disalbe Right click

Saturday, January 27, 2018

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இனி ‘யுவின்’ அட்டை மூலமாக பி.எப்., – .எஸ்.., பணிக்கொடை போன்ற எல்லாம் கிடைக்கும்
மத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் ஏற்பாடு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பெற்று வருகின்ற சமூக பாது­காப்பு பயன்­கள் அனைத்­தும்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ‘யுவின்’ 
அடை­யாள அட்டை திட்­டத்தைமத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் அறி­மு­கப்­­டுத்தியுள்ளதுஇதன் மூலம்சைக்­கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி முதல்கூலித்­தொ­ழி­லா­ளர்­கள் வரைபல்­வேறு துறை­­ளைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வர்.
யுவின் அடையாள அட்டை
மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம்அனைத்து பணி­யா­ளர்­களின் சமூக பாது­காப்பு மற்­றும் நல்­வாழ்­விற்கு உறுதி அளிக்­கும் மசோ­தா ஒன்றை உரு­வாக்கி உள்­ளதுஅதன்­படி, நமது நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழி­லா­ளர்­களின் சமூக பாது­காப்பை உறுதி செய்­யும், ‘யுவின்’ திட்­டம்நடை­மு­றைக்கு வர உள்­ளது.
நமது நாடு முழு­­தும், ‘அமைப்பு சாரா தொழி­லா­ளர் குறி­யீட்டு எண்’ கொண்ட, ‘யுவின்’ 
அட்­டைக்­கான பதிவு01.04.2018 முதல் துவங்க உள்­ளதுஇதை­­டுத்து2019 மார்ச் மாதத்திற்குள் அமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த அனைத்து தொழி­லா­ளர்­­ளுக்­கும், ‘யுவின்’ அட்டை வழங்குவதற்குமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் திட்­­மிட்டு உள்­ளது
ஏற்­­னவேசோதனை அடிப்­­டை­யில்வெற்­றி­­­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இத்­திட்­டம்நாடு முழு­­தும் பர­­லாக்­கப்­படும் போதுஅமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வார்கள்.
பி.எப்.,  .எஸ்..,
அமைப்பு சார்ந்த துறை­யி­­ருக்கு நிக­ரானபி.எப்., – .எஸ்.., உள்­ளிட்டஅனைத்து பயன்­களும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த அட்டை மூலம் கிடைக்­கும்இதில்பி.எப்., எனப்­படும்வருங்­கால சேம­நல நிதி­யம்.எஸ்.., எனப்­படும்தொழி­லா­ளர் மருத்­துவ ஈட்­டு­றுதி கழ­கம் ஆகி­­வற்­றுக்­கான பங்­­ளிப்புத் தொகையை யார் செலுத்­து­வது? என்­பது குறித்து தீவி­­மாக ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­­கிறதுஇந்த நிதி­ அமைப்புகளுக்கு அமைப்பு சார்ந்த துறை­யில்பணி­யா­ளர்­­ளு­டன் சேர்ந்துநிறு­­னங்­களும் குறிப்­பிட்ட தொகையைஅவற்­றின் பங்­காக வழங்­கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பு சாரா துறை­யில்நிறு­­னங்­களின் கீழ் வரா­மல்தனித்து செயல்­படும்தொழிலாளர்களுக்குயார் தவணைத் தொகைகளை செலுத்­து­வது என்­­தில் தான்இன்­னும் முடிவு எட்­டப்­­டா­மல் உள்­ளது
தொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தா­வில், ‘நிறு­­னம் இல்­லாத பட்­சத்­தில்தனி­­பரேமுதன்மை நிறு­­­ராக கரு­தப்­­டு­வார்’ என்ற விதி­முறை இருக்கிறது. அத­னால்இந்த சட்­டம் அம­லுக்கு வரும் போதுமுதன்மை நிறு­­னக்கான பங்­­ளிப்­பில்எந்த சிக்­­லும் இருக்­காது என்றும் அமைப்பு சாரா துறை­யி­­ரின் சமூக பாது­காப்பு அர­ணாக, ‘யுவின்’ திட்­டம் விளங்­கும் என்று நம்புவோம். 
தொழி­லா­ளர் சமூக பாதுகாப்பு:
தொழி­லா­ளர்­­ளுக்­கானவருங்­கால சேம­நல நிதிமருத்­துவ ஈட்­டு­றுதிபிர­சவ கால பயன்பணிக்­கொடைஇழப்­பீடுசமூக பாது­காப்பு என்பது உள்ளிட்ட 15 சட்­டங்­களின் தொகுப்­பாகதொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தாவைமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் உரு­வாக்கி உள்­ளது. இருகரம் கூப்பி அதனை வரவேற்போம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.01.2018   

தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!


அனுமதி பெறாமல் தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆன ஊழியரை வேலை நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட நடவடிக்கை
சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின், ராமலிங்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் மேலதிகாரியிடம் உரிய அனுமதி பெறாமல், வேலைக்கு வராமல் இருந்ததற்காக, 1998ம் ஆண்டில், அவருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது.
பணி நீக்கம்
மெமோ பெற்றுக் மொண்ட அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லாத காரணத்தால், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி துறைரீதியான விசாரணை நடத்தி, நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, 1999ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு
இதனால், ராமலிங்கம் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் ராமலிங்கத்தை பணியில் அமர்த்தும்படி, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
நிஎவாகம் செய்த மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழகம் சார்பாக இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
மனுவை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் விசாரித்தார்
போக்குவரத்து கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பரமசிவதாஸ் அவர்கள், தனது வாதத்தில் ''அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்தது, இப்போது மட்டும் அல்ல; 1993ம் ஆண்டில் இருந்து, நீண்ட நாட்களுக்கு, அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பணிக்கு வராமல் இருந்துள்ளார். ''அதற்காக, ராமலிங்கத்திற்கு  சிறிய அளவில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 
ஷை தொழிலாளி திருந்துவதற்கு வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கியும்,தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டதால், பணி நீக்கம் செய்யப் பட்டார்,'' என்றார். தொழிலாளி ராமலிங்கம் சார்பில், வழக்கறிஞர், கே.வி.சண்முகநாதன் அவர்கள் ஆஜராகி, ''கண் பார்வை பிரச்னை இருந்ததால், ராமலிங்கம் சிகிச்சை பெற்று, அதற்குப்பின், ஓய்வில் இருந்துள்ளார். போக்குவரத்துக் கழக. நிர்வாகத்திடம், திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை அதிகாரி  அவர்கள் அதனை பரிசீலிக்கவில்லை,'' என்றார்.
முடிவில், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, முதல் முறையாக அல்ல.1993ல், பணிக்கு வராமல் இருந்த காரணத்திற்காக தொழிலாளி ராமலிங்கம் கண்டிக்கப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கைக்காக 1995ம் ஆண்டில், 45 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; 1996ம் ஆண்டில், அவரது ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1997ம் ஆண்டில், அனுமதியின்றி,  இரண்டு மாதங்கள் பணிக்கு வராததால், மீண்டும் ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1997ம் ஆண்டில், 10 நாட்கள் வராமல் இருந்ததற்காக, 40 ரூபாய் அபராதம், 97 - 98ம் ஆண்டில்,, நான்கு மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராததற்காக, ஊக்க ஊதியம் நிறுத்தப் பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலிக்கும் போது, ஷை தொழிலாளி  அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்ததுதொடர்ந்து நடந்திருப்பது தெரிகிறது. சிறிய அளவில் நிர்வாகத்தால் தண்டனை விதிக்கப்பட்டும், அவரது செயல்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. எந்த காரணமும் இல்லாமல், வார கணக்கிலும் மாத கணக்கிலும் பணிக்கு வராததை, அவர்  வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி பொறுப்பில்லாமல் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள்பணியாற்றினால், ஒருவரை போல மற்றவர்களும் ஈடுபட்டால், எந்த ஒரு நிறுவனமும் அன்றாடம் இயங்க முடியாது. போக்குவரத்து கழகம், அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது.
அனுமதியின்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்குவது அந்த போக்குவரத்து நிர்வாகத்திற்கு கஷ்டமாகி விடும். உடல் நலத்தை அவர் காரணமாக காட்டினாலும், மருத்துவ சான்றிதழ் எதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!

விருப்பப்பட்டால் வேலைக்கு வருவது, இல்லையென்றால், வேலைக்கு வராமல் இருப்பது என அந்த ஊழியர் செயல்பட்டு உள்ளார். எனவே, தொழிலாளர் நீதிமன்றத்தின் முடிவில் இந்த நீதிமன்றம் குறுக்கிட வேண்டியுள்ளது. அந்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.01.2018 

Monday, January 22, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

தேசிய தகுதித் தேர்வு 2018
உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ம் தேதியில் நடத்தப்படும் என்று, யு.ஜி.சி., அறிவித்துள்ளது
உதவி பேராசிரியர் பணியில் சேர
முதுநிலை படிப்பு முடித்தோர், தேசிய அளவில் உள்ள கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறைதான், இந்த நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்தி வருகிறது.  நாடு முழுவதும், 2018ல் ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்துள்ளது. 
தேர்வு விதிகள்
இரண்டு தாள்கள் எழுத வேண்டும் ஒவ்வொரு தாளுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற இருக்கின்றன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறும்.
தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்ரவரி1ம் தேதி, https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் மார்ச், 6-ம் தேதி முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பில் மேலும் சலுகை
இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறுவதற்கு, நெட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் இதுவரை பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.01.2018