disalbe Right click

Friday, January 5, 2018

பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள்


 மீண்டும் எழுத கல்வித்துறையால் சிறப்பு அனுமதி 
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டயத்தேர்வு
தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பாக, வருகின்ற 2018 ஏப்ரல் மற்றும் அக்டோபர்  மாதத்தில்,      பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, பட்டயத் தேர்வு நடைபெற உள்ளது.
கருணை அடிப்படையில் அனுமதி
இந்தத் தேர்வின்போது, ’.ஆர்., - என்.ஆர்., - ஆர்.ஆர்., - ஆர்.எஸ்., - சி, டி, ஜி, ஜெ., மற்றும் கேஆகிய பாடத்திட்டங்களில் நிலுவை வைத்துள்ள, முன்னாள் மாணவர்கள், சிறப்பு கருணை அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கு, தொழில்நுட்பக் கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
2011-ம் ஆண்டுக்கு முன், மூன்று ஆண்டுகள் முழு நேர படிப்பிலும், 2010-ம் ஆண்டுக்குப் பின், நான்காண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?
தேர்வு எழுத விரும்புகின்ற மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், 500 ரூபாய் தேர்வுக் கட்டணமாகவும், 30 ரூபாய் மதிப்பெண் கட்டணமாகவும், 25 ரூபாய் பதிவுக் கட்டணமாகவும், தாங்கள் ஏற்கனவே படித்த பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வரிடம் செலுத்தி,தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தட்கல் முறை
அபராதம் ஏதுமின்றி கட்டணம் செலுத்த, 07.02.2018 கடைசி நாள் ஆகும். 5௦௦ ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த, 14.02.2018 கடைசி நாள் ஆகும். தட்கல் முறையில், 500 ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த 09.03.2018 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01.2018 

ஜாமீனை ரத்து செய்யலாமா?

மிக முக்கியமான தீர்ப்பு 
ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது
வித்தியாசம் உள்ளது
ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது
காரணங்கள் என்ன?
எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாகக் காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரைக் கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம். எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்
ஜாமீன் உத்தரவை ரத்து செய்யலாமா?
ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்பப் பெறுகிற ஒரு விஷயமாகும். இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல
உயர்ந்த நுட்பங்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாகச் செயல்பட முடியாது. ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது. எனவே ஜாமீன் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
CRL. RC. NO – 253 & 254/2016, DT – 13.06.2016, 
Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, 
District Crime Branch, 
Madurai 
(2016-3-MWN-CRL-121)
R. Hariharan (254/2016) Vs Inspector of police, 
District Crime Branch, 
Madurai 


நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 

உயில் சம்பந்தமான தீர்ப்புகள்

1) உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது
(AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)

2) உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது

(AIR-1997-SC-127)

3) உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை
(AIR-1998-M. P - 46)

4) உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்
(1998-2-MLJ-SC-128)

5) ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது
(AIR-2003-SC-761)

6) உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும்
(1999-2-MLJ-609)

7) Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும். 

(AIR-1999-KER-274)

8) உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
(1999-3-MLJ-608)

9) அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது
(1999-3-MLJ-651)

10) உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம்
(AIR-2002-A. P - 164-NOC)
(1999-3-MLJ-577)... Courtesy... Arivu sundar anbu
நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018