disalbe Right click

Saturday, June 10, 2017

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே.
ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் குறித்த ஒரு பார்வை.
இந்திய அரசியலமைப்பு விதி 54, ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடுகிறது. இது, மறைமுக தேர்தலாக அமைந்துள்ளது. மக்கள் நேரடியாக வாக்களிக்காமல்
அவர்களது பிரதிநிதிகளான எம்.பி., , எம்.எல்.ஏ,.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்களை உள்ளடக்கிய 'எலக்ட்டோரல் காலேஜ்' மூலம் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்துகிறது. இந்தியாவில்
மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க் களில் 29 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே இத்தேர்தலுக்கு
கணக்கில் கொள்ளப் படுகிறது. லோக்சபாவில் இரண்டு, ராஜ்யசபாவில் 12 ஆகிய நியமன எம்.பி.,க்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
வாக்குப்பதிவு மையம்
ஜனாதிபதி தேர்தல்வாக்குப்பதிவு டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் மாநில சட்டசபை வளாகங்களில் நடைபெறும்.
தகுதிகள்
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்ப வராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
* டெபாசிட் கட்டணம் 15ஆயிரம் ரூபாய்.
யாருக்கு வாய்ப்பு
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 1804 எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 2,39,923 வாக்குகளும், 336 லோக்சபா எம்.பி.,க்கள், 70 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூலம் 2,87,448 வாக்குகளும் மொத்தம் 5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன.
இது ஐ.மு. கூட்டணியை விட 1.74 லட்சம் வாக்குகள் அதிகம். இவர்களுடன் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் சேர்ந்தாலும் தே.ஜ., கூட்ட ணியை விட 93 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியே இருக்கும். வெற்றிக்கு 5,49,474 வாக்குகள் தேவை என்பதால், கூடுதலாக சுமார் 22000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பா.ஜ.,வுக்கு தேவை.
இது நடுநிலை வகிக்கும் சுயேச்சைகள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் (36,500), தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் டி.ஆர்.எஸ்., ( 23,200 ), அ.தி.மு.க., (59,000) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போதைய காலியிடம்
லோக்சபா 2
ராஜ்யசபா 2
சட்டசபைகள் 4


நன்றி : தினமலர் நாளிதழ் - 07.06.2017

Thursday, June 8, 2017

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் - கலெக்டர்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் - கலெக்டர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய வட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர்  ராசாமணி அவர்கள் நேற்று திடீரென ஆய்வுசெய்தார். 
அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர் போட்ட உத்தரவு:
  • கிராம நிர்வாக அலுவலகங்களை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும். 
  • பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • கோரிக்கை மனுக்களின் விவரங்களை முறையாக பதிவேட்டில் பதிந்து, தொடர்ந்து பராமரித்து வரவேண்டும்.  
  • சாதிச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளுக்காக வரும் விண்ணப்பங்களைப் பதிந்து, உடனடியாக விசாரிக்க வேண்டும். 
  • விண்ணப்பங்களின் தற்போதைய  நிலைகுறித்து அவ்வப்போது பதிவுசெய்ய வேண்டும்.
  • பதிவேடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி அனைத்து நிலையிலுள்ள அலுவலர்களும் ஆய்வுக்கு வரும்போது அவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். 
  • பொதுமக்களை அலையவிடாமல், குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே கிராம நிர்வாக அலுவலர்களின் தலையாய கடமை. 
  • கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மூலம் பெறப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை, உடனுக்குடன் விசாரித்து உரிய பதிலைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
  • பள்ளி செல்லும் குழந்தைகள், உதவித்தொகை கேட்பவர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்போடு உதவ வேண்டும். 
  • தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து, முழு நேரமும் கிராமங்களிலிருந்து பணியாற்ற வேண்டும்' 
 சி.ய.ஆனந்தகுமார்
நன்றி : விகடன் செய்திகள் - 09.06.2017

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!
சென்னை: வீடு, காலி மனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்படுகிறது; அதே சமயம், பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது; இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து வந்தது. அதாவது 2010-2011ம் ஆண்டு அதிகப்பட்சமாக 8 ஆயிரம் கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதை தொடர்ந்து, பத்திரப்பதிவு துறையில் நில வழிகாட்டி மதிப்பு கட்டணத்தை அதிகரித்து ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டார்.
அதன்படி, 2012ம் ஆண்டு தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனால் பல இடங்களில் 100 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கட்டணம் உயர்ந்தது. இதனால், புதிதாக வீடு வாங்க நினைத்தவர்கள், நிலம் மற்றும் வீட்டை விற்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
மேலும் பத்திரப்பதிவு துறையில் பல குளறுபடிகளும் ஏற்பட்டது. 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு கூட்டினாலும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. 2012-13ம் ஆண்டு 7,455 கோடியும், 2013-14ம் ஆண்டு 8,055 கோடியும், 2014-15ம் ஆண்டு 8,562 கோடியும், 2016-17ம் ஆண்டு 7,002 கோடி மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைத்தது. வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு முன்பாக தமிழக அரசுக்கு பதிவுத்துறை மூலம் ஆண்டுக்கு 35 லட்சம் பத்திரங்களின் பதிவு நடைபெற்று வந்தது. அரசு திடீரென 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தியதால் பத்திரப்பதிவு ஆண்டுக்கு 25 லட்சமாக குறைந்தது. இதனால் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், நில தரகர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வழியுறுத்தி வந்தனர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது; இதை சரி செய்ய தமிழக அரசு தீவிரமாக யோசித்து சில முடிவுகளை எடுக்க முன்வந்தது.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் 30 நிமிடம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கோவை சென்று இருந்தார். நேற்று மதியம் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். விமானம் தாமதமாக சென்னை வந்ததால் அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவு குறித்து தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு பரிந்துரை படி, தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 (இன்று) முதல் 33 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியினை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை ஈடுசெய்ய விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்: 
நில வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு குறைத்தாலும், பத்திர பதிவு கட்டணத்தை 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் நில தரகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அறிவிப்பால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிசங்கர் கூறியதாவது: 
கடந்த 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று அரசு 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கிறது. ஆனால் ஸ்டாம்ப் டியூட்டி(பதிவுக் கட்டணம்) 7+1 சதவீதமாக இருந்தது. இதை 7+4 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஒருபக்கம் மதிப்பை குறைப்பதாக காட்டிவிட்டு, மறுபக்கம் ஸ்டாம்ப் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாம்ப் டியூட்டி கட்டணம் 14 சதவீதமாக இருந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்படி 7+1 சதவீதமாக குறைத்தார்கள். தற்போது மீண்டும் 7+4 சதவீத கட்டணத்தை உயர்த்திவிட்டனர். 2012ம் ஆண்டுக்கு முன்னர் ஒரு சதுர அடி நிலம் 400 ஆக இருந்தது, வழிகாட்டி மதிப்பீடு குளறுபடியால் 1,200க்கு உயர்ந்தது. 8 சதவீத கட்டணம் சேர்த்து ஒரு சதுர அடி நிலத்தின் விலை 1,296 ஆக இருந்தது. தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 33 சதவீதம் குறைத்ததால் ஒரு சதுர அடி 804 ஆக இருந்தாலும், அதற்கான கட்டணம் 11 சதவீத சேர்த்து 892 ஆக இருக்கும். வழிகாட்டி மதிப்பீடு தாறுமாறாக இருக்கும் நிலையில், இது பொதுமக்களுக்கு பயன்தராது. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படப்போவதில்லை. இதன்மூலம் அரசாங்கத்துக்கு வேண்டுமானால், கூடுதல் வருமானம் வரும். ஒரு கையில் கொடுப்பதை போன்று கொடுத்துவிட்டு மறுபக்கம் தட்டி பறித்துவிட்டனர்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 09.06.2017
Image may contain: text
Image may contain: text

Image may contain: text
நன்றி : முகநூல் நண்பர் 
தொழிலாளர்களின் தோழன் 


Wednesday, June 7, 2017

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று, எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.
No automatic alt text available.
No. State/UT         MLAs    Population   Vote value  Total vote value 
1 Andhra Pradesh     175     43,502,708    248        43,400 
2 Arunachal Pradesh   60        467,511      8          480 
3 Assam             126     14,625,152    116        14,616 
4 Bihar              243     42,126,236    173        42,039 
5 Chattisgarh          90     11,637,494    129        11,610 
6 Delhi               70      4,065,698     58         4,060 
7 Goa                40       795,120     20           800 
8 Gujarat            182     26,697,475    147        26,754 
9 Haryana            90     10,036,808    112        10,080 
10 Himachal Pradesh  68      3,460,434     51         3,468 
11 Jammu & Kashmir  87      6,300,000     72         6,264 
12 Jharkhand         81     14,227,133    176        14,256 
13 Karnataka        224    29,299,014     131        29,344 
14 Kerala           140    21,347,375     152        21,280 
15 Madhya Pradesh  230    30,016,625     131        30,130 
16 Maharashtra      288    50,412,235     175        50,400 
17 Manipur           60     1,072,753      18         1,080 
18 Meghalaya         60     1,011,699      17         1,020 
19 Mizoram           40      332,390       8           320 
20 Nagaland          60      516,499       9           540 
21 Odisha           147    21,944,615     149        21,903 
22 Puducherry        30      471,707       16          480 
23 Punjab           117    3,551,060      116        13,572 
24 Rajasthan        200   25,765,806      129        25,800 
25 Sikkim            32     209,843        7           224 
26 Tamil Nadu      234   41,199,168      176         41,184 
27 Telangana       119   43,502,708      148         17,612 
28 Tripura           60    1,556,342       26          1,560 
29 Uttar Pradesh    403   83,849,905      208         83,824 
30 Uttarakhand      70     4,491,239       64          4,480 
31 West Bengal     294   44,312,011      151         44,394  
            Total 4,120  549,302,055                 549,474 

Parliament     Seats   Vote Value  Total vote value 
Lok Sabha     543       708         3,84,444 
Rajya Sabha   233       708         1,64,964 
       Total   776      1416         5,49,408 

Combined            Total voters    Total vote 
value MLA (elected)     4,120         5,49,474 
MP        (elected)      776         5,49,408 
                 Total 4,896        10,98,882 
எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். 
ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். 
இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.
Veera Kumar
நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  - 07.06.2017 


Tuesday, June 6, 2017

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் தன்கர். இவர் கடந்த 2004ம் ஆண்டு அசோக் லைலேண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் (தற்போது இந்த நிதி நிறுவனம் இண்டஸ்இண்ட் பாங்க்)  இருந்து லாரி இன்ஜின் ஒன்றை வாங்கினார். இதற்கு அந்நிறுவனம் அவருக்கு ரூ.8.5 லட்சம் கடன் வழங்கியிருந்தது. அசலுடன் வட்டியும் சேர்த்து ரூ.9,64,750 பணத்தை ஒரேயடியாகவோ அல்லது மாதம் ரூ.28,375 என 34 மாதங்களில் வழங்கலாம் என நிறுவனம் தன்கரிடம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, தன்கரிடம் இருந்து 39 வெற்று காசோலைகளையும் பைனான்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் ஒப்பந்தம் நகல் தன்கருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
 
மாத தவணை தொடர்பாக நிறுவனத்துடன் தன்கருக்கு பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி அவர் வாகனத்தை ஓட்டி சென்றபோது, திடீரென அவரை வழிமறித்து சிலர் தாக்கியுள்ளனர். பின் நிலுவை தொகையை கட்டாமல் இருந்து வருவதாக கூறி, அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.அதன்பின் அந்நிறுவனம் தன்கருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், அந்த வாகனத்தை வேறு ஒரு நபருக்கு மலிவான விலைக்கு விற்பனை செய்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நிறுவனம், தன்கர் வழங்கிய வெற்று காசோலைகளை நிரப்பி, அவர் மீது மோசடி வழக்கை தொடர்ந்தது.ஆனால் தன்னை ஏமாற்றி வாகனத்தை அபகரித்த அந்நிறுவனத்திடம் இருந்து தான் செலுத்தியதிலிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று தரவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் தன்கர் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட நிறுவனம் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது தொடர்பான எந்த ஆதாரத்தையும் தன்கர் தாக்கல் செய்யவில்லை என்பதோடு, முறைப்படி தவணை தொகை செலுத்தாதபட்சத்தில், நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி நீதிமன்றம்மனுவை தள்ளுபடி செய்தது. 

எனினும் தன்கர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் தன்கர், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதிலும், 2004ம் ஆண்டு வழங்கிய வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தி தன் மீது மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மாநில நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் என் பி கவுஷிக் முன் நடந்தது. 

அப்போது, நிறுவனம் இதேபோல் எத்தனை செக் மோசடி வழக்குகளை கடன் பெற்றோர் மீது பதிவு செய்துள்ளது? என ஆச்சரியப்பட்டார். 
மேலும் அவர் கூறுகையில், இந்திய நீதிமன்றங்களில் ஐபிசி சட்டம் 138ன் கீழ், பல செக் மோசடி வழக்குகள் பொய்யாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை கடன்காரர்கள் மீது இந்நிறுவனம் இதுபோல் பொய் மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது என்பதை யாராலும் யூகித்து பார்க்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார். 

அதன்பின் நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் கூறியதாவது
விசாரணையில் பைனான்ஸ் நிறுவனம் மனுதாரர் மீது பொய்யான செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது உறுதியாகிறது.  இதுபோன்ற நிறுவனத்தின் மோசடி வழக்குக்கு தீர்வு காண வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் நுகர்வோர் ஆணையத்துடன் தொடர்புடைய நலவாரியத்துக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த மோசடி வழக்கு மூலம் பாதிப்புக்குள்ளான டெல்லிவாசி தன்கருக்கு ரூ.5.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 07.06.2017


Monday, June 5, 2017

லோக் ஆயுக்தா ஏற்படுத்த இதுவரை செய்தது என்ன?

லோக் ஆயுக்தா ஏற்படுத்த இதுவரை செய்தது என்ன?
சென்னை: ஊழல் புகார்களை விசாரிக்கும், 'லோக் ஆயுக்தா' அமைப்பை, தமிழகத்தில் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: பார்லிமென்டில், மத்திய அளவில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை, இந்த அமைப்புகள் விசாரிக்க முடியும். 20 மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் இன்னும் ஏற்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் இது குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, நான்கு வாரங்கள் அவகாசம் கோரினார்.

இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 10க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 06.06.2017