disalbe Right click

Sunday, October 8, 2017

கருடாழ்வாரின் கதை

Image may contain: 1 person
திருமாலிடம் சதாசர்வகாலமும் தொண்டு செய்துவரும் நித்ய சூரிகளில் முக்கியப் பங்கு வகித்து, நமக்காகப் பரிந்துரைசெய்து, வரங்களைப் பெற்று நமக்கு அருளும் கருடாழ்வாரைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்.
கருடாழ்வாரின் கதை:

காசியப முனிவருக்கும் விநதாவுக்கும் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் கருடாழ்வார்; மற்றொருவர் சூரியனின் தேர்ப்பாகன் அருணன்.

இரண்டாவது மனைவி கத்ருதேவியின் புத்திரர்கள், அநேக கோடி சர்ப்பங்கள்.
பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட உச்சைசிரவம் என்ற வெண்குதிரையில் இந்திரன் பவனி வந்ததை, ஒரு சமயம் விநதாவும் கத்ருதேவியும் கண்டனர்.
வெண்குதிரையின் அழகை விநதா புகழ்ந்தாள். அதைப் பொறுக்காத கத்ரு, குதிரை முழுவதும் வெள்ளை இல்லை; வால் கறுப்பு என்று குதர்க்கம் பேசினாள்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பந்தயம் கட்டுவதில் முடிந்தது. எவர் சொன்னது சரி என்று ஊர்ஜிதமாகி, வெற்றி பெறுகிறாரோ அவருக்குத் தோற்றவர் அடிமை என்று முடிவாகிறது.
கார்க்கோடகனின் விஷமச் செயல்

கத்ருவோ தன் பாம்புப் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மூத்தவளையும் அவள் பிள்ளைகளையும் அடிமைப்படுத்த இது நல்ல தருணம்என்கிறாள்.

இந்திரனின் வெண்குதிரையின் வாலில் நாகம் சுற்றிக்கொண்டால் கறுப்பு வால் போன்று தெரியும் என யோசனையும் சொல்கிறாள். இதற்கு கார்கோடகன் என்ற ஒரு மகனைத் தவிர, மற்றவர்கள் மறுக்கின்றனர்.
கார்க்கோடகன் தன் அம்மாவின் சொல்படி இந்திரனின் குதிரையின் வாலில் சுற்றிக்கொண்டு, தன் விஷ மூச்சையும் செலுத்தி, வால் கறுப்பு நிறமாகத் தோன்றும்படி செய்கிறான்.
அதை நம்பி ஏமாறும் விநதாவும், அவள் பிள்ளைகளும் கத்ருவுக்கு அடிமை ஆகிறார்கள். அவளும், இவர்களுக்குக் கடுமையான வேலைகளை ஏவி, கொடுமைப்படுத்துகிறாள்.
தாயின் துயரம்!

தாய் துயருறுவதைக் கண்டு பொறுக்காத கருடன், சித்தியிடம் அவளை விடுவிக்கும்படி வேண்ட, அவளோ தேவர்களின் பாதுகாப்பில் தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், தாயையும் மற்றவர்களையும் விடுதலை செய்வதாகக் கூறுகிறாள்.

கருடன் உடனே அமிர்த கலசத்தைக் கொண்டு வர, தேவலோகம் சென்று, தேவர்களோடு யுத்தம் செய்கிறார். இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாக்குகிறான். எனினும், பலசாலியான கருடனுக்கு வஜ்ராயுதம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இருந்தாலும், இந்திரனுக்குப் பெருமையும், வஜ்ராயுதத்துக்கு மதிப்பும் தரவேண்டும் என்கிற எண்ணத்தில், கருடன் தன் சிறகிலிருந்து ஒரு துளியை மட்டும் உதிர்த்துவிட்டு, இந்திரனிடமிருந்து பெற்ற அமிர்த கலசத்துடன் புறப்படுகிறார்.
அமிர்த கலசத்துக்கு அனுமதி

இதைக் கண்ட தேவாதி தேவர்கள், கொடிய பாம்புகளுக்கு அமிர்தம் கிடைத்துவிட்டால் விபரீதமாகிவிடுமே என்று அஞ்சி, திருமாலிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள்.

அதைத் தொடர்ந்து திருமால், கருடன் மீது போர் தொடுத்தார். கருடனிடமிருந்து அமிர்த கலசத்தை மீட்கும்பொருட்டு, திருமாலுக்கும் கருடனுக்கும் தொடர்ந்து 21 நாட்கள் போர் நடந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது.
தாய் மீது அளவற்ற பற்று வைத்திருந்த கருடனின் மன உறுதியைப் பாராட்டி, இறுதியில் அந்த அமிர்த கலசத்தைக் கொண்டு செல்ல, அனுமதி அளிக்கிறார் திருமால்.
வாகனமாக இரு!

தன்னுடன் போரிட்டு அமிர்த கலசத்தைப் பெற்ற கருடனுக்கு, திருமால் என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, கருடனோ தான் வெற்றிபெற்ற அகந்தையில், உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேட்டால், அதை நான் தருகிறேன்என்கிறார். இறைவனும் உடனே, சரி, எனக்கு வாகனமாக இருந்து, சேவை சாதிப்பாயாக!என வரம் கேட்டதாகப் புராணம் விவரிக்கிறது.

கருடன் தனது ஆணவத்தைத் துறந்தார். அப்படியே ஆகட்டும் ஐயனே! என் தாயை மீட்டவுடன், ஓடோடி வந்து தங்களுக்குச் சேவை செய்கிறேன்என வாக்களித்துவிட்டுச் செல்கிறார்.
பிறகு, சித்தியிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து தாயையும் சகோதரரையும் மீட்ட பின்பு, சொன்னது போலவே வைகுண்டம் வந்து, திருமாலிடம் சேவை செய்யத் தொடங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

---------------------------------------------------------------------------------------------------- எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் - 07.10.2016

Saturday, October 7, 2017

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம்

புதுடில்லி : டில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.,6) நடந்தது. இதில் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சுமையை குறைப்பதற்காக 27 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டது.
புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகமானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பது முழுவிபரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம் :
1. உலர வைக்கப்பட்ட மாம்பழ துண்டுகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
2. காக்ரா மற்றும் சப்பாத்தி அல்லது ரொட்டி (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
3. சமைக்கப்பட்ட உணவுகள் டப்பாவில் அடைக்கப்பட்டு, மத்திய அரசு அல்லது ஏதாவது மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது என குறிக்கப்பட்டு, சமூக நலத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக வலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படுவது (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
4. பிராண்ட் பெயர்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட திண்பண்டங்கள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
5. லினியர் ஆல்கைல் பென்சைன் தயாரிக்க பயன்படுத்தப்படும் உயர்தர மண்ணெண்ணை (ஜிஎஸ்டி 18% லிருந்து 18 % ஆகிறது) (விளக்கம் பின்னர் அளிக்கப்படும்)
6. பிராண்ட் பெயர்கள் பயன்படுத்தப்படாத ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருந்துகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
7. போஸ்டர் கலர் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)
8. குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் நவீன ஒட்டும் பொருட்கள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)
9. பிளாஸ்டிக் கழிவுகள், உலோகக் கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
10. ரப்பர் கழிவுகள், தாது கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
11. டயர்கள் அல்லது கடின ரப்பர் கழிவுகள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 5 % ஆகிறது)
12. காகித கழிவுகள் (ஜிஎஸ்டி 12 % லிருந்து 5 % ஆகிறது)
13. பணிக்காக வழங்கப்படும் தொகை (ஜிஎஸ்டி 5 % ஆகிறது)
14. சில்லறை விற்பனைக்கு அல்லாத கைத்தறி நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
15. நைலான், பாலியஸ்டர் உள்ளிட்ட அனைத்து சின்தடிக் ரக நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
16. விஸ்கோசின் ரேயான் உள்ளிட்ட அனைத்து ரக செயற்கை நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
17. கைத்தறி ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும் நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
18. கைத்தறி ஆடைகளுக்கான பிரதான நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
19. உண்மையான ஜரிகைகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
20. மார்பிள், கிரானைட் அல்லாத, 6802 பிரிவின் கீழ் வரும் கட்டுமான பொருட்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
21. கண்ணாடி கழிவுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
22. அலுவலக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் கிளிப்கள், லெட்டர் கிப்கள், பைல்கள் உள்ளிட்ட அடிப்படை உலோகங்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
23. 8483 ரக எளிய ரக பொருத்தும் தாங்கிகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
24. 15 எச்பி.,க்கு மிகாமல் இருக்கும் திறன் கொண்ட டீசல் இன்ஜின்களை பொருத்தும் திருகுகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
25. தண்ணீர் பம்புகள், ஆழ்துளை குழாய்கள் உள்ளிட்டவைகள் பொருத்துவதற்கான குழாய்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
26. மின்னணு கழிவுகள் (ஜிஎஸ்டி 28%, 18% லிருந்து 5 % ஆகிறது)
27. மரக்கரி துண்டுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.10.2017

தேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்?


ஓய்வூதிய சேமிப்பு திட்டமிடல்கள் இல்லாவிட்டால் அது தீவிரமானத் தாக்கங்களை ஏற்படுத்தும். நிதி வடிவங்களை மற்றும் சமூக விதிமுறைகளை மாற்றுதல் பாதுகாப்பற்ற எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மக்களின் உழைக்கும் வாழ்க்கையின் முடிவில் அவர்களுக்கு அடிப்படை சமூக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வயது வரம்பு 65 ஆகும். என்பிஎஸ் திட்டத்தில் இந்த நன்மைகளெல்லாம் இருக்கின்றன.
முதலீட்டுத் தேர்வின் வரம்புகள்:
என்பிஎஸ் திட்டத்தின் கீழ் இரண்டு வகை கணக்குகள் இருக்கின்றன அடுக்கு I மற்றும் அடுக்கு II. 
அடுக்கு
கணக்கில் 60 வயது வரை பணத்தைத் திரும்பப் பெற முடியாது மேலும் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு பிறகு பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெறலாம்
அடுக்கு II 
கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறுதல் சுய விருப்பத்திற்குட்பட்டது. என்பிஎஸ் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க எட்டு வெவ்வேறு புகழ்பெற்ற நிதி நிர்வாக நிறுவனங்களுக்கு இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு உண்டு.
மேலும் முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதிய நிதியின் முதலீட்டு கலவையை தீர்மானிக்க விருப்ப உரிமை உள்ளது. செயல்பாட்டில் உள்ள இந்தத் தேர்வில் பங்குகளின் சதவிகிதம், பெருநிறுவனக் கடன் மற்றும் அரசாங்க பத்திர காப்பு முனைமங்களை முதலீட்டாளரே தீர்மானிக்கிறார். தானியங்கித் தேர்வு முதலீட்டாளரின் வயதை அடிப்படையாகக் கொண்டு சொத்து ஒதுக்கீட்டைத் தேரந்தெடுக்கும்.
குறைந்த செலவு:
என்பிஎஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட நிதிகள் ஏயுஎம் கட்டணமான 0.01% த்தையும், மற்றும் பங்கு பரஸ்பர நிதிகளுக்கு எதிராக 1% த்தையும் கவர்கின்றன.
வரிப்பயன்கள்:
முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிடி இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் வரையிலும் வரிப்பயன்களைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாகிறார்கள். மேலும், பிரிவு 80 சிசிடி (1பி) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் நற்பயன் உண்டு. இருந்தாலும், இந்த நற்பயன்கள் அடுக்கு I கணக்கில் முதலீடு செய்யப்பட்ட பங்களிப்புகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.
இடம்பெயர்வு திறன்:
என்பிஎஸ் நிலையான ஓய்வூதியக் கணக்கு எண்ணை (PRAN - Permanent Retirement Account Number)  அளிக்கிறது. இந்த பிரான் எண் தனிநபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் இதை இந்தியா முழுவதுமுள்ள எந்த முகவரிக்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்துக் கொள்ளலாம்.
 நன்றி :   »   »  -   05.10.2017