disalbe Right click

Thursday, August 10, 2017

மாநில ஆளுநரைப் பற்றி தெரிந்து கொள்வோம்

மாநில ஆளுநரைப் பற்றி தெரிந்து கொள்வோம்
  குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,
⧭  மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.
⧭ மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி   அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.
 பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
⧭ மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.
⧭ குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.
 குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.
⧭  ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.
 ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.
⧭ ஆளுநரை ஒரு மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.
 ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.
 ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.
 ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.
⧭ பாராளுமன்றம் அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும்.
  ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.
⧭  அரசியலமைப்பு மாநில ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
⧭  அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.
 மேலும் அவரது பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.
⧭ அது போலவே அவரது பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.
⧭  உரிமையியல் நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.
ஆளுநரின் அதிகாரங்கள் - பணிகள்:
* ஆட்சித்துறை அதிகாரங்கள் - Executive Powers
⧭ மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரின் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவரே நேரிடையாகவோ, தமக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும்.

⧭  மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.
⧭ பொதுப்பட்டியலில் உள்ள விசயங்களைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்தின்படி அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின்படி ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டதே மாநில நிர்வாகத்தின் அதிகாரம் எனப்படும்.
⧭ மாநிலத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.
⧭ ஜார்க்கண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவதும் ஆளுநரின் கடமையாகும்.
 மாநிலத்தின் முதல்வரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார்.
⧭ அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை பதவியில் நீடிப்பார்கள்.
⧭ ஆனால் அமைச்சரவை மாநில சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளது.
⧭ அதாவது சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவரே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப் பொருள்படும்.
⧭ மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்ர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.
⧭ மாநில அட்வகேட் ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சார்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகி்யோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.
⧭ மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை, இல்க்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளின் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.
⧭ ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கு சட்டப்பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும், அதற்குப் பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.
 ஆளுநரின் சட்டத்துறை அதிகாரங்கள்:
⧭ மாநிலச் சட்டப்பேரவையின் ஒரு ்ங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டப்பேரவையின் இரு அவைகளையும்(பேரவை,மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும், கூட்டத் தொடரை முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.

⧭ அவர் நினைத்தால் பேரவையைக் கலைத்து விட முடியும். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுவதுடன், சட்டப்பபேரவைக்கு செய்திகளையும் அனுப்ப ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
⧭ பொதுத் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூடட்த்தில் ஆளுநர் உரையாற்றுகிறார்.
⧭ அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரே உரையாற்றுவார்.
⧭ தேவைப்படும்போது இரு அவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என ஷரத்து 200 கூறுகிறது.
 அவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
 அம்மசோதாவுக்கு ஆளுநர் தமது ஒப்புதலை அளிக்கலாம்.
⧭ ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம்.
 குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம்.
⧭ பண மசோதாவைத் தவிர வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தம்து குருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.
 மசோதாவைப் பற்றிச் சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.
 ஆளுநர் தமது கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினால், அவருடைய கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டோ, அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
 சட்டப்பேரவையின் சூட்டத்தொடர், அல்லது மேலைவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர், நடைபெறாத காலத்தில், ஷரத்து 213-ன்படி ஆளுநர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.
 சட்டப்பேரவை இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுயுடையவை.
 எனினும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களும் உள்ளன.
 எனவே ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பினும்
 ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலினைக்காக ஆளுநர் அனுப்ப வேண்டியிருப்பினும்
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் இம்மூன்று இனங்களிலும், குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது. ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப்பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும்)
⧭ சட்டப்பேரவை மாண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும்.         
 அதற்கு முன்னரே அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நிறைவேற்றினால் அப்போதே அவசரச் சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் மேண்டுமானாலும் ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையத்திலிருந்து கடந்த 10.08.2015 அன்று திரட்டிய தகவல்

