disalbe Right click

Sunday, May 14, 2017

போலி ஆவணம் தயாரித்து மோசடி - வழக்கு

போலி ஆவணம் தயாரித்து மோசடி - வழக்கு
வழக்கின் சுருக்கம் : குணசேகரன் சிவகங்கையில் சொந்தமாக தொழில் செய்து வருபவர் ஆவார். அவருக்கு நாராயணன் என்பவர் உறவினர் ஆவார். ஒரு நாள் நாராயணன் குணசேகரனிடம் சீனிவாசன் என்பவரை அறிமுகம் செய்துவைத்து அவரது குடும்ப செலவிற்காகவும்¸ வீடு கட்டுவதற்காகவும் வட்டிக்கு பணம் ரூ.5,00,000/- தேவைப்படுதாகச் சொல்லி¸ அதற்கு ஈடாக தேவகோட்டையில் உள்ள ரூ.10,00,000/- பெறுமான அவரது வீட்டை அடமானமாக வைத்துக் கொள்ளலாம்  என்று கூறுகிறார். அதனை நம்பி குணசேகரனும் பணம் கொடுக்கிறார். தேவகோட்டை சார்பதிவகத்தில் கடன்பத்திரம் பதியப்படுகிறது. அதில் சீனிவாசன் மனைவி வசந்தா மற்றும் நாராயனன் மனைவி அலுமேலு ஆகிய இருவரும் சாட்சியாக கையொப்பம் செய்கின்றனர்.  ஆனால், குணசேகரனுக்கு வட்டிப் பணம் எதுவும் சீனிவாசன் கொடுக்கவில்லை. விசாரிக்கும்போது அடமானம் வைக்கப்பட்ட வீடு சீனிவாசனுக்கு சொந்தமில்லை என்பதும், அந்த வீடு சீனிவாசனின் மனைவி வசந்தாவின் அக்கா முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமானது என்பதும் போலி பத்திரம் தயார் செய்து அனைவரும் தன்னை ஏமாற்றியதும்  குணசேகரனுக்கு தெரிய வருகிறது.  வழக்கறிஞர் அறிவிப்பு மூலம்  சீனிவாசனிடம் குணசேகரன் விளக்கம் கேட்கிறார். பதில் ஏதுமில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். நீதிமன்றம்  காவல்துறைக்கு குணசேகரனின் புகாரை அனுப்புகிறது. சிவகங்கை நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் புகாரை விசாரிக்கிறார். உண்மை வெளிவருகிறது. வழக்கு நீதிமன்றத்தில் சிவகங்கை நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளரால் தாக்கல் செய்யப்பட்டு குற்ரம் நிரூபிக்கப்படுகிறது.  குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்படுகிறது. 
(நேரடியாக வழக்கை படித்தால் புரியாது. அதனால் இந்த வழக்குச் சுருக்கம்)
இப்ப உள்ள போய் பாருங்க! ..........................................அன்புடன் செல்வம் பழனிச்சாமி

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை
முன்னிலை: திருமதி.வா.தீபா¸ எம்.எல்
 நீதித்துறை நடுவர் எண்- 1
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் நாள்செவ்வாய்கிழமை
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் . 30 / 2008
குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
 சிவகங்கை நகர் காவல் நிலையம்
 குற்ற எண் 1069/2005

குற்றம் சாட்டப்பட்டவர் :
1. சீனிவாசன்¸ (வயது 52-06)
.பெ. நாராயணன்¸
13. தென்னஞ்சட்டி¸
மணி
வடக்கு அக்ரஹாரம்¸
தேவகோட்டை.
2.நாராயணன்¸ (வயது 54-06)
.பெ. வீரராகவன்.
போகலூர் குரூப்¸
கிராம நிர்வாக அதிகாரி¸
வாலான் குடி¸
பரமக்குடி.
3. என். அலமேலு¸ (வயது 52-2006)
.பெ. நாராயண அய்யங்கார்¸
127-54 வடக்கு¸
அக்ரஹாரம்¸
தேவகோட்டை () கண்ணமங்கலம்¸
இளையான்குடி.
4. எஸ். வசந்தா. (வயது 49-06)
.பெ. சீனிவாசன்¸
தென்னஞ்செட்டி ஊரணி¸
வடக்கு அக்ரஹாரம்¸
தேவகோட்டை.
