இருக்கின்றன. பயன‌ர்கள் தாங்கள் விரும்பும் வீடியோ பிரிவில் உறுப்பினராக இணைந்து புதிய வீடியோக்களைப் பின்தொடரலாம்.

இணைய முகவரி: https://vimeo.com/

டெய்லிமோஷன்

வீமியோவுக்கு நிகராக மாற்று வீடியோ தளங்களில் பிரபலமான தளம் ‘டெய்லிமோஷன்’. பயனர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய வீடியோ தளம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் பழமையான வீடியோ சேவை தளம்தான். இது பிரெஞ்சு இணைய சேவை. ஆனால் உலகளாவிய வீடியோக்களைக் கொண்டது.
Image result for Daily motion

இதன் முகப்புப் பக்கத்தில் வரிசையாக வீடியோக்களின் பட்டியலைப் பார்க்கலாம். விளம்பரங்களின் ஊடுருவலை மீறி முகப்புப் பக்கம் எளிமையாகவே இருக்கிறது. எண்ணற்ற சேனல்கள் இருக்கின்றன. விரும்பமான சேனல்களைப் பின்தொடரும் வசதியும் இருக்கிறது. பிரபலமான சேனல்களும் முன்னிறுத்தப்படுகின்றன. உறுப்பினராக இணைந்து வீடியோக்களை எளிதாகப் பதிவேற்றலாம். ஆனால் பதிவேற்றும் வீடியோக்களுக்கு ஒரு மணி நேரம் அல்லது 4 ஜிபி கொள்ளளவு எனும் வரம்பு இருக்கிறது.

டெய்லிமோஷன் கேம்ஸ், டெய்லிமோஷன் ஸ்ட்ரீமிங் ஆகிய உப சேவைகளும் இருக்கின்றன. வீடியோக்களைத் தேடும் வசதியும் இருக்கிறது. இந்தியப் பதிப்பும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இணைய முகவரி: http://www.dailymotion.com/in

மெட்டாகேஃப்

மற்றொரு அருமையான வீடியோ தளம் மெட்டாகேஃப். 2003-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் ‘தி கலெக்டிவ்’ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இணையத்தின் மூன்றாவது பிரபலமான வீடியோ தளம் என்று கருதப்படுகிறது.
Image result for Meta cafe

இதன் முகப்புப் பக்கம் அதிகச் சிக்கல் இல்லாம, வீடியோக்களை முன்வைக்கிறது. சமீபத்திய வீடியோ, முன்னணி வீடியோ, இப்போது பிரபலமாக இருப்பவை என மூன்று வகைகளில் வீடியோக்களைப் பார்க்கலாம். விரும்பிய சேனல்களில் சந்தாதாரராகச் சேரலாம். விரும்பிய வீடியோக்களைத் தேடியும் கண்டறியலாம்.

இணைய முகவரி: http://www.metacafe.com/

லைவ்ஸ்ட்ரீம்

யூடியூப் போன்ற இணையதளம்தான். ஆனால் நேரலை ஒளிபரப்புக்கானது. உலகம் முழுவதும் இருந்து நேரலை ஒளிபரப்பு வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம். பல்வேறு பிரிவுகளின் கீழ் வீடியோக்களைக் காணலாம்.
Image result for livestream

இந்திய, தமிழ் சேனல் வீடியோக்களையும் பார்க்கலாம். நேரலை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமெனில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

இணைய முகவரி: https://livestream.com/

ஓப்பன் வீடியோ

வீடியோக்களுக்கான நூலகம் போலச் செயல்படுகிறது இது. ஆய்வு நோக்கில் வீடியோக்கள் சேகரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன‌. பெரும்பாலும் கல்வி சார்ந்த வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


ஆவணப்படங்களின் தொகுப்பும் உள்ளது. அமெரிக்காவின் நாசா அமைப்பின் வீடியோக்களையும் காணலாம்.

இணைய முகவரி: https://open-video.org/

இவை தவிர நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளமான ஹுலு, சோனி நிறுவனத்தின் கிராக்கில், இணைய டிவி என்று வர்ணிக்கப்படும் வியோ, செய்தி வீடியோக்களுக்கான லைவ்லீக், நகைச்சுவை வீடியோக்களுக்கான பிரேக்.காம், வழிகாட்டல் வீடியோக்களுக்கான வீடியோஜக் உள்ளிட்ட வீடியோ தளங்களும் இருக்கின்றன. ஃபிளிக்கர், மைஸ்பேஸ், டிவிட்ச் உள்ளிட்ட தளங்களின் மூலமும் வீடியோக்களைக் காணலாம்.

சைபர் சிம்மன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 03.02.2017

Thursday, February 2, 2017

டீ மேட் அக்கவுண்ட் என்றால் என்ன?

No automatic alt text available.

டீ மேட் அக்கவுண்ட் என்றால் என்ன?

டீ-மேட் ஏன்? எதற்கு?
ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள்.
ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.
மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா?
அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள்.
சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள்.
அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!
இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்?
அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா?
அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..
சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன.
நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?
இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது.
காகிதமா ? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.
அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது.
உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார்.
ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.
அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள்.
NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று.
பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.
இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள்.
அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.
டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி ?ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை.
அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.
கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும்.
மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு ? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.
ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள்.
இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.
ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும.
டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள். அவ்வளவு தான்.
நன்றி : எஸ்காஉயிரோசை வார இணைய இதழ்

பணம் இல்லாவிட்டாலும் தொழில் தொடங்கலாம்


பணம் இல்லாவிட்டாலும் தொழில் தொடங்கலாம்

தொழில் தொடங்கத் தகுதியும், திறமையும் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால், தொழில் தொடங்கத் தேவையான பணம் இருக்காது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், எங்காவது மாத ஊதியத்துக்கு வேலை செய்து தங்களது வாழ்நாளைக் கழிக்கின்றனர்.
இத்தகையவர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
உற்பத்தியைச் சார்ந்த தொழில் பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் தொடங்க ரூ.1 லட்சமும் கடனுதவி வழங்க வங்கிகளுக்குத் தொழில் மையங்கள் பரிந்துரை செய்கின்றன.
திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினருக்கு சொந்த முதலீடு 10 சதவீதம் இருக்க வேண்டும். இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோர் 5 சதவீதம் சொந்த முதலீடு வைத்திருந்தால் போதுமானது.
தொழில் முனைவோர் 7 நாள்கள் பயிற்சியைக் கண்டிப்பாகப் பெற வேண்டும். இப்பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்த பின்னர்தான் வங்கிக் கடனுதவியின் முதல் பகுதி வழங்கப்படுகிறது.
கடனுதவி கோருவோரின் வயது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விலைப் பட்டியல் அசலுடன், ரூ.20 முத்திரைத் தாளில் நோட்டரி பப்ளிக்கிடம் உறுதிமொழிப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். செய்யவுள்ள தொழிலின் வரைவுத் திட்ட அறிக்கையும், பொருளின் சந்தைவாய்ப்பு, லாப விவரம், அத்தொழிலில் உள்ள அனுபவம் குறித்த முன் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழு நடத்தும் நேர்முகத் தேர்வுக்குப் பின்பு, தகுதியானவருக்கு கடனுதவி வழங்கப் பரிந்துரை செய்யப்படும். இதுமட்டுமின்றி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை கடன் தொகை வழங்கத் தொழில் மையம் வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யும். கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது உற்பத்தி தொடங்கிய நாள் இதில் எது முன்னர் உள்ளதோ அன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
அரசிடம் இருந்து மானியத் தொகை மாவட்டத் தொழில் மையத்துக்குப் பெறப்பட்டவுடன், முன்னோடி வங்கியில் செலுத்தப்படும். வங்கி மேலாளர் அரசு மானியத் தொகையை 3 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட பயனாளியின் பெயரில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வட்டி கிடையாது. பின்னர் பயனாளியின் வங்கிக் கணத்தில் தொகை வரவு வைக்கப்படும்.
பயனாளியின் தொழில் நிறுவனத்தில் தொழில் மைய அலுவலர்கள் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்துவார்கள். மேலும், சந்தைவாய்ப்பு, விற்பனை, மூலப் பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட தொழில் நிமித்தமாகவும் அவர்கள் வழிகாட்டுவர்.
தினமணி - இளைஞர் மணி - 26.01.2016