disalbe Right click

Tuesday, January 16, 2018

முகநூல் காட்டும் வழிகள்

முகநூலில் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 5 வழிகள்
ஃபேஸ்புக் - இன்றைய கால கட்டத்தில் உலகிலுள்ள அனைவரும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதில் இருக்கும் நம்மில் பலருக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில பேர்களுக்கு அதனை கொஞ்ச நேரம் பார்க்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது. அதனுள் இருக்கின்ற நேரம் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்தால் விடை கேள்விக்குறியாகத்தான் கண்டிப்பாக இருக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை.
ஏனென்றால், தேவையான பதிவுகளைவிட, அதிகமாக தேவையில்லாத பதிவுகள்தான் நமது பக்கத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. நமக்குத்  தேவையில்லாத பதிவுகளை எப்படி நீக்குவது? என்பது பற்றியும், தேவையான பதிவுகளை மட்டும் பெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்கு அவர்கள் முதலில் 
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் முகநூல் பக்கத்தை ஓப்பன் செய்யுங்கள். ஃபேஸ்புக் பக்கத்தின் வலதுபுறத்தின் மேலே கடைசியாக உள்ள தலைகீழ் முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதில் News Feed Preferences என்று ஒரு ஆப்சன் இருக்கும்.
அதனை கிளிக் செய்தால்,
1. Prioritize who to see first
2. Unfollow people to hide their posts
3. Reconnect with people you've unfollowed
4. Discover Pages that match your interests
5.See more options
என்று 5 ஆப்சன்கள் திரையில் தோன்றும்.
1. Prioritize who to see first
முதல் ஆப்சனை நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் ஃபேஸ்புக் நண்பர்கள், நீங்கள் லைக் செய்த பக்கங்கள் மற்றும் நீங்கள் ஃபாலோ செய்கின்ற நபர்களின் பெயர்கள் தோன்றும்.
அவர்களில் யார் நல்ல பதிவுகளை பதிவு செய்வார்கள் என்பது ஏற்கனவே உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அ்வற்றுள் உங்களுக்குத் தேவை என்று முடிவு செய்யும் பெயர்மீது ஒரு க்ளிக் செய்தால் போதும். அவர்கள் போடும் பதிவுகள், உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் முதலில் தோன்றும்.
2. Unfollow people to hide their posts
இரண்டாவது ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் அன்ஃபாலோ செய்தவர்களுடைய பெயர் பட்டியல் தெரியும். அவர்களில் யாராவது ஒருவருடைய பதிவுகளை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களுடைய பெயருக்கு மேல் ஒரு க்ளிக் செய்யுங்கள். அவர்களுடைய பதிவுகள் உங்கள் முகப்புத்தக்கத்தில் தோன்றும்.
3. Reconnect with people you've unfollowed
உங்கள் நண்பர்களில் சிலரை நீங்கள் unfollow பட்டியலில் வைத்திருக்கலாம். அவர்களில் சிலரை மீண்டும் following பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நினைத்தால் மூன்றாவது ஆப்சனை கிளிக் செய்யுங்கள். நீங்கள் unfollow செய்த நண்பர்களின் பட்டியல் தெரியும். அவற்றில் உங்களுக்குத் தேவையான நண்பரது பெயரை கிளிக் செய்தால் மீண்டும் அவரது பதிவுகள் உங்கள் பக்கத்தில் தோன்றும்.
4. Discover Pages that match your interests
நான்காவது ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் லைக் செய்த பக்கங்களின் ஐகான்கள் அனைத்தும் திரையில் தோன்றும். உங்கள் நண்பர்களில் யாராவது அந்த பக்கத்தினை லைக் செய்திருக்கிறார்களா? என்பதையும் அதில் காணலாம். ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பதிவுகளை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அந்த பக்கத்தின் ஐகான் மீது ஒரு க்ளிக் செய்யுங்கள்
5.See more options
உங்களுக்கு எந்த பதிவுகளை பார்க்க விருப்பம் இருக்கின்றதோ அதனை பார்க்கவும், உங்களுக்கு எந்த பதிவுகளை பார்க்க விருப்பம் இல்லையோ அந்த பக்கத்தை மறையச் செய்யவும் 5வது ஆப்சனை கிளிக் செய்து பயன் பெறலாம்..
*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018 

பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக

வட்டார அளவில் ஆதார் மையம்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக வட்டார அளவில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது
எமிஸ்திட்டத்தின் கீழ் ’ஆன்லைனில்பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் முகாம் நடத்தி எடுத்தாலும் பல மாணவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்கவில்லை.
அதேபோல் ஒவ்வொரு வருடமும் புதிதாக பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது. தாலுகா அலுவலகத்தில் செயல்படுகின்ற பொது நிரந்தர ஆதார் மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கிறது. 
இதனை உணர்ந்து நமது தமிழக அரசு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  ஒவ்வொரு வட்டார அளவிலும் பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018 

Monday, January 15, 2018

தான செட்டில்மெண்ட் பற்றி....


தான பத்திரம்
தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும். இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு  பத்திரம் வாங்க வேண்டும். 
தான செட்டில்மெண்ட்
 தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும். இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான  சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச் சொந்தமான தனிப்பட்ட சொத்தை தனக்குச் சொந்தமான  குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியும். இதற்கு அந்த சொத்தின் அரசு மதிப்பீட்டின் தொகையில் ஒரு சதவீதம் தொகை அல்லது  அதிகபட்சம் ரூபாய் 25,000/-  தொகைக்கு பத்திரம் வாங்கினால் போதும்.
ஒருவர் தன் சொத்துக்களை,தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே   தனது  உறவுகளுக்கு  செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர்குடும்ப உறவினராகஇருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.
குடும்ப உறவினர்கள்
 குடும்ப உறவினர் என்றால் தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி,  அண்ணன்தம்பிஅக்காள்தங்கை இவர்கள் மட்டும்தான்குடும்ப உறுப்பினர்கள்என்று இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்லி உள்ளது
பணம் கொடுக்க வேண்டுமா?
தான செட்டில்மெண்ட் மூலம் ஒரு சொத்தை பெறுபவர் யாருக்கும் எந்தவிதமான தொகையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த முறையில் ஒரு சொத்தை பெறுபவர்கள் மீது அவருடன் பிறந்தவர்களாக இருந்தால்கூட எந்தவிதமான வழக்கும் பதிவு செய்ய முடியாது.
பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா?
ஒருவர் தனக்கு மட்டும் சொந்தமான சொத்தையே தான செட்டில்மெண்ட் செய்ய முடியும். பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது செல்லாது. மற்ற வாரிசுகள் வழக்குத் தொடுக்கலாம்.
செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுவதற்கு முன்னால்
செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவதற்கு முன்னால், சில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் ன்னுடைய சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு  எழுதிக் கொடுத்துவிட்டால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது; இதனைத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு எண்ணத்தில், யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பேரில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி விடுகின்றனர். பின்னர், வாழ்க்கையில் ஏதோ ஒரு மன வருத்தம் ஏற்பட்டு, அதனை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படி ரத்து செய்ய அவர்களுக்கு அதிகாரம் சட்டத்தில் இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது?
ஒரு சொத்தில், ஒருவர் தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்து வந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது; ஆகையால், அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்னாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் என் சொத்தை, நான் தானமாகத்தானே அப்போது கொடுத்தேன்; இப்போது எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்யப் போகிறேன்! என்று நினைக்கிறார்கள். ஒருவர் தான் விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், ஒருவர் தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது.
உயிலுக்கும் தான செட்டில்மெண்டுக்கும் உள்ள வித்தியாசம்
தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்த உடனேயே அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும்.   எழுதிக் கொடுத்தவர்க்கு  எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். அவரே நினைத்தாலும் அதனை ரத்து செய்யவே முடியாது.
உயில் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும் அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான் அமுலுக்கு வரும். உயிலை எழுதியவர் அதனை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உயிலை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அதனை எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம். ஆகையால் உயிலைப் பொறுத்தவரை கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லும்.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.01.2018

கையெழுத்தில் ஒரு புள்ளிகூட மாறக்கூடாது.

கையெழுத்தை மாற்றினால்......?
'மூல ஆவணங்களுடன் ஒப்பிடுகையில், காசோலையில் போடும் கையெழுத்தில், கூடுதல் புள்ளியோ, வளைவோ இருந்தால் செல்லாது' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள அசோக் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் கோபால் ஆவார். இவர் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர், கடந்த 14.06.2004 அன்று, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியின் அடையாறு கிளைக்கு ரூபாய் 12,135 .17-க்கு காசோலை ஒன்றை அந்த வங்கிக்கு அனுப்பியுள்ளார். கிரடிட் கார்டில் வாங்கிய பொருளுக்காக, அந்த காசோலையை அவர் அளித்துள்ளார்.
ஆனால், காசோலைக்கான தொகை, கிரடிட் கார்டில் வரவு வைக்கப்படவில்லை; காசோலையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, வங்கியில் கேட்டபோது, கையெழுத்தில் சில வித்தியாசங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
இதுகுறித்து, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், கோபால் தொடுத்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்த வழக்கை, மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி ஆர்.ரகுபதி, உறுப்பினர் ஏ.கே. அண்ணாமலை ஆகியோர் விசாரித்தனர்.
கையெழுத்தில் ஒரு புள்ளிகூட மாறினாலும் அது செல்லாது.
அதில், 'காசோலையில் கையெழுத்து போடும்போது, வங்கியின் மூல ஆவணங்களில், ஏற்கனவே இடப்பட்டது போன்றுதான் கையெழுத்து போட வேண்டும். தேவையற்ற புள்ளிகளோ, வளைவுகளோ கையெழுத்தில் கூடுதலாக இருந்தால், அது செல்லாது. எனவே, அந்த கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், காசோலையை நிறுத்தி வைத்தது, சேவை குறைபாடு அல்ல' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஆதாரம் : 05.05.2014 - தினமலர் நாளிதழ் செய்தி
Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

நன்றி : முகநூல் நண்பர்  திரு Trdurai Kamaraj அவர்கள்.

Saturday, January 13, 2018

Personnel

5,20,000க்கும் அதிகமான பார்வையாளர்கள்
1350க்கும் அதிகமான பயனுள்ள பதிவுகள்
பல பயனுள்ள இணையதள இணைப்புகள்
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி