disalbe Right click

Tuesday, June 20, 2017

சிபில் ஸ்கோர் - அடிப்படை விஷயங்கள்!

சிபில் ஸ்கோர் - அடிப்படை விஷயங்கள்!
​கடன் சம்பந்தப்பட்ட  விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?
http://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=3036&loc=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2Fmiscellaneous%2F92796-know-the-basic-details-of-cibil-score.html&referer=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2F&cb=a518dade28CIBIL என்றால் என்ன?
Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் (சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?
க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.
இதனால் என்ன பயன்?
நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.
கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?
ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.
என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?
க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.
ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்? 
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 
சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?
சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?
சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.
சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?
க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.
கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?
ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.
சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?
இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.
ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?
குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.
 சஞ்சய் காந்தி

நன்றி : விகடன் செய்திகள் - 19.06.2017

தன் வழக்கில் தானே வாதாடி வெற்றி பெற்ற ஆயுள் தண்டணைக் கைதி

தன் வழக்கில் தானே வாதாடி வெற்றி பெற்ற ஆயுள் தண்டணைக் கைதி
ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார். 
இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. 
மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. 
தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். 
இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.
ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 
ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016

Sunday, June 18, 2017

மொபைல் எண் மாற்றம் - எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

மொபைல் எண் மாற்றம் - எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
 சென்னை:வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல், வேறு நபருக்கு மொபைல் போன் எண்ணை மாற்றிய, ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ். இவரது மொபைல் போனில், தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்ததால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, போலீசில் புகார் கொடுத்தார். எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக, 'சிம்' கார்டு மற்றும் மொபைல் போனை பெற்றுச் சென்றனர். பின், நீதிமன்றத்தில், அவற்றை ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மொபைல் போன் எண்ணை வேறு நபருக்கு, ஏர்டெல் நிறுவனம் மாற்றியது. அதனால், தன்னிடம் ஒப்புதல் பெறாமல், வேறு நபருக்கு எண்ணை மாற்றியதால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, சுரேஷ் வழக்கு தொடுத்தார்.
ஏர்டெல் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'ப்ரீபெய்டு திட்டத்தின் கீழ், இணைப்பு பெற்றுள்ளார். தொடர்ந்து, 90 நாட்கள், 'சிம்' கார்டு பயன்படுத்தவில்லை என்றால், சேவை துண்டிக்கப்பட்டு விடும். பின், அந்த எண் வேறு வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படும். இதில், விதிமீறல் எதுவும் இல்லை' என, கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த, நீதிபதி ஜெயமங்களம், 'வேறு வாடிக்கையாளருக்கு, எண் ஒதுக்கப்பட்ட பின், நீதிமன்றத்தை அணுகி உள்ளார். போலீசிடம், மொபைல் போனை ஒப்படைத்ததற்கான ஆதாரங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வழக்கை நிரூபிக்க, மனுதாரர் தவறி விட்டார். எனவே, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.06.2017




Friday, June 16, 2017

'ரூ.1 லட்சத்துக்கு குறைவான மோசடியை புகார் செய்யாதீங்க!'

'ரூ.1 லட்சத்துக்கு குறைவான மோசடியை புகார் செய்யாதீங்க!'
புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகளை, போலீசில் புகார் செய்ய வேண்டாம்' என, வங்கிகளை, சி.வி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளில் நடக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான, ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகள், உள்ளூர் போலீசிடம் புகார் செய்யப்பட்டு வருகின்றன. 
இதில், பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது என, வங்கிகள் தெரிவித்தன. இதையடுத்து, சி.வி.சி. (Central Vigilance Commission) என்கிற மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷன், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில்,சி.வி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, ஒரு லட்சம் ரூபாய்க்குகீழ் நடக்கும் மோசடிகளை, இனி, உள்ளூர் போலீசிடம் புகார் செய்யத் தேவையில்லை. வங்கி உயர் அதிகாரிகளே, இதை விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
எனினும், இந்த மோசடியில், வங்கி ஊழியர் சம்பந்தப்பட்டிருந்தால், போலீசில் கண்டிப்பாக புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாராக்கடன்
இதற்கிடையில், வங்கிகளின் வாராக்கடன் பற்றி வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில், கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி வரை, வங்கிகளின் வாராக்கடன் தொகை, 6.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் வாராகடன், 97 ஆயிரத்து, 356 கோடி ரூபாயாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி வாராக்கடன், 54 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாகவும், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாராக்கடன், 44 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாகவும் உள்ளது.
பரோடா வங்கிக்கு,ரூ.35 ஆயிரத்து, 467 கோடி , கனரா வங்கிக்கு,ரூ. 31 ஆயிரத்து, 466 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 31 ஆயிரத்து, 73 கோடி ரூபாய், வாராக்கடனாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நன்றி : தினமலர் நாளிதழ் -17.06.2017


Wednesday, June 14, 2017

(சட்டப்படி) போயஸ் வீடு யாருக்கு?

(சட்டப்படி) போயஸ் வீடு யாருக்கு? 

செல்வி ஜெ.ஜெயலலிதாபுரட்சித் தலைவிஅம்மாஇந்த மாயச் சொற்கள் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. அ.தி.மு.க கட்சியில், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியில், ஜெயலலிதாவின் சொந்தக் குடும்பத்தில் இந்தப் பெயரையும், பட்டங்களையும் தவிர்த்து வேறு எந்தப் பெயரும் ஜொலித்ததில்லை; அதற்கு ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்ததும் இல்லை.
Image result for தீபா
கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதைத் தவிர்த்து அந்தக் கட்சியின் மற்ற பொறுப்புகள் யாரிடம் இருக்கின்றன என்பது அர்த்தமற்றதாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா. அவ்வளவுதான்அதைத் தவிர்த்து மற்ற எல்லோரும் பூஜ்ஜியங்களே!
ஜெயலலிதா மரணமடைந்த அடுத்த நொடியே நிலைமை மாறத் தொடங்கியது. கட்சிக்குள் இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தகர்ந்து விழத் தொடங்கின. ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அது முற்றிலுமாகச் சிதைந்தது. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆளுக்கொரு அறிவிப்பை வெளியிடத் தொடங்கினர். அமைச்சர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். இன்னொரு பக்கம், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் தினமும் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். அதன் உச்சகட்டம்தான் கடந்த 11-ம் தேதி போயஸ் கார்டன் இல்லம் முன்பு நடந்த களேபரங்கள். இந்த நிலையில், ‘போயஸ் கார்டன் வீடு யாருக்குச் சொந்தம்என்ற கேள்விக்கான பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள், எஸ்டேட்டுகள், சொத்துகள் வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவே உயிரோடு இருந்தால்கூட அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால், போயஸ் கார்டன் வேதா நிலையத்தைப் பொறுத்தவரை அந்தக் குழப்பமே கிடையாது. அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. அந்த இடம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியது. ஆனால், ஜெயலலிதாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வந்த தொகையில்தான் வேதா நிலையம் வீடு கட்டப்பட்டது. அதன்பிறகு அதில் கட்டப்பட்ட புதிய கட்டடம் எல்லாமும் சேர்த்து ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துகள் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்குச் சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.
ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துகள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்குச் சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துகள், அவருடைய தந்தை ஜெயராமின் மகனான ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியும். அந்தவகையில் தற்போது போயஸ் கார்டன் வீட்டில் தீபா, தீபக் இருவருக்கும் பங்கு உண்டு. 
Image result for தீபக் ஜெயகுமார்
ஆனால், மேலே சொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயிலோ, அல்லது வேறு ஆவணங்கள் எதுவுமோ  எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துகளை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துகளை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக்கும், தீபாவும் உரிமை கோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துகள் போய்ச் சேரும்.
ஜெயலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அப்படி உயில்  இருந்தால்அது குறித்து  சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமாகச் சென்னையில் உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டு இருந்தால், அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புரொபேட்செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் புரொபேட்செய்யப்பட வேண்டும். தனது உயிலைச் செயல்படுத்தும் உரிமையை யாருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளாரோ, அவர்தான் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, உயிலில் இருக்கும் விஷயங்களைப் பொதுமக்கள் அறியுமாறு வெளியிட நீதிமன்றம் ஏற்பாடு செய்யும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவரும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துகளை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் செல்லும் தன்மைகுறித்தும், ‘புரொபேட்வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். 
Image result for தீபக் ஜெயகுமார்
போயஸ் கார்டன் தங்களுக்கு மட்டும்தான் சொந்தம்என்று ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சமீபகாலமாகவே ஆசை வந்துவிட்டது. கடந்த 11-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென போயஸ் கார்டனுக்குத் தீபா விசிட் செய்தார். சொத்து உரிமைக் கோரல் பற்றிப் பேசுவதற்கு அன்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் தீபக், தனது சகோதரி தீபாவுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது, “நீ மட்டும் தனியாகப் போயஸ் கார்டன் வா. சொத்து விவகாரம் உள்பட பல விஷயங்களை உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்என்று கூறியிருக்கிறார். அதனால் தீபாவும் அதிகாலையிலேயே போயஸ் கார்டனுக்குள் வந்தார். இவர் தனியாகத் தீபக்கைச் சந்தித்துப் பேசும்வரை எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை.
அதன் பின்னே தீபாவின் கணவர் மாதவனும், தீபா பேரவை நிர்வாகி ராஜாவும் போயஸ் கார்டனுக்குள் சென்றுள்ளனர். வேதா நிலையத்தில் இருந்த, சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தாரின் புகைப்படங்களை அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் தீபா தரப்புக்கும், வேதா நிலைய காவலாளிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் தீபா தரப்பினரைக் காவலாளிகள் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தப் பிரச்னையின்போது காவலாளிகளை ஏதும் சொல்லாமல், ‘‘உன்னை மட்டும் தனியாகத்தானே வரச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்தாய்?’’ எனத் தீபாவிடம் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் தீபக். இதையடுத்து தீபா, அவர் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி  ராஜா ஆகியோர் வேதா நிலைய வாசலின் முன் நின்று சசிகலா தரப்பினரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ‘‘சொத்துக்கு ஆசைப்பட்டு சசிகலாதான் என் அத்தையைக் கொன்றார். இதற்கு என் சகோதரனும் உறுதுணையாக இருந்தார்’’ எனக் கூச்சலிட்டார் தீபா. தொடர்ந்து தீபாவும் மாதவனும் தீபக்கும் ராஜாவும் நடத்திய கூத்துகள், மட்டரகமான அரசியல் காட்சிகளாக இருந்தன. 
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று யார் யாரோ சொல்லிவந்தார்கள். ஆனால், ‘என் அத்தையின் மரணத்தில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லைஎன அறிவித்து வந்தார் தீபா. இந்தச் சூழலில், தற்போது முதன்முறையாக ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள்எனப் புகார் கூறியிருக்கிறார். அரசியலுக்குள் நுழைவது எப்படிஎன்ற வித்தையை இப்போதுதான் தீபா அறிந்துகொண்டிருக்கிறார்.
நன்றி : ஜூனியர் விகடன் - 18.06.2017