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற
வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து, பின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு, வாசல் கட்டும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே, வீட்டுக் கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டிவிடலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. என்.ஆர்.ஐகள் வீட்டுக் கடன் வாங்குவது மிகவும் கஷ்டம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், அவர்கள் வீட்டுக் கடன் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.
வங்கிகள் தாராளம்வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க ரிசர்வ் வங்கி பொது அனுமதி வழங்கிய பிறகு, வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (National Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் கடன் அளிக்கத் தாராளம் காட்டுகின்றன. வீட்டுக்கடன் வழங்க உள் நாட்டு இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும் பின்பற்றப்பட்ட காலம் உண்டு.
ஆனால், வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மையான விதிமுறைகள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதன் காரணமாகவே என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் வங்கியாளர்கள்.
ஒரே விதிமுறைகள்“உள்நாட்டில் ஒருவருக்கு எப்படி வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறதோ, அதேபோல்தான் வெளிநாடுவாழ் இந்தியருக்கும் வழங்கப்படுகிறது. உதாரணமாக மார்ஜின் தொகை (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே பின்பற்றப்படுகின்றன.
அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் மாறும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும்போது, வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன்.
ஆவணங்கள் என்ன?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கவே பல சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும்? என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்களைக் கூடுதலாகக் கேட்பார்கள். இவை தவிர்த்து உள்நாட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன ஆவணங்களைக் கேட்பார்களோ அவற்றையெல்லாம் எ.ஆர்.ஐ.களிடமும் கேட்பார்கள்
திருப்பிச் செலுத்துவது எப்படி?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ.யை வங்கிக்கு நேரடியாகச் சென்றோ, இணையம் மூலமோ செலுத்திவிடுவோம். வெளி நாட்டில் இருந்துகொண்டு வீட்டுக் கடனை எப்படி அடைப்பார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கெல்லாம் நிறைய வழி இருக்கிறது.
“வெளிநாட்டில் இருந்தபடியே இ.எம்.ஐ. செலுத்த முடியும். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்குச் சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாகவே இந்தத் தொகை வங்கிக்கு வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்தலாம்.
இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம். கடனைத் திருப்பிச் செலுத்துபவருக்கு இதில் எது எளிதாக இருக்கும் என்று கருதுகிறாரோ அதைத் தாராளமாகப் பின்பற்றலாம்” என்கிறார் எஸ்.ஜி. கிருஷ்ணன்.
விரிவாக்கத்துக்கும் கடன்என்.ஆர்.ஐ.கள் வீடு கட்டவோ, வாங்கவோ மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும் என்று கருத வேண்டாம். அவர் களுக்கு ஏற்கனவே உள்ள சொந்த வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும்கூட வங்கிகளிட மிருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடமிருந்தும் கடனுதவி கிடைக்கின்றன. இப்படி என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
எனவேதான் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் வீடு, மனைக் கண்காட்சிகளில் என்.ஆர்.ஐ.களைக் குறி வைத்தே நிறைய அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
நன்றி : தி இந்து நாளிதழ் - 10.01.2015

தூத்துக்குடி காவல்துறையின் புதிய முயற்சி

தூத்துக்குடி காவல்துறையின் புதிய முயற்சி
தூத்துக்குடி காவல்துறையின் புது ஐடியா
பொதுமக்கள், தங்களது புகார்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வசதியாக, தூத்துக்குடி காவல்துறை சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது..

பொதுமக்கள், தங்களது புகார்கள், கருத்துகள், குற்றவாளிகளைப் பற்றிய ரகசியத் தகவல்கள், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொந்தரவுகள் போன்ற ரகசியத் தகவல்களை, வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துவருகிறார்கள்..
அவற்றை ஒருங்கிணைத்து நவீனப்படுத்தும் விதமாக, மாவட்ட காவல்துறை சார்பில் 
94898 86262 என்ற  வாட்ஸ்அப் எண்ணும், www.thoothukudipolice.com என்ற இணையதளமும் அறிமுகப்படுத்தி, இன்று தொடங்கப்பட்டுள்ளது.
.இந்தத் திட்டம் குறித்து தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ்..'ஒட்டுமொத்த தமிழ்நாட்டை ஒருங்கிணைத்துப் புதிதாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள TAMILNADU POLICE என்ற ஃபேஸ்புக் திட்டத்துக்கு முன்னோடியாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் thoothukudi district police என்ற ஃபேஸ்புக் பக்கமும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.. 

இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் மெசென்ஜர் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்கலாம்..
காவல்துறையின் தகவல்கள், அறிவிப்புகளுக்குப் பொதுமக்களிடமிருந்து லைக்ஸ், ஷேர்ஸ், கமென்ட்ஸ் ஆகியவை வரவேற்கப்படுகின்றன..
இதில் பொதுமக்களின் புகார்கள், தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்படும். இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக, தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம் செயல்படுவார்..
பொதுமக்கள், காவல்துறையுடன் தடையின்றித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் விதமாகவே, இந்த இணையதளத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தகவல் உதவி : வழக்கறிஞரும் எனது நண்பருமான Counsel Sree 

Wednesday, August 9, 2017

அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி ரகசியம்
"இது ஹாலுசினேஷன் அல்ல, இன்ஸ்பிரேஷன்!" ட்ரம்ப்பின் பிக்பாஸ் சீக்ரெட்
நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாக கூறிக்கொண்டிருப்பதுதான் ஹாலுசினேஷன்...
ஆனால் நடந்த சில விஷயங்களில் இருந்து வெறும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். 
ஒரு நாளில் ஒரு மனிதர் வெறும் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த மனிதர் எப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பார் என்று நினைத்துப்பார்க்க தோன்றுகிறதா? அவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். ஆம். பல கிண்டலுக்கு ஆளாகும் டொனால்ட் ட்ரம்ப்பின் தினசரி நடவடிக்கைகள் கட்டாயம் ஏதோ ஒரு நேரத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும்.
அதிபர் ட்ரம்புக்கு அவரது வார் ரூம் அமைப்பு மூலம் தினசரி காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் 20 முதல் 25 பக்கங்களை கொண்ட ஒரு ஃபைல் கொடுக்கப்படும் அதில் ட்ரம்ப்பை பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே இருக்கும்.
முன்னதாக தினசரி ஆறு மணிக்குத் வார் ரூம் தனது வேலையை துவங்கும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்டுகள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் அடங்கும்.
இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும். முன்னாள் தலைமை அதிகாரி ரெயின்ஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் இருவரும் இந்தத் தகவல்களைக் கொண்டு 20 - 25 பக்க அறிக்கையைத் தயார் செய்வார்கள். அதனை, காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.
ட்ரம்ப்
தன்னைப்பற்றிய நெகட்டிவ் செய்திகளை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேற முடியும் என்றாலும். ஒருவர் தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போதும் சரி, தோல்வியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் சரி. நெகட்டிவ் விஷயங்கள் நம்மை மேலும் கீழே அழுத்தும். அந்த நேரத்தில் பாசிட்டிவ் விஷயங்களை தவிர வேறு எதையுமே நாம் கவனிக்கவில்லை எனில் நாம் தோல்வியிலிருந்து எளிதில் மீள முடியும்.
காலையில் ஒரு வேலையை நெகட்டிவ் மனநிலையோடு துவங்கிப் பாருங்கள் அன்றைய நாளில் அந்த வேலை கண்டிப்பாக முடியாது. அப்படியே முடிந்திருந்தாலும் அது சிறப்பானதாக இருந்திருக்காது. ஆனால் நம் மீது நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பாசிட்டிவாக ஒருநாளை துவங்கி பாருங்கள் அன்றைய நாளின் வேலை சுலபமாக முடியும்.
ட்ரம்ப் மீதான விமர்சனம், மீம்ஸ்கள் இவற்றை ட்ரம்ப் கவனிப்பதில்லை. இதையெல்லாம் கவனித்தால் அவரால் அன்றைய நாளை அதிபராக சிறப்பாக துவங்க முடியாது என அவர் நம்புகிறார். இது அவருக்கு நல்லதோ, கெட்டதோ... தோல்வியின் பிடியில் சிக்கி இருக்கும், அல்லது வெற்றிக்காக போராடும் ஒருவர் ட்ரம்பிடம் இருந்து இந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும். உங்களது பாசிட்டிவை மட்டும் 100 சதவிகிதம் பின் தொடருங்கள். நெகட்டிவ் எண்ணங்களை தவிருங்கள். அப்படி பாசிடிவ் எண்ணங்களோடு இருந்தாலே போதும், அமெரிக்க ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ ஆஃபீஸில் அதிபதி ஆகலாம்!
ஸ்ரீராம் சத்தியமூர்த்தி 
நன்றி : விகடன் செய்திகள் - 10.08.2017

கத்தார் நாட்டுக்குச் செல்ல, இனி விசா நமக்கு தேவை இல்ல!

கத்தார் நாட்டுக்குச் செல்ல, இனி விசா நமக்கு தேவை இல்ல! 
இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி கத்தாருக்கு செல்லலாம்! 
துபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 
கத்தாருக்கு செல்ல விரும்பும் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசாவிற்கு இனி விண்ணப்பிக்க வேண்டாம். பணமும் கட்டத் தேவையில்லை. இந்த சலுகையைப் பெற வரையறை எதுவும் கிடையாது. பல முறை பயணம் செய்யும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைகள் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலையும் அந்நாடு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் விசா இன்றி கத்தாருக்கு பயணிக்கலாம்.
இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான பாஸ்போர்ட் மற்றும் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 
இதுகுறித்து, கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம், கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகிவிட்டது என்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலவச டிரான்சிட் விசாவை கத்தார் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரை டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்போது 80 நாடுகள் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஒன் இந்தியா தமிழ் செய்திகள் - 09.08.2017

ரூ.20,000/- லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர் கைது!

ரூ.20,000/-  லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர் கைது!
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை: ஒப்பந்ததாரர் புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது
ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், வேலூர் மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30), மாநகராட்சி ஒப்பந்ததாரர்.
இவர் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, வீடுகளுக்கு மருந்து தெளிப்பது, தேங்கிய தண்ணீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பணிகளை பாலாஜி முடித்தார். இதற்கான தொகை 10 லட்சத்து 90 ஆயிரத்து 200 ரூபாய். இந்த காசோலையை தனக்கு வழங்குமாறு வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாரிடம்(54) கேட்டுள்ளார். காசோ லையை வழங்க 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரத்தை வழங்குமாறு ஆணையர் குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வழங்குவதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலாஜியிடம் கொடுத்துள்ளனர்.
அந்த பணத்துடன் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற பாலாஜி, ஆணையர் குமாரை சந்தித்து பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குமாரை பிடித்து. அறைக்குள் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு அங்குள்ள ஆவணங் களை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர் குமாரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து ஆணையர் குமார் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதில், 9 லட்சத்து 40 ஆயிரம் பணமும், 26 பவுன் தங்க நகைகளை யும் பறிமுதல் செய்தனர். ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.08.2017

பத்திரத்தில் இருக்கின்ற வார்த்தைகளின் அர்த்தங்கள்

பத்திரத்தில் இருக்கின்ற வார்த்தைகளின் அர்த்தங்கள்
சொத்து மற்றும் பொருள் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு அந்தக்காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை  கல்வெட்டுகளில் தொடங்கி, செம்புத் தகட்டினால் ஆன பட்டயங்கள், ஓலைச் சுவடிகள்  என்று பல முறைகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நாம் இப்போது அதற்கு காகிதத்தை பயன்படுத்தி வருகின்றோம். இதற்காக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் காலப்போக்கில் மாறிமாறி வந்தாலும், இன்னும் சில பழைய வார்த்தைகள் நம்மிடையே புழக்கத்திலேயே உள்ளன. இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்,  அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் காண வேண்டுமென்றால் பழைய ஆட்கள் யாரையாவது தேட வேண்டியதிருக்கிறது. 
பொதுவாக ஒரு வீடோ அல்லது காலிமனையோ வாங்குபவர்கள் அது சம்பந்தமான பத்திரங்களை அடுத்தவர்களிடம் கொடுத்தே சரி பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், அது தவறு. அதில் உள்ள வார்த்தைகள் அனைத்திற்கும் அர்த்தம் தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவருக்கும் நல்லதாகும்.
பதிவுத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பத்திரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அதற்குண்டான அர்த்தங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.தெரிந்து பயனடையுங்கள்.
பட்டா
ஒரு நிலமானது இன்னாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கின்ற சான்றிதழ் பட்டா ஆகும்.
சிட்டா
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு என்ன? அதன் பயன்பாடு என்ன? அது யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் சிட்டா ஆகும்.
10(1) அடங்கல்
ஒரு நிலத்தின் பரப்பு, அதன் பயன்பாடு,  அந்த நிலம் இருக்கின்ற கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது போன்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணத்தை நாம் 10(1) அடங்கல் என்கிறோம்..
கிராம நத்தம்
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் கிராம நத்தம் என்றழைக்கப்படுகிறது.
கிராம தானம்
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக பகுதி நிலத்தை ஒதுக்குவார்கள். அதனை கிராமதானம் என்பார்கள்.
தேவதானம்
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக சிலர் அளித்திருப்பார்கள்.அதனை தேவதானம் என்பார்கள். 
விஸ்தீரணம்
ஒரு நிலத்தின் பரப்பளவு, மற்றும் எல்லைகளை குறிப்பது விஸ்தீரணம் ஆகும்.
கிரையம்
பிறருக்கு சொந்தமான நிலத்தை தனக்கு விற்பனை செய்வதை கிரையம் என்கிறோம்.
வில்லங்க சான்று
ஒருநிலமானது யாருடைய பெயரில் இருக்கிறது? அவர் அதன் பெயரில் கடன் பெற்றுள்ளாரா? அல்லது வேறு யாருக்கும் விற்றுள்ளாரா?   என்ற விவரத்தை அறிந்து கொள்ள பதிவுத்துறை வழங்கும் ஆவணம் வில்லங்கச் சான்று ஆகும்.
புல எண் 
ஒரு நிலத்திற்கு வருவாய்த்துறை வழங்கியுள்ள நில அளவை எண் புல எண் ஆகும்.
புல வரைபடம்
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் நீளம், அகலம், குறுக்களவு மற்றும் அதில் உள்ள கிணறு, கட்டிடங்களின் தோற்றம் ஆகியவற்றை குறிக்கின்ற படம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Field Measurement Book (சுருக்கமாக FMB) என்று சொல்வார்கள்
இறங்குரிமை 
ஒரு சொத்தானது அதற்கு உரியவர் இறந்தவுடன், அவருக்கு இரத்த சம்பந்தமான மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோருக்கு வாரிசு அடிப்படையில் மாறும் உரிமை இறங்குரிமை  ஆகும்.   .
தாய்பத்திரம்
ஒரு குறிப்பிட்ட நிலமானது தற்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவுகின்ற முந்தைய பரிவர்த்தன ஆவணம் தாய்பத்திரம் ஆகும்.
ஏற்றது ஆற்றுதல்
ஒரு ஆவணத்தில் குறித்த வகையில் பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல் ஏற்றது ஆற்றுதல் ஆகும்.
அனுபவ பாத்தியதை
ஒரு நிலத்தை பயன்படுத்திக்  கொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு
ஒரு நிலத்தின் மீதான உரிமையை வேறொருவருக்கு ஒப்படைத்தல்.
ஜமாபந்தி
வருவாய்த்துறை மூலமாக நிலசம்பந்தமான குறைகளை தீர்க்கும் தீர்வாயம்.
நன்செய்நிலம்  (நஞ்சை) 
மழையை எதிர்பார்க்காமல், அதிக தண்ணீர் வசதி கொண்ட நிலம்.
புன்செய்நிலம் (புஞ்சை)
பாசன தேவைக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள நிலம். சுருக்கமாக வானம் பார்த்த பூமி என்பார்கள்.
குத்தகை
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை அதன் உரிமையாளர் குறிப்பிட்ட காலத்துக்கு வேறு ஒருவருக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது குத்தகை ஆகும்..
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி