disalbe Right click

Monday, August 14, 2017

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க 
படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய சேவை
படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையதள சேவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.முத்து (பொறுப்பு) தெரிவித்ததாவது:
படித்த வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இணையதள சேவையை தமிழக அரசு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. எனவேதகுதியுள்ள நபர்கள் இனி www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர்பதிவிறக்கம் செய்யப் பட்ட தங்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இரு தொகுப்பு கள் இணைத்து திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்துக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர்அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இத்திட்டத்தில் 
உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சமும்
சேவை தொழிலுக்கு ரூ.லட்சமும்
வியாபாரத்துக்கு ரூ.லட்சமும்  வங்கிகள் மூலமாக பெற்றுத் தரப்படும். 
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 35 வயதுக்குள் (எஸ்சிஎஸ்டிஎம்பிசிபிசிமுன்னாள் ராணுவத்தினர்மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிருக்கு வயது 45-க்குள்) உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகையில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மேலும்விவரங்கள் பெற திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (தொலைபேசி எண். 044-27663796, 044-27666787) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
பொது மேலாளர் அலுவலகம்,
மாவட்ட தொழில் மையம்,
மதுரை. 
என்ற முகவரியிலோ அல்லது  0452 - 253 7621 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.08.2017

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில்குற்றஞ்சாட்டப் பட்டோருக்குஜாமின் வழங்கும் நடைமுறையை கைவிடும்படிகீழ் கோர்ட்டுகளுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்ஜாமின் : 
ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள்ரஞ்சன் கோகோய்நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஜார்க்கண்டை சேர்ந்த ஒருவர்தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோதுஉச்ச நீதிமன்றத்தில்முன்ஜாமின் பெற்றுள்ளார். இருப்பினும்ஜார்க்கண்டில் உள்ளகீழ் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகிவழக்கமான ஜாமின் பெற்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன.உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில்வழக்கு நிலுவையில் இருக்கும்போதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்குகீழ் கோர்ட்டுகள்வழக்கமான ஜாமின் அளிக்கும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றம்உச்ச நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்முன் ஜாமின் அளித்துள்ள பட்சத்தில்குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கீழ் கோர்ட்டில் சரண் அடைந்துவழக்கமான ஜாமின் கோரக் கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்சரண் அடைவதும்வழக்கமான ஜாமின் கோருவதும்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கருதப்படும்.
அர்த்தமற்றது : 
கீழ் கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின்மேல் நீதிமன்றங்களில்சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமை அடைந்துகுற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குஜாமின் நிராகரிக்கப்படும்போதுஅதுஅர்த்தமற்றதாகி விடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.08.2017


Sunday, August 13, 2017

’கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது

கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது
கட்டண பாக்கியை வசூலிக்க, மாணவர்களின் சான்றிதழ்களை, தராமல் நிறுத்தி வைக்கக்கூடாதுஎன, இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.
சான்றிதழ் நிறுத்திவைப்பு:
அண்ணா பல்கலை இணைப்பில், தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,கல்லுாரிகள், ஆர்கிடெக்சர்மற்றும் மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த கல்வி ஆண்டில் நடந்த, இறுதி தேர்வுக்கு பின், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதில், பல இன்ஜி., கல்லுாரிகள், கட்டணம் பாக்கி வைத்துள்ளமாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன.
இதனால், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் செல்ல முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான, மாணவர் விவகாரத்துறை இயக்குனர், இளைய பெருமாள், அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
நடவடிக்கை:
அதில், ’கட்டண பாக்கி மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்காக, மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காமல், கல்லுாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. சான்றிதழ்களை தரவில்லை என, புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர் - வாரமலர் - 12.08.2017 

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு ஓர் இணையதளம்

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு ஓர் இணையதளம்
வாழ்வில், பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கோ, வாழ்க்கையே பிரச்னை தான்.
இதில், மணவாழ்வுக்கான தேடலோ, இவர்களுக்கு போர்க்களம் தான். அதனாலேயே பலருக்கு திருமணம் என்பது கனவாகவே முடிந்து விடுகிறது. ஆனால், மற்றவர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு தான், மணவாழ்க்கை முக்கியம்; காரணம், துணையும், அன்பும், ஆறுதலும் இவர்களுக்கு தான் அதிகம் தேவை.
இதை, எத்தனை பேர் உணர்ந்தனரோ தெரியாது... ஆனால், சென்னை சாயி சங்கரா மேட்ரி மோனியல்ஸ் நிறுவனர், நா.பஞ்சாபகேசன் நன்கு உணர்ந்தார். காரணம், இவரும் ஒரு மாற்றுத்திறனாளி!
கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, தாம் நடத்தி வரும் மேட்ரிமோனியல் மூலமாக, பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்ததுடன், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கwww.saithunaimatri.com என்ற இணையதளத்தை துவக்கி உள்ளார்.
ஜாதி, மத வேறுபாடின்றி, முற்றிலும், இலவச சேவையாக நடத்தப்படும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பொருத்தமான துணையை மாற்றுத் திறனாளிகள் தேடிக் கொள்ளலாம்; மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய விரும்புவோரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம். இது, மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், யாரும் இந்த தளத்தை தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, பதிவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. இணையதளம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், நேரில் வந்தும் பதிவு செய்யலாம். இது பற்றிய முழு விவரத்திற்கும், 78109 81000 - 98403 30531 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள் திருமணம் செய்வதால், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்குமோ என்ற பயமோ, சந்தேகமோ வேண்டாம்; நார்மலான குழந்தைகள் பிறக்கும். இதை மெய்ப்பிக்கும் வகையில், திருமணம் செய்து, நார்மலான குழந்தைகளை பெற்று, சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும், மாற்றுத்திறனாளி தம்பதிகளை மேடையேற்றி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கையை விதைத்து வருகிறார், பஞ்சாபகேசன்.
பார்ப்பதில், கேட்பதில், பேசுவதில், நடப்பதில், புரிந்து கொள்வதில் என்று, நாட்டில்5 சதவீத மக்கள், ஊனமுற்றவர்கள் என்ற அடையாளத்தோடு இருக்கின்றனர். இவர்களுக்கு, உடலில் தான் ஊனமே தவிர, மனதில் எவ்வித ஊனமில்லை. இவர்கள், தகுந்த துணையோடு, மன மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் வாழ, இந்த இணையதளம் உதவுகிறது.
'நாம் தான் மாற்றுத்திறனாளி இல்லையே... நமக்கு எதற்கு இந்த கட்டுரை...' என்று, இதைப் படிப்போர் நினைக்க வேண்டாம்; உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு இவ்விஷயத்தை கொண்டு செல்லுங்கள். அது, அவர்களுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல; உங்களுக்கு நீங்களே தேடிக் கொள்ளும் புண்ணியமும் கூட!
எல்.முருகராஜ்

நன்றி : தினமலர் - வாரமலர் - 13.08.2017

இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன?

இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன?
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்து போன ஒரு  நபரினுடைய பெயரில் இருக்கின்ற முதலீடுகள்/பங்குகள் மற்றும் அவருக்கு பிறரிடம் இருந்து வரவேண்டிய கடன்கள் போன்ற பணப் பலன்களைப் பெறுவதற்கு தனக்குத்தான்/தங்களுக்குத்தான் சட்டபூர்வமாக உரிமை இருக்கின்றது என்பதைக் தெரிவிக்க ஒருவர்/பலர் நீதிமன்றம் மூலம் பெறுகின்ற சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ் ஆகும்.
உதாரணமாக, இறந்து போன நபருக்கு ஆறு வாரிசுகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் ஆறு பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டு இருக்கும். 
இவர்கள் ஆறு பேருக்கும் இறந்தவர் பெயரிலுள்ள சுமார் 12 லட்ச ரூபாய் பங்குகளிலோ அல்லது முதலீடுகளிலோ  உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஆறு பேர்களின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களோ? என்ற பயம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கோ, நிறுவனங்களுக்கோ வரலாம்.
இதற்காக இந்த ஆறு பேரும் நீதிமன்றத்தை அணுகி தாங்கள் ஆறு பேர்கள்தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழியையும் கொடுத்து தங்களில் யாராவது ஒருவருக்கோ அல்லது ஆறு பேருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் இறந்தவர் பெயரில் எவ்வளவு முதலீடுகள் அல்லது பங்குகள் உள்ளது? என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம், மனுவை பரிசீலணை செய்து அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழை வழங்கும். 
அந்த இறங்குரிமை சான்றிதழின் அடிப்படையில் நிறுவனங்கள் முதலீடுகளை அல்லது பங்குகளை  பெயர் மாற்றம் செய்தோ அல்லது பணமாக, பிரித்து கொடுப்பதையோ தயக்கமில்லாமல் செய்யும்.
****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்

பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்
தமிழக அரசு அதிரடி உத்தரவு பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்
உத்தமபாளையம் : கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
தமிழக அரசின் முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான (பொ) அதுல்ய மிஸ்ரா கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
➤ கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தங்களுக்கென உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்.
முழுநேர அரசு ஊழியர்கள் என்பதால் வருகைப்பதிவேடு மற்றும் முகாம் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.
➤ வருவாய் ஆய்வாளர்கள் இப்பதிவேடுகளை வாரம் ஒருமுறை தணிக்கை செய்து, தாசில்தார் பார்வைக்கு அனுப்ப வேண்டும்.
➤ கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமத்திற்கோ, களப்பணிக்கோ அல்லது பிற அலுவல் நிமித்தமாக அலுவலகத்தை விட்டுச் செல்லும்போது, அலுவலுக்கான காரணம் மற்றும் உத்தேசமாக திரும்பும்நேரம் ஆகியவற்றை, பொதுமக்கள் காணும்வகையில் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும்.
➤ மேலும், பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
➤ கிராம நிர்வாக அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ள கிராமத்தில் கட்டாயம் தங்கி பணியாற்றவேண்டும்.
➤ உயர் அலுவலர்கள் கோரும் தகவல், அறிக்கைகளை நேரில் சென்று அளிப்பதை, இயன்றவரை காலவிரயத்தை கருத்தில்கொண்டு தவிர்க்க வேண்டும். அவற்றை அனுப்ப மின்னஞ்சலை பயன்படுத்தலாம்.
➤ மேற்கண்ட நெறிமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுறதா என்பது பற்றி மண்டல துணை தாசில்தார், தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர், கிராமங்களில் முகாம் செல்லும் நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.
➤ இதில் எவ்வித விதிமீறல்களுக்கும் இடம் தரக்கூடாது.
➤ இந்த நெறிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி :தினகரன் நாளிதழ் - 08.08.2016

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!

Image may contain: one or more people, people standing, ocean, text, water and outdoor
மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!
''பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.
10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.
10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.
மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).
ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.
குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...
''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.
கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.
கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.
சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.
சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.
தள்ளிப்போடுவது சாத்தியமே!
சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.
நம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!''
- ரேவதி (டாக்டர் விகடன் - 31.01.2012)

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!
இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
➤  இது கையெழுத்தே இல்லை.
➤  இது என்னோட கையெழுத்து இல்லை.
➤  இது அவருடைய கையெழுத்து இல்லை
➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.   
இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?
1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம். 
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?
2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.
 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?
3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.
Tamilnadu Forensic Sciences Department and Lab.  Addresses:
1. The Director, 
    Forensic Sciences Dept, 
    30-A, Kamarajar salai, 
    Mylapore, 
    Chennai- 600 004. (Phone: 044-28447771, Fax: 28447767)
    E-mail:forensic(at)tn.nic.in  

2. The Asst. Director, 
    Forensic Sciences Dept, 
    Ezhilagam Annexe, 
    Chepauk, 
    Chennai- 600 005. (Phone: 044-28517217) 

3. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    219, Race course road, 
    Coimbatore- 641 018. (Phone: 0422-2214695)  

4. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Collector office road, 
    Madurai- 625 020. (Phone: 0452-2531966)  

5. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Thanjavur Medical College Campus 
    Thanjavur - 613 004. (Phone: 04362-240016)  

6. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Tirunelveli Medical College Campus 
    Tirunelveli - 627 011. (Phone: 0462-2575675)  

7. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Phase-3, Sathuvachery 
    Vellore - 636 009. (Phone: 0416-2253255)  

8. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    55, Chinaiah road, Maravaneri. 
    Salem - 636 007. (Phone: 0416-2253255)  

9. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    165/90,Thiru.vi.ka. nagar, Pudur 
    Trichy - 620 017. (Phone: 0431-2770400)  

10. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master  Plan Complex, 
    Viluppuram - 605 602. (Phone: 0414-224680)  

11. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master Plan Complex, Sethupathy Nagar,
    Ramanathapuram - 623 503. (Phone: 0467-230646)  


குறிப்பு:  கையெழுத்துக்களை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் அல்லது காவல்துறை மூலமாகவே மேற்கண்ட அலுவலகங்களை அணுக முடியும்.
***************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி