disalbe Right click

Tuesday, April 11, 2017

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்


ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்

புதுடில்லி: ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 
இதன் 10 முக்கிய அம்சங்கள்: 
  1. நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமேநிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.
  2. ஆதார் எண் விவரங்களையும்பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர்.
  3. கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு.
  4. ஆதார் எண் அட்டையில்பலருக்கும் முழு பெயரும் இருக்காது. இனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால்பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில்ஆதார் எண்ணுக்கான இணைய தளம்பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாதுஆதாரம் தேவை எனகேட்கும்.
  5. இதுபோன்ற சூழ்நிலையில்பான் கார்டை ஸ்கேன் செய்துஆதார் இணைய தளத்தில்பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படிஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது.
  6. பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும்.
  7. .வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டுஅவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண்இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும். 
  8. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண் தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும்அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை.
  9. இதுபோன்ற சூழ்நிலையில்அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்றுபோன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால்அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால்மொபைல் எண்ணை பதிவு செய்வதுவிலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.
  10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால்ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில்வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 10.04.2017









10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.


Monday, April 10, 2017

எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்!


எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்! 

ஒரு கிளீன் ரிப்போர்ட்
ஹெல்த்வான்மதி, பொதுநல மருத்துவர் - உலகநாதன், சித்த மருத்துவர்
வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது என நம் முன்னோர் சில ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு, விளக்கெண்ணெய் - வேப்பெண்ணெய் கலந்து குடிப்பது, எனிமா எடுத்துக்கொள்வது எனப் பல வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். இதில், எனிமா இன்றுவரை மருத்துவ ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒன்று. அந்தக் காலத்தில் இப்படி உடலைச் சுத்தம் செய்வதற்கு என்றே ஒரு நாளை ஒதுக்கினார்கள். இன்றோ வீட்டைச் சுத்தம் செய்யக்கூட நேரம் இன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு எனிமா தேவை என்று பார்ப்போம்.

எனிமா என்றால் என்ன

உணவு செரிமானத்துக்குப் பிறகு, கழிவுகளாக வெளியேறும்போது, சில நேரத்தில் பெருங்குடலிலேயே தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெருங்குடலைத் திரவம்கொண்டு அலசிச் சுத்தப்படுத்தும் மருத்துவமுறைக்குத்தான் எனிமாஎன்று பெயர். 

பேதி மாத்திரையும் எனிமாவும் ஒன்றா

எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்றச் செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. நீண்டகாலம் பயன்படும் முறை. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள மலக்குடல் மற்றும் பெருங்குடலின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனைத் தரும். 

எனிமா யாருக்குக் கொடுக்கப்படும்

* தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள். 

* ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள். 

* முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள். 

* பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள். 

* மலம் கழிக்கச் சிரமப்படும் வயதானவர்கள். 

* ஹைட்ரேஷன் தெரப்பி (உடலில் நீர் இழப்பு ஏற்பட்டவருக்கு ஆற்றலை அதிகரிப்பதற்காக தரப்படும் சிகிச்சை) செய்ய உள்ளவர்கள். 

எனிமா வகைகள் 

எனிமாவில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று கிளென்ஸிங் எனிமா’ (Cleansing enema). இது, சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கோலனோஸ்கோப்பி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளுக்கு முன்பு  இது செய்யப்படுகிறது. மலச்சிக்கல், அதனால் ஏற்படும் தலைவலி போன்ற பிரச்னைகள் இந்த முறையால் குணமாகின்றன. இந்த எனிமா, தண்ணீருடன் ஏதாவது ஒரு மலமிளக்கி மருந்தைக் கலந்து, ஆசனவாயின் உள்ளே செலுத்தப்படும். இந்த எனிமா கொடுக்கப்பட்டதும், நீருடன் மற்ற கழிவுகளும் வெளியேறிவிடும். 

இரண்டாவது வகை ரெட்டென்ஷன் எனிமா’ (Retention enema) எனப்படும். இந்த எனிமாவும் கழிவுகளை வெளியேற்றுவதற்காகத் தான். ஆனால், இந்தத் திரவம் உள்ளே செலுத்தப்பட்டுச் சிறிது நேரம் உள்ளே நிறுத்தப்படும். இதன்மூலம், அந்தத் திரவத்தில் உள்ள தாதுஉப்புகள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆனால், தொடர்ந்து இப்படிச் செய்வதால் ஆசனவாயில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. 

மூன்றாவது வகை பேரியம் எனிமா’ (Barium enema). எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எடுத்து, குடலின் உட்புறம் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கும் முன்பு குடலைச் சுத்தம் செய்வதற்காக இந்த எனிமா கொடுக்கப்படுகிறது.

எனிமாவுக்கான மருத்துவப் பொருள்கள் 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வெந்நீர் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. சமயங்களில், மூலிகை எண்ணெய்யோ நெய்யோ உபயோகிக்கலாம். 

எனிமாவுக்கு முன்... 

எனிமா கொடுப்பதற்கு முந்தைய தினம் மருத்துவர் கூறும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முடிந்தால், ஏதேனும் பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் இருக்கலாம். வீட்டில் எடுத்துக்கொள்வதாக இருந்தால், முதலில் வயிற்றில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். நம் உடலில் வாயு பிரிந்தால், இந்த இயக்கம் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். 

அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்வது சரியா

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் குடலைச் சுத்தம் செய்வதற்காக எனிமா எடுத்துக்கொள்வது தவறு அல்ல. ஆனால், அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆசனவாயிலும், உள்ளே இருக்கும் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தச் செயற்கையான சுத்திகரிப்பு முறையை முழுமையாகச் சார்ந்து இருப்பதும் தவறான பழக்கம். நமது ஆசனவாய் சுருங்கி விரியும் தன்மை உடையது. அடிக்கடி எனிமா எடுக்கும்போது இந்தத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், எனிமா இல்லாமல் தானாகவே மலத்தை முழுமையாக வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. முதலில் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்கள் கடைப்பிடித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது. 

யாருக்கு எனிமா கொடுக்கக்கூடாது

* மூலம் பிரச்னை உள்ளவர்கள் 

* இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் 

* சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளவர்கள். 

* மலக்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள். 

இயற்கையான முறையில் உடல் கழிவுகளைச் சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்

மருத்துவர் ஆலோசனைப்படி, முதல் நாள் இரவு அல்லது காலை, ஐந்து முதல் ஏழு மணி நேரத்துக்குள் விளக்கெண்ணெய், கடுக்காய்ச் சூரணம், திரிபலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

- ந.ஆசிபா பாத்திமா பாவா
நன்றி : டாக்டர் விகடன் - 16.04.2017


பத்திரப்பதிவு அனுமதி தற்காலிக அனுமதிதான்!


பத்திரப்பதிவு அனுமதி தற்காலிக அனுமதிதான்!

பத்திரப் பதிவு அனுமதி தற்காலிகமே: உயர் நீதிமன்றம் உத்தரவு
அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யும் வகையில் தளர்த்தப்பட்டிருந்த தடை உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை உயர் நீதிமன்றம் மார்ச் 28-ம் தேதி அன்று தளர்த்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் எனவும் அனுமதியளித்திருந்தது.

இதுதொடர்பான உத்தரவின் நகல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. அதில் பத்திரப் பதிவு அனுமதி, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் முற்றிலுமாக அழிந்து வருகிறது. இந்த சட்ட விரோத விற்பனையை பத்திரப் பதிவுத்துறையும் ஊக்குவித்து வருகிறது. எனவே விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவு எதிரொலியாக தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தது. அதில் ‘‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் அந்த தேதிக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை எக்காரணம் கொண்டும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது’’ என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் நிலங்களை வாங்கிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர்கள், முகவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி சென்றார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’’அங்கீகாரமற்ற விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றம் விதித்த தடையில் நாங்கள் சிறு மாற்றம் செய்கிறோம். அதன்படி, தமிழக அரசு பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 22(ஏ) - வில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களின்படி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.

அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர்பாக முடிவு செய்யப்படும். இந்த கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான உத்தரவு நகலில் பத்திர பதிவு அனுமதி என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என்று கூறப்பட்டுள்ளது. இது வீட்டு மனை விற்பனையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆர். பால சரவணக்குமார்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.04.2017



ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்க.....


ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்க.....
ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன்என மக்கள் விடும் நிம்மதிப் பெருமூச்சு புரிகிறது. ஆனால், நம் கடமையை அதோடு முடிய விட மாட்டேன் என்கிறது மத்திய அரசு. ஆதார் எல்லாம் கட்டாயம் இல்லைஎன ஒரு பக்கம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவித்தபடி இருக்கிறது மத்திய அரசு. 
காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னதை மாநில அரசே கேட்கவில்லை. மத்திய அரசு மட்டும் என்ன மாங்காய்த் தொக்கா
இதோபான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால், பான் நம்பரே செல்லாமல் போய்விடும் எனச் சொல்லிவிட்டார்கள். அரசு சொல்லும் விஷயத்தைச் செய்ய நினைத்தாலும் செய்ய விடுமா அவர்கள் சிஸ்டம்? “உங்க அப்பாரு பேரு ரெண்டு சுழியா? இதுல மூணு இருக்கே”, “உங்க கண்ணுக்கு மேல என்ன இமை இருக்குனு ஏதேதோ காரணம் சொல்லி அலைக்கழிக்கும். 
ஆதார்
அப்படியெல்லாம் ஆகக் கூடாது என முதல் வரியில் சொன்ன ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலே படியுங்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என விளக்குகிறேன்.
வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும்.
Income tax page

இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம். மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
reset password

உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
otp page

இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
profile setting

இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
aadhar

“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947) தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். அதனால், சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைகிறார்களோ இல்லையோ.. உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்.
-கார்க்கிபவா
நன்றி : விகடன் செய்திகள் - 11.04.2017