disalbe Right click

Tuesday, September 26, 2017

ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக புதிய மின் திட்டம்...

ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக புதிய மின் திட்டம்...
பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சௌபாக்யா யோஜனா திட்டத்தை தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி 25.09.2017 அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
மின் விநியோகம் தொடர்புள்ள இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் வருடத்திற்குள் நமது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கச் செய்வதுதான் இந்த திட்டத்தின் இலக்காகும். ரூ.500/- மட்டும் செலுத்தி, இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். அந்த ரூ.500-ஐ மொத்தமாக செலுத்த முடியாதவர்கள் 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டங்களுக்கான செலவுகளுக்கு மத்திய அரசு சார்பாக 60 சதவீதமும், அந்தந்த மாநில அரசு சார்பாக 10 சதவீதமும், மீதம் உள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்,  மண்ணெண்ணெய்க்கு மாற்றாக சமையல் எரிவாயு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது.
நாட்டின் முன்னேற்றம்
எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் ஆகியவை தனித்தனி திட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால், நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.
********************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, September 22, 2017

தமிழக அமைச்சர்கள் சொன்ன பொய்சாட்சி

Image may contain: 2 people, people smiling, text
தமிழக அமைச்சர்கள் சொன்ன பொய்சாட்சி
நாங்க உங்கக்கிட்ட பொய்தான் சொன்னோம்! மன்னிச்சிக்கோங்க மக்களே! - தமிழக அமைச்சர்
மதுரை: ‛ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் விடவில்லை. 
ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறோம். 
விசாரணை கமிஷனில், ஜெ.,வை சசிகலா குடும்பத்தினர் ஏன் சந்திக்கவிடவில்லை என்ற மர்மம் தெரியவரும். 
அ.தி.மு.க.,வை ஒழிக்க தி.மு.க.,வுடன் தினகரன் கூட்டு சேர்ந்துள்ளார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் தி.மு.க., டிபாசிட் கூட வாங்காது. 
இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 23.09.2017

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய..... 
சென்னை ஐகோர்ட்டில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்கள் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனுவில் அவர் வினித் நாராயணன் என்பவரது வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம்,, ஊழல் குற்றச்சாட்டில் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். இதற்காக அரசு ஒப்புதல் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது. 
ஆனால், அதற்கு நேர்மாறாக, தமிழக அரசு கடந்த 1988–ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அந்த ஊழல் புகாரை மாநிலஅரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த புகார் மீது தமிழக விஜிலென்ஸ் கமிஷன் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரிக்க முடியும் என்று கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசின் கீழ் நிலை அதிகாரிகள் மீது இதுபோன்ற ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எந்த முன் அனுமதியும் இல்லாமல், நேரடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். 
அரசு ஊழியர்கள் மத்தியில் பாகுபாடோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து ஊழியர்கள் மீதும் ஒரே விதமாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்! என்று அவர் கோரியிருந்தார்..
இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் அவர்கள் அரசாணை ஒன்றை கடந்த 2016ம் வருடம், பிப்ரவரி மாதம் 2–ந் தேதி  வெளியிட்டார். 
அந்த அரசாணையில்,
அந்தஸ்து அல்லது குரூப் போன்றவற்றை தவிர்த்து, எந்த நிலையில் உள்ள அரசு அலுவலராக இருந்தாலும், அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அந்த புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த புகாருக்கான விசாரணைக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் உத்தரவிடுவதற்கு முன்பு, தமிழக அரசின் கருத்தை கண்காணிப்பு ஆணையம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அரசாணை ரத்து
கடந்த 01.07.2016 அன்று வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்களின் வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகளை கைது செய்ய அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 
எடுத்துக்காட்டு வழக்கு
அரசு ஊழியர் நம்பிக்கை மோசடி ,போலிஆவணம், தயாரித்தல் ,குற்ற உடந்தை, ஆகிய குற்றச்சாட்டு சம்பந்தமாக வழக்கு,பதிய, நடத்த, அரசின் முன் அனுமதி தேவை யில்லை!
Public Servant – Sanction for Prosecution 2015 STPL(Web) 314 SC (SC)(DB) - Judgment Date: 13-4-2015 - No sanction required for cheating, fabrication of records or misappropriation

