disalbe Right click

Thursday, February 23, 2017

ஜெயலலிதாவின் பெயர், படம் அகற்ற வழக்கு


ஜெயலலிதாவின் பெயர், படம் அகற்ற வழக்கு
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதத்தை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில், சமூக நீதிக்கான வழக்கறிஞர் கள் பேரவையின் தலைவர், கே.பாலு தாக்கல் செய்த மனு:முதல்வராக இடைப்பாடி பழனி சாமி பதவியேற்ற பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு, 'அம்மா இரு சக்கர வாகன திட்டம்' என்ற திட்டத்தை, பிப்., 20ல் அறிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜெயலலிதா குற்றம் புரிந்துள்ளார் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னும், ஜெயலலிதாவின் புகைப்படங்களை, அரசு அலுவலகங்களில் வைத்திருப்பது, நேர்மையாக பணியாற்றுபவர்களின் மனதை திசை திருப்புவது போலாகி விடும். குற்றவாளியின் பெயரில் திட்டம் அறிவிப்பது, அரசியலமைப்பு சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

ஜெயலலிதாபெயரில் பல திட்டங்களை, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த திட்டங் களில் எல்லாம், ஜெயலலிதாவின் புகைப் படங் களும் இடம்பெற்றுள்ளன. அவரது பெயரையும், புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்.

'அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பார்மசி, அம்மா உப்பு, அம்மா சிமென்ட்' என, அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயரையும், அவரது புகைப் படத்தையும் நீக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.

பள்ளி மாணவர்களுக்கான பை, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இரு சக்கர வாகனங் களில் இடம் பெற்றுள்ள, ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். தமிழக அரசின் நிதியில், ஜெயலலிதாவின் மரண நிகழ்வு, சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்படுகிறது; இதற்கும், தடை விதிக்க வேண்டும்.

அரசுக்கு அனுப்பிய மனு, நிலுவையில் உள்ள போது, அரசு நிதியில், பிரம்மாண்டமான நினைவிடம் கட்ட, அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு விலக்கப்பட்டிருந் தாலும், அவர் ஒரு அப்பாவி என கருதக்கூடாது.

நாளை விசாரணை:

ரசுதிட்டங்களில், அவரது புகைப்படங்களை பயன் படுத்துவது என்பது, அரசியலமைப்பு சட்டத் தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தையும் மீறுவது போலாகும். மக்களுக்கான நலத் திட்டங் களுக்கு, ஜெயலலிதாவின் சொந்த பணத்தை பயன்படுத்தவில்லை; அரசின் வருவாயில் இருந்து, நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

ஊழல் வழக்கில் குற்றவாளியாக உள்ள ஒருவருக்கு, அரசு திட்டங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஜெயலலிதா மீது விசுவாசம் உள்ளவர்கள், அவரது புகைப்படத்தை, அவரவர் களின் வீடுகளில் வைத்துக் கொள்ள லாம். ஆனால், அரசு நிகழ்ச்சிகள், அலுவலகங்களில், அவரது புகைப்படத்தை வைப்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது போலாகும்.

எனவே, அரசு செலவிலோ, கட்சி செலவிலோ, பொது இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினை விடம் கட்டுவதற்கு, தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா பெயரையும், அவரது புகைப்படத் தையும், அரசு திட்டங்களில் இருந்து அகற்றி விட்டு, புதிய பெயரை வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது. இம் மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லி.,யில் ஜெ.,க்கு சிலை!

ஜெ., படத்தை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 'ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்; பார்லிமென்ட் மைய மண்டபத்தில், சிலை அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.அக்கட்சியின் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி கூட்டங்களில், இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.03.2017

மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம்

Image may contain: text
மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம்

மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லையா ?
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகள், அரசு மருத்துவமனைகளின் அலட்சியங்கள், போலி மருத்துவர்களின் அட்டகாசங்கள் இவற்றையெல்லாம் நாள்தோறும் எதிர்கொண்டு  வருகிறோம்.இவற்றையெல்லாம் அரசால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? 

சட்டரீதியாக நம்மிடம் என்ன சிக்கல் இருக்கிறது?பதிலளிக்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் கிருஷ்ணன்.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மருத்துவ வசதிகளை அளித்து, தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று The Clinical Establishments (Registration and Regulation) Act 2010-ல் சொல்லப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தை இதுவரை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவில்லை. இதை ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

ஆனால், இந்த சட்டம் இந்தியாவின் மற்ற மாநிலங்களான சிக்கிம், மிசோரம், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், உத்தர் காண்ட், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், புதுச்சேரி, சண்டிகர், அந்தமான், லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது’’ என்றவரிடம், தமிழ்நாட்டில் க்ளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் ஆக்ட் நடைமுறைக்கு வருவதில் என்ன சிக்கல் என்று கேட்டோம்.

‘‘இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பில் ‘Tamilnadu Private Clinical Establishment Act என்ற பெயரில் 1997-ல் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்பட்டுள்ளது’ என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்த சட்டமும் இதுவரை சரியாக அமலாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘ஏன் இந்த சட்டம் இதுவரை அமலாக்கப்படவில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் பல இருந்தாலும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பல மருத்துவமனைகளி்ல் தரப்படும் மருத்துவம் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது. 

இதுகுறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சேகரித்தபோது, தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று மருத்துவ சேவைகளின் இயக்குநர் அலுவலகம் பதில் அளித்துள்ளது’’ என்கிறார் அவர்.

Clinical Establishment Act 2010-ன் அம்சங்கள் குறித்தும் அவரிடம் கேட்டோம்…‘‘மருத்துவ சிகிச்சை, மருத்துவ சோதனை மற்றும் மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.தனி ஒரு மருத்துவரால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை, சேவை மையங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் போன்ற அனைத்தும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. 

ஆனால், இந்திய ராணுவத்தால் நடத்தப்படக்கூடிய மருத்துவனைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அகில இந்திய தேசிய கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்த கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவுமுறைகள் நடத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் மருத்துவ நிறுவனங்கள், முதல் முறை செய்யும் தவறுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த முறை செய்யும் தவறுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து செய்யப்படும் தவறுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தின்மூலம் ஒவ்வொரு நோய்க்கும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் மருத்துவமனைகள் A,B,1(A),1(B) என்று தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனை நிலையங்களும் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்திய மருத்துவம், யுனானி, யோகா, சித்தா, ஹோமியோபதி போன்ற முறைகளை பின்பற்றும் மருத்துவமனைகளும் இதில் அடங்கும். 

இதுபோன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் கல்வித் தகுதியும் நெறிமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

’’இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்?‘‘

தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்களுக்கு சரியான, தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிடவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது’’ என்கிறார் கிருஷ்ணன்.

நன்றி குங்குமம் டாக்டர் – 01.12.2016

Wednesday, February 22, 2017

இலவச சட்ட உதவி மையங்கள் பற்றித் தெரியுமா?


இலவச சட்ட உதவி மையங்கள் பற்றித் தெரியுமா?
எவரும் உலகிலத்தில் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள்தான் பெரும்பாலும் மனிதர்களை குற்றவாளி ஆக்குகின்றன. 
பேராசைகளினாலும், ஆத்திரம் கொள்வதாலும், சிந்திக்காமல் செயல்படுவதாலும், வக்கிர எண்ணங்களினாலும் குற்றங்கள் நாட்டில் நடக்கின்றன. 
குற்றத்தை செய்தபின்பு காவலர் மூலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் படிகளில் ஏறும்போதுதான் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று  பல பேர்கள் உணர்கிறார்கள். 
நிறைய பணத்தை செலவழித்து வழக்கறிஞர்கள் மூலம் வசதி படைத்தவர்கள்  தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். ஆனால்,  கிராமங்களில் வசிக்கும் பாமர மக்கள் அடிப்படை சட்ட உரிமைகளைக்கூட அறியாமல் இருக்கின்றனர். வழக்கு என்று ஒன்று வந்த பிறகு, அதற்கு யாரை நாடுவது?, எப்படி வழக்கை கொண்டு செல்வது என்று திக்குத் தெரியாமல் இருக்கின்றனர்.
படித்தவர்களில்  ஒரு சிலரும் சட்ட விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தவறான வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டு நாட்களையும் பணத்தையும் வீணாக இழந்து கொண்டு இருக்கிறார்கள்.
இது போன்ற குறைகளை நீக்குவதற்கான, அரசு உருவாக்கியதுதான்  இலவச சட்ட உதவி மையங்கள் ஆகும்.
இலவச சட்டஉதவிகள்  குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்  பிரிவு 304-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர்  வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என்பதுதான்  இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கமாகும்.
தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். நீதியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் குடிமக்களுக்கு வழக்கறிஞரின் உதவியை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டின்படி, அந்த வழக்கில் வசதியில்லாத ஏழை மக்களின் சார்பாக ஆஜராகின்ற வழக்கறிஞருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.  
நமது மாநிலத்தில்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.  
இலவச சட்ட உதவிக்கு என்ன செய்ய வேண்டும்? 
வசதி இல்லாதவர்கள் தங்களுடைய வழக்குகளை நடத்த இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை அணுகி, தங்கள் வழக்கு விபரங்களை விபரமாக எழுதி மனுவாக கொடுக்க வேண்டும். அங்குள்ள பதிவாளர் தங்கள் மனுவை படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவார். இதற்கென்று எந்தவிதமான கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
எந்தெந்த வழக்கிற்கு இலவச சட்ட உதவி கிடைக்கும்?
ஜீவனாம்சம் பெறுவதற்கு. 
வரதட்சணை வழக்கு, 
நிலம் பங்கு பிரிப்பு வழக்கு 
ஜாமீன் எடுப்பதற்கு
கொலை வழக்கு,
மேல்முறையீடு செய்வதற்கு,
சீராய்வு மனு கொடுப்பதற்கு 
போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து நீங்கள் பயன்பெறலாம். 
மேலும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை தேர்வு செய்து கொள்வத்ற்கும்  தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளிக்கிறது.
பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை, எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுகி பயன்பெற  வேண்டும் என்பதே சட்ட உதவி மையங்களின் உயர்ந்த நோக்கமாகும். 
**********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2017

ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை


ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்;வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூ400 லஞ்சம் வாங்கிய திருத்தங்கல் நகராட்சி ஊழியருக்கு ஒன்றரை ஆண்டு சிறைதண்டனை , ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்தவர் அய்யனார்.43. இவரது மனைவி சாந்திக்கு அவரது பெற்றோர் இரண்டு வீடுகளை கொடுத்துள்ளனர். இதற்காக வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யக்கோரி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்கு ரூ. 200 வீதம் இரண்டு வீட்டுக்கு ரூ400 லஞ்சம் தருமாறு நகராட்சி அலுவலக உதவியாளர் ஜேசு கேட்டுள்ளார். 

கடந்த 2008 ஆகஸ்ட் 10ல் ஜேசு லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. 

ஜேசுவிற்கு ஒன்றரை ஆண்டு சிறை, ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வசந்தி தீர்ப்பளித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 21.02.2017

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு-8(4)

Image may contain: text

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு-8(4)
கடந்த, 2013 வரை அமலில் இருந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 - 4ன் படி, மக்கள் பிரதிநிதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 90 நாட்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம், பதவி இழப்பிலிருந்து தப்பிக் கலாம். இதனால், வழக்குகளில் தண்டனை பெற்ற பலர்,

பதவிகளில் தொடர்ந்தனர். வழக்குகளை இழுத்தடித்தனர். 2005ல் வழக்கறிஞர் லில்லி தாமஸ், சுக்லா ஆகியோர், இச்சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,'மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8- 4, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது என்ப தால், அது செல்லாது' என, கூறியது. இதனால், இரண்டு 
ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர் கள், தண்டனை அனுப வித்த காலத்தில் இருந்து, ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் மூலம், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர், தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். லாலு பிரசாத்தை காப்பாற்றும் முயற்சி யாக, அப்போதைய காங்., அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், காங்., துணை தலைவர் ராகுல் எதிர்ப்பால், இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

இதன்பின், 2014ல், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக, இந்தியாவிலேயே பதவி இழந்த முதல் முதல்வர் என்ற பெயரை, ஜெயலலிதா பெற்றார். தற்போது, சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு, கவர்னர் வித்யாசாகர் ராவின் தாமதம் போன்ற காரணங்களால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தும், சசிகலா முதல்வராக பதவியேற்பது தள்ளிப் போனது.ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால், குற்ற வழக்கில் தண்டனை பெற்று, பதவியை 
இழந்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.

