disalbe Right click

Wednesday, August 2, 2017

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?
பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு
பரம்பரை மூலமாக கிடைக்கின்ற  சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால், பாக பிரிவினை என்று செய்யும்போது, பெண்களுக்கு எந்தெந்த சூழ்நிலைகளில், நேரிடையாக சொத்து கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியாது.
அந்தக் காலத்தில், இந்து  வாரிசு சட்டம்-1956  என்கிற சட்டம் ஒன்று நமது நாட்டில் இருந்தது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில், பெண்களுக்குள்ள உரிமை என்னவென்றால், பிறந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம், படித்துக் கொள்ளலாம், திருமணம் செய்து கொள்ளலாம்  சீர்வரிசை  செய்து அந்தப் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பர்; அதோடு சரி. வேறு எந்த உரிமையும் கிடையாது. 
இந்த சட்டத்தை , தமிழ்நாடு மாநில அரசு, ”இந்து வாரிசுச் சட்டம் - 1990” என்று மாற்றி சில  திருத்தங்களைக் கொண்டு வந்தது. பரம்பரையாக கிடைக்கின்ற பூர்வீகச் சொத்தில் கனவன் அவனுக்கு பின் அவன் மனைவி, மகன், மகள் என, அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற, அது  கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் முதல் அமுலுக்கு வந்தது.மத்திய அரசும் 2005ம் ஆண்டு திருத்தம் செய்து, இந்து  வாரிசுச் சட்டத்தில், இதே சம உரிமையைக் கொண்டு வந்தது.
ஆனால், இந்து வாரிசுச் சட்டத்தின் திருத்தப்படி 25.03.1989க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பூர்வீகச் சொத்தில் உரிமை கிடையாது. மேலும், 25.03.1989க்கு பிறகு ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், அவர், 25.03.1989க்கு முன்பு பங்கு பாகம் பிரிக்கப்பட்ட பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.  
வாரிசு இல்லாத ஒரு பெண்ணுடைய பரம்பரை சொத்து என்ன ஆகும்?
பொதுவாக ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் மட்டும் இருந்தால், அந்த சொத்தானது எந்தப் பிரச்னையும் இன்றி, அடுத்த தலைமுறைக்கு சிரமம் என்பதே இல்லாமல் மாறிவிடும். ஆனால், ஆண் வாரிசு யாரும் இல்லாமல், பெண் மட்டுமே, அந்த குடும்பத்தில் வாரிசாக இருந்தால், அந்த சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். அது என்னவென்று பார்ப்போம்.
குடும்பத் தலைவரான ஒரு தந்தையிடம் இருந்து, மகள் பெயருக்கு ஒரு பரம்பரை சொத்து மாறுகிறது என்றால், அந்த பரம்பரைச் சொத்தினை பெற்ற மகளுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த சொத்து அக்குழந்தைகளின் பெயருக்கு, அந்த மகளின் விருப்பத்தின் அடிப்படையில் சென்றுவிடும். (குழந்தைகளுக்கு கண்டிப்பாக பங்கு தரவேண்டும் என்பது இல்லை) 
ஆனால், இதுபோல பரம்பரைச் சொத்துக்கு வாரிசாகும் ஒரு பெண் திருமணம் செய்யாமல்  தனி நபராகவே வாழ்ந்து வருகிறார் என்றால், அவருக்கு பின்னர் அந்த சொத்தானது யார் பெயருக்கு சேரும் என்பதில் சில சிக்கல் ஏற்படும். சொத்தை எழுதிக் கொடுத்த பெற்றோர் உயிரோடு இருந்தால், மீண்டும் அவர்களிடமே போய்ச் சேர்ந்துவிடும். அவர்களும் இறந்திருந்தால் அந்த பெண்ணுடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு சென்றடையும்.
யாரும் தலையிட முடியாது
திருமணமும்  செய்யாமல்,  வாரிசும்  இல்லாமல்  பூர்வீகச்  சொத்தை  பெற்ற பெண் ஒருவர்,  தான்  இறப்பதற்கு  முன்னால்,  தனக்கு  விருப்பமான நபர்கள் யாருக்காவது  அந்த  சொத்தை   முழுமனதுடன்    எழுதி   வைத்திருந்தால், அதன்படியே அந்த சொத்து அவர்களுக்குப் போய் சேரும். 
அதில் பெற்றோரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் தலையிட முடியாது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14
ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியாது. 
ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!
பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், பல ஆண்டு களாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பாடங்களே நடத்தி வந்தன.
உயர் கல்விக்கான, மத்திய அரசின் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்கள் அதிகளவில் இடம் பெற்றன. அதனால், தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, ’பிளஸ் 1 மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும்என, தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதில், ’ஏற்கனவே, 10ம் வகுப்பு; பிளஸ் 2வில், பொதுத் தேர்வு உள்ளது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு வந்தால், மாணவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும்என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இன்னும் சரியான முடிவு எடுக்காமல் திணறுகிறது.
அதனால், வழக்கு விசாரணை, ஆக., 7க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, வழக்கின் முடிவு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பில், மீண்டும் பல பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் பாடம் நடத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது.
தேர்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால், பிளஸ் 1 தேர்வு குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ’பள்ளிக்கல்வி அதிகாரிகள், உரிய முறையில் விளக்கம் கொடுத்து, சட்ட ரீதியான பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ’நீட்தேர்வு பிரச்னை போல், கடைசி வரை மாணவர்களை காத்திருக்க வைப்பது, இறுதியில் சிக்கலாகி விடும்என்றனர்.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 02.08.2017

Tuesday, August 1, 2017

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்
வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்றுக் கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவதுபோலவே இந்தத் தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடம்.
இந்தத் தளத்தில் வரலாற்றுக் கால வரைபடங்களைத் தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்துத் தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும்போதே அந்தக் கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் எனப் பல விதமான வரைபடங்களைப் பார்க்க முடிகிறது.
வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தத் தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.
இணைய முகவரி: >http://www.oldmapsonline.org/
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 26.05.2017

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!

துயரத்தை உருவாக்குவதே நீங்கள்தான்!
கேள்வி: சத்குரு, நிறைவேறாத  ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?
சத்குரு: ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன் மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள்தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.
துயரங்கள் நீங்களே உருவாக்கிக்கொள்வது. 
அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய்விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடிகூட அதை விட்டு விலகி வரமுடியவில்லை. அதுதான் பிரச்சினை.
'துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?' என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம்தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 'ஸ்விட்ச்' தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத்தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சில நேரம் வேறேதோ ஒன்றைத்தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
இது நீங்கள் ஒரு 'காரை' வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழிதெரியாமல் இருப்பதுபோல. மனம்போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித் தானே நடக்கும்?
இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காரை ஓட்ட வேண்டும் என்றால் அதைப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம்.
இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான்.
வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள்போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். 'இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது' இப்படிக்கூட நினைக்கிறீர்கள், இல்லையா?
ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக்கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா?
மண்ணில் தேவையான உரங்களைக்கலந்து, அதைச்சரியான பதத்தில் தயார்செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அதுவளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத்தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும்.
நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறதுஎன்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர்தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்னசெய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.
ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது 'வேண்டும், வேண்டும்' என்று ஆசைகொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.
ஒரு மலரை உங்களால் மலரச் செய்ய முடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும்.
வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்னவேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால்போதும், தேவையானது நடந்துவிடும். உங்களுக்கு சாதம் சமைக்கவேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால்போதும், சமைப்பதுதானாக நடந்துவிடும்.
முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளேவிட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டபிறகு, அங்கே நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்கூட இதேபோன்றுதான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அதுநடப்பதில்லை.
ஒரு சிறுகடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அதுதாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டு விட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடித்துப்போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை.
உங்களுக்கு எதுவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும். இல்லையெனில் அது நடக்காது.
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும்.
அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிடவேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதைவிட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். 'எப்படியேனும் நான் என்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும்' என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களைவிட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களைவிட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள்.
அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்க முடியாதவற்றை வகுக்க நினைப்பதால்தான். என்னவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அதுபோதும், வேண்டியது நடக்கும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.08.2017


சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது?

 
சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது?
சசிகலாவின் சீராய்வு மனு தண்டனையை தளர்த்துமா? 
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். 
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்வராய் ஆகியோர் ஜெயலலிதாவை இறந்துவிட்ட காரணத்தினால் வழக்கிலிருந்து விடுவித்தும் சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கும் செப்டம்பர் 2014ல் வழங்கப்பட்ட தனி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டனர். 
இதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். 
அதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா அரசு ஊழியராக இருந்ததை வைத்தே வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் இறந்து விட்ட காரணத்தால் வழக்கும் முடிவுக்கு வரும் என்றும் சசிகலா தரப்பில் வாதங்கள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன. 
வலுவில்லை 
இந்த சீராய்வு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் அப்பீல் அமைப்பு முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 99 சதவீதம் இறுதியானது. இந்த வழக்கை பொருத்த வரை மனுதாரர் தரப்பில் வலுவான காரணங்கள் இல்லை. தள்ளுபடி தான் செய்யப்படும் 
சீராய்வு மனுக்களை பொதுவாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காது, அப்படியே எடுத்தாலும் அது தள்ளுபடியே செய்யப்படும். மேலும் வழக்கறிஞரின் பங்கு என்பதே மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் எந்த வாதமும் இருக்காது. ஏற்கனவே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்படும் முக்கிய காரணமே முக்கிய குற்றவாளி அரசுப் பணியாளர் என்றும் அவர் இறந்து விட்டதால் மற்றவர்களுக்கு தண்டனை பொருந்தாது என்று கூறுகிறார்கள். 
ஆனால் ஊழல் புகாரில் அரசுப் பணியாளருக்கு மட்டுமே தண்டனை என்றாலும் இதர குற்றச்சாட்டுகளில் சசிகலா உள்ளிட்ட இதர குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பை உறுதி செய்துள்ளதே சான்றாக உள்ளது. 
குற்றவாளியின் முயற்சி 
எனினும் குற்றவாளி என்ற முறையில் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உறுதியான காரணமும் இல்லாததால் சீராய்வு மனு தள்ளுபடி செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 
குற்றவாளி சசிகலா சட்டத்தை வளைக்க எல்லாமே செய்கிறார் என்பது அண்மையில் பெங்களூரு சிறைச்சாலையில் வெளியான காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. இந்நிலையில் சசிகலாவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்த நிலையில் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
Posted By: 
நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 01.08.2017  

Monday, July 31, 2017

ரேசன் கார்டு - புதிய விதிகள்

ரேசன் கார்டு - புதிய விதிகள்
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது!
சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்து விட்டதால் இனி ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதன்படி யார் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்களும், ரேஷன் கார்டுகளு்ம கிடையாது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகள் விவரம்: 
⧭ வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.
⧭ தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.
⧭ மத்திய/ மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/ மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
⧭ நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் 
(ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)
⧭ ஏசி, பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும் பொருள்கள் வழங்கப்படமாட்டாது
⧭ 5 ஏக்கருக்கு மேல் நில வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது.
இருப்பினும் இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தவே செய்யும் என்றே கூறப்படுகிறது.
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » 31.07.2017

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது
சென்னை: மருத்துவ படிப்பில், மாநில பாட திட்ட மாணவர்களுக்காக, 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை, 31) உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவு
நீட் தேர்வை தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில் மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய தர வரிசை பட்டியல் தயார் செய்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடத்த கூடாது உள் ஒதுக்கீடு இன்றி ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டார்.
அரசு மேல் முறையீடு
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் உத்தரவு பிறப்பித்தது. காலம் தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கையை உடனே நடத்தும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நன்றி : தினமலர் - கல்வி மலர் - 31.07.2017

Saturday, July 29, 2017

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'
புதுடில்லி:''வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது; வரதட்சணை வழக்கில், விசாரணை நடத்தாமல், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
வரதட்சணை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள்,ஆதர்ஷ் குமார் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு .முன் நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. 
வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டால், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது
குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்த பின்தான், கைது நடவடிக்கையைபோலீசார் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக, மாவட்டந்தோறும், ஒன்று அல்லது இரண்டு குடும்பநல கமிட்டிகளை,  “மாவட்ட சட்ட சேவை ஆணையம்”  அமைக்க வேண்டும்.
வரதட்சணை தொடர்பாக புகார்களை பெறும் போலீசார், துணை கலெக்டர்கள்  அதை, மாவட்ட குடும்ப நல கமிட்டியிடம், அனுப்ப வேண்டும்.
இந்த புகார்களை, மாவட்ட குடும்பநல கமிட்டி விசாரித்து, ஒரு மாதத்தில், புகாரை அனுப்பிய அதிகாரியிடம்அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பநல கமிட்டியில், மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதை, ஆண்டுக்கு ஒரு முறை, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டியில், சட்ட ஆலோசகர்கள், சமூக சேவகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவியரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
ஆனால், வழக்கில் சாட்சிகளாக,கமிட்டி உறுப்பினர்களை சேர்க்க கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.07.2017