disalbe Right click

Friday, October 27, 2017

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்

'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.
தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம். முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017


Thursday, October 26, 2017

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுமா?

சென்னையில் உள்ள குடும்பநல கோர்ட்டில் இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் குமார் என்பவருடன் வக்கீல் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன். அங்கு என்னிடம் சில ஆவணங்களில் வக்கீல்கள் கையெழுத்து பெற்றனர். இந்தநிலையில் வக்கீல்கள் முன்னிலையில் எனக்கும், குமார் என்பவருக்கும் திருமணம் நடந்ததாக கூறி அதை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அந்தப்பெண் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் .செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். குமார் தரப்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘வழக்கு தொடர்ந்துள்ள இளம்பெண்ணுக்கும், குமாருக்கும் வக்கீல்கள் முன்பாக திருமணம் நடந்தது. பின்னர் திருமணத்தை அவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டனர். இந்து திருமண சட்டப்படி 2 நபர்கள் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்துகொண்டால் அது செல்லுபடியாகும்.
அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேறு சிலராகவும் இருக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அந்த வேறு சிலரில் வக்கீல்களும் உள்ளடங்குவர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கீழ் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையின் போது, தனக்கும், குமார் என்பவருக்கும் வக்கீல் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடந்ததாகவும், வக்கீல்கள் முன்பு நடந்த திருமணம் செல்லாது என்றும் அந்தப்பெண் கூறி உள்ளார். இதற்கு நேர் எதிரான கருத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அந்தப்பெண் கூறி உள்ளார்.
எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். திருமணம் நடந்தது தொடர்பாக வக்கீல் கொடுத்த கடிதம் இந்து திருமணம் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 18.10.2017  

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை


அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல! என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 
நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்
No automatic alt text available.

Image may contain: text

Image may contain: text

Image may contain: text


Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

No automatic alt text available.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Wednesday, October 25, 2017

இலவசமாக RTI தபால்கள் அனுப்பலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதும் விண்ணப்பங்களை அரசு அலுவலகத்திற்கு இலவசமாக எப்படி அனுப்புவது ,அதன் நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
தபால்துறை மூலம் நமது கடிதங்களை அரசு அலுவலகங்களுக்கு  இரண்டு வழிகளில்  இலவசமாக அனுப்பலாம்,
1.BY POST (தபால் மூலம் அனுப்புவது )
2.BY HAND ( நேரடியாக கையில் தருவது )
BY POST ( தபால் மூலம் அனுப்புவது)
உங்கள் விண்ணப்பத்தை ஒரு கடித உரையில் போட்டு குறைந்தது 5 ரூபாய் அஞ்சல் விலை ஒட்டி உங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலக போஸ்ட் மாஸ்டர்க்கு அல்லது சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸ் அவர்களுக்கு அனுப்பலாம்உங்கள் கடிதத்தை பெற்ற அவர்கள் எந்த துறை முகவரிக்கு உங்கள் கடிதம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு உங்கள் கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டு ,அதன் விவரங்களை உங்களுக்கும் தெரிவிப்பார்கள்.

BY HAND ( நேரடியாக கையில் தருவது).
நீங்களே நேரடியாக உங்கள் மாவட்ட தலைமை தபால்துறை அலுவலகத்திற்கு சென்று தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்களை சந்தித்து உங்கள் விண்ணப்பத்தை மட்டும், (கடித உரைக்குள்  வைக்காமல்) அவரிடம் கொடுத்தால்,   அவர் அதனை பெற்று வட்ட வடிவியல் முத்திரை மற்றும் அவரது முத்திரை குத்தி சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸிற்கு அனுப்பி வைப்பார். மேலும், நீங்கள் கொடுக்கின்ற  (அனுப்புகின்ற கடிதத்தின்) நகல் ஒன்றில் அவரது கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை வைத்தும் தருவார்.
அதன் பின்னர், அங்கிருந்து உரிய அரசு அலுவலகங்களுக்கு உங்கள் கடிதம் அனுப்பி வைக்கப்படும்அவ்வாறு அனுப்பி வைத்தவுடன் ,உங்களுக்கு அவைகள் பற்றி விபரங்கள் தபால் துறையில் இருந்து அனுப்பப்படும். மேலும், அவைகள் உரிய அலுவலகத்தில் சேர்ந்தவுடன் அந்த அலுவலகத்தில் இருந்தும் உங்களுக்கு அது சேர்ந்த விபரம் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

பிரிவு 6(1) - தகவல் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பம் .
பிரிவு 19(1) - மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 19(3) - இரண்டாம் மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 2 J (1)- ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை இலவசமாக அனுப்பி தகவல்களை நீங்கள்  பெறலாம்.
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக அனுப்பிய கடிதத்தின் நகலில் சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கையொப்பம் மற்றும் அஞ்சலக முத்திரையை கீழே காணலாம்.

மேலே கண்ட கடிதத்தின் அசலை விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு இலவசமாக அனுப்பிவிட்டு அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவித்த சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கடித நகலை கீழே காணலாம்.

*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி