disalbe Right click

Monday, July 24, 2017

வருமான வரியின் வரலாறு என்ன?

வருமான வரியின் வரலாறு என்ன
இன்கம் டேக்ஸ் பற்றி A - Z தகவல்...
வருமானம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பான நாள்தான். ஆனால், வருமான வரித் தாக்கல் செய்யும் நாளில் எதற்கு வரி செலுத்த வேண்டும் என்று நிறையவே யோசிப்போம். அரசர்கள் காலத்தில் இருந்து நில வரி போன்று பல‌ வரிகள் இருந்தாலும் வருமான வரி என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 150 வருடங்களாகத்தான் வருமான வரி (Income tax) வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது, இதன் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்ள வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

"1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வருமானத்துக்கு வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தியவர் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஜோம்ஸ் வில்சன். ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே இன்காம் டேக்ஸ் வசூலிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இன்காம் டேக்ஸ் வசூலிக்கக்கூடாது எனப் போராடி இருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே வருமானவரியாக 30 லட்ச ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. 1970-ம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் Income tax வசூலிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஆண்டில் (2017-2018) ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக‌ வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் வருமானவரி இலக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருமானவரிதான். இந்த வரியை மிகப்பெரிய நிலையான திட்டங்கள் நிறைவேற்றப்பயன்படுத்துகிறது அரசு. குறிப்பாக, ஆற்றுப்பாலங்கள், சாலைகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் வருமானவரி அதிகமாகவே உள்ளது. பல நாடுகளில் 30 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதைக் கணக்கில்கொண்டு, நம் நாட்டில் ஐந்து முதல் 30 சதவிகிதம் வரை வருமானவரி வசூலிக்கப்படுகிறது. அதாவது, வருமானத்துக்கு அதிகபட்சமாக 30% மட்டுமே வரி. சீனாவில் 45 சதவிகிதம், அமெரிக்காவில் 39.6 சதவிகிதம் என வசூலிக்கப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் வருமான வரியாக 90 சதவீதத்துக்கு அதிகமாக வசூலிக்கவும் செய்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தற்போது இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு Income tax செலுத்த தேவையில்லை. 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அரசு திட்டங்களிலும், அரசு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டால் அதற்கு குறிப்பிட்ட தொகைக்கு வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்திற்கும், அறக்கட்டளை போன்றவற்றுக்கும் வரி செலுத்தத் தேவையில்லை என்பது நடைமுறையில் இருக்கிறது.
தனி நபருக்குத்தான் வருமானவரி. குடும்பத்தில் ஒவ்வொருவரின் வருமானமும் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள்தான் இருக்கிறது என்றால் வருமான வரி செலுத்துவதில்லை. அதாவது, குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் வருமானம் பத்து லட்ச ரூபாய் என்றால் குடும்ப வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அதிக வருமானவரி வசூலிப்பதில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் மாநிலங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Income tax செலுத்த உதவியாக பான் கார்டு வழங்கும் முறை 1994-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 வருடங்களில் சுமார் 30 கோடி பேர் பான் கார்டு வாங்கி இருக்கிறார்கள். பான் இல்லாமல் எந்த விதமான பணப்பரிமாற்றமும் செய்ய முடியாது என மாறி இருக்கிறது வருமானவரித் துறை. இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும். இதன்மூலம் நாடும் வளம் பெறும்" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி : விகடன் செய்திகள் -24.07.2017

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!
தமிழகத்தில்பத்திரப்பதிவு முறையில் அதிரடி மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படிஎந்த ஊர் நிலத்தையும்எந்த ஊரின் சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். இதனால்சொத்து பதிவுக்காக பொது மக்கள் அங்கும்இங்குமாக அலைய வேண்டியதில்லைகெடுபிடிகளும் இனி இருக்காது. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும்ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால்இது சாத்தியமாகிறது.
தமிழகத்தில்சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுஎந்தெந்த கிராமங்களில் உள்ளோர்சொத்து பரிமாற்றங்களைஎங்கு பதிவு செய்யவேண்டும் எனதெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதன்படிஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இந்திய பதிவு சட்டம் - 1908ல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியின் படிசென்னைமும்பை,கோல்கட்டாடில்லி ஆகியநான்கு பெருநகரங்களிலும்தலா ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்தில்எந்த ஊர் நிலத்தையும்எங்கும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன் படிதமிழகத்தில்வட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள, 'இணை சார் - பதிவாளர்அலுவலகத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்எந்த ஊரிலும் உள்ள எந்த சொத்தையும்இங்கு பதிவு செய்யலாம்.
ஆனால்சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு களை துல்லியமாக சரி பார்ப்பதில் ஏற்பட்ட சிக் கல் மற்றும் அதிகாரிகள் துணையுடன்பத்திரப் பதிவில் நடந்ததாக கூறப்பட்ட முறைகேடுகளால்அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிஇந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
இந்திய பதிவுச்சட்டம் - 1908ல்தமிழக அரசு, 1997 மார்ச், 29ல் மேற்கொண்ட திருத்தத்தின் படிசொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார் - பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமேபத்திரப் பதிவு செய்ய முடியும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனால்சொத்து உள்ள பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமேபத்திரத்தை பதிவு செய்ய முடியும்.
வெளியூர் பத்திரங்களை பதிய முடியாத நிலை ஏற்பட்டதால்சொத்து விற்பனையில்சம்பந்தப்பட்டோர்அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது கட்டாயமானது. பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையில்,இந்த நடைமுறையை மாற்ற பதிவுத்துறை முடிவெடுத்துள்ளது.
இது குறித்துபதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவு பணிகளை, 'டிஜிட்டல்மயமாக்கும் பணிகள்இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதன்படி, 578 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் உள்ள அனைத்து ஆவணங்களும்பதிவேடுகளும், 'ஆன்லைன்முறைக்கு மாற்றப்படுகின்றன.
சரி பார்க்கலாம்
தற்போதுஎந்த அலுவலகத்தின் பதிவேடுகளையும்எந்த பகுதியில் இருந்தும் சரி பார்க்க முடியும். இதனால்எந்த ஊர் இடத்தையும்எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும்பதிவு செய்வது சாத்தியம். எனவேஇந்த மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாகஆன்லைன் வசதி உள்ள, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில்இத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாகஅனைத்து அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு முறையில் செய்யப்பட உள்ள அதிரடி மாற்றத்தால்பொதுமக்களின் அலைச்சல்அதிகாரிகளின் கெடுபிடிகள் களையப்படும். அந்தந்த ஊர்களில்இருந்த இடங்களில் இருந்தே,பத்திர பதிவு செய்யலாம்.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 23.07.2017

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை
புதுடில்லி: கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசுபாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில்பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த ஆக குறைக்கப்பட உள்ளது. 
அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது.
ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை.
திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோஅவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.07.2017

Friday, July 21, 2017

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்
புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர்.

சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சசிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டன. சசிக்கு வழங்கப்பட்ட டி.வி., சிறப்பு சமையலறை இருந்தது உண்மைதான், சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தது உண்மை தான். 7, மற்றும் 8 வளாகத்தில் கண்காணிப்பு காமிரா செயல்படவில்லை. இவ்வாறு குழு முன்பு ஒத்து கொண்டனர்.

இதனை குழு தலைவர் ஆர். அசோக் மீடியாக்களிடம் தெரிவித்தார். ஆக ரூபா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை தான் என நிரூபணம் ஆகியுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.07.2017 

Tuesday, July 18, 2017

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர்.
பல்வேறு விதிகள்
அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன.
குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.
அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.07.2017


Monday, July 17, 2017

அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி

அரசு  சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி
அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிப்பு: கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழியில்சட்டப்படிப்புகள் தொடங்கப்பட வுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் சட்டம் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் (2017-2018) செங்கல்பட்டு, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய அரசு சட்டக்கல்லூரிகளில் தமிழ் வழியில் சட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன. இதன்மூலம் மாணவர் கள் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்களுக்கும் இது உதவி யாக இருக்கும். மேலும் திருச்சி, கோவை, நெல்லை போன்ற இடங்களில் உள்ள சட்டக் கல்லூரி களிலும், 3 மற்றும் 5 வருட சட்டப்படிப்பு தமிழ்வழியில் தொடங்கப்படவுள்ளது. அந்த கல்லூரிகளில் தலா 60 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்து வருட சட்டப்படிப்புக்கு மட்டும் தமிழ் வழியில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு சட்டக் கல்லூரி முதல்வர் என்.தேவநாதன், ‘தி இந்துவிடம் கூறியதாவது:
240 இடங்கள் கொண்ட இந்த கல்லூரியில், சட்டப் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப் படிப்பு தொடங்கப்படுகிறது. வழக்கறிஞர் தொழிலின் மீதான கவர்ச்சி மாணவர்களிடையே குறையாமல் உள்ளது. சட்டப் படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னை, மதுரை சட்டக் கல்லூரிகளில் மட்டும் தமிழ்வழியில் சட்டப்படிப்பு இருந்தது.
தற்போது செங்கல்பட்டு உள்ளிட்ட பிற சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி வளர்ச்சிக் காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கல்லூரியில் முதன்முறையாக கணினி குற்றங்கள் தொடர்பாக முதுகலைபட்டப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெ. ஜேம்ஸ்குமார்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.07.2017



சிறைக்குள் ஏமாந்த சின்னம்மா!

இந்த "டப்பா" ரூமுக்குப் போயா ரூ. 2 கோடி செலவழிச்சாங்க சசிகலா.. ஏமாந்துட்டீங்களேம்மா!
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகளுக்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகைக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் மதிப்பில்லாதது போல் தெரிகிறது.
சிறப்பு வசதிகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு அடைக்கப்பட்ட நாள் முதலே விதிமுறைகளை தனக்கேற்றார்போல் வளைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
பணத்தை தண்ணீராக...
சிறப்பு வசதிகள் பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது தெரியவந்தது. அவருக்கென்று தனி சமையலறை இருப்பதும், அதில் தனக்கு தேவையானதை தானே சமைத்து சாப்பிடுவதும் தெரியவந்தது.
பணத்தை தண்ணீராக... சசிகலா சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்தது மட்டும் அல்லாமல் அவ்வப்போது அவர் விதிமுறைகளை மீற நினைக்கும் போதெல்லாம் பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருக்கிறார். மேலும் ஓரிரு முறை சிறையை விட்டு சசிகலா வெளியே சென்றும் வந்துள்ளதாக தெரிகிறது.
சசிகலாவுக்கு 5 அறைகள் இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் இருப்பது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது. மேலும் சிறையிலேயே சசிகலா குக்கர் வைத்து சமைக்கவும் சதி செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
Sasikala prison rooms are closed with a cloth
ஒர்த் இல்லையே நாளிதழ், ஊடகங்களில் சிறப்பு வசதிகள், சிறப்பு வசதிகள் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்த போது ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ அல்லது 3 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ இருக்கும் என்று பார்த்தால் போயஸ் கார்டனில் உள்ள காவலர்கள் தங்கியுள்ள அறையே தேவலை போல. அவ்வளவு மோசமாக இருக்கிறதே. சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வழியாக போவோர் வருவோர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக துணியால் ஸ்கிரீன் போல் போடப்பட்டுள்ளது. கைதியை கைதியாக பாவிக்க வேண்டும்தான். ஆனால் லஞ்சம் கொடுத்தாலும் அதற்கு ஒர்த் இருக்க வேண்டுமே. ஏமாந்துட்டீங்களே சின்னம்மா... ஏமாந்துட்டீங்களே!!
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் - 17.07.2017


Sunday, July 16, 2017

நேரடியாக ஹைகோர்ட்டில் கிரிமினல் புகாரை பதிவு செய்யலாம்!

நேரடியாக ஹைகோர்ட்டில் கிரிமினல் புகாரை பதிவு செய்யலாம்!
நேரடியாக வழக்குப்பதிவு செய்ய எங்களை அணுகாதீர்கள்! என்று முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதில் கிரிமினல் புகாரை பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தை அணுகலாம்! என்று தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தினமலர் நாளிதழில் 16.07.2017 அன்று வந்த செய்தி தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பழைய உத்தரவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி  
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.07.2017
***************************************************************************
28.09.2016 அன்று ஹைகோர்ட் டைரக்‌ஷன் பற்றி தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி
சென்னை: 'ஒரு புகாரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகுவது ஏற்புடையதல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களை, பதிவு செய்ய உத்தரவிடும்படி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கறிஞர் ஒருவர், ''உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில், சட்ட அம்சங்களை வரையறுத்துள்ளது;
அதன்படி, போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை அணுகிய பின் தான், உயர் நீதிமன்றத்தை அணுக முடியும்,'' என்றார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஒரு குற்றம் தொடர்பாக, யார் புகார் அளித்தாலும், அதை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் பெற வேண்டும். ஆரம்ப விசாரணை நடத்த விரும்பினால், சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பணி பதிவேட்டின் நகல் வழங்க வேண்டும். 
புதுச்சேரி என்றால், அதற்கென தனி ரசீது வழங்க வேண்டும்
.ஆரம்ப விசாரணைக்கு பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையில்லை என்றால், புகாரை முடித்து வைத்ததற்கான அறிக்கை நகலை வழங்க வேண்டும்.
அந்த அறிக்கையை பெற்ற பின், புகார்தாரர் விரும்பினால், மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்யலாம்; 
அந்த மனு மீது, போலீசார் விசாரணை நடத்தும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.
புகாரை பெற, போலீஸ் நிலைய அதிகாரி மறுத்தால், பதிவு தபாலில், எஸ்.பி., அல்லது துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 
அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.
புகாரை பெற்ற பின், 15 நாட்களுக்குள், மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்;
 அதன் நகல், புகார் மனுவின் நகலை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் விசாரணைக்காக, மாஜிஸ்திரேட் அனுப்ப வேண்டும்.
உத்தரவுக்கு பின், ஒரு வாரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால், அந்த போலீஸ் அதிகாரி மீது, மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்கலாம்; 
உயர் நீதிமன்றத்தை, புகார்தாரர் அணுகலாம்.
ஆரம்பகட்ட விசாரணையை, ஆறு வாரங்களில் போலீசார் முடிக்கவில்லை என்றாலும், உயர் நீதிமன்றத்தை புகார்தாரர் அணுகலாம்.
 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தவறினால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; 
அது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.09.2016

Saturday, July 15, 2017

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன?

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன? வீடியோ வெளியானதால் பரபரப்பு
பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப் பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற முறைகேடு களை கண்டுபிடித்தார்.
இது தொடர்பாக, கைதிகளிடம் விசாரித்தார். கஞ்சா, சூதாட்ட அட்டைகள் எப்படி கிடைத்தன என்று கைதிகளிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கைதிக ளிடம் ரூபா விசாரிப்பது, சிறை கைதிகள் சூதாடுவது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று மீடியாக்களில் வெளியானது. இதனால், கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், டி.ஐ.ஜி., ரூபா புகார் வெளியாகி மூன்று நாட்களுக்கு பின்னும், புகார் தொடர் பான பரபரப்பு குறையாமல் இருந்ததால், சிறை துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் பீதி அடைந்துள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறைக்கு செல்வர் என்பதை அறிந்த, சத்யநாராயண ராவ், நேற்று காலையில் திடீரென, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக, சிறையில் இருந்தார். சில ஆவணங்களை சரி செய்ததாக வும், நேற்று முன்தினம் இடிக்கப்பட்ட, சசிகலாவின் சமையல் அறை பகுதியை ஆய்வு செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வளவு நாட்களாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சாதாரண உடை தான் அணிந்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சீருடைக்கு மாறும்படி, ஊழியர்கள் மூலம், டி.ஜி.பி., கூறியதாகவும், அதன் பின், சிறை சீருடையான, வெள்ளை சேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. டி.ஜி.பி., ராவ், சிறைக்கு வந்து, சில ஆவணங் களை சரிப்படுத்திய தகவலை அறிந்த டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலை 4:00 மணியளவில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பாபு சங்கரிடம் சில நிமிடங்கள் பேசினார். பின், சிறைக்குள் சென்றார். சிறையில் தான் ஏற்கனவே பார்த்த ஆவணங்கள் சரியாகவுள்ளதா அல்லது மாற்ற பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., ஒருவர் பின் ஒருவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசியை சந்திக்க சென்றவர்களுக்கும் சிறையில் ராஜமரியாதை கிடைத்ததா?
பரப்பன அக்ரஹாரா சிறையில் இம்மாதம், 10ம் தேதி ரூபா ஆய்வு செய்தபோது, அவர் எடுத்த வீடியோ காட்சிகளை சிறை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார்; அந்த காட்சிகளை தனக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அனுப்பிய வீடியோ காட்சிகளை பார்த்தபோது, சசிகலா சம்பந்தமானசில முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக சத்யநாராயண ராவ், உள்துறை முதன்மை செயலர், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஊழல் ஒழிப்பு படை ஆகியோருக்கு, நேற்று காலை, இரண்டாவது அறிக்கையை, ரூபா சமர்ப்பித்துள் ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சசிகலாவை சந்திக்க வருபவர்கள், நேரடியாக, அவர் அடைக்கப்பட்டுள்ள இடத்துக்கே அழைத்து செல்லப் படுகின்றனர். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் அமருவதற்கு, நான்கு நாற்காலிகள், ஒரு மேஜை போடப்பட்டிருந்தன. இந்த அறை முன் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுப்பது தொடர்பாக சிறை ஊழியர் ஒருவர், எனக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியிருந்தார். எனக்கு எதிராக கைதிகள் போராட்டம் நடத்திய காட்சிகள், எப்படி வெளியானது; அதற்கு துணை புரிந்தவர்கள் யார்; அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிறை ஊழியர்களுக்கு தெரிந்தே, கைதிகள், சூதாட்டம் ஆடுகின்றனர்.இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறைக்கு வெளியே சசி
ரூபாவுக்கு சிறை ஊழியர் எழுதிய கடிதத்தில், 'சசிகலா சிறைத்துறை உயர் அதிகாரி காரில், சிறை யில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு மூன்று முறைக்கும் மேலாக சென்று வந்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் ரகளை கைதிகள் மீது தடியடி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலையில் ஆய்வை முடித்து திரும்பிய பின், இரவு 7:30 மணியளவில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி கைதிகளை சிறை அதிகாரி கிருஷ்ணகுமார் துாண்டியதாகவும் தகவல் அறிந்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் சென்று கைதிகள் மீது தடியடி நடத்தி கலைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா அவசரமாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ரூபாவுக்கு ஆதரவாக சில கைதிகளும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக சில கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர்களை
சமாதானப்படுத்திய போரலிங்கையா நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்தால் சிறை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறை கேடு குறித்து டி.ஐ.ஜி., ரூபா, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு சமர்ப்பித்த அறிக்கை குறித்து மீடியாக்களில் பேசியதற்காக ரூபா வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சத்யநாராயண ராவுக்கும் விளக்கம் கேட்டு கர்நாடக உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரபட்சமின்றி அரசு செயல் படுகிறது என காண்பித்து கொள்வதற்காக, இது போன்று நடப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதி மீது தாக்குதல்?
சசிகலாவுக்கு சிறையில், சிறப்பு வசதி செய்து கொடுத்திருந்ததை அம்பலப்படுத்திய, டி.ஐ.ஜி., ரூபா, நேற்று மாலை, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தபோது, சிறை வளாகத்தில் இருந்த ராமமூர்த்தி என்ற கைதியின் மனைவி அனிதா, ரூபாவிடம் ஓடி வந்து, ''சிறையிலுள்ள என் கணவர், சிறை முறைகேடுகள் குறித்து உங்களுக்கு தகவல் அளித்து வந்ததாக கூறி, சிறை அதிகாரி கிருஷ்ணகுமார், தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்கியுள்ளார்,'' என்றார்.
இதற்கு ரூபா, ''நான் பார்த்துக் கொள்கிறேன்,'' எனக் கூறி, சிறைக்குள் சென்றார்.
இது தொடர்பாக, சிறைக்குள், கிருஷ்ணகுமாருக் கும், ரூபாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி பகுதி போலீசாரை அழைத்து, தன் பாதுகாப்புக்கு வரும்படி, ரூபா அழைத்தார். இதன் பின், அங்கிருந்து, ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு போலீசார் வந்தனர். வெளியே வந்த ரூபா, நேராக, பரப்பன அக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷ னுக்கு சென்றார். அங்கு, சிறை அதிகாரி கிருஷ்ண குமார் மீது, அவர் புகார் அளித்திருக்கலாம் என தெரிகிறது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடந்துள்ள முறைகேடு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் அது பற்றியே, கருத்தை தெரிவித்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
-சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்.,-

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.07.2017