disalbe Right click

Thursday, January 11, 2018

வாட்ஸ் ஆப் அட்மின்களே

அட்மின்களுக்கு எச்சரிக்கை
பேஸ் புக் வந்தபோதுதனது கணக்கில் பல நண்பர்களை சேர்த்துஎனக்கு 1,000 பேஸ்புக் 
நண்பர்கள் என்று பெருமைபடும் காலம் ஒன்று இருந்ததுஅது இப்போது சற்று மாறிவாட்ஸ்ஆப்பில் நான் அட்மின் ஆக இருந்து ஒரு குருப் ஆரம்பித்துள்ளேன்அதில் இத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று பெருமைப்படும் காலம் இதுஇன்று வாட்ஸ்ஆப்பில் குருப் ஆரம்பிக்காத நபர்களோ அல்லது குருப்பில் இல்லாத நபர்களே மிக மிக குறைவு.
பேஸ்புக் கொடுத்துள்ள அதிகாரம்
.பேஸ்புக்கில் ஒரு குருப் ஆரம்பித்தால்அந்த குருப்பின் அட்மின் (நிர்வாகி), அந்த குருப்பில் 
இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் பதிவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு
உதாரணமாகஒரு உறுப்பினர் இடும் பதிவைகுருப் அட்மின் அனுமதி கொடுத்த பிறகுதான்அந்த குருப்பில் வெளியிடுமாறு செய்யலாம்அல்லது உறுப்பினர் இடும் பதிவுகளை அட்மின் உடனடியாக அழித்து விடலாம்ஆகஅந்த குருப்பின் முழு அதிகாரம் அட்மினிடம் இருக்கும்.
பதிவுகளை முற்றிலும் அழிக்க முடியாது
.ஆனால்வாட்ஸ்ஆப் குருப் அப்படிப்பட்டதல்லஇதில் அட்மின் ஆக இருப்பவர் உறுப்பினர்கள் இடும் பதிவுகளின் அனுமதியை மறுக்க முடியாது மற்றும் உறுப்பினர்கள் இட்ட பதிவுகளை அழிக்க முடியாதுஅவ்வாறு அழிக்க முயற்சித்தாலும்அட்மினின் மொபைலில் இருந்து மட்டுமே அந்த பதிவு அழிக்கப்படும் ஆனால் மற்ற உறுப்பினர்களின் மொபைலில் அந்த பதிவு தொடர்ந்து இருக்கும்.
அட்மின்களின் பொறுப்பு அதிகம்.
.பேஸ்புக்கை விட வாட்ஸ் ஆப் அட்மின்னிற்கு பொறுப்புநிலை அதிகமாகின்றதுஅவரது குருப்பில் உள்ள உறுப்பினர்களானவர்கள் யவரை பற்றியான அவதுாறான பதிவுகளை இடாமல் இருக்க வேண்டும்அரசியல் தலைவர்கள்அரசியல் கட்சிகள்பிரதமந்திரிமுதல்வர் மற்றும் அமைச்சர்கள்அதிகாரிகள்தனிநபர்கள் மீது ஆதரமற்ற அவதுாறான தகவல்களை பரப்பினால் (அந்த தகவல்கள் அவருடைய தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை...மாறாக மற்றவர் அவருக்கு அனுப்பிய தகவலை குருப்பில் பரப்பினாலும்) அதற்கு அட்மின்தான் அவ்வாறான தகவலை பதிவு செய்தவருடன் சேர்ந்து இந்திய தண்டணை சட்டம்தீங்கியல் சட்டம் மற்றும் .டி.சட்டம் 2000-ன் படி தண்டணைக்குள்ளாவர்கள்
யாரோ செய்த தவறு
யாரோ செய்த தவறுக்கு அட்மின்னும் சிறைக்குள் செல்ல வேண்டியது இருக்கும் என்பதை அட்மின்கள் உணரவேண்டும்ஒருவர் தவறாக இட்ட ஒரு பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து தகுந்த அதிகார அமைப்பிடம் நடவடிக்கை எடுக்க யாராகிலும் கொடுத்தால்அட்மின்னிற்கு ஆபத்துதான்.
எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்!
.குருப்பின் அளவு பெரிய அளவில் ஆகும்போது அட்மினின் பொறுப்புநிலையும் அதிகமாகின்றதுஅவர் அடிக்கடி அந்த குருப்பை கண்காணிக்கும் நிலை ஏற்படுகின்றதுஇவ்வாறு கண்காணித்தாலும்குருப்பில் இட்ட பதிவுகளை அட்மினால் அழிக்க முடியாது என்பதால்அட்மின் நிலையானது எப்போதுமே “கத்தி மேல் நின்று கொண்டிருக்கும் நிலைதான்”.
எச்சரிக்கையாக இருங்கள்
.ஆகவேவாட்ஸ்ஆப் குருப்பில் அட்மின் ஆக இருப்பது பெருமையான விஷயம் அல்லமாறாகஇன்றை சூழ்நிலையில் ஆபத்தான விஷயமும்கூடஆகவேஒரு குருப்பை நானும் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுதேவையற்ற வகையில்குருப்பை உருவாக்குவதை தவிருங்கள்அதையும் மீறி ஒரு குருப் நிர்வாகிக்க வேண்டும் என்றால்,  “அவதுாறான பதிவுகள் போடவேண்டாம்“ என்று அடிக்கடி எச்சரிக்கை விடுங்கள்உறுப்பினர்கள் யாராவது அவதுாறான பதிவுகள் போட்டால் உடனேஅந்த உறுப்பினரை நீக்கம் செய்யுங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து அந்த செயலை செய்தால்அந்த குருப்பை உடனே மூடி விடுங்கள்அதுதான் அட்மின்களுக்கு நல்லது.
.அடுத்தவர் செய்யும் தவறுக்கு
.அடுத்தவர் செய்யும் தவறுக்குநீங்கள் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை ஒரு குருப்பை உருவாக்கி அதற்கு அட்மின் ஆவதற்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்.
*************************************************************
முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards அவர்கள் முகநூலில் பதிவிட்ட இன்றைய (12.01.2018) அருமையான எச்சரிக்கைப் பதிவு இது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி  

Wednesday, January 10, 2018

சிறப்பு அடையாள அட்டை

 ஆதார் கார்டு போல மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஆதார் கார்டு போல் நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் நல துறை அதிகாரிகள்  கூறியுள்ளனர்.
மாநில அரசுகள் மூலம்
ஒவ்வொரு மாநிலமும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக  அடையாள அட்டை வழங்கியுள்ளது.  அந்த அட்டையை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவிகளை மாநில அரசுகள்,  வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் 
நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டையைப் போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதுஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள் மற்றும் குயிக் ரெஸ்பான்ஸ் கோடு ஆகியவை  இடம் பெற்றிருக்கும்.
இந்த அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
மாற்று திறனாளிகள் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படம் இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
இலவசம்
அவர்களின் புகைப்படத்துடன், முழு விபரங்களையும் அங்கு பதிவேற்றம் செய்து மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்காக ஆதார் கார்டில் இருப்பது போல் கை விரல் ரேகை, கண் விழி பதிவு செய்யும் முறையில் இருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018

ஆதார் - மாற்று எண்

ஆதார் அட்டையால் தனிநபருடைய ரகசியம் பறி போகும் பிரச்னைக்கு...
மாற்று அடையாள எண் வழங்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தனிநபருடைய சுதந்திரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாற்று அடையாள எண்களை, 'ஆதார்' இணையதளத்தில் இருந்து பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளும் முறையை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்று உருவாக்கப்படும் மாற்று அடையாள எண்களை, மொபைல் போன், 'சிம் கார்டு' பெறுவதற்கு அடையாளம் சரிபார்க்க பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமது நாடு முழுவதும், 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. இந்த அட்டையில், தனிநபருடைய கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளால், தனிநபர் சுதந்திரம் மற்றும் அவர்களின் ரகசிய தகவல்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள், வழக்குகள் தொடர்ந்து உள்ளனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
ஆதார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர், எட்வர்டு ஸ்நோடென், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தனிநபர் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, 'விர்ச்சுவல்'எனப்படும், 16 இலக்க எண்கள் உடைய, மாற்று அடையாள எண்ணை
Unique Identification Authority Of India
யு..டி..., எனப்படும்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதை,பயனாளிகள் ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்ய முடியும்
இந்த மாற்று அடையாள எண் ஒருவரிடம் இருந்தால், அவர் தனது ஆதார் அட்டையில் உள்ள, 12 எண்களை சொல்ல வேண்டியதில்லை.  இதனை பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளலாம். 
தேவையான தகவல்கள் மட்டுமே
மொபைல் போன் மற்றும் சேவை நிறுவனங்கள்  இந்த 16 இலக்க அடையாள எண் மூலம், விண்ணப்பதாரரின் பெயர், விலாசம் மற்றும் புகைப்படம் ஆகியவை உள்ளிட்ட அடையாள சரிபார்ப்புக்கு தேவையான தகவல்களை மட்டுமே பெற முடியும்.
எத்தனை முறை வேண்டுமானாலும்
இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளர், எத்தனை முறை வேண்டுமானாலும், தன்னுடைய மாற்று எண்ணை உருவாக்க முடியும். புதிய குறியீடு எண் உருவாக்கப்பட்ட உடன், பழைய குறியீடு எண், தானாகவே ரத்தாகி விடும் என்பது இத்திட்டத்தின் சிறப்புஇந்தத்திட்டம், 01.03.2018  முதல் அமலுக்கு வருகிறது
ஆனால், 01.06.2018ல்  இருந்துதான்  வங்கி, மொபைல் போன் சேவை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், மாற்று அடையாள எண்ணை ஏற்றுக் கொள்வது, கட்டாயம் ஆக்கப்படுகிறது.
KYC
Know Your Customer எனப்படும், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறைக்கு, மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, ஒரு நபரின் எந்த தகவல்களைக் கேட்கிறதோ, அவை மட்டுமே தெரிவிக்கப்படும்.
இணையதளம் இணைப்பு
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018 

மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு....

இணையதளம் மூலமாக பிறப்பு & இறப்புச் சான்றிதழ்கள்
நமது நாட்டில் எல்லோருக்கும் அவசியமாக கருதப்படுவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள். இதனை ஒவ்வொருவரும் பதிவு செய்து நகராட்சி அலுவலகத்தில் பெற வேண்டும். தற்போது தமிழக அரசு இதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. இதனை வாங்க வேண்டும் என்றால் அலைந்துதான் வாங்க வேண்டும். பெயரில் அல்லது நாளில் பிழை இருந்தால் அதனை மாற்றுவதற்கும் அலைச்சல்தான். பணத்தையும் கொடுத்து, பிழைப்பையும் கெடுத்து அலையும் பொழுது எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும்.
மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
நமது தமிழக அரசு முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி ஆகிய மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாகவே பெறுவதற்கும், அதிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதனை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் இதற்கு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாகவே பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு யுனிக் எண் வழங்கப்படுகிறது. தவறுகளையும் இலவசமாகவே திருத்திக் கொள்ளலாம். .
பிறப்புச் சான்றிதழ்
இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், பிறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்.,   
இறப்புச் சான்றிதழ்
இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், இறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்.,   
எப்படி எடுக்க வேண்டும்? 
பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் பின்பு தோன்றுகின்ற பாக்ஸில்  பெயர் மற்றும் வருடம் மற்றும் மாதத்துடன் கூடிய நாளை நிரப்புங்கள். பிழையின்றி நிரப்பினால்தான் நீங்கள்  குறிப்பிடுகின்றவரின் சான்றிதழை எடுக்கமுடியும். ஆகையால், பிழையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்கள் 
பிறப்பு சான்றிதழ் பெற

பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள 

இறப்பு சான்றிதழ் பெற

இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள


கோயம்புத்தூர் மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு சான்றிதழ் பெற & இறப்பு சான்றிதழ் பெற

மதுரை மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற
திருச்சி மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

திருநெல்வேலி  மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018