disalbe Right click

Monday, June 26, 2017

பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?

பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
நம் நாட்டில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை, ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (.பி.எஃப்.), ஆரக்கிள் .எஸ் மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டரை டெல்லி அருகே உள்ள துவாரகாவில் அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டருடன் நாடு முழுவதிலும் உள்ள 123 .பி.எஃப். அலுவலகங்களும் இணைக்கப்படும்.
இதன் மூலம் பி.எஃப் பணத்தை ஆன்லைனில் திரும்பப் பெறும் புதிய வசதி நமக்குக் கிடைத்துள்ளது.
பி.எஃப் நடைமுறை
இதற்குமுன் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறவேண்டுமெனில், வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியம் தேவை. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வேலை செய்யும் நிறுவனத்திடம் தரவேண்டும். அதன்பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
நிறுவனம் ஒப்புதல் அளித்தபிறகு, பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, ஊழியருக்கு பி.எஃப் பணம் செட்டில்மென்ட் செய்யப்படும். இந்த நடைமுறையினால் பி.எஃப். பணத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
நிறுவனத்தில் ஏதோவொரு பிரச்னை காரணமாக வேலையிலிருந்து விலகியவர்களுக்கும் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எடுக்க, யு..என் (Universal Account Number) எண் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் ஒருவர் தனது பி.எஃப் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
யு..என் ஆக்டிவேட் அவசியம்
தற்போது பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு யு..என் அவசியம். பி.எஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இந்த யு..என் எண்ணை ஆக்டிவேட் செய்து வைத்திருப்பது நல்லது. இந்த யு..என் எண் பெறுவதற்கு ஆதார் எண், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு எண் ஆகியவை தேவை. இந்த எண்ணை வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் பெறலாம்.
வேலையில் இல்லாதவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து, இந்த எண்ணைப் பெற முடியும். இந்த எண் கிடைத்தபிறகு, ஊழியர்கள் அதை ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு பி.எஃப் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்பிறகு பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.
ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்
இப்போது பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி சங்கரிடம் கேட்டோம்.

``பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் நடைமுறைகளை பி.எஃப் அமைப்பு மிகவும் எளிமைப் படுத்தியுள்ளதுபி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்து பெற்றுக் கொள்ளலாம்இது ஜூன் முதல் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
பி.எஃப் சந்தாதாரர்களுக்கு யு..என் எண் இருந்து வங்கிக் கணக்குமொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால்பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் பணத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
 இந்தப் புதிய வசதியில் சந்தாதாரர்களின் பி.எஃப் கணக்குடன் வங்கிக் கணக்கு எண்ஆதார் எண்பான் கார்டு எண் மற்றும் யு..என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.
 அப்படி இணைத்திருந்தால்பி.எஃப் இணையதளத்தில் பணத்தை எடுப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகுபி.எஃப் பணம்சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
 பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதற்குமுன்உங்களுக்கு யு..என் எண் அவசியம் இருக்க வேண்டும்.
 யு..என் எண்ணை ஆக்டிவேட் செய்யும்போது எந்தத் தொலைபேசி எண்ணை வழங்கினீர்களோஅந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
 இதுதவிரஉங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும்.
 உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்திருந்தால்பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்துப் பெறலாம்” என்றனர்.
பி.எஃப் பொறுத்தவரைகுறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு நீங்கள் .பி.எஃப். உறுப்பினராக இல்லாவிட்டால்உங்கள் பான் கார்டு எண்ணைச் சமர்பிக்க வேண்டும்தொடர்ந்து 60 நாள்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பி.எஃப் பணத்தை எடுக்க முடியும்ஆனால், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது பணத்தை எடுக்க முடியாதுநிரந்தரமாக வெளிநாட்டுக்குச் செல்லும்போது, 55 வயது முடிந்து நிரந்தரப் பணி ஓய்வு பெறுபவர்   எந்தவிதமான காத்திருப்புக் காலமும் இல்லாமல் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறமுடியும்.
இந்தியாவில் பி.எஃப் சந்தாதாரர்களைப் பொறுத்தவரைகிட்டத்தட்ட நான்கு கோடி பேர் பங்களிக்கின்றனர்இதில் 1.72 கோடி பேர் மட்டுமே ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யு..என் எண்ணுடன் இணைத்துள்ளனர்.
பி.எஃப்சந்தாதாரர்கள் இந்த வசதியினைப் பயன்படுத்தி நன்மை பெறலாமே!
சோ.கார்த்திகேயன்
நன்றி : நாணயம் விகடன் - 25.06.201