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
குற்றம் முறையிடப்பட்டது :குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுஇதச. பிரிவுகள். 420¸423¸120(பி)ன் கீழ் குற்றம்முறையிடப்பட்டது
குற்றம் வனையப்பட்டது :குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ... பிரிவுகள். 420¸423¸120(பி)ன் கீழ் குற்றம் வனையப்பட்டது.
தண்டனை விவரம் : குற்றவாளிகள்
தீர்மானம் : அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது ... பிரிவுகள். 420¸423¸120(பி) ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளன.
தீர்ப்பு : இறுதியாக அரசு தரப்பு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ... பிரிவுகள். 420¸423¸120 (பின் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபித்துள்ளதால், எதிரிகள் குற்றவாளிகள் என தீர்மானித்து .த்.. பிரிவு-420 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொவருக்கும் தலா 6 மாதம் மெய்காவல் தண்டணைவிதித்தும் குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா6 மாதம் மெய்காவல் சிறைதண்டனை விதித்தும்¸அபராதம் தலா ரூ.100/- விதித்தும்¸ அபராதம்கட்டத் தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல்சிறைத்தண்டனை விதித்தும்¸ ... பிரிவு 423 ன்கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலாஅபராதம் ரூ.50/-விதித்தும்அபராதம்கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். இதச. பிரிவு 120(பி) ன்கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலாஅபராதம் ரூ.50/விதித்தும்¸ அபராதம்கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். கு. வி.மு.. பிரிவு 248(2)ன் கீழ் தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வழக்கில்சொத்துக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
சாட்சி 1 சிவகங்கை கதவு எண் 39 போலீஸ் ஸ்டேசன்ரோடு என்ற முகவரியில் குடியிருந்து வரும் போது¸ 5.1.2003 ம் தேதி¸ 2வது குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சி 1டம்தனக்கு வீடு கட்டுவதற்கு 3 ரூபாய் வட்டிக்குரூ.5 லட்சம் தேவை என்று கூறி¸ அதற்கு ஈடாகதனக்குச்சொந்தமான தேவகோட்டைதென்னஞ்செட்டி ஊரணியில் உள்ள 10 லட்சம்பெறுமானமுள்ள வீட்டை அடமானமாகஎழுதித்தருவதாக கூறி¸  1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்ந்து திட்டம் தீட்டி¸ தேவகோட்டையில் சாட்சி 6 ன் இடத்தை காண்பித்து¸தேவகோட்டையில் போலி பத்திரம் ஒன்று தயார்செய்து¸ அதில் 1¸2 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கையொப்பம் செய்தும்¸ 3,4 குற்றம் சாட்டப் பட்டவர்கள் சாட்சிகளாக கையொப்பம் செய்தும், சாட்சி 1டம் ரூபாய் 4,95,000/ பெற்று போலி ஆவணப்பத்திரதை எழுதிக் கொடுத்து மோசடி செய்ததாக 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ... 420, 423, 120 (பி)ன் கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.
3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறிவினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில்குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420, 423, 120(பி) ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்துவிளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
4. அரசு தரப்பில் .சா.1 முதல் 8 வரை சாட்சிகள்விசாரிக்கப்பட்டனர். .சாஆ. 1 முதல் .சா . 5 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன .சா.1கொடுத்த புகார் மனு .சா..1 ஆகும்.
ரூ.2¸45¸000/- க்கு எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..2 ஆகும்.
ரூ.2¸50¸000/ எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..3ஆகும்.
தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட ஆவணத்தின் சான்றிட்ட நகல் .சா..4ஆகும்.
முதல் தகவல் அறிக்கை .சா..5 ஆககுறியிடு செய்யப்பட்டுள்ளது.
அரசு தரப்பு சாட்சி 1முதல் 7 வரை அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள்.
.சா.8 தனது புலன் விசாரணைமுடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகசாட்சியம் அளித்து உள்ளார்.
5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளைகுறித்து கு.வி.மு..313(1) () ந் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசு தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்கள்.
6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா?என்பதாகும்.
