disalbe Right click

Thursday, February 16, 2017

குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்:உச்ச நீதிமன்றம் அலசல்

Image may contain: 1 person, text

குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்:உச்ச நீதிமன்றம் அலசல்

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தர வில் இருந்த குளறுபடிகளை, உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

அதன் விபரம்:

* ஆந்திர மாநிலம், ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் இருந்து, விவசாயம் மூலம், 52.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், 5.78 லட்சம் ரூபாயாக குறிப்பிடப்பட்ட வருமானத்தை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், விவசாய வருமானத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.

ஆனால், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை அப்படியே ஏற்று, விவசாய வருமானத்தை, 52.50 லட்சம் ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

* சாட்சியங்களை முழுமையாக புறக்கணித்த தோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு மற்றும் உத்தரவு, குற்றவியல் நீதிமன்றத்தை தானாக கட்டுப்படுத்தாது என்றாலும், அதை யும், உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது; அது சரியல்ல

* வங்கி கடன்கள் உள்ளிட்ட கடன் தொகையை, வருமானமாக உயர் நீதிமன்றம் எடுத்துள்ளது. வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்ட கடன்களை, தவறுதலாக கூட்டி, 24.17 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டியுள்ளது. ஆனால், சரியான கணக்குப்படி பார்த்தால், 10.67 கோடி ரூபாய் தான் இருக்க வேண்டும்

* அரசு தரப்பு கூறியுள்ள, 5.99 கோடி ரூபாயை கழித்த பின், 18.17 கோடி ரூபாய் வருமானமாக, உயர் நீதிமன்றம் காட்டியுள்ளது. இதன்மூலம், கடன் தொகை முழுவதையும் வருமானமாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டி தவறு செய்துள்ளது; இதை ஏற்க முடியாது

* ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், சட்டப்படியான வருமானம் இல்லை என்பதால், அதை வருவாய் ஆதாரமாக, லஞ்ச ஒழிப்புத் துறை காட்டவில்லை. நகைககள், ரொக்கம், 'டிமாண்ட் டிராப்ட்' மற்றும்வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள் என பரிசுப் பொருட் கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது

* மொத்தம், 1.26 கோடி அளவுக்கு பரிசுப் பொருட்கள் வந்ததாக, கூறப்பட்டுள்ளது. ஆனால், 1.5 கோடி ரூபாய் அளவுக்கு, பரிசுப் பொருட்கள் பெற்றதாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. இந்தப் பரிசுப் பொருட்களை, ஜெயலலிதாவின் வருமானமாக கருதி, அதற்கு வரி விதிக்கப்பட்டு, வரியும் ஜெயலலிதாவால் செலுத்தப்பட்டுள்ளது. இதை, சிறப்பு நீதிமன்றம் கவனித்துள்ளது.

கட்சி தொண்டர்கள் அளித்த சாட்சியங்களை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது; பரிசு பொருட்கள் மூலம் வருமானம் வந்ததாக, ஜெயலலிதா கூறியதையும், சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

* சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, எந்த வழியிலும் நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததையும், ஜெயலலிதா தரப்பில்முன்வைக்கப்பட்ட வாதத் தையும் ஏற்றுக் கொண்டுள்ளது

* சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை நிராகரிக்கும் வகையில், ஏற்றுக் கொள்ளும் வகையிலான காரணத்தை, உயர் நீதிமன்றம் கூறவில்லை. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்க, உயர் நீதிமன்றமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

* 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்.,' நிறுவனங்களுக்கான வருவாயாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டதற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

சந்தாதாரர்களிடம் இருந்து, டிபாசிட் திட்டமாக, 14.10 கோடி ரூபாய் சந்தா தொகையாக வந்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நம்பவில்லை. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பின் தான், இந்த டிபாசிட் திட்டம் என்கிற கதை வந்ததாக, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விஷயங்களுக்குள் எல்லாம், சிறிதளவே உயர் நீதிமன்றம் சென்றாலும், ஜெயா பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தின் வருமானமாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. 

எங்களைப் பொறுத்தவரை, போதிய ஆதாரங் களை சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்து, முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு, கூடுதலாக, நான்கு கோடி ரூபாயை வருமானமாக எடுத்து கொள்ள, உயர் நீதிமன்றம் அனுமதித்ததில் நியாயமில்லை

* சூப்பர் டூப்பர், 'டிவி' நிறுவனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது; ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. 