Sunday, June 25, 2017

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

ஆன்மீகப்பாதையில் பிச்சை எடுப்பதென்பது வளர்ச்சிக்கான முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது! ஆனால், நாகரீக மனிதனின் பார்வையில் பிச்சையெடுப்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது!
சத்குரு: தனது தேவைகள் அனைத்திற்கும் பிச்சை எடுத்த ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு கிழிந்த அங்கியுடன் வாழ்ந்தார். மெதுவாக, அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு சம்பாதித்தார். மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவரிடம் ஆலோசனை கேட்டு அவர் பின்னால் செல்லத் துவங்கினர். மிகவும் விவேகமான ஒருவராக அவர் கருதப்பட்டார். அவர் புகழ் ஊரெல்லாம் பரவ, அரசரும் இந்த செய்தியைக் கேட்டு அவரிடம் அறிவுரை கேட்டு அவரை சந்திக்கத் துவங்கினார்.

ஒருநாள் அரசர் அவரைப் பார்த்து, “நீங்கள் பிச்சைக்காரராக இருக்கக்கூடாது, நீங்கள் எனது அரசவையில் அமைச்சராக இருக்கவேண்டும்என்றார். அதற்கு அந்த பிச்சைக்காரர், “நீங்கள் வழங்கும் இந்த பணி எனக்கு அர்த்தமற்றது, ஆனால் மக்களுக்கு இது உபயோகமாக இருக்கப்போகிறது என்றால், ஒரே ஒரு நிபந்தனையுடன் இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு அரண்மனையில் ஒரு அறை வேண்டும், அதற்குள் எவரும் வரவோ, சோதனை செய்யவோ கூடாது, நீங்கள் உட்பட எவரும் அந்த அறைக்குள் வரக்கூடாது. அப்படி எவராவது வந்தால், அதற்குப்பிறகு நான் உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்என்றார். அதற்கு அரசர், “சரி, நான் உங்களுக்கு ஒரு அறை கொடுக்கிறேன். அதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையை நான் எதற்காக பார்க்க நினைக்கப்போகிறேன்?” என்றார்.

சில வருடங்கள் இது தொடர்ந்தது. இப்போது அவையின் முக்கிய மந்திரியாக பதவி ஏற்றிருந்த பிச்சைக்காரர், தனது கிழிந்த அங்கியுடன் இனி நடமாட முடியாது என்பதால் நல்லவிதமான உடைகளை உடுத்திக்கொண்டார். காலப்போக்கில் மக்கள் அனைவரும் அவரை போற்றத் துவங்கினர், அவர் அரசருக்கும் மக்களுக்கும் மிகவும் பிரியமான மந்திரியாக மாறினார். அவருடைய புகழையும் வெல்லமுடியாத விவேகத்தையும் கண்ட பிற அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். சில அமைச்சர்கள், “அவர் அந்த அறையில் சந்தேகத்திற்குரிய எதையோ வைத்திருக்கிறார். அதனால்தான் எவரையும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அது அரசருக்கும் தேசத்துக்கும் எதிரான ஏதோவொன்றாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதற்காக இப்படி எவரையும் நுழையவிடாமல் வைத்திருக்கவேண்டும்?” என்று சிந்திக்கத் துவங்கினர்.

இந்த வதந்திப்பேச்சு பரவி அரசரின் காதுகளை அடைந்தது. அரசரும் என்னவென்று கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்து, ஒருநாள் முக்கிய மந்திரியிடம், “உங்கள் அறையில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்க வேண்டும்என்றார். அதற்கு அமைச்சர், “நீங்கள் பார்க்கலாம், ஆனால் அந்த அறைக்குள் நீங்கள் நுழைந்த மறுகணமே நான் திரும்பிச் சென்றுவிடுவேன். உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்.என்றார். அவரின் விவேகத்தை நன்கு அறிந்த அரசர், இப்படியொரு அமைச்சரை இழக்க மனமின்றி தன் ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.

