disalbe Right click

Friday, May 12, 2017

அங்கீகாரமற்ற மனைகள் பத்திரப்பதிவு - இடைக்கால அனுமதி

அங்கீகாரமற்ற மனைகள் பத்திரப்பதிவு - இடைக்கால அனுமதி
சென்னை:தமிழக அரசு கொண்டு வந்த புதிய விதிகளின்படி வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, 'ரியல் எஸ்டேட்' வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப் படுத்தவும் நில பயன்பாட்டை மாற்றுவதற்கும் தமிழக அரசு புதிய விதிகளை கொண்டு வந்தது. அதை, அரசு பிளீடர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி M.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை, அரசு பிளீடர், எம்.கே.சுப்ரமணியன் ஆஜராகினர்.
மனுதாரரான வழக்கறிஞர் ராஜேந்திரன், ''நீதிமன்றம் தடை விதித்திருந்த காலத்தில், பத்திரப்பதிவு நடந்துள்ளது. அந்த அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவ மதிப்பு மனு தாக்கல் செய்ய, அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு, அரசு பிளீடர்,எம்.கே.சுப்ரமணியன், ''தடை காலத்தில் நடந்த பத்திரப்பதிவு குறித்து, அரசு ஆய்வு செய்து வருகிறது. அது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்கிறோம்,'' என்றார்.
இதன்பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
பத்திரப்பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மற்றும் தமிழக அரசின் புதியவிதிகளின் படி, மனைகளை பதிவு செய்யலாம். நீதி மன்ற உத்தரவை மீறி,
2016 செப்., 9ல் இருந்து, 2017 மார்ச், 28 வரை; ஏப்., 21ல் இருந்து மே, 12 வரை, அங்கீகார மில்லாத மனைகளின் பத்திரப்பதிவு நடந்திருந்தால், அது செல்லாது.
புதிய விதிகளில், 2016 அக்., 20க்கு முன், அங்கீகாரமற்ற லே - அவுட்டில்,வீட்டு மனைகள் விற்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கு, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்பிரி வில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை, அமல்படுத்தக் கூடாது.
இந்த இடைக்கால உத்தரவு, 'ரிட்' மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பொறுத்தது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை, இது அமலில் இருக்கும்.
இடைக்கால உத்தரவை தொடர்ந்து நடக்கும் அனைத்து பத்திரபதிவுகளும், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணை,ஜூன்,14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.05.2017

