disalbe Right click

Friday, April 21, 2017

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்கும் தோப்புக்கரணம்!
நாமெல்லாம் பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும்போது முச்சந்தி பிள்ளையாருக்கு ஒன்பது தோப்புக்கரணம் போட்டுவிட்டு போனோமே...உங்களுக்கு ஞாபகம் வருகிறதா..?

இன்றும் "பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுடா... நல்லா படிப்பு வரும்''னு சில தாத்தாக்கள் பேரன்களுக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களில்கூட 'தூக்கம்' என்பதை 'துக்கம்' என எழுதும் மக்கு மாணவர்களை தண்டிக்கவும், தப்புக் கணக்குப் போடும் மாணவர்களை திருத்தவும் வாத்தியார்கள் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பெரியவர்கள் உட்பட அனைவருமே பிள்ளையார் கோயிலுக்கு போனால் முறையாக அமர்ந்து எழுந்து தோப்புக்கரணம் போடுவது வழக்கம்.

ஆனால் இன்று 'ஃபாஸ்ட் ஃபுட்' சாப்பிடுவது போல சாமி கும்பிடுவதும் சுருங்கிப் போனதால் தோப்புக்கரணம் போடுவதை பலரும் விட்டுவிட்டார்கள்.

நம் பெரியவர்கள் கற்றுத் தந்த இந்த தோப்புக்கரணத்தை இன்றைக்கு வெளிநாட்டுக்காரன் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, "இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.'' என்கிறார். 

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ''தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன'' என்று சொல்கிறார்.

''இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.'' எனவும் அவர் சொல்கிறார்.

அட, நாம் தப்பு செய்யும்போது நம் வாத்தியார்கள் நம் காதுகளைப் பிடித்து ஏன் திருகினார்கள், ஏன் தோப்புக்கரணம் போட வைத்தார்கள் என இப்போதுதான் புரிகிறது. எப்போதுமே நாம் அம்மா அப்பா செல்வைதைவிட அடுத்தவர்கள் சொல்வதைத்தானே கேட்டு பழக்கப்பட்டிருக்கிறோம்.

'சரி, இனிமேலாவது விநாயகர் கோயிலுக்கு போகும்போதும், ஏன் வீட்டிலேயும்கூட தோப்புக்கரணத்தை போட முடிவு செய்துவிட்டேன். ஆனால் எப்படி போடுவது?' என்கிறீர்களா..? உங்களுக்காக சின்ன டிப்ஸ்...

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

நம் குழந்தைகளை புத்திசாலியாக்க அபாகஸ் பயிற்சி அளிக்கும் நாம், இனியாவது தோப்புக்கரணத்தை சொல்லிக்கொடுப்போம்.

-கா.முத்துசூரியா 

விகடன் செய்திகள் - 21.04.2016

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?
10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் ?சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். 
அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விகடன் செய்திகள் - 21.04.2016

விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி

Image may contain: one or more people, text and food
விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி
'சூர்யாய ஸ்வாஹா
சூர்யாய இதம் நமஹ
பிரஜாபதேய ஸ்வாஹா
பிரஜாபதேய இதம் நமஹ'
- இவை அக்னிஹோத்ர மந்திரத்தின் எளிய சொற்களாக விளங்குபவை. வேதங்களில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களில் மிகவும் எளியது இதுதான். அக்னி ஹோத்ரம் வானிலையை மாற்றுகிறது. அதில் ஈடுபடுபவர்களின் மனத்தையும், பக்குவப்படுத்துகிறது.
அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்தப் பயன்களை அடைய முடியுமா என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்ற ஊரில் இதற்காக ஓர் ஆராய்ச்சி நிலையமே நிறுவப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சக்தி, வம்ச அடிப்படை, மருத்துவம், விவசாயம் போன்றவை வளம் பெறுவதற்குக் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை இங்கே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்கிறார்கள்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பிரெடரிக் மாக்ஸ்முல்லர், இப்படி குறிப்பிட்டார்:
'அக்னிம் இதே புரோசிதம் -
யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம்
ரத்னதாதமம்
உலகத்தின் பழம்பெரும் நூலான ரிக்வேதத்தில் வரும் முதல் வாசகம் இது.
'அக்னியை நான் வணங்குகிறேன். யாகத்தின் முதல் தலைவனும், தெய்வீகம் நிறைந்த முதல்வனும், சக்தியைத் தூண்டுபவனும், எல்லாச் செல்வங்களையும் அருளுபவனும் ஆகிற அக்னியை நான் வணங்குகிறேன்.''
ஹோமம் என்பது சாதாரண நெருப்பல்ல. விதிப்படி அதை தயார் செய்ய, குறிப்பிட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சக்தியைப் பெற, குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
சிவபுரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பிறகு, முதன்முறையாக அகல்கோட் மடத்தைச் சேர்ந்த கஜானன் மகராஜ் என்ற பெரியவரால் சோமயக்ஞம் முறைப்படி செய்யப்பட்டது. அந்த யாகத்தில், கூடவே ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. விஞ்ஞான ரீதியாகப் பல முடிவுகள் அதிலிருந்து வகைப்படுத்தப்பட்டன.
ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. இதனால் உடலுக்கும், சில அடிப்படையான பக்குவங்கள் கிடைக்கின்றன. இவை ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இயற்கையின் சுழற்சியை ஒட்டி இது செய்யப்படுவதால் சூரியனின் தோற்றமும் மறைவும் இதற்கு உரிய கால அளவுகளாக இருக்கின்றன.
இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 'சூரியோதயத்தின்போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த ஒளிவெள்ளத்தின் ஆற்றல் அபாரமானது. தீய பொருட்கள் அந்த உதயத்தில் கருகி அழிந்துவிடுகின்றன. உயிர் கொடுக்கும் சக்தி ஓங்குகிறது. அந்த வேளையில் அக்னிஹோத்ர மந்திரங்களை இசையுடன் கூறுவது அந்தச் சக்தியை தூண்டுகிறது. மாலையில் சூரியன் மறையும் வேளையில் இந்தச் சக்தி மெள்ள மெள்ள சுருங்கி அடங்குகிறது. அப்போதும் இந்த மந்திரம் அதன் இயக்கத்துக்கு ஏற்றபடி அமைகிறது' என்று கண்டறியப்பட்டது.
சூரியனின் சக்தியைப் பொறுத்தே வானிலை அமைந்திருக்கிறது. வானத்தில் பரவி இருக்கும் பல்வேறு மண்டலங்களிலும் அந்தச் சக்தி இயங்குகிறது. வெள்ளம்போல் எலெக்ட்ரான் அணுக்கள் பூமியின் காந்த மண்டலத்தை நோக்கி வந்து சேருகின்றன.
பூமியைச் சுற்றி உள்ள மின்காந்த மண்டலமும் நம் எண்ணங்களையும் உணர்ச்சி அலைகளையும் ஏந்தி நிற்கிறது. மிதமான நிலையில் இதன் வேகம் ஏழு சுழற்சிகள் ஆகும். நாம் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான நிலையில் தியானத்தில் அமரும்போது, நம் மூளையில் எழும் அலைகளும் அப்போது ஒரு வினாடிக்கு ஏழு சுழற்சிகள் வீதமே இயங்குகிறது. ஆகவே, தியான நிலையில் நாம் இயற்கையான சூழ்நிலைக்குப் பொருந்தி விடுவோம்.
அக்னிஹோத்ரம் செய்ய கூர் உருளை வடிவம் கொண்ட செப்புப் பாத்திரம், காய்ந்த பசுஞ்சாண வறட்டிகள், சுத்தமான நெய், நவதானியங்கள் ஆகும். ரசாயன முறைப்படி புரதச் சத்து மிகுந்த அரிசி, முட்கள் நிறைந்திருக்கும் மரங்களின் சுள்ளிகள் ஆகியவையே ஹோமத்துக்கு உரியவை. காலையும் மாலையும் அக்னி மூட்டப்பட்டு ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.
வறட்டித் துண்டுகளும், அரிசியும், நெய்யும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன. விரல் நுனியில் மட்டுமே எடுக்கக் கூடிய அளவு அரிசியை எடுத்து, 'சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் நமஹ' என்று முதல் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து, 'பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் நமஹ' என்று இரண்டாவது மந்திரம் கூறப்படுகிறது. இது உதய காலத்தில் செய்யப்படும் தொடக்கம்.
இதேபோல்
'அக்னயே ஸ்வாஹா,
அக்னயே இதம் நமஹ'
'
பிரஜாபதயே ஸ்வாஹா
பிரஜாபதயே இதம் நமஹ'
என்று சந்தியா காலத்தில் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அக்னிஹோத்திர பாத்திரத்தைச் சுற்றி அபரிமிதமான சக்தி அலைகள் உருவாகின்றன. காந்த சக்தி மிகுந்த மண்டலம் உருவாகி, அழிவுச் சக்திகளைத் தடுத்து வளர்ச்சி சக்திகளை அமைக்க உதவி செய்கின்றன. இவ்வாறு அக்னி ஹோத்திரம் வளர்ச்சியையும், செழுமையையும் தூண்டுகிறது. இவை அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் விஞ்ஞான அடிப்படையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும்.
பூனாவில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பாரி ராத்னர், அர்விந்த் மாண்ட்தர் ஆகிய விஞ்ஞானிகள், அக்னிஹோத்ரம் செய்யப்படும் இடத்தில், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதையும், ஹோமப் புகையில் பார்மல்-டி, ஹைட் என்ற உயிரணுக்களுக்கு செழுமையை ஊட்டும் பொருள் நிறைந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க விஞ்ஞானி ஆன்மெக்ளிப்ஸ், ''இன்றைய தொழில் வளர்ச்சியினால் காற்று, மண், நீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றையும் தூய்மைப் படுத்தவேண்டியது மனித குலம் உயிர் பிழைக்க மிகவும் அவசியம். இதற்கு அக்னிஹோத்திரம் உதவுகின்றது" என்று சொல்லி இருக்கிறார்.
அக்னிஹோத்ரம் செய்யப்படுவதற்கு முன்பும் செய்த பின்பும் வானிலையில் உள்ள பண்புகளை 'எலோப்டிக்' சக்தி அளவுமானியின் மூலம் பகுத்து அறிந்திருக்கிறார்கள். அக்னிஹோத்திரம் செய்த பிறகு இந்த சக்தி கணிசமான அளவு உயர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் ஆகிய நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடிய மருந்துகள் அக்னிஹோத்திரம் நிகழ்த்தி அந்தச் சூழலிலேயே தயாரிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக விளங்குவது அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் இருந்து திரட்டப்படும் சாம்பலே ஆகும் என்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர், மோனிகா ஜெஹ்லே கூறி இருக்கிறார்.
அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி.. தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் வளப்படுத்த உதவுகிறது. அக்னியின் மூலம் வானமண்டலமும் தூய்மை அடைகிறது. அதனால் இயற்கையின் இயக்கத்துக்கு ஏற்ற அளவில் மனமும் இயங்கி அமைதி அடைகிறது.
அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் ஒரு சக்திமண்டலம் உருவாகிறது. இந்த நிலையில் அங்கே வளரும் தாவரங்கள் செழுமையுடன் சத்துக்களையும் பெறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மஹாராஷ்டிராவில் உள்ள, திராட்சைப் பயிர் பெருக்கத் துறையின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாசிக் மாவட்டத்தில் பஸ்வந்த் என்ற கிராமத்தில், திராட்சைப் பயிர்கள் ஆறுமாதத்தில் பெறக்கூடிய வளர்ச்சியையும் செழுமையையும் மூன்று வாரங்களிலேயே அடைந்திருக்கின்றன.
உலகமெங்கும் வானிலை, நீர், மண் ஆகியவற்றை வளப்படுத்தி, மனிதனின் மனதையும் பண்படுத்தி உயிர்கள் வளர உதவி, தாவரங்களையும் செழுமைப்படுத்தும் அக்னிஹோத்திரத்தை வாழ்வளிக்கும் மகாசக்தியாகப் போற்றுவது முற்றிலும் சரிதான்.
- எஸ்.கண்ணன்கோபாலன்
விகடன் செய்திகள் - 20.04.2016

Thursday, April 20, 2017

மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு


மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு
10, 12ம் வகுப்பு மாணவர்கள்... பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுசெய்ய ஏற்பாடு!
சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிகளிலேயே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

15 நாட்கள் பதிவு
அது போலவே இந்த ஆண்டும் (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 12ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு பதிவு
2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு
மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Posted by: Sivasankari

நன்றி : கேரியர் இந்தியா  »தமிழ் – 20.04.2017

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2


நீதிமன்றத்தில் தனது வழக்கில் தாமே வாதாட வேண்டும் என்று எண்ணுவோரின் கவனத்திற்கு....

துணிவே துணை
உங்களை வரவேற்க யாரும் அங்கு கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். குற்றம் கண்டு பிடிக்கவும், மட்டம் தட்டவும், வந்த வழியே திருப்பி அனுப்பவும், மாற்று வழி கூறவும் பலர் இருப்பார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டிதான் நீங்கள் வழக்கை தாக்கல் செய்து வாதாடி வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு மன தைரியம் என்பது அதிகமாக இருக்க வேண்டும்.

முதன் முதலாகப் போகப் போகிறீர்களா?
நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் பொழுதுதான் முதன் முதலாக போகப் போகிறீர்களா? அது மிகவும் தவறான செயலாகும். இரண்டு கண்ணையும் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். யாரை பார்க்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று மனக்குழப்பம் உண்டாகும்.

அதனால், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போகின்ற நீதிமன்றத்திற்கு சில நாட்கள் சென்று அங்கு நடக்கும் செயல்களை நேரில் உற்று கவனியுங்கள். உங்களது மனதில் இருக்கின்ற பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மனதில் இருக்கின்ற தயக்கத்தையும் அகற்றும். உங்களுக்கு மிகுந்த தைரியத்தை அது கொடுக்கும்.

இந்திய தண்டணைச் சட்டம்
இந்தப் புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் I.P.C. என்பார்கள். அல்லது இ.பி.கோ (இந்தியன் பீனல் கோடு) என்பார்கள். இதனை வாங்கி படியுங்கள். எந்த குற்றத்திற்கு எந்த செக்‌ஷன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். யார் எந்தக் குற்றம் செய்தாலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டணை வழங்கப்படும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம்
இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் Cr.P.C. என்பார்கள். இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கின்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றமும், காவல்துறையும் இயங்குகின்றது. இதனையும் வாங்கி படியுங்கள். உங்களது சந்தேகங்கள் பெருமளவு தீரும். தானாகவே தைரியம் வரும்.

இந்திய சாட்சியச் சட்டம்
இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கிறது. ஒரு வழக்கை நடத்துவதற்கு சாட்சியும், ஆவணங்களுமே பெரிதும் துணை புரிகின்றது. ஆகவே, இந்த புத்தகத்தையும் வாங்கி கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வழக்குகள்
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வழக்கு நடத்தியிருப்பார்கள். அதன் நகல்களைக் கேட்டு வாங்கி அதில் எப்படி வார்த்தைகள், வாக்கியங்கள் கையாளப் பட்டிருக்கி்ன்றது? என்பதை கவனித்துப் படியுங்கள். அதற்குப் பின்னர் உங்கள் வழக்குகளை எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு வெள்ளைத் தாளில் எழுதிப் பாருங்கள்.

கை காட்டி மரம்
நாங்கள் அனைவருமே ஒரு கை காட்டி மரத்தைப் போலத்தான். உங்களுக்கு வழி காட்டுவோமே தவிர வழக்காடுவதற்கு கூடவர இயலாது. எங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை உங்களுக்காக எந்தவித பிரதிபலனின்றி பயன்படுத்தி வருகிறோம். அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கித்தான்! என்பதை மனதார நம்புங்கள். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்! என்று அடிக்கடி வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள், வெற்றி நிச்சயம்!
தொடரும்

அன்புடன் செல்வம் பழனிச்சாமி


ஆன்லைன் மூலமாக SBI அக்கவுண்ட் தொடங்க


ஆன்லைன் மூலமாக SBI அக்கவுண்ட் தொடங்க.....

ஆன்லைன்-ல் மிக எளிமையாக எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி?


தற்போது இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எஸ்பிஐ-ல் கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது, காரணம் அனைத்து இந்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் அரசின் சலுகைகள், கடன்பெற வசதி போன்ற மிக அதிகமான முக்கிய அம்சங்கள் இவற்றில் இடம்பெருகிறது. தற்போது உலகம் நவீனமையம் அனதால் எளிமையாக வீட்டில் இருந்துகொண்டே மக்கள் ஆன்லைன்-ல் மிக எளிமையாக கணக்கு தொடரலாம்.பின்பு வங்கி சென்று காத்திருக்கும் அவசியம் தற்போது இல்லை.

எஸ்பிஐ: எஸ்பிஐ பொருத்தமாட்டில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகப்படியான கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் அதிகப்படியான மக்கள் இதில் கணக்குகள் தொடங்கவுள்ளனர், காரணம் இதன் சேவைப்பிரிவு மிக எளிமையாக இருக்கும்.

எஸ்பிஐ-ல் ஆன்லைன் பங்கு: எஸ்பிஐ பொருத்தவரை தற்போது ஆன்லைன்தான் அனைத்து செயல்படுகளும் மிக எளிமையாக செயல்படும் வண்ணம் உள்ளது. மேலும் இரவு பகல் எந்தநேரத்திலும் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவை.

எஸ்பிஐ கணக்கு: எஸ்பிஐ கணக்குகள் தொடர பல்வேறு ஆதாரங்கள் தேவை. மேலும் குறிப்பிட்ட தேதியில் எஸ்பிஐ வங்கிக்கணக்கு தொடங்கினால் அன்றே கணக்கு செயல்படும் வசதி செய்து தரப்படுகிறது தற்போது.

ஆன்லைன்-ல் கணக்கு தொடங்குவது எப்படி



ஆன்லைன்-ல் கணக்கு தொடங்குவது எப்படி?

*முதலில் ஆன்லைன்-ல் எஸ்பிஐ  www.onlinesbi.com  சேவைப்பாட்டிற்கு நுழையவேண்டும் 

*பின்பு ஆன்லைன்-ல் எஸ்பிஐ கணக்கு தொடர உங்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

*மேலும் கணக்கு தொடர ஆதார்அட்டை, வாக்காளர்அட்டை, குடும்பஅட்டை போன்றவை மிகவும் அவசியம் 

*பின்பு ஆன்லைன் உங்கள் விவரங்களைப் முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்

 *மேலும் உங்களது தெளிவான புகைப்படத்தை அதில் பதிவு செய்யவேண்டும் 

*உங்களிடம் தற்போது உள்ள அழைப்பேசி எண் தெளிவாக கொடுக்கவேண்டும் 

*மேலும் ஏடிஎம் அட்டைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்திசெய்ய வேண்டும்

 *அதன்பின் அந்தப்படிவங்களை ஒரு நகல் (ப்ரிண்ட்) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு படிவங்களை பூர்த்திசெய்து அனுப்பிய பிறகு டிசிஆர்என் - அதாவது தற்காலிக வடிக்கையாளர் குறிப்பு எண் உங்கள் மொபைலுக்கு அனுப்பபடும் 

*பின்பு உங்கள் வங்கிகணக்கு எளிமையாக தொடங்கப்படும்.  

Written By: Prakash 

நன்றி : கிஸ்பாட் » News » 19.04.2017


தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

நாமாகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் நாமே வாதாட வேண்டும்! என்ற உங்களது தைரியத்திற்கு முதலில் எனது பாராட்டுக்கள். நம்மைவிட நமது வழக்கைப் பற்றி யாருக்கு நன்றாகத் தெரியும்? இப்படிச் செய்வதனால், எந்த ஒரு வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். வாய்தாக்கள் வாங்க வேண்டியதில்லை. வழக்குகளும் நீதிமன்றத்தில் தேங்க வேண்டியதில்லை. நமது நோக்கத்தை  வேறு எவரும் சிதைக்க முடியாது.  

இது போன்று நான் முயற்சி செய்யும் போது சில தவறுகள் செய்திருந்தேன். நீதிபதியால் தவறுகள் குறிப்பிடப்பட்டு எனது மனு என்னிடமே திருப்பி அளிக்கப்பட்டது. தவறுகளை திருத்தி மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பிக்கலாம் என்று, வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நமது நேரம் அதனால் வீணாவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும், நமது வழக்கின் போக்கு, திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறு எதுவும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். 

நேரடியாக தன்னிடம் வருபவர்களை (சில வழக்குகள் தவிர) நீதிமன்றம் விரும்புவதில்லை. துறை ரீதியாக கீழிருந்து மேல் வரைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை முதலில் அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  அவ்வாறு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.  

காவல்துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தால், முதலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய காவல்நிலையத்தில் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். நேரடியாக எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்காதீர்கள். புகார் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய “புகார் மனு ஏற்புச் சான்றிதழ்” கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காவல்நிலையத்தில் அதனை தர மறுத்தால், ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி அதற்குரிய  ஆதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீதிமன்றத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இது இல்லை என்றால் தங்கள் மனு திருப்பி அளிக்கப்படும்.  

உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நீங்கள் எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  

அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள்  காவல் துறை துணைத்தலைவர் (DIG) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 

மேற்கண்டவாறு செய்தும் நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆதாரங்கள் மிகமிக அவசியம்.

நாம் அதிகமாக அணுகுகின்ற துறை என்பதால் மேலே காவல்துறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றி அந்தந்த துறை அதிகாரி மற்றும் மேலதிகாரிகளை அணுகுங்கள்.  

தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Tuesday, April 18, 2017

அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்


அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்

புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு நாள் செய்து இன்னொரு நாள் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்த்து செய்யும்போது மட்டுமே எதுவும் பலன் தரும். ஆகவே விடாமல் செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும்.
பால் :
மிக எளிதில் கிடைக்கக் கூடியது. ஒரு பஞ்சினால் பாலில் நனைத்து புருவத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாலிலுள்ள வே புரோட்டின்மற்றும் கேசின் புருவ வளர்ச்சியை தூண்டும்.
கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் த்டவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். கற்றாழையிலிள்ள அலோனின் என்ற பொருள் கெரட்டின் போன்றது. முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பெட்ரோலியம் ஜெல்லி :
பெட்ரோலியம் ஜெல்லியை தினமும் இரௌ தூங்குவதற்கு புருவத்தின் மீது தடவி வர வேண்டும். இதிலுள்ள ஈரத்தன்மை புருவத்திற்கு தகுந்த ஈரப்பசையை அளித்து முடி உதிராமல் காக்கும். அடர்த்தியான புருவம் வரும் வர உபயோகப்படுத்துங்கள்.
முட்டை மஞ்சள் கரு :
முட்டையிலுள்ள மஞ்சள் கருவை நன்றாக அடித்து க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள். ஒரு பிரஷினால் அதனை புருவத்தின் மீது தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். மஞ்சள் கருவில் பையோடின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான கெரோட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.
வெங்காய சாறு :
வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவி வாருங்கள். வெங்காயத்தில் சல்ஃபர்”, “செலினியம்அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் அளிக்கும். இதனால் உதிராத பலமான புருவம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணயை தினமும் கண்ணிமை மற்றும் புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும். இது பழமையான குறிப்பாக இருந்தாலும் மிகவும் நல்ல பலனளிக்கக் கூடியது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 12.04.2017 

கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்


கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்
பார்வை தெளிவாக இருக்க வேண்டும்; ஆனால், மூக்கு கண்ணாடி வேண்டாம், லேஸர் சிகிச்சையும் வேண்டாம்என்று நினைப்பவர்களுக்கான சரியான தேர்வு கான்டாக்ட் லென்ஸ். கான்டாக்ட் லென்ஸ் யார் அணியலாம், எந்த நேரங்களில் அணியலாம் என்பது உள்பட எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார் கண்சிகிச்சை மருத்துவர் அமர் அகர்வால்.
யார் அணியலாம்?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மங்கலான பார்வை மற்றும் அருகில் உள்ள பொருட்களை சிரமத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து பார்வை குறைபாடுகளையும் சரிசெய்ய கான்டாக்ட் லென்ஸ் அணியலாம்.
கான்டாக்ட் லென்ஸில் எத்தனை வகைகள் உள்ளன?
கான்டாக் லென்ஸ் அணிய முடிவு செய்தவர்களின் முதல் தேர்வாக இருக்கும் சாஃப்ட் கான்டாக்ட் லென்ஸ்களை(Soft Contact lens) நாள், வாரம், மாதம் என்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக்கொள்ளலாம். மங்கலான பார்வை உள்ளவர்களுக்கு ஏற்றது நீண்ட காலம் உழைக்கக்கூடிய கேஸ் பெர்மிபல் லென்ஸ்(Gas permeable lens). இதேபோல், கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் கலர் கான்டாக்ட் லென்ஸ்களும் இருக்கின்றன.
கான்டாக்ட் லென்ஸில் வடிவங்கள் இருக்கின்றனவா?

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை உள்ளவர்களுக்கு உருண்டை வடிவ லென்ஸ்கள் உள்ளன. மங்கலான பார்வையை சரிப்படுத்தக்கூடிய டோரிக் லென்ஸ்கள் மற்றும் முதுமையின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுபவர்கள் அணியக்கூடிய மல்ட்டி போகல்லென்ஸ்களும் இருக்கின்றன.
எந்த நேரங்களில் அணியலாம்?
தினந்தோறும் அணியும் லென்ஸ்களை ஒவ்வொரு நாள் இரவிலும் கழற்றி வைத்துக் கொள்ளவேண்டும். நீடித்த நாட்களுக்கு லென்ஸ்களை அணிவோர் எத்தனை இரவுகள் லென்ஸ்களை அணிந்து தூங்கலாம் என்பதை கண்சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று அணியலாம்.
கான்டாக் லென்ஸ் அணிவதால் தொற்று ஏற்படும் என்கிறார்களே
கான்டாக்ட் லென்ஸ் இன்றைய இளைஞர்களுக்கு சரியான தேர்வாக இருந்தாலும், சரியாகப் பராமரிக்காவிட்டால் கண் தொற்று வருவதோடு விழிப்படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பும் கூட நேரிடலாம். லென்ஸ் அணிந்துகொண்டே தூங்குவது, அடிக்கடி லென்ஸ்களில் கை வைப்பது, கான்டாக்ட் லென்ஸ் சொல்யூஷனை மீண்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட சுகாதாரமற்ற செயல்களால் கண்களில் இருந்து நீர் வழிதல், சிவப்பு நிறமாக மாறுவது, தெளிவற்ற பார்வை போன்றவை தொற்றினால் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாகவே கான்டாக்ட் லென்ஸைக் கையாள வேண்டும்.

கண்தொற்றை தவிர்க்க என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்?
ஒவ்வொரு முறை லென்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  லென்ஸ் வைக்கும் பாக்ஸை சுத்தமான துணியால் துடைத்து காய வைக்க வேண்டும். இந்த பாக்ஸை 3 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணிவதற்கு முன்பும் லென்ஸில் ஏதேனும் சேதமுற்றுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.பெண்கள் மேக்கப் போட்டுக் கொள்வதற்கு முன்பே லென்ஸை அணிந்து கொள்ள வேண்டும். லென்ஸ் அணிந்து கொண்டு கணினி மற்றும் மடிக்கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும்.
செய்யக்கூடாதது என்ன?
கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் மற்றும் அதை வைக்கும் பாக்ஸை அதற்கென்றே இருக்கும் திரவத்தால் கழுவ வேண்டும். குழாய்த்தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாது. தரையில் அல்லது வேறு எங்கேனும் கீழே விழுந்தால் அதனை சுத்தப்படுத்தாமல் அணியக்கூடாது. அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த லென்ஸ் அணிவதையும், நீச்சல் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கும்போதும் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.கண் சிகிச்சை மருத்துவரின் அனுமதியின்றி கடைகளில் வாங்கும் சொட்டு மருந்துகளை கண்களுக்கு போட்டுக் கொள்ளக்கூடாது. லென்ஸ் அணிந்திருக்கும்போது வெப்பம் கண்களை நேரடியாக தாக்கும்படி நிற்பதும் தவறான செயல்.
உஷா நாராயணன்
 நன்றி : டாக்டர் குங்குமம் - 01.03.2017