disalbe Right click

Thursday, October 12, 2017

‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்க புதிய விதிமுறைகள்

மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க புதிய விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க நேர்காணல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை மறைமுகமாக நடந்து வந்தமூத்த வழக்கறிஞர்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்குமூத்த வழக்கறிஞர்அந்தஸ்து கிடைப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த அந்தஸ்து பெறும் வழக்கறிஞர்கள் சிறப்பு உடை அணியவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மூத்த நீதிபதிகள் ரகசியமாக இந்த அந்தஸ்தை வழங்கி வந்தனர். இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கடந்த சுதந்திர தினம் முதல் தனது மூத்த வழக்கறிஞர் உடையை தவிர்த்து வருகிறார். மூத்த வழக்கறிஞர் தேர்வு முறையில் பாரபட்சம் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த நடைமுறைக்கு எதிராக பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.
இம்மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோஹின்டன் எப்.நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்திரா ஜெய்சிங் வாதிடும்போது, ‘‘மூத்த வழக்கறிஞர் தேர்வு முறை பாரபட்சமாக உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அமெரிக்காவில் சீனியர், ஜூனியர் என்ற நடைமுறை இல்லை. இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது’’ என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில், ‘மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து என்பது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14- மீறவில்லைஎன்று வாதிடப்பட்டது.
தனிச் செயலகம்
இருதரப்பையும் கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
 மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க தனிச் செயலகம் உருவாக்கப்படும்
 உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் அட்டர்னி ஜெனரல் அடங்கிய குழு தகுதியுடையவர்களை தேர்வு செய்யும்
 உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால், இக்குழுவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரலுக்கு பதிலாக அட்வகேட் ஜெனரல் இடம்பெறுவார். அவர்கள் தகுதியுடைய வழக்கறிஞர்கள் பட்டியலை தயாரித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள். அதில் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்
 வழக்கறிஞராக பணியாற்றிய ஆண்டுகள் - 20 மதிப்பெண், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி தீர்ப்பு பெற்றது - 40 மதிப்பெண், சட்ட பிரசுரங்கள் - 15 மதிப்பெண், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கான தகுதி, நேர்காணல் - 25 மதிப்பெண் ஆகியவற்றை கணக்கில் கொண்டுமூத்த வழக்கறிஞர்அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்படுவர்
 இந்த பரிந்துரை அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக வைக்கப்படும்
 ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள். பின்னர், ‘மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் ரகசியமாக நடந்து வந்தமூத்த வழக்கறிஞர்தேர்வு முறை முடிவுக்கு வந்துள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 13.10.2017 

மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம்

மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மனைகள் வரன்முறைபடுத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
2018-மே-3வரை நீட்டிப்பு
அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனைகளை வரன் படுத்த 6 மாதம் அவகாசம் என்பதை ஒரு ஆண்டாக 2018-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது விற்கப்பட்ட மனை அடிப்படையில் மனை பிரிவுகளை 3 பிரிவுகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்படுகிறது. அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனை பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒருமனை விற்பனை செய்யப்பட்டால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும்மனைப்பிரிவில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.
உள்ளாட்சிக்கு நிலம் தானம்
விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீதம் நிலத்தை உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். .எஸ்ஆர். எத்தகைய அளவு இருப்பினும் விதிகளில்உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தனிநபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன் முறைப்படுத்த .எஸ்.ஆர்-ல் விதியில் இருந்து முழு விலக்குஅளிக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்த வரையில் 1975 ஆக ., 5முதல் 2016 அக்., 20 வரை வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும் .சென்னை தவிர ஊரக பகுதிகளில் 1972-ம் ஆண்டுநவ.,29 முதல் 2016 அக்.,20வரையிலும்,சென்னை தவிர பிற நகரப்பகுதிகளில் 1980 ஜன.,1-ம் தேதி முதல் 2016 அக்.,20வரையிலும் வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும்.மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து மனைகளும் வரன்முறைப்படுத்தப்பட்டாக கருதப்படும்.
வளர்ச்சிக் கட்டணம் குறைப்பு
 மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிக்கட்டணம் ரூ.600-ல் இருந்து 500   ஆகவும்  வரன்முறைக்கட்டணம் ரூ.100 ஆகவும் குறைக்கப்படுகிறது.
 நகராட்சி நிலை 1மற்றும் நிலை 2 ஆகிய பகுதிகளில் வளர்ச்சிக் கட்டணம் ரூ150, வரன்முறைக்கட்டணம் ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நகராட்சி சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை வளர்ச்சி கட்டணம் ரூ.250, வரன்முறை கட்டணம் ரூ. 60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 பேரூராட்சி பகுதிகளில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக்கட்டணம் ரூ.75, வரன் முறைக்கட்டணம் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 கிராம ஊராட்சியில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டணம் ரூ.25  வரன்முறைக்கட்டணம்ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மேலும் மேற்கண்ட கட்டணத்துடன் மனை ஒன்றிற்கு கூர்ந்தாய்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் -12.10.2017 
வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க
திருச்சி மாவட்டம்          : 96262 73399
மதுரை மாவட்டம்          : 83000 21100
திருநெல்வேலி மாவட்டம் : 99527 40740
விழுப்புரம் மாவட்டம்      : 96554 40092
தேனி மாவட்டம்            : 88709 85100
சிவகங்கை மாவட்டம்      : 94981 01670
விருதுநகர் மாவட்டம்      : 85266 82266
வேலூர் மாவட்டம்         : 94888 35716
நாமக்கல் மாவட்டம்       : 94981 01020
ராமநாதபுரம் மாவட்டம்    : 83000 31100
ஈரோடு மாவட்டம்          : 94454 92686  &  94981 75275
திண்டுக்கல் மாவட்டம்     : 99949 34488
தூத்துக்குடி மாவட்டம்     : 9487008800
தர்மபுரி மாவட்டம்          : 94456 52253
மற்றும்
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500

http://tamil.policenewsplus.com இணையதளத்தில் இருந்து

Wednesday, October 11, 2017

செருப்பைக் காணவில்லை. புகார் பதிவு!

Image may contain: text
செருப்பைக் காணவில்லை. புகார் பதிவு!
புனே: வீட்டுக்கு வெளியே வைத்திருந்த செருப்பு திருடப்பட்டு உள்ளதாக, புனேயைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, புனே மாவட்டம், கேத் தாலுகாவைச் சேர்ந்த, விஷால் கலேகர், போலீசில், ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், 'வீட்டு வாசலில் வைத்திருந்த, புதிதாக வாங்கிய, 425 ரூபாய் மதிப்புள்ள, செருப்பு திருடப்பட்டு உள்ளது' என, தெரிவித்திருந்தார். புகாரை பதிவு செய்த போலீசார், செருப்பு திருடியவனை தேடி வருகின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -10.10.2017