7. பிரச்சனை
இந்த வழக்கில் நிகர்நிலை புகார்தாரரானகுணசேகரன்¸ சிவகங்கையில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார் என்றும்¸ பரமக்குடியில் இருக்கும்¸நிகர்நிலை புகார்தாரின் உறவினரான இந்த வழக்கின் 2வது எதிரி நாராயணன்¸ 1வது எதிரி சீனிவாசன் என்பவரை மேற்படி நிகர்நிலை புகார்தாரருக்குஅறிமுகம் செய்து வைத்து¸ 1 வது எதிரிக்கு அவசரகுடும்ப செலவிற்காகவும்¸ வீடு கட்டுவதற்காகவும்பணம் தேவைப்படுதாகச் சொல்லி¸ ரூ. 5¸00¸000/-த்தை 3% வட்டிக்கு நிகர்நிலை கொடுத்தார்என்றும்¸ அதற்கு ஆதரவாக 1 வது எதிரிக்குசொந்தமான ரூபாய் 10¸00¸000/- லட்சம் மதிப்புள்ளதேவகோட்டையில் உள்ள தி.ஊரணி¸ அக்ரஹாரம் பழைய கதவு எண்.7¸ புதிய கதவு எண்.3 ல் உள்ளவீட்டை¸ ஆதரவாக காண்பித்து¸ 2 கடனுறுதி பத்திரங்களை 2 வது எதிரி எழுதி¸ 1வது எதிரி கையொப்பம் செய்து கொடுத்துள்ளார் என்றும்¸ அதில்1 மற்றும் 2 வது எதிரிகளுடைய மனைவிகளும் சாட்சியாக கையொப்பம் செய்தனர் என்றும்¸ 2 நாட்கள் கழித்து 2வது எதிரி வாதியிடம் வந்து¸ வாதியும் 1 வதுஎதிரியும் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள்என்பதால்¸ 1வது எதிரி மிகவும் சிரமப்படுகிறார் என்றும் வட்டியை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். வாதி குணசேகரன் அதற்கு சம்மதித்து வங்கி வட்டி தந்தால் போதும் என்று சொல்லிவிட்டார் என்றும், ஆனால், நாளது தேதி வரை¸ வாதிக்கு எந்தபணமும் திருப்பித் தரப்படவில்லை என்றும் ஆதரவாக காண்பித்துள்ள வீடும் 1 வதுஎதிரியினுடையது அல்ல என்பதை அறிந்த பிறகே¸ 1மற்றும் 2 எதிரிகள் தன்னை மோசம் செய்த விவரம்வாதிக்கு தெரிய வந்தது என்றும் இது தொடர்பாகவாதி தரப்பு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்புஅனுப்பியும்¸ உரிய பதில் இல்லை என்றும் எனவே 1முதல் 4 எதிரிகள் வாதியை மோசம் செய்யும்நோக்கத்தோடு வேறு ஒருவருக்கு சொந்தமானவீட்டை 1 வது எதிரியுடையது என்று கூறிவீட்டைவைத்து ரூ.4¸95¸000/- மோசடி செய்துள்ளனர் என்றும்எதிரிகள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8. இந்த வழக்கின் நிகர்நிலை புகார்தாரர் .சா.1 ஆகவிசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தனது முதல்விசாரணையின் போது¸ 1 வது எதிரி சீனிவாசன்என்பவரை¸ 2வது எதிரி நாராயணன் தனக்குஅறிமுகப்படுத்தி¸ 1வது எதிரிக்கு வீடு கட்டுவதற்கும் வீட்டுசெலவிற்காகவும்¸ 3% வட்டிக்கு ரூ. 5¸00¸000/-தேவைப் படுவதாக கூறி¸ 2 வது எதிரி அதற்குபொறுப்பேற்பதாக சொல்லி¸ 2 வது எதிரி¸ 1வது எதிரிக்கு தன்னிடம் இருந்து பணம் வாங்கிகொடுத்தார் என்றும்¸ இராமநாதபுரத்தில் இருந்த தன்னுடைய பூர்வீக வீட்டை விற்று இருந்த ரூ.2¸00¸000/- ரொக்கம் தன்னுடைய வியாபாரம் மூலம்கிடைத்த ரூ.1¸00¸000/-மும் தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம்எல்லாம் சேர்த்து¸ 2வது எதிரி முழு பொறுப்பேற்று¸ரொக்கமாக சிவகங்கையில் உள்ள தனது வீட்டில்வைத்து எதிரிகள் 4 பேரும் வந்து¸ தன்னிடம் இருந்துவாங்கி¸ தொகையை 1 வது எதிரி சீனிவாசனிடம்கொடுத்தனர் என்றும்¸ மேற்படி ரூபாய் 4¸95¸000/- தொகையானது சீனிவாசனிடம் தன்னால் கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேற்படி வாதியால் கொடுத்த பணத்திற்கு ஆதரவாக¸ 1வது எதிரிக்கு பாத்தியப்பட்டது என்று கூறி தேவகோட்டையில் இருந்த ஒரு வீட்டை கடனுக்குஆதரவாக 1 வது எதிரி எழுதி கொடுத்தார் என்றும்¸அந்த பத்திரத்தை 2 எதிரி எழுதினார் என்றும¸ 3¸ 4 எதிரிகள் சாட்சி கையொப்பம் செய்தனர் என்றும்அ.சா.1 தெரிவித்துள்ளார். தான் எதிரிகளிடம் பணம் கேட்டதற்கு எதிரிகள் தனக்கு பணம்கொடுக்கவில்லை என்றும்¸ அதன்பிறகு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு கொடுத்தேன் என்றும்¸தேவகோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம்சென்று எதிரிகள் ஈடாக எழுதி கொடுத்த சொத்திற்கு வில்லங்கம் போட்டு பார்த்ததில்¸ மேற்படி வீடானது மதுரை கற்பகம் விநாயக நகரில் வசிக்கும் முத்துலெட்சுமிக்கு சொந்தமானது என்பது தெரிந்து கொண்டதாகவும் எதிரிகள் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் .சா.1 தெரிவித்துள்ளார். .சா..1ஆகபுகார் மனு குறியீடு செய்யப்பட்டுள்ளது.
தேவகோட்டையில் உள்ள வீட்டை பணம் பெற்றுக் கொண்டதற்கு ஆதரவாக ரூபாய் 2¸45¸000/- எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..2 ஆக குறியீடுசெய்யப்பட்டுள்ளது. அதே தேதியில் அதே வீட்டை ரூ.2,50,000/- எழுதிக் கொடுத்த ஆவணம்அ.சா..3ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டைசார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயபத்திர ஆவணத்தில் பதியப்பட்ட சான்றிட்ட நகல் .சா..4ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது.
9. .சா.2 ஆக .சா.1 ன் சகோதரிவிசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ தன்னிடம் இருந்து எதிரிகள் பணத்தைபெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்றும்¸ 1வது எதிரிக்கு வீடு கட்ட வேண்டி¸ 2 வது எதிரிரூ.4¸95¸000/-வேண்டுமென்று கேட்டு வாதியிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு¸ 5.1.2003ம் தேதிதேவகோட்டையில் உள்ள 1 வது எதிரியின் வீட்டைதன்னிடம் வாங்கிய பணத்திற்காக¸  2 வது எதிரிகைப்பட பத்திரம் எழுதி கொடுத்தார் என்றும்¸ அதன்பிறகு தேவகோட்டைக்கு சென்று¸ தானும் தனதுசகோதரனும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சொத்துக்களுக்கு வில்லங்கம் எடுத்துப்பார்த்த போது¸சொத்து 1 வது எதிரியின் கொழுந்தியாள்முத்துலெட்சுமிக்கு பாத்தியமானது என்றுதெரியவந்துள்ளது என்றும்¸ தங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்த பூர்வீக வீட்டை விற்று அதில்வந்த பணம் மற்றும் தனது திருமணத்திற்காக தனதுஅண்ணன் சேர்த்து வைத்திருந்த தொகை அனைத்தும்சேர்த்து கடனாக கொடுக்கப்பட்டது என்றும்¸ எதிரிகள்4 பேரும் தன்னையும் தனது சகோதரனையும் மோசடி செய்து விட்டார்கள் .சா.2 தெரிவித்துள்ளார்.
10. எதிரிகளுக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்தசாட்சியாக .சா.3 விசாரிக்கப் பட்டுள்ளார். அவர்தன்னுடைய சாட்சியத்தில்¸ முதல் நாள் ரூ.1¸15¸000/- வாங்கி சென்றதாகவும்¸ இரண்டு நாட்கள் கழித்து¸.சா.1 ன் வீட்டில் வந்து¸ எதிரிகள் ரூ.1¸20¸000/-பெற்றுச்சென்றதாகவும்¸ 5.1.2003ம் தேதியன்று தான் .சா. 1ன் வீட்டில் இருந்த போது¸ இந்த வழக்கில் 4எதிரிகளும் வந்து ரூ.2¸50¸000/- .சா.1 டம் இருந்துபெற்றுச்சென்றதாகவும்¸ நாராயணனும்¸ சீனிவாசனும்அன்றைய தினம் பத்திரம் ஒன்று எழுதி¸ மூன்றுமாதத்தில் பணம் கொடுப்பதாக சொல்லிசென்றதாகவும்¸ 3 கட்டங்களில் எதிரிகள் பணம்பெற்று சென்ற போது¸ தான் .சா.1 ன் வீட்டில் இருந்ததாகவும், அதன்பிறகு எதிரிகள் பணம்பெற்று சென்றதாகவும், பணம் திருப்பி கொடுத்தார்களாஎன்று கேட்ட போது¸ யாருடைய வீட்டையோ தங்களுடையது என்று போலி பத்திரம் செய்து கொடுத்து எதிரிகள் .சா. 1, 2 ஏமாற்றி விட்டதாககூறியதாக சாட்சியம் அளித்துள்ளார்.
11. எதிரிகளுக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்தசாட்சியாக .சா.4 ம் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர்தன்னுடைய சாட்சியத்தில்¸ 5.1.03 ம் தேதிக்கு¸ 5 நாட்களுக்கு முன்பாக¸ இந்த வழக்கில் 4 எதிரிகள்தனது பெரியம்மா வீட்டிற்கு சிவகங்கைக்கு வந்து¸தன் அண்ணன் குணசேகரனை சந்தித்ததாகவும்சீனிவாசன் என்பவர் தேவகோட்டையில் வீடுகட்டிக்கொண்டிருப்பதாகவும்¸ அதற்கு பணம் தேவைப்படுவதாக¸ சீனிவாசன் நாராயணன், தனது சகோதரன் குணசேகரிடம் கேட்டதாகவும், அன்றையதினம் ரூ.1,25,000/- நாராயணன், சீனிவாசன் பெற்றுச் சென்றதாகவும், குணசேகரனுடைய பூர்வீக வீடு ராமநாதபுரத்தில் இருந்ததை விற்பனை செய்து பணம் வைத்திருந்ததாகவும்¸ 1 நாள்விட்டு 3வது நாள் இந்த வழக்கின் 4 எதிரிகளும் ரூ.1¸20¸000/- குணசேகரனிடம்இருந்து சீனிவாசன், நாராயணன் பெற்றுச் சென்றதாகவும்¸ அதன் பிறகு 5.1.03 ம் தேதியன்று¸ 4 எதிரிகளும் சிவகங்கையில் உள்ள .சா.1 ன்வீட்டிற்கு வந்து குணசேகரிடம் இருந்து ரூ.2¸50¸000/- பெற்று சென்றதாகவும்¸ ரூ.2¸45¸000/- க்கு ஒரு பத்திரமும் ரூ.2¸50¸000/ க்கு ஒரு பத்திரமும்¸ எழுதிக்கொடுத்து விட்டு சென்றதாகவும்¸ பின்னர்அ.சா.1 னிடம் விசாரித்த போது¸ பத்திரத்தில்காட்டியுள்ள சொத்துக்கள் அவருக்கு பாத்தியப்பட்டவை அல்ல என்றும் பணத்தைவாங்கிவிட்டு திரும்பக் கொடுக்காமல் எதிரிகள்மோசடி செய்து விட்டதாகவும்¸ .சா.1¸2 விசாரித்து தெரிந்து  கொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.மேலும் குறுக்கு விசாரணையில்¸ பணம் 3தவணையாக கொடுத்ததாக சொல்லியுள்ளார்.மேலும் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது¸ தான்இருந்ததாகவும்¸ பத்திரங்கள் எழுதிக்கொடுத்தார்கள் என்றும் சொல்லியுள்ளார்.
12.1 வது எதிரிக்கு ஆதரவாக எழுதிக்கொடுத்ததேவகோட்டை வீட்டின் உரிமையாளர் .சா.5 ஆகவிசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடையசாட்சியத்தில்¸மேற்படி வீட்டில் எதிரிக்கு எந்தபாத்தியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் "இவ்வழக்கின் 1 வது எதிரி எனது தங்கையின்கணவர் ஆவார். சொத்தினைப் பார்த்துக்கொள்ளதான்எனது சகோதரி லெட்சுமி என்பவரிடம்சொல்லியுள்ளோம். சொத்தில் அவருக்கோ அல்லதுகணவர் சீனிவாசனுக்கோ எந்த பாத்தியமும் இல்லை." என்று முதல் விசாரணையில்சொல்லியுள்ளார். குறுக்கு விசாரணையின் போது¸மேற்படி வீடு தங்கையின் கணவர் பராமரிப்பில்உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
13. .சா.6 தன்னுடைய சாட்சியத்தில்¸ வாதிஎதிரிகளுக்கு ரூ.4¸95¸000/- கொடுத்தது தனக்குநேரடியாக தெரியும் என்றும்¸ குணசேகரன் தனதுபூர்வீக வீடு ராமநாதபுரத்தில் உள்ளதை விற்பனைசெய்து வைத்து இருந்ததாகவும், தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் சேர்த்து எதிரிகளிடம் கொடுத்தார் என்றும் சாட்சியம் அளித்து உள்ளார். குறுக்குவிசாரணையில் போது¸ 1 வது எதிரியின் மகளைத்தான் தனக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்றும், இந்த வழக்கின் வரவு செலவு நடக்கும் போது¸ தானும் 1 வது எதிரியும்பேசிகொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
14. .சா.7 ஆக விசாரிக்கப்பட்டுள்ளவர் தன்னுடையசாட்சியத்தில்¸ சிவகங்கை நகர் காவல் நிலையத்தில்சார்பு ஆய்வாளராக பணியில் இருந்த போது¸ 6.10.2005ம் தேதி அன்று மாலை 17.30 மணிக்கு சிவகங்கைநீதித்துறை நடுவர் 1 ல் இருந்த வரப்பெற்ற தபாலைபெற்று¸ அதில் வாதியின் புகார் மனுவைபார்வையிட்டு¸ குற்ற எண். 1069- 2005 ல் ... பிரிவு 420, 423 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவுசெய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
15. சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்புஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் .சா.8ஆக விசாரிக்கப்பட்டுள்ளவர் சிவகங்கை நகர்குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சார்புஆய்வாளராக பணிபுரிந்த போது¸ நிலைய குற்ற எண். 1069-05ல் இதச. பிரிவு 420¸423 ன் வழக்கில்குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில்¸ சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் வழக்கு பதிவுசெய்துள்ளார் என்றும்¸ தான் அந்த வழக்கு கோப்பைபார்வையிட்டு சாட்சிகளை மறு விசாரணைசெய்ததாகவும்¸ ஏற்கனவே சாட்சிகள் சொல்லி இருந்தவாக்குமூலம் ஒத்துப்போனதால் பதிவு செய்யவில்லை என்றும்¸5.11.06ம் தேதி இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்திற்குஅனுப்பி வைத்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
16. .சா..1 ஆக வாதி குணசேகரன் கொடுத்த புகார்மனு குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதில்இராமநாதபுரத்தில் இருந்த குணசேகரனின் பூர்வீகவீட்டை விற்ற பணத்தையும்¸ அவரது சகோதரியின்திருமணத்திற்காக சேமித்த பணத்தையும் சேர்த்து¸ரூ.4¸95¸000/- த்தை 5.1.2003ம் தேதி ரொக்கமாக கொடுத்து அன்றைய தேதியிலேயே தேவகோட்டையில்தி.ஊரணி அக்ரஹாரம் பழைய கதவு எண்.7 புதியஎண். 3ல் உள்ள வீட்டை ஆதரவாக காண்பித்துஇரண்டு கடனுறுதிப் பத்திரங்களை 1 வது எதிரிஎழுதிகொடுத்தார் என்றும்¸ மேற்படி கடனுறுதிபத்திரங்களை 2 வது எதிரி எழுதினார் என்றும்¸ அதில்1 மற்றும் 2 வது எதிரிகளின் மனைவிகளுமே சாட்சி கையெழுத்து செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
17. 5.1.2003ம் தேதி 1வது எதிரிக்கு வாதி எழுதிக் கொடுத்த ஆவணம் .சா..2 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி ஆவணத்தில் 3% வட்டிக்கு ரூ. 2¸45¸000/-மட்டும் 1 வது எதிரி வாதியிடமிருந்து கடனாக பெற்றுகொண்டதாகவும்¸ அதற்கு ஆதரவாக தேவகோட்டைநகரில் உள்ள தி.ஊரணி பழைய கதவு எண்புதியகதவு எண் 3ல் உள்ள வீட்டை ஆதரவாக எழுதிக் கொடுத்ததாக கண்டுள்ளது. மேற்படி வாதிரூ.2¸50¸000/- க்கு 3% வட்டி பெற்றுக் கொண்டு அதேதேதியில் அதே வீட்டை ஆதரவாக எழுதிகொடுத்ததாகவும் கண்டுள்ள ஆவணங்கள் .சா..3ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் .சா.5ஆக சீனிவாசன் மனைவி முத்துலெட்சுமி விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் வாதிக்கு 1 வது எதிரிஆதரவாக எழுதி கொடுத்த வீடு தனக்குபாத்தியப்பட்டது என்றும்¸ 1வது எதிரி தன்னுடைய தங்கையின் கணவர் என்றும் மேற்படி 1 வதுஎதிரிக்கும்¸ அவருடைய மனைவிக்கும் இந்தசொத்தில் எந்த பாத்தியமும் இல்லை என்றும்தெரிவித்துள்ளார். .சா.5 முத்துலெட்சுமி என்பவருக்கு எழுதிக்கொடுக்கப்பட்டகிரையபத்திரத்தின் சான்றிட்ட நகல் குறியீடு செய்யப்பட்டது.
18. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ள .சா.1 முதல்4 மற்றும் .சா.6 ஆகியவர்களின் சாட்சியங்களிலிருந்து பாhக்கும் போது¸ 1-வது எதிரியை 2வது எதிரி வாதிக்கு அறிமுகப்படுத்தி¸ வாதியிடமிருந்து 1 வது எதிரி பணம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக தேவகோட்டையில் உள்ள ஒரு வீட்டை எழுதி கொடுத்துள்ளது தெளிவாகதெரிய வருகிறது. எதிரி தேவகோட்டையில் உள்ளவீட்டை¸ கடனுக்கு ஆதரவாக எழுதி கொடுத்தும்¸ .சா.¸2 மற்றும் .சா..3 ஆவணங்களின் மூலம்உறுதியாகிறது. .சா..4 ஆவணமானது மேற்படிஅ.சா.. 2 மற்றும் .சா.. 3 ஆகியவற்றில்கடனுக்கு ஆதரவாக எழுதி கொடுக்கப்பட்ட சொத்துஅ.சா.5 க்கு பாத்தியப்பட்டது என்பதை அறித்துகொள்ளும் வகையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது..சா.5 ஆக விசாரிக்கப்பட்ட சாட்சி¸ 1வது 1வது எதிரி தன் தங்கையின் கணவர் என்றும் 1வது எதிரிக்கு ஆதரவாக எழுதி கொடுத்த சொத்து தனக்கு பாத்தியப்பட்டது என்றும் அதை தனது சகோதரியும் தனது தாயாரும் இருந்து பார்த்து வருகிறார்கள் என்றும் எதிரிகள் தன்னுடைய உறவினர்கள் என்றும்மேற்படி வீட்டை தான் யாருக்கும் எழுதிக் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்சகோதரியான லெட்சுமி என்பவரிடம் மேற்படிசொத்தை பார்த்துக்கொள்ளத்தான்சொல்லியுள்ளதாகவும் அதனால் அந்த சொத்தில் தனது சகோதரிக்கோ¸ அவருடைய கணவருக்கோ எந்த பாத்தியமும் இல்லை என்று சாட்சியம் அளித்துள்ளதைப் பார்க்கையில் .சா.5க்கு பாத்தியப்பட்ட சொத்தை போலியாக தனக்கு பாத்தியப்பட்டது என்று காட்டி ஒரு ஆவணத்தை உருவாக்கி¸ 1 முதல் 4 எதிரிகள் சேர்ந்து கொண்டு வாதியை மோசம் செய்யும் நோக்கத்தில் ஆரம்பம்முதலே செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
19. 1 வது எதிரியின் மனைவி .சா.5 ன் சகோதரிஎன்பது .சா.5 ன் சாட்சியத்தில் சொல்லப்பட்டுள்ளது. .சா.5 டைய சொத்தினை பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே 1 வது எதிரியிடப்படைக்கப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரிய வருகிற நிலையில்¸ தன்னுடைய கணவருடையது அல்லாத ஒரு சொத்தினை ஆதரவாக காண்பித்து எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில் கையொப்பம் செய்துள்ள நிலையில் அவர் 1 வது எதிரியின் குற்றத்திற்கு முழமையாக உடந்தையாக இருந்துள்ளதும் 1 வது எதிரி தவறு செய்வது அறிந்தும்¸ 1வது எதிரிக்கே ஆதரவாக செயல் பட்டுள்ளது புலனாகிறது. 2 முதல் 4 எதிரிகள் 1வது எதிரியின் மோசடி செயலுக்கு உடந்தையாகஇருந்துள்ளதும்¸ இவ்வழக்கின் சாட்சியங்களில்இருந்து தெரிய வருகிறது. எதிரிகள் தரப்பில் 1 வது எதிரிஅ.சா.1 ற்கு எழுதிக்கொடுத்த ஆதரவு பத்திரத்தில் கண்டுள்ள சொத்து 1 வது எதிரிக்கு பாத்தியப்பட்டது என்பதை உறுதிப் படுத்தும் வகையில் எதிரி தரப்பிலும் ஆவணங்களோ¸ சாட்சியங்களோ முன்வைக்கப்படவில்லை.
20. சாட்சிகளின் சாட்சியத்தில் இருந்து பார்க்கும்போது¸ ரூபாய் 4¸95¸000/- 1வது எதிரிக்கு வாதியால் டனாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஆதரவாக பொய்யாக தனக்கு பாத்தியமில்லாத சொத்தை வாதி குணசேகரனுக்கு 1 வது எதிரி எழுதிக் கொடுப்பதற்கு 2 முதல் 4 எதிரிகள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. மேற்படிஎதிரிகளின் செயல் வாதியை மோசடி செய்யும்நோக்கத்தோடு செய்யப்பட்டு இருப்பதாக இந்தநீதிமன்றம் கருதுகிறது. .சா.1 ன் சாட்சியத்தைஉறுதிபடுத்தும் வகையில் இதர சாட்சிகளின் சாட்சியமும் அமைந்துள்ளது. இந்நிலையில்எதிரிகளின் செயலானது¸ .சா.1 குணசேகனைஏமாற்றும் நோக்கத்தோடு பணத்தை அவரிடமிருந்துபெறுவதற்கு நேர்மையற்ற முறையில் எதிரிகள் செயல்பட்டு இருப்பதாக கருத வேண்டியுள்ளது.மேலும் 1 வது எதிரியினுடையதல்லாத சொத்தைபெற்று பொய்யுரை அடங்கிய ஆவணங்கள் மூலம்மோசடியாக எழுதப்பட்டுள்ளது புலனாகிறது. மேலும்1 வது எதிரி செய்த நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு2¸3¸4 எதிரிகள் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவருகிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச. பிரிவுகள். 420,423 உடன் இணைந்த 120(பி)ன் கீழ் குற்றவாளிகள் என்று இந்த பிரச்சினைக்கு இந்நீதிமன்றம் முடிவுகாண்கிறது. இருப்பினும் எதிரிகள் வயது முதிர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனைவழங்க முடிவு செய்கிறது.
இறுதியாக அரசு தரப்புகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸ 120(பி) ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளைசந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபித்துள்ளதால் எதிரிகள் குற்றவாளிகள் என தீர்மானித்து இத. பிரிவு420 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா6 மாதம் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸அபராதம் தலா ரூ.100/- விதித்தும்¸ அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டணை விதித்தும், இதச. பிரிவு 423ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலாஅபராதம் ரூ.50/- விதித்தும்¸ அபராதம்கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். இதச.பிரிவு 120(பி) ன்கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா அபராதம் ரூ.50/- விதித்தும், கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும்¸கு. வி.மு. பிரிவு 248(2) ன் கீழ் தீர்ப்பளிக்கப்படுகிறது.
14.05.2017
நன்றி : http://www.tamiljudgements.org  

Saturday, May 13, 2017

'போக்குவரத்து விதி மீறினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து!'

'போக்குவரத்து விதி மீறினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து!'
'போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்' கோர்ட் உத்தரவுப்படி ரத்து செய்யப்படும்' என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
நாள்தோறும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. சாலை பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், போக்குவரத்து விதிகளை மதிக்காததால் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதை கருதி, உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்'களை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டி உத்தரவுப்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோர் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல்களை மதிக்காமல் செல்வது, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது, அதிக பாரம் ஏற்றி செல்பவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.05.2017