சசிகலா இன்னும் அனுபவிக்க வேண்டிய மூன்றரை ஆண்டுகள் தண்டனையை முடித்து விட்டு, நடப்பு, அ.தி.மு.க., ஆட்சியிலேயே வெளியில் வந்து விடுவார். இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தண்டனை அனுபவித்த நாளில் இருந்து, மேலும், ஆறு ஆண்டுகள் அவர், தேர்தலில் போட்டியிட முடி யாது. வரும், 2027ம் ஆண்டில், அரசியல் சூழல் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தேர்தலில் போட்டியிடலாம். 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.02.2017

பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு)திருத்தச் சட்டம்-2016


பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு)திருத்தச் சட்டம்-2016

ஆட்டம் போடும் பினாமிகளும் திருத்தப்பட்ட தடுப்புச் சட்டமும்!

பண மதிப்பு நீக்க நடவடிக் கையின் பாதிப்பு நீங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இப்போது பினாமிகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. 
ஆனால் இதற்கான சட்டம் இந்த நடவடிக்கைக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சொத்துக்கான உரிமை ஒருவரிடம்; ஆனால், பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வசதியாக வேறு ஒருவர் பெயரில் எழுதித் தருவது. அதாவது, உண்மையான உரிமையாளர் ஒருவர்; போலியாக அல்லது பொய் யாகப் புனையப்பட்ட உரிமை யாளர் மற்றொருவர். இவர்தான் பினாமி.

இத்தகைய பினாமி நடவடிக் கைகளைத் தடுப்பதற்காக 1988-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பல மாற்றங்களைச் செய்து, ‘பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த சட்டம் 2016' கொண்டு வரப்பட்டுள்ளது.

2016 ஆகஸ்ட் 10 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற இச்சட்டம், அரசு இதழில் (‘கெஜட்') வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டது. இச்சட்டத்தின் அவசரம் அவசியம் கருதி, மறுநாளே (ஆகஸ்ட் 11) இதனை அரசிதழில் வெளியிட்டது.

``சொத்துக்கான ‘விலை’யை ஒருவர் வழங்கி, உடனடி (அ) எதிர்கால, நேரடி (அ) மறைமுக நன்மைக்காக, இந்தச் சொத்தின் உரிமை வேறு ஒருவரிடம் தரப்பட்டால்,
யார் இந்த சொத்தை வைத்துக் கொள்கிறாரோ அல்லது இச்சொத்தின் மீது தனது ‘பெயரைப் பயன்படுத்திக் கொள்ள' யார் அனுமதிக்கிறாரோ, அவர் ‘பினாமி’ ஆகிறார்.

சில விதி விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று - ‘குடும்பச் சொத்தாக இருந்து, குடும்பத் தலைவர் ('கர்த்தா') சொத்துகளை நிர்வகிப்பவராக இருந்தால், அவர், ‘பினாமி' ஆகமாட்டார்'. இது குடும்பங்களுக்குத்தான் செல்லுபடி ஆகும்; ‘குடும்பம் மாதிரியான' அமைப்புகளுக்கு அல்ல!

இந்த சட்டம், தனி நபர்களுக்கு மட்டுமல்ல நிறுவனம், கூட்டு வியாபாரம், ‘தனிநபர்களின் சங்கம்'... என அனைத்துக்குமே பொருந்தும்.

`சொத்து’ என்பது நகரும், நகரா; கண்ணுக்குப் புலப்படும், புலப்படா எல்லாவகை சொத்துகள்; எல்லாவித ‘உரிமைகள்', சட்டபூர்வ ஆவணங்கள், சாதனங்கள் ஆகியன அனைத்தும் அடங்கும். 

மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய சொத்துகளாக இருந்தால், மாற்றப்பட்ட வடிவமும் அதன் மூலம் ஏற்படும் பயன்களும் கூட இப்பிரிவின் கீழ்,`சொத்து' ஆகும்.

`பினாமி’ நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஒரு ஆண்டு முதல் 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மேலும், பினாமி சொத்தின் ‘சந்தை' மதிப்பில், 25% அபராதம் விதிக்கப்படும். 

வேண்டுமென்றே தவறான தகவல் அல்லது தவறான ஆவணம் தருவோருக்கு 6 மாதங்களுக்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் மற்றும் சொத்தினுடைய ‘சந்தை’ மதிப்பின் 10% அபராதம் விதிக்கிறது இச்சட்டம்.

ஒரு பினாமிதாரர், அதன் பிறகு வேறு ஒரு பினாமிதாரருக்கோ, அல்லது முதல் உரிமையாளருக்கோ கூட பினாமி சொத்துகளை மாற்ற முடியாது.

பினாமி நடவடிக்கைகளின் மீது ‘செயல் புரிய’, தீர்மானிக்கிற பொறுப்பாளர்களை (adjudicating authorities) மத்திய அரசு நியமிக்கலாம்.தேவைப்பட்டால் மத்திய அரசு, மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விரைந்து தீர்வு காணலாம்.

பினாமி சொத்துகளாக தீர்மானிக்கப்படுபவை மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட நேரிடும். ‘பினாமி'களுக்கு எதிரான சட்டம் தயாராகி விட்டது. நடைமுறைக்கும் வந்து விட்டது. முகமூடிகளின் கதைகள் முடிவுக்கு வரும் என்று நியாயமாக எதிர்பார்க்கலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 22.02.2017

Monday, February 20, 2017

அன்னப்பிளவு

அன்னப்பிளவு


1 அன்னப்பிளவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்
ஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.
2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன?
கருவிலிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள், முழு வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, ஊட்டச்சத்து குறைபாடு தான். எனவே, கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3 இப்பிரச்னை பிறவிக் குறைபாடா?
கருவிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், இது பிறவிக் குறைபாடு தான். இப்பிரச்னையை குழந்தை கருவில்இருக்கும் போதே தீர்க்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் தான் தீர்வு காண முடியும்.
4 இப்பிரச்னையால் எவ்வகையான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளில், சில பேர் அன்னப்பிளவோடு பிறக்கின்றனர். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தின்
முக்கியத்துவத்தை அறியாமல், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாத மற்றும் கர்ப்ப காலத்தை அதிக மன அழுத்தத்தோடு கடத்தும் கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர்.
5 மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே அன்னப்பிளவு ஏற்படுகிறதா?
கர்ப்ப காலத்தில், மருத்துவரின் அறிவுரை படி, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்ல; கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் அன்ன வளர்ச்சிக்கு செல்லும் ரத்தக்குழாயான முகத்தமனியை, சில வேளைகளில் கருவிலிருக்கும் குழந்தைகளே அழுத்திக் கொண்டிருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
6 கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு உடல் உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை, எவ்வாறு அறிந்து கொள்வது?
‘ஸ்கேன்’ செய்து கொள்வது பற்றி, மக்களிடம் மிகத் தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத் துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. எனவே கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் தேவையான சமயங்களில், பரிசோதனை செய்வதன் மூலம், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
7 கருவிலிருக்கும் போதே குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாட்டை, சீர் செய்ய முடியாதா?
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, சில குழந்தைகளுக்கு அன்னப்பிளவு, ஆறாவது விரல் போன்ற குறைபாடுகள் இருக்கும், சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதி லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை; செய்யவும் முடியாது. எனவே, குழந்தை பிறந்தபின் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
8 குழந்தைகள் அன்னப்பிளவு பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
கர்ப்ப காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். சீரான நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல், மன மகிழ்ச்சியோடு கர்ப்ப காலத்தை கடக்க வேண்டும்.
9 அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வகையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்?
காது, மூக்கு மற்றும் தொண்டை வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்படும். சில குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படும். திட, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்
போது, அவை மூக்கு வழியாக வெளியேறும். மூக்கு வழியாக சென்ற உணவு நுரையீரலுக்கு செல்வதால், நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
10 இதற்கு சிகிச்சை என்ன?
குழந்தை பிறந்த மூன்று மாதம் முதல், ஒரு வருடத்திற்குள் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் நல்ல பலன் இருக்கும். குழந்தை வளர்ந்த பின் சிகிச்சை மேற்கொண்டால் அங்கிருக்கும் சதைகள் குறைபடுவதால், முகசீரமைப்பு சீராக வராது. அன்னப்பிளவு, தீர்க்கக் கூடிய பிரச்னையே!
By vayal on 17/02/2016

பிஎப் பணத்தை இணையம் மூலம் எடுக்கலாம்!


பிஎப் பணத்தை இணையம் மூலம் எடுக்கலாம்!

கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 

இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது. 

இந்தச் சேவையை பயன்படுத்துவது பயனர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல என்ற போதிலும் வேகமாக பிஎப் பெறுதல் முறைகளைப் பின்பற்ற முடியும் என்று கூறப்படுகின்றது. இதற்காக அனைத்துக் கிளை அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி நடந்து வருவது என்றும், இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்த உடன் இணையத்தில் சமர்ப்பிக்கக் கூடிய பிஎப் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் அதைப் பயன்படுத்தி எளிதாக பணத்தை திரும்பப் பெற இயலும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது. 

இணையம் மூலம் சில மணி நேரத்தில் எடுக்கக் கூடிய பிஎப் முறையில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம்.

1 கோடி விண்ணப்பம் 

ஓய்வூதிய நிதி ஆணையம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது 1 கோடி விண்ணப்பங்கள் வரை திரும்பப் பெறும் கோரிக்கைக்காக மட்டும் சமர்ப்பிக்கப்படுகின்றது.

சில மணி நேரத்தில் பிஎப் பணம் 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையம் மூலம் செயல்படும் போது சில மணி நேரங்களில் வங்கி பரிவத்தனைகள் பொன்று விண்ணப்பித்த விண்ணப்பித்த அன்றே கிடைக்கும்.

தற்போதைய குறைந்தபட்ச நாட்கள் 

பிஎப் அலுவலகங்களில் இப்போது பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெறும் போது குறைந்தது 20 நாட்களுக்குள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 50 துறை அலுவலகங்களில் பைலட் திட்டம் மூலம் ஏற்கனவே பிஎப் அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதம் உள்ள 123 அலுவலகங்களை மத்திய சர்வருடன் இணைக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.  

ஆதார் அவசியம்

 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதற்காக அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறுகின்றது. இதனால் பிஎப் சந்தாதார்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைத்தல் வேண்டும்.

ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மட்டும் இல்லாமல் வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த முறை எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

வரி விலக்கு 

நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? 

ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

பிரிவு 80 சி 

பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.

டிடிஎஸ்(TDS) 

தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும். 

இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. 

இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Written by: Tamilarasu

குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் 20.02.2017

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை


மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்துவருகிறது. பின்னால் வீடு கட்டுவதற்காகவும், சந்ததியினருக்கான முதலீடாகவும் இந்த வீட்டு மனை இப்போது பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு வேலையின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியிருப்பதால் அங்கேயே தங்களுக்கான வீட்டு மனைகளை வாங்கிவருகிறார்கள். சிலர் நில மதிப்பு உயரும் சாத்தியம் உள்ள பகுதிகளைத் தேடி முதலீடு செய்கிறார்கள். இம்மாதிரி தெரியாத இடத்தில் வீட்டு மனை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நமது சொந்த ஊரில் மனை வாங்கும்போது அந்த நிலத்தில் உள்ள வில்லங்கம், வாரிசுகள் யாரும் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். அல்லது குறைந்தபட்சம் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் என்றால் அந்தச் சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடர்ந்து பார்வையிட முடியும். தரகர்களை மட்டுமே நம்பி வெளியூரில் வீட்டு மனை வாங்கும்போது பல விஷயங்களில் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவுபெற வேண்டும்.
காலி நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் முறையாக உள்ளாட்சிகளின் வழித்தடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உள்ளாட்சிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கும்போதுதான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரும்.
வெளியூர்களில் இதுமாதிரி விற்பனைசெய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை முறைப்படி உள்ளாட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும்போதுதான் இது நமக்குத் தெரிய வரும். அதுபோல ஊருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது.
மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்சினைகள் வரக் கூடும். மேலும் மழைக்காலத்தில் நீர் தேங்கும். முக்கியமான பிரச்சினை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இட வேண்டியதிருக்கும்.
மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும்.
லே அவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கும்போது, முதலில் கேட்கப்படும் விஷயம் லே அவுட் அங்கீகாரம்தான்.
தி இந்து தமிழ் நாளிதழ் - 04.10.2014

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்


நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்
சுத்தம் சுகம் தரும்! தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது?
குருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)
முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
கார்டீனாய்ட்ஸ் (Cartenoids)
இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.
பூண்டு


இது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
இஞ்சி

பூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி

உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.
நன்றி : ப்ரீத்தி (விகடன் செய்திகள் - 17.02.2016)

Saturday, February 18, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும்


நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும்  

10 முக்கியத் தகவல்கள் - சட்டம் என்ன சொல்கிறது?

 1985ல் உருவாகி, 2003ல் திருத்தப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம்

 கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக விலகினால் பதவி  பறிபோகும்

 கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி பறிபோகும்

 சட்டமன்ற / நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் பதவி தப்பும்

 ரகசிய வாக்கெடுப்பா, வெளிப்படையான வாக்கெடுப்பா என்பது சபாநாயகரின் முடிவு

 சபாநாயகரின் முடிவு இறுதியானது - ஆனால் நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் மறுபரீசலனை செய்யலாம்

 அவையில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும்,  வாக்கு செல்லும்.

 கொறடாவின் உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுன் நோட்டிஸ் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

 மீறிய உறுப்பினர்களை சபாநாயகர் மன்னிக்கவும் வழிவகை உண்டு.

 கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களை கொறடா கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

நன்றி : BBC - தமிழ் - 17.02.2017

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க


குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க

குழந்தைகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதெல்லாம் கொள்ளுப் பாட்டிகளுக்கு கை வந்த கலை. குழந்தைக்கு மாதத்தில் ஒரு நாள் விளக்கெண்ணெயைக் குடிக்க வைத்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். பின்பு பத்தியச் சாப்பாடு கொடுத்து பேரன் பேத்திகளின் உடல்நலத்தைக் காப்பார்கள். எல்லாரும் வளர்ந்து நின்ற பின்னும் இதுவே வழக்கமாக இருக்கும்.

வீட்டு மருத்துவத்தை விட்டொழித்து அலோபதி மருத்துவத்தை நம்பிய பின் மருத்துவராய் பார்த்து வயிற்றில் பூச்சி இருக்கலாம் என்ற கணிப்பில் பூச்சி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கப்படுவதில்லை. குடற் புழுக்கள் ஜாலியாக வளர்ந்து குழந்தைகளைப் படுத்தியெடுக்கும்.

தமிழக பள்ளிகளில் 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இந்தக் குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்படுகிறது. 

இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் அம்சவேணி கூறுகையில்,

“குடற்புழுக்களின் அட்டகாசம், சுவையான உணவையும் சாப்பிட விடாது. போதிய சத்துணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்தும், வெளுத்தும் காணப்படுவார்கள். வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

குடற்புழு தொற்று இருப்பவர்கள் அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருப்பது போல் உணர்வார்கள். குடற்புழு உள்ளவர்களுக்கு தோல் பகுதியில் வெள்ளைத் திட்டுகள் இருப்பதால் அரிப்பால் அவதிப்படுவார்கள். சில புழுக்கள் குழந்தையின் ஆசனவாயில் முட்டையிடுவதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு இரவில் அவதிப்படுவதைப் பார்க்கலாம்.

ஒரு புழு, ஓர் ஆண்டில் 300 முட்டைகள் வரை இடுகிறது. கொக்கிப்புழு மற்றும் குடற்புழு என்று இரண்டு வகையாக புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடற்புழு நீக்க மாத்திரை புளிப்புச் சுவையில் இருக்கும். அப்படியே மென்று சாப்பிட வேண்டியதுதான். வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் இருக்காது. 

ஆறு மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாத்திரை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டது. கொக்கிப் புழுக்கள் குழந்தைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதால் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர். வயிற்றுப் பிரச்னைகளோடு, சோர்வாகவும் காணப்படலாம். இதனால், குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது. இந்த புழுக்களின் அட்டகாசம் அவர்களின் மூளைத்திறனில் கை வைத்து படிப்பை காலி செய்வது வரை நடக்கிறது.

அதனால், இரண்டு வயது வரை அரை மாத்திரை வழங்கப்படுகிறது. இரண்டு வயதுக்கும் மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மிலி கிராம் அளவு கொண்ட ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்றல் குறைந்துள்ளது. ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாப்பதுடன் படிப்பிலும் கவனம் செலுத்த குழந்தைகளுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட வயதுள்ள அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மருந்தை ஆறு மாத இடைவெளியில் எடுப்பது நல்லது. 

இந்த மாத்திரையைக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் அதற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

குடற்புழு மாத்திரை எடுத்துக் கொள்ள குழந்தைகள் பயப்படத் தேவையில்லை” என்கிறார் அம்சவேணி.

நன்றி : விகடன் செய்திகள் - 15.02.2017

குற்றவாளிகளிடம் அபராதம் வசூலிக்கும் வழி


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன?
மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. 

 உச்சநீதிமன்றம்.அபராதத்தை செலுத்தத்தவறி னால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் நடைமுறைகள் பற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறியதாவது:

குற்றவழக்குகளில் துாக்கு, ஆயுள், கடுங் காவல், மெய்க்காவல்(சாதாரண) சிறை தண்டனை, அபராதம் தண்டனையாக விதிக் கப்படும். கடுங்காவல் தண்டனை என்பது சிறை யில் வேலை பார்க்க வேண்டும்.சாதாரண தண்டனை என்பது சிறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. இவ்வழக்கில் சாதாரண சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

குற்றவழக்கை பொறுத்த வரை, 'ஆளுடன் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது சட்டத்தின் நெறி. 

இதன்படி ஜெயலலிதா இறந்ததால், அவருக்கு எதிரான வழக்கில் அனுபவிக்க வேண்டிய சிறை தண்டனை குறித்த பகுதி,உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் இறந்தால், 30 நாட்களுக்குள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், வழக்கின் ஒரு தரப்பினராக இணைய வேண்டும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அதுபோல் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டகுற்றவாளி இறந்து போனால்,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அபராதம் தொடர்பான குறைபாடு பற்றி அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களை வழக்கின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள மனு செய்ய வழிவகை உள்ளது. 

ஆனால், இவ்வழக்கில் தீர்ப்புஒத்தி வைக்கப்பட்ட பிறகு தான், முதல் குற்றவாளியான ஜெ.,இறந்தார். சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் போது, அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் தண்டனை காலத்தின் நான்கின் ஒரு பங்கு காலத் திற்கு குறையாத ஒரு காலத்தை, தண்டனையாக அனுபவிக்க உத்தரவிடலாம். 

அதன்படி 4 ஆண்டு சிறை தண்டனையின் ஒரு பகுதியான, ஓராண்டு சிறை தண்டனை, இவ் வழக்கில் விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக் குள், அபராதத்தை வசூலிக்கும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

செலுத்த தவறும் பட்சத்தில், வருவாய் வசூல்சட்டப்படி, அபராதத்தை வசூலிக்க சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியானவர், குற்றவாளியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் கொண்டுவர வேண்டும். தொகையை வசூலித்து, அரசுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

சசிகலா உட்பட 3 பேரின் தண்டனையைப் பொறுத்தவரை, அபராதத்தை செலுத்தாமல், அதற்கு பதிலாக அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க விரும்பினால் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்களிப்படுவர். 

அப்படிகூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில், அவர்கள் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து 6 ஆண்டு களுக்கு பொதுத்தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஜெ.,விற்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க, அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்துக்களை, பறிமுதல் செய்ய, மேற்கண்ட வழிவகையை விசாரணை நீதிமன்றம் பின்பற்றும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017 

சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:


சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:

சட்ட நிபுணர்கள் கருத்து
சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. 

தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் பழனிசாமி அரசு, ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.

அவகாசம்

இதுகுறித்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கூறியதாவது:

சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என கேட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். 

அதை,எம்.எல்.ஏ.,க்கள் தான் தொடர வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சுதந்திரமாக, மனமுவந்து, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும். 

சட்டசபையை கூட்ட, இரண்டு வார அவகாசத்தை கவர்னர் வழங்கி உள்ளார். அப்படி இருக்கும் போது, இரண்டு நாட்களில் சபை கூட்டப்படுகிறது. 

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 14 நாட்களுக்கு முன், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட வேண்டும். அப்படி யாராவது தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், அதை தான் முதலில் எடுக்க வேண்டியதிருக்கும். 

அதனால் தான், இரண்டு நாட்களில் சபை கூட்டப்பட்டதாக கருதுகிறேன்.

ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை, பரிசீலிக்காமலே நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே,எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டுகளில் இருந்து அழைத்து வந்துள்ளனர். வெளிப்படையான ஓட்டெடுப்பு என்றால் தங்களுக்கு தகுதியிழப்பு ஏற்படும் என, எம்.எல். ஏ.,க்கள் சிலர் பயப்படலாம்; ரகசிய ஓட்டெடுப்பு என்றால் எந்த பயமுமின்றி ஓட்டுப்பதிவு செய்யலாம். 

பலத்தை நிரூபிக்க தான், சட்ட சபை கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளி யேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது எப்படி சரியாகும்? இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது:

கர்நாடகாவில், 2010ல், பா.ஜ., ஆட்சியின் போது, முதல்வராக இருந்த எடியூரப்பா, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்; அதில், வெற்றி பெற்றார். அப்போது, அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு பற்றி பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து, மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, கவர்னர் உத்தரவிட்டார்; அதிலும், அவர் வெற்றி பெற்றார்.

எனவே, நம்பிக்கைதீர்மானத்தின் மீதான ஓட் டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்பதில் கவர்னர் திருப்தியடைந்தால், மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கூறலாம். ஏற்கனவே, சபையில் இருந்து, தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள் ளதால் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கோர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளியேற்றம்:

 உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், சபையை நடத்த முடியவில்லை; அதனால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற நிலையை, சபாநாயகர் எடுக்க முடியும். 

எதிர்க்கட்சி தலைவர், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, விதிகளை சுட்டிக்காட்டி கேட்கிறார்.

ரகசிய ஓட்டெடுப்பை நிராகரிப்பதற்கான காரணங்களை கூறிவிட்டு, அதை சபாநாயகர் நிராகரித்திருக்கலாம்; அவ்வாறு செய்யாமல், நேரடியாக கோரிக்கையை நிராகரித்திருப்பது தெரிகிறது.

உத்தர பிரதேச வழக்கில் கூறிஉள்ளபடி, முதல்வர் பதவிக்கு உரிமை கோருபவர்கள் முன்னிலையில், சட்டசபை கூட்டத்தை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தியிருக்கலாம் அல்லது ரகசிய ஓட்டெடுப்பை பின்பற்றியிருக்கலாம். 

ஆனாலும், ரகசிய ஓட்டெடுப்பு பற்றி முடிவு செய்ய வேண்டியது சபாநாயகர் தான்.

சட்டசபையில் இருந்து, தி.மு.க.,வினர் வெளியேற்றம், அதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வழக்கு தொடரலாம். இதுவும், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே.

 இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017

கூடுதல் காலம் சிறையில் இருந்தால்


கூடுதல் காலம் சிறையில் இருந்தால் 
அபராதம் செலுத்த வேண்டியதில்லையா?

5 ஆண்டு சிறையில் இருந்தாலும் சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு
குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.

நான்கு ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விலக்கி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா, சுதாகரன், இளவரசி அடைக்கப்பட்டனர். இவர்கள் தரப்பில், அபராத தொகையை செலுத்தியதாக தெரியவில்லை; 

ஆனாலும், தண்டனை காலத்துக்குள், அபராத தொகையை செலுத்தலாம்; இல்லையென்றால், சட்டப்படி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

குற்ற வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டால், உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்தில், அதை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தி விட்டு, மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும், மேல் முறையீட்டு மனுவில் இணைக்க வேண்டும். இது ஒரு நடைமுறை.

கூடுதல் காலம் அபராத தொகையின் அளவு அதிகமாக இருந்தால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து,தண்டனையை நிறுத்தி வைக்க கோர முடியும். அதில், அபராதமும் அடங்கும். அதை, உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம்.

அபராத தொகையை, தண்டனையை அனுபவிக்கும் காலத்துக்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், நீதிமன்றம் விதித்துள்ள படி, கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை என்கிற அர்த்தம் அல்ல.

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், ஆறு ஆண்டுகள் வரை, அபராத தொகையை வசூலிக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும். 

குற்றவாளி பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதை முடக்கி வைத்து, கலெக்டர் மூலம், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

அந்த சொத்துக்களை விற்று, நீதிமன்றத்துக்கு அபராத தொகையை, செலுத்தும்படி உத்தரவிட முடியும். அதுவே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டால், அபராத தொகையை வசூலிக்க முடியாது.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017

அரசு ஊழியர் ஓய்வு பெற்று இருந்தாலும்


அரசு ஊழியர் ஓய்வு பெற்று இருந்தாலும்

சேலம் மாவட்டம் ஓலைப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாதேசு. அவர் பணிஓய்வு பெறுவதற்கு 30.6.11 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் நாவாபட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியபோது முதியோர் ஓய்வூதியம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

எனவே ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் அவருக்கு இந்த குற்றச்சாட்டுக்கான நோட்டீசு (சார்ஜ் மெமோ) வழங்கப்பட்டது.

இந்த ‘மெமோ’வையும், ஓய்வு பெற அனுமதித்து பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து ஐகோர்ட்டில் மாதேசு வழக்கு தாக்கல் செய்தார். பணியில் இருந்தபோது சஸ்பெண்டு செய்யாமல், ஓய்வு பெற அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதில் கூறியிருந்தார். 

இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மாதேசு அப்பீல் செய்தார். இதுபோன்ற பிரச்சினையில் இருவேறு கருத்துகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்ததால், இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், என்.பால்வசந்தகுமார், கே.வெங்கட்ராமன் ஆகியோரை கொண்ட முழு டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மனுதாரர் ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே ஓய்வூதிய விதி 9(2)(பி)–ன்படி மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம் என்று கூறி மாதேசுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

01.05.2013 - நாளிதழ் செய்தி

அரசு அலுவலர்கள் மீது வழக்கு

அரசு அலுவலர்கள் மீது வழக்கு
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இவர்களில் யார் மீதாவது விசாரணை நடத்த உயரதிகாரிகளிடத்தில் குடிமகன் அனுமதி கோரினாலோ அல்லது வழக்கு தொடர கோரினாலோ 3 மாதத்திற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி அனுமதி கோரினார்.
இதற்கு சுப்பிரமணியசாமிக்கு காலதாமதமாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரி சுப்பிரமணியசாமி கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார்.
அதற்கு கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. இதையடுத்து காலதாமதமாக பதில் அளித்த பிரதமர் அலுவலகத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள மனுவில் ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு பிரதமர் அலுவலகம் 16 மாதங்கள் கழித்துத்தான் அனுமதி அளித்தது.
இது கால விரையமாகும். அதனால் அனுமதி அளிக்க ஒரு குறிப்பிட்ட காலவரம்பை சுப்ரீம்கோர்ட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதோடு அதன் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் 16 மாதகாலமாக ஆ.ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
இரு தரப்பினர்களிடையே சூடான விவாதம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட பின்னர் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
யாராவது அரசு ஊழியர், அதிகாரி, அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை கோரியோ,வழக்கு தொடர அனுமதி கோரியோ, எந்த குடிமகனாவது அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால் அவர்கள் 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் 4-வது மாதத்தில் அனுமதி அளித்ததாக கருதி அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினபூமி நாளிதழ் - 01.02.2012

Friday, February 17, 2017

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?


பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

பேரவை கூடும்போது, முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவின்படி, பேரவைத் தலைவர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிவிப்பார். பேரவையில் பெரும்பான்மையை நிருபித்தபின்னரே புதிய அரசு முழுமையாக செயல்படத் தொடங்கும்.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 பேர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமிருக்கிற 233 உறுப்பினர்களில் சபாநாயகர் தவிர்த்து 232 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதில், சபையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம்.

இதன்படி பேரவையில் 200 உறுப்பினர்கள் இருந்தால் 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவையில்லை.

யாருக்கும் பெருலும்பான்மை கிடைக்காவிட்டால் 356 பிரிவின் கீழ் பேரவை கலைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 4 முறை ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இரு முறையும் (1976 ஜனவரி 31, 1991 ஜனவரி 30), எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1980 பிப்ரவரி 17), ஜானகி தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1988 ஜனவரி 30) கலைக்கப்பட்டது.

- நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?

ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ‌இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.

- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?

ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்னையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை உறுப்பினர்கள் தவிர்க்க முடியுமா?

சுயேச்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்களாம். அரசியல் கட்சிகள், அக்கட்சியின் கொறடா உத்த‌ரவின்படி வாக்களிப்பார்கள்.

- சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?

தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

- வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்கள்?

சபாநாயகரே அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், பேரவையின் கதவுகள் மூடப்படும். பேரவை கூடியதும் முதல்வர் தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வருவார். அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மற்றும் வெவ்வேறு பேரவை கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடுவார்.

 234 உறுப்பினர்களும் ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர்.

ஒவ்வொரு பிரிவினரையும் அரசை ஆதரிப்பவர்களை முதலில் எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

 அடுத்ததாக எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

அடுத்தபடியாக நடுநிலை வகிப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

எழுந்து நின்று தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்பவர்களின் பெயர்களை குறித்து வைத்து, வாக்குகளாக எண்ணப்படும்.