ஆனால் சிலநாட்களில், மக்கள் அவரிடம் சொன்ன கதைகளையும், “நீங்கள் அரசராயிற்றே, உங்களுக்குத் தெரியாத ரகசியம் உங்கள் அரண்மனையில் இருக்கக்கூடாதுஎன்ற அறிவுரையையும் கேட்டு, அரசர் மீண்டும் பதற்றமடைந்தார். பிறகு ஒருநாள் விடாப்பிடியாக அரசர் சொன்னார், “நான் இன்று உங்கள் அறையை பார்த்தே தீரவேண்டும்.மந்திரி அதற்குச் சம்மதித்தார், அதனால் அரசர் உள்ளே சென்றார். அந்த அறையில் அவர் எதையும் காணவில்லை. அது ஒரு காலியான, வெற்று அறையாக இருந்தது. சுவற்றில் பிச்சைக்காரனாக இருந்தபோது அணிந்த அந்த கிழிந்த அங்கி தொங்கிக்கொண்டு இருந்தது.

இதைக் கண்ட அரசர், “இதை எதற்காக ரகசியமாக வைத்துக்கொண்டீர்கள்? இங்கு எதுவும் இல்லையே!என்று கேட்டார். அதற்கு மந்திரி, “பகலில் நான் மந்திரி. இரவில் அந்த அங்கியை அணிந்துகொண்டு தரையில் படுத்துத் தூங்கினேன். இதனால் அமைச்சராக இருந்த எனது பதவியில் நான் சிக்கிப்போகவில்லை. ஆனால் இப்போது நம் ஒப்பந்தத்தை நீங்கள் மீறிவிட்டீர்கள், இனி இது செல்லாது.என்றபடி கிழிந்த அங்கியை அணிந்துகொண்டு வெளியேறிச் சென்றார்.
விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது
இந்தியாவில் பிச்சை எடுப்பது எப்போதும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. உங்கள் உணவை நீங்கள் தேர்வு செய்யவில்லை, பிச்சை எடுத்து மக்கள் என்ன வழங்கினாலும் அதை உண்டு வாழ்ந்தீர்கள். ஆன்மீகப்பாதையில் இருந்த ஒருவர் உங்கள் வீட்டின் முன் பிச்சை கேட்டால், அவருக்கு நீங்கள் உணவு வழங்குவது மிகப்பெரிய பாக்கியமாகக் கருதப்பட்டது. இன்று இந்த பாரம்பரியங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். பலர் ஆன்மீகத் தேடுதலில் இருப்பவர்கள் போல உடை அணிந்தபடி பணத்தையும், உணவையும் மட்டும் தேடும் சாதாரண பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வாக பிச்சை எடுத்தபோது, அதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு அர்த்தமும், சாத்தியமும் இருந்தது.
உங்கள் முன்னால் யாரோ ஒருவர் கையேந்தும்போது, அதை அவர் தவறாகப் பயன்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் பிச்சை இடாமல் நகர்ந்து செல்லலாம். ஆனால் உண்மையான தேவையினால் அந்த செய்கை வந்திருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், மனிதராக நீங்கள் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். நீங்கள் தெருவில் யாரோ ஒருவரிடம் கையேந்துவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அந்த நிலைக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு பிச்சைக்காரர் வேறு வழியறியாமல் அப்படி செய்யலாம், ஆனால் ஒரு சந்நியாசி விழிப்புணர்வாக தன்னுடைய வளர்ச்சிக்காக அப்படி செய்கிறார். தன் குப்பையால் தான் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காக செய்கிறார். ஒரு பிச்சைக்காரருக்கு அப்படிப்பட்ட எந்தவொரு உயர்ந்த குறிக்கோளும் கிடையாது, வயிற்றை அவராகவே நிறைக்க முடியாத நிலைக்குப் போய்விட்டதால் கையேந்துகிறார்.
ஊனம் என்பது ஒரு கையையோ, காலையோ தொலைப்பதல்ல. நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து உணரும் விதத்திலேயே ஊனமாக இருக்கமுடியும். சொல்லப்போனால், நம் ஜனத்தொகை முழுவதுமே சிந்திக்கும் விதத்தாலும் வாழ்க்கை குறித்த உணர்வாலும் ஏதோவொரு விதத்தில் ஊனமுற்றுத்தான் இருக்கிறது. அப்படித்தான் பிச்சைக்காரனும் தன்னைத் தானே ஒரு மூலைக்குத் தள்ளிக்கொண்டான், பிழைப்பை சம்பாதிக்க பிச்சை எடுப்பதுதான் மிக சுலபமான வழி என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
உங்களை கீழே உதிர்ப்பது