INSPECTOR OF POLICE AND ANOTHER Vs. BATTENAPATLA VENKATA RATNAM AND ANOTHER
Criminal Procedure Code, 1973, Section 197 – Penal Code, 1860, Sections 420, 468, 477A, 120B read with 109 – Public Servant – Sanction for Prosecution – Whether sanction under Section 197 ‘CrPC’ is required to initiate criminal proceedings in respect of offences under Sections 420, 468, 477A, 120B read with 109 IPC? – Held that alleged indulgence of the officers in cheating, fabrication of records or misappropriation cannot be said to be in discharge of their official duty – Their official duty is not to fabricate records or permit evasion of payment of duty and cause loss to the Revenue – Learned Magistrate has correctly taken the view that if at all the said view of sanction is to be considered, it could be done at the stage of trial only – Impugned orders passed by High Court quashing proceedings on the sole ground that there was no sanction under Section 197 CrPC liable to be set aside.
Equivalent Citation: JT 2015 (4) SC 147 : 2015(5) SCALE 253

Thursday, September 21, 2017

பேரழிவை நோக்கி நகரும் தமிழக நிர்வாகம்!

Image may contain: text
ரூ.4000 கோடியை திரும்பி அனுப்பிய கொடுமை!. 
பேரழிவை நோக்கி நகரும் தமிழக நிர்வாகம்! 
சென்னை: தமிழக அரசியல் இன்று சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது. ஆளும் அஇஅதிமுக வில் கிட்டத் தட்ட கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்கள், ஏக இந்தியாவின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறது. நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் கூத்துக்கள் ஏக இந்தியாவையும் கெக்கொலி கொட்டி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
'''நான் கடந்த ஒரு மாத காலமாக ஆதித்தியா, சிரிப்பொலி போன்ற 24 மணி நேர தமிழ் நகைச் சுவை சேனல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாறாக தமிழ் செய்திச் சேனல்களை பார்க்க துவங்கி விட்டேன். காரணம் இந்த சேனல்களில் இல்லாத பெரு நகைச்சுவை காட்சிகள் தமிழக அரசியலில் அரங்கேறிக் கொண்டிருப்பது தான். இதற்கு காரணமான தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுக வுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்''' என்று கூறுகிறார் டெல்லியில் வசிக்கும், மத்திய அரசில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றிருக்கும் தமிழரான பி.பி. தியாகராஜன்.
அரசியல் நகர்வுகள்
ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ல் மறைந்தார். உடனடியாக முதலமைச்சரான ஓ பன்னீர்செல்வம் பிப்ரவரி 5 ம் தேதி வரையில் முதலமைச்சராக இருந்தார். ஆனால் பிப்ரவரி 5 ல் சசிகலாவை அஇஅதிமுக வின் சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்த நிமிடம் தொட்டு இந்த நகைச் சுவை காட்சிகள் அரங்கேற துவங்கின.
பிப்ரவரி 14 ம் தேதி ஜெயலலிதா வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் வி.என். சுதாகரன் ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் நிறைத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அடுத்த நாள் சசிகலாவும் மற்ற இருவரும் பெங்களூர் பரப்பனஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர். பிப்ரவரி 16ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்..
பொங்கிய பன்னீர்செல்வம்
பிப்ரவரி 7 ம் தேதி இரவு 9 மணிக்கு திடிரென்று ஜெ சமாதியில் போய் அமர்ந்து கொண்ட ஓபிஎஸ், தான் நிர்ப்பந்தம் செய்யப் பட்டதால்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார்.
அந்த நாளிலிருந்தே அரசியல் கூத்துக்கள் ஆரம்பமாயின. சசிகலா சிறைக்கு போனார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
இரட்டை இலைக்கு தகராறு
ஜெயலலிதா எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையில் உள்ள ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் இரட்டை சின்னம் தங்களுக்குத் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்று ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினார்.
அப்போது சசிகலாவின் ஆதரவாளராக இருந்த எடப்பாடி இதனை கடுமையாக எதிர்த்தார். சசிகலா சார்பில் இரட்டை இலை தங்களுக்குத் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்று கூறியது. இரு தரப்பு இரண்டு லாரிகள் கொள்ளளவு கொண்ட தஸ்தாவேஜூகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தன. இந்தளவு தஸ்தாவேஜூகளை வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தில் இடமில்லாத காரணத்தால் ஆணையத்தின் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த தஸ்தாவேஜூகள் வைக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி
திடீரென்று எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறியதால் விவகாரம் வேறு ரூபம் எடுக்கத் துவங்கியது. திடீரென்று களத்தில் வந்து குதித்தார் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன்.
சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பு அவர் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்த நபர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுத்தார். எடப்பாடியை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் திடீரென்று எடப்பாடியுடன் தன்னுடைய அணியை இணைத்தார். துணை முதலமைச்சரானார் ஓபிஎஸ்.
வந்தார் தினகரன்
பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது என்று பலரும் நினைத்த சூழ்நிலையில் திடீரென்று தன்னுடைய ஆட்டத்தை ஆடத் துவங்கினார் டிடிவி தினகரன். ஆளுநர் வித்தியசாகர் ராவை டிடிவி க்கு ஆதரவான 19 எம்எல்ஏ க்கள் சந்தித்து தங்களுக்கு எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதங்கள் கொடுத்தனர். பிரச்சனை சூடு பிடிக்கத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிருப்பிக்க உத்திரவிடக் கோரினர்.
ஆளுநரிடம் கடிதம்
இந்த சூழ்நிலையில் தான் டிடிவி தனக்கு ஆதரவான 19 எம்எல்ஏ க்களில் 16 பேரை முதலில் புதுச்சேரிக்கு கொண்டு போய் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார். பின்னர் அவர்களை கர்நாடகத்தின் கூர்க் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றினார். டிடிவி ஆதரித்த 19 எம்எல்ஏ க்களில் ஒருவரான ஜக்கையன் திடிரென்று அணி மாறி மீண்டும் எடப்பாடி பக்கம் வந்து சேர்ந்தார்.
விவகாரம் தங்களுக்கு எதிராக மெல்ல, மெல்ல திரும்புவதை புரிந்து கொண்ட எடப்பாடி தரப்பு தன்னுடைய அஸ்திரத்திரத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் மூலம் பிரயோகித்தது.
காலியான தொகுதிகள்
ஆளுநரிடம் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்ததனால் கட்சிக் கட்டுப்பாட்டை இந்த 18 எம்எல்ஏ க்களும் மீறி விட்டனர் என்றும், ஆகவே அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் அஇஅதிமுக கொறடா ஒரு கடிதம் கொடுத்தார்.
இதற்கு நேரில் வந்து பதில் அளிக்குமாறு இந்த 18 எம்எல்ஏ க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் பி.தனபால். ஆனால் இவர்கள் நேரில் ஆஜராகததால் செப்டம்பர் 18ம் தேதி இந்த 18 எம்எல்ஏ க்களின் பதவியை பறித்தார் சபாநாயகர். அன்று மாலையிலேயே இந்த 18 எம்எல்ஏ க்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது.
நிலையற்ற நிலை
விவகாரம் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சென்றது. செப்டம்பர் 20 ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 18 எம்எல்ஏ க்களின் பதவி நீக்கத்துக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்து விட்டார்.
அதே சமயம் எடப்பாடி பழனிசாமி அரசு மறு உத்திரவு வரும் வரையில் சட்டமன்றத்தில் தன்னுடைய மெஜாரிட்டியை நிருபிக்க, நம்பிக்கை கோரும் தீர்மானம் எதனையும் கொண்டு வரக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 4 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து விட்டார்.
நிர்வாகம் சரிந்தது
இது எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் இந்த ஆறு மாத காலத்தில் தமிழக அரசு நிர்வாகம் எப்படி சீரழிந்து, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
‘'அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. எங்கும் எந்த பணியும் நடக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்திருக்கிறது என்று கூட நான் கூறுவேன்'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
ரூ.4000 கோடி போச்சே
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம். இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது.
இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும். மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி.
நிதிக்கு கணக்கு இல்லை
‘''100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை. மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள். இத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்காக வழக்கமாக நியமிக்கப் படும், பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவிலான ‘'குடிமராமரத்து கமிட்டிகளை' நியமிக்க ஏற்கனவே உத்தரவு போட்டு விட்டேன் என்று என்னிடம் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுகிறார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.
வழக்கு தொடர்வதாக எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் நபார்டு வங்கியையும் பாண்டியன் சாடுகிறார். ‘'தான் உதவி செய்யும் திட்டங்கள் எந்த லட்சணத்தில் செயற்படுகின்றன என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நபார்டு வங்கிக்கு இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப அறிவு கொண்டவர்களின் குழு இது. ஆனால் 100 கோடி ரூபாய் விவகாரத்தில் நபார்டு வங்கி வாய் திறக்க மறுக்கிறது. 100 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப் பட்டது என்பதை பற்றிய தெளிவான ஆதாரங்களை நபார்டு வங்கி வெளியிட வேண்டும். இல்லையென்றால் இந்த 100 கோடி ரூபாய் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது, இதில் நபார்டு வங்கிக்கும் பங்கு இருக்கிறது என்பது தான் பொருள்.
எங்களது நியாயமான கோரிக்கைக்கு நபார்டு வங்கி உண்மையான காரணத்தை தெரிவிக்காவிட்டால் நாங்கள் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை விரைவில் வழக்கு தொடுப்போம்''' என்று மேலும் கூறுகிறார் பாண்டியன்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை
ஒவ்வோர் துறையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத, பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
‘''தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு ஆண்டு தோறும் வழங்கப் பட வேண்டிய உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப் பட்டு விட்டது. கோவை மாநகராட்சியில் 500 துப்புரவுத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதியம் சில மாதங்களாக கொடுக்கப்படாததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவை எல்லாமே இந்த ஆட்சி நிர்வாகம் சரிவதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் என்றே நான் பார்க்கிறேன்''.
வருமானத்தில் பெருத்த அடி
தமிழக அரசின் வருவாயும் பெரிய அளவில் பாதிக்கப் பட துவங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுபான கடைகள் அகற்றப் பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்திரவு தமிழக அரசின் வருவாயை கடுமையாக பாதிக்கத் துவங்கியிருக்கிறது.
டாஸ்மாக் காலி
‘''குடி மன்னர்களின் தாலியை''' ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அறுத்து எறிந்து கொண்டிருக்கும் டாஸ்மாக் விற்பனை இவ்வாறு தொடர்ந்து சரிவது மாநிலத்தின் நிதி நிலைமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது இன்னும் சில மாதங்கள் நீடித்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மேலும் மோசமாக மாறி விடும்''' என்கிறார் மாநில அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார நிபுனர் ஒருவர்.
‘''மு.கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சர்களாக பதவி வகித்த, கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது இல்லை''' என்று மேலும் கூறுகிறார் அவர்.
நிலைமை சரியில்லை
அரசியல் ரீதியில் ஸ்திரமான ஆட்சி இல்லையென்றால் என்ன வெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை எல்லாமே கள சாட்சிகளாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன. 24 மணி நேரமும் தன்னுடைய ஆட்சியையும், தான் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலியையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளுவது என்பதை தவிர வேறெதிலும் கவனம் செலுத்தும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லை.
இத்தகைய ‘''ஸ்திரமற்ற அரசியல் சூழல்''' வேறெந்த தமிழக முதலமைச்சரும் சந்திக்காத ஒன்றுதான். இதனை நாம் மறுப்பதற்கு இல்லை.
முதலீடு இல்லையே
ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்களில் ஒன்று, தனியார் துறையின் முதலீடுகள்.
தற்போது தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலில் எந்த முதலீட்டாளரும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார் என்பது கூடுதல் தகவல்.
இன்று எல்லாவற்றுக்கும் மோடியின் கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுதான் எடப்பாடி அரசின் ஒரே சாதனை. 2019 ல் மக்களவை தேர்தலை சந்திக்க விருக்கும் மோடி, எடப்பாடி அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு கரங்களை நீட்டலாம். நாம் மறுப்பதற்கு இல்லை....
ஆனால் அதற்கு அரசியல் ரீதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசும், அவரது கட்சியும் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும். இந்த விலை எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது கட்சிக்கும் வேண்டுமானால் லாபத்தை கொண்டு வரலாம்.
ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அந்த விலை தாங்க முடியாத இன்னல்களையும், பிரச்சனைகளையும் தான் கொண்டு வரும். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ...
ஏற்கனவே முடங்கி கிடக்கும் தமிழக அரசு நிர்வாகம், தற்போது அழிவிலிருந்து பேரழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தான் விவரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் ஒரே உண்மை.
Posted By: R Mani
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் -21.09.2017 

மருத்துவ சேர்க்கைக்கு லஞ்சம் : ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது

மருத்துவ சேர்க்கைக்கு லஞ்சம் : ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது
புதுடில்லி : மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்த நிலையில், பணம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதாக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தடை மீறி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கில் சாதகமான முடிவை பெற்று தருவதாகவும் குத்துசியை வாக்குறுதி அளித்துள்ளார் . இதற்காக பெரிய அளவிலான தொகையை குத்துசி லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சோதனை மேற்கொண்டது.
டில்லி, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள குத்துசியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.91 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இந்த லஞ்ச விவகார வழக்கில் குத்துசி உள்ளிட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
லஞ்சம் கொடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் வெளியானதும் 46 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்து 2 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. இந்த கல்லூரிகள், போதிய உள்கட்டமைப்புக்கள் இல்லாமலும், முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.09.2017 

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!
எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.
ரூ.5,400 கோடி
வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.
இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.
தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
முறைகேடுகளுக்கு முடிவு
இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது. இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும்.
ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.09.2017 

Wednesday, September 20, 2017

எரிபொருள் நிரப்ப ஏற்ற நேரம்

Image may contain: 1 person, sitting, motorcycle and outdoor
எரிபொருள் நிரப்ப ஏற்ற நேரம்
நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரம்.
 பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும். இது எளிதில் வெப்படையும் தன்மை கொண்டது. சூரியனின் வெப்பத்தால் பூமியும் வெப்பமடையும். அப்போது கொள்கலனும் சூடாகும். இதனால் கொள்கலனில் வைக்கப்பட்டிருக்கும் எரிபொருளும் சூடாகும்.
 எரிபொருள் வெப்பமடையும்போது அதன் அடர்த்தி குறையும். அடர்த்தி குறைந்த எரிபொருள் வாகனத்தின் என்ஜினுள் செல்லும்போது அது சரியாக எரியாமல் போகலாம். ஏனென்றால் என்ஜினும் சூடாக இருக்கும். என்ஜினுள் செலுத்தப்படும் எரிபொருளும் வெப்பநிலையில் செல்லும். ஆகவே என்ஜினின் உள்ளே கம்ப்ரஷன் சேம்பரில் ஸ்பார்க் ஆகும் எரிபொருளானது சரியாக எரியாமல் போகலாம். எனவே வாகனத்தின் மைலேஜ் குறைய இதுவும் ஒரு காரணமாக அமையும்.
 எனவே பூமி குளிர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எரிபொருளை நிரப்பினால் அது அடர்த்தி மிகுந்து காணப்படும். அடர்த்தியான எரிபொருளை என்ஜினுள் செலுத்தும்போது அது முழுமையாக எரியும். என்ஜினின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
 தவிர பகலில் பெட்ரோல் டாங்கினை திறக்கும் போது உள்ளே ஆவியாக இருக்கும் எரிபொருள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. அதனால் காலை அல்லது மாலை நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம்.
தகவல் உதவி:
திரு கே.ஸ்ரீனிவாசன், தலைமை பொதுமேலாளர்,
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.
நன்றி : தி இந்து நாளிதழ் - 21.09.2015

Saturday, September 16, 2017

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை
அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாத சம்பளம்
சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலை நேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர். அதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், 10ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்கு கற்றுத் தருவதாக கூறப்படுகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின் டியூஷன் வகுப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எச்சரிக்கை
இதற்காக, மாதந்தோறும், 1,000 - 2,000 ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2017 

27 வருடமாகியும் தராமல் இழுத்தடிக்கப்படும் இழப்பீடு!

27 வருடமாகியும் தராமல் இழுத்தடிக்கப்படும் இழப்பீடு!
கைக்கு வராத இழப்பீடு 27 ஆண்டாக இழுத்தடிப்பு
கோவை, தன், 8 வயதில், விபத்தில் தந்தையை இழந்தவருக்கு, 35 வயதாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை; தீபாவளிக்குள் பணத்தை வழங்க, அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை, சிட்கோவில் வசித்து வந்தவர் பழனிச்சாமி, 32; மனைவி இறந்த நிலையில், மகள் தங்கமணி, 8, மகன் மகேந்திரன், 5, ஆகியோரை, இவரும், இவரது தாயாரும் வளர்த்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்த பழனிச்சாமி, 1990, செப்., 25ல், சைக்கிளில் சென்ற போது, அரசு பஸ் மோதி பலியானார்.
இழப்பீடு கேட்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், குழந்தைகள் இருவரும், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம், 1.16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 1992ல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கூடுதலாக, 1.30 லட்சம் வழங்க, கோர்ட் உத்தரவிட்டது. வட்டியுடன் சேர்த்து, 3.60 லட்சம் ரூபாய் வழங்காமல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வருகிறது.
இதனால், கோவை கோர்ட்டில், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி உமாராணி, அரசு பஸ்சை, 'ஜப்தி' செய்ய உத்தரவிட்டார். அரசு டவுன் பஸ், ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 'பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, இந்தாண்டு தீபாவளிக்குள் இழப்பீடு தொகை முழுவதும் செலுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
பழனிச்சாமி இறக்கும் போது, மூத்த மகள் தங்க மணிக்கு வயது 8; தற்போது, 35 வயதாகிறது. மகன் மகேந்திரனுக்கு, 32 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல், அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வருவது, இவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் :16.09.2017