இதற்காக, உயர் நீதிமன்றம் பரிசீலித்த ஆதா ரத்தை, எங்களால் ஏற்க முடியவில்லை. எனவே, ஒரு கோடி ரூபாய் வருமானத்தை, ஏற்க முடியாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் – 

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.2017

இந்நாள் முதல்வரின் முன்னாள் வரலாறு

Image may contain: 4 people, text

இந்நாள் முதல்வரின் முன்னாள் வரலாறு

அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள்.
நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம்.
அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர்.
அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி!
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் கடைக்குட்டி பழனிசாமி. கல்லூரியில் படிக்கப் பிடிக்காமல் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர்.
காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் 'வெல்ல மூட்டை’, 'சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழிவைத்தார்கள். ஆனால், 'அதற்கு எல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகுமா?’ எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்தார்.
அந்த வட்டாரத்தில் 'பங்காளிச் சண்டை’ மிகப் பிரசித்தம். அப்படி பழனிசாமி குடும்பத்தின் பங்காளி வகையறாவுக்குள் 10 அடி நிலத்துக்காக மூண்ட மோதல், எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் கொலையாகும் வரை சென்றது. அந்த வழக்கில் சிக்கிய பழனிசாமியோடு சேர்ந்து சிலர் மீது நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அரங்கேற, வழக்கு தள்ளுபடி ஆனது. சமரச உடன்படிக்கை எல்லாம் ஏற்பட்டு ஒருவழியாக மீண்டார்கள் பழனிசாமி தரப்பினர்.
அதன் பின்னர் ஆவேசத்தை அடக்கியேவாசித்தார் பழனிசாமி.
சமூகப் பெரியவர்கள் மூலம் செங்கோட்டையனுடன் கிடைத்த அறிமுகம், பழனிசாமியின் அரசியல் தாயமாக அமைந்தது. 1991-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பழனிசாமி,
அதன் பிறகு அரசியலில் ஏற்ற இறக்கங்களுடனேயே பயணித்தார். 'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை’யாக செங்கோட்டையனைப் புறம்தள்ளி வளர்ந்தார்;
ஏக உட்கட்சி எதிரிகளைச் சம்பாதித்தார்; தேர்தல்களில் தோற்றார்; கட்சிப் பதவிகளை இழந்தார் என பல தகராறுகளுக்குப் பிறகு 'மன்னார்குடி’ ராவணன் நிழலில் பதுங்கினார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 'இந்த முறை அமைச்சராக இல்லாவிட்டால், தன்னைக் கட்சியில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்’ எனக் கணித்தார். மன்னார்குடி சேனலிடமே சரணடைந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஒருவழியாக மந்திரி பதவியைப் பிடித்தார்.
துறையில் சாதித்தது என்ன?
தமிழ்நாடு முழுக்க 62,294 கி.மீட்டருக்கு நீளும் சாலையைப் பராமரித்துவருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 11,752 கி.மீ. அந்தச் சாலைகளின் அவலங்களை வாகன ஓட்டிகளிடம் கேட்டால், கதைகதையாகச் சொல்வார்கள்.
பல்லாங்குழிகளாக அல்ல.... நவீன மழைநீர் சேகரிப்புக் குட்டைகளாக அவை பல் இளிக்கின்றன. ஓர் அமைச்சர் எதையெல்லாம் சாதித்தார் என்றுதானே ஒரு பட்டியல் இருக்க வேண்டும். ஆனால், நம் அமைச்சருக்கு எதையெல்லாம் சாதிக்கவில்லை என்ற பட்டியல்தான் நீளம்.
இதோ நீள்கிறது!
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைக்கும் திருவான்மியூரில் ஏக போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்ப்பதற்காக ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை, நீலாங்கரையில் இணைக்கும் வகையில் இரண்டு கி.மீ தூரத்துக்குப் புதிய சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க, 204.20 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்ட திட்டம் அந்தரத்தில் நிற்கிறது.
2,160 கோடி ரூபாய் செலவில், சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் முடியவில்லை.
'மதுரையில் மாட்டுத்தாவணி அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ நீள மதுரை சுற்றுச்சாலை, 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச் சாலையாக உருவாக்கப்படும்’ என்றார்கள். அது நிறைவேறவில்லை.
'அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நாமக்கல்-திருச்செங்கோடு சாலையின் 30.88 கி.மீ தூர இருவழிச் சாலை, 126 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்’ எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா. பணிகளுக்கு பிள்ளையார் சுழிகூட விழவில்லை.
ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை 57 புதிய பாலங்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவை ஆட்சி முடியும் தருணத்திலும் முழுமை பெறவில்லை.
'சென்னையில் வியாசர்பாடி மேம்பாலம் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார் பழனிசாமி. எந்த அக்டோபர் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
'எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என 110-ம் விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். அது எப்போது நிறைவேறும் எனத் தெரியாது!
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவதாகச் சொல்லி 'தொலைநோக்குத் திட்டம்-2023’ என ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில், பல வண்ண கலர் மத்தாப்புகள் கண் சிமிட்டின. அதிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றி விரிவாகவே அலசியிருந்தது விஷன்-2023. '15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 4.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 4,000 கோடி ரூபாய்கூட ஒதுக்கப்படவில்லை!
ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் டபுள் செஞ்சுரியை எட்டப்போகின்றன. அவற்றில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகள் வெளியிட்டார். இதில் ஆறு பணிகளே முடிக்கப்பட்டிருக்கின்றன. நில எடுப்பிலும் திட்ட அறிக்கை தயாரிப்பிலும் எஞ்சிய அறிவிப்புகள் கிடக்கின்றன. ஆனால், ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு, அரசாணைகள் போட்டதையே பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர். எங்கே போய் முட்டிக்கொள்ள?!
திக்கித்திணறும் சென்னை!
'புதிய எல்லைச் சாலை மூலம் மாமல்லபுரமும் எண்ணூரும் இணைக்கப்படும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி துறைமுக வடக்கு இணைப்புச் சாலை வழியாக, கிழக்குக் கடற்கரை சாலை - மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு வரையில் அமைக்கப்படும் இந்த எல்லைச் சாலையைச் சுற்றிலும் இணைப்புகளை ஏற்படுத்தி, எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன், திறமையான வணிகப் போக்குவரத்துக்கும் துறைமுக இணைப்புக்கும் உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டது.
ஆனால், திட்டம் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டு நிதி உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் காத்திருக்குமா?
சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு சட்டமன்ற விதி 110-ன் கீழ் ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் 250 கி.மீ சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன்கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்திருந்தார்கள்.
முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்தப் பணிக்கு இப்போதுதான் ஒப்புதலே கிடைத்திருக்கிறது. இனி அது எப்போது தொடங்கி எந்த நூற்றாண்டில் நிறைவேறுமோ?!
புறக்கணிக்கப்படும் திருவள்ளுவர்!
கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகள் போய் வருவதற்காக, மூன்று படகுகளை இயக்கிவருகிறது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகள் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் போய் வருகிறார்கள்.
ஆனால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதால், திருவள்ளுவர் சிலையை மாற்றாந்'தாய்’ மனப்பான்மையுடனேயே அணுகுகிறது அ.தி.மு.க அரசு. பல சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் கப்பல் போக்குவரத்து நடத்திவிட்டு, பருவநிலை, கடல் அலைச் சீற்றம் எனக் காரணம் சொல்லி, பக்கத்திலேயே இருக்கும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல மறுக்கிறார்கள்.
'வள்ளுவர் சொல்லிய உலகப் பொதுமறை கருத்துக்கள் எல்லாம், உலகத்துக்குத்தான்... நமக்கு இல்லை’ என நினைத்துவிட்டார்கள்போல!
டோல்கேட் கொள்ளை!
'சாலை அமைக்க 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு 3,500 கோடி ரூபாய் வரையில் டோல்கேட்டில் வசூல் செய்கிறார்கள். சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை; மின் விளக்குகள் இல்லை; வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லை; சர்வீஸ் சாலையும் இல்லை; சுங்கச்சாவடிகளையும் முறைப்படுத்துவதோடு தனியார் வசம் உள்ள சுங்கச்சாவடிகளை ரத்துசெய்துவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு பல கட்டமாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
ஆனால், இது எதற்கும் 'எடப்பாடியாரிடம்’ இருந்து ரியாக்‌ஷனே இல்லை. அரசியல் கட்சிகள் பலத்த போராட்டம் நடத்தியபோதும் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோதுதான் திருவாய் மலர்ந்தார்.
அப்போதும் என்ன சொன்னார் தெரியுமா? 'சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் ஒரே சீராகக் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்’
இந்தக் கோரிக்கையை வைக்க ஓர் அமைச்சர் எதற்கு...
அவருக்குக் கீழ் செயல்பட இத்தனை அதிகாரிகள் எதற்கு?!
___________________________________________________________________________
செங்கோட்டையனுக்கு செக்!
அரசியலில் செங்கோட்டையன்தான் பழனிசாமிக்கு ஏணி. ஆனால், அ.தி.மு.க அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை, அங்கு இருந்து தூக்கியடித்ததில் பழனிசாமிக்குப் பெரும் பங்கு உண்டாம்.
செங்கோட்டையன் மீண்டும் தலையெடுத்து வந்துவிட்டால் ஐவர் அணியில் இடம்பெற்று இருக்கும் தன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், செங்கோட்டையன் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருக்கிறாராம் எடப்பாடியார். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் தங்கமணி... இந்த மூவர் கூட்டணி நடத்தும் 'பவர் பாலிட்டிக்ஸில்’ பலர் சத்தம் இல்லாமல் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்களாம்!
______________________________________________________________________________
சாதிக்காரர்களுக்கே சான்ஸ்!
எதிர்க்கட்சிக்காரனாக இருந்தாலும் தன் சாதியைச் சேர்ந்தவர் என்றால், நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட்டுகள் அவருக்கே ஓ.கே செய்யப்படுமாம். சொந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் வேறு சாதியினர் என்றால்... தடாதான்! துறையில் மட்டும் அல்ல, கட்சிப் பதவிகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த கட்சித் தேர்தலில் சேலத்தின் 23 ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்துக்கு சிபாரிசு போக பெரும் வசூல் வேட்டையும் அமைச்சர் பேரைச் சொல்லி நடந்ததாம்! தலைமைக்கு இது புகாராகச் சென்றாலும், 'ஐவர் அணியில் ஒருவர்’ என்பதால் பழனிசாமி மீதான புகார்கள் 'மியூட்’ செய்யப்பட்டுவிடுகிறதாம்!
_______________________________________________________________________________
குண்டக்க மண்டக்க புகார்கள்!
வகைதொகை இல்லாமல் பழனிசாமி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதையும் எதிர்க்கட்சிகளே வாசிக்கின்றன. 'அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்தது பா.ம.க.
ராமதாஸ் அளித்த அந்தப் புகார் பட்டியலில் பழனிசாமியைப் பற்றி விரிவான அத்தியாயங்கள் இருந்தன. 'கோகோ கோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு. அதில் அமைச்சர் பழனிசாமியுடன் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார்வாசித்தது அந்த மனு.
காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், 'அமைச்சர் பழனிசாமி வீட்டில் 1,000 கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள்’ எனத் திரி கொளுத்தினார். 'தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைக்கும் தொகையை அமைச்சர் பழனிசாமி வீட்டில், சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகப் பதுக்கிவைத்திருப்பதாக, சேலம் ஏரியாவில் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.
வருமான வரித் துறையும் தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லாம் கொந்தளித்தார் இளங்கோவன். உடனே அவர் மீது வழக்கு போட்டார் பழனிசாமி. ஆனாலும் சளைக்காத ஈ.வி.கே.எஸ்., 'அமைச்சர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, குறுக்குவிசாரணை நடத்துவேன்’ என அதிரடித்தார்.
______________________________________________________________________________
அமைச்சரை இயக்கும் படை!
அமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. 'வெகுளி’ என்ற பட்டத்தோடு உலாவருகிறார். ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அமைச்சர் பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம். அமைச்சரின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குருசாமி, வாழப்பாடி குபேந்திரன், வளத்தி வெங்கடாசலம், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, அரியானூர் பழனிசாமி, சேலம் ஜங்ஷன் பாவா, கவுன்சிலர் சசிகலா, வீராணம் முத்துசாமி, சங்ககிரி நிலவள வங்கித் தலைவர் கந்தசாமி... என அமைச்சர் ஆதரவாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கட்சியினர்!
______________________________________________________________________________
பயமா... பாசமா?
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் அமைச்சர் இல்லாத நாட்களில், மாவட்டத்தின் நிழல் அமைச்சர். இவர் எங்கு போனாலும் 10 கார்கள் புடைசூழச் செல்வார். அமைச்சரின் முன்பே இவரை, 'வாங்க மாவட்டம்’ என அழைப்பார்கள் கட்சிக்காரர்கள். அமைச்சரும் அதை ரசிக்கிறார். அமைச்சருக்கு இளங்கோவன் மீது பாசமா... பயமா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, இளங்கோவன் பழனிசாமியுடன் நெருக்கமாக உலா வருகிறார். ஏனென்றால், அமைச்சரின் 'ஆல் இன் ஆல்’ தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன்தானாம்!

