ஆதார் அட்டைகளில் திருத்தம்
இன்று முதல் 303 நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி
தொடக்கம்!
தங்களது ஆதார் அட்டைகளில் திருத்தம்
மேற்கொள்ள நினைப்பவர்கள், திங்களன்று செயல்பட உள்ள 303 நிலையான மையங்களில் தங்களுக்குத்
தேவையான திருத்தங்களை செய்து கொள்ள அணுகலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி
கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
புதிதாக ஆதார் அட்டைகள் பதிவு செய்து கொள்பவர்கள் மற்றும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டை விரல் ரேகை பதிவு செய்ய எந்த விதக் கட்டணமும் இல்லை. ஆனால் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும்.
யாரெல்லாம் தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி
போன்றவற்றில் திருத்தம் செய்ய நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள
தேதியில், குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று தங்களுக்குத் தேவையான
மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
கட்டை விரல் ரேகை, கண் விழித்திரை
ரேகை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மாற்ற விரும்புபவர்கள் ரூ.15 கட்டணமாகச் செலுத்த
வேண்டும். மேலும் ஆதார் அட்டைகளை பிரிண்ட் எடுக்க வேண்டுமெனில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம்
செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
இது குறித்து மேலதிக விவரங்கள் பெற 1800 425 2911 எனும் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 17.04.2017