disalbe Right click

Wednesday, January 17, 2018

ஆளுநர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள்குறித்து

 அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன உள்ளது?
அரசியல் சாசனம் பாகம் VI - மாநிலங்கள். (The States)
இந்தப் பாகத்தில் வருகிற, ‘மாநிலம்’, என்பது ‘ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தைக் குறிக்காது. பிரிவு 152. 
ஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம், ஆளுநரிடம் இருக்கும்; அதை அவர் உபயோகிப்பார். (The executive power of the State shall be vested in the Governor and shall be exercised by him.) அதாவது, ஆளுநர் என்பது வெறுமனே அலங்காரப் பதவி அல்ல; செயல்படுகிற அமைப்பு என்கிறது.
பிரிவு 154 (1). ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்
பிரிவு 152.
குடியரசுத் தலைவர் விரும்புகிற வரை, அல்லது 5 ஆண்டுகளுக்கு, ஒருவர் ஆளுநராகப் பொறுப்பு வகிப்பார்
பிரிவு 156.. 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன், ஆளுநராகலாம்
பிரிவு 157. ஒரு மாநில ஆளுநர், அந்த மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவர் இல்லாதபோது, உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி முன்னிலையில் ஆளுநர் பொறுப்பு ஏற்றுக்கொள்வார். கருணை அடிப்படையில், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு
பிரிவு 161.. மாநில முதல்வரும், அவரின் ஆலோசனைப்படி அமைச்சர்களும், ஆளுநரால் நியமிக்கப்படுவர். சடிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா மாநிலங்களில், பழங்குடியினர் நல்வாழ்வுக்கு என்று அமைச்சர் இருப்பார்
பிரிவு 164. மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அதேபோல், முதல்வரைச் சேர்த்து, ஒரு மாநில அமைச்சரவையில் குறைந்தது 12 பேர் இருப்பர்
பிரிவு 164 (1-A) சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதங்கள் வரை ஒருவர் மாநில அமைச்சராக இருக்கலாம். அதற்குள்ளாக தேர்தலில் நின்று உறுப்பினராகி, அமைச்சராகத் தொடரலாம். சாசனத்தில் இது சொல்லப்படவில்லை. இது, நாமாகப் பெறுகிற விளக்கம்
ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் (Legislature) என்பது, ஆளுநர் மற்றும் சட்டப் பேரவையை உள்ளடக்கியது. “For every State there shall be a Legislature which shall consist of the Governor and one House.”
பிரிவு 169. சட்டம் இயற்றி, மாநிலங்களில்மேலவை’ (Council) ஒன்றை உருவாக்கவும் அல்லது கலைக்கவும் நாடாளுமன்றத்துக்கு உரிமை தருகிறது. 
பிரிவு 170. எந்த ஒரு மாநில சட்டமன்றத்திலும், 60க்குக் குறையாமல் 500க்கு மேற்படாமல் உறுப்பினர்கள் இருக்கலாம். “the Legislative Assembly of each State shall consist of not more than 500, and not less than 60 members.”
ஒரு மாநிலத்தின் மேலவையில் அதிகபட்ச (maximum) எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3இல் 1 என்கிற அளவைத் தாண்டக் கூடாது. குறைந்த (minimum) எண்ணிக்கை 40.
சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு 
1) 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
2) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
3) சட்ட மேலவை உறுப்பினராக, 30 வயது நிரம்பி இருக்க வேண்டும்
கவனத்தில் கொள்க
ஒரு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்க, இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும் என்றுதான் சாசனம் கூறுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியமில்லை
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்குச் சொன்னது அனைத்தும், சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்குப் பொருந்தும்
காலண்டர் ஆண்டின் முதற் கூட்டம், கூட்டுக் கூட்டம் (மேலவை இருப்பின்) ஆகியன, ஆளுநர் உரையுடனே தொடங்கும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் அல்லது அவரால் நியமிக்கப்படுகிற நபர் முன்பாக பொறுப்பு எடுத்துக்\கொள்வர்
பண மசோதா, மேலவையில் கொண்டுவரப் பட மாட்டாதுஉள்ளிட்ட அத்தனை அம்சங்களிலும், நாடாளுமன்ற அலுவல்களுக்கு உள்ள அதே விதிகள்தாம் சட்டமன்றங்களுக்கும்
உயர் நீதிமன்றத்துக்கான விதிகளும் கூட, உச்ச நீதிமன்றத்துக்கான விதிகள் போலவேதாம்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து, குடியரசுத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பார்.
கீழமை நீதிமன்றங்கள் (Subordinate Courts) குறித்து அத்தியாயம் VI கூறுகிறது
உயர் நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து, ஆளுநர், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார்
மாவட்ட நீதிபதி ஆவதற்கு ஒருவர், குறைந்தது 7 ஆண்டுகள், வழக்கறிஞராய்ப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
இத்துடன்மாநிலங்கள்பகுதி நிறைவடைகிறது
அடுத்து  சாசனத்தின் பாகம் VIII – யூனியன் பிரதேசங்கள். – The Union Territories. 
மத்திய, மாநில அரசுகளுக்குச் சொல்லப்பட்டதில் இருந்து பெரிய மாற்றம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேச முதல்வர், அவரின் அறிவுறுத்தலின் படி பிற அமைச்சர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்
பிரிவு 239(5). அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்  10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.01.2018 

Tuesday, January 16, 2018

பொழுது போக்குவதற்காக

பேஸ்புக் தந்துள்ள வசதிகள்
பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. பேஸ்புக் எதையும் நமக்கு சாத்தியமாகிவிட்டது.  சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்குக்காகத்தான் இந்தப் பதிவு. அடுத்து வரும் செய்திகளில்  இருக்கும் சில குறிப்புகளைக் கொண்டு பேஸ்புக்கில் நீங்கள் உங்கள்  பொழுதை இனிமையாகக் கழிக்கலாம்.
1 உங்களது முகநூலில் ப்ளான்க் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்ய @[3:3:] என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்
2 உங்கள் முதநூல் பக்கத்திற்கு விருப்ப அழைப்புகளை பலருக்கு ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும். இதை மேற்கொள்ள உங்கள் முகநூல் பக்கத்திற்கு சென்று இன்வைட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அங்கு F12 பட்டனை க்ளிக் செய்து கீழே கொடுப்பட்டிருக்கும் குறியீடுகளை பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு சென்று விடும் var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm'); for(var i=0; i
3 ஒரே க்ளிக் மூலம் போட்டோ ஆல்பங்களை பதிவிறக்கம் செய்ய Facebook2zip.com என்ற செயலி தேவைப்படும், இதை பதிவிறக்கம் செய்ய http://ww38.facebook2zip.com க்ளிக் செய்யவும். அடுத்து இந்த செயளி மூலம் லாக் இன் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆல்பத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது
4 உங்கள் பேஸ்புக் ப்ரோபைலில் பிரபலமானவர்களை போல் போஸ்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள The Wall Machine என்ற தளத்திற்கு சென்றால் போதுமானது.
5 பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக மாற்ற www.pixable.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018