ஆன்மீகப்பாதையில் இருப்பவர், தன்னைத் தானே உதிர்ப்பதற்காகவே பிச்சை எடுக்கிறார். என் பிழைப்பையும், பணத்தையும், உணவையும், வீட்டையும் நானே சம்பாதிக்கிறேன்என்பது உங்கள் அகங்காரத்தின் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. ஒருநாள் ஒரு விருந்தினர், கைகளில் சில பூக்களை ஏந்தியபடி கௌதம புத்தரைக் காண வந்தார். ஒரு குருவைக் காண வரும்போது, அவருக்கு அர்ப்பணிக்க மலர்களை எடுத்துச்செல்வது நமது கலாச்சாரத்தில் உள்ள வழக்கம்.
அவர் வந்ததும் கௌதம புத்தர் அவரைக் கண்டு, “கீழே போடுஎன்றார். அவர் சுற்றியும் பார்த்துவிட்டு, “எதைக் கீழே போடுவது?” என்று குழம்பிப்போனார். அவர் கொண்டுவந்த மலர்களைக் கீழே போடச் சொல்கிறார் என்று எண்ணி தயங்கினார். ஆனால் இவற்றை உங்களுக்காக கொண்டுவந்தேன்என்றார். அதற்கு கௌதம புத்தர் மீண்டும் கீழே போடுஎன்றார். உடனே அவர் கையிலிருந்த பூக்களை கீழே போட்டார். கௌதமர் அவரை மீண்டும் பார்த்து, “கீழே போடுஎன்றார். அதற்கு அவர், “நான் மலர்களை கீழே போட்டுவிட்டேன். உங்களுக்காக பரிசாகக் கொண்டுவந்தேன். ஆனால் நீங்கள் கீழே போடச் சொன்னீர்கள். போட்டுவிட்டேன். இப்போது கீழே போட வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டார். கௌதமர் சொன்னார், “இல்லை, முதலில் உங்களை கீழே போடுங்கள். மலர்கள் ஒரு பிரச்சனையல்ல. மலர்களை எனக்காக பறித்தீர்கள், அது பரவாயில்லை, அவற்றை நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களை கீழே போடுங்கள்.
பிச்சை எடுப்பது உங்களை நீங்களே கீழே போடுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் பிழைப்பை சம்பாதிக்கும்போது உங்களை நீங்கள் ஒரு குவியலாக சேர்த்துக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் பிழைப்பை சம்பாதிக்கும் திறமை உங்களுக்கு இருப்பதை நன்கு உணர்ந்திருந்தும் பிச்சை எடுப்பதை தேர்ந்தெடுக்கும்போது, இன்னொருவர் முன்னால் கையேந்தி, உங்களை நீங்கள் உதிர்க்கிறீர்கள். இது ஒரு மனிதருக்குள் நிகழும் அபாரமான தன்னிலை மாற்றம். மனிதர்கள் உங்களுக்கு உணவு தரலாம், அல்லது உங்களை வெளியே போகச் சொல்லலாம், அது ஒரு பொருட்டல்ல, ஆனால் விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயமல்ல.
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.06.2017





மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?
’நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின், ’நீட்’ தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
’நீட்’ தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.
’நீட்’ தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம்சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, ’கட் - ஆப்’ விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் உண்டா
தமிழகத்தில், பல மாணவர்கள், ’நீட்’ தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், ’நீட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ”தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், ’நீட்’ தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்,” என்றார்.
கல்வியாளர்கள் கூறுகையில், ’தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, ’நீட்’ தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்’ என்றனர்.
உள் ஒதுக்கீடு அவசியம்
‘நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாகவே உள்ளது. 1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை. ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர். நீட் தேர்வில், கடந்த ஆண்டு 118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது’, என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

பில், ரசீது & ஆவணங்களை பாதுகாக்க .....

பில், ரசீது & ஆவணங்களை பாதுகாக்க .....
பில், ரசீ­துகள், ஆவ­ணங்­களை பாது­காக்கும் வழி­மு­றைகள்!
முத­லீடு, காப்­பீடு உள்­ளிட்ட நிதி விஷ­யங்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை முறை­யாக பரா­ம­ரித்து வரு­வது, நிதி பாது­காப்­பிற்கு முக்­கி­ய­மா­கி­றது.
கட்­ட­ணங்­க­ளையும், தவணைத் தொகை­க­ளையும் ஒழுங்­காக செலுத்தி வந்தால் மட்டும் போதாது. அவை தொடர்­பான ஆவ­ணங்­களையும் சரி­யாக பரா­மரித்து வர வேண்டும். அப்­போது தான், எந்த ஆவணம் எங்­கி­ருக்­கி­றது என்­பதை அறிந்து, தேவை­யான போது உடனே எடுத்து பயன்­ப­டுத்த முடியும். இல்லை எனில், வைத்த இடம் தெரி­யாமல், தேடிக் கொண்­டி­ருக்க வேண்டும். இந்த தேவை­யில்­லாத குழப்­பத்தை தவிர்க்க, நிதி ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி முறை­யாக பரா­ம­ரிக்கும் வழக்­கத்தை பின்­பற்றி வர­வேண்டும். முத­லீடு, காப்­பீடு, மாதாந்­திர ரசீ­துகள் போன்­ற­வற்றை, அவற்­றுக்கு உரிய இடத்தில் வைத்து பாது­காக்க வேண்டும். 
இரண்டு கட்டம்:
முதலில் ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்­து­வதை இரண்டு கட்­ட­மாக செய்­யலாம். முதல் கட்­டத்தில், பில்கள், ரசீ­துகள் போன்­றவை வரும் போது, அவற்றை தற்­கா­லி­க­மாக எடுத்து வைக்க, ஓரி­டத்தை தேர்வு செய்­யுங்கள். பெரும்­பா­லானோர் இவற்றை ஏதேனும் ஒரு இழுப்­ப­றையில் அல்­லது கையில் கிடைக்கும் இடத்தில் வைத்து விடு­கின்­றனர். இதுவே குழப்­பத்­திற்கு கார­ண­மா­கி­றது. இதைத் தவிர்க்க, ஒரே இடத்தில் இவற்றை எடுத்து வைக்க வேண்டும். இதற்­காக இரண்டு பெட்­டி­களை தயார் செய்து கொள்­ளலாம். 
முதல் பெட்­டியில் தின­சரி வீட்டு உப­யோக பில்­களை போட்டு வைக்­கலாம். இரண்­டா­வது பெட்­டியில் மின் கட்­டண ரசீது, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு அறிக்கை போன்­ற­வற்றை போட்டு வைக்­கலாம். இவ்­வாறு செய்த பின், இந்த தற்­கா­லிக இடத்தில் இருந்து நிரந்­தர சேமிப்­பிற்கு இவற்றை மாற்ற வேண்டும். தனித்­தனி கோப்­புகள் அல்­லது போல்­டர்­களை தயார் செய்து, அவற்றின் மீது பெயர் எழுதி, ஒவ்­வொன்­றிலும் உரிய ஆவ­ணங்­களை வைத்து வரலாம்.
வகைப்­ப­டுத்தல்:
ரசீ­துகள் மற்றும் ஆவ­ணங்­களை பல்­வேறு தலைப்­பு­களில் வகைப்­படுத்திக் கொள்­வது நல்­லது. உதா­ர­ண­மாக வரிகள் எனும் தலைப்­பி­லான போல்­டரில், வரு­மான வரி சான்­றி­தழ்கள், படிவம் 16, தொடர்­பு­டைய பில்கள் உள்­ளிட்­ட­வற்றை வைக்­கலாம். இதே போல, காப்­பீடு தலைப்பின் கீழ் ஆயுள் காப்­பீடு, வாகன காப்­பீடு, மருத்­துவ காப்­பீடு பாலிசி தொடர்­பா­ன­வற்றை எடுத்து வைக்­கலாம். மற்ற வகைகள்: முத­லீடு -வைப்பு நிதி, மியூச்­சுவல் பண்ட், பங்­குகள், சிறு சேமிப்பு, பி.எப்., – பி.பி.எப்., கடன்கள்- வீட்­டுக்­கடன், வாக­னக்­கடன், தனி­நபர் கடன், இல்லம்பத்­திரம், வாடகை ஒப்பந்தம். இவை தவிர மருத்­துவ ஆவ­ணங்கள், வீட்டு உப­யோக பொருட்­களுக்­கான கையே­டுகள், பில்கள் போன்ற­வற்­றையும் தனியே வகைப்­ப­டுத்­தலாம்.
ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்­காளர் அடை­யாள அட்டை, ஓட்­டுனர் உரிமம், பிறப்பு சான்­றிதழ், கல்வி சான்­றிதழ் உள்­ளிட்ட முக்­கிய அடை­யாள சான்­றி­தழ்­க­ளையும் தனியே வகைப்­ப­டுத்தி வைக்க வேண்டும். இனி இவற்றை தற்கா­லி­க­மா­னவை, நிரந்­த­ர­மா­னவை என பிரித்து, அதற்­கேற்ப பாது­காத்து வைக்க வேண்டும். வீட்டு பத்­திரம், பான் கார்டு, ஆதார் அட்டை போன்­றவை நிரந்­த­ர­மாக வைத்­தி­ருக்க வேண்­டி­யவை. முத­லீடு சான்­றிதழ், காப்­பீடு பாலிசி போன்­ற­வற்றை அவற்­றுக்கு உரிய காலத்­திற்கு வைத்­தி­ருக்க வேண்டும். பில்கள், ரசீ­துகள் போன்­ற­வற்றை பயன்­பாடு முடிந்தால், அப்­பு­றப்­ப­டுத்தி விடலாம். 
டிஜிட்டல் பாது­காப்பு:
மற்ற முக்­கிய ஆவ­ணங்­களை பெள­தீக வடிவில் அல்­லது ஆன்­லைனில் பாது­காக்­கலாம். வீட்­டி­லேயே பெட்­டக வசதி இருந்தால் அதில் முக்­கிய ஆவ­ணங்­களை பாது­காக்­கலாம். வங்கி லாக்கர் வச­தி­யையும் நாடலாம். டிஜிட்டல்முறையில் உள்ள ஆவ­ணங்­களை டிஜி­லாக்கர்போன்­ற­வற்றில் பாது­காத்து வைக்­கலாம். ஆவ­ணங்­களை ஸ்கேன் செய்து கம்ப்­யூட்­ட­ரிலும் ஒரு பிர­தியை சேமித்து வைக்­கலாம். ஆனால், முறை­யாக பேக்கப்செய்­தி­ருக்க வேண்டும். ஒரு சில வங்­கிகள் -இ–-லாக்கர் வச­தியும் அளிக்­கின்­றன.
ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி பாது­காத்து வைப்­ப­துடன் நின்­று­வி­டாமல், தொடர்ந்து கண்­கா­ணித்து வர வேண்டும். காலாண்­டுக்கு ஒரு­முறை அல்­லது ஆறு மாதங்­களுக்கு ஒரு­முறை, போல்­டர்­களை எடுத்துப் பார்த்து, ஏதேனும் நட­வ­டிக்கை தேவையா என பார்க்க வேண்டும். காப்­பீடு தவணை தேதி, முதிர்வு காலம் போன்ற தக­வல்­களை, தனியே ஒரு நோட்டில் எழுதி வைப்­பது பய­னுள்­ள­தாக இருக்கும். கடன் தவணை, வரி திட்­ட­மிடல், முத­லீடு தக­வல்­க­ளையும் தனியே குறித்து வைக்க வேண்டும். 
நிதி பாது­காப்பும், பரா­ம­ரிப்பும்
* நிதி ஆவ­ணங்­களை ஒரே இடத்தில் வைத்­தி­ருத்தல் நல்­லது
* ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி தனித்­தனி போல்­டர்­களில் வைத்­தி­ருக்க வேண்டும்.
* பாது­காப்­பான இடத்­திற்கு மாற்ற வேண்டும்
* தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வது அவ­சியம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.06.2017

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:
மாணவர்கள் உஷார்
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
வேலை கிடைக்கும்
இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:
தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படு கிறது. இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் படித்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்கள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்படும்; அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, நர்சிங் படிக்க விரும்பும்மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பள்ளி, கல்லுாரி மற்றும் நர்சிங் படிப்பு ஆகியவை, அங்கீகாரம் பெறப்பட்டதா என, சரிபார்த்து சேர வேண்டும். கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற, கல்லுாரி, படிப்பு விபரங்களை, /www.tamilnadunursingcouncil.com என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், நர்சிங் பயிற்சி என்ற பெயரில், சில பெரிய, சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் போன்றவை, 17 வகையான, போலி நர்சிங் படிப்புகளை நடத்து கின்றன.
இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பெறக்கூடிய சான்றிதழ்களை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. அரசுப்பணியில் சேர முடியாது. எந்த மருத்துவமனையிலும், செவிலியர்களாக பணியாற்ற முடியாது.
போலி படிப்பை நடத்தும் நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் ஆகியவை மீது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, போலி படிப்பு நடத்தும் நிறுவனங்கள், தாங்களாகவே போலி படிப்பு நடத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
போலி படிப்புகள் என்ன?
ஆறு மாத படிப்புகள்
டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ஸ் கோர்ஸ்
இரண்டு ஆண்டு படிப்புகள்:
டிப்ளமா இன் நர் சிங்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் நர்சிங்,
வில்லேஜ் ஹெல்த் நர்சிங்,
டிப்ளமா இன் நர்சிங் எய்ட்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நர்சிங்
ஓர் ஆண்டு படிப்புகள்:
சர்டிபிகேட் இன் நர்சிங்,
அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ட்,
டிப்ளமா இன் ஹெல்த் அசிஸ்டென்ட்,
நர்ஸ் டெக்னிசியன் கோர்ஸ்,
ஹெல்த் கெய்டு கோர்ஸ்
சான்றிதழ் படிப்புகள்:
ஹெல்த் அசிஸ்டென்ட்,
ஹாஸ்பிடல் அசிஸ்டென்ட்,
பெட் சைட் அசிஸ்டென்ட்,
பேஷண்ட் கேர்,
ஹோம் ஹெல்த் கேர்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.06.2017



லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு

லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு
புதுடில்லி:'வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது' என்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
திருட்டு, தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து, நகைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க, வாடிக்கையாளர்கள், வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கரில், அவற்றை வைக்கின்றனர். ஆனால், இந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள், திருடப்பட்டால், தீவிபத்து உள்ளிட்ட விபத்துகளால் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது.
இது குறித்து டில்லி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி மற்றும், 19 பொதுத் துறை வங்கிகளிடம் கேட்ட விபரங்களுக்கு, அவை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கி லாக்கரை பயன்படுத்துவது தொடர்பாக, நுகர்வோர் மற்றும் வங்கிக்கு இடையே ஏற்படுத்தப் படும் ஒப்பந்தம், குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தமே. அதனால், அதில் வைக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பு, வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நுகர்வோரையே சாரும்.
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு எந்தவித சேதம் ஏற்பட்டாலும், காணாமல் போனால், திருடப்பட்டால்,அதற்கு வங்கி பொறுப்பாகாது. அதனால், இழப்பீடு தர முடியாது. இவ்வாறு வங்கிகள் பதில் அளித்துள்ளன.
அதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் இடையேயான போட்டி விவகாரத்தை விசாரிக்கும், சி.சி.ஐ., எனப்படும் 'இந்திய காம்ப்படிஷன் கமிஷனில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். 'அனைத்து வங்கிகளும் திட்டமிட்டு, இதுபோன்ற பிரிவுகளை ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளன.
லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பாகாதபோது, காப்பீடு செய்துவிட்டு, வீட்டிலேயே வைத்திருக்கலாமே. லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு வங்கிகளை பொறுப்பேற்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்' என, புகாரில் அவர் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -25.06.2017