ஆறு பிரிவினரும் முடித்த பின், அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முதல்வரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக அறிவிக்கப்படும்.

இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு வாக்கு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக வாக்களிக்க முடியும்.

நன்றி : தினமணி நாளிதழ் : 17.02.2017

பவர் பத்திரம் பவர் இழக்கும் தருணங்கள்

பவர் பத்திரம் பவர் இழக்கும் தருணங்கள்

1. பவர் எழுதிக் கொடுத்தவர் அதனை எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யும் பொழுது.

2. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது.

3. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது அல்லது நொடித்து  போகும்பொழுது.

4. பவர் பத்திரத்தை பல நபர்கள் எழுதிக் கொடுத்து அப்படி எழுதிக்  கொடுத்தவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாரா விதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது 

5.  பவர் பத்திரத்தை பல நபர்கள் பெயரில் எழுதி வாங்கி,  அப்படி எழுதி வாங்கியவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது.

6. பவர் பத்திரம் எழுதப்பட்ட நாளில் இருந்து (எழுதப்பட்ட நாளையும் கணக்கில் சேர்த்து) 120 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாத பொழுது.

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம்!


எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம்!

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்?
கோவை:கூவத்துார் விடுதியில், சொகுசு வாழ்க்கை நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சசிகலா ஆதரவுடன் இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சர் கள் உட்பட அனைவரும் கூவத்துார் விடுதிக்கு சென்றுள்ளனர். கூவத்துார் விடுதியில் அடைபட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. தங்களது எண்ணத்துக்கு ஏற்ப செயல்படாத எம்.எல்.ஏ.,க் களை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, தெரிவித்துள்ளனர்.

இதை வெளிப்படுத்தும் விதமாக, கூவத்துாரில் இருந்து பதவியேற்பு விழாவுக்கு கிளம்பி சென்ற, எம்.எல்.ஏ.,க்களை, பொதுமக்கள் கடுமையாக திட்டித் தீர்த்தனர். இதற்கிடையில், அரசு சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோதமாக சொகுசு விடுதியில் தங்கி, மறைமுகமாக யாரோ அளிக்கும் பணத்தில் பொழுதை கழிப்பதால், அவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

ஊழல் தடுப்பு சட்டம், -1988ன் படி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பதவி வகிப்பவர்கள், தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கேற்ப தான் வாழ வேண்டும். சட்டவிரோதமாக, யாரோ ஒருவரது பணத்தில் வாழக் கூடாது. ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், கூவத்துார் விடுதியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

அரசு பதவி வகிப்பவர்கள், எந்த ஒரு சலுகையும் பெறக் கூடாது. இதை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் யாரோ அளிக்கும் பணத்தில், சொகுசாக இருந்துள்ளனர். அவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும், பல மடங்கு சொகுசு நிறைந்த விடுதியில் தங்கி யுள்ளனர். நாள்தோறும், ஒரு எம்.எல்.ஏ., வுக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படு கிறது. இதற்கான பணம், யாரிடம் இருந்து வருகிறது என, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். 

எந்தவித சட்டவிரோத பலனையும் அனுபவிக்க மாட்டேன் என, உறுதிமொழியுடன் பதவி யேற்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், மறைமுக சலுகை பெற்றது சந்தேகங்களை எழுப்புகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு பதவியில் உள்ள நபர்கள், தங்களது சம்பளத்துக்கு மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ., பதவியை தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால், ஊழல் தடுப்பு சட்டம் தெரிந்த அதிகாரிகள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2017

Thursday, February 16, 2017

சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க


சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க
ஒரு சட்டசபையில் ஆட்சியமைக்க அழைப்பதற்கு கவர்னர் என்ன செய்ய வேண்டும்?
சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சியின் தலைவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை குறித்து சந்தேகம் வந்தால் பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி முதல்வராக பொறுப்பேற்றவர், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது இருக்கின்ற மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்" இதுதான் விதி.

அது போன்ற சூழ்நிலையில் ஆளுநர் அவர்கள் கட்சியின்
பெரும்பான்மையை நிரூபிக்க இரு வகைகளை பின்பற்றுவார். 

ஒன்று ஃப்ளோர் டெஸ்ட். (loor test)
மற்றொன்று காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட்.(composite floor test)

 ஃப்ளோர் டெஸ்ட் என்றால் என்ன?
முதலில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலம் தனக்கு உள்ளதாக சொல்லும் கட்சித்தலைமையை ஆட்சி அமைக்க அழைத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்து, அவரை பெரும்பான்மை நிரூபிக்கக் கோர வேண்டும். 

அது போன்று அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற  உறுப்பினர்களில்  சபாநாயகர் தவிர 233 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை இருவரும் சரிசமமான உறுப்பினர்களின்  ஆதரவை பெற்றால், சபாநாயகர் யாரை ஆதரிக்கிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

சில சமயங்களில் ஆளுநரால் இதில் சில சலுகையும் வழங்கப்படும். அதாவது சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதிலாக,சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம். 

இதன்படி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று மொத்தம் 220 உறுப்பினர்கள் இருந்தால், 111 பேரின் ஆதரவு இருந்தாலே போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவை என்ற அவசியமில்லை. இதற்குப் பெயர்தான்  ஃப்ளோர் டெஸ்ட் எனப்படும்.

காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் (composite floor test)
இது தவிர இன்னொரு முறையும் இருக்கிறது. அது காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் ஆகும். 

அதாவது முதல்வர் பதவிக்கான போட்டி இருவருக்கு இடையில் இருக்கும் பட்சத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட். 

இதற்காக சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டலாம். 

சட்டப்பேரவையில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவர் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். யார் பெரும்பான்மை நிரூபிக்கிறார்களோ, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் முதல்வர் பதவியேற்க அழைக்கப்படுவார். 

தற்போது தமிழ்நாட்டுக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்கள் இந்த முறையைத்தான்  பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்த முறை இதுவரை தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்பட்டதில்லை. 

உத்திரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் கல்யாண் சிங்கும், ஜெகதாம்பிகா பால் இருவரும் முதல்வராக செயல்பட... இது போன்று கூட்டாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட இந்த முறையானது இதுவரை இந்தியாவில் ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி