disalbe Right click

Monday, May 8, 2017

சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
பொதுவாக, புரபஷனல் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்தப் பிறகு, தங்களின் படிப்பு தொடர்பான பணிகளையே மேற்கொள்வதை நாம் காணலாம். ஆனால் இன்று, தங்களுடைய படிப்பிற்கு நேரடியாக தொடர்பில்லாத தொழில்களிலும், புரபஷனல் படிப்பை முடித்தவர்கள் ஈடுபட்டிருப்பதை பரவலாக காண முடிகிறது.
அத்தகைய பட்டதாரிகளுக்கு சிறந்த உதாரணம் சட்டப் பட்டதாரிகள். சட்டம் படித்தவர்கள், நேரடியான நீதிமன்ற பணிகளுக்கு மட்டும் செல்வதில்லை. அரசியல், அக்கவுன்டிங், ஆசிரியர் பணி மற்றும் நிதித்துறை என்று பல்வேறான துறைகளில் அவர்கள் கோலோச்சுகிறார்கள். (சட்டம் படித்தவர்கள், அரசியலில் கோலோச்சுவது நீண்டகால மரபாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது).
ஒரு சட்டப் பட்டதாரி என்ன செய்யலாம்?
சட்டப் படிப்பை முடித்தவுடன், சில விஷயங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை. பலபேர், நேரடி சட்டத்துறையிலேயே ஈடுபடும் பொருட்டு, இன்டர்ன்ஷிப் அல்லது clerkship மேற்கொள்கிறார்கள். ஒரு சீனியர் வழக்கறிஞரின் கீழ் அல்லது தனியார் துறையில் இன்டர்ன் முறையில் பணியாற்றுவதன் மூலமாக, பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
மேலும், இதன்மூலம், அத்துறை சார்ந்த வாழ்க்கைத் தொடர்பான ஒரு மேலோட்டமான பார்வையும் கிடைக்கிறது. இன்டர்ன் மேற்கொள்வதன் மூலம், அதிகம் மெனக்கெடாமலேயே நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.
சட்டத்துறையில் இளநிலைப் படிப்பை முடித்த சிலர், இன்டர்ன் மேற்கொள்ள முடிவெடுக்கும் அதேவேளையில், வேறுசிலர், அத்துறையிலேயே முதுநிலை மற்றும் பிஎச்.டி. போன்ற மேற்படிப்புகளை மேற்கொள்ள விளைகின்றனர்.
சட்டப் படிப்பில் இளநிலைப் படிப்பை முடித்தவர்கள், விரும்பினால், நேரடியாகவே தொழிலில் இறங்கலாம். உங்களுக்காக பணிசெய்தல், அரசுக்காக செய்தல், தனியார் நிறுவனத்துக்காக, வணிகத்திற்காக மற்றும் கல்வி நிறுவனத்திற்காக போன்றவை அவற்றுள் அடக்கம்.
மறைமுக துறைகளில் சிலருக்கு ஆர்வம் ஏன்?
கஷ்டப்பட்டு படித்து, ஒரு சட்டப்படிப்பை முடித்து, பட்டம் பெற்ற பிறகு, அத்துறையில் நேரடியாக ஈடுபடாமல், சிலர், வேறுசில துறைகளுக்கு ஏன் தாவுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. சிலரின் எண்ண ஓட்டம், மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதுதான் அதற்கு காரணம். அவர்கள், வித்தியாசமாக எதையேனும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான சட்டப் பட்டதாரிகள் படித்து முடித்து வெளிவருவதால், அவர்களோடு இணைந்து நின்று, எதற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.
எனவே, தங்களின் சட்டப் படிப்பின் மூலம், ஏதேனும் வித்தியாசமாக, அது சற்று சவாலானதாக இருந்தாலும் கூட, அதை ஆர்வத்துடன் செய்ய முயல்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், சட்டப் படிப்பின் மூலம், நேரடி சட்டத்துறைக்கு வெளியில், நிறைய சாதிக்கலாம். ஆனால், இது பலருக்கும் தெரிவதில்லை.
அவை என்னென்ன?
வணிகம் மற்றும் சட்டம் சார்ந்த துறைகள்
மேற்கண்ட துறைகள், பெரும்பாலான சட்ட மாணவர்களுக்கு பரிச்சயமானவை. இத்துறைகளில் ஈடுபட, தேவையான அளவிற்கு சட்டம் தெரிந்திருந்தால் போதுமானது. புராஜெக்ட் மேனேஜர் அல்லது மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் போன்ற பல பணி நிலைகள் உள்ளன.

இவைதவிர, வேறுபல மறைமுக(paralegal) துறைகளும் உள்ளன. அவை,
* பொதுத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பணிகள்
* வங்கியியல், நிதித்துறை மற்றும் அக்கவுன்டிங்
* கற்பித்தல் மற்றும் கல்வித்துறை
* விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறைகள்
* மீடியா
* என்.ஜி.ஓ., அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டுத்துறைகள்
* மருத்துவம் சார்ந்த துறைகள்


மேற்கண்ட துறைகளிலெல்லாம், சட்டம் படித்த பட்டதாரிகள், சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெற்று, நல்ல சம்பளமும் பெற்று வாழ்க்கையில் சாதிக்கும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 09.05.2015

நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி


நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளை வெளியிடவும் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். கடந்த ஆண்டு, இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தார் கர்ணன். அதுமட்டுமன்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடிதம் ஒன்றை எழுதி, பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார்.
நீதிபதி கர்ணன் இவ்வாறு செய்தது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கர்ணனின் உத்தரவுகளை வெளியிட, ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பல உத்தரவுகளை கர்ணன் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத ஆண்குழந்தை  மற்றும் 9 மாத பெண் குழந்தை  இருவரையும் காரில் வந்த கும்பல் தூக்கிச்சென்றது. இதையடுத்து, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குத் தொடர்ந்தார். பிச்சை எடுக்கவைக்கவே குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிச்சை எடுக்கும் குழந்தைகள் தொடர்பாகதமிழகக் காவல்துறை அறிக்கை அளிக்குமாறு  நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர்பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகளை மீட்டதாக, சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்தார். சென்னையில் மீட்கப்பட்டுள்ள குழந்தைகளில் 17 பேரின் பெற்றோர்களை மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோவையில் மட்டும் 91 குழந்தைகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 
"குழந்தைகளைக் கடத்தி, இப்படியான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  
வரவனை செந்தில்
 நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017


டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடினால் போலீஸ் நடவடிக்கை கூடாது'

டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடினால் போலீஸ் நடவடிக்கை கூடாது'
உயர் நீதிமன்றம் அதிரடி
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என்று கூறி அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கலைக்க, போலீஸார் தடியடி நடத்திவருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "டாஸ்மாக் கடைக்கு எதிராக, அமைதியாகப் போராடும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடக்கூடாது. குறிப்பாக, டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது" என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் – 08.05.2017

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை நட‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு
பேரூராட்சி தலைவர் தேர்தலின் போது உறுப்பினரின் கையெழுத்தை போலியாக தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு  செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பனைமரத்துப்பட்டி பேரூராட்சி உறுப்பினர் முத்துசாமி சென்னை உய‌‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனு‌வி‌ல், பனைமரத்துப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக எஸ்.பெருமாள் நியமிக்கப்பட்டார்.

என்னை சேர்த்து 8 உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் பேரூராட்சி தலைவராக பாஞ்சாலை வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார். இதை தொடர்ந்து அன்று மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலை நாங்கள் புறக்கணித்தோம். 15 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு தேவையான 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும்.

நாங்கள் 8 பேர் தேர்தலை புறக்கணித்த நிலையில் எனது கையெழுத்தை ஆள்மாறாட்டத்தின் மூலம் போலியாக தயார் செய்து தேர்தலை நடத்தி துணை தலைவராக செல்வக்குமார் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார். இது சட்டவிரோதமானது.
இது குறித்து காவ‌ல்‌நிலைய‌த்‌திலு‌ம், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு‌க்க‌ப்பட‌வில்லை.

இதை தொடர்ந்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தோம். இந்தப் பிரச்சனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. எனது கையெழுத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது போலி என்பது உறுதியானது.

இதையடுத்து தேர்தல் அதிகாரி பெருமாள் மீது சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் துறை ரீதியாக எவ்வித விசாரணையும் த‌மிழக அரசு எடுக்கவில்லை. 6 பிரிவுகளில் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு கொடுத்தோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பெருமாள் மீது துறை நடவடிக்கை எடுக்க ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட வேண்டும். அவரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.என்.பாட்ஷா மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் கே.செல்வராஜ், மன்ற உறுப்பினரின் கையெழுத்தை போலியாக தயார் செய்து தேர்தல் நடத்திய தேர்தல் அதிகாரி பெருமாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள் மீது துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாரர் கொடுத்த மனு மீது த‌‌மிழக அரசு 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.


நன்றி : http://tamil.webdunia.com - 07.05.2017

Sunday, May 7, 2017

மறைந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ஓய்வூதிய பலன் வழங்க தடை

மறைந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ஓய்வூதிய பலன் வழங்க தடை

சென்னை: மறைந்த கூடுதல், டி.ஜி.பி.,யின் மனைவி மற்றும் மகளுக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில், கூடுதல், டி.ஜி.பி.,யாக பணியாற்றி, 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றவர், எஸ்.ராஜேந்திரன்; அதே ஆண்டு செப்டம்பரில் மரணமடைந்து விட்டார்.
இவரது மகள் பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு:
விவாகரத்து :
என் தாயார் அனிதாவை, 1985ல், ராஜேந்திரன் திருமணம் செய்தார். அவர்களுக்கு மகளாக, 1986ல், பிறந்தேன். இருவருக்கும், 1991ல், விவாகரத்து ஏற்பட்டது. பின், என் தந்தை, பாக்யதேவி என்பவரை மணந்தார். அவர்களுக்கு, காவ்யா என்ற மகள் உள்ளார். ஓய்வு பெற்ற பின், 2016 செப்டம்பரில், என் தந்தை இறந்தார். அப்போது, அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.
வாரிசு உரிமை சட்டப்படி, சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, சொத்திலும், ஓய்வூதிய பலன்களிலும் பங்கு உண்டு.
வாரிசு சான்றிதழ் கேட்டு, சோழிங்கநல்லுார் தாசில்தாரை அணுகினேன். அப்போது, தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் காவ்யாவும், வாரிசு சான்றிதழ் கேட்டிருப்பதாக, தகவல் தெரிந்தது.. என் பெயரை மறைத்துள்ளனர். 'என் பெயரை சேர்க்காமல், வாரிசு சான்றிதழ் வழங்க கூடாது' என, தாசில்தாருக்கு கடிதம் அளித்தேன். இருந்தும், என் பெயரை சேர்க்காமல், வாரிசு சான்றிதழ் அளித்துள்ளார்.
விசாரணை :
எனவே, அதை ரத்து செய்யும்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரிக்கு, விரிவான மனு அளித்தேன். விசாரணை இன்னும் முடியவில்லை; அடுத்தகட்ட விசாரணை நாளை வருகிறது.
இதற்கிடையில், ஓய்வூதிய பலன்களை வழங்கும்படி, உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை, இரண்டாவது மனைவி நிர்ப்பந்திக்கிறார். என் பெயரையும் பரிசீலிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பினேன்; மனுவும் அனுப்பினேன்.
எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்கும்படி, தாம்பரம் ஆர்.டி.ஓ.,க்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஓய்வூதிய பலன்கள் வழங்க தடை விதிக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
மறைந்த கூடுதல் டி.ஜி.பி.,யின் இரண்டாவது மனைவி மற்றும் மகளுக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, தமிழக அரசுக்கு, நீதிபதி தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.05.2017



கோர்ட்டில் பார்க்கலாம் என சொல்லாதீங்க!: அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை

கோர்ட்டில் பார்க்கலாம் என சொல்லாதீங்க!: அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை

புதுடில்லி: ‛அனைத்தையும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும்' என அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
பரிந்துரை:
தேசிய வழக்காடல் கொள்கைக்கான, வரைவு சட்டத்தை இறுதி செய்வதற்காக, சட்டக் கமிஷன் உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தின்போது, எல்லாவற்றையும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும், கூடியவரை, வழக்காடல் நிலைக்கு வராமல், நிலைமையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சட்ட கமிஷன் பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.
அரசு தொடர்பான 46 சதவீத வழக்குகள் :
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள, 3.14 கோடி வழக்குகளில், 46 சதவீதம், மத்திய அரசு தொடர்பானது. எதற்கெடுத்தாலும், வழக்கு தொடர்வதால், இந்த அளவுக்கு, வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்கி, தேவையற்ற பெரும்பாலான வழக்குகளை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
'என்னால், பிரச்னையை எதிர்கொள்ள முடியாது' என, பெரும்பாலான உயர்மட்ட அரசு அதிகாரிகள் கருதுவதால், சம்பந்தப்பட்ட விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது. இதனால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. பெரும்பாலான விஷயங்களில், மத்திய அரசு துறைகள், உடனுக்குடன் தக்க முடிவுகளை எடுக்க முடிந்தால், ஏராளமான வழக்குகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.05.2017

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமானதாகும். எனவே உங்களிடம் கார் இருந்தால், உங்களிடம் காருக்கான இன்சூரன்ஸூம் இருக்க வேண்டும். உங்கள் கார் ஒரு துரதிர்ஷ்ட வசமான விபத்தைச் சந்திக்கும் ஒரு நிகழ்வில், உங்கள் கார் காப்பீட்டுத் திட்டமானது உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் மேலும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பழுது பார்ப்பதற்கான செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.
3 வகைப் பாலிசிகள்
கார் காப்பீட்டில் மூன்று வகையான பாலிசிகள் உள்ளன, மேலும் ஒருவர் தனது தேவைகள் மற்றும் நோக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். அவை பின்வருகின்றன...
1. விரிவான காப்பீட்டுத் திட்டம்
இது பிரபலமான காப்பீட்டுத் திட்டமாகும் இந்தத் திட்டமானது காப்பீட்டுதாரருக்கு விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் காப்பில், ஒரு விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கு ஆன செலவுகளைத் திருப்பிக் கொடுத்துவிடும் திட்டம், விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு ஆகும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் காப்பு, வாகனம் திருடப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டைச் செலுத்தும் காப்பு, மற்றும் பாலிசிதாரரால் நிகழ்ந்த விபத்தினால் எழுந்த மற்றொரு நபரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயம் ஆகியவற்றிற்கு மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி ஆகியவை அடங்கும்.
2. மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்பீட்டுத் திட்டம்:
மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பு இந்தியாவில் கட்டாயமாகும். இது மற்றொரு மூன்றாம் தரப்பு நபருக்கோ அல்லது அவரின் சொத்துக்கோ உங்கள் காரினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்களுக்குக் காப்பீடளிக்கிறது.
3. வாகன மோதலுக்கான காப்பீடு:
இந்தக் காப்பீடு பாலிசிதாரருக்கு அவரது சொந்த காருக்கு விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. இருப்பினும், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் வாகனத்தைக் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் வன்முறை சேதங்கள் அல்லது திருட்டு ஆகியவற்றிலிருந்து காப்பீடு அளிக்கப்படுவதில்லை.
உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் எனவே, ஒருவரின் எந்தத் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் பிறகு உங்களுக்கு எந்த வகைக் கார் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பொருத்தமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
Written by: Mr. Prasanna VK
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 02.05.2017

Saturday, May 6, 2017

சொத்து விற்கும்போது வரி செலுத்துவது கட்டாயம்!


சொத்து விற்கும்போது வரி செலுத்துவது கட்டாயம்!
சொத்தை விற்கும் போது வரி செலுத்துவது கட்டாயம்...
எப்படி வரி செலுத்துவது?
என்னென்ன சலுகைகள் உள்ளன?
அசையா சொத்து வாங்குபவர்கள் விற்பவர்களுக்குச் செலுத்தவேண்டிய தொகையில் வரிப் பிடித்தத்தைக் கழிக்க வேண்டியது கட்டாயமாகும். சொத்து வாங்குபவர்கள் கருதப்பட்ட மொத்த பணத்தில் 1% ஆதாரப் பணத்திற்கான வரிப்பிடித்தத்தைக் கழித்து மற்றும் அதே தொகையைப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வருமானவரி அதிகாரிகளின் கணக்கில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான வழிமுறைகளை இங்கே கீழே காணலாம்.
படிவம்
சொத்து வாங்குபவர்கள் ஆதாரப் பணத்திலிருந்து பெறும் வரிப்பிடித்தத்தை வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்த 26QB படிவத்தை இணையத்திலோ அல்லது இணையத்திற்கு வெளியிலோ பெற்று நிரப்ப வேண்டியது அவசியமாகும்.
இணையத்தில் அந்தப் படிவத்தைப் பெறுவதற்கு ஒருவர் பின்வரும் இணைய இணைப்பைச் சொடுக்கலாம். https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp படிவத்தை நிரப்பத் தவணை நாட்கள் சொத்து வாங்குபவரால் ஆதாரப் பணத்திலிருந்து செய்யப்பட்ட வரிப்பிடித்தம் கழிக்கப்பட்ட மாதத்தின் 7 நாட்களுக்குள் படிவம் 26 QB நிரப்பப்பட வேண்டும்.
விவரங்கள்
சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் தொடர்பான தகவல்கள் (பெயர், முகவரி, நிரந்தர வங்கி கணக்கு எண், வாழ்க்கை தகுதி போன்றவை) சொத்து பற்றிய விவரங்கள், சலுகை மற்றும் செலுத்தப்பட வேண்டிய ஆதாரப் பணத்தில் வரிப்பிடித்தம் ஆகியவை கண்டிப்பாகப் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.
பணம் செலுத்துதல்
ஒருவர் இணைய வங்கி கணக்கு அல்லது வங்கியின் கிளைகளில் ஒன்றின் வழியாகப் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை வரி செலுத்துபவர் ஈ-டாக்ஸ் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்தால் அடுத்தடுத்த தேதிகளில் வங்கிக் கிளையில் ஒரு ஒப்புக சீட்டு எண் உருவாக்கப்படும். அந்த எண் வரி செலுத்துபவரால் வங்கியில் பணம் செலுத்தும்போது வழங்குவதற்காகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
செயல்முறை
படிவம் தாக்கல் செய்யப்பட்டு மற்றும் வருமானவரி அதிகாரிகளுக்குப் பணம் செலுத்தப்பட்ட பிறகு, ஒப்புதலுக்கான படிவம் 26QB அல்லது படிவம் 16B ஆகியன வரி செலுத்துபவரின் இணையத் தளங்களில் உட்சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார பணத்திலிருந்து வரிப்பிடித்தம் செய்த தொகையை வைப்பு நிதியில் செலுத்தியதற்கான சான்றாகச் சொத்து வாங்கியவரால் சொத்து விற்றவருக்குப் படிவம் 16B கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு விலக்கு
விவசாய நிலங்களை வாங்கும் இந்த விதிமுறைகளின் தேவைகள் விலக்கப்படுகிறது.
தவனை முறை வரி செலுத்துதல்
கருதப்பட்ட தொகை தவணை முறையில் செலுத்தப்பட்டால் ஆதாரப் பணத்திலிருந்து வரிப்பிடித்தமும் ஒவ்வொரு தவணையிலும் கழிக்கப்படும்.
பான் இல்லை என்றால் கூடுதல் வரி
ஒரு வேளை சொத்து விற்றவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தமானது 20% கழிக்கப்படும்.
Written by: Mr. Tamilarasu
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ் » 06.05.2017

தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு

தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு

மோசடிப் புகாரின் பேரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் சட்டப் பிரிவுகள் 420 (மோசடி), 506/1(மிரட்டல் விடுத்தது) ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு எந்தத் தேதியில் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
மன்னார்குடியில் போலீஸ் உயர் பதவிகள் பல நிரப்பப்படாமல் உள்ளதால் இத்தகவலை உறுதிப்படுத்த மற்ற போலீஸார் முன்வரவில்லை.
இருப்பினும், அமைச்சர் காமராஜ் வழக்கு தொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ள டிஎஸ்பிக்கள் அறிவானந்தம், அருண்குமார், துணை ஆய்வாளர் கழனியப்பன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
கைதாவாரா காமராஜ்?
சட்டப் பிரிவு 420, சட்டப் பிரிவு 506 /1 ஆகிய இரண்டுமே ஜாமீன் பெறக்கூடியவையே என்பதால் அமைச்சர் காமராஜர் கைதாவார் என்று கூற முடியாது. அவர் ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
காமராஜ் மீது எஃப்.ஐ.ஆர். ஏன்?
சென்னையில் தனக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்த ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்வதற்காக தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜின் உறவினர் ராமகிருஷ்ணன் என்பவர் மூலம் ரூ.30 லட்சம் பணத்தை அமைச்சர் காமராஜிடம் கொடுத்ததாகவும், ஆனால், சொன்னபடி வீட்டை காலிசெய்து தராததுடன், பணத்தையும் திருப்பித் தராமல் தன்னை மிரட்டியதாகவும் கூறி, மன்னார்குடி டிஎஸ்பியிடம் கடந்த 2015 மார்ச் 10-ம் தேதி புகார் அளித்தார்.
பின்னர், அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்திலும், அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக காவல்துறை உடனடியாக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவிட்டது. தொடர்ந்து, மே 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும், வழக்கு பதியாதது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், வரும் 8-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து, அன்று இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 3-ம் தேதி மன்னார்குடி மன்னை நகரில் உள்ள குமாரின் வீட்டில் மன்னார்குடி போலீஸார் ஒரு சம்மனை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதேபோல, கீழ வாழாச்சேரியில் உள்ள வீட்டிலும் சம்மன் ஒட்டப்பட்டது.
மன்னார்குடி டிஎஸ்பி பெயரில் வழங்கப்பட்டுள்ள சம்மனில், "தாங்கள் அனுப்பிய மனுவின் அடிப்படையில் தங்களிடம் (குமாரிடம்) விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் மே 5-ம் தேதி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
குமார் ஆஜராவார் என்பதற்காக மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன. எனினும் அவர், நேற்று இரவு வரை வராததால், காத்திருந்த போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து குமார் தரப்பினர் கூறியபோது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், விசாரணைக்கு அழைத்திருப்பதில் வேறு நோக்கம் உள்ளதாக தெரிகிறது. குமார் மீது போலீஸார் வேறு ஏதாவது வழக்குப் பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது" என்றனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.05.2017