ஆனந்த விகடன் - 21 Oct, 2015 இதழில் இருந்து

Wednesday, February 15, 2017

வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?

Image may contain: 1 person, text
வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?
மாநில ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின்உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு அதிகாரி அல்லது அரசியல் ரீதியாக பதவி வகிக்கும் ஒருவரின் மாத வருமானம், 70 ஆயிரம் ரூபாய் என, வைத்துக் கொள்வோம். இதை, 12 மாதத்துக்கு கணக்கிட் டால்,
(12 x Rs.70,000 = Rs. 8,40,000/-)
8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்; இதுவே, இவரது ஆண்டு வருமானம்; அதாவது வருவாய். இவருக்கு மனைவி, கல்லுாரிகளில் படிக்கும் இரு பிள்ளைகள், வயதான தாய், தந்தை இருப்பதாக கொள்வோம்.
மாதம்தோறும் குடும்பம் நடத்துவதற்கான செலவு, பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, தாய், தந்தையருக்கான மருத்துவ செலவு, வீடு, வாகன கடன் அடைப்பு உள்ளிட்ட, அத்தியாவசிய செலவுகள், 50 ஆயிரம் ரூபாய் ஆவதாக கணக்கிட்டால், ஆண்டுக்கான மொத்தச் செலவு, ஆறு லட்சம் ரூபாய். இதை, மொத்த வருமானம், 8 லட்சத்து, 40 ஆயிரத்தில் இருந்து கழித்தால், 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கும்; இதுவே, இவரது சேமிப்புத் தொகை
Rs. 8,40,000/- 
12 x Rs.50,000 = Rs. 6,00,000/-
Balance Rs. 2,40,000/-
ஆனால், அதிகப்படியாக, அதாவது, 30 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக வைத்துக் கொண்டால், 2 லட்சத்து, 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் பணம், நகை, சொத்துக்கள், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டவை. அதாவது, அந்த நபர், தன் பதவியை பயன்படுத்தி, லஞ்சம், ஊழல் மூலமாக திரட்டப்பட்டவை. இந்த கணக்கீட்டின்படியே, சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஒருவேளை, அதிகாரியின் மனைவி, திருமண மாகாத மகன் அல்லது மகள், வேலைக்குச் செல்பவராகவோ அல்லது தொழில் செய்பவராகவோ இருப்பின், அவர்களது வருமானமும் மேற்கண்டவாறே கணக்கிடப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.201

Monday, February 13, 2017

இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் (IFSC)

இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் (IFSC)
இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் (IFSC - Indian Financial System Code) என்பதே ஐஎஃப்எஸ்சி-யின் விரிவாக்கம், 
ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும். 
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT - National Electronic Funds Transfer) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்றம் (RTGS - Real Time Gross Settlement) போன்ற மின் பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு வங்கி கிளைக்கும் ஒரு 11 இலக்க தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு நிதி பரிமாற்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள் பட்டியலுடன், ஐஎஃப்எஸ்சி குறியீடுகளும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியிலப்பட்டுள்ளது. 
இந்த எண்ணுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
11 இலக்கங்களில், முதல் 4 எழுத்துக்கள் வங்கியையும் கடைசி ஏழு இலக்கங்கள் வங்கிக் கிளையையும் குறிக்கிறது. ஐந்தாவது இலக்கம் எப்போதும் பூஜ்யம் தான். 
உதாரணமாக ICIC0000053 என்ற இந்த குறியீட்டை எடுத்தோமானால், முதல் 4 எழுத்துக்கள் ICICI வங்கியையும், கடைசி ஏழு எண்கள் பெங்களூரு ஜெயநகர் வங்கிக்கிளையையும் குறிக்கும்.
 ICIC 0000053 (வங்கி அடையாளங்காட்டி) (வங்கி கிளை அடையாளங்காட்டி) ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க, தேசிய மின்னணு நிதி பரிமாற்ற சேவை வழங்கும் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலை புத்தகங்களில் ஐஎஃப்எஸ்சி குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பொது மக்களுக்கான ஐஎஃப்எஸ்சி குறியீட்டின் முக்கியத்துவம்: 
மின்னணு நிதிப் பரிமாற்றத்தை செயல்படுத்தும் வங்கிகள், ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண்ணை கொண்டு பணத்தை குறிப்பிட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட கிளைகளுக்கு ஒழுங்காக அனுப்ப பயன்படுத்துகின்றன. 
மேலும், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்ற (RTGS) செயல்பாடு ஐஎஃப்எஸ்சி குறியீட்டை சார்ந்திருக்கிறது. 
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்த விரும்பும் பொது மக்களுக்கும் ஐஎஃப்எஸ்சி குறியீடு கண்டிப்பாகத் தேவை. பணம் பெறும் வங்கிக்கிளையின் ஐஎஃப்எஸ்சி விவரங்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே பணம் குறிப்பிட்ட வங்கிக்கிளைக்கு போய்ச்சேரும். 
இந்த ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் முலம் பணப்பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறது. இது மட்டும் அல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி?


பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி?

புது அம்மாக்கள் கவனம்!  
இன்றையச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. தனிக்குடும்ப அம்மா, அப்பாக்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிரமமானதாக ஆகிவிட்டது. குறிப்பாக, குழந்தை பிறந்த ஆரம்ப வாரங்களில், அதன் அழுகை முதல் பசி வரை அனைத்துமே, இளம் பெற்றோர் காரணம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் குழப்பம், பதற்றம் தருவதாகவே இருக்கும். 

பிரசவத்துக்குப் பின், மருத்துவமனையில் இருந்து தாயும்சேயும் வீடு திரும்பும் அந்த ஆரம்ப நாட்களில், பச்சிளம் குழந்தையைக் கையாள்வதில் அதிக கவனம் தேவை. குழந்தை உலகுக்கு வந்தபின் அது, தன் தாயையே தனக்கான உயிராக முதலில் பற்றும். ஆனாலும், அப்பா, வீட்டுப் பெரியவர்கள் என அனைவரும் குழந்தை வளர்ப்பில் தங்களின் பங்கை அளித்து, இரவு, பகல் எனத் தாய் மட்டுமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு, குழந்தையின் தேவைகளை, அதன் அழுகை, செய்கையில் இருந்து அறிந்துகொள்ளப் பழக வேண்டும். குழந்தையின் தாய், தந்தைவழிப் பாட்டிகள், குழந்தையின் பெற்றோரை வழிநடத்த வேண்டும்.

தேவையான அளவு பால் சுரப்பு

பிறந்த குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பு இயல்பாகவே எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் பால் சுரப்பு குறைவாகவும், ஆனால் குழந்தைக்குப் போதுமான அளவாகவும் இருக்கும். பின்னர், குழந்தையின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கும். எனவே, குழந்தை அழுதாலே, பால் போதவில்லை என்பதால்தான் அழுகிறது என்று நினைத்துக் கவலைப்பட வேண்டாம். 

குழந்தை வயிறு நிறையும் அளவுக்கு அதற்குப் பால் கிடைக்கிறதா என்பதை, அதன் தூக்கத்தை வைத்து அறியலாம். பால் அருந்திய பின் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை நன்கு தூங்கினால், போதுமான அளவு பால் கிடைக்கப்பெறுகிறது என்று அர்த்தம். முதல் ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் தவிர, தண்ணீர் உட்பட எதுவும் குழந்தைக்குத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுநீர், மலம் கழிக்கும் இடைவேளைகள் 

பிறந்த குழந்தை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறைகூட சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம், ஒரு நாளில் ஐந்து முறையாவது மலம் கழிக்கும். இது இயல்பானதே. பிறந்த முதல் வாரங்களில், பால் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது என ஒன்றன் பின் ஒன்றாக இவை மட்டுமே குழந்தையின் செயல்களாக இருக்கும். 

இரவில் விழிக்கும் குழந்தைகள் 

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது, அம்மா பகல் நேரம் முழுக்க, யாருடனாவது பேசிக்கொண்டும், அங்கும் இங்கும் நடந்தபடி வேலை செய்துகொண்டும் இருப்பது, குழந்தைக்குத் தாலாட்டுவதுபோல் இருக்கும். அந்தச் சுகத்தில் அப்போது அது வயிற்றுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு, அம்மா அமைதியாக உறங்கும்போது, தாலாட்டு நின்றுவிட்டதாக நினைத்து, வயிற்றுக்குள் குழந்தை விழித்துக் கொள்ளும். உலகுக்கு வந்த பிறகும் சில நாட்கள், சில குழந்தைகளுக்கு முதல் சில மாதங்கள்வரைகூட இந்தப் பழக்கம் நீடிக்கும். அதனால் அவர்கள் பகலில் உறங்குவது, இரவில் விழிப்பது என இருப்பார்கள். நாளடைவில் பகலில் விழிப்பதும், இரவில் உறங்குவதும் அவர்களுக்குப் பழக்கமாகி விடும். 

ஒரு நாளில் 18 மணி நேரம்வரைகூட தூக்கம்! 

குழந்தை பிறந்த முதல் மாதத்தில், ஒரு நாளில் 12 முதல் 18 மணி நேரம் வரைகூட தூங்கும். இடையிடையே, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் புகட்டலாம். அது கண் விழிக்காமல் தூங்குவது பற்றிக் கவலை கொள்ளவேண்டியதில்லை. ஆனால், 18 மணி நேரத்துக்கும் அதிகமாகக் குழந்தை தூங்கினால், மருத்துவரிடம் காண்பித்து, அதற்கு தைராய்டு குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

பாலூட்டும் அம்மா பத்திய உணவு சாப்பிட வேண்டுமா?

பாலூட்டும் தாய்மார்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டியது அவசியம். அதற்காக, மூன்று இட்லி சாப்பிட்டவர்கள், ஐந்து இட்லிகள் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவாகச் சாப்பிட்டால் போதுமானது. பால் சுரப்புக்கு என எந்தச் சிறப்பு உணவும் தேவையில்லை. ப்ரொலாக்டின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் என, பால் சுரப்பை அதிகப்படுத்தும் ஹார்மோன்கள் தூண்டப்பட, தாய்மை உணர்வின் பூரிப்பே தேவை. குழந்தையைக் கொஞ்சுவது, முத்தமிடுவது, நெஞ்சோடு அணைத்துக் கதகதப்பு கொடுப்பது என அம்மா நேரம் செலவிட வேண்டியது அவசியம். குழந்தைக்கு ஆகாது என்று அம்மா பத்திய உணவு சாப்பிடத் தேவையில்லை.    எல்லா வகை உணவுவகைகளையும் உட்கொள்ளலாம். திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது பால் சுரப்புக்கு உதவும். 

குழந்தைகளின் சருமத்துக்குத் தனிக்கவனம் 

குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே, அதன் இயல்பை அப்படியே பாதுகாக்க வேண்டும். குளிக்கச் செல்லும்முன் பேபி ஆயில் தடவி மென்மையாக மசாஜ் கொடுத்து, இளம்வெயிலில் சிறிது நேரம் வைத்திருக்கலாம். இது சருமத்துக்கு ஊட்டம் தருவதுடன், உடலெங்கும் ரத்த ஓட்டத்தையும் தூண்டும். குளியலுக்கு பேபி சோப் அல்லது வீட்டில் தயாரித்த குளியல் பொடி பயன்படுத்தலாம்.  குழந்தையின் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, குளிக்கவைத்தவுடன் தேங்காய் எண்ணெய், பேபி லோஷன் என ஏதாவது ஒன்றை தடவ வேண்டும். சிந்தெடிக் உடைகளைத் தவிர்த்து,  காட்டன் உடைகளையே பயன்படுத் தவும். வெள்ளை, வெளிர் பிங்க், வெளிர் ஊதா என வெளிர் நிற ஆடைகளைப் பயன்படுத்தும்போது, பூச்சி, அழுக்கு என்று குழந்தைக்கு ஊறுவிளைக்கக் கூடியவற்றைப் பளிச்சென அடையாளம் காண முடியும். 

அழுகைதான் குழந்தையின் மொழி... அச்சம் வேண்டாம்! 

குழந்தை தான் உணரும் அசௌகரியத்தைத் தெரிவிக்கும் ஒரே மொழி, அழுகை மட்டுமே. எனவே, அழுதால், உடனே பசிக்காகத்தான் அழுகிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது. பாலூட்டிய பின்னும் அழுதால், எறும்பு, கொசு என்று ஏதாவது கடிக்கிறதா, ஆடை இறுக்கமாக உள்ளதா, மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா, குழந்தையின் காலில் உள்ள தண்டை, கையில் உள்ள காப்பு, கழுத்து தாயத்து என்று ஏதேனும் பொருட்கள் அதற்கு அழுத்தம் கொடுக்கின்றனவா என ஒவ்வொன்றாக சரிபார்க்க வேண்டும். இவை தவிர, வயிற்று வலி, சுளுக்கு போன்ற காரணங்களால் குழந்தைகள் அழ நேரும்போது, அவற்றைக் கண்டறிவது பெற்றோருக்குக் கஷ்டமானதுதான். என்றாலும், இவை மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்பதுடன், அதை நாளடைவில் பெற்றோர்கள் புரிந்துகொள்ளப் பழகியிருப்பார்கள்.

குழந்தையைக் கைக்குக் கை மாற்றக்கூடாது! 

குழந்தை பிறந்த முதல் சில நாட்களில், பார்க்க வருகிறவர்கள் அனைவரும் அதைத் தூக்கிவைத்துக் கொள்வார்கள். அதற்கு முன், அவர்களைக் கைகளைக் கழுவச் சொல்லலாம்; அல்லது ஹேண்ட் சானிட்டைஸர் கொடுத்துப் பயன்படுத்தச் சொல்லலாம். மேலும், குழந்தை இருக்கும் இடத்தில் இருமுவது, தும்முவது, குழந்தைக்கு வாய்வைத்து முத்தம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.
இனி, பச்சிளம் குழந்தையைக் கைகளில் தூக்கும்போது பதற்றம் இருக்காதுதானே?! 

---------------------------------------------------------------------------- ஜெ.நிவேதா,

அம்மாக்களின் கவனத்துக்கு... 

* குழந்தைக்குப் பால் புகட்டியதும் தோளில் போட்டு முதுகைத் தடவிக்கொடுத்து, ஏப்பம் வரச் செய்யவும். இதனால் அதன் வயிற்றில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டு, உணவு சிறுகுடலுக்குச் செல்ல வழி ஏற்படும். 
* பால் கொடுத்ததும் குழந்தையின் உடலை அதிக அசைவுகளுக்கு உள்ளாக்கினால், அது பாலைக் கக்கலாம். மேலும், தங்கள் தேவைக்கு அதிகமான பாலைக் குடித்த குழந்தைகளும் பால் கக்குவது உண்டு. இது இயல்பானதே. மூக்கு வழியாகவும் சில குழந்தைகள் பால் கக்குவார்கள். இது என்றோ ஒருநாள் நடந்தால் பயப்படத் தேவையில்லை. குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தால் போதும். ஆனால், குழந்தை இதுபோல் அடிக்கடி செய்தால், மருத்துவ ஆலோசனைப் பெறவும். 

* இரண்டு மாதங்களில் குழந்தையின் பார்வைத்திறன் முழுமையடையும். அப்போது ஆடைகள், பொம்மைகள் என வண்ணப் பொருட்களை ஆர்வமுடன் பார்ப்பார்கள். சத்தத்துக்காகத் தங்கள் கொலுசை ஆட்டி ஆட்டி விளையாடுவார்கள். அது அவர்கள் உடலுக்கு ஒருவகைப் பயிற்சியாகவும் அமையும்.

கார்த்திக் சூர்யா, குழந்தைகள் நல மருத்துவர்

• நன்றி : டாக்டர் விகடன் – 16.02.2017

எச்-1பி விசா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

Image may contain: 1 person, text

எச்-1பி விசா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் புதிய விதிகளினால் இந்திய தொழில் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்றவை கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது. 

எச்-1பி விசா என்றால் அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மூன்று வருடத்திற்குப் பணிபுரிய வழங்கப்படும் விசா ஆகும். எச்-1பி விசா முதன் முதலாக 1990-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

எச்-1பி விசா பிறப்பு 

எச்-1பி விசாவிற்கான சட்டம் 1990-ம் ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1991 முதல் எச்-1பி விசா அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஹ் எச் புஷ் அவர்களால் அதிகாரப் பூர்வமான குடியேற்றத்தை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இருந்த விதிகளின் படி 365 ரூபாய்ச் செலுத்தினால் ஆறு வருடத்திற்கு மூன்று வருட நீட்டிப்புடன் எச்-1பி விசா வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் 65,000 டாலர் சம்பள இருக்க வேண்டும். இப்போது வரை இது தான் குறைந்தபட்ச சம்பளமாக உள்ளது.   

அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் 

1998-ம் ஆண்டு அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் பில் கிலிண்டன் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய எச்-1பி விசா பெற 65,000 டாலரில் இருந்து 115,000 டாலராகச் சம்பளம் இருக்க வேண்டும் என்ற விதி 1999 மற்றும் 2000 நிதி ஆண்டிற்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 365 டாலராக இருந்த அடிப்படை கட்டணம் 500 டாலராக உயர்த்தப்பட்டது. 

 சட்டம் 21 

அமெரிக்காவின் போட்டுத்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் 21 எச்-1பி விசா குறித்த விதிகளில் 2000 ஆண்டு மேலும் விதிகளைத் திருத்தி அமைத்தது. 

சட்டம் 21-ன் படி எச்-1பி விசா மூலம் வேலை பார்க்கும் ஊழியர்கள் எளிதாக நிறுவனங்களில் இருந்து மாற உதவியது. அதுமட்டும் இல்லாமல் 2001, 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 195,000 டாலர்கள் வரை சம்பளம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.   

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுக் சட்டம் 

2005-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்த போது மீண்டும் 65,000 டாலர்களாகச் சம்பளம் குறைக்கப்பட்டது. மேலும் முதுகலைப் பட்டம் உள்ளவர்களுக்கு 20,000 எச்-1பி விசாக்கள் வரை 500 பெறலாம் என்றும், 500 டாலர்கள் வரை மோசடி எதிர்ப்பு கட்டணமாகவும் விதிக்கப்பட்டது. 

எச்-1பி விசா சீர்திருத்த சட்டம் 

2013-ம் ஆண்டுப் பராக் ஒபாமா எச்-1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவதைக் குறைக்கச் சீர்திருத்த சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. 

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுச் சட்டம் 2016-ம் ஆண்டு அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை 50 பேருக்கும் அதிகமாக வெளிநாட்டு ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் போது 4,000 டாலர்களாக உயர்த்தி அறிவித்தது.

 2017-ம் ஆண்டு 

அதிபர் டொனால்டு டிரம் பெரிய குடியேற்றச் சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, எச்-1பி விசா நிர்வாக உத்தரவுகளைத் தயார் செய்து வருகின்றார். இது விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Written by: Tamilarasu

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 13.02.2017

Sunday, February 12, 2017

சகோதரியின் வாரிசாக சதோதரன் ஆக முடியாது


சகோதரியின் வாரிசாக சதோதரன் ஆக முடியாது

புதுடில்லி: திருமணமான பெண், அவரது கணவர் வீட்டின் மூலம் சம்பாதித்த சொத்துகளுக்கு, அந்த பெண்ணின் சகோதரன் வாரிசாக உரிமை கோர முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு: 

ஹிந்து வாரிசு சட்டத்தின் படி, யார் யார், ஒருவரது வாரிசு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுக்கு, அவரது சகோதரன் வாரிசாக முடியாது. அதிலும், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சம்பாதித்த சொத்து, அந்த பெண்ணின் பெயருக்கு மாற்றப்பட்டாலும், அதில் அந்த பெண்ணின் சகோதரன் எந்த உரிமையும் கோர முடியாது.

மகன், மகள் இல்லாத நிலையில், திருமணமான பெண்ணின் சொத்துகளுக்கு, அவரது கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே உரிமை கோர முடியும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 13.02.2017