disalbe Right click

Sunday, February 25, 2018

சான்றிதழ்களில் இருக்கின்ற தவறுகளைத் திருத்த

மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களில் இருக்கின்ற பெயர், பிறந்த நாள், ஜாதி மற்றும் ஏனைய தவறுகளைத் திருத்த விண்ணப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்று  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். அது பற்றிய கடிதத்தை இணையத்திலிருந்து எடுத்து கீழே பதிவிட்டுள்ளேன். படித்து பயன் பெறுங்கள்!
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.02.2018 




நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு  Counsel Sree

அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்

அரசுக் கடிதங்களில் உள்ள எண்கள் பற்றி...
மாநில அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்: என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.      அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. 
  • . எண் என்றால், நடப்புக் கணக்கு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • நே.மு. எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது  நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்
மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?
மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018 

மத்திய அரசின் தொழிற் கடன் திட்டம்

பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் 
நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே தொழில் ஒன்றை செய்ய விரும்புகிறீர்களா? அல்லது முழுநேர வேலையாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறீகளா? அல்லது வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காக இந்திய அரசு ஒரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா என்ற இந்தத் திட்டம் வேலை இல்லாமல் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் இளைஞர்கள் கடன் பெற்று உற்பத்திவணிகம்சேவை   அல்லது டிரேடிங்  நிறுவனம்    போன்றவற்றைத் துவக்கலாம்
இந்த திட்டத்தில் என்ன விசேஷம்?
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் வாங்கும் போது உங்களது சம்பளம் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோர்  சரியாக இருக்க வேண்டும். தொழில் துவங்கி நடத்துவதற்கான திட்டம் (Project Report) முறையாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்ட கடன் உங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான தகுதிகள் என்ன?
  1. விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 10 வருடங்கள் விலக்கு உண்டு.  
  2. நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குறைந்தது 3 வருடங்கள் வரை தொடர்ந்து குடி இருந்து இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
  3.  குறைந்தது 8வது வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்
  4. மத்திய அரசு சார்ந்த டிரேடிங் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  5.  விண்ணப்பதாரருடைய மற்றும்  அவரைச் சார்ந்தவர்களுடைய,  பெற்றோர்களுடைய   வருட வருமானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது
யாருக்கெல்லாம் தகுதி கிடையாது?
  1. பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் பெற்று, அதனைச் செலுத்தாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதைப் போல இருக்கும் வேறு அரசு திட்டங்களின் கீழ் ஏதாவது கடன் வாங்கி இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது. 
  2.  விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது.    விவசாயப் பொருட்கள் மூலமாக நடைபெறும் வணிகத்திற்குக் கடன் வழங்கப்படும்
அளிக்கப்படும் கடன் தொகை எவ்வளவு?
வணிகத் துறை என்றால் ரூ. 2 லட்சமும், சேவை துறை என்றால் ரூ. 5 லட்சமும்,  தொழிற்துறை என்றால்  ரூ. 5 லட்சமும், கூட்டு நிறுவனங்கள் என்றாலோ அல்லது இரண்டு அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் துவங்கும் போது 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு? 
இடத்திற்குத் தகுந்தாற்போல், காலத்திற்குத் தகுந்தாற்போல், வங்கிக்கு தகுந்தாற்போல் இது மாறக்கூடியது. விண்ணப்பிக்கும் போது இதனை அங்கு விண்ணப்பதாரர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது நிர்வாகியை நீங்கள் அணுகுங்கள்.  அவர் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?  மற்றும் கடன் சம்பந்தமான விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018 

வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால்....?

எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கக்கூடாது!
இந்த வழக்கில் கண்ட நாகராஜன் என்பவர் தனக்கு வர வேண்டிய பணம் ரூ. 18 லட்சத்தை வட்டியுடன் வசூலிக்க கனகராஜ் என்பவர் மீது ஒரு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது
வழக்கறிஞர் ஆஜராகவில்லை
ஆனால் அன்றைய தினம் நாகராஜனின் வழக்கறிஞர் கவனக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே கீழமை நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்து நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்
அதனை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. M. M. சுந்தரேஷ் மற்றும் N. பால் வசந்தகுமார் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உச்சநீதிமன்ற வழங்கியிருந்த தீர்ப்பு - 1 
உச்சநீதிமன்றம் "மல்கெய்ட் சிங் Vs ஜோகிந்தர் சிங் (1997-3-CTC-SC-619)" என்ற வழக்கில் பத்தி 7ல், ஒரு வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் (Reported No Instructions) வழக்கு நடத்துபவர்களுக்கு (Parties to the Suit) ஒரு அறிவிப்பினை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கினை மேற்கொண்டு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற வழங்கியிருந்த தீர்ப்பு - 2 
அதேபோல் உச்சநீதிமன்றம் "சண்டிகர் அரசு Vs ரகுராஜ் (AIR-2009-SC-514)" என்ற வழக்கில், வழக்கு சம்மந்தப்பட்டவர் தன்னுடைய வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞரை நியமித்து விட்டால் அந்த வழக்கறிஞரின் அந்த வழக்கில் ஆஜராக தவறிவிட்டால் அதற்காக வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராக தவறிவிட்டால் பிரதிவாதிக்கு நீதிமன்றம் ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும், மாறாக விசாரித்து அல்லது பரிசீலித்து வழக்கில் தீர்ப்பளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
O. S. A. NO - 391/2011
A. நாகராஜன் Vs P. P. M. கனகராஜ் 2013-1-MWN-CIVIL-867

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு  Dhanesh Balamurugan