disalbe Right click

Saturday, April 1, 2017

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்னைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும்.
மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்னைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
முக்கிய விதிகள்:-
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் பண வகையிலான அதிகார வரம்பு :-
* மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
* மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 இலட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை.
* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடிக்கு மேல்.
* மேல் முறையீடு :- உச்சநீதிமன்றம்
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்
பிரிவு 2(b):-
புகார்தாரர் (Complainant) என்பவர் யார்?
எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?
* நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.
* ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
* நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
* மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.
* நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.
* மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெறமுடியும்.
நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-
பிரிவு.2(d)(i):-
பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது () பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது () தள்ளி பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் () பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்துநுகர்வோர்என்ற விளக்கத்திற்கு வருகிறார். ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களைமறுவிற்பனைக்கு வாங்குபவரும், () ’வியாபார நோக்கத்திற்கு வாங்குபவரும், ‘நுகர்வோர்பிரிவில் வருவதில்லை.
பிரிவு.2.(d)(ii):-
பணம் செலுத்தி, ‘சேவையைவாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது) (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும் பணம் செலுத்திசேவைபெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) சேவைகளின்பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
பிரிவு.2(e) - நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?:-
நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில்மறுப்பதுஅல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படிபுகார் (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்னை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம் (Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லதுபொய்என்று கூறுவது அல்லதுஉண்மைஎன்று கூறுவதாகும்.
நுகர்வோர்பிரச்னையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்அல்லதுஅசையா சொத்துக்களின் விலை பற்றியும்எழுகின்ற பிரச்னைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்னை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காகஎழுவினாக்கள்(Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்னை பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும் (Points for determination).
பிரிவு.2(f) குறைபாடு (பொருட்கள்):-
குறைபாடு என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பதுஅல்லதுதரத்தில்குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படிதகுதி உடையவையாகஇல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்தகுறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபாரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
நுகர்வோர் சட்டத்தில் நஷ்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-
மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம்.
மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது. இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.
**********************************************நன்றி : தினகரன் நாளிதழ் - 18.01.201

காசோலை திரும்பிய வழக்கு - வங்கி மேலாளருக்கு அபராதம்


காசோலை திரும்பிய வழக்கு - வங்கி மேலாளருக்கு அபராதம்

காசோலை திரும்பிய வழக்கு: வங்கி மேலாளருக்கு அபராதம்,  நுகர்வோர் கோர்ட் உத்தரவு

பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். 

சில நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையில் உள்ள கையெழுத்து ஒப்பாக வில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது. 

இதையடுத்து சம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனம், ஜெயந்தி அனுப்பிய ரூ.16,618ஐ, அபராதத் தொகையாக ரூ.135 ஐயும் சேர்த்து ரொக்கமாகத் தரும்படி வலியுறுத்தியது. 

தனது வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்குப் பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்தும், குறிப்பிடத்தகுந்த காரணமின்றி, சேவைக் குறைபாடு செய்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, கடந்த 2012 ஜனவரி 23ம் தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். 

நேற்று நீதிமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட் சுமி ஆகியோர் முன்னிலையில் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி கலியமூர்த்தி, சம்மந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர், ஜெயந்தியின் மனஉளைச்சலுக்கு இழப்பீடுத் ரூ.10 ஆயிரத்தையும், வழக்கு செலவுக்காக ரூ. 3ஆயிரம் என மொத்தம் ரூ. 13ஆயிரத்தை வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டார்.

 நன்றி : தினகரன் நாளிதழ் - 23.03.2017

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நடைமுறை


மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நடைமுறை

 ஒவ்வொரு மாவட்டத்திலும்  அல்லது  இரண்டு/மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தினை நமது மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியின் தகுதி உள்ள ஒருவர் தலைவராக இருப்பார். இந்தப் பதவிக்கு மாவட்ட நீதிமன்றநீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரையேமாநில அரசாங்கம் தலைவராக நியமிக்கிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
                           
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவபர்கள் கல்விகேள்விகளில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்! என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிபந்தனை விதித்திருக்கிறது. ஆனால்ஓரளவு படித்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

 அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நீதிமன்றம் நடைபெறும். தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தால்கூட நுகர்வோர் நீதிமன்றம் நடைபெறும். தலைவர் வரவில்லை என்றால்இந்த நீதிமன்றம் நடைபெறாது.

  மற்ற நீதிமன்றங்களைப் போல சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும்சாட்சிகளை விசாரிக்கவும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

வழக்கறிஞர்களோமனுதாரர்களோ தங்களது வாதுரைகளை (Arguments) வாய்மொழியாகவும்எழுத்துமூலமாகவும் நுகர்வோர்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
மனுவினை தமிழிலோஆங்கிலத்திலோ தாக்கல் செய்யலாம். மனுவினை மனுதாரரோவழக்கறிஞரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தவரோ தாக்கல் செய்யலாம்.

மனுதாரர்எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முகவர்கள் ஒவ்வொரு கேட்புநாளின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மனுதாரர்,எதிர்மனுதாரர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். அவர்களுக்குப் பதிலாகஅவர்களது வழக்கறிஞர்கள் அல்லது முகவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்க வேண்டும். 

மனுதாரர் அல்லது மனுதாரரின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு அற்றும் ஆவணங்கள் குறிப்புரைகள் (Memos) ஆகிய எதற்கும் நீதிமன்ற முத்திரை வில்லைகள் (Court fee stamls) ஒட்ட வேண்டிய அவசியமில்லை. வழக்குரைக்கும் அதிகார ஆவணமான (Vakalat) வக்காலத்தில் மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையும்வழக்கறிஞர் நலநிதி முத்திரை வில்லையும் ஒட்டப்படுதல் வேண்டும்.

எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில்  (Vakalat) மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை மற்றும் வழக்கறிஞர் நலநிதி முத்திரைவில்லை ஒட்டினால் போதுமானதாகும். மற்றபடி  எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் எதிர்விரைமெய்ப்பு உண்மை உறுதிமொழி (Proof Affidavit) ஆவணம்ஆவணங்கள் (Documents),   வரைமொழி வாதுரை (Written Argument), குறிப்புரை (Memos) ஆகிய எவற்றிற்கும்    நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை ஒட்டவேண்டிய அவசியமில்லை.

மனுதாரர் தரப்பு ஆவணங்கள் A வரிசையிலும் எதிர்மனுதாரர் தரப்பு ஆவணங்கள் B வரிசையிலும் குறியீடு செய்யப்படும். ஆவணங்கள் (Original  documents) அசல் ஆவணங்களாகவோ,  ஜெராக்ஸ் நகல்களாகவோ இருக்கலாம். ஆனால்நீதிமன்றம் அசல் ஆவணங்களைக் கோரினால்அவற்றையே மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆவணம் ஒவ்வொன்றையும் மனுதாரர் மற்றும்  எதிர்மனுதாரர் மேலுரையுடன் (with Docket)  தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள்வக்காலத்மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முகவரியிட்ட இரண்டு பதிவு அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். மனு சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் எதிர்ம்னுதாரருக்கு வழக்குப் பற்றிய அறிவிப்பும்மனுவின் நகலும் அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு கேட்பு நாள் (Hearing Date) தெரிவிக்கப்படும்.

மனுவை கோப்பில் எடுப்பதற்கு முன்னர்சில விளக்கங்கள் தேவைப்பட்டால்அந்த விளக்கத்தை வழக்கறிஞரிடம் கேட்டுநீதிபதி திருப்தி அடைந்த பிறகுஅந்த மனுவை கோப்பில் எடுப்பார். வழக்கறிஞரின் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால்அந்த மனுவை கோப்பில் எடுக்கமாட்டார்.

மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரும் அவரவர் தரப்பு சாட்சிகளை அவரவர்களே முன்னிலைப்படுத்த வேண்டும்.

சாட்சிகள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தால்தான் வருவேன் என்று கூறினால்,    மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாமே பெற்றுஅந்த சாட்சிக்கு அழைப்பாணையை சார்வு செய்யலாம்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சாட்சிகளை விரிவான நிலையில் விசாரிக்க, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் காலம் இடந்தரவில்லை என்றுரைத்து தனை விரிவான நிலையில் விசாரிப்பதற்குரிய நீதிமன்றம்உரிமையியல் (Civil Court) நீதிமன்றம்தான். அதனால். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்றுநுகர்வோர் சட்டத்தின் கீழான வழக்கொன்றை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைக்க முடியாது.

மனுதாரர் தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்பினால்,குறிப்புரை ஒன்று தாக்கல் செய்துதிரும்ப பெற்றுக் கொள்ளலாம். தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வது சம்பந்தமாகதமது மனுவிலும் எழுதி தமது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.

 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சமரசம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இருவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் குறிப்புரை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.

மனுவில் இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு தீர்ப்புரை வழங்கப்படும். 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் எதிர்வுரை  (Counter) 45நாட்களில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர் முன்னிலையாகாததால்ஒருதலைபட்சத் (Exparte) தீர்ப்பானால்,  அதனை நீக்கறவு (Setaside) செய்ய முடியாது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள்மாநில  நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதே நேரத்தில்மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்பவர்கள்,  மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமலிருக்க தடையாணை (Stay order) பெற்றிருக்க வேண்டும்.  தடையாணை பெறப்படவில்லை எனில்மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும்.

எந்தெந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் வழக்கிடலாம்?

  பொருள்கள் எதனையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் போது அவைகள் பழுதுடையவைகளாகவோகுறைபாடு உடையவையாகவோ இருக்கும்போது அந்தப் பொருள்கள் எவரிடம் வாங்கப்பட்டதோ அவரிடமே அதனை ஒப்படைத்துவேறு நல்ல பொருள்களை தரும்படி கோர வேண்டும். அவர் அவ்வாறு குறைபாடுடைய பொருள்களுக்குப் பதிலாக வேறு நல்ல பொருளை மாற்றித் தராதபோதுவிற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குண்டான தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவர்மீது இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

நபர் ஒருவருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கிடுமுன்அதனை எதிர்தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால்முன்னதாக அறிவிப்புக் கொடுப்பது நல்லதாகும். 

சேவைக்குறைபாடு தொடர்பாக வழக்கிடுதல்

வழக்கறிஞர் ஒருவர் தமது கட்சிக்காரரிடம் வழக்குகளை நடத்த பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது,  அவர் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி வழக்குகளை நடத்துதல் வேண்டும். வழக்கறின்கரின் வருகையின்மையால்வழக்கு அவரது கட்சிக்காரருக்கு பாதகமானால்அதனால் ஏற்படும் இழப்புக்கு வழக்கறிஞர் பொறுப்பாவார். அதன் பொருட்டு  வழக்கறிஞரிடம் இருந்து இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டபோது அவரது தவறான சிகிச்சையால் நோய் குணமடையாதிருந்தாலோதவறான அறுவை சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோயாளி மருத்துவரிடம் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொறியாளர் ஒருவர்வீடு கட்டித் தருவதாக ஒருவரிடம்  பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான முறையில் வீட்டைக் கட்டித்தராமல் இருந்தாலோபுதிய வீடு கட்ட அடமானத்தின் மூலம் கடன் தொகையை வழங்க முன்வந்திருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்,உடனுக்குடன் கடன் வழங்காமல் இருந்தாலோதொலைக்காட்சிப் பெட்டி,  குளிர்சாதனப் பெட்டிவானொலிப் பெட்டி போன்றவற்றை பழுதுபார்த்தவர்அவைகளை சரியாக பழுது பார்க்காமல் இருந்தாலோ,கூரியர்அஞ்சல்மணியார்டர் போன்றவை காலதாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டாலோதொலைபேசித்துறை சரியான சேவை செய்யாமல் கட்டணம் பெற்றாலோகட்டணத்தை கூடுதலாக பெற்றாலோ,கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இனைப்புக் கொடுக்காமல் இருந்தாலோமருத்துவர் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாததால் பெண்மணி ஒருவர் கருவுற்றாலோ சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார்தாரர் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யலாம்.

எந்தெந்த வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது

 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு,கொலை முயற்சி வழக்குஇந்திய தண்டணைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள்கடனுறுதிச் சீட்டு,விவாக ரத்துகுழந்தைகள் மீட்புஜீவனாம்சம்அடமான மீட்பு,வாடகைப் பிரச்சனைநிலப்பிரச்சனையில் தடையாணை பெறுதல் சம்பந்தமான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.

நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,


டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு


டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு -  என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த, பள்ளி முதல்வரின் குடும்பத்துக்கு, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரின் ரீஜன்சி பப்ளிக் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வந்தவர் வித்யா பிரசாத். இவருக்கு 'ஸ்லீப் டிஸ்க்' நோய் இருந்ததால், 2010 பிப்ரவரி, 11ல், சேஷாத்திரி புரத்திலுள்ள போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அறுவை சிகிச்சையின் போது, அவர் உயிரிழந்தார்.டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்ததாக அவரது கணவரும் வக்கீலுமான பிரசாத், கர்நாடக மருத்துவ கவுன்சில் - கே.எம்.சி.,யில் புகார் அளித்தார். 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை தொடர்ந்து பிரசாத், அன்றைய மருத்துவ கல்வித்துறை அமைச்சராக இருந்த எஸ்.ஏ.ராமதாசிடம் பிரசாத் புகார் செய்தார். 

அவரும் குழு அமைத்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி, பெங்களூரு மருத்துவ கவுன்சில் - பி.எம்.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி அமைக்கப்பட்ட குழுவானது, புகார்தாரரிடம் விபரங்களை கேட்டறியாமலும், வித்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் விளக்கத்தை மட்டுமே பெற்றும், ஒரு தலைபட்சமான அறிக்கை தயாரித்தது. 

அந்த அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.  புகார்தாரருக்கும் கொடுக்கவில்லை.

எனவே பிரசாத், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடும்படி கோரினார். விசாரணையில், டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்தது உறுதியானது. 

இதையடுத்து, பிரசாத்தும், அவரது இரு மகன்களும் கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயத்தில், நியாயம் கோரி, மனு தாக்கல் செய்தனர்.

மனு விசாரித்த தீர்ப்பாயம், போர்டீஸ் மருத்துவமனை, டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்துக்கு, எட்டு வாரங்களுக்குள், வட்டியுடன் சேர்த்து, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 26.10.2016

சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு


சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு

சென்னையிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சேதம் அடைந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,500-ஐ லாரி நிறுவனம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம், பராசக்திநகரைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி ராஜலட்சுமி. இவர் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து, ராஜபாளையத்திற்கு வருவதற்காக, சென்னை திருவான்மியூர், அண்ணா தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை 44 மூட்டைகளில் கட்டி, 16.3.13-ஆம் தேதி குறிப்பிட்ட லாரியில் ஏற்றி, மறுநாள் ராஜபாளையத்தில் பொருட்களை இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் மார்ச் 18-ஆம் தேதி மாலை வேறொரு லாரியில் பொருள்கள் வந்துள்ளன.
இதில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துவிட்டதாம். மேலும் ரூ.13,500 மதிப்புள்ள பொருள்கள் இருந்த மூட்டையைக் காணவில்லையாம். இதனால் மன உளச்சல் அடைந்த ராஜலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வி.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.கற்பகசெல்வி ஆகியோர் குறிப்பிட்ட லாரி நிறுவனம், பொருள்கள் செலவிற்கு ரூ.18,500-ம், மன உளச்சலுக்கு ரூ.5ஆயிரமும், வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.
தினமணி நாளிதழ் செய்தி - 31.03.2015

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

Image may contain: text

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

பழுதான ஜெனரேட்டருக்குப் பதிலாக, புதிய ஜெனரேட்டர் வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என, ஜெனரேட்டரை தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர், கசாப்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ் சுதாகர். இவர், மருந்துக் கடை வைத்துள்ளார். இவர், 19.10.2010இல் விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள ஒரு ஏஜென்ஸியில் ஜெனரேட்டர் ரூ. 29,200-க்கு வாங்கியுள்ளார். உத்தரவாத அட்டை கேட்டபோது, அந்த ஏஜென்ஸியினர் தரவில்லையாம்.

ஆனால், மூன்றே நாளில் ஜெனரேட்டர் பழுதாகிவிட்டதாம். உடனே, சம்பந்தப்பட்ட கடைக்கு கொண்டு சென்று, பழுது நீக்கிவிட்டு மீண்டும் இயக்கிய போது, கடையில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் பழுதாகிவிட்டதாம். பின்னர், ஜெனரேட்டரை எடுத்துச்சென்று பழுது நீக்கி கொடுத்துள்ளனர். மறுபடியும் பழுதாகிவிட்டதாம்.

அதையடுத்து, விருதுநகர் ஏஜென்ஸியினர் ஜெனரேட்டரை, சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பழுதுநீக்குவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் 1 மாதம் கழித்து 1.12.2010 இல் பழுது நீக்கிவிட்டதாய் கூறி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். அதன் பின்னரும், ஜெனரேட்டர் வேலை செய்யவில்லையாம்.

பின்னர், 17.2.2013இல் ஜெனரேட்டரை திரும்ப எடுத்துச்செல்ல மாரிஸ் சுதாகர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் திரும்ப எடுத்துச்செல்ல மறுத்துவிட்டனராம்.

எனவே, மாரீஸ் சுதாகார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வி. பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ். சங்கர், எஸ். கற்பகசெல்வி ஆகியோர், விருதுநகரிலுள்ள அந்த ஏஜென்ஸி மற்றும் சென்னையில் உள்ள நிறுவனம் ஜெனரேட்டரை எடுத்துக்கொண்டு புதிய ஜெனரேட்டரை வழங்கவேண்டும். அல்லது ரூ. 29,200 வழங்கவேண்டும். மேலும், நுகர்வோர் அடைந்த மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.

தினமணி நாளிதழ் செய்தி - 01.04.2015

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?


எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?

காவல் நிலையத்தில் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் தெரியுமா..? - ஒரு குபீர் விளக்கம்!

'ஆடுதானே காணாம போச்சு. அதை அப்படியே விட்டுடு. போலீஸ் ஸ்டேஷன் போனா... இருக்குற மாட்டையும் விக்க வேண்டியிருக்கும்' - கிராமங்களில் இப்படி சொல்வதுண்டு.

பிரச்னைனா போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியதுதானே. நீங்களாவே ஒரு முடிவு எடுத்துக்குவீங்களா? என போலீஸ் தரப்பு நியாயம் பேசினாலும், 'போலீஸ் ஸ்டேஷனே வேண்டாம். நமக்கேன் பிரச்னை?' என போலீஸ் ஸ்டேஷனையே பிரச்னையாக நினைப்பவர்கள்தான் அதிகம். இதற்கு காரணமும் உண்டு.

உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் அலுவலகம் எதுவென்று தெரியுமா? சந்தேகமே வேண்டாம் போலீஸ் ஸ்டேஷன்கள்தான். புகார் கொடுப்பவரையே கைது செய்ய போலீசாரால் முடியும். என் மீது தவறில்லை என நீங்கள் போலீஸ் ஸ்டேஷனின் நான்கு சுவருக்குள் நிரூபிக்க முடியாது. அதற்கு நீங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். 

நீங்கள் காவல்நிலையத்துக்கு எதற்காக சென்றாலும், வாசலில் காவலுக்கு துப்பாக்கியோடு நிற்கும் காவலாளியை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அடுத்து நீங்கள் சந்திக்கும் நபர் ரைட்டர். 

நீங்கள் சென்றால் உங்களை பார்க்காமல் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சில நிமிடங்கள் நீங்கள் நின்று கொண்டே இருந்தால் மெல்ல நிமிர்ந்து பார்த்து, 'என்ன பிரச்னை..?' என கேட்பார். 

நீங்கள் ஏதாவது பெரிய பிரச்னையை சொல்லிவிட்டால், எஸ்.ஐ.,யையோ, இன்ஸ்பெக்டரையோ கை காட்டி விடுவார். அதுவே சிறிய பிரச்னையாக ஏதாவது சொன்னால் அவரே களத்தில் இறங்கி விடுவார். 

பேப்பர் கட்டு, பேனாவில் துவங்கி...பிரச்னை என கேட்டு விட்டு, 'அப்படியா. முதல்ல பக்கத்துல கடைக்கு போய் 2 கட்டு பேப்பர், 10 பேனா வாங்கிட்டு வா. வரும்போது எல்லோருக்கும் டீ சொல்லிடு" என ஆரம்பிப்பார். 

அதில் இருந்துதான் துவங்குகிறது வசூல் வேட்டை. காவல்நிலையத்தில் நீங்கள் புகார் அளித்தால் உடனடியாக புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

புகாரைப்பொறுத்து அதன் மீது முதல் தகவல் அறிக்கை போட வேண்டும். அதன் பின்னர்தான் விசாரணையை துவக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே போலீசார் செய்யமாட்டார்கள். நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்றால் உடனே எதிர் தரப்பை அழைத்து பேசுவார்கள். இருவரிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவார்கள். யாரிடம் அதிகம் பேரம் படிகிறதோ அவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவார்கள். 

அதாவது புகார் கொடுத்தவரை விட எதிர் தரப்பு அதிக பணம் கொடுத்தால், முதலில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதை மீறி புகார்தாரர் கேள்வி கேட்டால் அவ்வளவுதான். எதிர்தரப்பிடம் புகாரை வாங்கி, புகாரை கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுத்து விடுவார்கள். 

ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசுகிறீர்கள் என்றால் அது சாதாரண வழக்கு. அதுவே கொலை செய்து விடுவேன் என சேர்த்துக்கொண்டால் அது கொலை மிரட்டல் ஆகிவிடும். அதேபோல் தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் என ஒரே சம்பவத்தில் ஜாமீனில் வரக்கூடிய அளவுக்கும் போலீசால் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஜாமீனில் வரமுடியாத அளவுக்கும் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ய முடியும். 

சட்டப்பிரிவுகளை மாற்றி உங்கள் ஜாதகத்தை இவர்கள் மாற்றி அமைத்து விடுவார்கள். ஜாமீனில் வெளி வரக்கூடிய அளவுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

குற்றப்பிரிவு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட போலீசார் தங்கள் கைவரிசையை காட்ட மறுப்பதில்லை. ஒரு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போகிறது என்றால், அவர் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய
மாட்டார்கள். 

அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் கொள்ளைபோன அளவை விட குறைவாகவே குறிப்பிட்டு வழக்கு பதிவார்கள். அதாவது 50 பவுன் கொள்ளை போன இடத்தில் 20 பவுன், 30 பவுன் நகை திருட்டு போனதாக வழக்கு பதிவாகும்.

திருடர்களை பிடித்த பின்னர் ஒட்டுமொத்த நகையையும் பறிமுதல் செய்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தனை நகை இல்லை. எல்லாவற்றையும் விற்றுவிட்டான். பாதிதான் கிடைக்கும் என்பார்கள். பலருக்கு எப்.ஐ.ஆரில் குறிப்பிட்ட அளவு நகைதான் கிடைக்கும். மீதி போலீசின் பாக்கெட்டுக்கு போய் விடும். பத்திரிகையாளர்களை அழைத்து 20 பவுன் நகையையும் மீட்டு விட்டதாக பந்தாவாக பிரஸ் மீட்டும் கொடுப்பார்கள்.

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் இத்தனை கொள்ளைகளும் உண்மைதானா என்றால், கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார்கள் போலீசார். 

"காவல்துறையில் லஞ்சம் அதிகளவில் புழங்குவது உண்மைதான். ஆனால் காவல்துறையில் லஞ்சத்தை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஏனென்றால் காவல்நிலையங்களே இந்த லஞ்சப்பணத்தில்தான் நடக்கிறது" என அதிர வைத்தார் முன்னாள் போலீஸ் அதிகாரி.

"புகார் கொடுக்க வருபவரை பேப்பர் வாங்கி வரச்சொல்வதும், டீ வாங்கி கொடுக்க சொல்வதும், உணவு பொட்டலங்களை வாங்கி வரச்சொல்வதும் உண்மை. அது எங்களுக்கு மட்டுமல்ல. காவல்நிலையங்களில் உள்ள விசாரணை கைதிகளுக்காகவும்தான். விசாரணை கைதிகளை வைத்து பராமரிக்க அரசு வழங்கும் நிதியை வைத்து ஒரு டீ கூட வாங்கி தர முடியாது. 

மேலும் சட்டப்படி ஒருவரை ஒரு நாளுக்கு மேல் விசாரணைக்கு வைத்திருக்கவும் முடியாது. அதேபோல் குற்றவாளிகளை கைது செய்ய செல்வதற்கான வாகன செலவுகளையும் அரசு ஏற்காது. 

விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என எதற்கும் அரசு செலவு இல்லை. இதுதவிர போலீஸ் வாகனம் துவங்கி, மறியலில் கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு கொடுப்பது வரை எல்லாவற்றுக்கும் லஞ்சப்பணம் தேவை.

ஏனென்றால் அரசு இதற்கெல்லாம் செலவிடும் தொகை மிக மிக சொற்பம். சாலை மறியலில் ஆயிரம் பேரை கைது செய்தால், அவர்களுக்கு உணவுக்கு கொடுக்கும் தொகை ஒரு நபருக்கு வெறும் 10 ரூபாய். 

ஆனால் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் செலவாகும். இதற்கெல்லாம் நாங்கள் எங்கு போவது. இதற்கு துவங்கிய லஞ்சம்தான் இப்போது மிக அதிகமாகி இருக்கிறது" என இதற்கு விளக்கமும் சொன்னார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி.

ஏன் லஞ்சம் வாங்குறீங்கனு கேட்டா... ஜென்டில்மேன் அர்ஜூன்மாதிரி விளக்கம் சொல்றீங்களே பாஸ்...! 

- ச.ஜெ.ரவி


விகடன் செய்திகள் - 31.03.2016

ஆயுள் தண்டனை கைதிகள் - வழக்கு


ஆயுள் தண்டனை கைதிகள் - என்ன செய்ய வேண்டும்?

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார். 

இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. 

மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. 

தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். 

இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜ
ரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.

ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 

ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016