disalbe Right click

Monday, April 10, 2017

கோர்ட் டைரக்‌ஷன் வாங்குவதற்கு......

கோர்ட் டைரக்‌ஷன் வாங்குவதற்கு......
கோர்ட் டைரக்ஷன் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?
காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகார்களை, காவல் நிலைய அதிகாரி அவர்கள் இரண்டு வகைகளாக பிரித்து கையாள வேண்டும் என்று Criminal Procedure Code (சுருக்கமாக Cr.P.C) என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய குற்றவிசாரணை முறைச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இரண்டு வகையான குற்றம் :
) கைது செய்யப்பட வேண்டிய குற்றம்
) கைது செய்தற்குரியதல்லாத குற்றம்
கைது செய்யபட வேண்டிய குற்றம் (Cognizable Offence)
இந்திய தண்டணைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றச் செயல்களைச் செய்தவர்களை, அல்லது அவ்வாறு செய்துள்ளது பற்றி தக்க ஆதாரங்களின் அடிப்படையில் பொதுமக்களில் எவரேனும் தன்னிடம் (Cr.P.C - 154ன் கீழ்) செய்த புகாரின் அடிப்படையில் அல்லது குற்றவாளியென்று அரசால் விளம்பரப்படுத்தப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவின் கீழ் குறிப்பிடப்பட்டவரை காவல்துறை அதிகாரி, Cr.P.C - 41ன் கீழ் யாருடைய உத்தரவுமின்றி தன்னிச்சையாக கைது செய்யலாம்.
கைது செய்தற்குரியதல்லாத குற்றம் ( Non Cognizable Offence)
இந்திய தண்டணைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில கைது செய்தற்குரியதல்லாத குற்றச் செயல்களைச் செய்தவர்களைப் பற்றி பொதுமக்களில் எவரேனும் தன்னிடம் புகார் செய்தால், அந்தப் புகார் செய்தவரையும், புகாரையும் (Cr.P.C - 155ன் கீழ்) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
Cr.P.C - 41ன் கீழ் கைது செய்யாமலிருந்தால்?
கைது செய்யப்பட வேண்டிய குற்றம் செய்தவர்களை, உரிய ஆவணங்களுடன் காவல்துறையினரிடம் புகார் செய்தும், அந்தப்புகார் சம்பந்தமாக ஏதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், குற்றவாளிகளை காவல்துறை அதிகாரி கைது செய்யாமல் இருந்தால், நீதிமன்றத்தில் முறையீடு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதைத்தான்கோர்ட் டைரக்ஷன்என்று சொல்கிறார்கள்.
இதனைப் பற்றி Cr.P.C - பிரிவு 2(), Cr.P.C - பிரிவு 156(3) லும், மற்றும் Cr.P.C - பிரிவு 190 (1)- லும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கோர்ட்டில் டைரக்ஷன் வாங்குவதற்கு நீங்களாகவே ஆஜராகலாம். அதற்கு கீழ்க்கண்டவாறு மனு தயார் செய்து கொள்ளுங்கள்.
இதற்கான மாதிரி மனு கீழே தரப்பட்டுள்ளது.
மனுவின் ஓரத்தில் 20ரூபாய் மதிப்புள்ள கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும்.


குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம்
சிவகாசி
சி.ஆர்.எம்.பி. எண்: /2017



.செல்வம், (வயது 55/2017),
/பெ.பழனிச்சாமி நாடார்,
சங்கரேஸ்வரி பிராசஸ்,
xxxxxxxxxxxxxxx
சிவகாசி-626129..................................மனுதாரர்/புகார்தாரர்/Party in Person

எதிர்



1) ராமசாமி (வயது சுமார் 42/2017),
/பெ.சொக்கலிங்க நாடார்,
xxxxxxxxxxxxxxxxxx தெரு
திருத்தங்கல் - 626130.


2) சுந்தர்ராஜன் (வயது 45/2017),
/பெ. (தெரியவில்லை)
xxxxxxxxxxxxxxxxxxxx தெரு
திருத்தங்கல் - 626130.


3) விக்கி என்ற வினேஸ்வரன்
/பெ. பரமசிவன் நாடார்,
xxxxxxxxxxxxxxxxx தெரு
சிவகாசி- 626129 ...................................................எதிர் மனுதாரர்கள்


குற்ற முறையீட்டாளர் பக்கம் சமர்ப்பிக்கும் மனு அண்டர் செக்ஷன் 156(3) சி.ஆர்.பி.சி.யின் படியும், இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 417, 419, 420, 421, 465 ஆகிய பிரிவுகளின்படியும்
புகார்தாரர்/மனுதாரர்/Party in Person ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் நான் மேற்கண்ட முகவரியில் அச்சகங்களுக்குத் தேவையான மை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.
திருத்தங்கலைச் சேர்ந்த சொக்கலிங்க நாடார் அவர்களின் மகன் ராமசாமியும், திருத்தங்கலைச் சேர்ந்த சுந்தர்ராஜனும், சிவகாசியைச் சேர்ந்த பரமசிவ நாடார் அவர்களின் மகன் விக்கி என்ற விக்னேஸ்வரனும் சிவகாசி பேருந்து நிலையம் அருகில், “குவாலிட்டி பிரிண்டர்ஸ்என்ற பெயரில், கூட்டாக அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார்கள்.
மேற்கண்ட அச்சகத்திற்குத் தேவையான (Printing Ink) மைகளை ராமசாமி(1) அவர்கள் மொத்தமாக என்னிடத்தில் ரொக்கமாக பணம் செலுத்தி வாங்கி வருவது வழக்கமாகும்.
நெடுநாட்களாக பொருட்கள் வாங்க வராமல் இருந்த ராமசாமி (1) அவர்கள் கடந்த 17.03.2016 அன்று என்னுடைய விற்பனையகத்திற்கு வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, அதற்கு ஈடாக ரொக்கம் இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி இதனை தருவதாகவும், குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு இதனை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும், 27.03.2016 தேதியிட்ட, ரூ.1,21,000/-க்குகாசோலைஒன்றை கையொப்பம் இட்டு கொடுத்துச் சென்றார். அந்த காசோலையில் அவர்கள் அச்சகத்தின் முத்திரை (Seal) இருந்தது.
வழக்கமாக வருகின்ற வாடிக்கையாளர்தானே என்று நானும் அதனை வாங்கிக் கொண்டு பொருட்களை கொடுத்து அனுப்பினேன்.
காசோலையில் குறிப்பிட்ட வங்கியிலேயே எனக்கும் அக்கவுண்ட் இருந்ததால், காசோலையில் குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு, அந்தத் தொகையை எனது அக்கவுண்டில் சேர்த்துவிட அதனை வங்கியில் செலுத்தினேன்.
வங்கி அலுவலர் அவர்கள், அந்தப் பெயரில் இந்த வங்கியில் அக்கவுண்ட் ஏதும் இல்லை, இது போலியான காசோலை என்று கூறி காசோலையை என்னிடம் திருப்பி தந்துவிட்டார்.
உடனே ராமசாமியையும்(1), சுந்தர்ராஜனையும்(2), விக்கி என்ற விக்கேஸ்வரனையும்(3) செல் போன் மூலம் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்களது செல்போன்கள் உபயோகத்தில் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். நேரில் சந்திக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. அவர்கள் நடத்தி வந்த அச்சகத்தை பல மாதங்களுக்கு முன்பே அவர்கள் மூடிவிட்ட செய்தி மட்டுமே கிடைத்தது.
என்னை ஏமாற்ற வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு போலியாக காசோலை தயாரித்த மேற்கண்ட மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிவகாசி காவல் நிலையத்தில் கடந்த 13.07.2016 அன்று ஆதாரங்களுடன் புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் அதற்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ்கூட அளிக்கவில்லை. மேலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், கடந்த 16.07.2016 அன்று பதிவுத்தபால் மூலமாக எனது புகாரை மீண்டும் சிவகாசி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மீண்டும் அந்தப் புகாரை கடந்த 30.08.2016 அன்று, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைத்தேன். அந்தப் புகாரானது விசாரணைக்காக சிவகாசி காவல் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 28.09.2016 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எனக்கு சிவகாசி காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனை பெற்றுக் கொண்ட நான் அந்த நாளில் காவல் நிலையத்திற்குச் சென்றேன்.
நடைபெற்ற விசாரனையின் முடிவில், “இது சிவில் வழக்குஎங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் கோர்ட்டுக்கு செல்லுங்கள்! என்று என்னிடம் கூறி, நான் கோர்ட்டில் இந்த பிரச்சனைக்கு முடிவு தேடிக் கொள்கிறேன் என்று என்னிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர்.
கிரிமினல் கேஸை சிவில் கேஸ் என்று சொல்கிறார்களே என்று அதிர்ச்சி அடைந்தேன். என்னை திட்டமிட்டு, போலி ஆவணம் தயாரித்து, ஏமாற்றி மோசடி செய்து ராமசாமியும்(1), சுந்தர்ராஜனும்(2), விக்கி என்ற விக்கேஸ்வரனும்(3) இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 417, 419, 420, 421,465 மற்றும் 120பி பிரிவுகளின்படி குற்றம் புரிந்துள்ளார்கள்.
எனவே, கனம் கோர்ட்டார் அவர்கள் கிருபை கூர்ந்து எதிரிகள் மீது இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 417, 419, 420, 421,465 மற்றும் 120பி பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்ய பிரிவு 156(3) சி.ஆர்.பி.சி-ன் படி சிவகாசி காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட வேண்டுமாய் கிருபையுடன் பிரார்த்திக்கப்படுகிறது.




சிவகாசி                                                                                                        மனுதாரர்/புகார்தாரர்/Party in Person
 11.04.2017

சாட்சி
1. வங்கி மேனேஜர் அவர்கள்,
................................வங்கி,
சிவகாசி.
இத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள்.
1) ராமசாமி அவர்கள் எனக்கு கொடுத்த காசோலை நகல்.
2) சிவகாசி காவல் நிலையத்திற்கு கடந்த 16.07.2016 அன்று பதிவுத்தபால மூலம் அளிக்கப்பட்ட புகார் நகல்.
3) சிவகாசி காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அட்டை நகல்.
4) விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பிய புகார் நகல்.
5) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அட்டை நகல்.
6) சிவகாசி காவல் நிலையத்தில் இருந்து எனக்கு அனுப்பிய சம்மன் நகல்.
7) இது சிவில் வழக்கு என்று விசாரணை அதிகாரி முடிவுசெய்து எழுதி மேலதிகாரிக்கு அனுப்பிய அறிக்கை நகல்.
இணைக்கப்பட்ட ஆவண நகல்கள் ஒவ்வொன்றைச் சுற்றி Docker Sheet இணைத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு நகலிலும் ஐந்து ரூபாய் கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.

(இதில் குறிப்பிட்டுள்ள பெயர்கள், சம்பவங்கள் கற்பனையே)
********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.09.201

லேப்டாப் புதுசா வாங்கும்போது.....


லேப்டாப் புதுசா வாங்கும்போது.....

புதுசா லேப்டாப் வாங்கப் போறீங்களா..!
இதைப் படிக்காம வாங்காதீங்க!
இன்றைய டிஜிட்டல் உலகில் அலுவலகம் செல்பவர்கள் முதல் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை னைவருக்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாக லேப்டாப் மாறிவிட்டது. வேலை விஷயமாக இருந்தாலும் சரி பொழுதுபோக்குக்காக இருந்தாலும் சரி. அனைவருக்கும் மடிக்கணினிகள் ஏதேனும் ஒரு வகையில் தேவைப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றன.

லேப்டாப் வாங்கிய பின்பு நமது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வருத்தப்படுவதை விட வாங்குவதற்கு முன்பே திட்டமிட்டால் சரியான விலையில் நிறைவான வசதிகளுடன் மடிக்கணினிகளை வாங்கலாம்..
லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள்..
1.திரை அளவு
மடிக்கணினிகள் வாங்க நினைப்பவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியது திரையின் அளவுதான். அடிக்கடி பயணம் செய்பவர்கள் எடுத்துச்செல்ல எளிதாக 12-14 இன்ச் அளவை தேர்ந்தெடுக்கலாம்.வீடியோ எடிட்டிங்,போட்டோஷாப் போன்ற வேலை தொடர்பாக வாங்க நினைப்பவர்கள் 15 இன்ச்க்கு மேல் சற்று பெரிய திரையை தேர்ந்தெடுக்கலாம்.
2.மடிக்கணினியின் வகை
மடிக்கணினியில் இரு வகைகள் இருக்கின்றன. பழைய வடிவமைப்பில் உள்ளது தவிர திரையை மட்டும் தனியே எடுத்து டேப்லெட் ஆக பயன்படுத்தும் வகையிலான மடிக்கணினிகள் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவைக்கு ஏற்றபடி இதைத் தேர்வு செய்யலாம்.
3.போர்ட்களின் வகை மற்றும் எண்ணிக்கை..
தகவல்களை இன்புட் செய்யவும் அவுட்புட் செய்யவும் அவசியமானவை போர்ட்கள். எல்லா மடிக்கணினிகளிலும் குறைந்தபட்சமாக மூன்று USB போர்ட்கள் இருப்பது நல்லது, USB 3.0 வசதி உள்ள போர்ட்களை தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் வேகமாக டேட்டாக்களை பரிமாற்றம் செய்யலாம்  மேலும் தற்பொழுமு ஸ்மார்ட்போன்   Type-C போர்ட்டை கொண்டிருப்பதால் அதற்கேற்ற வசதிகள் மடிக்கணினியில் இருப்பது அவசியம்.இணைய வசதியை அளிக்க ஈதர்நெட் போர்ட் அவசியம் மேலும் HDMI,VGA, போர்ட்களின்  தேவை இருந்தால் மட்டும் அவை இருக்கும் மடிக்கணினிகளை தேர்ந்தெடுக்கலாம்.
4.ஹார்ட்டிஸ்க்,சிடி டிரைவ்
மடிக்கணினி வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஹார்ட்டிஸ்க். மடிக்கணினியின் இதயம் போன்றது இதைப்பொறுத்தே ஒட்டுமொத்த செயல்திறன் அமையும் என்பதால் ஹார்ட்டிஸ்க் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். சிடிக்கள் தற்பொழுது வழக்கொழிந்து வருவதால் எப்போதாவது மட்டுமே சிடி டிரைவ் தேவைப்படலாம் அல்லது வாங்கிய பின்பு தனியாக பொருத்திக்கொள்ளலாம்.
5.திரையின் வகை
தொடுதிரை வசதி அடுத்த தலைமுறை மடிக்கணினிகளில் புதிய வரவு. உங்களுக்கு கீபோர்டு மூலம் இயக்குவதற்கு சலிப்பு ஏற்பட்டால் திரையை தொடுவதன் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் இந்த வகை மடிக்கணினிகள் விலை சற்று அதிகம் என்பதாலும் தொடுதிரை வசதியை அதிகம் பயன்படுத்த முடியாது என்பதாலும் சாதாரண வகை திரையை தேர்ந்தெடுக்கலாம். அது சற்று விலை குறைவாகவும் கிடைக்கும்.
6.பிராசசர், ரேம் மற்றும் கிராபிக்ஸ் கார்ட்
பிராசசர் மற்றும் ரேம் ஆகியவற்றை பொறுத்தே மடிக்கணினியின் வேகம் அமையும் குறைந்தபட்சமாக 4 ஜி.பி ரேம் மடிக்கணினிக்கு தேவைப்படும்.கிராபிக்ஸ் கார்டுகள் திரையில் தெரியும் காட்சியின் தரத்தை மேம்படுத்த உதவும் ஆனால் விலை சற்று அதிகம்.
7.பேட்டரி திறன் மற்றும் எடை
குறைந்தபட்ச பேட்டரி திறன் 6 மணி நேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுத்தன்மைதான் மடிக்கணினிகளின் சிறப்பம்சமே
எடை குறைந்த மடிக்கணினிகளே பயன்படுத்த எளிதாக இருக்கும்.பேட்டரியின் திறன் அதிகமாக இருந்தாலும் எடை குறைவான மடிக்கணினிகள் தற்பொழுது கிடைக்கின்றன.
8.இயங்குதளம்
விண்டோஸ் இயங்குதளம் சிறப்பாக இருந்தாலும் அதன் விலை அதிகம் எனவே ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை தேர்வு செய்வதால் செலவை குறைக்கலாம்.
-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

நன்றி : விகடன் செய்திகள் - 10.04.2017

Sunday, April 9, 2017

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......


அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......

