disalbe Right click

Saturday, January 6, 2018

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை

ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016, சென்னை உயர்நீதிமன்றம்

புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மற்றும் இதர சாட்சிகள் அளித்த உறுதிமொழி வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றில் ஏதேனும் குற்றச் செயலுக்கான வழக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைதான் குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டுமே தவிர, அந்த புகாரிலுள்ள குறைபாடுகள் மற்றும் ஆதாரங்களின் தன்மை ஆகியவை குறித்து, அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலையில், குற்றவியல் நடுவர் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை
இது குறித்து உச்சநீதிமன்றம் "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் (2004-4-CTC-608)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தனிநபர் புகார் தாக்கல் செய்வதற்கு கு. வி. மு. பிரிவு 200 வகை செய்கிறது. அது தனிப்பட்ட ஒரு வழக்கு நடவடிக்கையாகும். தனிநபர் புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கு. வி. மு. பிரிவு 190(1)(a) ல் கூறப்பட்டுள்ளது. தனிநபர் புகாரின் மீது பிடிக்கட்டளை வழக்கு அல்லது அழைப்பாணை வழக்கு போன்றவற்றில் எவ்வாறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், இதனை வேறு விதமாக கூற வேண்டுமென்றால் அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச் செயலுக்கு வழக்கு முகாந்திரம் இருந்தால் குற்றவியல் நடுவர் அந்த புகாரை கு. வி. மு. பிரிவு 190(1)(a) ன் கீழ் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, எதிரிக்கு கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும். அந்த புகாரில் வழக்கு முகாந்திரம் எதுவும் இல்லையென்றால் அந்த புகாரை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக குறிப்பிட்டு கு. வி. மு. பிரிவு 203 ன் கீழ் தள்ளுபடி செய்யலாம்.
கு. வி. மு. பிரிவுகள் 200,202 ஆகியவற்றின் கீழ் ஒரு பரிசீலனையை மேற்கொள்வற்கு குற்றவியல் நடுவர் எவற்றையெல்லாம் தன்னுடைய கருத்தில் கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் மேற்கண்ட "அதாலத் பிரசாத் Vs ரூஃப்லால் ஜிந்தால் மற்றும் பலர்" என்ற வழக்கில் கூறியுள்ளது.
கு. வி. மு. பிரிவு 201 நீதிமுறைக் கட்டளை பிறப்பிப்பதை தள்ளி வைப்பது குறித்து கூறுகிறது. ஒரு புகாரை பெற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் அதன் மீது ஒரு கட்டளை பிறப்பிப்பதை ஒத்தி வைத்து, அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கதிகள் குறித்து தாமே அல்லது காவல்துறை அதிகாரிக்கு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது வேறு எந்தவொரு நபராலும் புலன் விசாரணை செய்வது அவசியமென்று கருதுகிற நிலையில், அந்த புகாரில் மேற்கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பதற்கு சாட்சிகளின் சாட்சியத்தை மெய்யுறுதியின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். காவல்துறையினர் புலன் விசாரணை செய்து அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பெற்று அந்த அறிக்கையில் மேற்கொண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்தக் காரணங்களுமில்லை என்று தெரிய வருகிற நிலையில், அந்த புகாரை தள்ளுபடி செய்யலாம். அவ்வாறு தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை சுருக்கமாக கு. வி. மு. பிரிவு 203 ல் கூறப்பட்டுள்ளவாறு பதிவு செய்துவிட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
புகாரை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு, புகார்தாரர் மற்றும் அவருடைய சாட்சிகளை விசாரித்ததற்கு பின்னர், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளது என்று மனநிறைவு அடைந்தால் கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிக்கலாம். கு. வி. மு. பிரிவு 204 ன் கீழ் நீதிமுறைக் கட்டளையை பிறப்பிப்பதற்கு தேவையானது அல்லது நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனை என்னவென்றால், குற்றவியல் நடுவர் புகார்தாரர் மற்றும் சாட்சிகளை தாமே விசாரித்து மனநிறைவு அடைந்திருக்க வேண்டும் அல்லது கு. வி. மு. பிரிவு 202 ல் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு பரிசீலனையை மேற்கொண்டு அதன் பின்னர், அந்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கலாம். இந்த இரண்டு நிலைகளிலும் எதிரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த இரண்டு நிலைகளும் ஆரம்பக்கட்ட நிலைகளாகும் அதற்கு அடுத்த நிலையில் தான் எதிரியை கேட்டறிய வேண்டும்.
எனவே ஒரு பிரைவேட் கம்ப்ளைன்ட்டை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்ளும் போது, குற்றவியல் நடுவர் அந்த புகாரிலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 224/2016, DT - 31.3.2016
P. Mani Vs V. Ganesh Kumar
(2017-2-MLJ-CRL-471)
வழக்கு குறித்த தீர்ப்பு நகலுக்கு   ghttps://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSXA2RjY3WDFfekk/view?usp=sharing

நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01..2018 




Friday, January 5, 2018

H1B விசா


H1B விசா குறித்த முக்கிய தகவல்கள்
இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமெரிக்கா இருந்தாலும்இந்தியர்களின் இதயங்களுக்கு இன்றும் மிகவும் நெருக்கமாகவே இருக்கிறதுஇந்தியாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டன.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து, H1-B விசா சம்பந்தமாக, அவருடைய நிர்வாகத்தால் மாற்றப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் நமது நாட்டின் தலைப்புச் செய்திகள் ஆகிவிட்டன. வேறு நாடுகள் வாய்ப்பளிக்கிறது இருந்தாலும், ஆயிரக்கணக்கான .டி ஊழியர்களின் தலைவிதி என்னவாகப் போகிறது என்று கணிக்க முடியவில்லை. இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
💧 VISA என்றால் என்ன?
 Visitors International Stay Admission என்ற ஆங்கில வார்த்தையே விசா என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கு அல்லது அங்கு சில ஆண்டுகள் தங்குவதற்கு கொடுக்கப்படும் அனுமதி விசா ஆகும். இதில் வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் என பல வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது..
💧 H1-B விசா என்றால் என்ன?
அமெரிக்காவில் தங்கி ஊழியர்கள் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிப்பது H1-B விசா ஆகும்.   இந்த H1-B  விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறமை பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
💧H1-B விசா எப்போது, எப்படி, யாரால் உருவானது?
1990ம்  ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கின. அப்போது  அமெரிக்காவில் திறமையான தொழில் நுட்ப நிபுணர்கள் அவர்களுக்குத் தேவையான அளவு இல்லாத்தால், அந்தப் பணிகளில் வெளிநாட்டவர்களை அழைத்து தற்காலிகமாக நியமிக்கலாம் என அமெரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவிற்கு வருகின்ற வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குடியேற்றச் சட்டம்-1990-த்தின் கீழ் H1-B விசாவுக்கு அப்போது  அமெரிக்க அதிபராக இருந்த திரு  ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.
💧  விசாக்களில்  என்ன வகை இது ?
அமெரிக்க நாடு வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே முக்கியமானவை. அமெரிக்க நாட்டில் குடியேற விரும்புபவர்களுக்கு அந்த நாடு ஏற்படுத்தியுள்ள சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படுகிறது.. தற்காலிகமாக அமெரிக்க நாட்டில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படுகிறது.. H1-B விசா  இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
💧  H1-B விசா - வகைகள்
அமெரிக்க அரசு வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான H1- B விசாக்களையே வழங்கி வருகிறது. வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 பிரிவுகளின்கீழ் H1-B விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது..
சாதாரணமான வகை: பொது ஒதுக்கீட்டின் கீழ் வருடம் ஒன்றுக்கு 65,000 விசாக்கள் வழங்கப்படுகிறது.  யார் வேண்டுமானாலும் இதற்குவிண்ணப்பிக்கலாம்
முதுநிலை படிப்பு: அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 20,000 விசாக்கள் வழங்கப்படுகிறது. அனைவரும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
ஒதுக்கீடு : தடையில்லா வர்த்தகப் பிரிவின் கீழ் சிங்கப்பூர் மற்றும் சிலி நாடுகளுக்கு 6,800 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றது.
💧 எப்படி தேர்வு  செய்கிறார்கள்?
H1-B விசாக்களுக்கு  அதிகமாக தேவையுள்ளது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது.
💧 யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக H1-B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றது. சில நிறுவனங்கள் H1-B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன.
💧 விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு?
H1-B விசாவிற்கான கட்டணம் 1600 - 7400 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கிறது. இந்திய மதிப்பில்  1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும். நிறுவனங்களின் அளவைப் பொறுத்து இந்த கட்டண விகிதம் மாறுபடும். 50 க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தில் 50% ஊழியர்கள் H1-B விசா வைத்திருப்பவர்கள் என்றால், அவர்கள் 4000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பி  ரூபாய் 2,60,000/-  கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
💧  H1-B விசா  எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
H1-B விசா, வழங்கப்பட்ட நாளில் இருந்து  3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். சில நேரங்களில் இந்த காலம் நீட்டிக்கப்படலாம் . ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.
💧 சார்பு விசா (Dependent Visa) என்றால் என்ன?
H1-B விசா பெற்று அமெரிக்க நாட்டில் வேலை பார்ப்பவரின், குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1-B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக வழங்கப்படும் H-4 விசா ஆகும். ஆனால், அவர்கள் H-4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசா பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். படிப்பதற்காக பெற்ற H4-b விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கல்வியை அமெரிக்காவில் தொடரலாம். இருப்பினும்,  அமெரிக்காவில் எந்தவொரு வேலைவாய்ப்பையும் பெற அவர்களுக்கு அனுமதி கிடையாது. அமெரிக்காவில் அவர்கள் பணியாற்ற வேண்டுமென்றால் அதற்காக தனியாக அனுமதி பெற வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01.2018