disalbe Right click

Tuesday, October 10, 2017

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் ஜப்தி!

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் ஜப்தி!
கலெக்டர் ஆபீசில், 'ஜப்தி' : தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரி: நில ஆர்ஜிதம் செய்த வழக்கில், 2.75 கோடி ரூபாய் இழப்பீடு வழங்காததால், தர்மபுரி கலெக்டர் அலுவலக பொருட்களை, நீதிமன்ற பணியாளர்கள், 'ஜப்தி' செய்ய வந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர், குருசாமி. இவரது மனைவி, லட்சுமி. இவருக்கு சொந்தமான, 1.34 ஹெக்டேர் நிலத்தை, ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்க, 1998ல், தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தது.
இந்நிலத்துக்கு, அரசு கொடுத்த இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில், லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 2011 ஜூலை, 15ல், 'மாவட்ட நிர்வாகம், 2.75 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம், நீதிமன்ற உத்தரவுப்படி, இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இந்நிலையில், லட்சுமி இறந்ததை அடுத்து, இந்த வழக்கை, அவரது வாரிசுகள் நடத்தி வந்தனர்.
அவர்கள், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்ததில், ஆக., 31ல், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் கலெக்டரின் காரை, 'ஜப்தி' செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, நேற்று, நீதிமன்ற ஆணை நிறைவேற்றுனருடன், லட்சுமியின் வாரிசுதாரர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து, எடுத்துச் செல்ல வந்தனர்.
அங்கிருந்த அதிகாரிகள், 10 நாட்களுக்குள், இழப்பீடு தொகையை வழங்கி விடுவதாக உறுதியளித்ததை அடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

நன்றி : தினமலர் நாளிதழ் -10.10.2017

கன்ஸ்யூமர் லோன்… உங்களுக்கு கிடைக்குமா?

Image may contain: one or more people and text
கன்ஸ்யூமர் லோன்உங்களுக்கு கிடைக்குமா?
பண்டிகை என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும்அடுத்து ஆயுத பூஜை, 
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த 
பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம்.நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க 
முடிவதில்லைவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல 
விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான 
விஷயமாகிவிட்டதுஇது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.
இந்த கடன் எப்படி வழங்கப்படுகின்றனஇதற்கு என்ன ஆவணங்கள் தேவைஇதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்க களமிறங்கினோம்
ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகளில் இருக்கும் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் 
நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.
ஆவணங்கள்!
நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பவர்கள் தங்களுடைய முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடைசி 3 மாத வங்கி அறிக்கை, காசோலை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பம் செய்பவரின் முகவரி எல்லா ஆவணங்களிலும் 
ஒன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் கடன் 
மறுக்கப்படலாம்.
கடன் வாங்கப் போகிறவர்எந்த வீட்டில் குடி இருக்கிறாரோஅந்த வீட்டின் முகவரியைத்தான் முகவரிச் சான்றாக தரவேண்டும்.
ஒரு மாதத்துக்குமுன் வேறு ஒரு இடத்தில் வசித்துவிட்டுகடன் வாங்கும்போது பழைய 
வீட்டின் முகவரியைத் தரக்கூடாதுகடைசியாக எந்த வீட்டில் வசிக்கிறாரோஅந்த வீட்டின் முகவரியையே முகவரிச் சான்றாக வழங்க வேண்டும்.
சிபில் ஸ்கோர்!
நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினலாக 
இருக்க வேண்டும்.
ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வழங்கினாலும் ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான் இந்தக் கடன் வழங்கப்படும்.
ஆவணங்கள் சரியாக இருந்தாலும் அவருடைய சிபில் ஸ்கோரைப் பொறுத்தே கடன் 
வழங்கப்படும் என்பதால் கடன் பெற விண்ணப்பிக்கிறவரின் சிபில் ஸ்கோர் அதிகமாக 
இருப்பது அவசியம்.
கடன் தொகை!
ஒருவர் ரூ.30,000 மதிப்புள்ள டிவியை வாங்குகிறார் எனில், அதில் மூன்றில் ஒரு பங்கை, 
அதாவது 10,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும்.
மீதி 20,000 ரூபாயை எட்டு மாதத் தவணையில் திரும்பக் கட்டலாம்.இதுவே விலை உயர்ந்த பொருட்கள் எனில்உதாரணமாக ரூ.5 லட்சம் மதிப்புடைய பொருட்களை வாங்கும்போது அதற்கு 18 மாதத் தவணையாக எடுத்துக்கொண்டுஅதில் முதல் நான்கு மாத தவணையைக் கடன் வாங்குபவர் முதலில் செலுத்த வேண்டியிருக்கும்.
மீதியுள்ள தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.
நுகர்வோர் கடனுக்கு குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம் ரூ.500-ஆக உள்ளதுஇது பொருட்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.
உதாரணத்துக்குரூ.20,000 மதிப்புடைய டிவி வாங்கினால், 2% பரிசீலனைக் கட்டணம் ரூ.400-ஆக இருந்தாலும் ரூ.500 வசூலிக்கப்படும்இதுவே வாங்கும் பொருளின் மதிப்பு ரூ.2,00,000 
எனில்பரிசீலனைக் கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படும்இது பிராண்டுக்கு 
தகுந்தாற்போல் மாறுபடும்.
எவ்வளவு கடன்?
மாதச் சம்பளதாரர்களின் சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே கடன் 
கிடைக்கும். குறைந்தபட்சம் மாதச் சம்பளம் 10,000 ரூபாய் இருந்தால்தான் கடன் கிடைக்கும்ரூ.2 லட்சம் நுகர்வோர் கடன் வாங்கவேண்டும் எனில்அவருக்கு மாதச் சம்பளம் 
குறைந்தது ரூ.30,000-ஆக இருக்க வேண்டும்.
நுகர்வோர் ரூ.10,000 சம்பளம் பெறுகிறார் எனில்அவருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே கன்ஸ்யூமர் லோன் வழங்கப்படும்இதுவே ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளம் பெறுகிறார் எனில் அவருக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நுகர்வோர் கடன் வேண்டும் எனில் 
அவர்களுடைய வங்கிப் பரிவர்த்தனையைப் பொறுத்தே கடன் வழங்கப்படுகிறது.
வங்கிப் பரிவர்த்தனை மாதம் குறைந்தது ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நடைபெற்று 
ருக்க வேண்டும்.
நுகர்வோர் ஒரே வங்கிக் கணக்கை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்பான் 
கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளார்அவர் பெயரில் எந்தவொரு செக் பவுன்ஸ் புகாரும் கிடையாது எனில் அவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை நுகர்வோர் கடன் கிடைக்கக்கூடும்வருமானம் குறித்த ஆவணங்களை வைத்தே இந்தக் 
கடன் தீர்மானிக்கப்படுவதால்அந்த ஆவணங்களைச் சரியாக வைத்திருப்பது அவசியம்.
தவணை உஷார்!
நுகர்வோர் கடன் கிடைத்தபிறகு ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் இஎம்ஐ செலுத்த 
வேண்டும் என்பதை நிறுவனங்கள் தெரியப்படுத்தும். அந்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது.
கெடு தேதிக்குப் பிறகு செலுத்தினால் 500 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டியதாக 
இருக்கும்மேலும்உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையவும் அது காரணமாக அமையும்
அடுத்த முறை கடன் வாங்கும்போதும் சிரமங்கள் ஏற்படும்.
கடனை திருப்பிச் செலுத்த தவறினால்மூன்று மாதங்களுக்குப் பின் வாங்கிய பொருளை கடன் வழங்கிய நிறுவனம் எடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
நுகர்வோர் கடன் வாங்குவதற்கு முன்னரே வேறு ஏதாவது கடன் வங்கிகளில் இருந்தால் 
அதற்கு தகுந்தாற்போல்தான் கடன் வழங்கப்படும்.
நுகர்வோரைக் கவரும் வகையில் பண்டிகைக் காலங்களில் பரிசீலனைக் கட்டணம் 
வசூலிப்பதில்லைஆகையால் பொருட்களை வாங்கும்போது இதுகுறித்து விசாரித்து 
வாங்குவதே நல்லது.
வட்டி விகிதம்!
நுகர்வோர் கடன்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்து தனியார் வங்கி 
அதிகாரி விஜயகுமாரிடம் கேட்டோம்.
‘‘சில நிதி நிறுவனங்கள்தான் ஜீரோ இன்ட்ரஸ்ட் கடன் வழங்கி வருகின்றனவங்கிகளால் இப்படிக் கடன் வழங்க முடியாதுவங்கியில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் தனிநபர் 
கடன் வாங்கிஅதில் டிவிஃப்ரிட்ஜ்வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம்.
வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து வட்டி 12% முதல் 20% வரை இருக்கும்” என்றார்.
பண்டிகை நாட்களில் புதிய பொருட்களை குறைந்த விலையில் கடனில் வாங்க முடியும் 
என்றாலும் மேலே கூறப்பட்ட விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.
கன்ஸ்யூமர் லோன் வாங்கப் போகும் முன் டாக்குமென்டுகள் உள்பட எல்லா 
விஷயங்களையும் சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே உங்களுக்குக் கடன் 
மறுக்கப்படாமல் கிடைக்க வாய்ப்புண்டு.
-----------------------------------------------------------------------சோ.கார்த்திகேயன்
நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016