disalbe Right click

Thursday, January 4, 2018

சிம் கார்டு ஆதார் எண் இணைப்பு

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை 01.01.2018 முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை செயற்படுத்தி  உள்ளது
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு
மத்திய அரசின் அறிவித்துள்ளபடி தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில்,  பொது மக்கள் தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க தங்களுக்கு அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை பின்பற்றப் பட்டு வருகிறது.
01.01.2018  முதல், ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்தி உள்ளது.
1 . முதலாவதாக, மொபைல் எண் வாயிலாக IVRS எனப்படும் Interactive Voice Response System அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . இரண்டாவதாக OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3.  மூன்றாவதாக ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேகமான ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல் மற்றும் ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரையில் அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இனி அது தேவை இல்லை. கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் மொபைல் சிம்முடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம். 
  1.  முதலில் உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற Interactive Voice Response System  எண்ணுக்கு கால் செய்யுங்கள்.
  2.  தொடர்பு கிடைத்தவுடன் உங்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. அதன் பிறகு நீங்கள் இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்த வேண்டும்.
  4. உங்களுடைய ஆதார் எண் இணைக்க என்பதை அதில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
  5.  உங்கள் ஆதார் எண் நீங்கள் மொபைலில் டைப் செய்த பிறகு உங்கள் ஆதார் எண்னை உறுதி செய்வதற்காக உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வரும்.  
  6.  அதனை நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு உங்களது ஆதார் எண் சிம் கார்டுடன்    இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.
குறிப்பு : உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 06.02.2018 வரை கால அவகாசம் உள்ளது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.01.2018 

அழிக்கப்பட்ட பைல்கள்

அய்யய்யோ என்னோட மெமரி கார்டுல வெச்சிருந்த ஃபோட்டோக்கள் எல்லாம் போயிருச்சே’, ‘என்ன ஆச்சுன்னு தெரியல, திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம் டெலிட் ஆயிடுச்சி’ - இப்படி அடிக்கடி பதற வேண்டியதில்லை. அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க உங்களுக்கு ஓர்  எளிமையான வழி!
உங்களடைய மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க் மற்றும் ஐபேடு போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏதோ தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது ஏதோ ஒரு காரணத்தினால்   தானாகவே   அழிந்துவிட்டால்  அதனை ‘Recuva’ எனும் ஒரு  மென்பொருள் மூலமாக மிக சுலபமாக நீங்கள் மீட்க முடியும்!
இந்த மென்பொருள் உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த ஃபைல்களை, அது எத்தகைய கோப்பாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள் மற்றும் புகைப்படங்கள்  போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக உங்களுக்கு மீட்டுத் தருகிறது.
எப்படி  மீட்பது தெரியுமா?
‘Recuva’ என்ற மென்பொருளை முதலில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன் செய்து தேடி அழிந்த ஃபைல்களை மீட்டெடுத்துவிடலாம். இவற்றுள், வைரஸால் அழிந்துபோன ஃபைல்களும் அடங்கும். இதனை இணைய உதவியோடு நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்.
'http://www.filehippo.com/ என்ற லிங்க்கை பயன்படுத்துங்கள். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 04.01.2018 

Tuesday, January 2, 2018

பெண்களுக்கான அரசு இணையதளம்

பெண்களுக்காக அரசு தனியாக ஒரு இணையதளம் தொடங்கியுள்ளது.  இதனை   மத்திய  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இணையதள முகவரி http://nari.nic.in/ ஆகும்.
இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?
இந்த இணையதளத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.  இதில் முக்கியத் தகவல்கள் அடங்கிய, பெண்கள் நலம்பெறும் வகையிலான சுமார் 350 திட்டங்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் அவர்களது வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம் மற்றும் எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் இந்த இணையதளம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில், இந்த இணையதளத்தில்  இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறை தீர்க்கும் பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக பாதுகாப்பு
பெண்கள் வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக  தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பெண்கள் உதவி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது
மொத்தத்தில் பெண்களுக்கு மிகவும் உபயோகமான இணையதளம் இதுவாகும்.
************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.01.2018  

குக்கர் பராமரிப்பு

கவிழ்த்துப் போட்டு குக்கரை தேய்க்கக் கூடாது. அப்படி செய்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும்.
குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால், அதனை எடுத்து      ஒருநாள்   பிரிஜ்ஜில்  வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும்.
குக்கரின் அடியில்  எலுமிச்சைத் தோலால் தேய்த்துவிட்டு பிறகு காலி மாத்திரை அட்டைகளால் தேய்த்தால் பழுப்பு நிறம் போய்விடும், மிகவும் பளிச்சென்று ஆகிவிடும்.
பிரஷர் குக்கரில் உள்ளகாஸ்கெட்டை சமையல் முடிந்ததும், தொட்டி நீரில் போட்டுவிடுங்கள். பின்பு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகியுங்கள்.  நீண்ட நாட்கள் உழைக்கும்.
புதிய காஸ்கெட் வாங்கிய உடன், பழைய காஸ்கெட்டை குப்பையில் போட்டு விடுங்கள். இல்லையென்றால் நமக்கே தெரியாமல் அதையே மறுபடி மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
கழுவிய பிறகு குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஸ்குருவிற்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப்பிடிக்காமல் இருக்கும்.
குக்கரின் வெயிட்டை (குண்டை)  ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், அதனுள் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா? என்று பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
குக்கர் மூடி வழியாக சில சமயங்களில் பொங்கி வருவது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. பருப்பு வேக வைக்கும்போது பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது மட்டும் அதனுடன் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
குக்கரில் காய்கறி வேக வைக்கும் போது அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
புளித்த மோரை குக்கரைச் சுற்றியுள்ள கறையின் மீது  ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறைகள் நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.
சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் குக்கர் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018