மத்திய அரசாங்க அல்லது மாநில அரசாங்க ஊழியர்களுக்கு எதிராகவோ அல்லது பொது ஊழியருக்கு எதிராகவோ நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யக்கூடாது. மேற்கண்டவர்களுக்கு உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் (Civil Procedure Act) பிரிவு - 80ன் கீழ் அறிவிப்பு கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
அறிவிப்புகளை இரண்டு பேருக்கு அனுப்புவது நல்லது. ஒன்று துறைத் தலைவர் அ்வர்களுக்கும், மற்றொன்றை சம்பந்தப்பட்ட ஊழியருக்கும் ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆனால், அரசு ஊழியர்கள் யார் மீதும் ஊழல் புகார் வந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 8, 2017

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நமது நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக 1988ல் ஏற்படுத்தப்பட்ட ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இது 1995ம் ஆண்டில் தன்னாட்சி பெற்றது. 
இது நமது நாட்டிலுள்ள 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை பராமரித்து வருகிறது. 
இதன் இணையதள முகவரி : www.nhai.org ஆகும்.
இந்த ஆணையத்திற்குச் சொந்தமான நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் தடுப்புச் சுவர்களில் விளம்பரங்கள் செய்வது தேசிய நெடுஞ்சாலை (நிலம் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2002 பிரிவு 26ன் படி தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.
இது போன்று விளம்பரங்கள் செய்து விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள்  மீது  புகார் செய்ய கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
சென்னை
திட்ட இயக்குநர் அவர்கள்,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
ஸ்ரீ டவர், கிண்டி
சென்னை-600 032
தொலைபேசி எண் : 044-22251885,  cell  : 7598677417
திருச்சி
திட்ட இயக்குநர் அவர்கள்,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
3வது மெயின் ரோடு, பொன் நகர்,
திருச்சிராப்பள்ளி - 620 001   cell  : 9003854252 
மதுரை
திட்ட இயக்குநர் அவர்கள்,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
சூர்யா டவர்ஸ், கே.கே.நகர்
மதுரை-625 020
தொலைபேசி எண் : 0452-2387750    cell  : 9994522212,
****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி  

Friday, April 7, 2017

மாதுளையின் மருத்துவப் பயன்கள்


மாதுளையின் மருத்துவப் பயன்கள்

மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில், மாதுளை சிறந்த பலனை தருகிறது.
மூன்று ரக பழங்கள்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு பழத்தை சாப்பிட்டால், இருதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது; பித்தத்தை போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையை பயன்படுத்தினால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.
ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சக்தி உண்டு. மாதுளை, மலச்சிக்கலை போக்கும். வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு, சிறந்த மருந்தாகும்.
வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தாலும், அதை ஆற்றும் குணம் இதற்கு உண்டு.
மலத்தில், ரத்தம் வருதல், சீதபேதி போன்றவைகளுக்கு மாதுளம் பிஞ்சு, ஒரு நல்ல மருந்து. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும். சளி தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இது சிறந்தது.
நினைவாற்றலை அதிகரிக்கும்
பழத்தில் வைட்டமின் "சி' என்ற உயிர்ச்சத்து உள்ளது; இது, ரத்த உற்பத்திக்கும். ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது. நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து, வேளைக்கு 30 மில்லி வீதம், தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்கு கொடுத்தால், பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள், 15 கிராம் எடுத்து, 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
இருமல் நிற்கும்
இலைச்சாறு, வயிற்றுப்போக்கை தீர்க்கும். தண்டு மற்றும் வேர்பட்டை, வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது. தசை இறுக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும்போது, மாதுளையின் மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும்.
கனியின் சாறு குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து செய்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
விதை மற்றும் கனியின் உட்சதை, வயிற்று வலியை போக்கும். மாதுளம் பூச்சாற்றை, 15 மில்லியளவு சேகரித்து, சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்கு கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்களை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.04.2017

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......

மத்திய அரசாங்க அல்லது மாநில அரசாங்க ஊழியர்களுக்கு எதிராகவோ அல்லது பொது ஊழியருக்கு எதிராக நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யக்கூடாது.

மேற்கண்டவர்களுக்கு உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் (Civil Procedure Act) பிரிவு - 80ன் கீழ் அறிவிப்பு கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அறிவிப்புகளை இரண்டு பேருக்கு அனுப்புவது நல்லது. ஒன்று துறைத் தலைவர் அ்வர்களுக்கும், மற்றொன்றை சம்பந்தப்பட்ட ஊழியருக்கும் ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆனால், அரசு ஊழியர்கள் யார் மீதும் ஊழல் புகார் வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி