disalbe Right click

Wednesday, December 6, 2017

இரண்டே நாட்களில் பான் கார்டு

உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் 
பான் கார்டு வைத்திருப்பது நல்லது.
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்.
முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1. என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக. 
Image result for NSDL
என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு உங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும் 
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப் படிவத்தில் உள்ளிடவும்.
3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தை அச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக 
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண் ஒன்று கிடைக்கும், அதை வைத்துக்கொண்டு https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்று சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்கு எப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
5. 48 மணி நேரத்தில் பான் கார்டு 
படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பது நல்லது.
Written by: Tamilarasu 
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 07.12.201

'லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு குண்டாஸ்!”

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
சரமாரி கேள்விகள் தொடுத்தார் நீதிபதி கிருபாகரன்
சென்னை : ''லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை, ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது,'' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரன்சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்த பூபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
என் தாத்தாவின் சொத்து களை பாகப்பிரிவினை செய்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, ஓராண்டான பின்னும், பத்திரப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, பத்திரப்பதிவை முடித்து, பத்திரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் கூறியதாவது:பத்திரப்பதிவு துறை, ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் லாவண்யங்களை தடுக்க, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குள், வெளி நபர்கள் செல்வதை தடுக்கும் வகையில், நவீன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.மனுதாரருக்கு மூன்று வாரத்திற்குள் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும்,
😺 10 ஆண்டுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - அலுவலகங்களில் எத்தனை முறை திடீர் சோதனை நடத்தினர்?
😺 அதில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,
😺 இடைத்தரகர்களை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
இவ்வாறு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி, என்.கிருபாகரன் முன், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த, 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற, 77 அரசு அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடாகஇந்தியா உள்ளது. அரசு அலுவலகங்களில் தான், இந்த ஊழல் அதிகமாக உள்ளது,'' என, வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
😺 ஊழலில் திளைக்கும் லஞ்ச அதிகாரிகள், மற்றும் பொது ஊழியர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது?
😺 அதற்கு ஏற்ப ஏன் புதியதாக சட்டத் திருத்தம் கொண்டு வரக் கூடாது?
😺 கடந்த, 10 ஆண்டுகளில், பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் 
எத்தனை முறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன?
😺 எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
😺 எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
😺 எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?
😺 அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல், ஐந்து அரசு துறைகள் என்னலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?
😺 ஊழியர் பற்றக்குறை உள்ளதா?
😺 சோதனையின்போது, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
😺 லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா?
😺 ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பொது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
உள்ளிட்ட கேள்வி களுக்கு, வரும்., டிச., 11ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.2017 

Tuesday, December 5, 2017

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,
தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளில் இவர் முதன்மையானவர். இன்னும் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. இவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். ஊடகங்களில் பார்த்துள்ளேன். நேர் கொண்ட பார்வை, தெளிவான, புன்னகை மாறாத பேச்சு, மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று இவர் செய்யும் செயல்கள், எழுதிய புத்தகங்கள் இவை அனைத்தும் இவரை பார்க்காமலேயே மிகுந்த மரியாதையை என்னுள் ஏற்படுத்தியது. நான் அறிந்து கொண்ட இந்த மாமனிதரைப் பற்றிய செய்திகள் உங்களுக்காக.
இளமைப் பருவம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குழித்துறையில் 05.06.1962 அன்று பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர்கள். இவர் ஆறாவது குழந்தை. ஏழாம் வகுப்பு வரை சராசரி மாணவனாக இருந்த இவரை சிறந்த மாணவனாக மாற்றியது ஆசிரியை சதானந்தவள்ளி அவர்களின் கண்டிப்புதான்.

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியராக இருந்த திரு ராமசாமி அவர்கள் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஆங்கில மொழியில் இவருக்குள்ள  புலமையைக் கண்டு வியந்து, இவரை தேசிய மாணவர் படை(NCC)யில்  சேர்த்து 100 மாணவர்களுக்குத் தலைவனாக நியமித்து முக்கிய பொறுப்பைக் கொடுத்தார்.  காவல்துறையில் ஈடுபாடு வருவதற்கு அவரே முக்கியக் காரணம். குழித்துறை - விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.   
கல்லூரி வாழ்க்கை
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் விவசாயப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக அண்ணாமலைக் கழகத்தில் பொது சட்டம் பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகைக் கல்வி பிரிவில் முதுகலையும் படித்துள்ளார். அதன் பின்னர், “குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.ஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். 
இவருக்குப் பிடித்த செயல்கள்
இளைஞர்களோடு பேசுவதும், கலந்து உரையாடுவதும் அவர்களை சரியான இலக்கை நோக்கிய லட்சியம் கொண்டவர்களாக   உருவாக்குவது இவருக்கு மிகவும் பிடிக்கும். 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்துவது இவருக்கு மனநிறைவைத் தருகின்ற செயலாகும். 
கல்லூரிகளில் பேச
கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் மத்தியில் பேச வேண்டும் என்றால் இவரை அழையுங்கள். நாம் மதிக்கின்றவர் பேசுவதையே ஏற்க, நமது மனது எப்போதும் விரும்பும். 
இவரது பணிகள்
முதலில் இவர்  திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியாகத்தான் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகே இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகடாமியில் பயிற்சி பெற்றுள்ளார். பயிற்சிக்குப் பிறகு கோபிசெட்டி பாளையம், சேலம், தர்மபுரி ஆகிர ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை  கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 
Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
மனித நேயம் மிக்கவர்
கடந்த 2014ம் ஆண்டு ஒரு சாலை விபத்து நடந்தது. அந்த இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸிற்காக காத்துக் கொண்டு இருந்தனர். அங்கு வந்த திரு சைலேந்திரபாபு அவர்கள் எப்போது ஆம்புலன்ஸ் வருவது? எப்போது இவர்களை காப்பாற்றுவது? என்று யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களை தானே தூக்கி, தனது வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவுக்கு மனித நேயம் மிக்கவர் இவர்.   
அஷ்ரப்: திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்
மண்டல ஐ.ஜி.
சென்னை அடையார் துணை கமிஷனராக சிலகாலம் பணியாற்றிவிட்டு, அதன்பிறகு விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும்,  சென்னை காவல்துறையில்  இணை கமிஷனராகவும்  பணியாற்றியுள்ளார். அதன்பிறகு திருச்சி டி.ஐ.ஜி.ஆகவும், கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். 
அதன்பிறகு கோவை மாநகர கமிஷனராக பணியாற்றியுள்ளார். 
தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மண்டலத்திற்கு ஐ.ஜி.யாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
எந்தப் பதவியில் இருந்தாலும், போலீஸ் என்ற பொறுப்பு என்பது முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து இவர் எப்போதும் மாறியதில்லை. தான் ஏற்றுக் கொண்ட பதவிகளுக்கு சிறப்பையே  இவர் அளித்து வருகிறார்.
 இவர் பெற்ற விருதுகள்
கடமை உணர்வுக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது, சிறப்புப் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது  உயிர் காத்த செயலுக்காக இந்தியப் பிரதமரின் விருது, வீரதீரச் செயலுக்காக தமிழக முதல்வரின் விருது 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
எழுத்தாளராக
எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், உடலினை உறுதி செய், நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்!, அமெரிக்காவில் 24 நாட்கள், உனக்குள் ஒரு தலைவன்,  என்ற தலைப்புகளில் தமிழிலும், 
You too can become an IPS officer, Principles of Success in Interview, A guide to health and happiness, Boys and Girls be ambitious என்ற தலைப்புகளில் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அழைக்கிறது காவல்துறை
இப்போது கூட காவல்துறை பணியில் சேர்வது எப்படி? என்பதை விளக்கும் விதமாக தினமலர் நாளிதழில், “அழைக்கிறது காவல்துறை” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது பார்வையில், இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும்? 
சமுதாயமும், குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். செய்கின்ற செயல்கள் ஒவ்வொன்றையும் நாம் என்ன செய்கின்றோம், எதற்காக செய்கின்றோம்? என்பதை அறிந்து செய்ய வேண்டும். தன்னிடம் உள்ள பண்புகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள குறைகளை களைந்து சரிசெய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் ஒவ்வொரு இளைஞனும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்களை மன்னிக்க முடியாது.
இணையதளம் மூலமாகவும் சேவை  
இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகின்ற இந்த இனிய மனிதர் இணையதளம் மூலமாகவும் சேவை செய்து வருகிறார். இந்த இணையதளத்தில் உங்களது குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம். இவரது இணையதளம்
*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி -05.12.2017