முத்தலாக் பிரச்சனை - சர்வமத நீதிபதிகள் அமர்வு

முத்தலாக் பிரச்சனை - சர்வமத நீதிபதிகள் அமர்வு
முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யப் பயன்படுத்தப்படும் முத்தலாக் பிரச்சனையை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பல்வேறு மதங்களைக் கொண்ட அமர்வாக அமைக்கப்பட்டுள்ளது விசேடமாகக் கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்று முத்தலாக். முத்தலாக் நடைமுறைகளில் நிறைகளை விட குறைகளே அதிகம் நிறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை விரிவான கண்ணோட்டத்துடன் பல கோணங்களில் விசாரித்து, விவாதித்து, தீர்க்கமான முடிவை எட்டும் நோக்கில் வெவ்வேறு மதங்களை சார்ந்த நீதிபதிகள் இந்த சட்ட அமர்வில் இடம் பெற்றிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், சீக்கிய மதத்தை சேர்ந்தவருமான ஜே.எஸ். கெஹரின் தலைமையில், கிறித்துவ மதத்தை சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசஃப், பார்சி மதத்தை சேர்ந்த ஆர்.எஃப். நாரிமன், இந்து மதத்தை சார்ந்த யூ.யூ.லலித், இஸ்லாமியரான நஜீர் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முத்தலாக் பற்றிய கருத்துக்களையும், விவாதங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு முடிவெடுக்கவிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் வரும் ஆகஸ்ட் மாதம் பதவி ஓய்வு பெறவிருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையிலேயே முத்தலாக் குறித்த விசாரணையை முடிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் என்பது இஸ்லாமிய சட்டமுறையான 'ஷரியா'வின்படி, ஒரு முஸ்லிம் ஆண், தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை சொல்லிவிட்டால் திருமண பந்தம் முறிந்துவிடும். இது சரி-தவறு, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, சமூக சிக்கல்கள், பெண்களின் அடிப்படை உரிமை பறிப்பு என முத்தலாக் குறித்த விவாதங்கள் அண்மைக் காலங்களில் வலுத்துவருகின்றன.
முத்தலாக் முறையை தொடர்வது மற்றும் முடிவுக்கு கொண்டு வருவது என்ற இரு தரப்பு குறித்தும் சட்ட அமர்வில் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் முத்தலாக் விவகாரத்தை விசாரிக்கும் நீதிபதிகள் யார்? அவர்களின் பின்புலம் என்ன?
நீதி சொல்லப்போகும் நீதிபதிகள் குறித்த ஒரு கண்ணோட்டம்.
தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர்
ஜே.எஸ். கெஹர்
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிறந்த நீதிபதி கெஹர், சண்டிகர் அரசுக் கலைக்கல்லூரியில் அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் பட்டம் பெற்றார்.
1979 ஆம் அண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கிய ஜே.எஸ்.கெஹர், 1992 ஜனவரி மாதம் பஞ்சாப் மாநில கூடுதல் அரசு வழக்குரைஞராக பதவியேற்றார். 1999 ஆம் ஆண்டில் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
2009 அம் ஆண்டு உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் கெஹர்.
இந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, முத்தலாக் விவகாரத்தை முடித்து வைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் விரும்புகிறார்.
நீதிபதி குரியன் ஜோசஃப்
நீதிபதி குரியன் ஜோசஃப்
1953 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கேரள மாநிலத்தில் பிறந்த குரியன் ஜோசஃப், திருவனந்தபுரம் கேரள சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர். 1977-78 இல் கேரள பல்கலைக்கழக அகாடமி கவுன்சில் உறுப்பினர் ஆனார்.
1979 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய குரியன், 1983-85 வரை கொச்சி பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு அரசு வழக்குறிஞராக பதவியேற்ற குரியன் ஜோசஃப், 1994-96 இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் ஜெனரல் வழக்கறிஞராக பதவி வகித்தார்.
1996 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞரான அவர், 2000 வது ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியானார். 2006 முதல் 2008 வரை கேரள நீதித்துறை அகாடமியின் தலைவராக பதவி வகித்தார். 2008 அம் ஆண்டு லட்சத்தீவுகளுக்கான சட்ட சேவைகள் அமைப்பின் தலைவராக பதவியேற்றார்.
அதன்பிறகு, 2006 முதல் 2009 வரை கேரள உயர் நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் கமிட்டியின் தலைவராக இருந்த குரியன் ஜோசஃப், கேரள உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருமுறை பணியாற்றியிருக்கிறார்.
அதன்பிறகு, 2010 பிப்ரவரி எட்டாம் தேதி முதல் 2013 மார்ச் ஏழாம் தேதி வரை ஹிமாசல பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், 2013 மார்ச் எட்டாம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018, நவம்பர் 29 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிகிறது.

நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரீமன்
நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரீமன்
நீதிபதி ஆர்.எஃப் நாரிமன் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மும்பையில் பிறந்தவர். மும்பை கதீட்ரல் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த நாரீமன், தில்லி ஸ்ரீராம் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பயின்றார்.
ஹார்வர்ட் சட்ட கல்வி நிறுவனத்தில் எல்.எல்.எம் படித்த நாரிமன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
நாரிமனின் திறமையை அங்கீகரித்த, அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாச்சலையா, வயது வரம்பு விதிகளை மாற்றி, அதாவது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்க குறைந்தபட்ச வயதுத் தகுதி 45 வயதாக இருந்தபோது, 37 வயதிலேயே மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2014 ஜூலை ஏழாம் தேதி முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார் நீதிபதி ரோஹிங்டன் ஃபலி நாரிமன்.
யூ.யூ.லலித்
நீதிபதி யு.யு.லலித்
படத்தின் காப்புரிமை
1957 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி பிறந்த உதய் உமேஷ் லலித், 1983 ஆம் ஆண்டு வழக்கறிராக தனது பணியை தொடங்கினார். 1985 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், 1986 முதல் தில்லியில் தனது பணியைத் தொடர்ந்தார். 2004 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார்.
பல வழக்குகளின் 'நீதிமன்றத்தின் நண்பனாக' பங்களித்திருக்கும் யூ.யூ.லலித், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெட்க்ரம்) வழக்கில் சி.பி.ஐயின் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2014, ஆகஸ்ட் 13 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியைத் தொடங்கினார் யூ.யூ.லலித். 2022 நவம்பர் எட்டாம் தேதியன்று அவர் பதவி ஓய்வு பெறுவார்.
நீதிபதி அப்துல் நஜீர்
நீதிபதி அப்துல் நஜீர்
1958 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதியன்று கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் நீதிபதி அப்துல் நஜீர்.
1983 ஆம் ஆண்டு முதல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய அப்துல் நஜீர், 2003 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அப்துல் நஜீர் நியமிக்கப்பட்டார்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே, எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி அப்துல் நஜீர் ஆவார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் அப்துல் நஜீர்.
இக்பால் அஹமத்
Thanks to BBC News - 11.05.2017
படத்தின் காப்புரிமை

Thursday, May 11, 2017

ஆதார் எண்ணை பான்கார்டுடன் இணைக்க புது இணையதளம்

ஆதார் எண்ணை பான்கார்டுடன் இணைக்க புது இணையதளம்
ஆதார் - பான் இணைக்க புதிய வசதி அறிமுகம்!
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 11.05.2017



எஸ்.பி.ஐ வங்கியின் அடுத்த அதிரடி..!

எஸ்.பி.ஐ வங்கியின் அடுத்த அதிரடி..!
அதிர்ச்சி அடையப்போகும் வாடிக்கையாளர்கள்..!
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது, 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கட்டண நடைமுறை ஜுன் 1ஆம் தேதி முதல் வருகிறது.
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் மெய்ட்டன் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே, அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது எஸ்.பி.ஐ. குறிப்பாக, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றது எஸ்.பி.ஐ. அதேபோல் நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது எஸ்.பி.ஐ.
இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் எஸ்.பி.ஐ கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், அடுத்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ. அதன்படி, வருகின்ற ஜுன் 1ஆம் தேதி முதல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுக்கும்போது, அதன் வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அதிர்ச்சி கிளப்பியுள்ளது. அதேபோல், பழைய மற்றும் கறைபடிந்த நோட்டுகளை மாற்றும் போது 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு, கட்டணம் விதிக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 11.05.2017




Wednesday, May 10, 2017

ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்

 ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்
 8 ஆண்டுகால நீதிபதி பயணத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கர்ணன்
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மற்றும் தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் வாழ்க்கைப் பயணம் பரபரப்புக்கு பஞ்சமில்லாததாக இருந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக பதவி வகிக்கும் சி.எஸ்.கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. கடந்த 1991-ல் தன்னுடைய பெயரை சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன் என அவரே மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கர்ணநத்தம்தான் அவரது சொந்த ஊர். கடந்த 1955 ஜூ ன் 12-ம் தேதி பிறந்த கர்ணனின் தந்தை சுவாமிநாதன் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆனால் கர்ணனுக்கு ஆரம்பக் கல்வியை புகட்டியது அவரது தாயார் கமலம் அம்மாள்தான்.
மங்கலம்பேட்டை பேரூராட்சி உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப் பையும், விருத்தாச்சலம் கலைக் கல்லூரியில் ஓராண்டு புதுமுக வகுப்பையும், சென்னை புதுக்கல்லூரி யில் மூன்றாண்டு அறிவியல் பட்டப்படிப்பையும் முடித்த கர்ணன், அதன்பிறகு 1983-ல் சென்னை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டம் பயின்று, அதே ஆண்டு வழக்கறிஞராகவும் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் அரசியலில் தீவிரம் காட்டிய கர்ணன் 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பூத் ஏஜெண்டாக செயல் பட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸிலும் கால் பதித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் புரிந்த கர்ணன், சிவில் வழக்குகளில் அதிகமாக வாதாடி வந்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும், தமிழக மற்றும் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் வெளிவட்டாரத்தில் கர்ணனின் முகம் அதிகம் தெரிய ஆரம்பித்தது 2005-ல் தான். வாழ்வில் படிப்படியாக உயர்ந்து கடந்த 2009 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் தற்போது வரை நீதிபதி கர்ணனின் தடாலடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை.
உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கர்ணன், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடாது என தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தடை பிறப்பித்தார். ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால், அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் மீது பனிப்போரைத் தொடுத்த கர்ணன், தான் ஒரு தலித் நீதிபதி என்பதால் தன்னை எஸ்.கே.கவுல் மற்றும் சக நீதிபதிகள் ஒதுக்கி வைப்பதாகக் கூறி அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். மேலும் எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சுமத்தி ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்ச நீதிமன்றம், அவர் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்காரணமாக அவரை கடந்த 2016 பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடமாற்றத்துக்கு கடந்த 2016 பிப்ரவரி 15-ம் தேதி தனக்குத்தானே தடை விதித்து பரபரப்பு ஏற்படுத்திய கர்ணன், அன்று முதல் இன்று வரை உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான தனது உரசல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
2016 மார்ச் முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், வரும் ஜூன் 12-ம் தேதியோடு ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 6 மாத சிறை தண்டனையால் சிறை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆர்.பாலசரவணக்குமார்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 11.05.2017

இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தோர், இரண்டாம் ஆண்டு, இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். 

இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை,  http://www.accet.co.in/http://www.accet.edu.in/  
ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் கல்விமலர் – 10.05.2017

Tuesday, May 9, 2017

ஆசிரியர் மீதான வழக்கு ரத்து 'சஸ்பெண்ட்' காலத்திற்கு சம்பளம்

ஆசிரியர் மீதான வழக்கு ரத்து
'சஸ்பெண்ட்' காலத்திற்கு சம்பளம்
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ஆசிரியர் மீதான குற்ற வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் 'சஸ்பெண்ட்'டில் இருந்த 7 ஆண்டுகளுக்குரிய சம்பளம் வழங்க, அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை அப்துல் பஷீர் தாக்கல் செய்த மனு:மணப்பாறை வையம்பட்டி அருகே, தொப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன்.
எனது மனைவி 2006ல் தற்கொலை செய்தது தொடர்பாக, மணப்பாறை போலீசார் என் மீது வழக்குப் பதிவு செய்தனர்.என்னை 2006 நவ.,4 முதல் 'சஸ்பெண்ட்' செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கீழமை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், கீழமை நீதிமன்றஉத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 2013ல் ரத்து செய்தது.
இதனடிப்படையில் நான் பணியில் சேர்வதற்கான தடையில்லாச் சான்றை மணப்பாறை போலீசார் வழங்கினர். 2013 டிச.,12ல் பணியில் சேர திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கினார்.
என் மீதான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால், 'சஸ்பெண்ட்' காலத்திற்கு முழு சம்பளம் பெற தகுதி உள்ளது. அதற்காக அடிப்படை விதிகளில் வழிவகை உள்ளது.2006 நவ.,4 முதல் 2013 டிச.,12 வரையிலான 'சஸ்பெண்ட்' காலத்தை பணியில் இருந்ததாகக் கருதி, சம்பளம் வழங்கக்கோரி திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலருக்கு மனு அனுப்பினேன்; நிராகரித்தார். அதை ரத்து செய்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அப்துல் பஷீர் மனு செய்திருந்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு:
பள்ளிக் கல்வித்துறை செயலர், திருச்சி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் மனுவை பரிசீலித்து சம்பளம் வழங்குவது பற்றி, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 09.05.2017

தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை
சென்னை: தமிழகத்தில் கீழ் இயங்கும் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1994ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிக்கையை ரத்து செய்து விட்டு தமிழில் மட்டுமே தீர்ப்புகளை எழுத வேண்டும் என்று உத்தரவிடக் கோரி 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


நன்றி : தி்னமலர் நாளிதழ் - 10.05.2017

மனைப்பிரிவுகள் வரன்முறையில் சிக்கல்:அதிகாரிகள் குழப்பம்

மனைப்பிரிவுகள் வரன்முறையில் சிக்கல்:அதிகாரிகள் குழப்பம்
அங்கீகாரமில்லாத மனைகள் போல, மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யவும், தமிழகஅரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என, நகரமைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யவும், விவசாய நிலங்களை, வேறு தேவைகளுக்கு மாற்றுவதை கட்டுப்படுத்தவும், தமிழக அரசு, சமீபத்தில் விதிமுறை களை அறிவித்தது. இவற்றில், தனி மனைகளுக்கான வரன்முறை விதிகள் போல, மனைப்பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விதிகள் என்ன?
 மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான மனைகள் விற்கப்பட்ட, மனை பிரிவுகளை வரன்முறைப் படுத்தவேண்டும் எனில், அவை, வளர்ச்சி விதிகள், முழுமை திட்ட நில பயன்பாட்டு விதிகள் மற்றும் புதிய மனைப்பிரிவு அனுமதி விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
மூன்றில் ஒரு பங்குக்கு மேல்,இரண்டு பங்கு மனைகள் விற்கப்பட்ட மனைப்பிரிவு கள் எனில், முடிந்த அளவு வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டும்; முடியாத பட்சத்தில், வழிகாட்டி மதிப்பின்படி, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கிட வேண்டும்
மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மனைகள் விற்கப்பட்டு இருந்தால், மனைப்பிரிவை முடிந்த வரை உள்ளது உள்ளபடி, வரன்முறை செய்யலாம்
விற்கப்படாத மனைகளை, சாத்தியக்கூறு அடிப் படையில் இணைப்பதால், திறந்த வெளி இடங்கள், பொது வசதிகளை ஏற்படுத்தலாம். இதிலும், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்கவில்லை; விவசாய நிலங்கள் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தீர்வு எப்போது?
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர் கள் கூறியதாவது:இந்த விதிமுறை அனைத்தும், புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெற கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளாகவே உள்ளன. இதனால், பாதி விற்பனை நடந்த மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதில், பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.
சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்புத்துறை அதிகாரிகள், இதை எப்படி அமல்படுத் துவர் என்பது குழப்பமாக உள்ளது. இதற்கான நடை முறை விதிகள், விரைவில் அறிவிக்கப்படும். அப்போதுதான், இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 09.05.2017